லேவியராகமம்
- வேதாகமத்தின் மூன்றாவது புத்தகம்
லேவியராகமத்தின் அர்த்தம்
- ஆங்கிலத்தில் Leviticus என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பண்டைய கிரேக்க மொழியில் இஸ்ரவேலின் ஆசாரிய கோத்திரமாகிய “லேவி” கோத்திரத்தை குறிக்க பயன்பட்ட சொல்லான Aeuitikóv, Leuitikon என்னும் சொல்லிலிருந்து எடுக்கப்பட்டது.
- இதில் அதிகமான பகுதிகளில் ஆசாரியர்களுக்கான சட்டதிட்டங்கள் சொல்லப்படுவதால் இதை “ஆசாரியர்களுக்கான நியாயப்பிரமாணம்” என்று அழைப்பதுண்டு.
- இந்த சட்டங்களை ஆசாரியர்கள் கைக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆக்கியோன்
- இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே என்பது பாரம்பரிய நம்பிக்கை.
- தோரா – சட்டப் புத்தககத்தின் மூன்றாவது புத்தகம்
- ஐந்நூலில் மூன்றாவது புத்தகம்
தகவல்கள்
- 27 அதிகாரங்களை கொண்டது
- 659 வசனங்களை கொண்டது
- லேவியராகமத்தின் 27 அதிகாரங்களில் 56 தடவை இந்த சட்டங்கள் தேவனால் மோசேக்கு கொடுக்கப்பட்டதை சொல்லுகிறது.
- லேவியராகமத்தில் எந்த இடப்பெயர்வும் சொல்லப்படவில்லை. இஸ்ரவேலர் சீனாய் மலையருகே தங்கியிருந்தார்கள்.
- பரிசுத்தமுள்ள தேவனை பாவியானான மனிதன் எவ்வாறு அணுகமுடியும் என்பதே
- லேவியராகமத்தின் பிரதான கருப்பொருள்.
- லேவியராகமத்தில் பரிசுத்தம் என்னும் கருதுகோள் குறித்து 87 தடவைகள்
- குறிப்பிடப்படுகிறது.
வரலாற்றுக் காலவரிசை
- பஸ்கா – வருஷத்தின் 1-ம் மாதம் 14ம் நாளில் ஆசரிக்கப்பட்டது (யாத்.12:2)
- யாத்திரை ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் கழித்து சீனாய் மலையருகில் ஆசரிப்புக்கூடாரம் நிறுவப்பட்டது (யாத். 40:2,17)
- ஒரு மாதம் கழித்து சீனாய் மலையருகிலிருந்து வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பிற்கு செல்ல தேசம் ஆயத்தப்பட்டது (எண்.1:1)
- ஆகவே ஆசரிப்புக்கூடாரம் நிறுவப்பட்டதற்கும். சீனாய் மலையருகிலிருந்து ஜனங்கள் வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பிற்கு புறப்பட்டதற்கும் இடையேயான ஒரு மாத காலத்தில் லேவியராகமத்தின் காரியங்கள் மோசேக்கு கொடுக்கப்பட்டதாக கணிக்கலாம்.
லேவியராகமத்தின் உள்ளடக்கம்
- காணிக்கைகளும், பலிகளும் (1-7)
- ஆசாரியர்களின் அபிஷேகம் (8-10)
- சடங்குகளுக்கான சுத்தீகரிப்பு (11-15)
(பிரமியம், தோல் வியாதிகள். சரீரத்தில் உண்டாகும் கட்டிகளை தொடுதல், இறந்தவர்களின் உடலை தொடுதல், குறிப்பிட்ட உணவுகளை உண்ணல்)
- பாவநிவாரண நாள் – பாவநிவாரண பலி (16)
- இரத்தத்தால் உண்டாகும் சுத்தீகரிப்பு (17)
- தார்மீக பரிசுத்தம் (18-20)
(ஏழைகள் பராமரிப்பு, பாலியல் ஒழுக்கம், சமூக நீதி)
- ஆசாரியர்களுக்கான தகுதிகள் (21-22)
- ஏழு வருடாந்தரப் பண்டிகைகள் (23-25)
ஆசீர்வாத வாக்குத்தத்தங்களும், தண்டனைகளும் தேவனுக்கு நேர்ந்துகொண்ட மனிதரை. உடைமைகளை மீட்கும் விதம்
வருடாந்தரப் பண்டிகைகள் (லேவி.23-25)
1. பஸ்கா – லேவியராகமம் 23:4-8
- * எகிபதின் கடைசி வாதையில் சங்காரதூதன் இஸ்ரவேலரின் பிள்ளைகளை அழிக்காமல்
- அவர்களது வாசல்நிலைகளில் பூசப்பட்டிருந்த ஆட்டின் இரத்தத்தை கண்டு “கடந்து போனைைத” நினைவுகூரும் பண்டிகை.
- * இஸ்ரவேலர் ஈசோப்புக் கொத்தை எடுத்துக் கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து,
- * அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளித்தார்கள் (யாத் 12)
2. புளிப்பில்லா அப்பப்பண்டிகை – லேவியராகமம் 23:6
- பஸ்கா பண்டிகையின் ஆரம்பத்திற்கு பின் ஏழு நாட்கள் ஆசரிக்கப்படும் பண்டிகை.
- * இஸ்ரவேலர் எகிப்திலிருந்து தீவிரமாக வெளியேறியதால் அவர்களது அப்பங்களுக்கு
- புளிப்பூட்டிகளை இடுவதற்கு சமயமிருக்கவில்லை.
- * இந்த நாட்களில் தாங்கள் எகிப்தில் அனுபவித்த துன்பங்களையும், அதிலிருந்து தேவன்
- தங்களை விடுவித்ததையும் நினைவுகூர புளிப்புள்ள எதையும் புசியாதிருப்பார்கள்.
3. முதற்பலன்களின் பண்டிகை – லேவியராகமம் 23:10 .
- தேவன் தந்தருளின யாவற்றிற்காகவும் நன்றி செலுத்துகிற யூத அறுவடையின் மூன்று
- பண்டிகைகளில் முதற்பலன்களின் பண்டிகையும் ஒன்று. அன்று இஸ்ரவேலர் இந்த பண்டிகையை கொண்டாடியபோது இது ஒரு முக்கியமான நாளாக மாறப்போகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
4. வாரங்களின் பண்டிகை அல்லது பெந்தெகொஸ்தேலேவியராகமம் 23:16
- அறுவடையின் பண்டிகைகளில் இரண்டாவது பண்டிகை. முதற்பலன்களின் பண்டிகை முடிந்து சரியாக ஏழு வாரங்களின் முடிவில் இந்த பண்டிகை ஆசரிக்கப்படும். . அதனால் 50 நாட்களை குறிக்கும் சொல்லான பெந்தெகொஸ்தே என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறது.
- பாரம்பரியமாக தேவனுக்கு காணிக்கையாக தாளிய விளைச்சலின் முதற்பலனையும், இரண்டு
புளிப்புள்ள அப்பங்களையும் கொண்டுவருவார்கள்.
5. எக்காளப் பண்டிகை – லேவியராகமம் 23:24
- மிக நேர்த்தியான விதத்தில் தேவன் தமது ஜனங்களை ஓய்வெடுக்க கட்டளையிடுகிறார்.
- * இந்த நாளில் வழக்கமாக செய்யப்படும் வேலைகள் செய்ய நடைவிதிக்கப்பட்டது.
- * இந்த நாளில் ஆண்களும் பெண்களும் ஆகாரங்களை காணிக்கையாக செலுத்துவார்கள்
6. பாவநிவாரண நாள் – லேவியராகமம் அதி.16, 23:26-32
- * நிவாரணம் செய்வது என்றால் இழைத்த தவறுகளுக்காக பிராயச்சித்தம் செய்தல்
- இது யூதர்கள் தங்கள் இருதயங்களையும், எண்ணங்களையும், வாழ்க்கையையும் தேவனுக்கு முளபாக செம்மைப்படுத்த தங்களை தாழ்த்தி தேவனிடத்திற்கு மனந்திரும்பும் நாள்.
- * ஆசரிப்புகூடாரத்திற்குள் பிரவேசிக்கு முன்பாக ஆரோன் தண்ணீரில் முழுகி அவனுக்கான விஷேட உடையை அணிந்து (வச 4) பின்பு தனக்காவும் தனது வீட்டாருக்காகவும் பாவநிவாரண பலியாக ஒரு காளையை பலியிட வேண்டும் (வச 6,11)
- முதலாவது பலியாக்கப்பட்ட ஆட்டின் இரத்தம் உடன்படிக்கைபெட்டியின் மேல் தெளிக்கப்படும்.
- இது அடுத்த ஒரு வருடத்திற்கு தேவனுடைய கோபம் அவர்கள் மீது வராதபடி தணிக்கும்.
- இரண்டாவது ஆடு ஜனங்களின் பாவங்கள் தூரமாய் விலக்கப்பட்டு இனிமேல் நினைக்கப்படாமல் போகும் என்பதற்கான அடையாளமாக வனாந்திரத்திற்கு போகுமபடி விடப்படும்.
7. கூடாரப் பண்டிகை – லேவியராகமம் 23:34
- பாவநிவாரண் நாளை தொடாந்து கூடாரப் பண்டிகை ஆசரிக்கப்படும்.
- 40 அண்டுகள் வனாந்தரத்தில் பயணித்தபோது தேவன் தங்களை பராமரித்ததையும்,
- பாதுகாத்ததையும் நினைவுகளந்து ஆசரிக்கும் பண்டிகை.
- • தாங்கள் வனாந்திரத்தில் வாழ்ந்ததைபோல தற்காலிக கூடாரங்களை அமைத்து ஏழு நாட்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.
- • தேவனாகிய கர்த்தரும் அவர்களோடு வனாந்தரத்தில் ஆசரிப்புக்கூடாரத்தில் தங்கியிருந்தால், தேவன் தங்கள் மத்தியில் இருப்பதை நினைவுகூர்ந்து இந்த பண்டிகையை ஆசரிப்பார்கள்.
லேவியராகமத்தின் நோக்கம்
1.இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நினைவுகூர்வதற்காக.
- * காணிக்கைகளும் தேவன் அருளிய நன்மைகளையும், ஏற்ற வேளையில் அவர் காண்பித்த கிருபையையும் நினைவுகூர உதவியது.
- • பண்டிகைகளும் தாங்கள் யாரென்பதையும், தங்கள் நேவன் எவ்வளவு நல்லவர் என்பதையும் நினைவுகூர உதவியது.
2. செல்வாக்கு பெற்றிருக்ககூடிய தவறான எண்ணங்களை களைவதற்காக.
• இஸ்ரவேலர் 400 ஆண்டுகள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்ததால் அவர்களின் மனதில் செல்வாக்கு பெற்றிருக்ககூடிய எகிப்தியரின் பலதெய்வு, விக்கிரக வழிபாடுகளை களைய
3. அவர்களது தேவனும், இராஜாவுமானவரை அறிய அவரை பிரதிபலிக்க
• அவரது பரிசுத்தம், அவரது நீதி, அவரது இரக்கம்
4. சட்டங்களால் சமூகத்தில் ஒழுங்கு நிலவுவதற்காக
* சரியானதும், பொறுப்பள்ளதுமான வாழ்க்கை
- * உண்ணவேண்டிய உணவு, ஆடைகளுக்கான நூல். தலைமயிர் மற்றும் தாடி கத்தரிக்க
- வேண்டிய முறைகள் வரை சொல்லப்படுகிறது.
- 5. பரிசுத்த தேவனோடுள்ள உறவை தக்கவைப்பதற்காக, புதுப்பிப்பதற்காக
- * பாவமுள்ளவர்களானாலும், மீட்கப்பட்ட ஜனங்களாக தேவனோடு உள்ள உறவை இழந்துவிடாதிருக்க தேவையான அறிவுறுத்தல்களையும், சட்டங்களையும் வழங்கி
- அவர்களுக்கு வழிகாட்டுவதே லேவியராகமத்தின் நோக்கம்.
- • வேதாகமத்தின் வேறு எந்த புத்தகத்தை காட்டிலும் லேவியராகமத்தில்தான் “பரிசுத்தம்”
- சொல் அதிகமாக பயன்படுத்தபட்டுள்ளது.
- லேவியராகமத்தில் தனிமனித ஒழுக்கத்தின் மிகச்சிறிய காரியங்கள் முதல்கொண்டு
- சட்டதிட்டங்கள் சொல்லப்படுவதால் ஒருவேளை நமக்கு அது தாங்கமுடியாததும், விருப்பமற்றதுமான புத்தகமாக காணப்படலாம் ஆனால் இஸ்ரவேலருக்கோ “உயிர் காப்பான்” போன்றது. அது
- ஏனென்றால் தேவனுடைய சமூகத்தில் பிழைத்திருக்க என்ன செய்யவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்திருப்பது மிக நன்று.
- • லேவியராகமத்தில் ஆவிக்குரிய பரிசுத்தத்தின் அடையாளக்குறியாக சரீர குறையின்மை காண்பிக்கப்படுகிறது.
- லேவி 1:1 காத்தர் “ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து” மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி:
- * எண் 1:3 காத்தர் சீனாய் வளாந்தரத்திலிருக்கிற “ஆசரிப்புக் கூடாரத்திலே” மோசேயை நோக்கி:
6.அவர்கள் சுதந்தரிக்கபோகும் நிலத்திற்காக ஆயத்தப்படுதற்காக
- * அவர்களது நிலங்களும், கால்நடைகளும் ஆசீர்வதிக்கப்படுவதற்காக
- * மழைக்காக
- எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக
7. வரப்போகும் இரட்சகருக்கான ஒத்திகை பஸ்கா பண்டிகை:
- இயேசு நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி.
- அவரது மரணத்தினால்
- நம் மீது வரவேண்டிய நியாயத்தீர்ப்பை கடந்துபோக பண்ணினார்.
- *புளிப்பில்லா அப்பப்பண்டிகை இயேசுவின் பாவமில்லாத வாழ்க்கைக்கு அடையாளம். அவரே நமது பாவங்களுக்கான பரிபூரண பலி.
- • முதற்பலன்களின் பண்டிகை: இந்த “மூன்றாம் நாள்” ஆசரிப்பின் நாளிலேதான் இயேசு
- மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.
- * 1 கொரி 15:20-ல் பவுல் கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து நித்திரையடைந்தவர்களில்
- முதற்பலனானார் என்று குறிப்பிடுகிறார்.
- வாரங்களின் பண்டிகை /பெந்தெகொஸ்தே பண்டிகை சபை உருவான நாள் – பெந்தெகொஸ்தே நாள் 3000 ஆத்துமாக்கள் அறுவடை செய்யப்பட்ட நாள்.
- * இரண்ட புளிப்புள்ள அப்பங்களால் அடையாளப்படுத்தபட்ட யூதர்களுக்கும். யூதரல்லாத புறவினத்தாருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்ட நாள்,
- * எக்கானப் பண்டிகை: எக்காளத்தின் தொனி சபை எடுத்துக்கொள்ளப்படுதலை அல்லது இயேசு தனது மணவாட்டிக்காக திரும்ப வருவதை (1 கொரி 15:52) குறிக்கிறது.
- • பாவநிவாரணநாளின் பண்டிகை: காளையும், வெள்ளாடும் பாவநிவாரணபலிகள்.
- * போக்காடாக விடப்படும் வெள்ளாடு இஸ்ரவேல் ஜனங்களின் சகல பாவங்களையும் சுமந்ததாக வனாந்தரத்திற்கு போகவிடப்படும். இயேசுவும் நமது பாவங்களை தம்மீது சுமந்து நமக்காக பாளையத்திற்கு புறம்பே பலியானார்.
- • கூடாரங்களின் பண்டிகை இயேசு தற்காலிக கூடாரம்போன்ற மனித சரீரத்தில் இந்த
- பூமியில் வந்து வாழ்ந்து தம்மைதாமே பலியாக்கினார்.