யூதர்களின் சோக வரலாறு – 2
2. தேவனால் பரிசுத்தத்திற்குத் தெரிந்து கொள்ளப்பட்ட ஜாதி -கி.பி.70ல் எருசலேமின் வீழ்ச்சி
இஸ்ரவேல் ஒரு சிறிய நாடு. அதனுடைய மொத்த பரப்பளவே 8522.04 சதுர மைல்கள்தான். 290 மைல் நீளமும் குறுக்கள வில் 85 மைல்களும் உள்ள நாடு. சுமார் 90 நிமிடங்களில் அதன் குறுக்கே உள்ள தூரத்தைக் கடந்து விடலாம். வடகோடியி லுள்ள மெத்துல்லா (MUTULLA) என்ற இடத்திலிருந்து தெற்குக் கோடியிலுள்ள ஈலாட் (EILAT) என்ற இடத்தைச் சென்றடைய மலைப் பிரதேசங்களும் பாலைவனப் பகுதிகளும் குறுக்கிடுவதால் அதற்கு சுமார் 6 மணி நேரம் ஆகும். அவ்வளவு சிறிய நாடு. வடக்கு எல்லையில் லெபனானும் வடகிழக்கில் சிரியாவும், கிழக்கில் ஜோர்டானும், தென் மேற்கில் எகிப்தும், மேற்கே மத்தியதரைக் கடலும் எல்லையாக அமைந்த நாடு.
கர்த்தர் ஆபிரகாமை ஊர் என்கிற கல்தேயர் தேசத்திலிருந்து “நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா” (அப்.7:3) என்று அழைத்தார். “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக் கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்” (ஆதி.12:2,3). கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னபடியே சொன்னதை விசுவாசித்து அதற்கு கீழ்ப்படிந்து போகுமிடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். ஆபிரகாமும் அவனோடு வந்தவர்களும் கானான் தேசத்தை வந்தடைந்தார்கள். “கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன்” என்றார் (ஆதி.12:7). பின்பும் கர்த்தர் “இந்த தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்’
(ஆதி.15:21). பின்பும் அதை உறுதி செய்யும் வகையில் “நீ பரதேசியாய்த் தங்கி வருகிற கானான் தேச முழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்” (ஆதி.17:8). ஆகவேதான் இது “வாக்குத்தத்த தேசம்” (PROMISED LAND) என்றழைக்கப்படுகிறது.
ஆறாயிரம் வருட வரலாற்றைக் கொண்ட இஸ்ரவேலின் வரலாறு நாம் படிப்பதற்கு நல்லதொரு பாடமாக அமைகிறது. “இஸ்ரவேல்” என்ற பெயருக்கும் கூட ஒரு வரலாறு உண்டு. ஆபிரகாமின் பேரனாகிய யாக்கோபு பெனியேல் என்ற இடத்தில் தேவனோடு ஆசீர்வாதத்திற்காகப் போராடின போது தேவன் அவனை ஆசீர்வாதத்தோடு அவனுடைய பெயரை இஸ்ரவேல் என்று மாற்றினார். “யாக்கோபு” என்ற பெயருக்கு எத்தன், ஏமாற்றுகிறவன் என்று அர்த்தம். ஆனால் தேவன் அவனுக்கு இஸ்ரவேல் என்று பெயரிட்டார். “இஸ்ரவேல்” என்றால் “தேவனோடு போராடி மேற்கொண்ட பிரபு” (THE PRINCE THAT PREVAILS WITH GOD) என்று அர்த்தம். தேவன் அவனை அங்கே ஆசீர்வதித்தார் (ஆதி.32:29). இஸ்ரவேல் என்ற அந்தப் பெயரே யாக்கோபின் 12 பிள்ளைகள் வழியாக வந்த 12 கோத்திரத்தில் தோன்றிய வர்களுக்கும் இஸ்ரவேல் என்பதே பெயராயிற்று. ஆகவே இஸ்ரவேல் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட விசேஷித்த மக்கள். இஸ்ரவேல் என்ற அவர்களுடைய நாடும் விசேஷமானது.
இஸ்ரவேலின் எல்லைகளை தேவன்தாமே வகையறுத்துள்ளார். அவர் “எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும், கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன்” (ஆதி.15:18-21) என்று ஆபிரகாமுக்கு கானான் என்று அழைக்கப்பட்ட நாட்டை வாக்களித்தார். ஆகவே இந்த நாடும் தேவன் தாமே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்தது.
பரிசுத்தத்திற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட ஜாதி
இஸ்ரவேல் மக்கள் பூமியிலுள்ள சகல மக்களிலும் விசேஷித்தவர்கள். ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய கண்களிலே கிருபை பெற்றவர்கள் (யாத்.33:16). மேலும் “சகல ஜனங்களிலும் நீங்களே எனக்கு சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; (SPECIAL TREASURE) பூமியெல்லாம் என்னுடையது.
நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் (HOLY NA TION) இருப்பீர்கள்” என்று கர்த்தர் மோசே மூலமாக இஸ்ரவேல் மக்களுக்கு சொன்னார். ஆனாலும் அதை ஒரு நிபந்தனையின் பேரில் அப்படிச் சொன்னார். என்ன நிபந்தனை? நீங்கள் என் வாக்கை உள்ளபடியே கேட்டு என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளவேண்டும் என்பது தான் (யாத்.19:5,6) “நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்” (உபா.7:6) என்று வாசிக்கிறோம். இந்த தெரிந்து கொள்ளுதலுக்கு என்ன காரணம்? “சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள். கர்த்தர் உங்களில் அன்பு கூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்க வேண்டும் என்பதினாலும்; கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப் பண்ணி, அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார்” (வ.7,8) என்று அவர்களுடைய விடுதலைப் பயணத்தை வழிநடத்திய மோசே கூறுவதை வாசிக்கிறோம். அதே சமயத்தில் ஒரு கடுமையான எச்சரிக்கையையும் சேர்த்தே கொடுத்தார். நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலுள்ளோரின், தேவர்களை எக்காரணத்தைக் கொண்டும் சேவிக்கக் கூடாது என்றும் அவர்களோடு சம்பந்தம் கலவாமல் இருக்கவேண்டும் என்றும் எச்சரித்து விட்டு எச்சரிக்கையை மீறினால் “கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரம் அழிக்கும்” (உபா. 7:4) என்றார். மேலும் “அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக் கொள்ள வேண்டாம்” (உபா.18:9) என்று சொல்லி அந்த அருவருப்புகளைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார் (வ.10-12). பின்னர் “உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்” (THOU SHALT BE PERFECT WITH THE LORD THY GOD) (வ.13) என்ற கட்டளையைக் கொடுத்திருக்கி றார். சுருக்கமாகச் சொன்னால் “நான் பரிசுத்தர்; ஆகையால் நீங்களும் பரிசுத்தமாயிருப்பீர்களாக” (லேவி.11:45) என்று கூறுகிறார். அதுவே நம்மைக் குறித்தும் அவருடைய சித்தமாகயிருக்கிறது.
இயேசுவைக் குறித்த தீர்க்க தரிசனம்
இந்தப் பின்னணியத்தில்தான் மோசே “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதர ரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக’ (உபா.18:15) என்று இஸ்ரவேல் மக்களுக்கு மோசே சொன்னார். எபிரேய மூலமொழியில் “தீர்க்கதரிசி” என்ற சொல்லுக்கு “நபி” (NABI) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு “தெய்வீக ஏவுதலால் தேவனுடைய சித்தத்தை அவருடைய பிள்ளைகளுக்கு அறிவிப்பவர் என்றும் அவர்களது எதிர்காலத்தை முன்பாகவே வெளிப்படுத்துகிறவர்” (ONE WHO IS DIVINELY INSPIRED TO COMMUNICATE GOD’S WILL AND TO DISCLOSE THE FUTURE TO THEM) என்ற ஒரு முக்கியமான அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு “விடு விக்கிறவர்” அல்லது “இரட்சகர்” (Deliverer) என்ற மற்றுமொரு அர்த்தமும் சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணமாக “இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார்” (நியா.3:9) என்ற வசனத்திலிருந்து அதை விளங்கிக்கொள்ளுகிறோம். மேலும் கர்த்தர் மோசேயிடம் “உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்கள் சகோதர ரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்” (உபா.18:18,19) என்று சொல்லி மோசே சொன்னதைக் கர்த்தர் உறுதிப்படுத்தியதைக் காண்கிறோம். அப்போஸ்தலனாகிய பேதுரு தன்னுடைய முதல் பிரசங்கத்தில் மோசேயின் தீர்க்கதரிசனம் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையின் மூலம் (first advent of Jesus Christ) நிறைவேறிற்று என்பதை விவரித்துள்ளதை வாசிக்கிறோம். “மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்” (அப்.3:22,23) என்று சுட்டிக் காட்டி யுள்ளார்.
இயேசுவுக்குச் செவிகொடுங்கள்:
புதிய ஏற்பாடு கால தொடக்கத்தில் இயேசு கிறிஸ்து யோர்தான் நதியில் யோவான் ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்றுக் கரையேறினவுடனே “இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக் கிறேன் என்று உரைத்தது” (மத்.3:16,17) அது பிதாவாகிய தேவனுடைய சத்தம். “நான் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசகுமாரனை உங்களுக்காக அனுப்பித் தந்திருக்கிறேன். நீங்கள் அவரை நேசியுங்கள்” (you love Him) என்ற நற்செய்தியின் சத்தம்தான் அது. இதே செய்தியை மறுரூப மலையில் சற்றுவித்தியாசமாக நேரிடையாகச் சொல்லுகிறார். “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங் கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று” (மத்.17:5) ”இவருக்குச் செவிகொடுங்கள்” என்பதே முக்கிய செய்தி. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பிதாவாகிய தேவனைத் தொடர்ந்து தம் மக்களுக்கு எச்சரிக்கையைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். ஆனால் இஸ்ரவேல் மக்களோ செவிகொடுக்கத் தவறினார்கள். ஆகவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச்சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மத்.23:37-39). இயேசு கிறிஸ்துவின் அங்கலாய்ப்பையும் அவருடைய கோபத்தின் உக்கிரத்தையும் பாருங்கள். அவர் அதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. எருசலேமின் தேவாலயத்தைப் பார்த்துவிட்டு “இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப் போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மத்.24:2) அது நிறைவேறும் காலமும் வந்தது.
எருசலேம் முற்றுகை – யூக மக்களின் சிதறடிப்பு
முதல் முறையாக யூதர்கள் மீது ரோம அரசு போர் தொடங்கியது (The First Jewish Roman War). தீத்து ராயன் (Titus Caesar) கி.பி.70ம் ஆண்டு திபோரியஸ் ஜூலியஸ் அலெக்சண்டர் (Tiberlus Julius Alexander) என்ற படைத்தளபதியின் உதவியுடன் (Second in command) எருசலேமை முற்றுகை யிட்டான். அது வரை எருசலேம் யூதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. ரோம இராணுவத்தின் நான்கு லீஜியன் (Ligion) படையுடன் முற்றுகை தொடர்ந் தது. ஒரு லீஜியன் என்பது சுமார் 6000 பேர் அடங்கிய ஒரு படைப்பிரிவாகும். எருசலேமின் மேற்குப்பக்கமாக 3 லீஜியன் படைப்பிரிவினரும் மாசிடோனிக்கா xம்பிரிவு, (Macedonica x) புஃல்மினிட்டா XIIம் பிரிவு (Fulminita XII) அப்போலி னரிஸ் XVம் பிரிவு (Apollinaris XV) கிழக்கே ஒலிவமலைப் பக்கமாக ஒரு லீஜியன் படையினரும் (பிஃரட்டன் சிஸ் Xம் பிரிவு) (Fretensis X) முற்று கையைத் தொடர்ந்தனர். பஸ்கா பண்டிகைக்கு வந்தவர்களுக்கும் எருசலேமில் குடியிருப்போருக்கும் உணவு, தண்ணீர் விநியோகம் கிடைக்காத அளவுக்கு செய்து எருசலேம் படையினர் சரணடைய நிர்பந்தித்தனர். எனினும் அவர்கள் சரணடையவில்லை. யூத வரலாற்று ஆசிரியராகிய ஜோசபஸ் என்பவரை டைட்டஸ் சீசர் முற்றுகையின் கீழிருக்கும் எருசலேம் படையினரிடம் பேச்சு வார்த்தைக்கு வரும்படி (for Negotiation) தூது அனுப்பினான். தூதுவராகச் சென்ற ஜோசபசை அவர்கள் அம்பு எய்து காயப்படுத்திவிட்டனர். அதைத் தொடர்ந்து ரோமப்படை திடீர் தாக்குதலை ஆரம்பித்தது. இரு படை யினருக்கும் போர் தொடங்கிற்று. ரோமப் படையினர் எரிகிற தீப்பந்தங்களை சுவருக்கு உட்பக்கமாக எறிந்தனர். நெருப்பு எருசலேம் தேவாலயத்திற்குள் பரவிவிட்டது. டைட்டஸ் சீசரின் நோக்கம் தேவாலயத்தை அழிப்பது அல்ல. அதைக் கைப்பற்றி ரோம சக்கரவர்த்தியின் ஆலயமாகவும், அனைத்து தேவர்களுக்கான வழிபாட்டு ஸ்தலமாகவும் (Roman Pantheon) மாற்றத் திட்டமிட்டிருந்தான். ஆனால் எதிர்பாராத விதமாக எருசலேம் தேவாலயமும் பற்றி எரிந்தது. தேவாலயம் அழிந்தது. ரோமப் படையினர் அதைக் கொள்ளை யிடும்போது உருகிக் கிடந்த பொன் பாளங்களைக் கண்டனர். அவற்றை எல்லாம் இடிபாடுகளுக்கிடையே கிடந்ததை எடுத்தது மாத்திரமல்ல ஆலயச் சுவரின் ஒரு கல்லுக்கு மற்றுமொரு கல்லுக்கும் இடையே உள்ள இடுக்குகளில் பொற் பாளம் உருகி சென்றிருந்தபடியால் அதை எடுக்கும்பொருட்டு ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாத அளவுக்கு உடைத்து எடுத்து தேவாலயம் முற்றுமாக நாசமாயிற்று. ‘ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுபோகும்” என்று இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் சுமார் 40 ஆண்டுகளுக்குள் நிறைவேறி முடிந்தது. ரோம லீஜியன்கள் யூதப் படையை நசிக்கிப்போட்டது. மக்கள் தப்பிப்பிழைக்க சிதறடிக்கப்பட்டுப் போனார்கள். 70ம் ஆண்டு செப்.7ம் நாள் எருசலேம் ரோமப் படையின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எருசலேம் நகரைவிட்டு சிதறுண்டுபோன யூத மக்களை வேட்டை யாடுவதுபோல் தேடிப்பிடித்து அழிக்கத் தொடங்கினார்கள் (Hunt down the Jews that had fled the city) ஆண், பெண், முதியோர், இளைஞர், குழந்தைகள், ஆசாரியர்கள் யாரையும் ரோமப் படையினர் விட்டுவைக்க வில்லை. இரக்கத்திற்காக மன்றாடியோரையும் கூட மிகக் கொடூரமாக வெட்டிக் கொன்றனர்.
ஜோசபஸ் என்ற யூத வரலாற்று ஆசிரியரின் கணிப்பின்படி 11 லட்சம் யூத மக்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள். 97,000 பேர் சிறைக் கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். அநேக யூத மக்கள் மத்திய தரைக்கடல் வழியாக பல நாடுகளுக்குத் தப்பிச் சென்றனர்.
வெற்றிபெற்று ரோமுக்குத் திரும்பிய டைட்டஸ் அவனைப் பாராட்டும் வகையில் அளித்த மலர்மாலையை ஏற்க மறுத்துவிட்டான். ஏனெனில் “இந்த வெற்றி என்னுடைய சொந்த முயற்சியால் வரவில்லை. தேவனுடைய கோபாக்கினையின் கருவியாக நான் பயன்படுத்தப்பட்டேன்” என்று G&FIT GST GOT IT 6. (The victory did not come through my own efforts but that had been merely served as an instrument of God’s wrath) எனினும் அவனுடைய பெயராலுள்ள வெற்றி வளைவு (Victory Arch of Titus) இன்றும் ரோமில் உள்ளது. தேவாலயம் அழிக்கப்பட்டு ஆலயத்திலிருந்து கொள்ளை யிட்ட சில பொருட்களை ரோமப் படையினர் கொண்டு சென்றதை அந்த வெற்றி வளைவில் சித்தரித்திருப்பதைப் படத்தில் காணலாம்.
யூதர்களின் சர்வ நாசச் சம்பவங்களை சித்தரிக்கும் வகையில் அமெரிக்காவில் ஞாபகார்த்த அரும்காட்சியகம் ஒன்றுள்ளது. (Holocaust Memorial Museum) ஜெர்மனியில் சம உரிமையோடு கௌரவமாக வாழ்ந்த மக்கள் இரண்டாம் உலக யுத்தக் கால கட்டத்தில் தங்கள் உரிமைகளையும் இழந்து தீண்டத்தகாதவர்களாக (Outcasts) கருதப்பட்டது மட்டுமின்றி கொன்று அழிக்கப்பட்டார் கள். அந்த அரும்காட்சியகத்தின் ஒரு பகுதியைத்தான் மேலே உள்ள படத்தில் காண்கிறோம்.