4.(1) போதகர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்திற்காகவும் ஜெபிப்போம் Pray for Our Pastor and their Family

 

 

4.(1) போதகர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்திற்காகவும் ஜெபிப்போம் Pray for Our Pastor and their Family

 

1. 2. நமது போதகர்களுக்காய் ஜெபிப்போம் – எபேசியர் 6:20

2. போதகரின் குடும்பத்திற்காகவும், மனைவி, பிள்ளைகளுக்காகவும் ஜெபிப்போம் – யோவான் 12:26

3. ஒவ்வொரு ஊழியரும் ஊழியத்தில், ஜெபத்தில், திட்டத்தில் ஜெயம் பெற ஜெபிப்போம் – யோவான் 16:13

4. ஊழியங்களுக்கான பணத் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம் சங்கீதம் 24:1

5. ஊழியர்களின் தேவைகளை தேவன் சந்திக்க ஜெபிப்போம் – சங்கீதம் 25:13

6. போக்கிலும் வரத்திலும் தேவன் ஊழியர்களை பாதுகாத்து வழிநடத்த ஜெபிப்போம் – சங்கீதம் 91:14

7. இளைப்படைந்தவர்களுக்கு, சோர்ந்து போனவர்களுக்கு சமயத்திற்கேற்ற

7. வார்த்தையை தேவன் கொடுத்திட ஜெபிப்போம் – ஏசாயா 50:4

8.  ஊழியர்கள் ஆவிக்குரிய கனிகள் தந்திட ஜெபிப்போம் – கலாத்தியர் 5:22

9. ஊழியத்தில் காணப்படும் பிரச்சனைகள் மாறிட ஜெபிப்போம் -2 தீமோத்தேயு 4:5

 10. ஊழியத்திலே திறந்த வாசலை தேவன் தந்திட ஜெபிப்போம் -வெளிப்படுத்தல் 3:8

11. சில ஊழியர்களிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகள் முற்றிலும் மறைந்திட ஜெபிப்போம் – எபிரேயர் 5:4

12. ஊழியர்களை தாங்கிப் பிடிக்கத்தக்கதாக ஊரும் ஆரோனும் எழும்பிட ஜெபிப்போம் – யாத்திராகமம் 17:12

13. ஊழியருக்கு விரோதமான கோராகின் கூட்டமெல்லாம் மாறிட ஜெபிப்போம் எண்ணாகமம் 16:1-35

14. நாம் வசிக்கும் நம் பகுதிகளில் உள்ள 10 போதகர்களின் பெயர்களைச் சொல்லி தேவன் அவர்களை வல்லமையாய் பயன்படுத்திட ஜெபிப்போம் -ஏசாயா 43:21

15. ஊழியர்களுக்கு ஊழியத்தில் உள்ள சோர்வுகள் மாறிட ஜெபிப்போம் -2 கொரிந்தியர் 4:1

16. ஒவ்வொரு சபைகளிலும் ஊழியர்கள் வல்லமையாய், சாட்சியாய் தேவனுக்காய் பிரகாசித்திட ஜெபிப்போம் – மத்தேயு 5:16

17. ஊழியர்களைக் குறித்தான ஆண்டவரின் திட்டம், சித்தம் முழுமையும்  நிறைவேற்றப்பட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 26:16

18. ஊழியத்தை உண்மையாய் செய்யக்கூடியவர்கள் ஊழியத்திற்குக் கடந்து வந்திட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 1:12

19. ஊழியர்களின் பிள்ளைகளை, தேவன் ஊழியத்தில் பிரகாசிக்கப் பண்ணிட ஜெபிப்போம் – சங்கீதம் 128:3

20. நம் ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் அற்புதம், அடையாளங்களை செய்திட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 14:3

21. ஊழியத்தில் ஊழியர்களிடையே காணப்படும் வீண் புகழ்ச்சிகள் அற்றுப் போக ஜெபிப்போம் – கலாத்தியர் 5:26

22. நம்முடைய மேய்ப்பர்கள் சந்தோஷத்தோடே நமக்காய் உத்திரவாதத்துடன் வேண்டுதல் செய்ய ஜெபிப்போம் – எபிரேயர் 13:17

23. ஒவ்வொரு ஊழியர்களின் குடும்பத்தையும், தேவன் நேர்த்தியாய் பாதுகாத்து நடத்திட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 3:5

24. எல்லா ஊழியர்களும் போதக சமர்த்தர்களாய் காணப்பட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2:24

25. சில ஊழியர்கள் ஊழியங்களின் பெயரை வைத்து வேஷமாகத் திரிபவர்கள் மாறிட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 3:5

 26. கர்த்தருடைய வார்த்தையை திட்டமாய், உண்மையாய் அறிவிக்காமல் சுய இச்சைகளின்படி போதிக்கின்ற சில போதகர்கள் மாறிட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 4:3

27. ஒவ்வொரு தேசங்களிலும் அநேக வல்லமையான ஊழியர்களை தேவன்

ஏற்படுத்திட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 26:16

 28. மாம்சத்தை பிரியப்படுத்துவதற்கு ஏதுவான போதனைகள் செய்வோர் மாறிட ஜெபிப்போம் – கொலோசெயர் 2:23

29. சில ஊழியர்கள் பொய்யான, பெருமையான, விபரீத, தேவையற்ற கொள்கைகளிலிருந்து விலகிட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 6:20

30. உண்மையாய் தேவனுடைய வார்த்தையைப் போதிக்கத்தக்க தேவ ஊழியர்கள் பலர் எழும்பிட ஜெபிப்போம் – யோவான் 3:34

31. உலகமெங்கும் தேவ வார்த்தையை வாஞ்சையோடு அறிவிக்கத்தக்க  போதகர்கள் எழும்பிட ஜெபிப்போம் – சங்கீதம் 17:6

32. ஊழியம் செய்கிற தேவ ஊழியர்கள் தேவனுக்காக மாத்திரமே உண்மையாய் செய்திட ஜெபிப்போம் – மத்தேயு 6:24

33. ஊழியர்கள் தங்களுக்கு தேவன் கொடுத்த அதிகாரங்களை தேவனுக்காய் மாத்திரமே பயன்படுத்திட ஜெபிப்போம் – மத்தேயு 10:1

34. தேவன் தங்களுக்கு கொடுத்த வரங்களை வியாபாரமாக செய்கிற சிலர் மாறிட ஜெபிப்போம் – மத்தேயு 10:8

35. ஒவ்வொரு ஊழியர்களும் தங்களுக்கு தேவன் கொடுத்துள்ள ஊழியத்தை நிறைவேற்றிட ஜெபிப்போம் – கொலோசெயர் 4:17

36. தேவனுடைய ஊழியத்தை செய்யும்படி வருகிற சுவிசேஷகர்கள், ஊழியர்கள், தேவப்பிள்ளைகள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிப்போம் * மத்தேயு 9:38 –

37. சபை போதகருக்கு சபையைக் குறித்த பாரத்தை தேவன் நிறைவேற்றிட ஜெபிப்போம் – பிலிப்பியர் 4:13

38. சபை மக்களைப் பற்றிய பாரத்தை தேவன் ஒவ்வொரு போதகர்களுக்கும் தந்திட ஜெபிப்போம் – சகரியா 11:5

39. ஊழியத்திற்கென வந்தும் சபையை, ஊழியத்தை விட்டு உலகத்தை நோக்கிச் செல்லும் சில அழைப்பு பெற்ற ஊழியர்கள் மீண்டும் தேவனிடம் வந்திட ஜெபிப்போம் – சகரியா 11:17

40. தேவன் ஒவ்வொரு ஊழியர்களையும் ஒவ்வொரு நாளும் சுத்திகரித்திட ஜெபிப்போம் – மல்கியா 3:3

41. தேவனுடைய ஊழியத்தை அசட்டையாய் செய்கிற சில ஊழியர்கள் மாறிட ஜெபிப்போம் – மல்கியா 1:6

42. ஊழியர்களுக்கு விரோதமாய் எழும்பும் எல்லா சாபத்தையும் தேவன் மாற்றிட ஜெபிப்போம் – ஏசாயா 65:15

43. ஊழியர்களை தேவன் போதக வரத்தாலும், வேத அறிவைக் கொண்டும் ஒவ்வொரு நாளும் அபிஷேகித்து நிரப்பிட ஜெபிப்போம் – மல்கியா 2:6

44. உண்மை சத்தியம் எது என்று தெரிந்து அதன்படி போதிக்காத சில போதகர்களை தேவன் சந்தித்திட ஜெபிப்போம் – மல்கியா 2:7-10

 45. சோர்ந்து போன ஊழியர்கள் புதிய வரங்களைப் பெற்று, சிறப்பாய் தேவ ஊழியத்தை செய்திட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 1:6

46. பெரிய ஊழியர்கள் சிலர் தங்களைத் தாழ்த்தி, கர்த்தரை மாத்திரமே மேன்மைப் பாராட்ட ஜெபிப்போம் – லூக்கா 17:10

 47. ஒவ்வொரு போதகரின் பொருளாதார வாழ்க்கை நிலைகளை தேவன் உயர்த்திட ஜெபிப்போம் – சங்கீதம் 91:14

48. ஒவ்வொரு ஊழியரின் குடும்பத்தை தேவன் உயர்த்தி பாதுகாத்து நடத்திட ஜெபிப்போம் – சங்கீதம் 128:3

49. வெளிநாடுகளுக்கு செல்லும் தேவ ஊழியர்கள் ஆண்டவரின் நோக்கத்தை நிறைவேற்றிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 26:18

50.அநேக தேவப்பிள்ளைகள் தேவன் ஊழியத்திற்கென்று அழைத்திட, அனுப்பிட ஜெபிப்போம் – மத்தேயு 9:38

51.ஊழியரின் குடும்பத்தின் மூலம் தேவன் அவ்ஊழியத்தை மேலும் வளர்த்திட, உயர்த்திட ஜெபிப்போம் – சங்கீதம் 128:3

52. சபைகளிடையே, ஊழியர்களிடையே, விசுவாசிகளிடையே காணப்படும் கசப்புகள் மாறிட ஜெபிப்போம் – எபேசியர் 4:31

53. இளம் ஊழியர்கள் கர்த்தருக்காய் மாத்திரம் பிரகாசித்திட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 4:12

54. போதகரின் உடல் நிலை ஆரோக்கியத்தை தேவன் பாதுகாத்திட ஜெபிப்போம் – யோவான் 17:11

55. ஊழியம் கனம்பண்ணுகிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – ரோமர் 12:10

56. தேவனுடைய ஊழியம் செய்கிறவர்கள் இரவு பகலாய் தேவனோடு ஜெபிக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – புலம்பல் 2:19

 57. மனுஷரைப் பிரியப்படுத்தும் போதகங்கள் மற்றும் போதகர்கள் முற்றிலும் மாறிட ஜெபிப்போம் – கலாத்தியர் 1:10

58. ஒவ்வொரு ஊழியர்களையும் தேவன் புறஜாதி மக்களுக்கு முன்பாக வெட்கப்படுத்தாமல் காத்து நடத்திட ஜெபிப்போம் – ரோமர் 5:5

59. ஊழியத்திலே காணப்படும் சிறுசிறு பிரச்சனைகள் நிமித்தம் சோர்ந்து போய்

கவலையுடன் இருப்பவர்கள் புதிய பெலன் பெற்றிட ஜெபிப்போம் – எரேமியா 12:5

60.ஊழியர்கள் ஒவ்வொருவரையும் புது உடன்படிக்கையின் ஊழியத்தைச் செய்ய தகுதியுள்ளவர்களாய் தேவன் மாற்றிட ஜெபிப்போம் – 2 கொரிந்தியர் 3:5,6

Leave a Reply