உலகத்திற்கான ஜெபம் Prayer for the world with pdf

 

 

உலகத்திற்கான ஜெபம் Prayer for the world

1. உலகத்தில் உள்ள எல்லா மக்களும் இரட்சிக்கப்படவும் தேவன் அவர்களை ஆசிர்வதிக்கவும் ஜெபிப்போம் – ஆதியாகமம் 5:2

2. எல்லா நாடுகளிலும் காணப்படுகின்ற வறுமைகள் எல்லாம் மாறிட ஜெபிப்போம் – ஆதியாகமம் 45:11

3. ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம் – மத்தேயு 6:8

4. ஒவ்வொரு நாட்டிலும் பெருக்கெடுத்து வரும் எல்லோருடைய பாவங்கள் மன்னிக்கப்படவும், குறையவும் ஜெபிப்போம்

5. மாற்கு 2:10 குறைந்தது 10 நாடுகளின் பெயர்களை எழுதிவைத்து, சொல்லி ஜெபிப்போம் – உபாகமம் 33:16 5.

6. தேசங்களில் கொள்ளை நோய் வராமல் இருக்க ஜெபிப்போம் – சங்கீதம் 91:3,6

7. ஒவ்வொரு நாட்டிற்கும் பக்கத்தில் உள்ள நாடுகளோடு சுமூகமான உறவுகள் பலப்படவும், சண்டைகள் வராமல் சமாதானமாய் காணப்பட ஜெபிப்போம் – 1 நாளாகமம் 22:9

8. தேசங்களில் பஞ்சங்கள் வராதபடி தேவன் காத்திட ஜெபிப்போம் – எசேக்கியேல் 36:30

9. இக்கடைசி நாட்களில் ஏற்படும் இயற்கை சீற்றத்தால் ஏற்படுகின்ற அழிவின் மூலம் மக்கள் உண்மை தேவனை அறிந்திட ஜெபிப்போம் பிரசங்கி 12:1,7

10. தேசங்களில் காணப்படும் தகாத உறவுகள் வேறோடு அகன்று போக ஜெபிப்போம் – யூதா 1:7

11. உலகம் முழுவதும் காணப்படுகின்ற தீவிரவாதங்கள் அடியோடு மறைந்திட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 10:23

12. எல்லா நாடுகளும் ஒற்றுமையுடன் காணப்பட ஜெபிப்போம் எபேசியர் 2:19

13.இக்கடைசி நாட்களில் ஏற்படவிருக்கும் பூமியதிர்ச்சி, நிலநடுக்கம் இவற்றின் மூலம் வரும் பாதிப்புகளிலிருந்து தேசங்கள் காப்பாற்றப்பட ஜெபிப்போம் – மத்தேயு 24:7

14.தேசங்களில் காணப்படும் அடிமைத்தனங்கள் அகன்று போக ஜெபிப்போம் – எபிரேயர் 2:15

15. சுவிசேஷம் எல்லா நாடுகளிலும் பரவி சென்றடைய ஜெபிப்போம் மத்தேயு 24:14

18. தேசங்களிலே பரவிக் சூதுகள், கொண்டிருக்கும் கருக்கலைப்புகள் இல்லாமல் போக ஜெபிப்போம் – சங்கீதம் 127:4

19. உலகம் முழுவதிலும் காணப்படுகின்ற கற்பழிப்புகள் இல்லாமல் போக ஜெபிப்போம் – 2 சாமுவேல் 13:14,15

20. எல்லா நாடுகளிலும் காணப்படுகின்ற மதுபானப்பிரியர்கள்lருப்பவர்கள் மாறிட ஜெபிப்போம் – நியாயாதிபதிகள் 10:16

23.தேசங்களிடையே காணப்படும் பகை விரோதங்கள் மாறிட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 10: 12 ஜெபிப்போம் – நீதிமொழிகள் 10: 12

24. தேசங்களில் காணப்படும் வேசித்தனங்கள் வேறெடுக்கப்பட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 6 :13,18

25. உலகில் காணப்படும் கள்ள போதகங்களிலிருந்து மக்கள் தங்களை காத்திட ஜெபிப்போம் – எபிரேயர் 13:9

26. உலகில் காணப்படும் கள்ள உபதேசங்களை நம்பி வஞ்சனைக்கு உட்படுகிறவர்கள் விசுவாசத்தை விட்டு விலகாமல் இருக்க ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 4:1

27. உலகில் கள்ள தீர்க்கதரிசிகளை பின்பற்றுகிறவர்களின் நிலை மாறிட ஜெபிப்போம் – மத்தேயு 7:15

28. உலகில் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப் படாமல் தங்களைக் காத்திட ஜெபிப்போம் – மத்தேயு 24:24

29. உலகில் பரவிக்கொண்டு இருக்கிற சாத்தானை ஆராதிக்கின்ற கூட்டங்கள், சபைகள் தகர்க்கப்பட ஜெபிப்போம் -2 கொரிந்தியர் 4:4

30. உலகில் கள்ளப் போதனைகள் செய்பவர்கள் மாறிட, அவர்களை விசுவாசிகள் பின்பற்றாமல் தங்களைக் காத்துக் கொள்ள ஜெபிப்போம் 2 பேதுரு 2:1

31. உலகில் காணப்படும் பிசாசின் உபதேசங்கள் செய்பவர்கள் மாறிட ஜெபிப்போம்-  1 தீமோத்தேயு 4 :1

32. உலகில் கள்ள மற்றும் பொய் தீர்க்க தரிசனங்கள் சொல்கிறவர்கள் திருந்திட ஜெபிப்போம் – எரேமியா 14 :14

33. உலகமெங்கும் மதத்தின் பெயரைத் தரித்து ஏமாற்றுகிறவர்கள் மாறிட ஜெபிப்போம் – சகரியா 11 :16

34. உலகில் ஏற்படும் கொலைகள், கொலை எண்ணங்கள் முற்றிலும் இல்லாமல் போக ஜெபிப்போம் – யோவான் 8 :44

35. உலகில் பல ஆண்டுகளாய் படுத்தபடுக்கையில், மரணத் தருவாயில் தவிக்கின்றவர்களை தேவன் காப்பாற்றிட ஜெபிப்போம் – சங்கீதம் 41:3

36. உலகில் காணப்படும் தரித்திரங்கள் யாவும் மறைந்திட ஜெபிப்போம் – 1 சாமுவேல் 2:7

37. உலகில் காணப்படும் நயவஞ்சகங்கள் எல்லாம் மாறிட ஜெபிப்போம்-1 யோவான் 3:7

38. உலகில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களிடையே காணப்படும் பகைமைகள் எல்லாம் மாறிட ஜெபிப்போம் – மத்தேயு 5 :44

39. உலகில் கணவன் – மனைவியிடையேயான கருத்து வேறுபாடுகள் மாறிட ஜெபிப்போம் – கொலோசெயர் – 3:18, 19

40. உலகில் பிள்ளைகள் பெற்றோர்களிடையே காணப்படும் பகைமைகள் மாறிட ஜெபிப்போம் – கொலோசெயர் – 3 :20,21

41. உலகில் சகோதரர்களிடையே ஏற்படும்  பகை, விரோதங்கள் எல்லாம் மாறிட ஜெபிப்போம் – 1 யோவான் 4 :20

42. உலகில் ஏற்படும் மரணங்களிலிருந்து தேவன் ஒவ்வொருவரையும் காத்திட ஜெபிப்போம். -வெளிப்படுத்தின விசேஷம் 1:18

43. உலகில் விஷப்பூச்சிகளினால் ஏற்படும் மரணங்களிலிருந்து மக்களை தேவன் காத்திட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 28:4,5

44. உலகில் அகால மரணம், விபத்துக்கள் குறைந்திட ஜெபிப்போம் – சங்கீதம் 48:14

45. விலங்குகளினால் மக்களுக்கு ஏற்படும் மரணங்கள், பாதிப்புகள் குறைந்திட ஜெபிப்போம் – சங்கீதம் 68:20

46. உலகில் மக்களிடையே உள்ள மலட்டுத்தன்மைகள் இல்லாமல் போக ஜெபிப்போம் – உபாகமம் 7: 14

47. தேசங்களில் காணப்படும் கர்ப்பத் தடைகள், கருக்கலைப்பு எல்லாம் மாறிட ஜெபிப்போம் – யாத்திராகமம் 23 :26

48. உலகில் குறைகள் உள்ள குழந்தைகள் பிறக்காமல், ஆரோக்கிய மான குழந்தைகள் பிறக்க, தேவன் அருள் புரிந்திடஜெபிப்போம் – ஆதியாகமம் 50 :21

49. உலகில் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிறவர்களின் நிலைகள், எண்ணங்கள் மாறிட ஜெபிப்போம் 2 தீமோத்தேயு 3 :2

50. உலகில் பெயர், புகழுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற நிலை எண்ணங்கள் மாறிட ஜெபிப்போம் – கலாத்தியர் 5: 26

51.உலகில் காணப்படும் மனித வழிபாடுகள் அகன்று போக ஜெபிப்போம் – மத்தேயு 18: 7

52.உலகில் சுவிசேஷத்தை அறிவிக்கத்தக்க தாகமுள்ள, பாரமுள்ள சுவிசேஷகர்கள் எழும்பி வர ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 4:5

53. உலகெங்கும் சுவிசேஷத்தை கேட்டவர்கள் அதை விசுவாசித்து பலன் தந்திட ஜெபிப்போம் – கொலோசெயர் 1:6

54. உலகத்தில் உள்ள சர்வ சிருஷ்டிகளுக்கும் சுவிசேஷம் முழுமையாய் சென்றடைய ஜெபிப்போம் – கொலோசெயர் 1:23

55. உலகம் முழுவதிலும் ஆண்டவரின் வார்த்தையை அறிவிக்கத்தக்க உண்மையான, போதகர்கள், சுவிசேஷகர்கள், ஊழியர்கள் ஆகியோரை தேவன் எழுப்பிட ஜெபிப்போம் – நியாயாதிபதிகள்1 :2

56.தேசங்களையும், தேசங்களில் உள்ளவர்களையும் தேவன் பாதுகாத்து நடத்திடவும், புலம்பலிலிருந்து தேசத்தை தேவன் காப்பாற்றிட ஜெபிப்போம் – ஓசியா 4: 3

57. ஒவ்வொரு தேசத்திலும் உண்மை தேவனைப் பற்றிய அறிவு மக்களுக்கு கிடைத்திட ஜெபிப்போம் – ஒசியா 4:1

58. தேசங்களிலே உண்மைகள் ஒழுக்கங்கள் இறக்கம் மேலோங்கிட ஜெபிப்போம் – ஒசியா 4: 1

59. உலகில் ஆரோக்கியமான தூய, சுத்தமான தண்ணீர் தாராளமாய் கிடைக்க ஜெபிப்போம் – யாத்திராகமம் 23:25

60. எல்லா தேசத்திலும் விபச்சாரத்தில் காணப்படுகிறவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, தேவனிடம் மன்னிப்பை பெற்று திருந்தி வாழ்ந்திட ஜெபிப்போம் – யோவான் 8: 11

61. ஒவ்வொரு தேசத்தை ஆளுகின்ற எல்லா அதிகாரிகளுக்காக ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 2: 1,2

62. இப்பொழுது ஒவ்வொரு தேசங்களிலும் சிறைக்கைதிகளாகவும், அடிமைகளாகவும் காணப்படுகிற ஒவ்வொருவரின் பாவங்களையும் தேவன் மன்னித்து இரட்சிக்க ஜெபிப்போம் – உபாகமம் 30:3

63. உலகில் பலவகையான அநியாயங்களை செய்கிறவர்கள் மாறிட ஜெபிப்போம் – மல்கியா 3 :5

64. உலகிலே பலவகையான பாவத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், தேவனிடம் அதற்கான மன்னிப்பை பெற்றிட ஜெபிப்போம் – சகரியா 13: 1

65. உலகத்தில் தினமும் எத்தனையோ ஆயிரமாயிரமான ஜனங்கள் மரிக்கின்றார்கள், அவர்களுக்காய் ஊக்கமாய் ஜெபிப்போம் – எசேக்கியேல் 33:8 –

66. எருசலேமின் சமாதானத்திற்காய் ஜெபிப்போம் – சங்கீதம் 122 :6,7

67. உலகில் மனிதர்களுக்குள்ளே காணப்படும் பரியாசங்கள், கேலி, கிண்டல் ஒழிந்துபோக ஜெபிப்போம் – எபேசியர் 5 :4

68. உலகில் பார்வையில்லா குருடர்களை தேவன் வழிநடத்தி காத்திட ஜெபிப்போம் – ஏசாயா 42:16

69. தேவன் அருவருக்கும் பாவங்கள் தேசங்களில் காணப்படாதிருக்க ஜெபிப்போம் – நீதிமொழிகள் 6:16-19

70. தேசங்களிடையேயும், தேசத்திற்குள்ளும் காணப்படும் சண்டைகள் குறைந்திட ஜெபிப்போம் – யாக்கோபு 4:1

71. உலகில் காணப்படும் சோம்பேறிகள் மாறிட ஜெபிப்போம் * நீதிமொழிகள் 19 :24

72. உலகில் ஏமாற்றுக்காரர்கள் மனந்திரும்பிட ஜெபிப்போம் -ஆதியாகமம் 32 :27

73. குறிசொல்கிறவர்கள் இல்லாமல் போக ஜெபிப்போம் – எசேக்கியேல் 12:24

74. எல்லா நாடுகளிடையேயும், எல்லா மக்களிடையேயும், எல்லா குடும்பங்களி டையேயும் கர்த்தர் சமாதானத்தை தந்திட ஜெபிப்போம் – யோவான் 14 :27

75. உலகில் உள்ள எல்லா இசைக்கருவிகள் வாசிப்போருக்காய் ஜெபிப்போம் – 2 ராஜாக்கள் 3 :15

76. உலக மக்கள் மெய் தேவனை பின்பற்றி, நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள தகுதியுள்ளவர்களாய் மாறிட ஜெபிப்போம் – 1 யோவான் 5:20

77. ஆகாரங்கள் பற்றாக்குறையின்றி எல்லோருக்கும் தாராளமாய் கிடைத்திட ஜெபிப்போம் – சங்கீதம் 145:15

78. தேசங்களிலே காணப்படும் லஞ்ச, லாவண்யங்கள் எல்லாம் முற்றிலும் இல்லாமல் போக ஜெபிப்போம் – உபாகமம் 16 :19

79. தேசங்களிலே வறட்சிகள் மாறி, தேசங்கள் தன் பலனை தந்திட தேவனை நோக்கி ஜெபிப்போம் – சகரியா 8 :12

80. உலகில் காணப்படும் போஜனப் பிரியர்கள் எல்லாரும் மாறிட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 23 : 2,3

81. தேசங்களில் காணப்படும் விவாகரத்துகள் முற்றிலும் குறைந்திட ஜெபிப்போம் – மல்கியா 2 : 16

82. தேசங்களில் உள்ள ஒவ்வொரு சபைகளும் 24 மணி நேரமும் தொடர்ந்து ஆண்டவரை துதித்து ஸ்தோத்திர ஆராதனைகளை ஏறெடுத்திட ஜெபிப்போம்- எபிரேயர் 13 : 15

83. உலகெங்கும் சபைகளில் நடைபெறும் ஒவ்வொரு ஆராதனைகளிலும் ஆவியானவரின் கிரியைகள், ஆளுகைகள், பிரசன்னம், மகிமை அளவில்லாமல் காணப்பட ஜெபிப்போம் – ஆகாய் 2 : 9

84. ஒவ்வொரு நாட்டின் President-ம் இரட்சிக்கப்பட ஜெபிப்போம் நீதிமொழிகள் 8: 16

85. உலகெங்கும் ஒவ்வொரு நாளும், தேவனிடமும் தேவ சமூகத்திற்கும் புதிய புதிய ஆத்துமாக்கள் ஆயிரமாயிரமாய் கடந்து வந்திட ஜெபிப்போம் – ஏசாயா 55 : 5

86. தேவ பிள்ளைகள் அனைவரும் உலக, மாம்ச இச்சைகளில் விழாதபடி. தங்களை காத்திட ஜெபிப்போம் – மாற்கு 4 : 18

87. தேசமெங்கும் காணப்படும் சபை போதர்களுக்காய் உண்மையாய் உத்திரவாதத்தோடு ஜெபிப்போம் – எபேசியர் 6 : 18

88. உலகெங்கும் சபைகளில் துதி மற்றும் பாடல் ஆராதனை நடத்தும் தேவபிள்ளைகளை தேவன் வல்லமையாய் அபிஷேகித்து பயன்படுத்திட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 14: 15

89. உலகெங்கும் சபைகளில் இசைக்கருவிகள் வாசிப்பவர்கள் நேர்த்தியாய் ஆண்டவர் நாமம் மகிமைக்கென மாத்திரமே வாசித்திட ஜெபிப்போம் -1 நாளாகமம் 15:21

90. ஆண்டவரை நன்கு அறிந்த அவரின் பிள்ளைகள், எங்குமே என்றுமே பின்மாறி சாபத்திற்குள்ளாகிவிடாதபடி ஜெபிப்போம் – உபாகமம் 28 : 45

91. எங்கும் உள்ள தேவப்பிள்ளைகள் இப்பூமியின் பொக்கிஷங்களுக்காய் இல்லாமல், பரலோக பொக்கிஷங்களுக்கு தங்களை அர்ப்பணித்திட ஜெபிப்போம் – மத்தேயு 19: 12

92. எல்லா மக்களுக்கும், தேவ பிள்ளைகளும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாய் மாறிட ஜெபிப்போம் யோவேல் 2:28

93. உலகெங்கும் உள்ள சபை மக்களிடையே ஆவியின் வரங்கள் பகிர்ந்திளிக்கப்பட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 12 : 11

94.உலகெங்கும் உள்ள சபை மக்கள் நற்குணத்திலே நிறைந்தவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – ரோமர் 15 : 14

95.தேவபிள்ளைகள் ஒவ்வொருவரும் தேவனுடைய கற்பனைகளினால் தங்கள் வாழ்க்கையை காத்திட ஜெபிப்போம் – வெளிப்படுத்தல் 14:12

96. தேவப்பிள்ளைகள் ஒவ்வொருவரும் உலகக் கவலைகளில் கட்டப்பட்டவர்களாய் காணப்படாதபடி இருக்க ஜெபிப்போம் – மாற்கு 4:18

97. தேவப்பிள்ளைகள் ஒவ்வொருவரும் தங்கள் சரீரத்தை பரிசுத்தமாய் ஒவ்வொரு நாளும் காத்திட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 6: 19

98. தேவபிள்ளைகள் ஒவ்வொருவரும் சகல அறிவினால் நிரப்பப்பட்டவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – ரோமர் 15: 14

99. உண்மையாய் ஊழியத்திற்கு ஒத்துழைக்க, உதவிசெய்ய, தாங்கிட ஆட்களை தேவன் சபைகளிலே ஏற்படுத்திட ஜெபிப்போம் – ரோமர் 16: 4

100.உலகெங்கும் சபைக்கும், சத்தியத்திற்கும், போதகருக்கும் எதிர்த்து நிற்பவர்கள் மாறிட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 4: 15

101.தேவன் ஒவ்வொரு சபைகளிலும் இரவு பகலாய் ஜெபிக்கக் கூடிய தேவபிள்ளைகளை எழுப்ப ஜெபிப்போம் – ஏசாயா 62: 6

102.ஒவ்வொரு தேசங்களிலும் வல்லமையான போதகர்கள் எழும்பி தேசத்தை சுதந்தரிக்க ஜெபிப்போம் – தீத்து 1 :5

103.ஒவ்வொரு தேசத்திலேயும் சுகவீனத்தோடு காணப்படுபவர்கள் சபைக்கு வந்து பூரண சுகம் பெற்றுச் செல்ல ஜெபிப்போம் – ஏசாயா 58:8

104.ஒவ்வொரு தேசத்திலேயும் வைராக்கியமாய் போதிக்கத்தக்க போதகர்கள் எழும்பிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 9:31

105.ஒவ்வொரு தேசங்களில் உள்ள சபைகள் தேவனிடம் சமாதானம் பெற்று, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் வளர்ந்து, பெருகி, பக்தியோடு தெய்வபயத்தில் காணப்பட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 9 : 31

106. உலகம் எங்கும் மக்களிடையே பரவிக்கிடக்கும் இருதயத்தின் இச்சைகள் மாறிட ஜெபிப்போம் – ரோமர் 1 : 24

107.தேசங்களிலே சத்தியத்தைப் பொய்யாய் மாற்றுகிற சபைகள் உண்மையான சத்தியத்திற்கு வந்திட ஜெபிப்போம் – ரோமர் 1 : 25.

108. உலகெங்கும் உள்ள தேவப்பிள்ளைகளை தேவன் அசுத்தத்திற்கு ஒப்புக் கொடாமல் இரக்கம் காண்பித்திட ஜெபிப்போம் – ரோமர் 1 : 24

109.உலகெங்கும் உள்ள தேவப்பிள்ளைகளை தேவன் இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக் கொடுக்காமல் தயவு காட்டிட ஜெபிப்போம். ரோமர் 1:26

Leave a Reply