பழைய ஏற்பாடு வரலாறு – கால பகுப்புகள்
1. படைப்பு :-
-
எல்லாவற்றின் ஆரம்பம்
(கி.மு.4000+ முதல் கி.மு.2165 வரை)
வேதப்பகுதி: ஆத்தியாகமம் 1 முதல் 11 வரை (ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளின் சம்பவங்களை இந்த வேதப்பகுதி உள்ளடக்கியுள்ளது)
-
a) அதி 1&2 = உலகம், மனிதனின் படைப்பு
-
b) அதி 3 = பாவம், மனிதனின் வீழ்ச்சி
-
c) அதி 6-9 = நோவாவும் பெருவெள்ளமும்
-
d) அதி 10-11= பாபேல் கோபுரமும் இனங்கள் பிரிதலும்
2. முற்பிதாக்கள் (கி.மு.2166 முதல் கி.மு.1804 வரை)
-
எபிரேய இனம் உருவாகுதல்
வேதப்பகுதி ஆதியாகமும் 12-50 (ஏறக்குறைய 400 வருடங்கள் நடந்த சம்பவங்களை இந்த வேதப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது)
-
a) ஆபிரகாமின் அழைப்பும், உடன்படிக்கையும் (12-15)
-
b) வாக்களிக்கப்பட்ட மகன் ஈசாக்கு பிறத்தல் (25-26)
-
c) யாக்கோபு தெரிந்துகொள்ளுதல் பெயர் மாற்றம் செய்தல் (27-36)
-
d) எகிப்திலிருந்த யோசபினால் விடுதலை (37-50)
3. எகிப்தும் அதிலிருந்து வெளியேறுதல்லும் (கி.மு.1804-1406)
ஏறக்குறைய 400 வருடங்கள் நடந்த சம்பவங்களை யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஆகிய புத்தகங்கள் குறிப்பிடுகிறது.
-
a) 400 வருடங்கள் எகிப்தில் இருந்து (யாத் 1-12)
-
b) வெளியேறுதல், செங்கடலைக் கடந்து செல்லுதல் (யாத் 13-18)
-
c) சீனாய் மலையில் நியாயப்பிரமாணம் கொடுக்கப் படுதல் (யாத்திராகமம் 19 முதல் 34 வரை மற்றும் லேவியராகமம் 1 முதல் 27 வரை)
-
d) ஆசரிப்புக் கூடாரம் கட்டப்படுதல் (யாத்திராகமம் 19 முதல் 34 வரை முற்றும் லேவியராகமம் 1 முதல் 27, எண்ணமும் 1 முதல் 9 வரை)
-
e) விசுவாசத்தைவிட்டு விலங்குகள் வனாந்திரத்தில் சுற்றித்திரிதல் (எண்ணமும் 10 முதல் 21 வரை
இதோடு பஞ்சகமும் முடிவடைகிறது
4. கானான் தேசத்தை வெல்லுதல் (கி.மு. 1406 முதல் கி.மு.1350)
ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் நடந்த நிகழ்ச்சிகளை யோசுவா புத்தகம் விவரிக்கிறது
-
a) யோர்தான் நதியைக் கடந்து செல்லுதல் (யோசுவா 1 முதல் 5 வரை)
-
b) நாட்டை வென்றது (யோசுவா 6 முதல் 12 வரை)
-
c) பன்னிரெண்டு கோத்திரங்களும் நாட்டை பங்கிட்டுக் கொடுத்தல் (யோசுவா 13 முதல் 21 வரை)
5. .நியாதிபதிகள் (கி-மு 1350 முதல் கிமு 1050 வரை)
ஏறக்குறைய 300 ஆண்டுகள் நடந்த சம்பவங்களை நியாயாதிபதிகள், ரூத், 1 சாமுவேல் 1 முதல் 7 வரை உள்ள வேதப்பகுதிகள் விவரிக்கிறது.
-
a) இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்வதும் அதற்கு நியாயதீர்ப்பு அடைவதும் பிறகு அதிலிருந்து விடுதலை பெறுவதும் ஆகிய நிகழ்ச்சிகள் சுழற்சி வடிவில் விவரிக்கிறது நியாயதிபதிகள் புத்தகம்.
-
b) தாவீதின் முற்பிதாக்களின் திருமணத்தைக் குறித்து ரூத் போவாஸ் அவர்களில் மூலம் விபரிக்கிறது ரூத் புத்தகம்.
-
c) சாமுவேலின் பிறப்பு குறித்து 1 சாமுவேல் ஒன்றாம் முதல் 7 ம் அதிகாரம் வரை விவரிக்கப்பட்டுள்ளது.
6 . இணைந்த ராஜ்ஜியம் (கிமு 1051 முதல் கிமு 931 வரை)
120 வருடங்கள் நடந்த சம்பவங்களை 1 சாமுவேல் 8-31; 2 சாமுவேல்; 1 இராஜாக்கள் 1 முதல் 11 வரை; 1 நாளாகமம் ; 2 நாளாகமம் 1 முதல் 9 வரை; சங்கீதம் ; நீதிமொழிகள்; பிரசங்கி ; உள்ளத பாட்டு ஆகிய புத்தகங்கள் விவரிக்கிறது.
-
a) இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்கும் நிகழ்ச்சி (1 சாமுவேல் 8)
-
b) இஸ்ரவேலின் முதல் ராஜா சவுல் (1 சாமுவேல் 9 முதல் 31 வரை)
-
c) தேவன் தெரிந்து கொண்ட தாவீது ராஜா (ஒன்னு சாமுவேல் 16 முதல் 2 சாமுவேல் 5 வரை)
-
d) இஸ்ரவேலின் தலைநகரமாக ஜெருசலேம் நிலை நிறுத்தப்படுதல் (2 சாமுவேல் 5)
-
e) சாலமோன் ஆலயத்தைக் கட்டுதல் (1 ராஜாக்கள் 1 முதல் 11 வரை)
7. உடைந்த ராஜ்ஜியம் ( கிமு 831 முதல் கிமு 586 வரை)
ஏறக்குறைய 345 வருடங்கள் நடந்த சம்பவங்களை உள்ளு ராஜாக்கள் 12 முதல் 22 வரை; 2 ராஜாக்கள்; 2 நாளாகமம் 10 முதல் 36 வரை, ஏசாயா எரேமியா புலம்பல் ஒபதியா யோவேல் யோனா ஆமோஸ் ஓசியா மீகா நாகூம் செப்பணியா ஆபகூக் ஆகிய புத்தகங்கள் விபரிக்கிறது.
-
a) சாலமோனின் மரணமும் ராஜ்ஜியம் உடைதலும் (1 இராஜாக்கள் 11 முதல் 12 வரை)ஒ
-
b) 10 கோத்திரங்களை உள்ளடக்கிய வட ராஜ்ஜியத்தை இஸ்ரவேல் என்று அழைக்கின்றனர் இவர்கள் கிமு 722 இல் அசிரியா விடம் விழுந்து போயினர்.
-
c) தெற்கு ராஜ்யத்தில் யூதா பென்யமீன் ஆகிய இரண்டு கோத்திரங்கள் இருந்தன இதை யூதா என்று அழைக்கின்றனர். இவர்கள் கிமு 586 பாபிலோனியர் இடம் விழுந்து போயினர்.
8) பாபிலோன் சிறையிருப்பு (கிமு 605 முதல் 535 வரை)
ஏறக்குறைய 70 ஆண்டு நிகழ்வுகளை தானியேல் மற்றும் எசேக்கியேல் புத்தகங்கள் விவரிக்கிறது.
-
எருசலேமின் அழிவு கிமு 586
-
யூதா ஏழு வருடங்கள் பாபிலோனில் அடிமைகளாக இருந்து கிமு 605 கிமு 597 கிமீ 586 என மூன்று
நாடு திரும்பினர்.
9. சிறையிருப்பில் இருந்து நாடு திரும்புதல் ( கிமு 536 முதல் 430 வரை)
ஏறக்குறைய 108 வருடங்கள் நடந்த நிகழ்வுகளை எஸ்ரா நெகேமியா எஸ்தர் ஆகாய் சகரியா மல்கியா ஆகிய புத்தகங்கள் விவரிக்கிறது.
-
ஆலயத்தைத் திரும்பக் கட்ட கோரேஷ் ராஜாவின் ஆணை கிமு 538
-
ஜெருசலேம் கட்ட அர்த்தசஷ்டா ராஜாவின் ஆணை கிமு 444
-
செருபாபெல் ஆலயம் கட்டுதல் கிமு 515
-
எஸ்றா மக்களை கட்டுதல் கிமு 500
-
நேகேமியா நகரத்தை கட்டுதல் கிமு 444.