நம் மக்களுக்காக ஜெபிப்போம் PRAY FOR OUR PEOPLES

 

2. நம் மக்களுக்காக ஜெபிப்போம் PRAY FOR OUR PEOPLES

1. எல்லா மக்களுக்கும், பிள்ளைகளுக்கும், வாலிபர்களுக்கும், கல்வி சரியான முறையில் கிடைத்திட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 2 : 6 

 2. எல்லா ஜனங்களும் ஒருமுறையாவது உண்மையான தெய்வம் இயேசு கிறிஸ்துவைப் பற்றி தங்களின் வாழ்க்கையில் அறிந்திட ஜெபிப்போம் லூக்கா 2: 10

3. எல்லா மக்களும் சகோதர சிநேகம் உடையவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – எபிரேயர் 13 : 1 

4. மக்கள் கண்களினால் செய்கின்ற பாவங்கள் இல்லாமல் போக ஜெபிப்போம் -1 யோவான் 2 : 16

5. மக்களின் சிந்தனையில் எழும்பும் பாவ எண்ணங்கள் மாற ஜெபிப்போம் ரோமர் 1: 21

6. மக்களிடையே காணப்படும் பொருளாசைகள் முற்றிலும் குறைந்திட ஜெபிப்போம் – எபேசியர் 5:5 

 7. மக்களிடையே இருக்கும் பொறாமை குணங்கள் முற்றிலும் இல்லாமல் போக ஜெபிப்போம் – ரோமர் 13 : 13

8. மக்களிடையே காணப்படும் விபச்சார எண்ணங்கள் முற்றிலும் இல்லாமல் போக ஜெபிப்போம் – மட்தேயு 5 : 27,28

9. மக்களிடையே கவர்ச்சியாக இச்சிக்கும் வகையில் உடையணியும் பழக்கம் இல்லாமல் போக ஜெபிப்போம் – உபாகமம் 22 : 5

10. உபதேசங்களிலே மக்கள் உண்மையான தெய்வம் யார் என்று தேடும் உணர்வுள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – சங்கீதம் 53 : 2

11.  மக்களிடையே மன்னிக்கும் மனப்பான்மை மேலோங்கிட ஜெபிப்போம் மத்தேயு 6: 14, 15

12. மக்களின் பாவங்கள் பெருகாமல், தேவன் அவை அனைத்தையும் மன்னித்திட ஜெபிப்போம் – லூக்கா 5 : 24

13. மக்களிடையே காணப்படும் பாரம்பரிய கட்டுகள் ஒன்றுமில்லாமல் போக  ஜெபிப்போம் – எரேமியா 2 : 20 

14. மக்களிடையே பரவி காணப்படும் ஜென்ம சுபாவங்கள் முற்றிலும் மறைந்து, தெய்வீகத் தன்மை மலர ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 2 : 14 

15. மக்களிடையே காணப்படும் பரம்பரை வியாதிகள் இல்லாமல் போக ஜெபிப்போம் – யோவான் 5 : 6

16. மக்களிடையே உள்ள வீண் வாக்குவாதங்கள் எல்லாம் இல்லாமல் போக ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2 : 14

17. மக்களிடையே உள்ள பொய்கள் இல்லாமல் போக ஜெபிப்போம். -யோவான் 8: 44

18. இயேசு கிறிஸ்துவிற்கு விரோதமாய் கலகம் பண்ணுகிற அமைப்புகள், சங்கங்கள் கூட்டமெல்லாம் சந்திக்கப்பட ஜெபிப்போம் – எண்ணாகமம் 14 :9

19. மக்களிடையே உள்ள பயங்கள் மாறிட ஜெபிப்போம் – 2 தீமோட்தேயு 1:7

20.தேவன் ஏற்ற வேளைகளில் தேசங்களுக்கு மழையைத் தந்து செழிப்படையச் செய்ய ஜெபிப்போம் – உபாகமம் 11 : 14

21. மக்களின் மேல் தலைமுறை தலைமுறையாக உள்ள சாபங்கள் விலகிட ஜெபிப்போம் – 1 சாமுவேல் 3 : 13 

22. மக்களின் பழக்க வழக்கங்கள் சரியான முறையில் காணப்பட ஜெபிப்போம். -உபாகமம் 14: 22.

23. வாலிப பிராயத்தில் வரும் பாவங்களிலிருந்து, வாலிபர்களை தேவன் பாதுகாத்திட ஜெபிப்போம் -யோபு 20 : 11 

24. தேவன் வாலிபர்களுக்கு விஷேசித்த ஞானத்தை தந்திட ஜெபிப்போம் தானியேல் 1:17 

25. மக்களிடையே காணப்படும் பண ஆசைகள் அற்றுப்போக ஜெபிப்போம் – 1தீமோத்தேயு 6:10

26. ஜனங்கள் தேவ வல்லமையைக் காண ஜெபிப்போம் – சங்கீதம் 77: 14

27. ஜனங்கள் தேவ மகிமையைக் காண ஜெபிப்போம் – யோவான் 11: 40

28. சந்தோஷம், மகிழ்ச்சியின்றி தவிக்கும் மக்கள், இவற்றை இயேசு கிறிஸ்துவால் மட்டுமே தரமுடியும் என்பதை அறிந்து கொள்ள ஜெபிப்போம் -சங்கீதம் 16:11 –

29. மக்கள் இரக்ககுணம் உள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – ஓசியா 4:1

30. மரண பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் விடுதலை பெற்றிட ஜெபிப்போம் – எபிரேயர் 2:15

31. பல ஆண்டுகளாய் படுத்தபடுக்கையாய் காணப்படும் ஜனங்கள் சுகம் பெற்றிட ஜெபிப்போம் – யோவான் 5:6

32. அற்புதங்களின் மூலம் புறஜாதி மக்கள் அநேகர் நம் தேவனை விசுவாசித்திட ஜெபிப்போம் – யோவான் 11 : 45 

33. மக்களிடையே உள்ள கொடிய தீராத நோய்கள் எல்லாம் குணமாகிட ஜெபிப்போம் – உபாகமம் 7: 15 

34. மக்கள் தீமையை வெறுத்து நன்மை செய்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – சங்கீதம் 34: 14 

35. கஷ்டப்பட்டு வேலைசெய்கிறவர்கள் அதின் பிரயாசத்தை பெற்றிட ஜெபிப்போம் – சங்கீதம் 128: 2

36. மக்களிடையே காணப்படும் விரோதங்கள் அனைத்தும் மறைந்திட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 10:12

37. நாள்,நட்சத்திரம் பார்க்கின்ற மக்கள் மாறிட ஜெபிப்போம் லேவியராகமம் 19: 26

38. மக்களிடையே உள்ள கசப்புகள் மாறிட ஜெபிப்போம் – எபேசியர் 4 : 31

39. மக்களை தூஷிப்பவர்கள் திருந்திட ஜெபிப்போம் – தீத்து 3 :2 

40. மக்களை சபிப்பவர்கள் திருந்திட ஜெபிப்போம் – யாக்கோபு 3 : 9,10

41. மக்களிடையே உள்ள துர்குணங்கள் முற்றிலும் மறைந்திட ஜெபிப்போம் யாக்கோபு 1:21

 42. மக்களிடையே உள்ள துரோகங்கள், நம்பிக்கை துரோகங்கள், விசுவாச துரோகங்கள் மறைந்திட ஜெபிப்போம் – 2 தெசலோனிக்கேயர் 2 :3

43. மக்களிடையே உள்ள பெலவீனங்கள் மாறிட ஜெபிப்போம் – ஏசாயா 58 :8

 44. மக்களிடையே உள்ள எரிச்சல்கள் மாறிட ஜெபிப்போம் – சங்கீதம் 37: 8

45. பணத்திற்காக, வியாபாரத்திற்காக, மக்களை ஏமாற்றுகிறவர்கள் தாங்கள் அப்படி செய்வது தவறு என்பதை புரிந்து கொண்டு மாறிட ஜெபிப்போம் – ஆபகூக் 2:9

46. பதவிக்காக, வியாபாரத்திற்காக, பணத்திற்காக மக்களை கொலை செய்கிறவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – ஆபகூக் 2: 12 

47. மக்களின் குறைவுகளை தேவன் நிவர்த்தியாக்கிட ஜெபிப்போம் -சங்கீதம் 34:10

48. மக்களிடையே உள்ள வீண்தர்க்கங்கள், சண்டைகள் அறவே இல்லாமல் போக ஜெபிப்போம் – தீத்து 3: 9

49. எல்லா மக்களும் சந்தோஷம், மகிழ்ச்சியாய் தேவனண்டைக்கு கடந்து வந்திட ஜெபிப்போம் – சங்கீதம் 67: 4

50. வாதைகள் மக்களை மேற்கொள்ளாதபடி காணப்பட ஜெபிப்போம் – சங்கீதம் 91: 10

51. சிற்றின்பப் பிரியர்கள் திருந்திட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 21 :17 1 

52. திருடுகிறவர்கள் திருந்திட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 6: 10

53. சபிக்கப்பட்டவர்களை தேவன் அழிவிலிருந்து காத்திட ஜெபிப்போம் மத்தேயு 25: 41

54. மக்கள் குறிகேட்பதை விட்டு விலகி, அதின் மேல் உள்ள நம்பிக்கை அற்றுப்போக ஜெபிப்போம் – லேவியராகமம் 19: 31 

55. துர்கிரியைகளில் உள்ளவர்கள் தங்களது துர்கிரியைகளை விட்டு, மெய் தெய்வத்தை அறிந்து கொள்ள ஜெபிப்போம் – கொலோசெயர் 1: 21 

56. மக்களிடையே உள்ள வட்டிகள், கடன்கள் இல்லாமல் போக ஜெபிப்போம். – யாத்திராகமம் 22: 25

57. மக்களிடையே காணப்படும் வெறிகள், களியாட்டுகள் மறைந்திட ஜெபிப்போம் – கலாத்தியர் 5: 21

58. சமாதானம், நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் இவற்றை இயேசுவால் மாத்திரமே தரமுடியும் என்பதை அறிந்திட ஜெபிப்போம் -2 தெசலோனிக்கேயர் – 3: 16 

59. நம்மை சுற்றியுள்ள 10 தெருக்களின் பெயர்களைச் சொல்லி ஜெபிப்போம் சகரியா 8:21 

60. நம்மை சுற்றியுள்ள 10 ஊர்களின் பெயர்களை சொல்லி ஜெபிப்போம் – ஏசாயா 42: 16

61. நமது மாவட்டத்திற்க்காய் ஜெபிப்போம் – ஏசாயா 40: 3 

62. குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலை ஏற்பட ஜெபிப்போம் மாற்கு 10: 16

63.10 தொழில்களின் பெயரை சொல்லி, தேவன் அத்தொழிலை ஆசீர் வதிக்கவும், அங்கு வேலை செய்கிறவர்கள் தேவனை அறிந்திட ஜெபிப்போம் – உபாகமம் 28: 8

 64. கல்லூரியில் படிக்கும் எல்லா வாலிபருக்கும் ஞானத்தை தேவன் தந்திட ஜெபிப்போம் – தானியேல் 1: 17

65. ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஜெபக் குழுக்கள் ஏற்படுத்தப்பட ஜெபிப்போம் தானியேல் 3: 17 

66. எல்லாத் துறைகளிலும் ஜெபக் குழுக்கள் ஏற்படுத்தப்பட ஜெபிப்போம் -ரோமர் 15:32

 67. நம் நண்பர்களில் குறைந்தது 10 பேர்களின் பெயர்களை எழுதி, சொல்லி அவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – ஏசாயா 43: 21

 68. குறைந்தது 10 மாவட்டங்களின் பெயரைச் சொல்லி அங்கு வாழும் மக்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – சகரியா 8: 23

69. குறைந்தது 10 கிராமங்களுக்காகவும், அங்குள்ளவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – சகரியா 8: 22

70.10அரசியல் தலைவர்களின் பெயர்களை சொல்லி ஜெபிப்போம் 1 தீமோத்தேயு 2: 1 10

71. அதிகாரிகளின் பெயர்களைச் சொல்லி ஜெபிப்போம். -1 தீமோத்தேயு 2: 2

72. 5 அரசாங்க துறைகளைச் சொல்லி ஜெபிப்போம் – சகரியா 8: 22

 73. மக்களின் கைகளின் பிரயாசத்தை தேவன் ஆசீர்வதிக்க ஜெபிப்போம் சங்கீதம் 128:2

 74. மக்களிடையே காணப்படும் பேராசைகள் மறைந்திட ஜெபிப்போம் – பிரசங்கி 6: 9 

75. குடும்பங்களிடையே காணப்படும் சண்டைகள் மறைய ஜெபிப்போம் மத்தேயு 6:14 

76. பல ஆண்டுகளாய் குடும்பங்களிடையே காணப்படும் விரோதங்கள், பகைகள் எல்லாவற்றையும் தேவன் மாற்றிட ஜெபிப்போம் -கொலோசெயர் 3: 8,13

77. நாம் இருக்கும் ஊர்களில் வசிக்கும் மக்களை தேவன் சந்திக்க ஜெபிப்போம் – தானியேல் 9: 18 

78. நம் உறவினர்கள் இருக்கும் ஊர்களில் வசிப்பவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – மத்தேயு 10: 11 

79. கூட்டம் கூட்டமாய் விக்கிரக கோவிலுக்கு செல்கிறவர்கள் உண்மை தேவனை அறிந்திட ஜெபிப்போம் – ஆபகூக் 2: 18, 19

 80. குடிசைப் பகுதியில் வாழும் மக்களை தேவன் இரட்சித்து ஆசீர்வதித்திட ஜெபிப்போம் – ஏசாயா 29: 19 

81. குடிசைப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை தேவன்  உயர்த்திட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 13: 23

82. சகோதரர்களிடையே காணப்படும் கசப்புகள், சண்டைகள் மாறி ஒற்றுமையுடன் காணப்பட ஜெபிப்போம் – சங்கீதம் 133: 1

 83. இனிவரும் அழிவிற்கு ஜனங்கள் தப்பித்துக் கொள்ள ஜெபிப்போம் -சகரியா 7:13

84. பள்ளிக் குழந்தைகளை தேவன் பாதுகாத்து வழி நடத்திட ஜெபிப்போம் சகரியா 13: 7

85. கிறிஸ்துவைப்பற்றியும், கிறிஸ்துவ மதத்தையும், கிறிஸ்துவர்களைக் குறித்தான தவறான கருத்துகள் மாறிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 13: 45

86. குறைந்தது 10 அரசியல் கட்சிகளுக்காய் ஜெபிப்போம் – ஏசாயா 48: 17

87. தேவனை அறியாத நம் உறவினர்கள் 10 பெயர்களை சொல்லி ஜெபிப்போம் சகரியா 10:8

88. பொய் சாட்சிக்காரர்கள் இல்லாமல் போக ஜெபிப்போம் – நீதிமொழிகள் 19: 5 89. மக்கள் தீமை செய்வதை விட்டு நன்மை செய்திட ஜெபிப்போம் – கலாத்தியர் 6: 9

90.சோதனையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு நம் தேவன் உதவி செய்திட ஜெபிப்போம் – எபிரெயர் 2: 18

91. மக்களிடையே பொல்லாங்குகள் இல்லாமல் போக ஜெபிப்போம் -2 கொரிந்தியர் 13:7 

92. எல்லா மக்களும் சத்தியத்தை அறிகின்ற அறிவை அடைந்திட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 2: 4 

93. கஷ்டப்பட்டு செய்கின்ற வேலைக்கான கூலியை மக்கள் பெற்றிட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 5: 18

94. துர்க்குணத்தில் உள்ளவர்கள் தேவனிடம் சென்று மனந்திரும்பிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 8: 22

95. வேலை செய்கிறவர்கள் பார்வைக்கு வேலை செய்யாமல் உண்மையாய் வேலை செய்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – கொலோசெயர் 3: 22

96. தற்புகழ்ச்சிகாரர்கள் திருந்திட ஜெபிப்போம் – 2 கொரிந்தியர் 10: 18

97. பிள்ளைகள் பெற்றோரை கனம் பண்ணிட ஜெபிப்போம் – எபேசியர் 6:3

98. பெற்றோர்கள் பிள்ளைகளை சரியான முறையில் வளர்த்திட ஜெபிப்போம் – எபேசியர் 6: 4

99. வேலை செய்கின்றவர்கள் தங்கள் மேலாளர்களுக்கு கீழ்ப்படிந்திட ஜெபிப்போம் – எபேசியர் 6: 5

100. மனைவி, புருஷனுக்கு கீழ்ப்படிந்து நடக்க ஜெபிப்போம் – கொலோசெயர் 3: 18

101. மக்களிடையே காணப்படும் மேட்டிமையான சிந்தைகள் அகன்று போக ஜெபிப்போம் – ரோமர் 12: 16

 102.வாலிபர்கள் பெரியவர்களை மதித்து கீழ்ப்படிந்து நடக்க ஜெபிப்போம் பேதுரு 5:5

103. இயேசுகிறிஸ்துவை, கிறிஸ்தவர்களை வெறுக்கும் எதிர்க்கும் சவுல்கள் பவுல்களாக மாறிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 26:9-22 

104. மக்கள் துர் இச்சைகளினால் தங்களை கெடுத்துவிடாதபடி, தங்களை காத்து கொள்ள ஜெபிப்போம் – ரோமர் 13:14

105. மக்களுக்கு உலக, மாம்ச சிந்தனைகள் அகன்று இயேசுவின் சிந்தை மாத்திரமே அனைவரும் பெற்றிட ஜெபிப்போம் – பிலிப்பியர் 2:5

106. மக்களிடம் தெய்வ பயம் மேலோங்கிட ஜெபிப்போம் – சங்கீதம் 145:19

107. மக்கள் அநியாயத்தை விரும்பி அதை செய்யாமல் தங்களைக் காத்துக் கொள்ள ஜெபிப்போம் – ஓசியா 10:13

108. மாம்ச சிந்தனைகள் முற்றிலும் அகன்று போக ஜெபிப்போம் – ரோமர் 8:6

109. மக்கள் நற்கிரியை செய்ய தங்களை ஒப்புக் கொடுப்பதற்காய் ஜெபிப்போம் 2 தெசலோனிக்கேயர் 2:17 

110.மக்களிடையே வேலை செய்ய கூடாதபடி காணப்படும் தடைகள் மாறிட ஜெபிப்போம் – 2 தெசலோனிக்கேயர் 3:10

111. மக்கள் நீதியைப் பின்பற்றி அதையே விதைத்திட, அதன்படி நடந்திட ஜெபிப்போம் – ஓசியா 10:12

112. இழிவான ஆதாயத்திற்காய் தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்பவர்கள் மாறிட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 3:8

113. தேவன் அருவருக்கின்ற அருவருப்பான செயல்கள் செய்கின்றவர்கள் திருந்திட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 6:9,10

 114. மனிதனின் கையின் கிரியைகள் ஒழிந்து போவதற்காய் ஜெபிப்போம் – மீகா 5:13

115.பில்லிசூனியம் பண்ணுகின்றவர்கள் அதை நாடாமல் இருந்திட ஜெபிப்போம் ஏசாயா 41:24

116. மக்கள் காம விகாரங் கொண்டு கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடி காணப்பட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 5:11

117. சுகபோகமாய் வாழ்கின்றவர்கள் அதைவிட்டு தேவனுக்காய் பாடு அனுபவிப்பதை தெரிந்து கொள்ள ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 5:6

 118. மக்களிடையே காணப்படும் பேராசைகள் மறைந்து, போதும் என்கிற மன நிறைவு எல்லோருக்கும் கிடைத்திட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 6:6

119. மாறுபாடான, தீங்கு செய்யும் இருதயம் உடையவர்கள் மாறிட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 11:20 

120. மக்கள் தங்கள் கிரியைக்கு ஏற்ற நியாயமான பலனை மாத்திரமே பெற்றிட விரும்புகிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 16:8

121. பொய் சாட்சி சொல்லுகிறவர்கள் திருந்திட ஜெபிப்போம் -நீதிமொழிகள் 19:9 

122. மக்களிடையே காணப்படும் தீய நோக்கம் மறைந்திட ஜெபிப்போம் -நீதிமொழிகள் 19:9

123. பணத்திற்காக தீமை செய்கின்றவர்கள் மாறிட ஜெபிப்போம் நீதிமொழிகள் 28:20 

124. சத்தியத்தை பலமுறைக் கேட்டும், ஆண்டவரிடம் வராமல் தங்கள் இருதயத்தை கடினபடுத்துகிறவர்கள் தேவனிடம் வந்திட ஜெபிப்போம் -நீதிமொழிகள் 29:1

125. சத்திய வசனத்திற்கு கீழ்ப்படியாததின் மூலம் ஏற்படும் சாபங்கள் மாறிட ஜெபிப்போம் – தானியேல் 9:14

126. மக்கள் தாங்கள் செய்த பாவத்தினால் ஏற்பட்ட சாபங்கள் மாறிட ஜெபிப்போம் – நாகூம் 1:13

127. துர்புத்தி உள்ளவர்கள் திருந்திட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 3: 8 

128. அநேகர் வேதத்தை படித்திடவும் அதன் மூலம் நற்கிரியைகள் செய்திடவும் ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 3:16

129. எதிர்த்துப் பேசுகிறவர்கள் மனந்திரும்பிட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2:25

 130. தங்கள் தகப்பனையும், தாயையும் சபிப்பவர்கள் திருந்திட ஜெபிப்போம் யாத்திராகமம் 21:17

131.உலகில் காணப்படும் ஞானிகளும், அறிஞர்களும் உண்மை தெய்வத்தை அறிந்து, வாழ்க்கைக்குப் பின் நடக்கவுள்ள பயங்கரத்தை அறிந்து இரட்சிப்படைய ஜெபிப்போம் – சங்கீதம் 49:10-14

132. தங்கள் தகப்பனையும் தாயையும் அடிக்கிறவர்கள் மனந்திருந்திட ஜெபிப்போம் – யாத்திராகமம் 21:15

133.ஒழுங்கின்மையாய் இருப்பவர்கள் திருந்திட ஜெபிப்போம் -1 தெசலோனிக்கேயர் – 5:14

134. மக்கள் தீமைக்குத் தீமை, பழிக்கு பழி செய்யாதபடி மன்னிக்கும் மனப்பான்மை பெற்றிட ஜெபிப்போம் – 1 தெசலோனிக்கேயர் 5:15

135.சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள் திருந்திட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 6:19

136. தீமையான வழியிலே நடக்கிறவர்கள் அவ்வழிகளை விட்டுத் திருந்திட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 8:13

137. மதிகேடாய் நடக்கிறவர்கள் எல்லோரும் மாறிட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 11:22

138. கஞ்சனாய் இருக்கிற மக்கள் மாறிட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 11:24 

139. மக்களிடையே காணப்படும் வீணான வாயாடித்தனங்கள் எல்லாம் காணப்படாமல் போக ஜெபிப்போம் – நீதிமொழிகள் 17:28 

140. தன் தகப்பனுக்கும், தன் தாயிற்கும் செலுத்த வேண்டிய கனத்தையும், கடமையையும் செலுத்திட ஜெபிப்போம் – மத்தேயு 15:5 

141.இந்நாட்களில் மரணங்கள் பல வழிகளில் வருகின்றது. அதை கடிந்து கொண்டு ஜெபிப்போம் – எபிரேயர் 2:14

142. மக்கள் மரணத்திற்கு ஏதுவான பாவங்கள் செய்யாதபடி தங்களைக் காத்துக் கொள்ள ஜெபிப்போம் – 1 யோவான் 5:16

143. கணவன் மனைவியிடையே பிரச்சனை, குழப்பங்கள் கொண்டு வருகிறவர்கள் மாறிட ஜெபிப்போம் – மாற்கு 10:9

144. மருத்துவத்துறையில் உள்ளவர்கள் இரட்சிக்கப்படவும், அவர்கள் தேவ ஞானத்தால் செயல்பட ஜெபிப்போம் – லூக்கா 5:31

145. மக்களுக்கு சம்பாதிக்கும் பெலனை தேவன் தந்திட ஜெபிப்போம் – உபாகமம் 8:18

146.தகப்பன், தாயின் சொல்படி கேட்காத, அடங்காத கீழ்ப்படியாத பிள்ளைகளுக்காய் ஜெபிப்போம் – உபாகமம் 21:18

 147. மக்களில் அநேகர் மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டு, தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றிட ஜெபிப்போம் – உபாகமம் 30:8,9

148. மக்கள் சட்டத்தைக் கடைபிடித்திடவும், வரிகளை சரியாக செலுத்திடவும் ஜெபிப்போம் – லூக்கா 20:25

149. தேவனுக்கும், தேவப்பிள்ளைகளுக்கும் விரோதமாய் எழும்பும், அதிகாரங்களும், அதிகாரிகளும், ஜனங்களும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 4:28

150. ஆதரவற்று,ஒதுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படும் குழந்தைகள், பெரியவர்கள், வாலிபர்கள், உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோரை தேவன் தாங்கிட நடத்திட ஜெபிப்போம் – சங்கீதம் 27:10

151. சபைகளுக்கு உபத்திரவங்கள், நெருக்கடிகள், பிரச்சனைகள் கொடுக்கிறவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 8:3 

152.தேவனை எதிர்க்கும் கூட்டமெல்லாம் தேவனின் சித்தம் செய்கிறவர்களாய் மாறிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 9:6

153. சிறையில் உள்ள ஒவ்வொருவரும் உண்மை தெய்வத்தை அறிந்து தேவனிடம் பாவமன்னிப்பை பெற்றிட ஜெபிப்போம் – சங்கீதம் 68:6

154.உண்மை தெய்வத்தை அறியமுடியாதபடி நாடெங்கும் ஜனங்களைச் சிதறடிக்கிறவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – சகரியா 10:2 

155. மக்கள் எவ்வளவுதான் சம்பாதித்தும் அதன் பலனை அனுபவிக்க முடியாத நிலைகள் மாறிட ஜெபிப்போம் – ஆகாய் 1:9

156. மக்கள் அறியாமையினால் நம் தேவனுக்கு விரோதமாய் எழும்பி தேவனுக்குப் பகைஞராய் மாறிவிடாதபடி இருக்க ஜெபிப்போம் – நாகூம் 1:2 

157. இயேசு கிறிஸ்துவைப்பற்றிய இரகசியங்களை எல்லா மதத்தினரும், புரிந்து கொண்டு நித்திய வாழ்விற்கு ஆயத்தமாகிட ஜெபிப்போம் 1 தீமோத்தேயு 3:16

158.உண்மை தேவன் இல்லை என்று சொல்லி, அதன் மூலம் பலரை இடறலுக்கு கொண்டு வருகிறவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – மல்கியா 2:17

 159.உண்மை தெய்வத்தை அறியாதபடி இருப்பவர்கள் உண்மை சத்தியத்தை ஒருமுறையாவது தங்கள் வாழ்க்கையில் அறிந்திட ஜெபிப்போம் -எசேக்கியேல் 3:11

160.சமாதானம் இல்லாதவர்களுக்கு தேவன் பூரண சமாதானம் தந்திட ஜெபிப்போம் – ஏசாயா 26:3

161. மக்கள் தங்களின் வாழ்க்கையில் ஏற்படும் தேவையற்ற பயங்கள், திகில்கள் எல்லாம் மாறிட ஜெபிப்போம் – ஏசாயா 54:14 

162. அக்கிரம சிந்தை உடையவர்கள் தேவனிடத்தில் அதற்கான மன்னிப்பை பெற்றிட ஜெபிப்போம் – ஏசாயா 55:7

163. துக்கப்படுகின்ற, துயரப்படுகின்ற மக்களுக்கு தேவன் ஆறுதல் அளித்திட ஜெபிப்போம் – ஏசாயா 57:18

 164. மக்களிடையே காணப்படும் துணிகரங்கள் மறைந்திட ஜெபிப்போம் -2 தீமோத்தேயு 3:4

165.மோசம் போய், மோசம் போக்குகிறவர்கள் (தானும் கெட்டு, அடுத்தவர்களும் கெட வேண்டும் என்று நினைப்பவர்கள்) மனந்திரும்பிட ஜெபிப்போம் 2 தீமோத்தேயு 3:13

 166. மக்களிடையே, வேத வசனங்களைக் குறித்ததான தவறான கருத்துக்கள் இல்லாமல் போக ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 3:16, 17 

167. இச்சைகளில் வாழ்ந்து கொண்டு, அதிலே புரண்டு கொண்டு இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் காத்திட ஜெபிப்போம் – யாக்கோபு 1:14,15

 168.சபிப்பவர்கள் பொறுமையுள்ளவர்களாய் மாறிட ஜெபிப்போம் – தீத்து 3,2 

169. இருமனமுள்ளவர்கள் மாறிட ஜெபிப்போம் – யாக்கோபு 1:8

170. தங்கள் நோய்களுக்கு வைத்தியம் செய்ய முடியாத அளவிற்கு காணப்படுபவர்கள் தேவனிடம் சுகம், உதவி பெற்றிட ஜெபிப்போம் 1 பேதுரு 2:24

171. மக்களிடையே உள்ள தந்திரங்கள் எல்லாம் மறைந்திட ஜெபிப்போம் – எபேசியர் 4:14

172. பாதாளத்ததிற்கு செல்லும் ஒவ்வொரு ஆத்துமாக்களையும் தேவன் தப்புவித்து மீட்டிட ஜெபிப்போம் – சங்கீதம் 49:15

173. வாலிபர்களுக்கு தேவன் பாதுகாப்பு தந்திட ஜெபிப்போம் – பிரசங்கி 11:9

 174. வாலிபர்களுக்கு வரும் சோதனைகளிலிருந்து தேவன் அவர்களைப்

பாதுகாத்திட ஜெபிப்போம் – 1 யோவான் 2:13

175. விளையாட்டுத் துறைகளில் உள்ள புகழ்பெற்ற 10 வீரர்களின் பெயர்களைச் சொல்லி அவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – செப்பனியா 3:17 

176. சினிமாத் துறைகளில் உள்ளவர்களின் 10 பெயர்களை சொல்லி, அவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – செப்பனியா 3:20

177. முரட்டாட்ட குணமுள்ளவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – ஏசாயா 65:2

178. மக்களிடையே காணப்படும், பேசப்படும் கெட்ட வார்த்தைகள் இல்லாமல் மறைந்திட ஜெபிப்போம் – எபேசியர் 4:29

179. சிறுவர்கள் தங்கள் சிறுவயதிலேயே ஆண்டவரை ஏற்று, தங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்திட ஜெபிப்போம் – மத்தேயு 19:14 

180. மக்களிடையே குற்றப்படுத்துகிற குணம் உடையவர்கள் மாறிட ஜெபிப்போம் -யாக்கோபு 4:12

181. சகோதரர்களுக்கு விரோதமாய், குற்றப்படுத்துகிற குணம் உடையவர்கள் திருந்திட ஜெபிப்போம் – யாக்கோபு 4:11

182. மக்கள் கோபப்பட்டு பாவத்தில் விழுந்து, வீழ்ந்துவிடாதபடி தங்களைக் காத்திட ஜெபிப்போம் – எபேசியர் 4:26

183. பொருளாசை உடையவர்கள் திருந்திட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 23:5

184. பல ஆண்டுகளாய் வியாதியில் உள்ளவர்கள் உண்மையான தேவனை அறிந்து சபையிலே வந்து முற்றிலும் விடுதலை பெற்றிட ஜெபிப்போம் ஏசாயா 40:28,29

185. அதிகாரிகளும், தலைவர்களும் சட்டத்தை மதித்து, தெய்வபயத்தோடு நடந்திட, நடத்திட ஜெபிப்போம் – 1 சாமுவேல் 13:14

186. மக்களிடையே காணப்படும் எல்லா மலட்டுத் தன்மைகளும் மறைந்திட ஜெபிப்போம் – உபாகமம் 7:14 

187. மக்கள் பலருக்கு நன்மை செய்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – யாக்கோபு 4:17

188. மக்களுக்கு விரோதமாய் மக்கள் தீங்கு செய்யாதபடி, நினைக்காதபடி காணப்பட ஜெபிப்போம் – சகரியா 8:17

189. ஒவ்வொரு ஜனங்களும் தீர்மானிக்கப்பட்ட காலம் வரை, தேவனுக்கு சித்தமான இடத்தில் வாழ்ந்திடவும் தேவனை அறிந்திடவும், தேவன் அநுகிரகம் செய்ய ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 17:26,27

190. துன்பத்தோடு, கஷ்டத்தோடு, நம் தேவனிடம் வருபவர்கள், தேவனிடம் இளைப்பாறுதல் சந்தோஷம் சமாதானம் பெற்றிட ஜெபிப்போம்

மத்தேயு 11:28

 191. அக்கிரமம் செய்கிறவர்கள் மனந்திரும்பிட ஜெபிப்போம் – மல்கியா 4:1

 192. மக்கள் ஒவ்வொருவரும் பொறுமையுள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் யாக்கோபு 5:11

193. படிக்கின்ற ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தேவன் ஞானத்தை தரவும், பாடங்கள் மனதில் தங்கவும் ஜெபிப்போம் – ஏசாயா 54:13 

194. மக்கள் பிசாசின் கண்ணிக்கு நீங்கலாகி தங்களைக் காத்துக் கொள்ள ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2:26 

195.தேவையற்ற வீண்வார்த்தைகளை பேசிக்கொண்டு இருப்பவர்கள் மாறிட ஜெபிப்போம் – மத்தேயு 12:36 

196. முதியோருக்கு, தேவன் பெலன் தந்து ஆதரவாய் இருந்திட ஜெபிப்போம் சங்கீதம் 92:15

 197. தேவன் ஒவ்வொரு மக்களையும் ஆசீர்வதித்திட, இரட்சித்திட ஜெபிப்போம் – சங்கீதம் 91:16

 198. மக்கள் இரண்டகம் பண்ணாதபடி காணப்பட ஜெபிப்போம் -1 சாமுவேல் 15:23

199. மக்களிடையே காணப்படும் முரட்டாட்ட குணம் மாறிட ஜெபிப்போம் -1 சாமுவேல் 15:23 

200. மக்கள் சுவிசேஷத்தைக் கேட்கும் போது இருதயம் கடினப்படாமல் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள ஜெபிப்போம் – எபிரேயர் 4:7 

201. நீதித்துறையில் உள்ள ஒவ்வொருவரும் உண்மையாய், நேர்மையாய் வாதாடவும், தீர்ப்புச் சொல்லிடவும் ஜெபிப்போம் – யாக்கோபு 7:24

202. பிசாசின் இச்சைகளுக்கு செவிகொடுத்து, அதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து மீண்டு விடுதலை பெற்றிட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2:26 

203. தெய்வபயம் இல்லாமல் செல்வத்தின் மிகுதியால் பெருமையில் காணப்படும் மக்கள் சந்திக்கப்பட ஜெபிப்போம் – சங்கீதம் 52:1-7

204.ஒவ்வொரு மக்களும், ‘எனக்காக’, ‘என் பாவத்திற்காக’, இயேசு கிறிஸ்து மரித்தார் என்பதை உணர்ந்திட ஜெபிப்போம் – ஏசாயா 53:4,5 

205.ஒவ்வொருவருக்குள்ளிருக்கும் பாவங்கள் முற்றிலும் இல்லாமல் போக ஜெபிப்போம் – ரோமர் 7:17 

206. பாவ இச்சைகள் குறைந்திட ஜெபிப்போம் – ரோமர் 7:5

207. அடிதடிகள் மற்றும் தேவையற்ற வன்முறை சண்டைகளில் பிரியப்படுவோர், ஈடுபடுவோர் அதனை விட்டு விலகிட ஜெபிப்போம் – ஆதியாகமம் 9:6

208. மக்கள் ஏக சிந்தையுள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – ரோமர் 12:16

 209. மக்களிடையே அன்பு மாயமற்றதாய் இருக்க ஜெபிப்போம் – ரோமர் 12:9 

210. மக்களிடையே காணப்படும் மனக் கடினங்கள் மாறிட ஜெபிப்போம் ரோமர் 2:5

Leave a Reply