தமிழில் பரிசுத்த வேதாகமம் பிறந்த வரலாறு
இந்தியாவில் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும் மேன்மையும் உண்டு. அதில் ஒன்று இந்திய மொழிகளிலேயே தமிழ் மொழியில் தான் முதன் முதலில் புத்தகம் அச்சிடப்பட்டது. இது தமிழுக்கு ஒரு தனிச்சிறப்பு. அதுவும் இந்தியாவிலேயே முதன் முதலாக அச்சிடப்பட்ட அந்த நூல் நமது பரிசுத்த வேதாகமம் தான் என்பது தமிழ் மொழியின் மற்றொரு தனிச்சிறப்பு.
போர்ச்சுக்கீசியின் வருகை:
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமா என்பவர் புகழ்பெற்ற மாலுமிகளில் ஒருவர். இவர் அநேக நாடுகளுக்கு கடல் மார்க்கமாய் கடந்துவந்து கி. பி 1498ல் மே மாதம் கேரளாவிலுள்ள கள்ளிக்கோட்டைக்கு போர்ச்சுகீசிரை கொண்டுவந்து சேர்ந்தார்.
கி.பி. 1510-இல் இவர்கள் கோவாவையும், பிறகு சென்னைக்கு அருகில் உள்ள சாந்தோமையூம், பல இடங்களைப் பிடித்து தங்கள் ஆதிக்கத்தை ஆரம்பித்தனர். பிறகு இலங்கையையும் கைப்பற்றினர். பிறகு தாங்கள் கைப்பற்றிய சில இடங்களில் வியாபாரத்தோடு கிறிஸ்துவை குறித்து பிரசங்கித்து சிலரை கிறிஸ்துவிற்குள் கொண்டுவந்தனர்.
இவர்களைத் நாடுகளிலிருந்து தொடர்ந்து வியாபாரக் ஐரோப்பிய கம்பெனிகள் 1616-இல் பல இந்தியாவிற்கு வர ஆரம்பித்தன கி. டென்மார்க் வியாபாரிகள் பி. டென்மார்க்கிலும், இந்தியாவிலும் “கிழக்கிந்திய கம்பெனி” என்ற பெயாரில் தொழில் தொடங்கினர்.
கி. பி. 1619ல் ஆங்கிலேயர் வந்து அவர்களும் வியாபாரம் தொடங்கினார்கள். பின் பல இடங்களில் தொழிற்சாலைகளை தொடங்கினர். இதன் விளைவாக ஏறக்குறைய 90 ஆண்டுகளாக டென்மார்க், கிழக்கிந்திய கம்பெனியுடன் தரங்கம்பாடியில் வைத்திருந்தது.
போர்த்துக்கீசியரைத் தவிர மற்ற ஐரோப்பிய நாட்டு வியாபாரிகள் யாரும் கிறிஸ்தவ மார்க்கத்தைப் பரப்ப வரவில்லை வியாபார நோக்கத்திலேயே வந்தனர். அது மட்டுமல்ல கிறிஸ்தவம் பரவுவது தங்கள் வியாபாரத்திற்கு இடையூறு செய்யும் என்று எண்ணி மிஷனேரிகள் இந்தியாவிற்கு வருவதை விரும்பவில்லை. அதோடு எதிர்க்கவும் செய்தனர்.
தமிழ் மொழியில் வேதாகமம் மொழி பெயர்க்கப்படுவதற்கு முக்கிய காரணமாயிருந்தவர் டென்மார்க்கு தேசத்தின் அரசன் நான்காம் பிரடெரிக் இந்தியாவின் மேல் இருந்த ஊழிய பாரம் அவரை மிஷனரிகளை அனுப்புமாறு தீவிரம் கொள்ளச் செய்தது.
அதன் விளைவாக ஜெர்மானியரான 23 வயது சீகன் பால்க் இந்தியாவிற்கு மிஷனரியாக பணியாற்ற வந்தார். சீகன் பால்க் தனது
16ஆவது வயதில் இரட்சிக்கப்பட்டார்.
இந்த அனுபவத்திற்கு பின்பு கல்லூரி மாணவராக இருக்கும் சமயத்தில் பின்வரும் சவாலான வார்த்தைகளை அவர் கேட்க நேர்ந்தது.
“புறஜாதியார் தேசத்திலே ஒரே ஆத்துமா
இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாவில்லுள்ள ஒரு கிறிஸ்தவ தேசத்தில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு சமம்”. இந்த வார்த்தைகளின் மூலமாக தேவன் சீகன் பால்க்கை மிஷனரி ஊழியத்திற்கு அழைத்தார். சந்தேகம், உபத்திரவம், அடிக்கடி உண்டாகும் சரீர சுகவீனம் என இவைகளின் மத்தியில் சீகன் பால்க் தேவனுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டு இந்தியாவிற்கு மிஷனரியாக செல்ல தன்னை ஆயத்தப்படுத்தினார். ஆனால் அது அவருக்கு ஒரு சவாலாகத் தான் இருந்தது. ஏனெனில் ஐரோப்பா கண்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அனைத்து கிறிஸ்தவ சமுதாயமும் வெளி நாட்டிற்கு மிஷனரியை அனுப்பவது வீண் என்றும், விருதா ஊழியம் என்றும் நம்புகின்ற ஒரு காலமாக அந்நாட்கள் இருந்தன. ஒரு வழியாக எல்லா எதிர்ப்புகளையும் கடந்து 1705 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் தன் நண்பர் – 29 வயது நிரம்பிய ப்ளூட்சுடன் சேர்ந்து இந்தியாவிற்கு பிராட்டஸ்டண்டு சபையால் அனுப்பப்பட்ட முதல் மிஷனரிகளாக தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். 7 மாத கடல் பிராயணத்தின் முடிவில் அவர்கள் இந்தியாவின் தரங்கம்பாடியில் வந்து சேர்ந்தனர். அன்று கப்பலில் இருந்து அவர்களை கரைக்கு அழைத்துச் செல்ல ஒருவரும் இல்லை. எனவே கடற்கரைவில் இறங்க முடியாமல் அநேக நாட்களாய் கப்பலிலேயே உண்ண உணவும் இல்லாமல் காத்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இறுதியாக, அந்த கப்பல் இருந்த பக்கமாக மீன் பிடிக்க வந்த ஒரு படகில் ஏறி கரை நோக்கி போனார்கள். அவர்கள் இருவரும் இந்திய மண்ணிலே கால் வைத்த நாள் இந்தியாவின் சுவிசேச சரித்திரத்திலே மறக்கமுடியாத நாள். 1706ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தரங்கம்பாடியில் அவர்கள்
இறங்கினார்கள்.
ஆனால், டேனிஷ் கிழக்கிந்திய அதிகாரிகளுக்கு
இவ்வருகை அனுப்பப்பட்டிருந்த வெறுப்பையே
இருவரும் தந்தது. தங்கள் மன்னரால் வேலைகளை கண்காணித்து அரசருக்கு தெரியப்படுத்தும் உளவாளிகளாக இருக்கலாம் என சந்தேகித்தனர். அதன் காரணமாக, முறையான உபசரிப்பு இல்லை, தங்க நல்ல இடம் கொடுக்கப்படவில்லை.
எனவே, சீகனும் அவர்து தோழரும் போர் கைதிகளையும், போர்ச்சுகீசிய அடிமைகளையும்
அடைத்து வைக்கும் கூரைகளில் தங்கினர். டேனிஷ் கிழக்கிந்திய கம்பனியால் போதுமான அனுசரிப்பு இல்லாவிட்டாலும், இந்தியாவில்
தங்கியிருந்த ஜெர்மானியர்கள் அவருக்கு
உதவினர்.
ஆங்கிலேயர்களும் தங்கள் உதவியை அளித்து சீகன்பால்க்கின் மிஷனரி ஊழியத்தை தாங்கினர். இந்தியாவில் தங்கள் காலனி ஆதிக்கத்தை நாட்ட டென்மார்க், போர்ச்சுகல், ஃபிரான்ஸ்,
இங்கிலாந்து என பல ஐரோப்பிய தேசங்கள் தங்களுக்குள் போராடி வந்த நேரமது. இருந்தாலும், அவர்கள் ஒன்றிப் போனது இது போன்ற சில மிஷனரி ஊழியங்களில் தான். சீகன்பால்க் டேனிஷ் மன்னரால் அனுப்பப்பட்ட போதகரெனினும், அவர் கிறிஸ்துவின் சுவிசேஷ பணிக்காக தன்னை அர்ப்பணித்ததால் அவருக்கு உதவ ஜெர்மானியர்களும் ஆங்கிலேயர்களும் முன்வந்தனர்.
சீகன் தன் அருட்பணியைத் தொடங்கினார். அவருக்கு இடையூறு அளித்த மற்றொன்று மொழி. தமிழ் மொழி அறியாது சுவிசேஷத்தை அறிவிக்க திணறினார். இத்திணறல் அவரை தமிழ் மொழி கற்றுக்கொள்ள வகை செய்தது. அப்போது அவருக்கு முதலியப்பா என்ற இந்தியரும் ஒரு தமிழ் மொழி புலவரும் உதவிக்கரம் கொடுத்தனர். அவர்களது உதவியோடு தமிழ் மொழியை கற்றுக் கொண்டார். 5000 த்திற்கும் மேலான தமிழ் வார்த்தைகளைத் திரட்டி மனனமிட்டுக் கொண்டார். சிறுக சிறுக இலக்கண இலக்கியங்களை பயின்று, கடற்கரை மணலில் சில எழுத்து பயிற்சிகளை மேற்கொண்டு தமிழில் நல்ல தேர்ச்சிப் பெற்றார். தனக்கு கிடைத்த அருட்கொடைகளைக் கொண்டு இந்தியர்களுக்காக ஒரு சுவிசேஷ பள்ளியை ஆரம்பித்தார், மேற்கத்திய மொழிகளில் எழுதப்பட்ட பரிசுத்த வேதாகமங்கள், சுவிசேஷ புத்தகங்கள், பாடல் புத்தகங்கள், தியான நூல்கள் முதலிய பல நூல்கள் அடங்கிய ஒரு நூலகமும் அவரால் நிறுவப்பட்டது. இங்கிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கு நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவரது முயற்சியால், புராட்டஸ்டன்டு கிறித்துவ ஆலயம் ஒன்று இந்தியாவில் கட்டப்பட்டது. முந்நூறு ஆண்டுகளைத் தாண்டி நிற்கும் பழமையான தமிழ் லுத்தரன் திருச்சபை தான் அந்த ஆலயம்!
சீகனது சுவிசேஷப் பணிக்கு பெரும் இடையூறு செய்தவர் ஹாசியஸ் (அக்கால டேனிஷ் கிழக்கிந்திய கம்பனியின் கவர்னர்). இந்தியர்கள் கிறிஸ்தவர்களாக மாறினால் மேற்கத்திய வியாபாரம் பாதிக்கப்படும் என ஹாசியஸ் கருதினார். எனவே மிஷனரிகளால் நற்செய்தி அறிவிக்கப்படாமல் இருக்க பல இன்னல்களை கொடுத்தார். அதே நேரத்தில் பல ஐரோப்பியர்கள் தங்கள் வீட்டு வேலைகளுக்கு இந்தியர்களை பயன்படுத்தி வந்தனர், அடிமை வர்த்தகமும் இலகுவாக நிலவி வந்தது. இச்செயல்களெல்லாம் வேதத்திற்கு எதிரானவை என சீகன் பால்க் மக்களிடையே போதித்து வந்தார். ஹாஸியசின் கொள்கையை மீறி சுவிசேசமும் அறிவிக்கப்பட்டது. சீகனின் திருப்பணிகள் கவர்னருக்கு வெறுப்பை உண்டாக்கின. அதன் விளைவாக, இரவு வேளை ஒன்றில் ஜெபத்தில் ஈடுபட்டிருந்த சீகன் பால்க்கை போலீசார் கைது செய்தனர். நான்கு மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். சிறைவாசத்தின் போது, சுவிசேசத்திற்காக ஒரு கிறிஸ்தவன் அனுபவிக்கும் இன்னல்களின் பாக்கியத்தை உணர்ந்தார். அவைகளை விவரிக்கும் இரண்டு நூல்களையும் எழுதினார்.
சிறைவாசத்திற்கு தொடர்ந்தது. பல பின்பு, மக்கள் சீகனின் அருட்பணி கிறிஸ்துவுக்குள்ளாக வழி நடத்தப்பட்டனர். இருப்பினும் தமிழ் மொழியில் வேதாகமம் இல்லாதது ஒரு பெரிய இழப்பாக இருந்தது. தமிழில் பரிசுத்த வேதாகமத்தை மொழிப் பெயர்ப்பதின் மூலம் பல தமிழ் மக்களுக்கு சத்தியத்தை அறிவிக்க முடியும் என சீகன் உணர்ந்தார். அதனால், கிறிஸ்துவுக்குள் வந்த தமிழ் மக்களும் ஆழமான உண்மைகளை அறிந்து கொண்டு, இயேசு கிறிஸ்து காட்டிய வழிக்குள் நிலைத்திருப்பார்கள் என கருதினார். எனவே
அதற்கான பணிகள் தொடங்கின. கருத்தோடு வேதாகமத்தை தமிழ் மொழியில் எழுத தொடங்கினார்.
பரிசுத்த வேதாகமத்தில் ஒவ்வொரு வார்த்தையையும் மொழிபெயர்க்கும் கிடைக்காமல் சரியான பதங்கள் சிரமப்பட வேண்டியிருந்தது. அதற்குரிய வார்த்தைகளை ஆராய பல இலக்கியங்களை சீகன் பால்க் ஆய்வு செய்தார். கத்தோலிக்க சபையார் பயன்படுத்தி வந்த சில வார்த்தைகளை தனது மொழி பெயர்ப்பில் பயன்படுத்தினார். மேலும் ஸ்கிமிட்டின் கிரேக்க புதிய ஏற்பாடு, லத்தீன் வல்கேட், மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை தனது மொழி பெயர்ப்புக்கு ஆதாரமாக வைத்துக் கொண்டார். இதற்காக இரவு பகலென பாராது நேரமெடுத்து உழைத்தார். இறுதியில் தேவ ஒத்தாசையோடு அந்த கடின முயற்சியில் வெற்றியும் பெற்றார். மனித வாழ்வின் இருளை அகற்றும் ஒளியாகிய தேவ வார்த்தைகள் அடங்கிய முழு புதிய ஏற்பாட்டையும் 1711 மார்ச் 31இல் மொழிபெயர்த்து முடித்தார்.
மொழிபெயர்த்த இப்புதிய ஏற்பாட்டை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டுமானால் பல பிரதிகள் எடுக்க வேண்டும். அதற்கு அவைகளை அச்சேற்ற வேண்டுமென விரும்பினார். அந்த நாட்களில் இந்தியாவில் எங்கும் அச்சகங்கள் கிடையாது. எழுத்து ஓலையும், காகிதத்தில் மையினால் எழுதுவதுமே பழக்கமாக இருந்தது. எனவே ஜெர்மனியில் உள்ள தனது நண்பர்களுக்கு இதைத் தெரியப்படுத்தினார். அவர்களின் நன்கொடையால் அச்சு எந்திரமும் அச்சு எழுத்துக்களும் கப்பல் மார்க்கமாக இந்தியாவின் மண்ணில் தரை இறங்கியது. இவைகளை அச்சேற்றும் பணி 1713ஆம் வருடம் தொடங்கியது. காகிதப் பற்றாக்குறை அச்சு எழுத்துக்கள் கிடைக்காமை ஆகிய தடைகள் இருந்தாலும் தேவ கிருபையால் எல்லாத் தடைகளையும் தனது கடின முயற்சியால் சீகன் பால்க் மேற்கொண்டார். 1715ஆம் வருடம் ஜூலை மாதம் 15ஆம் நாள் தமிழ் புதிய ஏற்பாடு அச்சாகி வெளிவந்தது.
“தேவனுக்காக நாம் எடுக்கும் பிராயசங்கள் ஒரு நாளும் வீணாகாது” என்பது சீகன் பால்க்கின் வாழ்வில் உண்மையானது. இப்படியாகத்தான் நம் கரங்களில் தவழும் இந்த அரிய பொக்கிஷம் அன்று வெளி வந்தது. அது மட்டுமா? இந்தியாவிலேயே தமிழிலேயே அச்சடிக்கப்பட்ட முதல் நூல் பைபிள் என்ற மகிமை உண்டானது. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். மேலும், பழைய ஏற்பாட்டையும் மொழிபெயர்க்கும் பணியில் சீகன் பால்க் ஈடுபட்டார். ரூத் புத்தகம் வரை மொழிபெயர்த்திருந்த சமயத்தில் தீடீரென சரீரத்தில் ஏற்பட்ட பெலவீனத்தினால் 1719ஆம் வருடம் பிப்ரவரி 23ஆம் நாள், தனது 37ஆம் வயதில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை விட்டு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். தனது மரண நாளில் காலை எழுந்து குடும்ப ஜெபம் செய்தபின் தனக்கு விருப்பமான பாடலை பாடுமாறு செய்து அப்படியே தேவ இராஜ்ஜியம் கடந்து சென்றார். அவர் விட்டுச் சென்ற மீதி பழைய ஏற்பாட்டுப் பகுதிகளை சென்னையில் மிஷனரியாக பணிபுரிந்த ஜெர்மானியர் பெஞ்சமின் சூல்ச் ஐயர் முடித்து அச்சேற்றினார்.
சீகன் பால்க்கின் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடம் நாம் எவ்வளவு நாட்கள் வாழ்கிறோம் என்ற நீளத்தை விட கர்த்தருக்காய் எவ்வளவு சாதித்தோம் என்ற ஆழம் தான் முக்கியம் என்பதே. அனேக தியாகங்களுக்குப் பிறகுதான இந்த பரிசுத்த வேதாகமம் வந்தது என்பதை நமது கரத்தில் இருக்கும் வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் படிக்கும்போதும் பார்க்கும்போதும் நினைவில் வைத்துக் கொள்வோம். அப்படியானால் இந்த புனித நூலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? அவைகளை நம் கால் மிதிபடும் இடத்தில் வைக்காமல் அல்லது பாடல் புத்தகங்களுக்கு பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தாமல் தேவனின் வார்த்தைகளின் மேன்மையை உணர்ந்தவர்களாய் அதை மிகுந்த ஜாக்கிரதையோடு காத்துக் கொள்வோம். அந்த வார்த்தைகளை அனுதினம் தியானிப்போம், அவைகள் நம்மை நித்திய வாழ்வுக்கு நேராய் வழிநடத்தும். ஆமென்.