வேதத்தில் முரண்பாடுகள் உண்டா? Are there contradictions in the Holy Bible?

 

 

வேதத்தில் முரண்பாடுகள் உண்டா?

வேதத்தில் குறை இருப்பதாகக் கூறுவதும் அதைப் பிறருக்கு எடுத்துச் செல்ல முயற்சிப்பதும் எகாலத்திலும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சியாகும். பல கேள்விகள் நியாயமானதாக தோன்றுகின்றன. இவ்வாறு கூறுகின்ற சில கருத்துகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஆதி 1:3-5 இல் வெளிச்சம் உண்டாயிற்று சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் நான்காம் நாள் தான் சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் தோன்றின என்ற கருத்து ஆதி 1:14-18 இல் உள்ளது.

அப்படியானால்

  • சூரியன் தோன்றும் முன் நாட்கள் எப்படி வந்தது?

  • எப்படி சாயங்காலமும் விடியற்காலமும் வந்தது?

  • முதல் மூன்று நாட்கள் ஒளி எங்கிருந்து வந்தது?

 

இதற்கான பதிலை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் சிருஷ்டிப்பின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சிருஷ்டிப்பின் வரலாறு

 மேலே எழுப்பியுள்ள கேள்விகள் நியாயமானவைகளே. இவற்றிக்கு வேதத்தின்
அடிப்படையிலேயே பதில்கள் தேடுவோம் வாருங்கள்……..

முதலாம் நாள்

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதி 1:1).

வசனத்திலுள்ள ஆதியும்

ஆதியாகம் 1:5

தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

 இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள முதலாம் நாளும் ஒன்றல்ல. ஏனெனில் வெளிச்சம் உண்டாகக்கடவது என்று தேவன்
சொன்ன பின்னர் தான் முதலாம் நாள் ஆயிற்று (ஆதி 1:2-5).

பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். ஆதியாகமம் 1:2

தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. ஆதியாகமம் 1:3

வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். ஆதியாகமம் 1:4

தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் 1:5

ஆனால் பூமியின் ஆழத்தில் இருள் இருந்ததும் ஜலத்தின் மீது தேவ ஆவியானவர் அசைவாடினதும் இந்த முதலாம் நாளுக்கு முந்தையது (ஆதி 1:2).

பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். ஆதியாகமம் 1:2

எவ்வளவு காலம் (ஆண்டுகள்)
அசைவாடினார் (பூமியை தயார்படுத்தினார்) என்று கூறப்படவில்லை. எனவே

“முதலாம் நாள் என்பது இந்த யுகத்தின் முதலாம் நாள் ஆகும்.” ” அது ஆதியின்
முதலாம் நாள் அல்ல.”

பூமியின் அஸ்திபாரம்

(யோபு 38:4-7) இல் பூமியை தேவன் அஸ்திபாரப்படுத்தி அதின் கோடிகல்லை வைத்த
நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது.

நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. யோபு 38:4

அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. யோபு 38:5

அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? யோபு 38:6

அப்பொழுது விடிற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. யோபு 38:7

இதை சற்று ஆராய்ந்தால் அச்சமயத்தில் நட்ச்சத்திரங்களும் தேவ தூதர்களும்
இருந்தனர் என்பதை அறியலாம். ஏனெனில் தேவன் பூமியை அஸ்திபாரப்படுத்துகையில் நட்ச்சத்திரங்கள் ஏகமாய்பாடி தேவபுத்திரர்
கெம்பிரித்தார்கள் (யோபு 38:7).

அப்பொழுது விடிற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. யோபு 38:7

அதாவது பூமியை சிருஷ்டிப்பதற்க்கு முன்னரே தேவன் நட்ச்சத்திரங்களையும் தூதர்களையும் படைத்திருந்தார். நட்ச்சத்திரங்கள்
படைத்திருந்தால் ஒளி இருந்திருக்கும் அல்லவா? மேலும்,

சூரியனும் நட்ச்சத்திரங்களில் ஒன்று என்பதாலும் விடியற்காலம் என்று
கூறப்பட்டிருப்பதாலும் சூரியனும் இருந்திருக்குமே?

இதற்காண விளக்கத்த பார்ப்போம்.

ஆதி என்பதன் பொருள் என்ன?

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதி 1:1).

ஆதி 1:1 ல் கூறப்படும் ஆதி என்ற காலம் ஒரு குறிப்பிட்ட ஆண்டு, மாதம்,
தேதி, மணி என்பதில்லை. ஆதி என்பது ஒரு நீண்ட கால இடைவெளி என்பதை “முதலாம்
நாள்” என்ற தலைப்பில் மேலே பார்த்தோம்.

ஒரு மனிதனின் வாழ்நாள் என்பது பல ஆண்டுகளை குறிப்பது போலவே ஆதி என்பதும் பல ஆண்டுகள் கொண்ட கால இடைவெளியை
குறிக்கிறது.

மேலும், பூமியை படைப்பதற்கு முன்பே நட்ச்சத்திரங்கள், தூதர்களை தேவன் படைத்துவிட்டார் என்பதால் (யோபு 38:4-7) யாவற்றையும் ஒரு நொடியில் படைக்காமல் படிப்படியாக படைத்தார் என்பது தெளிவு.

ஆதிகால யுகங்கள்

ஆதி என்கிற காலத்திலிருந்து ஆதி 1:5 இலுள்ள முதலாம் நாளுக்கு இடையில்
உள்ள காலத்தை மூன்று யுகங்களாக பிரிக்கலாம்.

ஆதிகால யுகம் I

வின்மீன்களும் (சூரியனும்) தேவ தூதர்களும் படைக்கப்படுதல். இது எவ்வளவு காலம்
ஆண்டுகள் என்பது தெரியாது. பூமிக்கு அஸ்திபாரம் போடும் வரை இந்த யுகம்
இருந்தது (யோபு 38:4-7)

ஆதிகால யுகம் II

பூமிக்கு கோடி கல்லை வைக்கும்போது இந்த யுகம் தொடங்கியது. யாவற்றையும்
“நல்லது என்று காணும்” தரத்தில் படைப்பது தேவனின் பண்பாகும். எனவே அவர்
படைக்கும் பொழுது பூமி ஒழுங்கின்மையும் வெறுமையாகவும் இல்லை (ஏசா 45:18).[

வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய, கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. ஏசாயா 45:18

பூமி படைக்கப்பட்ட போது ஆர்ப்பரித்த தேவ தூதரில் ஒரு பகுதியினர் பின்னர் பூமியில் குடியிருக்கும்படி தேவன் செய்தார். அவ்வாறு பூமியில் இருந்த தூதரில் ஒரு கேரூபான லூசிபர் தன்னுடன் ஒரு கூட்டம் தூதர்களை சேர்த்துக்கொண்டு தேவனுக்கு எதிராக புரட்ச்சி செய்தான் (ஏசா 14:12-14; எசே 28:12-19).

புரட்ச்சி தோற்க்கடிக்ப்பட்டு புரட்ச்சியாளர்கள் கீழே தள்ளப்பட்டனர். மேலும் அச்சமயத்தில் பெருவெள்ளம் உண்டாயிற்று என்றும் (2பேது 3:5-6)

 பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், உலகத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உணடாயினவென்பதையும், 2 பேதுரு 3:5

 அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். 2 பேதுரு 3:6

அதை தொடர்ந்து தேவனின் தன்டனைகளின் (வாதை) ஒன்றான இருள் பூமியின் மீது
அனுப்பபட்டது என்பதையும் அறிகிறோம்.

இந்த நிகழ்ச்சியை “இருளை அதற்க்கு (பூமிக்கு) புடவையாக உடுத்தின போதும்” என்று யோபு 38:9 கூறுகிறது.

 மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும். யோபு 38:9

அதாவது சூரியன், நிலா, நட்ச்சத்திரங்களின்
ஒளி பூமியின் மீது விழாதபடி தேவன் தடைசெய்தார். இவ்வாறு எகிப்தியர் மீது
காரிருளை அனுப்பியதும் (யாத் 10:21-23) இயேசு சிலுவையில் இருந்த போது பூமியெங்கும் காரிருள் உண்டானதும் (மத் 27:45) இன்னும் இவ்வாறு நடக்க போகிறதும் (ஆமோ 8:9; வெளி 8:12; 9:2; 16:10) இத்தகய நிகழ்ச்சிகள் எடுத்து
காட்டாக உள்ளது. இருள் சூழ்ந்த உலகம் ஒழுங்கின்மையும் வெறுமையுமானது (ஆதி
1:2). பூமியின் படைப்பிலிருந்து லூசிபரின் வீழ்ச்சியின் காலம் வரை, பூமியை இருள் மூடும் வரை “ஆதிகால யுகம் இரண்டு” என கருதலாம்..

ஆதிகால யுகம் மூன்று III

பூமியின் மீது இருள் சூழ்ந்திருந்த காலத்தை ஆதிகால யுகம் மூன்று என அழைக்கலாம். ஒளி இல்லாததால் வெப்பம் தனிந்து கடுங்குளிர் ஏற்ப்பட்டது. உலகமெங்கும் உள்ள நீரின் மேல்பரப்பு பனிகட்டியாக உறைந்திருக்கும்.
காற்றில் இருந்த ஈரப்பதம் பனித்துளிகளாகி நிலத்தின் மீது விழுந்து பூமியெங்கும் பனிகட்டி படலம் இருந்திருக்கும். (பனிகட்டி படலத்தின் மீது) நீரின் மீது ஆவியானவர் அசைவாடினார் என கருதலாம். மேலும் குளிரினால் மேகம்
தரைமட்டும் இறங்கி தரையை தொட்டுக்கொண்டு இருந்திருக்கும். தேவன் மேகத்தை பூமிக்கு வஸ்திரமாக உடுத்தினார் என்று யோபு 38:9 கூறுகிறது.

வெளிச்சம் உண்டாகக்கடவது

வெளிச்சம் உண்டாகக்கடவது என்று தேவன் கூறிய போது, பூமியின் மீது ஒளி வீசுவதற்க்கு இருந்த தடையை தேவன் நீக்கியதால் பூமியின் மீது மீண்டும் ஒளி வீசியது.பூமியை சுற்றி ஆடையை போன்று மேகம் இருந்ததால் (யோபு 38:9) சூரிய ஒளி பூமியின் மீது நேரடியாக விழாமல் மேகத்தின் மீது விழுந்து பூமியின் மீது மங்களாக தெரிந்தது. எனவே சூரியன் நேரடியாக தெரியாத போதிலும் சாயங்காலமும் விடியற்காலமும் இருந்தன.

“இருள் நீக்கப்பட்ட புதிய யுகத்தின் முதலாம்
நாள் உண்டானது.”

“வெளிச்சம் உண்டாகக்கடவது” (Let there be light- ஒளி தோன்றுவதாக) என்று தேவன் கூறினார். வெளிச்சம் படைக்கப்படகடவது என்று
கூறவில்லை.

“சிருஷ்டித்தார்” என்பதின் எபிரெய சொல் BARA இந்த சொல் ஆதி 1:1,21,27 இல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிச்சம் உண்டாகக்கடவது என்று கூறும் போது அந்த சொல் பயன்படுத்தப்படவில்லை.

இரண்டாவது நாளில், சூரிய ஒளி மேகங்கள் மீது படுவதால் வெப்பம் உண்டானதால் பூமியை தொட்டுக்கொண்டிருந்த மேகம் மேலே எழும்பிய போது பூமியின் மீதிருந்த நீருக்கும் (பனிபடலத்திற்கும்) மேகத்திற்கும் இடையே ஆகாய விரிவாகிய இடைவெளி உண்டாயிற்று (ஆதி 1:6-8) இதற்கு வானம் என்று தேவன் பெயரிட்டார்.

பின்பு தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். ஆதியாகமம் 1:6

தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம் 1:7

தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் 1:8 மூன்றாவது நாளில, பூமியின் மீது இருந்த
பனிகட்டி படலம் உருகிய போது வெட்டாந்தரை காணப்பட்டது. செடிகள், மரங்கள்,
காளான்கள் போன்றவை உண்டாகும்படி தேவன் செய்தார் (ஆதி 1:9-13) பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம் 1:9

 தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். ஆதியாகமம் 1:10

 அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம் 1:11

 பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். ஆதியாகமம் 1:12

 சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் 1:13

நான்காவது நாளில் மேகங்கள் சற்று விலகவும் சூரியன், நிலா, நட்ச்சத்திரங்களின் ஒளி பூமியில் நேரடியாக விழும்படி தேவன் வழி உண்டாக்கினார். இதுவும் படைப்பின் செயலன்று. உண்டாகக்கடவது (Let there be.., made) என்று தான் தேவன் உரைத்தார் (ஆதி 1:14-19).

 பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். ஆதியாகமம் 1:14

 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம் 1:15

 தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். ஆதியாகமம் 1:16

 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், ஆதியாகமம் 1:17

 பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாய விரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். ஆதியாகமம் 1:18

 சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் 1:19

ஏற்கனவே தேவனால் படைக்கப்பட்டிருந்தவை, தேவன் இவ்வாறு கூறியதும் நேரடியாக பூமியின் மீது செயல்ப்பட்டன. காலங்களை குறிப்பதறகென அவைகள் நியமிக்கப்பட்டன.

பறவைகளையும், மீன்களையும் மற்ற நீர்வாழ் இனங்களையும் தேவன் ஐந்தாம் நாள்
படைத்தார் (சிருஷ்டித்தார் – BARA ஆதி 1:20-23). பின்னர் ஆறாம் நாளில்
விலங்கினங்களையும் இறுதியில் மனிதனையும் படைத்தார் (சிருஷ்டித்தார் –
BARA ஆதி 1:24-27).

யாத் 20:11 இல் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் ஆறு நாட்களில்
படைத்தார் என்பது ஆகாய விரிவாகிய வானத்தையும் வெட்டாந்தரையையும் கடலையும்
அதிலுள்ள உயிரினங்களையும் ஆறு நாட்களில் உருவாக்கினதை கூறுகிறது.

2. யோயாகீன் என்பவர் 18 ஆவது வயதில் அரசர் ஆனார் என்று

2 இரா 24:8 இலும் 8-வது வயதில் அரசர் ஆனார் என்று

2 நாலா 36:9 இலும் உள்ளது.

இது முரண்பாடு தானே?

யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின்பேர் நெகுஸ்தாள். 2 இராஜாக்கள் 24:8

 யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 2 நாளாகமம் 36:9

இவை இரண்டும் முரண்பாடுகள் அல்ல சரியாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

யோயாகீன் 8 வயதான போது அவளது தந்தையுடன் சேர்ந்து அரசால்பவனாக அல்லது பட்டத்து இளவரசனாக நியமித்து இருக்க வேண்டும். ஆகவே 18 வயதில் அரசன் ஆனான் என்று 2 இறா 24:8 இல்லும் எட்டு வயதில் அரசனானான் என்று  2 நாளா 36:9 இல்லும் கூறப்பட்டுள்ளது. எட்டு வயதில் தந்தையுடன் சேர்ந்து அரசால் பவராக கருதப்பட்டவர் 18 வயதில் முழு பொறுப்பு ஏற்றார்.

3. மூடனுக்கு மறுஉத்தரவு கொடாதே என்று நீதி 26:4 இளும்

மூடனுக்கு மறுஉத்தரவு கொடு என்று அதற்கு அடுத்த வசனத்திலும்

கூறப்பட்டுள்ளது

  • இது முரண்பாடு தானே?

மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய். நீதிமொழிகள் 26:4

மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான். நீதிமொழிகள் 26:5

இந்த இரண்டு வசனங்களிலும் எந்த முரண்பாடும் இல்லை என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

நீதிமொழிகள் 1:6 இல் கூரப்பட்டுள்ளது போல இதில் ஒரு புதை பொருள் உள்ளது.

நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான். நீதிமொழிகள் 1:6

 இவைகள் அடுத்தடுத்து கூறப்பட்டுள்ளதை கவனித்து தனித்தனியாக பொருள் விளக்கம் செய்ய முயற்சிக்காமல் இரண்டையும் சேர்த்து பொருள் விளக்கம் செய்ய வேண்டும்.

மேலும் இந்த புத்தகம் நீதி மொழிகளாலும் பழமொழிகளாலும் நிறைந்தது என்பதை நினைவில் கொண்டு விளக்கம் செய்ய வேண்டும்.
இதற்காக ஒரு விளக்கத்தை இங்கு தருகிறேன்

“முன்னாலே போனால் கடிக்கும் பின்னாலே போனால் உதைக்கும்”

என்ற பழமொழி போல இந்த வசனங்கள் அமைந்துள்ளன. மூடலுக்கு பதில் கொடுத்தாலும் தீங்கு பதில் கொடுக்காவிட்டாலும் தீங்கு ஆகவே மூடனுடய முகத்துக்கு விலகிப் போ என்பது இதன் உட்கருத்து. நீதி 14:7; 17:12 ஆகிய வசனங்களை இதை உறுதி படுத்துகின்றன.

மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய். நீதிமொழிகள் 14:7

1தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி. நீதிமொழிகள் 17:12

Download pdf

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page