பழைய ஏற்பாட்டின் வரலாறு History of the Old Testament with pdf

 

 

பழைய ஏற்பாட்டின் வரலாறு

சுருக்க வர்ணனை

 • பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பழைய ஏற்பாடு கடவுள் யார் என்பதை தெளிவாக விளக்குகிறது.

 • மனிதகுலம் கடவுளுடன் ஐக்கிய படுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் போதிக்கிறது.

 • கடவுளின் வல்லமை, அன்பு, கிருபை, பொருமை, கனிவு, இரக்கம் என கடவுளின் முழுமையை கூறுகிறது.

 • கடவுள் தன்னை பின்பற்றும் மக்களுக்கு எவ்வாறு தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதை குறித்து தெளிவாக கூறுகிறது.

பழைய ஏற்பாட்டை குறித்த சில தகவல்கள்

 • பழைய ஏற்பாடு எழுதி முடிக்க சுமார் ஆயிரம் வருடங்கள் ஆனது.

 • பழைய ஏற்பாட்டில் உள்ள புத்தகங்களை எழுதுவதற்கு தேவன் முப்பது பரிசுத்தவான்களை பயன்படுத்தினார்.

 • பழைய ஏற்பாட்டில் உள்ள மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை 39.

 • பழைய ஏற்பாட்டில் உள்ள 39 புத்தகங்களும் எபிரேய மொழியில் எழுதப்பட்டது ஒரு சில பகுதிகள் மட்டும் அராமிக் மொழியில் எழுதப்பட்டது.

 • பழைய ஏற்பாட்டின் மூல நகல்கள் சேதம் வராதபடிக்கு கவனமாக பாதுகாக்கப்பட்டு அவ்வப்போது எபிரேயே வேத பண்டிதர்களால் பிரதி எடுக்கப்பட்டது. பிரதிகள் கைகளினால் எழுதப்பட்டவை ஆகும்.

 • இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும் எழுதப்பட்டு இன்றைக்கு நம்முடைய கையில் இருக்கும் வேதாகமத்தை போல இருந்தது.

 • கிமு 250 இல்  பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் இருந்து கிரேக்க மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது இதைத்தான் செப்த்துவஜிந்த் என்று கூறுவர்.

 • கிபி 383 – 405 இதற்கு இடையில் பழைய ஏற்பாடு லத்தீன் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது இதுவே பழைய ஏற்பாட்டின் இரண்டாவது மொழிபெயர்ப்பு.

 • 1947 ஆம் ஆண்டு சபை கடலுக்கு அருகில் உள்ள கும்ரான் என்கிற ஒரு குகையில் ஏராளமான பழைய ஏற்பாட்டின் நகல்கள் எடுக்கப்பட்டது.

யூதர்களின் பழைய ஏற்பாடு:

யூதர்களின் வேதாகமம் என்பது நம்முடைய கையில் இருக்கும் வேதாகமத்தின் முதல் பகுதியாகிய பழைய ஏற்பாடு ஆகும்.  நம்மிடம் உள்ள பழைய ஏற்பாடு 39 புத்தகங்களை உள்ளடக்கியுள்ளது ஆனால் யூதர்கள் 39 புத்தகங்களையும் இணைத்து 24 புத்தகங்களாக வைத்திருந்தனர். அதன் விவரத்தை இப்பொழுது பார்க்கலாம்.

 நியாய பிரமாணம்

 • ஆதியாகமம்

 • மாத்திரமா களம்

 • லேவியராகமம்

 • எண்ணாகும்

 • உபாகமம்

தீர்க்கதரிசனம்

முந்தினோர்

 • யோசுவா   

 • நியாயாதிபதிகள்

 • ரூத்

 • 1 சாமுவேல்

 • 2 சாமுவேல்

 • 1 இராஜாக்கள்

 • 2 இராஜாக்கள்

பிந்தினோர்

 • ஏசாயா

 • எரேமியா

 • எசேக்கியேல்

 • ஒபதியா

 • ஓசியா

 • யோவேல்

 • ஆமோஸ்

 • யோனா

 • மீகா

 • நாகூம்

 • ஆபகூக்

 • செப்பனியா

 • ஆகாய்

 • சகரியா

 • மல்கியா

சங்கீதங்கள்

பாட்டாகமங்கள்

 • சங்கீதம் 

 • நீதிமொழிகள்

 • யோபு

5 சுருள்கள்

 • உன்னத பாட்டு

 • ரூத்

 • புலம்பல்

 • பிரசங்கி

 • எஸ்தர்

வரலாறு

 • தானியேல்

 • எஸ்றா

 • நெகேமியா

 • 1 நாளாகமாம்

 • 2 நாளாகமாம்

குறிப்பு:

ஏராளமான பழைய ஏற்பாட்டு வசனங்கள் புதிய ஏற்பாட்டில் மேற்கோள்களாக காட்டப்பட்டுள்ளன. அப்படி மேற்கோள் காட்டுகிற பொழுது பழைய ஏற்பாட்டின் புத்தகங்களை சில இடங்களில் நியாயப்பிரமாணம் என்றும் சங்கீதங்கள் என்றும் தீர்க்கதரிசனங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் நியாயப்பிரமாணம் அல்லது மோசேயின் ஆகமம் என்று கூறுவது ஆதியாகமம் முதல் உபாகமம் வரை உள்ள புத்தகங்கள் ஆகும். தீர்க்கதரிசனம் என்பது மேலே நாம் பார்த்த படி முந்தினோர் மற்றும் பிந்தினோர் என்ற தலைப்புகளின் கீழ் இருக்கக்கூடிய புத்தகங்கள் ஆகும். சங்கீதங்கள் என்பது பாட்டாகமம், ஐந்து சுருள்கள் மற்றும் வரலாறு ஆகிய தலைப்புகளின் கீழ் உள்ள புத்தகங்கள் ஆகும். இதுவே யூதர்களின் வேதாகமம் ஆகும்.

நாம் பயன்படுத்தும் பழைய ஏற்பாடு

நியாபிரமானம்

 • ஆதியாகமம்

 • மாத்திரமா களம்

 • லேவியராகமம்

 • எண்ணாகும்

 • உபாகமம்

வரலாறு

 • யோசுவா    

 • நியாயாதிபதிகள்

 • ரூத்

 • 1 சாமுவேல்

 • 2 சாமுவேல்

 • 1 இராஜாக்கள்

 • 2 இராஜாக்கள்

 • 1 நாளாகமாம்

 • 2 நாளாகமாம்

 • எஸ்றா

 • நெகேமியா

 • எஸ்தர்

பாட்டாகமம்

 • யோபு

 • சங்கீதம் 

 • நீதிமொழிகள்

 • பிரசங்கி

 • உன்னத பாட்டு

பெரிய தீர்க்கதரிசனம்

 •  ஏசாயா

 • எரேமியா

 • புலம்பல்

 • எசேக்கியேல்

 • தானியேல்

சிறிய தீர்க்கதரிசனம்

 • ஓசியா

 • யோவேல்

 • ஆமோஸ்

 • ஒபதியாயோனா

 • மீகா

 • நாகூம்

 • ஆபகூக்

 • செப்பனியா

 • ஆகாய்

 • சகரியா

 • மல்கியா

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *