தேவனுக்குப் பிரியமாயிருந்தால் வரும் ஆசீர்வாதங்கள்
ஆதார வசனம் : நீதி 16:17
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால். அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார் (நீதி 16:7)
துணை வசனம்: தானி 9:23, சங் 40:8; 41:11
- நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது. நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற அர்த்தத்தையும் நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். தானியேல் 9:23
- என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். சங்கீதம் 40:8
- என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன். சங்கீதம் 41:11
தேவனுக்கு பிரியமாய் இருந்தால்,
1.நம்மை காப்பாற்றுகிறார் (உபா 33:12)
- சிங்கங்களின் கெபியிலிருந்து காப்பாற்றுகிறார் (தானி 6:22)
- எரிகிற அக்கினி சூளையிலிருந்து (தானி 3:17,24-25)
- போகும் இடமெல்லாம் காப்பாற்றுகிறார் (2சாமு 8:6)
2. சிறையிருப்பை திருப்புகிறார் [சங் 14:7) யோபுவின் சிறையிருப்பைத் திருப்பினார் (யோபு 42:10)
- யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினார் (சங் 85:1)
- சீயோனின் சிறையிருப்பைத் திருப்பினார் (சங் 126:1)
- யோபுவின் சிறையிருப்பை திருப்பினார் (யோபு 42:10)
3. ஜெபத்தைக் கேட்கிறார் (1சாமு 12:22)
- தாவீதின் ஜெபத்தைக் கேட்டார் (சங் 18:6)
- தானியேலின் ஜெபத்தைக் கேட்டார் (தானி 9:23)
- நூற்றுக்கு அதிபதியின் ஜெபத்தைக் கேட்டார் (மத் 8:10)
4. பலனைக் கொடுக்கிறார் (யோபு 33:26)
- செய்கைகளின் பலனைக் கொடுக்கிறார் (2யோவா 1:8)
- பிரயாசத்தின் பலனைக் கொடுக்கிறார் (யோவா 4:38)
- நீதியின் பலனைக் கொடுக்கிறார் (யோபு 33:12)
5. ஜெயங்கொடுக்கிறார் (சங் 41:11)
- தாவீது கோலியாத்தை மேற்கொள்ளும்படி செய்தார் (1சாமு 17:51)
- தானியேல் ராஜாக்கள் மத்தியில் ஜெயமுடன் வாழ்ந்தார் (தானி 6:28)
- பவுல் சரீர பெலவீனத்தை மேற்கொண்டுவாழ செய்தார் (2கொரி 9:12)
6.ஆசீர்வாதத்தை அருளிச் செய்கிறார் (உபா 33:11)
- ஆபிரகாமை சகல காரியங்களிலும் ஆசீர்வதித்தார் (ஆதி 26:5)
- சீஷர்களை தம் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார் (லூக் 24:50)
- யோபின் முன்னிலைமையைக் காட்டிலும் ஆசீர்வதித்தார் (யோபு 42:12)
7. எப்போதும் கூட இருக்கிறார் [யோவா 8:29]
- யோசேப்போடேகூட இருந்தார் (ஆதி 39:2)
- யோசுவாவோடேகூட இருந்தார் (யோசு 6:27)
- சாமுவேலோடேகூட இருந்தார் (1சாமு 3:19)
என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை (யோவா 8:29)
இயேசுகிறிஸ்துவைக் கொண்டு தமக்கு முன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியைகளிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக (எபி 13:21)