download pdf
வேதம் தேவனுடைய வார்த்தை என்பதற்குச் சான்றுகள்
இயேசு கிறிஸ்துவின் சான்றுகள்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்று குறிப்பிட்டார் “தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,” யோவான் 10:35 “நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்களும் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.” மாற்கு 7:13
முரண்பாடு இல்லை
பல சூழ்நிலைகளில் (சிங்காசனத்தில் இருந்தும் சிறைச்சாலையில் இருந்தும்) பல தரப்பட்ட மக்களால் (எ.கா).
-
அரசர்களாலும்
-
ஆடு மேய்த்தவர்கலாலும்
-
ஆசாரியர்கலாலும்
-
ஆயகார்ர்கலாலும்
-
மருத்துவர்கலாலும்
-
மீன்பிடித்தவராலும்
பல நூற்றாண்டுகளாக (1700 ஆண்டுகளுக்கு மேலாக) எழுதப்பட்ட நூல் வேதாகமம். ஆனாலும் இதில் முரண்பட்ட கருத்துகள் இல்லை. யாவரும் ஒற்றுமையோடு ஒரே நோக்கத்துடன் எழுதியுள்ளனர. (இன்று உள்ள 40 அறிஞர்களை ஏதேனும் ஒரு பொருளை பற்றி எழுத சொன்னால் ஒரே கருத்து நிச்சியமாக வராது) எனவே வேதத்தின் ஆசிரியர் ஒருவரே (தேவ ஆவியானவரே).
கருத்து வேறுபாடு இல்லை
வேதத்தில் பல கருத்துகள் படிப்படியாக வெளிப் படுத்தப் பட்டிருக்கின்றன. ஒருவர் எழுதிய கருத்து (சில சமயங்களில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வேறு சூழல்களில் உள்ள இன்னொருவர் கையாண்டு சிறுது சேர்க்கிறார். அதன்பிறகு இன்னொருவர் இன்னும் சிறிது சேர்க்கிறார். இவ்வாறாக அக்கருத்து வேதத்தில் நல்லமுடிவிற்கு வருகிறது. இவ்வாறாக இருந்தபோதிலும் முரண்பாடான கருத்துகள் குறிப்புகள் இல்லை. எனவே இதன் ஆசிரியர் தேவனுடைய ஆவியானவர் ஒருவரே.
மேற்கோள்கள்
சாத்தான் உட்பட பலர் இதை மேற்கோள் காட்டி பேசி இருக்கின்றனர். எந்த புத்தகமும் இவ்வளவு மேற்கோள்காட்டி பேசப்பட்டது இல்லை. எந்த மனிதன் எழுதிய நூலும் இதில் பாதி அளவிற்கு கூட மேற்கோள் காட்டப் படவில்லை. எனவே இதன் ஆசிரியர் தேவனாக தான் இருக்க வேண்டும்.
எக்காலத்திற்கும் பொருந்தும்
சரித்திரத்தில் எல்லா நூற்றாண்டுகளிலும் எல்லாவிதமான வயது , பால் , தேகம் , மொழியின் சேர்ந்தவர்களுடைய இம்மைக்குரிய, மறுமைக்குரிய தேவைககளை சந்திக்கிறது வேதம் அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். லூக்கா 4:4
உறுதி தன்மை
வேதத்தில் உள்ள மனிதருடைய ரட்சிப்பின் திட்டம் (மனிதனின் வீழ்ச்சியில் இருந்து இறுதிவரை) மனித மூளைக்கு அப்பாற்பட்டது.
வேதத்தின் கருத்துக்கள் சந்தேகதோடு கூறப்படாமல் அதிகாரத்தோடு கூறப்பட்டுள்ளன. தற்கால விஞ்ஞானிகள் *”இப்படி இருக்கலாம் என்று நம்புகிறோம்”, “இப்படி இருக்க வாய்ப்பிருக்கிறது”*
என்று கூறும்போது கிறிஸ்து *”என்னிடத்தில் வாருங்கள் நான் இளைப்பாறுதல் தர முயற்சிக்கிறேன்”* என்று கூறாமல் _*”நான் இளைப்பாறுதல் தருவேன்”*_ என்று கூறியிருக்கிறார். *”நானும் ஒரு வழி”* என்று கூறாமல் _*”நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன”*_ என்று கூறியுள்ளார். தேவனைத் தவிர இவ்வளவு அதிகாரத்தோடு யாரும் கூறின தில்லை. _*”நான் உங்களுக்கு கூறுகிறேன்”*_ என்று ஆணித்தரமாக கூறுவது சேவலின் குரலே.
தீர்க்கதரிசனத்தின் சான்றுகள்
வேதத்தில் உள்ள தீர்க்கதரிசனங்கள் அது தேவனுடைய வார்த்தை என்று உறுதி படுத்துகின்றன. ஒரு தீர்க்கதரிசனம் கூட பொய்யாகவில்லை. இன்றைய புதைபொருள் ஆராய்ச்சித் இதை நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன. மேலும் கிறிஸ்துவின் வாழ்வில் அவரது பிறப்பு முதல் இறப்பு வரை நடந்தவற்றை அவருக்கு முன் இருந்த தீர்க்கதரிசிகள் எழுதி வைத்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சங்கீதம் 22 இல் அவரது பாடுகள் விபரிக்கப்பட்டுள்ளன. இவை யாவும் நிறைவேறி விட்டன. நிறைவேறிய அமைச்சு தீர்க்கதரிசனங்களும் வேதம் தேவனுடய வார்த்தை என்பதை பறைசாற்றுகிறது.
வாழ்வை மாற்றக்கூடியது
வேதத்தை நேசித்து தியானித்து வாழ்பவர்கள் பரிசுத்தம் அடைகிறார்கள். வேதம் வாழ்க்கையை மாற்றுகிறது. மாற்றப்பட்ட கோடிக்கணக்கான வாழ்க்கைகள் வேதம் தேவனுடைய வார்த்தை என்பதைக் நிறுவுகிறது.
வேதத்தை எழுதினார்கள் அதை தேவனுடைய வார்த்தை என்று சொன்னது மட்டுமல்ல அதற்காக தங்கள் உயிரையும் கொடுக்கத் தயங்கவில்லை. அவர்களது ரத்தம் வேதம் தேவனுடைய வார்த்தை என்பதற்கு ஆதாரம்.
அழிக்க முடியாதது
எத்தனையோ அரசர்களும் அதிகாரிகளும் வேதத்தை அழிக்க தங்களால் இயன்ற மட்டும் முயற்சித்தார்கள். ஆனால் வேதமும் அதிகமதிகமாய் பெருகிகொண்டும் பல புதிய மொழிகளில் அச்சிடப்பட்டம் வருகிறது. உலகத்திலே அதிகமான மொழிகளில் அச்சிடப்படுவது பரிசுத்த வேதாகமமும் தான். பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் உலகத்தில் அதிக விற்பனையாகும் புத்தகமும் வேதமே. இதுவும் வேதம் தேவனுடைய வார்த்தை என்பதற்கு ஆதாரமாகும்.
இன்னும் பல ஆதாரங்கள் உண்டு வேதம் தேவனுடைய வார்த்தை என்று நிறுவுவதற்கு இவற்றில் ஏதேனும் ஒரு ஆதாரமே போதுமானது. தேவன் நமக்கு கொடுத்திருக்கும் பெரிய ஈவுகளில் ஒன்று வேதம். சகோதரரே வேதத்தின் மகத்துவங்களை நீர் எப்படி எண்ணுகிறீர்?
என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். ஓசியா 8:12
வேதத்தை அனுதினமும் தியானிக்கவும் அதன்படி நடக்கவும் இன்றைக்கே தீர்மானம் செய்வீரா??????