நம் இந்தியாவுக்காக ஜெபிப்போம் PRAY FOR OUR INDIA

 

 

3.நம் இந்தியாவுக்காக ஜெபிப்போம் PRAY FOR OUR INDIA

 

1. நமது இந்தியாவை தேவன் ஆசீர்வதித்திட ஜெபிப்போம் – சங்கீதம் 3:8

 

2. நம் நாட்டின் பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம் சங்கீதம் 104:24 

 

3. நம் நாட்டின் கடன்கள் அடைக்கப்பட ஜெபிப்போம் – மத்தேயு 6:12

 

4. நம் நாட்டில் உள்ள தலைவர்களுக்காகவும், அரசியல்வாதிக்காகவும் அவர்கள் இரட்சிக்கப்படவும் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம் – யூதா 1:21

 

5. நம் நாட்டில் உள்ள உயர் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் இரட்சிக்கப்படவும் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம் – மத்தேயு 25:21 

 

6. நம் நாட்டில் உள்ள மூடப்பழக்கவழக்கங்கள் மறைய ஜெபிப்போம் – நீதிமொழிகள் 10:21 – 6.

 

7. நம் நாட்டில் உள்ள வேலையின்மை மாறிட ஜெபிப்போம் – எபேசியர் 4:28

 

8.  நம் நாட்டில் உள்ள விபச்சார வேசித்தனங்கள் மறைந்திட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 15:20

 

9. நம் நாட்டில் உள்ள லஞ்சம், ஊழல் குறைந்திட ஜெபிப்போம் – யோபு 15:34 

 

10. நம் நாட்டில் உணவுப்பற்றாக்குறைகள் எல்லாம் மாறிட ஜெபிப்போம் -சங்கீதம் 74:14

 

11. நம் நாட்டில் சுவிசேஷத்திற்காய், கிறிஸ்துவுக்காய் உபத்திரவப் படுகிறவர்களை தேவன் தாங்கி, ஆறுதல் செய்து நடத்திட ஜெபிப்போம் 2 கொரிந்தியர் 1:4,8

 

12. நம் நாட்டைச் சுற்றியுள்ள, நாடுகளிடையே சுமூக உறவு காணப்பட ஜெபிப்போம் – நியாயாதிபதிகள் 8:28

 

13. நம் நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் நிலைமை மாறிட ஜெபிப்போம் – ஆதியாகமம் 45:11

 

14. நம் நாட்டில் அறியாமையினால் ஏற்படுகின்ற திருமணங்கள் தடுக்கப்பட ஜெபிப்போம் – 1 பேதுரு 2:15

 

15. எல்லா இடத்திலும் எல்லோருக்கும் கல்வி கிடைத்திட ஜெபிப்போம் நீதிமொழிகள் 1:7

 

16. நம் நாட்டில் உள்ள பேதமைகள் ஒழிந்திட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 9:6 

 

17. நம் நாட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் நிலை மாறிட ஜெபிப்போம் சங்கீதம் 10:14

 

18. நம் நாட்டில் கொள்ளை நோய்கள் வராமல் காணப்பட ஜெபிப்போம் சங்கீதம் 91:6 

 

19. நம் நாட்டில் உள்ள வன்முறைகள் எல்லாம் மறைந்திட ஜெபிப்போம் – 2 தெசலோனிக்கேயர் 3:15

 

20. நம் நாட்டில் உள்ள சிற்றின்பங்கள், சிற்றின்ப விடுதிகள், பொழுதுபோக்கு காரியங்கள் குறைந்திட ஜெபிப்போம் – லூக்கா 8:14 

 

21. நம் நாட்டில் உள்ள திருட்டுகள் முற்றிலும் குறைந்திட ஜெபிப்போம் – எபேசியர் 4:28 

 

22. நம் நாட்டின் தலைவர்கள், மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை மாத்திரமே செயல்படுத்திட ஜெபிப்போம் – லூக்கா 22:26

 

23. நம் நாட்டில் காணப்படும் தீய பழக்க வழக்கம் முற்றிலும் மறைந்திட ஜெபிப்போம் – ஏசாயா 1:16 

 

24. தேசத்தில் காணப்படும் அடிமைத்தனங்கள் முற்றிலும் மறைந்திட ஜெபிப்போம் – ரோமர் 8:20

 

25. நம் நாட்டில் உள்ள கொள்யைர்கள் திருந்திட ஜெபிப்போம் 1 கொரிந்தியர் 6:10

 

26. நம் நாட்டில் உள்ள பற்றாக்குறைகள் மாறிட ஜெபிப்போம் – யாக்கோபு 1:14 

 

27. நம் பாரத தேசம் எழுப்புதல் அடைந்திட ஜெபிப்போம் – ஆபகூக் 2:20

 

28. நம் தேசம் உயிர் மீட்சி அடைந்திட ஜெபிப்போம் – மல்கியா 3:1

 

29. பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்-நெகேமியா 1:10

 

30. மத்திய அரசில் உள்ள தலைவர்கள் தேவனை அறிந்திடவும் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம் – சங்கீதம் 67:1

 

31. மாநில அரசில் உள்ள தலைவர்கள் தேவனை அறிந்திடவும் ஆசீர் வதிக்கப்படவும் ஜெபிப்போம் – சங்கீதம் 64:9 

 

32. நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் இரட்சிக்கப்படவும் ஆசீர்வதிக்கப்படவும்

ஜெபிப்போம் – நெகேமியா 1:11

 

33. நம் நாட்டில் உள்ள முஸ்லீம் சகோதர, சகோதரிகள் ஆசீர்வதிக்கப்பட, இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – ஆதியாகமம் 17:20 1

 

34. நம் நாட்டில் உள்ள இந்து சகோதர, சகோதரிகள் ஆசீர்வதிக்கப்பட, இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – யோவேல் 2:21

 

35. இந்தியாவைச் சுற்றியுள்ள 5 நாடுகளின் பெயர்களை சொல்லி ஜெபிப்போம் – செப்பனியா 3:15

 

36. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்காகவும், கூடுமானால் இந்திய வரைபடத்தின்மேல் கைகளை வைத்து விசுவாசத்துடன் ஜெபிப்போம் – செப்பனியா 2:3 

 

37. நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித்தந்த தியாகிகளுக்கும் அவர்கள் குடும்பத்திற்காகவும் ஜெபிப்போம் – எபிரேயர் 11:34

 

38. தற்போது நம் நாட்டைப் பாதுகாக்கும் நம் நாட்டு வீரர்கள் பாதுகாப்பிற்காகவும் அவர்கள் குடும்பத்திற்காகவும் ஜெபிப்போம் எபிரேயர் 10:35

 

39. நம் நாட்டில் உள்ள எல்லா கிராமங்களிலும் குறைந்தது ஒரு சபையாவது காணப்பட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 8:25

 

40. 10 மாநிலங்களின் பெயர்களை சொல்லி ஜெபிப்போம் – சங்கீதம் 8:8 

 

41. நம் நாட்டில் உள்ள தொழில்கள் வளர்ச்சி பெறுவதற்காய் ஜெபிப்போம் – உபாகமம் 28:8

 

42. நம் நாட்டில் காணப்படும் அநியாயங்கள் அனைத்தும் அறுப்புண்டு போக ஜெபிப்போம் – உபாகமம் 25:16 

 

43. நம் நாட்டில் காணப்படும் அக்கிரமங்கள் அனைத்தும் இல்லாமல் போக ஜெபிப்போம் – யாத்திராகமம் 34:7 

 

44. பலிகள் (நரபலிகள்) முற்றிலும் இல்லாமல் போக ஜெபிப்போம் – மீகா 6:7 

 

45. நம் நாட்டில் உள்ள 5 முக்கிய அரசாங்கத் துறைகளின் பெயர்களைச் சொல்லி ஜெபிப்போம் – சங்கீதம் 66:20

 

46. நாட்டில் காணப்படும் கலப்படங்கள் இல்லாமல் போக ஜெபிப்போம் ஆபகூக் 2:9

 

 47. நாட்டில் உள்ள கள்ளத் தராசுகள் இல்லாமல் போக ஜெபிப்போம் – நீதிமொழிகள் 11:1

 

48. நமது மாநிலத்தைச் சுற்றிலும் உள்ள மாநிலங்கள் சுமூக உறவுடன் காணப்பட ஜெபிப்போம் – செப்பனியா 3:19

 

 49. விக்கிரக ஆராதனை செய்பவர்கள் மனந்திரும்பிட ஜெபிப்போம் 1 கொரிந்தியர் 6:9 

 

50. நம் நாட்டில் உள்ள உயர் அதிகாரிகள் அரசாங்க அதிகாரிகள் அனைவரும் உண்மையான தெய்வத்தை அறிந்திட ஜெபிப்போம் – யோவான் 12:42

 

51. நம் தேசத்தில் உள்ள 5 மாநில முதல்வர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்கள் இரட்சிக்கப்படவும், ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம் 1 தீமோத்தேயு 2:2

 

52. மனித நம்பிக்கைகள் அற்றுப்போக ஜெபிப்போம் – ஏசாயா 2:22

 

 53. நம் நாட்டில் உண்மை தெய்வத்தை, உண்மையாய் நம்புகிறவர்கள் எழும்பிட

ஜெபிப்போம் – சங்கீதம் 146:5

 

54. தேசத்தில் அநீதி செய்கிறவர்கள் திருந்திட ஜெபிப்போம் – எசேக்கியேல் 18:26

 

55. தேசத்தில் கர்த்தருக்கு அருவருப்பான காரியங்களில் ஈடுபடுபவர்கள் திருந்திட ஜெபிப்போம் – வெளிப்படுத்தல் 2:8

 

56. நம் தேசத்தில் காணப்படும் ஒவ்வொரு MLA-க்களும் இரட்சிக்கப்படவும் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 2:2 

 

57. நம் தேசத்தில் உள்ள ஒவ்வொரு MP-க்களும் இரட்சிக்கப்படவும் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 2:4

 

58. நம் மாநிலத்தின் முதல்வர் இரட்சிக்கப்படவும் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 6:12

 

59. நம் தேசத்திலே விவசாயம் வலிமை பெற்றிட -நீதிமொழிகள் 8:20

 

60.நாட்டைக் காக்கின்ற போலீஸ் அதிகாரிகள் ஆசீர்வதிக்கப்பட, இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 5:22

 

61. நம் நாட்டில் அநாதை விடுதிகள் குறைந்திட ஜெபிப்போம் – எரேமியா 49:11 

 

62. நம் நாட்டில் உள்ள முதியோர் இல்லங்கள் குறைந்திட ஜெபிப்போம் – எபேசியர் 6:3

 

63. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் முதல்வர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 2:2 

 

64. நம் நாட்டில் அக்கிரமக்காரர்கள் இல்லாமல் போக ஜெபிப்போம் சங்கீதம் 101:8

 

 65. தேசத்தில் உள்ள ஒவ்வொரு பட்டணங்கள், கிராமங்களில் உள்ளவர்களின் பாவங்களை தேவன் மன்னித்து, இரட்சிக்க ஜெபிப்போம் – சங்கீதம் 3:8

 

66. தேசத்திலுள்ள மக்களிடையே காணப்படும் தேவையற்ற பயங்கள் மாறிட ஜெபிப்போம் – சங்கீதம் 34:4

 

 67. தேசத்திலே ஆண்கள், பெண்களுக்குத் துரோகம் செய்யாதபடி காணப்பட ஜெபிப்போம் – மல்கியா 2:15

 

68. நம் நாட்டில் காணப்படுகிற அதிக விவாகரத்துக்களின் நிலை முற்றிலும் மாறிட ஜெபிப்போம் – மல்கியா 2:16

 

69. இரவு நேரங்களில் நம் பகுதிகளையும், தேசத்தையும் காக்கிறவர்களுக்காக ஜெபிப்போம் – நெகேமியா 4:9

 

 70. தேசத்தில் காணப்படும் எல்லா மலட்டுத் தன்மைகளும் மாறிட ஜெபிப்போம் – ஏசாயா 66:9

 

71. தேசத்தில் உள்ள ஏழை எளியவர்கள், சிறுமைப்பட்டவர்களுக்கு சகாயம் கிடைத்திட ஜெபிப்போம் – உபாகமம் 15:11 

 

72. நம் நாட்டின் பிரதம மந்திரி இரட்சிக்கப்படவும் ஆசீர்வதிக்கப்படவும்

ஜெபிப்போம் – நீதிமொழிகள் 8:16

 

73. நம் நாட்டின் குடியரசுத்தலைவர் இரட்சிக்கப்படவும் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம் – நீதிமொழிகள் 8:15

 

74. நம் தேசத்தில் காணப்படும் எல்லா அசுத்த ஆவிகளும் விலகி ஓடிட ஜெபிப்போம் – சகரியா 13:2

 

75.தேசங்களிலே தேவபிள்ளைகளுக்கு விரோதமாய் எழும்பும் எல்லா ஆதிக்கங்களும் முறிந்து போக ஜெபிப்போம் – ஏசாயா 54:17

 

 76. தேசத்தில் விவசாயத்திற்கு ஏற்ற வேளைகளில் மழையை தேவன் தந்திட ஜெபிப்போம் – உபாகமம் 28:12

 

77. தேசத்தில் உள்ளவர்களிடம் காணப்படும் எல்லா பொருளாசைகளும் முற்றிலும் அகன்று போக ஜெபிப்போம் – 57:17

 

 78. தேசத்தில் ஏழ்மையானவர்கள், சிறுமைப்பட்டவர்கள், வெட்கப்பட்டவர்கள் அதற்கேற்றபடி பலன்களை பெற்றிட ஜெபிப்போம் – ஏசாயா 61:7

 

79. தேசத்திலே உண்மையான சத்தியத்திற்கும், சபைக்கும் எதிர்த்து பேசுகிறவர்கள் எல்லோரும் மனந்திரும்பிட ஜெபிப்போம் 2 தீமோத்தேயு 2:25

 

80. தேசத்திலே மறைவான அந்தரங்க பாவங்களைச் கொண்டிருப்பவர்கள் மாறி இரட்சிப்படைய ஜெபிப்போம் – எபிரேயர் 4:13

 

81. தேசத்தில் காணப்படும் சுவிசேஷகர்கள் தங்களை மேன்மைபடுத்துகிற நிலைகள் மாறிட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 9:16 

 

82. தேசத்தில் வேத வசனத்தை கேட்கும் மக்கள், அவ்வசனத்தின் மேல் நம்பிக்கை வைத்து அதன்படி நடக்கிறவர்களாய் மாறிட ஜெபிப்போம்

யாக்கோபு 1:23,24

 

83. ஆண்டவரின் சித்ததிற்கு தங்களை ஒப்புக் கொடுக்கிறவர்கள் தேசத்திலே எழும்பிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 9:6 

 

84. தேசத்திலே மக்கள் தங்கள் மனம் போன போக்கிலே நடவாதபடி தங்களை

காத்துக் கொள்ள ஜெபிப்போம் – ஏசாயா 57:17

 

85. நம் நாட்டில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் காணப்படும் நிலைகள்

மாறிட ஜெபிப்போம் – மத்தேயு 6:26

 

86. தேசத்திலே பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நிற்பவர்கள் எழும்பிட ஜெபிப்போம் – எபேசியர் 6:11

 

87. தேசத்திலே வேதனைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் வெளிச்சத்தை கண்டடைந்திட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 6:10 

 

88. தேசத்திலே தேவபிள்ளைகள் ஜெபிக்கும் ஜெபங்களுக்கு தேவன் வைராக் கியத்தோடே பதில், பலன் தந்திட ஜெபிப்போம் – யோவேல் 2:11-18

 

89. தேசத்திலே சுவிசேஷத்தை கேட்கும் மக்கள் அதன்படி கீழ்ப்படிந்து நடந்திட ஜெபிப்போம் – எபிரேயர் 4:6

 

90. தேசத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் ஆளுகை செய்கிறவர்களுக்கு தேவ ஆலோசனையை பெற்றிட ஜெபிப்போம் – சங்கீதம் 32:8 

 

91. தேசங்களிலே மக்கள் உண்மையான தெய்வத்தை அறிந்து, சபைக்கு வந்து

ஜெபித்திட ஜெபிப்போம் – 2 நாளாகமம் 6:32 

 

92. ஊழியத்தில், ஊழியங்களில், ஊழியர்களுக்கு, பிரயோஜனமுள்ளவர்களை தேசத்திலே, சபைகளிலே தேவன் எழுப்பிட ஜெபிப்போம் 2 தீமோத்தேயு 4:11

 

93. தேசத்திலே பாவத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அப்பாவத்திலிருந்து

மீண்டுவரமுடியாமல் தவிப்பவர்களை தேவன் அவர்கள் பாவங்களை மன்னித்து விடுவித்திட ஜெபிப்போம் – யோவேல் 2:18

 

 94. தேசத்திலே அநேக ஊழியர்கள், ஊழியக்காரிகள், சுவிசேஷகர்கள், தீர்க்கதரிசிகளை தேவன் வல்லமையாய் பயன்படுத்திட ஜெபிப்போம் யோவேல் 2:29

 

95.தேசத்தில் உள்ள தண்ணீர் தட்டுப்பாடுகள் மாறிட ஜெபிப்போம் ஆமோஸ் 4:8 

 

96.தேசத்தில் உள்ள உணவு பற்றாக்குறைவுகள் மாறிட ஜெபிப்போம் ஆமோஸ் 4:6

 

97.இக்கடைசி நாட்களில் தேசத்திலே அநேக உண்மையான தீர்க்கதரிசிகளை தேவன் எழுப்பிட ஜெபிப்போம் – ஆமோஸ் 3:8,7 

 

98. தேசத்தில் கள்ளத்தராசைக் கொண்டு, வியாபாரத்திற்காய், தந்திரமாய் மக்களை ஏமாற்றுகிறவர்கள் மாறிட ஜெபிப்போம் – ஆமோஸ் 8:5,4 

 

99. தேசத்திலே விக்கிரகங்களு நர பலி செலுத்துகிறவர்கள், இரத்தத்தை மற்றும் உயிரை கடவுளுக்கு கொடுப்பவர்கள் இரட்சிப்படைந்திட ஜெபிப்போம் – மீகா 6:7

 

100. தேசத்தில் மக்கள் நன்மை என்ன என்பதை அறிந்து அதன்படி நடக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – மீகா 6:8

 

101.தேசங்களில் நகரத்தில் உள்ள மக்கள் உண்மையான தெய்வத்தை அறிந்து இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – மீகா 6:9

 

102. தேசத்தில் பிறர் பொருளை அபகரிக்க நினைக்கும், எல்லா வகையான திருடர்களும் திருந்திட ஜெபிப்போம் – சகரியா 5:3,4 

 

103. தேசத்திலே சத்தியத்திற்குக் கீழ்ப்படியாத சபைகளின் நிலைகள் மாறிட ஜெபிப்போம் – ரோமர் 2:8 

 

104.தேசத்தைத் தீட்டுப்படுத்துகிற பாவங்கள் அறவே இல்லாமல் போக ஜெபிப்போம் – எண்ணாகமம் 35:34

 

105.தேசத்திலே பலருக்கு விரோதமாக தீவினையை விதைக்கிறவர்கள் மாறிட ஜெபிப்போம் – யோபு 4:8

 

106. தேசத்திலே தேவனை அறியாதவர்கள் உண்மை தேவன் பக்கம் திரும்பிட ஜெபிப்போம் – யோபு 18:15-21

 

107. தேசங்களில் துன்மார்க்கர்கள் திருந்திட ஜெபிப்போம் – யோபு 20:4-29

 

 108.தேசத்திலே மக்கள் பொல்லாப்பை விட்டு விலகுகிறவர்களாகக் காணப்பட ஜெபிப்போம் – யோபு 28:28

 

109. நம் தேசத்திலே துக்கப்பட்டு, துயரப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஜனங்களின் வாழ்க்கையை தேவன் மாற்றிட ஜெபிப்போம் – எரேமியா 31:15

 

110. நம் தேசத்தில் தேவன் வெறுக்கின்ற அருவெருப்பான காரியங்கள், செய்கைகள் இல்லாமல் போக ஜெபிப்போம் – நீதிமொழிகள் 6:16-19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *