யோவேல் 2:23:
TOVR பரிசுத்த வேதாகமம்
யோவேல் 2:23: “சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.”
TCB1973 கத்தோலிக்க பரிசுத்த வேதாகமம்
யோவேல் 2:23: “சீயோனின் மக்களே, அகமகிழுங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவரில் அக்களியுங்கள்; ஏனெனில் நீதியைக் காட்ட உங்களுக்கு முன்மழை தந்தார், முன்னாளில் தந்தது போலவே உங்களுக்காக முன்மழையும் பின்மழையும் மிகுதியாய்ப் பொழிந்தார்.”
TCL1995 திருவிவிலியம்
யோவேல் 2:23: “சீயோனின் பிள்ளைகளே, அகமகிழுங்கள்: உங்கள் கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டுக் களிப்படையுங்கள்: ஏனெனில், அவர் தமது நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்: முன்போலவே உங்களுக்கு முன் மாரியையும் பின்மாரியையும் நிறைவாகத் தந்தருளினார்.”
Indian Tamil Contemporary Version 2022
யோவேல் 2:23: “சீயோன் மக்களே, மகிழுங்கள், உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் களிகூருங்கள். ஏனெனில் அவர் தம் நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்திருக்கிறார். முன்போலவே உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் நிறைவாய்ப் பொழிகிறார்.”
TERV1998 பரிசுத்த பைபிள்
யோவேல் 2:23: “எனவே மகிழ்ச்சியாய் இருங்கள். சீயோன் ஜனங்களே உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் சந்தோஷமாய் இருங்கள், அவர் நல்லவர், அவர் உங்களுக்கு மழையைத் தருவார். அவர் உங்களுக்கு முன்போலவே முன்மாரியையும் பின்மாரியையும் அனுப்புவார்.”
Tamil Indian Revised Version 2017 – TIRV
யோவேல் 2:23: “சீயோன் மக்களே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் முறைப்படி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே பெய்யச்செய்வார்.”
Tamil Indian Revised Version 2019 – TIRV
யோவேல் 2:23: “சீயோன் மக்களே, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; சரியான அளவுபடி அவர் உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே பெய்யச்செய்வார்.”
TOV2017 பரிசுத்த வேதாகமம் 2017
யோவேல் 2:23: “சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.”
ASV+ American Standard Version
Joel 2:23: “Be glad then, ye children of Zion, and rejoice in Jehovah your God; for he giveth you the former rain in just measure, and he causeth to come down for you the rain, the former rain and the latter rain, in the first month.”
ISV International Standard Version
Joel 2:23: “And so be glad, children of Zion, and rejoice in the Lord your God, because he has given you the right amount of early rain, and he will cause the rain to fall for you, both the early rain and the later rain as before.”
KJV+ King James Versio
Joel 2:23: “Be glad then, ye children of Zion, and rejoice in the LORD your God: for he hath given you the former rain moderately, and he will cause to come down for you the rain, the former rain, and the latter rain in the first month.”
NLT’15 New Living Translation
Joel 2:23: “Rejoice, you people of Jerusalem! Rejoice in the LORD your God! For the rain he sends demonstrates his faithfulness. Once more the autumn rains will come, as well as the rains of spring.”