4. நமது சபைகளுக்காக ஜெபிப்போம் PRAY FOR OUR CHURCHES
1. சபைகளிலே ஜெப வீரர்கள், வீராங்கணைகள் ஆண்டவருக்காய் எழும்பி, ஜெபித்திட ஜெபிப்போம் – யாக்கோபு 5:16
2. சபைக்கு உறுதுணையாய் நிற்கத்தக்கதான சுவிசேஷகர்கள் சபையிலே தேவன் எழுப்பித்தர ஜெபிப்போம் – எபேசியர் 4:12
3. எல்லா சபைகளிலும், தேவன் ஆத்துமாக்களால் நிறைத்திட ஜெபிப்போம் – எசேக்கியேல் 36:37
4. சபைகளில் காணப்படும் பிரிவினைகள் மாறிட ஜெபிப்போம் 1 கொரிந்தியர் 11:18
5. விசுவாசிகளின் தேவைகள் சபையிலே ஜெபிக்கையில், அவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம் – மத்தேயு 6:8
6. சபைகளைப் பற்றிய பாரம் எல்லா விசுவாசிகளுக்கும் வந்திட ஜெபிப்போம் – சங்கீதம் 96:6
7. சபைகளின் தேவைகளை தேவன் சந்தித்திட ஜெபிப்போம் – எபேசியர் 11 :23
8. ஒவ்வொரு சபைகளைச் சுற்றிலும் குடியிருப்பவர்கள் இரட்சிக்கப்பட்டு, சபைக்கு வந்திட ஜெபிப்போம் – சகரியா 9:8
9. சபைகளிலே உயர்வு தாழ்வுகள் இல்லாமல் இருக்க ஜெபிப்போம் ரோமர் 8:39
10.சபைக்கு வரும்போது தேவபிள்ளைகள் தாழ்மையுடன் வந்து தேவனை தொழுது கொள்ள ஜெபிப்போம் – லூக்கா 14:11
11. சபையிலே ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் எந்நாளும் தேவசமூகத்திற்கு சென்றடைய ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 12:28
12. அநேக அற்புதங்கள், அடையாளங்கள் வருகின்ற நாட்களில் சபைகளிலே நடந்திட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 12:28
13.ஒவ்வொரு நாளும் சபைகளில் தேவமகிமை காணப்பட ஜெபிப்போம் ஆகாய் 2:7
14.சபைக்கு வருகின்றவர்கள் ஆடம்பரங்களை வெறுத்தவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – ஏசாயா 5:14
15. சபைகளிலே வசனத்திற்கு கீழ்படிகின்ற ஆவி வந்தடைய ஜெபிப்போம் – உபாகமம் 11:27
16. சபைகளில் அப்போஸ்தலர்கள் உருவாகிட ஜெபிப்போம் 1 கொரிந்தியர் 12:28
17. சபைகளிலே தீர்க்கதரிசிகள் உருவாகிட ஜெபிப்போம் 1 கொரிந்தியர் 12:28
18. சபைகளிலே போட்டி பொறாமைகள் இல்லாமல் இருக்க ஜெபிப்போம் ரோமர் 13:13
19. சபைக்குள் வருகிறவர்கள் தேவன் தரும் ஆசீர்வாதத்தில் திருப்தியுடன் செல்ல ஜெபிப்போம் – சங்கீதம் 36:8
20. சபை மக்களிடையே வேத அறிவு பெருகிட ஜெபிப்போம் – யோவான் 7:49
21. சபை மக்களிடையே விசுவாசம் பெருகிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 6:5 –
22. சபைகளில் காணப்படும் பாடகர் குழுவினர் மேல் தேவ ஆளுகை எப்பொழுதும் காணப்பட ஜெபிப்போம் – 1 நாளாகமம் 15:16
23. சபையில் உள்ள அனைவரும் அபிஷேகம் பெற்றிட ஜெபிப்போம் 1 யோவான் 2:27
24. சபையிலே எல்லோரும் ஞானஸ்நானம் பெற்றவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – 1 பேதுரு 3:21
25. ஞானஸ்நானம் எடுக்கும் முன், தங்கள் பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிட்டவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – மாற்கு 1:5
26. சபை விசுவாசிகள் அபிஷேகத்திலே பற்பல பாஷைகளை பேசிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 2:4
27. சபையின் ஆளுகைகள் சரியாய் காணப்பட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 8:16
28. சபையில் விசுவாசிகள் வேதத்தின் இரகசியத்தை வெளிப்படுத்து கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – எபேசியர் 6:20
29. சபைகளிலே விசுவாசிகள் வியாக்கியாானம் பண்ணுகிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 14:26
30. ஒவ்வொரு சபைகளிலும் சுவிசேஷ ஊழியங்கள் நடைபெற ஜெபிப்போம் – எபேசியர் 4 :12
31. சபைக்கு வருகிறவர்கள் முழுமையாக பரலோகம் சென்றடையத்தக்க தகுதி பெற்றிட ஜெபிப்போம் – மத்தேயு 16 :19
32. சபைகளிலே சரியான உடை ஒழுங்குகள் காணப்பட ஜெபிப்போம் -உபாகமம் 22:5
33. சபைகளிலே அதிகாலை ஜெபங்கள் நடந்திட ஜெபிப்போம் – மாற்கு 1:35
34. ஒவ்வொரு சபைகளிலும் வாலிபர் கூட்டங்கள் நடைபெற்றிட ஜெபிப்போம் -அப்போஸ்தலர் 2 :17
35. சபைகளிலே சிறுவர் ஊழியங்கள் சிறப்பாய் நடைபெற ஜெபிப்போம் மத்தேயு 19:14
36. உலகத்து மக்களை தொந்தரவு செய்யாதபடி நமது ஆராதனைகள் காணப்பட ஜெபிப்போம் – யாத்திராகமம் 3 :12
37. சபைகளிலே பெண்கள் ஊழியங்கள் தவறாமல் நடைபெற ஜெபிப்போம் 1 தீமோத்தேயு 3 :11
38. சபைகளில் ஆண்கள் ஊழியங்கள், ஜெபக்கூடுகைகள் எழுப்பப்பட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 2 :8
39. சபைகளிலே தலைவர்களுக்கென சிறப்பு விஷேசித்த கூடுகைகள் நடத்தப்பட ஜெபிப்போம் – எசேக்கியேல் 38:7
40. சபைகளிலே அநேக நல்ல பயிற்சி வகுப்புகள் நடைபெற்று அநேகர் பயனடைய ஜெபிப்போம் – 2 தெசலோனிக்கேயர் 2 :13
41. சபைகளிலே ஜெபக்குழுக்கள் ஊழியங்கள் நடைபெற ஜெபிப்போம் மத்தேயு 18 :19 –
42. ஜெபக்குழுக்கள், ஊழியத்தின் மூலம் தேவன் அநேக புதிய ஆத்துமாக்களை தந்திட ஜெபிப்போம் – மத்தேயு 18 :20
43. சபைகளிலே திருவிருந்தை ஒழுக்கமாகவும், உண்மையாகவும், கடைபிடித்திட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 11 :27
44. சபைகளில் உள்ள ஏழை எளியவர்களுக்கு உதவிட ஜெபிப்போம் -நீதிமொழிகள் 19 1:7
45. சுவிசேஷச கூட்டங்களின் மூலமாய் அநேகர் மனந்திரும்பிட ஜெபிப்போம் – எசேக்கியேல் 18 :32 46.
46. சபைகளிலே விசுவாசிகள் பரிசுத்தத்தை கடைபிடித்திட ஜெபிப்போம் – நெகேமியா 13:22
47. சபையைக் குறித்தான துர்ச்சிந்தைகள் முற்றிலும் மறைந்திட ஜெபிப்போம் மத்தேயு 16 :23
48.ஒருமனப்பாட்டின் ஆவியை தேவன் சபைகளிலே தந்திட ஜெபிப்போம் அப்போஸ்தலர் 2:46
49. சபைகளிலே எப்போதும் துதி ஸ்தோத்திரங்கள் ஏறெடுக்கப்பட ஜெபிப்போம் – சங்கீதம் 150:1
50. சபை ஆராதனை வேளைகளில் ஆவியானவர் பலமாய் காணப்பட ஜெபிப்போம் – ஏசாயா 32:15
51. சபையில் பிறமதத்தினருக்காய் உண்மையாய் ஜெபிக்கிறவர்கள் எழும்பிட ஜெபிப்போம் – எசேக்கியேல் 18:23
52. சபைக்கு வருகின்றவர்கள் உண்மையாய், பரிசுத்தமாய், ஒருமனதாய் தேவனைப் பற்றிக் கொள்ள ஜெபிப்போம் – ஏசாயா 58:13
53. சபைக்கு வருகிறவர்கள் சாபங்களிலிருந்து விடுதலை பெற்றிட ஜெபிப்போம் – வெளிப்படுத்தல் 22:3
54. சபைக்கு வருகிறவர்கள் ஆண்டவரின் கற்பனைகளை கடைபிடித்திட ஜெபிப்போம் – மாற்கு 7:8
55. சபைகளில் சொல்லப்படும் சத்தியத்திற்கு விசுவாசிகள் செவி சாய்க்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – 3 யோவான் 1:3
56. சபைகளில் கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள் காணப்பட ஜெபிப்போம் – சங்கீதம் 115:13
57. சபைகளில் கர்த்தருக்காய் காத்திருக்கிறவர்கள் காணப்பட ஜெபிப்போம்
– ஏசாயா 40:31
58. சபைகளிலே கர்த்தரின் சித்தம் செய்ய தங்களை ஒப்புக் கொடுப்பவர் களாய் எழும்பிட ஜெபிப்போம் – மத்தேயு 18:14
59. சபைக்கு வருகிறவர்கள் தங்களுக்கு தெரிந்த முறையில் சுவிசேஷம் சத்தியத்தை பகிர்ந்திட ஜெபிப்போம் – 1 நாளாகமம் 16:24
60. சபைக்கு ஆராதனைக்கு கடந்து வருபவர்கள் பெருமையில்லாமல் காணப்பட ஜெபிப்போம் – யாக்கோபு 4:6
61. சபைகளிலே புகழ்ச்சிகள் ஓய்ந்திருக்கும்படி ஜெபிப்போம் – கலாத்தியர் 5:26
62. சபைகளிலே தேவனை ஆராதிக்க வேண்டிய நேரங்களில் துதிக்காமலும், ஸ்தோத்தரிக்காமலும் இருப்பவர்கள் மாறிட ஜெபிப்போம் – ரோமர் 1:21
63. நம் சபைகளில் காணப்படும் எல்லாவித ஜாதி வேற்றுமைகள் மற்றும் உயர்வு தாழ்வுகள் மாறிட ஜெபிப்போம் – மத்தேயு 1:1-16
64. தேவனை அறியும் அறிவைப் பற்றிய சிந்தனை, ஆர்வம், வாஞ்சை மட்டுமே சபைகளில் காணப்பட ஜெபிப்போம் – ரோமர் 1:28-32
65. சபைகளில் ஏனோதானேயென்று இருப்பவர்கள், அனலுமின்றி குளிருமின்றி, 2 எஜமான்களுக்கு ஊழியம் செய்வது போன்று இருப்பவர்கள் மாறிட ஜெபிப்போம் – லூக்கா 16:13
66. ஆவிக்குரிய வாழ்வில் ஒவ்வொரு நாளும் – பெலன் பெற்றிட ஜெபிப்போம் லூக்கா 2:40
67. சபையில் எல்லோருக்கும் ஆத்தும பாரம் உள்ளவர்களாகவும், ஆத்துமா ஆதாயம் காணப்பட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 11:30
68. சபைகளுக்குள் வருபவர்கள் பயபக்தியுடன் நம் ஆண்டவரை தொழுதிட ஜெபிப்போம் – வெளிப்படுத்தல் 11:18
69. சபைக்கு பாரத்தோடு வருபவர்கள், நிம்மதியுடன் திரும்பிச் செல்ல ஜெபிப்போம் – சங்கீதம் 55:22
70. சபைக்கு சமாதானமின்றி வருபவர்கள் நிறைவான சமாதானத்தைப் பெற்றுச் செல்ல ஜெபிப்போம் – 2 தெசலோனிக்கேயர் 3:16
71. நம் பகுதிகளில் அநேக சபைகள் பெருகிட ஜெபிப்போம் அப்போஸ்தலர் 16:5
72. சபைக்கு குழப்பத்தோடு வருபவர்கள் சரியான வழியை தெரிந்தெடுத்து எல்லா குழப்பங்களும் மாறி தெளிவுடன் செல்ல ஜெபிப்போம் – 2 தெசலோனிக்கேயர் 2:17
73. சபைக்குள் கவலையோடு வருபவர்கள் நிறைவான சந்தோஷத்தோடு கடந்து செல்ல ஜெபிப்போம் – 1 பேதுரு 5:7
74. சபை மக்களின் குறைவுகள் நிறைவாகிட ஜெபிப்போம் – சங்கீதம் 34:10
75. சபைகளிலே விவாகரத்துக்கள் வராமல் காணப்பட ஜெபிப்போம் – மத்தேயு 5:32
76. சபைகளிலே காதல் வராமல் இருக்க ஜெபிப்போம் – யோபு 31:1,2
77. சபைக்குள் வருகிறவர்கள் சபைக்கு கீழ்ப்படிந்தவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – ரோமர் 16:25
78. சபைக்கு வருகிறவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்பு கூறுகிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 16:22
79. கர்த்தரின் வேலைகளை செய்ய நல்ல வாகனங்கள் ஒவ்வொரு சபைகளிலும் காணப்பட ஜெபிப்போம் – சங்கீதம் 104:3
80. சபைகளிலே திருமணமாகாதவர்களுக்கு ஏற்ற வேளையில் திருமணம் நடைபெற ஜெபிப்போம் – சங்கீதம் 138:8
81. சபை மக்களிடையே காணப்படும் குழந்தையின்மை முற்றிலும் மறைந்திட ஜெபிப்போம் – உபாகமம் 7:14
82. சோர்ந்து போன சபைகளிலே உயிர்மீட்சி அடைந்திட ஜெபிப்போம் – யாத்திராகமம் 15:13
83. சபைகளிலே ஆத்துமாக்களுக்காய் பாரத்தோடு உத்திரவாதத்தோடு ஜெபிப்பவர்கள் எழும்பிட ஜெபிப்போம் – எசேக்கியல் 9:4
84. சபை மக்களிடையே தவறாமல் குடும்ப ஜெபங்கள் ஏறெடுக்கப்பட ஜெபிப்போம் – மத்தேயு 18:20 84.
85. சபை மக்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தனி ஜெபம் தவறாமல் செய்திட ஜெபிப்போம் – மத்தேயு 6:6
86. ஒவ்வொரு சபைகளிலும் தவறாமல் உபவாச ஜெபங்கள் ஏறெடுக்கப்பட ஜெபிப்போம் – யோவேல் 2:12
87. ஒவ்வொரு சபைகளிலும் முழு இரவு ஜெபங்கள் நடைபெற ஜெபிப்போம் 1 சாமுவேல் 15:11
88. ஒவ்வொரு சபையிலும் சங்கிலி தொடர் ஜெபம் நடைறெ ஜெபிப்போம் – 1 தெசலோனிக்கேயர் 5:17
89. ஒவ்வொரு சபைகளிலும் காத்திருப்பு ஜெபங்கள் நடைபெற ஜெபிப்போம் – எபிரேயர் 9:28
90. ஒவ்வொரு சபைகளிலும் தவறாமல் சுத்திகரிப்பு ஜெபங்கள் நடைபெற ஜெபிப்போம் – 2 கொரிந்தியர் 7:1
91. சபைகளில் ஆவிக்குரிய பத்திரிக்கைகள் வெளிவர ஜெபிப்போம் -1 தெசலோனிக்கேயர் 5:27
92. சபைகளுக்கு வருகிற சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, தேவன் தாமே அவர்களுக்கு சொந்த வீட்டை தந்திட ஜெபிப்போம் – சங்கீதம் 127:1
93. சபைகளிலே ஜெபமின்மை முற்றிலும் மாறிட ஜெபிப்போம் – சகரியா 8:22
94. சபைகளிலே 24 மணிநேரமும் துதி ஸ்தோத்திர, ஆராதனைகள் காணப்பட
ஜெபிப்போம் – சங்கீதம் 150:1
95. தேவசித்தம் அறியாத சபை மக்கள் அதனை அறிந்து, தேவ சித்தத்தை செய்திட ஜெபிப்போம் – எபிரேயர் 10:36
96. சபைகளிலே முடிவுபரியந்தம் ஜனங்கள் நிலைத்திருக்க ஜெபிப்போம் மத்தேயு 24:13
97. எல்லா சபைகளிலும் நடைபெறும் ஒவ்வொரு ஆராதனைகளிலும், ஆத்துமாக்கள் நிரம்பி வழிந்திட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 5:14
98. சபைகளிலே மிஷனரிகள் எழும்பி தேசம் முழுமைக்கும் சென்றிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 8:4
99. சபைகளிலே மிஷனரிகளைத் தாங்கக் கூடியவர்கள் எழும்பிட ஜெபிப்போம் அப்போஸ்தலர் 4:34
100. சபைகளிலே தரிசனம் பெற்றவர்கள், ஊழிய அழைப்பைப் பெற்றவர்கள், ஆதி அன்பிலே தடுமாறிக் கொண்டிருப்பவர்களின் நிலை மாறிட ஜெபிப்போம் – எபிரேயர் 5:12
101. சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்யக்கூடியவர்கள் எழும்பிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 4:34
102.ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 1 சபையாவது உருவாகிட ஜெபிப்போம்
– லேவியராகமம் 25:31
103.சபைகள் கட்டவிடாதபடி தடைபண்ணுகிற சன்பல்லாத், தொபியா ஆவியுடையவர்கள் சபையிலே இல்லாமற் போக ஜெபிப்போம்
-நெகேமியா 4:1,3
104.ஒவ்வொரு சபைகளிலும் உடன் ஊழியர்கள் மற்றும் கிளை சபைகள் எழும்பிட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 1:9
105.சபைகளில் தாலந்து உள்ளவர்கள் எழும்பி, தேவ நாமத்தை மகிமைப்படுத்திட ஜெபிப்போம் – சங்கீதம் 149:3
106. சபைகளிலே மைக், ஸ்பீக்கர்ஸ் சரியான முறையில் காணப்படவும், ஜெனரேட்டர் வசதி காணப்படவும் ஜெபிப்போம் – சங்கீதம் 150:3
107. சபைகளில் ஆராதிக்கும்போது கட்டுகள் விலகி, விடுதலையோடு தேவனை ஆராதிக்க ஜெபிப்போம் – சங்கீதம் 106:47
108. ஆராதனை, ஜெபங்கள் நடத்தக் கூடியவர்கள் ஒவ்வொரு சபைகளிலும் எழும்பிட ஜெபிப்போம் – சங்கீதம் 107:31
109.சபைகளில் நடைபெறும் ஜெபங்கள், அற்புதங்கள் மூலம் புதிய ஆத்துமாக்கள் தேவனை விசுவாசித்திட ஜெபிப்போம் -அப்போஸ்தலர் 3:10
110.சபைகளிலே வீண்பேச்சுகள், கட்டுக்கதைகள் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் காணப்பட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 4:7
111. சபைகளின் மூலம் திறந்தவெளிக் கூட்டங்கள் நடைபெற, அதன் மூலம் புதிய ஆத்துமாக்கள் தேவனை விசுவாசித்திட ஜெபிப்போம் – மல்கியா 1:11
112. சபைகளிலே இசைக்கருவிகள் வாங்கிடவும், அதன் மூலம் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்திடவும் ஜெபிப்போம் – சங்கீதம் 150:4
113. சபைகளிலே இசைக்கருவிகள் வாசிப்போரின் மேல் அபிஷேகத்தை தேவன் தந்திட ஜெபிப்போம் – 1 சாமுவேல் 16:23
114. சபைகளிலே மக்கள் உண்மையுள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – எசேக்கியேல் 18:9
115.சபையில் உள்ள ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதித்திட ஜெபிப்போம் – உபாகமம் 28:2
116. சபைகளிலே தீர்க்கதரிசிகள் எழும்பி, தேவனுக்காய் பிரகாசித்திட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 14:31
117. சபைகளிலே இக்காலங்களில் ஆவியானவரின் கிரியைகள் பலமாய் காணப்பட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 12:6
118. சபைகளில் தேவனுக்காய் உழைக்கிறவர்கள், ஊழியம் செய்கிறவர்கள் எழும்பிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 9:20
119. சபையிலே உள்ளவர்கள் சபை போதகருக்காகவும், அவர்களது குடும்பத்திற்காகவும் ஜெபிக்கக்கூடியவர்களாய் காணப்பட ஜெபிப்போம் அப்போஸ்தலர் 12:5
120. சபைகளிலே காணப்படும் வேறுபாடுகள் கலகங்கள், குழப்பங்கள், உரிமைகள் எல்லாம் அகன்று போக ஜெபிப்போம் – 2 கொரிந்தியர் 13:7
121.சபைக்கும், சபை போதகருக்கும் விரோதமாய் எழும்புகிறவர்களை தேவன் சந்தித்திட ஜெபிப்போம் – எண்ணாகமம் 17:10
122.ஒவ்வொரு சபைகளின் எல்லைகளை தேவன் விஸ்தாரமாக்கிட ஜெபிப்போம் – உபாகமம் 11:24
123. சபைகளிலே மகிழ்ச்சியோடே ஆண்டவருக்கு ஆராதனை செய்திட ஜெபிப்போம் – சங்கீதம் 100:2
124. சபைகளிலே ஆவியிலே தேவனுக்கு ஆராதனை செய்திட ஜெபிப்போம் – பிலிப்பியர் 3:3
125. சபைகளிலே தேவனுக்குப் பிரியமான ஆராதனை செய்திட ஜெபிப்போம் எபிரேயர் 12:28
126. சில சபைகளில் மக்களைக் கவருவதற்கான வீண் ஆராதனைகள் எல்லாம் மாறிட ஜெபிப்போம் – மாற்கு 7:7
127. சபைகள் பல நிறுவுவதற்கு, தேவன் ஒருமனப்பாட்டை சபைக்குள் தந்திட ஜெபிப்போம் – எஸ்றா 3:9
128. சபைகளிலே தற்பெருமைகள் இல்லாமல் போக ஜெபிப்போம் – செப்பனியா 3:11
129. எல்லா ஊழியங்களையும் சபைப் பாகுபாடு இன்றி தேவன் ஆசீர்வதித்திட, பாதுகாத்திட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 12:5
130.மூடப்பட்ட நிலையில், மூடவேண்டிய நிலைகளில் உள்ள ஜெபக்கூடுகைகள், ஜெப ஆலயங்கள், ஜெப வீடுகள் திரும்பவும் புதுப்பிக்கப்பட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 15:17
131.ஆலயத்தின் தேவைகள் நமது அரசாங்கத்தின் மூலமாகவே தேவன் சந்தித்திட ஜெபிப்போம் – எஸ்றா 7:23
132. சபைகளிலே தேவன் அநேக வல்லமையான புதிய ஊழியர்களை எழுப்பிட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 1:12
133. சபைகளில் வீண்பேச்சு பேசி கர்த்தரை விட்டு விலகி போகிற அனுபவம் இல்லாமல் இருக்க ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 1:6
134. சபைகளிலே திடனற்றவர்களை தேற்றுபவர்கள் எழும்பிட ஜெபிப்போம் 1 தெசலோனிக்கேயர் 5:14
135. சபைகளிலே விசுவாசிகள் ஏகசிந்தை உள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – 2 கொரிந்தியர் 13:11
136. சுய இஷ்டமான ஆராதனைகள் ஒன்றுமில்லாமல் போகிட ஜெபிப்போம் -கொலோசெயர் 2:23
137. சபைகளுக்கென்று தேவன் வைத்திருக்கும் இடங்களை, தேவையான வர்களுக்கு தேவன் தந்திட ஜெபிப்போம் – உபாகமம் 12:11
138. ஜெப நடைகள் ஒவ்வொரு சபைகளில் நடத்தப்பட ஜெபிப்போம் ஆதியாகமம் 13:17
139. ஆலயங்களுக்கு விரோதமாய் எழும்பும் எல்லா சத்துருவின் கிரியைகளையும் தேவன் அழித்திட ஜெபிப்போம் – சகரியா 9:8
140. கட்டப்படாத நிலைகளில் காணப்படும் எல்லா சபைகளும் சீக்கிரத்தில் கட்டிமுடிக்கப்பட ஜெபிப்போம் – ஆகாய் 1:8
141. சபைகளுக்கு வருகிறவர்களின் நிலை, சபையின் நிலை, (குடிசை) மாறிட ஜெபிப்போம் – ஆகாய் 2:8
142.சபை மக்கள் பலவீனரைத் தாங்கிட ஜெபிப்போம் – 1 தெசலோனிக்கேயர் 5:14
143. சபைகளிலே ஒருமனமாய் ஆண்டவரை ஆராதிக்க வருகின்றவர்கள் அபிஷேகம் பெற்று, அந்நிய பாஷையில் பேசிட ஜெபிப்போம்
– செப்பனியா 3:9
144. சபைக்கு வந்தும் கர்த்தரை உண்மையாய் தேடாதவர்கள், தங்கள் பாவங்களை அறிக்கை செய்து மாறிட ஜெபிப்போம் – செப்பனியா 1:6
145. சபைகளிலே உண்மையான கர்த்தருடைய சுவிசேஷகருக்கு வாய்ப்புகள் கிடைத்திடவும், அதன் மூலம் அநேகர் இரட்சிப்படையவும் ஜெபிப்போம் – ஏசாயா 26:2
146. சபைகளில், சபைக்கு விரோதமாய் கலகம் பண்ணுகிறவர்கள் மாறிட ஜெபிப்போம் – ஏசாயா 59:13
147. சபைக்கு வந்து அற்புதங்களை பெற்றுக்கொண்டு, தேவனை மறப்பவர்கள் மனந்திரும்பிட ஜெபிப்போம் – சங்கீதம் 50:22
148. சபைகளிலே புதிய ஆத்துமாக்களை தேவன் தருவதற்காய் பாரத்தோடு ஜெபிக்க கூடியவர்கள் சபைகளில் எழும்பிட ஜெபிப்போம் – எசேக்கியேல் 36:37
149. சபைகள் பக்தி விருத்தி அடைந்திட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 14:12
150. தேவன் சபைக்கு கொடுத்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறிட ஜெபிப்போம் – 2 நாளாகமம் 7:16
151. புதிதாக வருகிற ஆத்துமாக்கள் தொடந்து வந்து தேவ நாமத்தை மகிமைப்படுத்திட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 2:41
152. சபைகளிலே திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயம் கிடைத்திட ஜெபிப்போம் – சங்கீதம் 82:3
153. சபைக்கு வருகின்றவர்கள் ஐசுவரியமும், ஆசீர்வாதம் என்கிற எண்ணத்துடன் வராதபடிக்கு உண்மையாய் வர ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 6:9
154. சபைகளிலே சகோதரத்துவம் ஒருமைபாடுடன் காணப்பட ஜெபிப்போம் 1 தெசலோனிகேயர் – 4:10
155. சபைகளிலே தவறான ஞானஸ்நானங்கள் மாறி, ஒரே ஆவியினால் ஞானஸ்நானம் எடுத்திட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 12:13
156. சபைக்குள்ளே வருகிறவர்கள் உண்மையாக தொடர்ந்து தேவனையும், சபையையும் பற்றிக் கொள்ள ஜெபிப்போம் – 1 பேதுரு 2:25
157. சபை மக்களிடையே தேவ அன்பு பெருகிட ஜெபிப்போம் – ரோமர் 5:5
158. சபைகளிலே ஆவியானவர் பேசுகின்ற, ஏவுகின்ற காரியங்களை அசட்டை
செய்கிறவர்கள் மாறிட ஜெபிப்போம் – ரோமர் 2:4
159. சபைகளிலே போதிக்கும் ஒவ்வொருவரும், அப்போதனைகளுக்கு தகுதியுள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – ரோமர் 2:18-24
160. சபைகளில் காணப்படும் எல்லாவித அவபக்தியுள்ளவர்கள் மாறிட ஜெபிப்போம் – ரோமர் 1:18