ஒவ்வொரு விசுவாசிகளுக்காகவும் ஜெபிப்போம் PRAY FOR EVERY BELIEVERS…
1. ஒவ்வொரு விசுவாசிகளுக்காக ஜெபிப்போம் – எபேசியர் 3 :19
2. ஒவ்வொரு விசுவாசிகளும் ஆவிக்குரிய சகல நிறைவான வளர்ச்சியைப் பெற்றிட ஜெபிப்போம் – எபேசியர் 4 :11
3. விசுவாசிகள் ஒவ்வொருவரும் ஆரோக்கியம் உள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – சங்கீதம் 4 :8
4. விசுவாசிகள் பொருளாதாரத்தில் உயர்த்தப்பட ஜெபிப்போம் – சங்கீதம் 112 3
5. விசுவாசிகள் பரலோகத்தில் பலன்களை பெற்றுக் கொள்ள தகுதியுள்ளவர்களாய் மாறிட ஜெபிப்போம் – மத்தேயு 5 :12
6. சபைக்கு விசுவாசிகள் சரியான நேரத்திற்கு கடந்து வந்திட ஜெபிப்போம் லூக்கா 12:12
7. விசுவாசிகள் பிசாசுகளைத் துரத்தக்கூடியவர்களாக வல்லமையைப்
பெற்றிட ஜெபிப்போம் – மாற்கு 16 :17
8. தவறாமல் ஜெபிக்க வேண்டும் என்கிற வாஞ்சையும், உணர்வும், உண்மையும், தாகமும், பாரமும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட ஜெபிப்போம் யோபு 21:15
9. தேவபிள்ளைகள் (நாம்) ஒவ்வொருவரையும் தேவன் தாமே ஒவ்வொரு நாளும் போக்கிலும் வரத்திலும் பாதுகாத்து நடத்திட ஜெபிப்போம்
யாத்திராசுமம் 23:20
10. விசுவாசிகள் தீமைக்கு விலகி, தேவனுக்கு பிரியமாய் நடந்திட ஜெபிப்போம் 1 கொரிந்தியர் 6:12
11. விசுவாசிகளுக்குத் தேவையான வசனம் ஒவ்வொரு நாளும், வாரமும் எல்லோருக்கும் சென்றடைய ஜெபிப்போம் – மாற்கு 4 20
12. தேவப்பிள்ளைகள் (நாம்) ஆசீர்வாதத்தையல்ல, ஆசீர்வதிப்பவரைப் பற்றிக்
கொள்ள ஜெபிப்போம் – நீதிமொழிகள் 10 22
13.விசுவாசிகள் போதகருக்குக் கீழ்ப்படிந்திட ஜெபிப்போம் – 1 பேதுரு 2: 13
14. அபிஷேகம் நிறைந்த அநேக பாடல்கள், CD-க்கள் மற்றும் DVD-க்கள் வெளிவர ஜெபிப்போம் – சங்கீதம் 119: 54
15. ஆவிக்குரிய அநேக புத்தகங்கள் வெளிவர ஜெபிப்போம் – 2 கொரிந்தியர் 3:7
16. ஊழியத்தில் காணப்படும் வியாபாரங்கள் முற்றிலும் இல்லாமல் போக ஜெபிப்போம் – மத்தேயு 21: 13
17. உபத்திரவத்திலும், தேவப்பிள்ளைகள் (நாம்) சாட்சியாய், உறுதியாய் ஜெபிப்போம் – 2 தெசலோனிக்கேயர் 1 :4
18. தரமான உண்மையான கவிசேஷகர்கள் அநேகர் எழும்பிட ஜெபிப்போம் 2 தீமோத்தேயு 4: 2
19. நம் நண்பர்கள் இரட்சிப்படைய ஜெபிப்போம் – சங்கீதம் 55 :13
20. நமக்கு பக்கத்தில் உள்ளவர்களுக்காய் ஜெபிப்போம் – எரேமியா 31: 34
21. தேவனிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றவர்கள் அதனை ஆண்டவருக்காய் உபயோகப்படுத்திட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 4:34
22. இரட்சிக்கப்பட்டவர்கள் பின்மாறிப் போகாதபடி இருக்க ஜெபிப்போம் · நீதிமொழிகள் 26 :11
23. நமது பெற்றோருக்காய் (தாய், தந்தை) ஜெபிப்போம் – உபாகமம் 5 : 16
24. உங்களுக்குத் தெரிந்த 5 ஸ்தாபனங்களின் பெயரைச் சொல்லி, தேவன் அவற்றைக் கொண்டு இன்னும் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம் – ஏசாயா 43: 12
25. நம் நாட்களில் அநேக அற்புதங்கள், நம் பகுதிகளில், நம்மைக் கொண்டு நடைபெற ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 6 :8
26. தேவப்பிள்ளைகள் (நாம்) ஆதி அன்பிலே உறுதியாய் நிலைத்திருக்க ஜெபிப்போம் – வெளிப்படுத்தல் 2: 4
27. தேவப்பிள்ளைகள் (நாம்) மேட்டிமை இல்லாமல் காணப்பட ஜெபிப்போம் -2 கொரிந்தியர் 10 :5
28. தேவப்பிள்ளைகள் (நாம்) வேதத்தை அற்பமாய் நினைத்து, வாசிக்காத
நிலைகள் மாறிட ஜெபிப்போம் – 2 கொரிந்தியர் 10 :10
29. தேவப்பிள்ளைகள் தேவ ஆசீர்வாதங்களைப் பெறமுடியாமல் காணப்படுபவர்கள் தங்கள் குறைகளை அறிந்து நிவர்த்தி செய்திட
ஜெபிப்போம் – மத்தேயு 19 :21
30. ஆவிக்குரிய வரங்களை தேவப்பிள்ளைகள் (நாம்) பெற்றிட ஜெபிப்போம் 1கொரிந்தியர் 12: 7
31. விசுவாசிகளிடையே காணப்படும் எல்லா சோர்வுகள் மாறிட ஜெபிப்போம் – ஏசாயா 40:29
32. விசுவாசிகள் பின்மாறிப்போகாதபடி இருக்க ஜெபிப்போம் – எபிரேயர் 10 :38
33.சுயங்கள் முற்றிலும் அழிந்திட ஜெபிப்போம் – யோவான் 7 : 18
34. தேவப்பிள்ளைகள் (நாம்) ஒவ்வொருநாளும் அதிகாலையில் கிடைக்கும் புதுக் கிருபையைத் தேவனிடமிருந்து பெற்றுக் கொள்ள ஜெபிப்போம் – புலம்பல் 3:23
35. விசுவாசிகள் தேவ ஞானம் பெற்றிட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 2:7
36. விசுவாசிகள் தேவ அறிவு பெற்றிட ஜெபிப்போம் – மத்தேயு 22:29
37. தேவப்பிள்ளைகள் (நாம்) TV, பொழுதுபோக்கு மற்றும் சிற்றின்பங்களில் விழாதபடி, அதனை விரும்பாதபடி இருக்க ஜெபிப்போம் – தீத்து 2 :12
38. விசுவாசிகளிடையே தெய்வ பயம் ஒங்கிட ஜெபிப்போம் – யோபு 1 :8
39. தேவப்பிள்ளைகள் (நாம்) தேவனோடு அதிக நேரம் செலவிட ஜெபிப்போம் ஆதியாகமம் 5 :22
40. தேவப்பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் கொடுத்த தரிசனம் நிறைவேறிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 26 :16
41. வாலிபர்களை ஆதரிக்கவும், திறம்பட அவர்களை நடத்தக் கூடியவர்களை தேவன் தந்திட ஜெபிப்போம் – ஏசாயா 55:3,4
42. திரைப்படத் துறையில் உள்ளவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம் ஏசாயா 43:25
43. திரைப்படத் துறையின் மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் சுவிசேஷம் பலமாய் பரவிட ஜெபிப்போம் – வெளிப்படுத்தல் 11:9
44. வாலிபர்கள் தங்கள் வாலிபப் பிராயத்தில் உண்மை தெய்வத்தை அறிந்து, தேவ பயத்தோடு காணப்பட ஜெபிப்போம் – பிரசங்கி 12 :1
45. கர்த்தருக்காய் உண்மையாய்க் கொடுப்பவர்கள் எழும்பிட ஜெபிப்போம் 2 கொரிந்தியர் 8 :2
46. சிறுவர்கள் தங்கள் சிறுவயதிலேயே தேவனைத் தேடவும், தேவனுக்குக் கீழ்ப்படியவும் ஜெபிப்போம் – மாற்கு 10 :14
47. சிறுவர்கள் தங்கள் பெற்றோருக்கு கர்த்தருக்குள் கீழ்ப்படிந்திட ஜெபிப்போம் – எபேசியர் 6:1
48. பாவங்களுக்கு அடிமையான வாலிபர்கள் விடுதலையை கர்த்தரிடத்தில் பெற்றிட ஜெபிப்போம் – பிரசங்கி 12:7
49. வேதத்தை படிக்க வேண்டும் என்கின்ற வாஞ்சையுள்ளவர்களாய் தேவப்பிள்ளைகள் (நாம்) காணப்பட ஜெபிப்போம் – யோவான்
5:39
50.தேவப்பிள்ளைகள் தேவனை சங்கடப்படுத்தாதபடி தங்களைக் காத்திட ஜெபிப்போம் – ஏசாயா 43:24
51. எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாத சுவிசேஷகர்களை தேவன் சபைகளிலே எழுப்பும்படியாக ஜெபிப்போம் – நாகூம் 1:15
52. ஊழியத்தை ஊக்குவிக்கின்ற தேவப்பிள்ளைகளுக்காய் ஜெபிப்போம்
– 1 தீமோத்தேயு 3:13
53. ஊழியத்தை தாங்கும் தேவப்பிள்ளைகளுக்காய் ஜெபிப்போம்
மத்தேயு 10:42
54.இயேசு கிறிஸ்துவிற்காய் தன் ஜீவனையும் கொடுக்கத்தக்க தேவப் பிள்ளைகள் எழும்பிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 21:13
55.இயேசு கிறிஸ்துவிற்காய் தங்களை முழுமையாய் அர்ப்பணிப்பவர்கள் எழும்பிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 9:6
56. உலக ஜனங்களுக்கு முன்பாக தேவப்பிள்ளைகள் (நாம்) சாட்சியாகவும், முன்மாதிரியாகவும் காணப்பட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 6:12
57. தேவப்பிள்ளைகள் (நாம்) ஓய்வு நாளிலே தவறாமல் உண்மையாய் சபைக்கு கடந்து வந்திட ஜெபிப்போம் – ஏசாயா 58:13
58. அழிந்து போகின்ற ஆத்துமாக்களுக்காய் பாரத்தோடு ஜெபிப்பவர்கள் எழும்பிட ஜெபிப்போம் – சகரியா 12:10
59. சுவிசேஷம் பரவுவதற்கான கைப்பிரதிகள், CD-க்கள் தரமானதாக வெளிவர ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 16:5
60. தேவப்பிள்ளைகளின் (நம்) அனுபவ சாட்சிகளின் மூலம் பலர் கிறிஸ்துவின் பக்கம் திரும்பிட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 4:16
61. சத்தியத்தை கேட்டும் பின்மாறிப் போகிறவர்களுக்காய் ஜெபிப்போம் – மத்தேயு 13:21
62. ஜெபக்குழுக்கள் அநேகம் ஏற்படுத்தப்பட ஜெபிப்போம் – யாக்கோபு 5:16
63. நமது தனிப்பட்ட வாழ்க்கையில் முடியவே முடியாது என்று நினைக்கும் காரியங்களை சொல்லி விசுவாசித்து, ஜெபிப்போம் – மத்தேயு 19:20
64. உண்மையாய் கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் எழும்பிட ஜெபிப்போம் -சங்கீதம் 112:1
65.தேவப்பிள்ளைகள் (நாம்) தெய்வ பயத்தோடு தேவனுக்குக் கீழ்ப்படிந்திட ஜெபிப்போம் – எபேசியர் 5:21
66.தேவப்பிள்ளைகள் மற்ற புறஜாதி மக்களிடத்தில் சமாதானம் உள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – ரோமர் 12:18
67. ஞானஸ்நானம் எடுக்காதவர்கள் தங்கள் இரட்சிப்பை உணர்ந்து, தகுதியுள்ளவர்களாய் மாறிட ஜெபிப்போம் – தீத்து 3 :4
68. நெருக்கங்களில் ஆண்டவரின் பெலன் கிடைத்திட ஜெபிப்போம் -2 கொரிந்தியர் 12 :10
69. பெலவீனத்தில் ஆண்டவரின் பெலன் கிடைத்திட ஜெபிப்போம் 2 கொரிந்தியர் 12 :9
70. வியாதிகள் மறையத்தக்கதாக விசுவாசமுள்ள ஜெபங்கள் ஜெபிக்கக் கூடியவர்களாய் நாம் காணப்பட ஜெபிப்போம் – யாக்கோபு 5 :15
71. தேவப்பிள்ளைகள் (நாம்) எதைச் செய்தாலும் அதில் தேவ மகிமை காணப்பட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 10 :31
72. தேவப்பிள்ளைகள் (நாம்) கேட்கிற சத்தியத்தை அலட்சியப்படுத்தாமல், சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிந்திட ஜெபிப்போம் – 2 கொரிந்தியர் 9 :13
73. தேவப்பிள்ளைகள் (நாம்) பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாத
படி அவர்களுக்காய் ஜெபிக்கிறவர்களாய் மாறிட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 24 :1
74.தேவப்பிள்ளைகளுக்கு (நமக்கு) உண்டான தரிசனத்தின்படி நடக்க ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 26 :19
75.தேவப்பிள்ளைகள் (நாம்) கொடுமையுள்ளவர்கள்மேல் பொறாமை
கொள்ளாமல், அவர்களுக்காய் ஜெபிக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 3:31
76.தேவப்பிள்ளைகள் (நாம்) பாவிகள் மீது பொறாமை கொள்ளாமல், அவர்களுக்காய் ஜெபிக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம்
-நீதிமொழிகள் 23:17
77. தேவப்பிள்ளைகள் (நாம்) துன்மார்க்கர் மேல் பொறாமை கொள்ளாமல், அவர்களுக்காய் ஜெபிக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம்
– நீதிமொழிகள் 24:19
78. தேவப்பிள்ளைகள் (நாம்) அநியாயம் செய்கிறவர்கள் மேல் பொறாமை கொள்ளாமல், அவர்களுக்காய் ஜெபிக்கிறவர்களாய் காணப்பட
ஜெபிப்போம் – சங்கீதம் 37:1
79. தேவப்பிள்ளைகள் (நாம்) வீம்புக்காரர்கள் மேல் பொறாமை கொள்ளாமல், அவர்களுக்காய் ஜெபிக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் சங்கீதம் 73:3
80. வசனத்திற்கு, சத்தியத்திற்கு கீழ்ப்படியாமல் இடறுகிறவர்கள் திருந்திட ஜெபிப்போம் – 1 பேதுரு 2:8
81. கர்த்தருடைய வேதத்தை நேசிக்கத்தக்க உள்ளத்தை தேவப்பிள்ளைகள் (நாம்) பெற்றிட ஜெபிப்போம் – சங்கீதம் 119 :165
82. விசுவாசிகள் எல்லோரும் சந்தேகப்படாமல் விசுவாசிக்கிறவர்களாய் ஜெபிப்போம் – மாற்கு 11:23
83. ஞானஸ்நானம் எடுக்கக் கூடாதபடி காணப்படும் தடைகள் மாறிட ஜெபிப்போம் – கொலோசெயர் 2: 12
84. ஞானஸ்நானம் எடுத்த பின்பு பாவம் செய்யாதபடி தங்களைக் காத்துக்
கொள்ள ஜெபிப்போம் – ரோமர் 6: 4
85. விசுவாசிகளின் பிள்ளைகள் தீர்க்கத் தரிசனம் சொல்கிறவர்களாக உருவாகிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 2: 17
86. தேவப்பிள்ளைகள் (நாம்) தேவனை வருத்தப்படுத்துகின்ற காரியங்களை செய்யாதிருக்க ஜெபிப்போம் – ஏசாயா 43: 24
87. வாலிபர்கள் தங்கள் வயதில் வசனத்தைக் கற்றுக் கொள்ளவும், அதன்படி தன்னைக் காத்து நடக்கவும் ஜெபிப்போம் – சங்கீதம் 119: 9
88. தேவப்பிள்ளைகள் (நாம்) உபத்திரவத்திலும் உண்மையாய் பொறுமையாய் கர்த்தரோடு காணப்பட ஜெபிப்போம் – சங்கீதம் 119:71
89. தேவப்பிள்ளைகள் (நாம் பொருமையுள்ளவர்களாய் இருக்க ஜெபிப்போம் எபேசியர் 4: 2
90.தேவப்பிள்ளைகள் (நாம்) சாந்த குணமுள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – கொலோசெயர் 3: 12
91. தேவப்பிள்ளைகள் தேவனைத் தங்கள் முழு இருதயத்தோடு, உண்மையாய் துதித்திட ஜெபிப்போம் – சங்கீதம் 9: 1
92.தேவப்பிள்ளைகள் (நாம்) ஜீவனுள்ள மட்டும் நம் தேவன் ஒருவருக்கு மாத்திரமே துதி ஸ்தோத்திரங்களை செலுத்துகிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – சங்கீதம் 63: 4
93. தேவப்பிள்ளைகள் (நாம்) ஒருவருக்கொருவர் புத்தி சொல்ல வல்லவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – ரோமர் 15: 14
94.கர்த்தருடைய பரிசுத்த பிள்ளைகள் தேவனை மறுதலித்து வழி விலகாதிருக்க ஜெபிப்போம் – எபிரேயர் 10: 29
95. தேவப்பிள்ளைகள் (நாம்) தேவனுக்குப் பிரியமாய் காணப்பட ஜெபிப்போம் ரோமர் 8:8
96.தேவப்பிள்ளைகளிடையே (நம்மிடையே) மாம்ச சிந்தை முற்றிலும் அகன்று போக ஜெபிப்போம் – ரோமர் 8: 6
97. விசுவாசிகள் பொல்லாத ஆவிகளை எதிர்த்து நிற்கத்தக்க பெலன் பெற்றிட ஜெபிப்போம் – ரோமர் 8: 26
98. ஆண்டவருக்குரிய மகிமையைச் செலுத்தாததின் மூலம் ஏற்படும் சாபத்தை
பெறாதபடி தேவப்பிள்ளைகள் காணப்பட ஜெபிப்போம் – மல்கியா 2: 2
99.சிற்றின்பங்களில் பொழுதுபோக்கும் தேவபிள்ளைகள் மாறிட ஜெபிப்போம் – லூக்கா 8:14
100.தேவப்பிள்ளைகள் (நாம்) தேவனுடைய கற்பனைகளின்படி தங்கள் (நம்) வாழ்க்கையில் நடந்திட ஜெபிப்போம் – வெளிப்படுத்தல் 22: 14
101.தேவப்பிள்ளைகள் (நாம்) உலகத்திற்கும் மாம்சத்திற்கும் உட்பட்டவர்களாய் காணப்படாமலிருக்க ஜெபிப்போம் – ரோமர் 8: 9
102. தேவப்பிள்ளைகள் (நாம்) இச்சைகளில் விழாமல் தங்களை (நம்மை) காத்திட
ஜெபிப்போம் – மாற்கு 4 :18
103.தேவப்பிள்ளைகள் (நாம்) கறைபிழையற்றவர்களாய் காணப்பட ஜெபிப்போம் 2 பேதுரு 3 :14
104.தேவப்பிள்ளைகள் (நாம்) உபத்திரவத்திலும், உண்மையாய் தேவனுக்குக் கொடுக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – 2 கொரிந்தியர் 8:2
105.விசுவாசிகள் சோதனைகளினால் பின்மாறிப் போகாமல் அதைச் சகித்திட, தாங்கிட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 10 :13
106.தேவப்பிள்ளைகள் (நம்) நண்பர்கள், மனைவி, பணம், பிள்ளைகள், உறவினர்கள் நிமித்தம் இடறலடையாதபடி காணப்பட ஜெபிப்போம் – உபாகமம் 13:6
107. எவை எவையெல்லாம் தேவப்பிள்ளைகளாகிய நம் கண்களுக்குப் பிரியமாய் இருக்கிறதோ அவற்றை தேவனிடம் ஒப்புக் கொடுத்திட ஜெபிப்போம் – எசேக்கியேல் 24 :16
108.தேவப்பிள்ளைகள் (நம்) உலக ஐசுவரியத்தின் மேல் ஈடுபாடு அற்றவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – மாற்கு 4 : 18
109. நம்மைச் சபிப்பவர்களையும் நாம் ஆசீர்வதித்திட ஜெபிப்போம் – மத்தேயு 5 :44
110. நம்மை துன்பப்படுத்துகிறவர்களையும் நாம் ஆசீர்வதித்திட ஜெபிப்போம் ரோமர் 12:14
111. நமக்கு தீமை செய்தவர்களையும் நாம் ஆசீர்வதித்திட ஜெபிப்போம் 1 பேதுரு 3: 9
112. தேவப்பிள்ளைகள் (நம்) ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களையும் பெற்றிட ஜெபிப்போம் – எபேசியர் 1:3
113. சுவிசேஷம் பரவாத இடங்களில் சபைகள், விசுவாசிகள் எழும்பிட, எழுப்பப்பட ஜெபிப்போம் – ரோமர் 15 :21
114. விசுவாசிகள் ஆதியில் கொண்டிருந்த விசுவாசத்தில் நிலைத்திருக்க ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 5 :12
115. நம்மைப் பகைக்கிறவர்களுக்கும் நாம் நன்மை செய்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – மத்தேயு 5: 44
116. மற்றவர்கள் செய்யும் பாவத்திற்கு விசுவாசிகள் தங்களை விலக்கிக் காத்துக் கொள்ள ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 5 :22
117. தேவ வார்த்தையின் மூலம் ஊழியரை சத்துருவாக நினைப்பவர்கள் மாறிட ஜெபிப்போம் – கலாத்தியர் 4 :16
118. பெற்றோர்கள் பிள்ளைகளை கர்த்தருக்குள் நடத்திட ஜெபிப்போம் நீதிமொழிகள் 22:6
119. நம்முடைய எல்லா நண்பர்களின் பெயர்களை எழுதி, அவர்கள் பாவங்கள்
மன்னிக்கப்படவும் அவர்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம் – தானியேல் 2 :17
120. நாம் வேலை செய்யும் பகுதியில் உள்ளவர்களின் பெயர்களை எழுதி
அவர்கள் பாவங்கள் மன்னிப்படைந்து, இரட்சிக்கப்பட ஜெபிப்போம் – தானியேல் 9:19
121.தேவப்பிள்ளைகள் (நாம்) சுகபோகப் பிரியராயிராமல் தேவப் பிரியராய் காணப்பட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 3:4
122. சத்தியத்திற்கு எதிர்த்து நிற்பவர்கள் மாறிட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 3:8
123.தேவப்பிள்ளைகள் (நமக்கு) ஒவ்வொருவருக்கும் தேவன் கொடுத்த ஊழியத்தை அவர்கள் (நாம்) நிறைவேற்ற ஜெபிப்போம் -2 தீமோத்தேயு 4 :5
124.தேவப்பிள்ளைகள் (நாம்) எந்த நிலையிலும் தேவனை மறுதலிக்காதபடி காணப்பட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2 :12
125. விசுவாசிகள் இடறிப்போவதற்கு ஏதுவான தேவையற்ற வாக்குவாதம் செய்கிறவர்கள் மாறிட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2 :14
126. சீர்கேடான வீண் பேச்சிலிருந்து தேவப்பிள்ளைகள் (நாம்) காக்கப்பட
ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2 :16
127. விசுவாசக் குலைச்சல் ஏற்படுத்துகிறவர்கள் மாறிட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2:18
128.தேவப்பிள்ளைகள் (நாம்) யாவரும் அநியாயத்தை விட்டு விலகியிருக்க ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2 :19
129. தேவப்பிள்ளைகள் (நாம்) பண ஆசை இல்லாதவர்களாய் இருக்க ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 6:10
130.தேவப்பிள்ளைகள் (நாம்) யாருக்கும் பொல்லாங்குகள் செய்யாதிருக்க ஜெபிப்போம் – 2 கொரிந்தியர் 13 :7
131.தேவப்பிள்ளைகள் (நாம்) வெட்கப்படாமல் தங்களுடைய (நம்முடைய) அனுபவ சாட்சிகளைக் கூறிடவும், அதன்மூலம் அநேகர் தேவனிடத்திற்கு வந்திடவும் ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 26 :22
132.தேவப்பிள்ளைகள் (நாம்) செய்யும் ஒவ்வொரு வேலைகளிலும் தேவன் ஆசீர்வாதத்தை தந்திட ஜெபிப்போம் – உபாகமம் 28: 8
133. விசுவாசிகள் தேவனுடைய வார்த்தைக்கு, சத்தத்திற்கு செவி கொடுக்கத் தக்கவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – உபாகமம் 28 :2
134.தேவப்பிள்ளைகள் (நாம்) ஒவ்வொருவரும் வசனத்தினாலும், நாவினாலும், கிரியையினாலும், உண்மையாய் தேவனிடம் அன்பு கூறிட ஜெபிப்போம் -1 யோவான் 3:18
135.தேவப்பிள்ளைகள் (நாம்) தேவனை நோக்கி இரவு-பகலாய் கூப்பிடுகிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – லூக்கா 18:7
136. உபவாசத்தைக் குறித்ததான தவறான கருத்துகள் மாறிட ஜெபிப்போம் ரோமர் 14:6
137. தேவப்பிள்ளைகள் (நாம்) எந்த நிலையிலும் எல்லாவற்றிற்காகவும் ஸ்தோத்திரம் செய்கிற மனப்பான்மை பெற்றிட ஜெபிப்போம்
1 தெசலோனிக்கேயர் 5: 8
138. தேவப்பிள்ளைகள் (நாம்) தங்களுக்கென (நமக்கென) தேவன் கொடுத்த பரிசுத்த ஆவியை அவித்துப் போடாதிருக்க ஜெபிப்போம்
1 தெசலோனிக்கேயர் 5: 19
139. தேவப்பிள்ளைகள் (நாம்) எல்லோரும் பொல்லாங்குகள், தீமைகளிலிருந்து விலகியிருக்க ஜெபிப்போம் – 1 தெசலோனிக்கேயர் 5: 22
140. நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் தேவனுக்கு முன்பாக குற்றமற்றதாய்
காணப்பட ஜெபிப்போம் – 1 தெசலோனிக்கேயர் 5: 23
141.தேவப்பிள்ளைகள் (நாம்) மற்றவர்களுக்காவும் ஜெபிக்க ஆர்வமுள்ளவர் களாய் காணப்பட ஜெபிப்போம் – 1 சாமுவேல் 12: 23
142.தேவப்பிள்ளைகளோ (நாமோ) அல்லது மக்களோ பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசாமலிருக்க ஜெபிப்போம் – மத்தேயு 12: 32
143.விசுவாசிகளின் ஆயுசு நாட்கள் நீடித்துக் காணப்பட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 10: 27
144. சோதனைகளின் மூலம் பின்மாறிப் போகாதபடி தேவன் நம்மை காத்திட ஜெபிப்போம் – லூக்கா 8: 13
145.விசுவாசிகள் தேவனிடமிருந்து மாத்திரமே தேவ பலன்களைப் பெற்றிட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 8: 19
146. சபைகளில் பயனுள்ள ஆலோசனைகள் எழும்பவும், அதன்படி விசுவாசிகள் கேட்கவும் ஜெபிப்போம் – நீதிமொழிகள் 11: 14
147. தேவப்பிள்ளைகள் (நாம்) மற்ற மக்களுக்கு பணிவிடை செய்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 12: 9
148. தேவப்பிள்ளைகள் (நாம்) தேவ வசனத்தை அவமதிக்காதபடி பயபக்தியுடன் காணப்பட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 13: 3
149.ஒவ்வொரு நாளும் நம்முடைய செய்கைகளை தேவனுக்கு முன்பாக ஒப்புக் கொடுக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 16: 3
150. இரட்சிப்பைக் குறித்ததான தவறான கருத்துகள் மாறிட ஜெபிப்போம் -ரோமர் 10:9,10,13
151. நம்மை அநேகருக்கு சாட்சியாகவும் நம்மை சுற்றியுள்ளவர்கள் மத்தியில் சாட்சியாகவும், சமாதானமாகவும் தேவன் நம்மை நிறுத்திட ஜெபிப்போம் – நீதிமொழிகள் 16: 7
152.தேவப்பிள்ளைகள் (நாம்) ஒவ்வொருநாளும் தெய்வ பக்தியோடு காணப்பட ஜெபிப்போம் – தீத்து 2: 12
153.தேவப்பிள்ளைகள் (நாம்) தேவனுடைய வார்த்தையை அசட்டை செய்யாத படிக்கும், அதற்கு விரோதமாய் எழும்பாதபடிக்கும் இருக்க ஜெபிப்போம் – சங்கீதம் 107: 10
154.தேவப்பிள்ளைகள் (நாம்) வேத வசனங்களுக்குச் செவி கொடுக்கிறவர் களாய் எப்பொழுதும் காணப்பட ஜெபிப்போம் – யோவான் 8: 47
155.தேவனைப்பற்றி சாட்சி கூறுகிற ஒவ்வொருவருக்கும் தேவ கிருபை
ஒவ்வொரு நாளும் கிடைத்திட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 4: 33
156.தேவன் தேவப்பிள்ளைகளின் (நம்) மேல் விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிட ஜெபிப்போம் – சகரியா 12: 10
157. தேவப்பிள்ளைகள் (நாம்) ஒவ்வொருவரும் உலக இச்சைகளை வெறுக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – தீத்து 2: 12
158. ஆரம்பத்தில் நாம் கொண்டிருந்த நம்பிக்கையில் முடிவு பரியந்தம் நிலைத்திருக்க ஜெபிப்போம் – எபிரெயர் 3: 14
159. எல்லாவித சோதனைகளிலும் நாம் ஜெயிக்கவும், பெலன் பெற்றிடவும் ஜெபிப்போம் – எபிரெயர் 4: 15
160.தேவப்பிள்ளைகள் (நாம்) ஒவ்வொருவரும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறவர் களாய் காணப்பட ஜெபிப்போம் – எபிரெயர் 5: 9
161.தேவப்பிள்ளைகள் (நாம்) சுய பெருமையோடு ஜெபிக்காதிருக்க ஜெபிப்போம் – லூக்கா 18: 12 –
162. தேவப்பிள்ளைகள் (நாம்) ஒவ்வொரு நாளும் மறுரூபமாக்கப்பட ஜெபிப்போம் ரோமர் 12: 2
163.விசுவாசிகள் பரிசுத்த வாழ்க்கை வாழவும், ஒருவருக்காய் ஒருவர் ஜெபிக்கிறவர்கள் காணப்பட ஜெபிப்போம் – கொலோசெயர் 4: 12
164. கர்த்தருக்கு வீண் ஆராதனை செய்பவர்கள் திருந்திட ஜெபிப்போம் – மத்தேயு 15: 9
165.தேவப்பிள்ளைகள் (நாம்) மாயக்காரனைப் போல் இல்லாதிருக்க ஜெபிப்போம் – மத்தேயு 15: 7,8
166. தங்கள் பாரம்பரியத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் தேவப்பிள்ளைகள், அதிலிருந்து வெளியே வந்திட ஜெபிப்போம் – மத்தேயு 15: 6
167. தேவப்பிள்ளைகள் எல்லா வகையான விக்கிரக வரைபடங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஜெபிப்போம் – 1 யோவான் 5: 21
168.தேவப்பிள்ளைகள் (நாம்) யாவரும் பாவத்தில் விழுந்து, அதை ருசித்து விடாதபடி காணப்பட ஜெபிப்போம் – 1 யோவான் 5: 18
169.தேவப்பிள்ளைகள் (நாம்) உலகத்தையும் உலகத்தின் ஆசாபாசங்களுக்கும் விலகி அதனை மேற்கொள்ள ஜெபிப்போம் – 1 யோவான் 5: 19
170.தேவப்பிள்ளைகள் (நாம்) தேவனுடைய உபதேசத்தை மீறி நடக்காதபடி தங்களைக் (நம்மைக்) காத்துக் கொள்ள ஜெபிப்போம் – 2 யோவான் 1:9
171.தேவப்பிள்ளைகள் (நாம்) தேவசித்தம் என்ன என்பதை பகுத்தறிகிறவர் களாய் காணப்பட ஜெபிப்போம் – ரோமர் 12: 2
172. தேசத்திற்காய் வாஞ்சையாய் ஜெபிக்கத்தக்க உண்மையுள்ளவர்கள் எழும்ப ஜெபிப்போம் – எசேக்கியேல் 22 :30
173. இயேசுவைப் பற்றி தெரிந்த சுவிசேஷத்தை சொல்லாமல், தங்களுக்குள்ளேயே வைத்து இருப்பவர்கள் தங்கள் சாபத்திலிருந்து மாறிட
ஜெபிப்போம் – 2 யோவான் 1:7
174. தேவப்பிள்ளைகள் (நாம்) எளிமையுள்ளோராய் காணப்பட ஜெபிப்போம்
மத்தேயு 5: 3
175. தேவப்பிள்ளைகள் (நாம்) கர்த்தருக்காய் துயரப்படுகிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – மத்தேயு 5: 4
176. தேவப்பிள்ளைகள் (நாம்) சாந்த குணமுள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – மத்தேயு 5: 5
177. தேவப்பிள்ளைகள் (நாம்) கர்த்தருக்காய் பாடுகளையும், நிந்தைகளையும், அனுபவிப்பவர்களாய் மாறுவதற்காய் ஜெபிப்போம் – மத்தேயு 5: 11
178. தேவப்பிள்ளைகள் (நாம்) இரக்க குணம் உள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – மத்தேயு 5: 7
179. தேவப்பிள்ளைகள் (நாம்) இருதய சுத்தமுள்ளவர்களாய் இருந்து, தேவனை
தரிசிப்பதற்காய் ஜெபிப்போம் – மத்தேயு 5: 8
180.தேவப்பிள்ளைகள் (நாம்) சமாதானம் பண்ணுகிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – மத்தேயு 5 :9
181. நீதிக்காய், உண்மைக்காய், துன்பப்படுகிறவர்களாக விசுவாசிகள் மாறிட
ஜெபிப்போம் – மத்தேயு 5:10
182.தேவப்பிள்ளைகள் (நாம்) இவ்வுலகத்தில் அநேகருக்கு நன்மைகள் செய்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – மத்தேயு 5: 16
183.தேவப்பிள்ளைகள் (நாம்) தீமைக்கு எதிர்த்து நிற்காதபடி மனத்தாழ்மையோடு காணப்பட ஜெபிப்போம் – மத்தேயு 5: 39
184. வேதத்தில் காணப்படும் ஆழமான இரகசியங்களை, தேவ ஞானத்தை, வேத அறிவை தேவப்பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் தேவன் தந்திட ஜெபிப்போம் – மத்தேயு 11: 25
185. இந்த உலகத்திற்கு ஏற்றபடி தேவப்பிள்ளைகள் (நாம்) காணப்படாமல்,
தெளிந்தவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – ரோமர் 12: 2
186.தேவப்பிள்ளைகளுக்கு (நமக்கு) தேவன் கொடுத்துள்ள அதிகாரங்களை தேவனுக்காய் பயன்படுத்திட ஜெபிப்போம் – மத்தேயு 10: 1
187. தேவனுக்காய் தன் ஜீவனை கொடுக்கத்தக்கவர்கள் எழும்பிட ஜெபிப்போம் மத்தேயு 10:39
188.தேவப்பிள்ளைகள் (நாம்) வேதத்திலிருக்கும் வசனங்களை தங்கள் (நம்) இஷ்டத்திற்கு உபயோகப்படுத்தாமல், உண்மையாய் இருக்கிறபடி பேசிட, போதித்திட ஜெபிப்போம் – வெளிப்படுத்தல் 22 :18,19
189.தேவப்பிள்ளைகள் (நாம்) தேவனிடம் இரக்கத்தை, ஒவ்வொரு நாளும் பெற்றுக் கொள்ள ஜெபிப்போம் – உபாகமம் 5 :10
190.தேவப்பிள்ளைகள் (நாம்) தேவனுடைய வார்த்தையை, நாமத்தை வீணாக உபயோகப்படுத்தாமல் காணப்பட ஜெபிப்போம் – உபாகமம் 5: 11
191.தேவப்பிள்ளைகள் (நாம்) யாவரும் தவறாமல் தசமபாகம் தந்திட ஜெபிப்போம் உபாகமம் 14:22,23
192.தேவப்பிள்ளைகள் (நாம்) ஞாயிறு பரிசுத்த ஆராதனையை அலட்சியம் செய்யாதபடி, தவறாமல் கலந்து கொண்டு தேவனை ஆராதிக்க ஜெபிப்போம் – உபாகமம் 5: 14
193.தேவப்பிள்ளைகளிடையே (நம்மிடையே) காணப்படும் எல்லா வகையான மலட்டுத் தன்மைகள் மாறிட ஜெபிப்போம் – உபாகமம் 7 :14
194.தேவப்பிள்ளைகளிடையே (நம்மிடையே) காணப்படும் சகல நோய்களையும், தேவன் சுகப்படுத்திட ஜெபிப்போம் – உபாகமம் 7:15
195.தேவப்பிள்ளைகள் (நாம்) சுகமாய் வாழ்வதற்கு என்றும் நன்றியுள்ளவர்களாயும், நன்றி சொல்கிறவர்களாயும் காணப்பட
ஜெபிப்போம் – உபாகமம் 8 :10
196.தேவப்பிள்ளைகள் (நாம்) ஒருபோதும் சுகபோக வாழ்வில் மேட்டிமையடைந்து கர்த்தரை அலட்சியம் பண்ணாமல் காணப்பட ஜெபிப்போம் – உபாகமம் 8 : 12,13
197. தேவப்பிள்ளைகள் (நாம்) தேவனை மறந்து, ஒருக்காலும் மற்ற விக்கிரகங்களை வணங்காதபடி தங்களை (நம்மை) காத்துக் கொள்ள ஜெபிப்போம் – உபாகமம் 8 :19
198.தேவப்பிள்ளைகள் (நாம்) தேவனுடைய சத்தத்திற்கு என்றும், எந்த நிலையிலும் கீழ்ப்படிந்திட ஜெபிப்போம் – உபாகமம் 8 :20
199.தேவப்பிள்ளைகள் (நாம்) தங்கள் (நம்முடைய) பிள்ளைகளுக்கு வசனத்தைப் பற்றியும், தேவனைப் பற்றியும், ஒவ்வொரு நாளும் போதித்து வழிநடத்திட ஜெபிப்போம் – உபாகமம் 11 :20
200.தேவப்பிள்ளைகள் (நாம்) ஒருபோதும் கள்ளத் தீர்க்கதரிசிகள் மேல் நம்பிக்கை வைக்காமல், அதிலிருந்து தங்களை (நம்மை) விலக்கி காத்து கொள்ள ஜெபிப்போம் – உபாகமம் 13 :1,2,3
201.தேவப்பிள்ளைகள் (நாம்) ஏழை எளிய மக்களுக்கு தான தருமங்கள் செய்திட ஜெபிப்போம் – உபாகமம் 15 :11
202.தேவப்பிள்ளைகள் (நாம்) ஆசீர்வாதத்தினாலும், சந்தோஷத்தினாலும், தங்கள் (நம்) தேவனை மறந்துவிடாமலிருக்க ஜெபிப்போம் – உபாகமம் 28:47
203.தேவப்பிள்ளைகள் (நாம்) அரசாங்க வரிகளை சரியாய் கடைப்பிடித்து, செலுத்திட ஜெபிப்போம் – லூக்கா 20:25
204.ஊழிய அழைப்பைப் பெற்ற தேவப்பிள்ளைகள் தாமதிக்காமல் ஊழியத்திற்குக் கடந்து வந்திட ஜெபிப்போம் – வெளிப்படுத்தல் 3: 8
205. பாவத்திலே வாழ்கிற மக்களுக்கு தேவனைப்பற்றி அறிவிக்க உண்மையான தேவப்பிள்ளைகள் எழும்பிட ஜெபிப்போம் – மத்தேயு 9: 37
206. தேவப்பிள்ளைகள் (நாம்) தேவனுடைய ராஜ்யத்திற்கு தகுதியுள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – லூக்கா 9: 62
207. இந்நாட்களில் தேவனுடைய வார்த்தையை சுமந்து செல்பவர்கள் அநேகர் உருவாகிடவும், ஏற்படுத்தப்படவும் ஜெபிப்போம் – ஏசாயா 52: 7
208. அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் போதிக்கத்தக்க வேத அறிவை தேவன் தேவப்பிள்ளைகளுக்கு (நமக்கு) கொடுத்திட ஜெபிப்போம் அப்போஸ்தலர் 9:15
209. தேவனுக்காக, தேவனுடைய வேளைக்காக பாடுபடக் கூடியவர்கள் எழும்பிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 9: 16
210.ஒவ்வொரு தேவ பிள்ளைகளும் தாமதிக்காமல் தேவனுடைய வார்த்தையை பிரசங்கிக்கிறவர்களாய் மாறிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 9: 20
211. தேவபிள்ளைகள் எப்பொழுதும் ஜெபிக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 10:2
212. தேவபிள்ளைகள் (நாம்) விக்கிரகங்களுக்கு, பிசாசின் வல்லமைகளுக்கு பயப்படாத வகையில், வசனத்தில் வளர்ச்சி பெற்றிட ஜெபிப்போம் 2 இராஜாக்கள் 17: 37
213.தேவப்பிள்ளைகள் (நாம்) செய்கிற ஒவ்வொரு வேலைகளிலும், காரியங்களிலும் தேவன் அநுகூலமாய் மாற்றிட ஜெபிப்போம் -2 இராஜாக்கள் 18: 7
214. தேவன் தங்களுக்கு கொடுத்த தாலந்துகளை, வரங்களை தேவனுக்கும், மக்களுக்கும் பயன்படுத்தாமல் புதைத்து வைக்கிற நிலையிலிருந்து மாறிட ஜெபிப்போம் – சகரியா 11: 16
215.தேவப்பிள்ளைகள் (நாம்) நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 13: 48
216.தேவப்பிள்ளைகள் (நாம்) உலக சிநேகிதராய் காணப்படாதபடி இருக்க ஜெபிப்போம் – யாக்கோபு 4: 4
217. தேவப்பிள்ளைகள் தாங்கள் (நாம்) பெற்ற அபிஷேகத்தை எந்நாளும் பயன்படுத்திட ஜெபிப்போம் – ஏசாயா 59: 21
218. தேவப்பிள்ளைகள் (நாம்) எல்லா காலத்திலும், எந்த நேரத்திலும் உண்மையே
பேச ஜெபிப்போம் – சகரியா 8: 16
219. தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட (நாம்) தேவபிள்ளைகள் தங்கள் (நம்) வாழ்வில் என்றென்றும் நிலைத்திட ஜெபிப்போம் – நாகூம் 2: 1
220. தேவப்பிள்ளைகள் (நாம்) உலக ஆசீர்வாதங்களை எதிர்பார்க்காமல் தேவன்
பேரில் பற்றுதலாய் காணப்பட ஜெபிப்போம் – ஆபகூக் 3: 17,18
221. விசுவாசிகள் சபையில் கேட்கும் சத்தியங்களின்படி தங்களை ஒப்புக்
கொடுக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – மத்தேயு 13: 19
222.தேவப்பிள்ளைகள் (நாம்) தங்கள் (நம்) நற்கிரியைகளினாலே ஐசுவரியம்
அடைந்திட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 6: 18
223. பணம், செல்வம், சுகம், ஆசீர்வாதத்திற்காக தேவனைப் பின்பற்றுகிற நிலைகள் மாறிட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 6:5
224.வேற்றுமையான உபதேசங்களை கொண்டு வருகிறவர்களிடமிருந்து தேவபிள்ளைகள் தங்களை காத்திட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 6: 3,4
225. உலக வேலை செய்கிற தேவபிள்ளைகள் உண்மையாய் சரியான முறையில் செய்திட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 6: 2
226. தேவப்பிள்ளைகள் (நாம்) தேவபக்தியிலிருந்து விழாதபடி தங்களை காத்துக் கொள்ள ஜெபிப்போம். 1 தீமோத்தேயு 6: 9
227. சபையில் காணப்படும், எல்லா ஊழியங்களுக்கும் உண்மையாய் கொடுக்க கூடியவர்களை தேவன் எழுப்பிட ஜெபிப்போம் – யாத்திராகமம் 35: 21,22
228. தேவப்பிள்ளைகள் (நாம்) ஜெபத்துக்கு பதில் கிடைக்காத நிலைகள் மாறிட ஜெபிப்போம் – மல்கியா 2: 13
229.தேவ பிள்ளைகள் (நாம்) இடங்கொள்ளாமற் போகுமட்டும் ஆசீர்வாதங்களை பெற்றிட ஜெபிப்போம் – மல்கியா 3: 10
230. நாம் புறஜாதி மக்களிடத்தில் நற்சாட்சி பெறுகிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – மல்கியா 3: 12
231. தேவபிள்ளைகள் (நாம்) தேவனைப்பற்றியே எப்பொழுதும் பேசுகிறவர் களாகவும், தியானிக்கிறவர்களாகவும் காணப்பட ஜெபிப்போம் – மல்கியா 3: 16
232. தேவனுக்காய் உண்மையாய் ஊழியம் செய்கிறவர்களை தேவன் பிரித்து எடுத்து, வல்லமையாய் பயன்படுத்திட ஜெபிப்போம் – மல்கியா 3: 18
233.தேவப்பிள்ளைகள் (நாம்) தேவனுக்கு பயப்படும் பயத்துடன் காணப்பட ஜெபிப்போம் – மல்கியா 4: 2
234.தேவப்பிள்ளைகள் (நாம்) கர்த்தருக்கு காணிக்கையை பயபக்தியுடன் செலுத்திட ஜெபிப்போம் – மல்கியா 1: 8,14
235. ஆராதனை வேளையில் ஆண்டவருக்கு செலுத்த வேண்டிய கனத்தை, துதியை, மகிமையை செலுத்தாமல் காணப்படுகிறவர்கள் மாறிட ஜெபிப்போம் – மல்கியா 2: 2
236. தேவபிள்ளைகள் சத்தியத்தை விட்டு விலகிவிடாதபடி, சத்தியத்தை எல்லோரும் பகிர்ந்தளிப்பவர்களாகக் காணப்பட ஜெபிப்போம் – யாக்கோபு 5: 19
237. தேவப்பிள்ளைகள் (நாம்) ஒவ்வொருவரும் ஆண்டவரிடம் தயவு இரக்கத்தைப் பெற்றிட ஜெபிப்போம் – யூதா 1:21
238. விசுவாசிகளிடையேக் காணப்படும் எல்லா அக்கிரம சிந்தைகள் மாறிட ஜெபிப்போம் – சங்கீதம் 66: 18
239. இக்கடைசி காலத்தில் உலக வேலையைவிட, தேவனுடைய வேலையைச் செய்வதற்கு அநேகர் தங்கள் வாழ்வை ஆண்டவருக்காய் ஒப்புக் கொடுத்து வந்திட, வாழ்ந்திட ஜெபிப்போம் – ரோமர் 10: 14,15
240. தேவனுடைய ஊழியத்திற்கு சரியான முறையில் தேவபிள்ளைகள் அழைக்கப்பட ஜெபிப்போம் – எபிரேயர் 5: 4
241. தேவபிள்ளைகள் (நம்முடைய) ஊழியங்களிலே கனத்தை பலனை பெற்றிட ஜெபிப்போம் – யோவான் 12: 26
242. தேவபிள்ளைகள் (நாம்) மனத்தாழ்மை உடையவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – பிலிப்பியர் 2: 3
243.தேவபிள்ளைகள் (நாம்) மரணத்திற்கு செல்லும் அநேகரை சத்தியத்திற்கு நேராகத் திருப்பிட ஜெபிப்போம் – யாக்கோபு 5: 20
244.இயேசுவைப் போல் எல்லா வகையிலும் கீழ்ப்படிதலை எல்லோரும் கற்றிட ஜெபிப்போம் – பிலிப்பியர் 2: 8
245.தேவபிள்ளைகள் (நாம்) உலகத்து ஜனங்கள் மத்தியில் குற்றமற்றவர் களாகவும், மாசற்றவர்களாகவும் காணப்பட ஜெபிப்போம் -பிலிப்பியர் 2: 15
246. கிறிஸ்துவிற்காய் தேவபிள்ளைகள் (நாம்) இலாபத்தையும், ஆதாயத்தையும் நஷ்டமென்று நினைக்கக்கூடியவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – பிலிப்பியர் 3: 7,11
247. நான் என்ற மேட்டிமையிலிருந்து தங்களை தாழ்த்திட ஜெபிப்போம் – பிலிப்பியர் 3:12
248. தேவபிள்ளைகள் (நாம்) ஒழுக்கம் நிறைந்தவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – பிலிப்பியர் 4: 8
249. தேவபிள்ளைகளின் (நம்முடைய) வாழ்க்கையில் காணப்படுகிற எல்லா குறைவுகளையும் தேவன் நிறைவாய் மாற்றிட ஜெபிப்போம் – பிலிப்பியர் 4: 19
250. சோர்ந்து போனவர்களுக்கு சமாதானம் கூறுகிறவர்களாக தேவன் நம்மை உருவாக்கிட ஜெபிப்போம் – ஏசாயா 57:19
251. தேவப்பிள்ளைகளோ, மற்ற உலகத்து ஜனங்களோ பரிசுத்த ஆவியானவரை விசனப்படுத்தாமல் காணப்பட ஜெபிப்போம் – ஏசாயா 63: 10
252. கர்த்தருடைய வார்த்தையின் மேல் தேவப்பிள்ளைகள் (நாம்) விருப்பம்
உள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – எரேமியா 6: 10
253. கர்த்தருக்காய் உபத்திரவப்படுகிறவர்கள், இளைப்பாறுதல் பெற்றிட ஜெபிப்போம் – 2 தெசலோனிக்கேயர் 1:6
254. ஆண்டவரின் உன்னத அழைப்பை பெற ஒவ்வொருவரும் தகுதி யுள்ளவர்களாய் மாறிட ஜெபிப்போம் – 2 தெசலோனிக்கேயர் 1: 12
255. தேவனுடைய பிள்ளைகள் (நாம்) அநியாயத்தையும், அநியாயம் செய்கிறவர்களிடமிருந்தும் விலகி தங்களைக் (நம்மை) காத்துக் கொள்ள ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2: 19
256. ஆண்டவர் நமக்கு கொடுத்த இந்த இரட்சிப்பை நாம் இறுதி வரை காத்துக் கொள்ள ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 1: 14
257. தேவ பிள்ளைகளுக்கு (நமக்கு) ஏற்ற ஞானத்தையும் புத்தியையும், தேவ அறிவையும் தேவன் தந்திட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2: 7
258. தேவ பிள்ளைகள் கள்ள போதகர்களிடமிருந்து, தங்களை தேவனின் உதவியுடன் காத்திட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2: 16
259. இக்கடைசி நாட்களில் தேவபக்தியின் வேஷத்தை தரித்து வருகிறவர் களிடமிருந்து தேவபிள்ளைகள் தங்களை காத்திட ஜெபிப்போம்
2 தீமோத்தேயு 3: 5
260. தேவபிள்ளைகள் கிறிஸ்துவுக்குள் துன்பப்படவும், தங்களை முழுமையாய் தேவனுக்கு அர்ப்ணிப்பவர்களாக காணப்பட ஜெபிப்போம் 2 தீமோத்தேயு 3: 12
261.சிறுபிள்ளைகள் தங்கள் சிறுவயதிலிருந்தே வேத வசனங்கள் கற்றிட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 3: 15
262. தேவபிள்ளைகளிடையே ஞானஸ்நானத்தைப் பற்றி உள்ள தவறான
கருத்துக்கள், எண்ணங்கள் மாறிட ஜெபிப்போம் – 1 பேதுரு 3: 21
263. கற்றுக்கொள்ளப்பட்ட வேதவசனங்களின்படி இறுதிவரை அதில் நிலைத்து நிற்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 3: 14
264. சபைகளில் தேவபிள்ளைகள் சுவிசேஷகர்களாய் மாறி தங்களுக்கு தெரிந்த சத்தியங்களை அநேகருக்கு தெரிவிக்கிறவர்களாய் மாறிட ஜெபிப்போம் 2 தீமோத்தேயு 4: 5
265. தேவபிள்ளைகள் (நாம்) தேவனுடைய ராஜ்ஜியத்தை அடையும் வரையில், வரும் எல்லா தீமையிலிருந்தும் தேவன் அவர்களை (நம்மை) காப்பாற்ற, ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 4: 18
266. தேவபிள்ளைகளுடைய (நம்முடைய) வாழ்க்கையில் காணப்படும். எல்லா குறைவுகள், கறைகள், பாவங்கள், சாபங்கள் மாறி யாரும் குற்றம் சாட்டிடாதபடி காணப்பட ஜெபிப்போம் – தீத்து 2: 8
267. தேவபிள்ளைகள் (நாம்) மக்களின் முன்பு அற்பமாய் காணப்படாதபடி தங்களைக் (நம்மை) காத்துக் கொள்ள ஜெபிப்போம் – தீத்து 2:15
268. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற முடியாமல் காணப்படுகிற எல்லாத் தடைகளையும் தேவன் மாற்றிட ஜெபிப்போம்
-அப்போஸ்தலர் 2: 7
269. ஞானஸ்நானம் எடுத்தும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் கிடைக்காதவர்கள் அபிஷேகத்தை பெற்றிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 1: 4
270. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றவர்கள், ஞானஸ்நானம் பெறாமல்
இருப்போர், ஞானஸ்நானம் பெற்றிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 10: 47
271. இக்கடைசி காலத்தின் நிகழ்வுகளுக்காய் பாரத்தோடு ஜெபிக்கிறவர்கள் எழும்பிட ஜெபிப்போம் – 1 பேதுரு 4: 7
272. தேவபிள்ளைகள் (நாம்) தங்கள் (நம்முடைய) வாழ்க்கையில் வசனத்தின்படி
நற்கிரியைகள் பல செய்திட ஜெபிப்போம் – தீத்து 3: 8
273. தேவபிள்ளைகளிடையே ஆவியின் கனிகள் இல்லாத நிலைகள் மாறிட ஜெபிப்போம் – தீத்து 3: 14
274. தேவபிள்ளைகள் இரட்சிப்பை அற்பமாய் நினைக்கிற நிலைகள் மாறிட ஜெபிப்போம் – எபிரேயர் 2: 4
275. தேவபிள்ளைகள் (நாம்) விசுவாசத்தில் உறுதியாய் காணப்பட ஜெபிப்போம் -கொலோசெயர் 2: 7
276. தேவபிள்ளைகள் தாங்கள் (நாம்) பேசும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் கவனமாய் பேசிட ஜெபிப்போம் – மத்தேயு 12: 37
277. தேவபிள்ளைகள் (நாம்) எல்லோரையும் எல்லா விதங்களில் மன்னிக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – எபேசியர் 4:32
278.தேவபிள்ளைகள் தாங்கள் (நாம்) பெற்ற அபிஷேகத்தின் மூலம் ஆவியானவரை துக்கப்படுத்தாமல் தங்களை (நம்மை) காத்துக் கொள்ள ஜெபிப்போம் – எபேசியர் 4: 30
279. தேவபிள்ளைகள் (நாம்) கோபங் கொள்ளாதபடிக்கும், அதன் மூலம்
பாவங்கள் செய்யாதபடிக்கு காணப்பட ஜெபிப்போம் – எபேசியர் 4: 26
280.தேவபிள்ளைகள் (நாம்) தங்கள் (நம்) வாழ்க்கையில் கிறிஸ்துவை பிரகாசிக்கச் செய்ய ஜெபிப்போம் – எபேசியர் 5: 14
281. தேவபிள்ளைகள் (நாம்) தங்கள் (நம்) சகோதர சகோதரிகளிடம் காணப்படும் எல்லா வேற்றுமைகளும் மாறி ஒற்றுமையுடன் காணப்பட ஜெபிப்போம் – மத்தேயு 5: 23,24
282. தேவபிள்ளைகள் (நாம்) யாரும் உலக மக்களை சபிக்கிறவர்களாய் காணப்படாதிருக்க ஜெபிப்போம் – யாக்கோபு 3: 9
283. கர்த்தருடைய அழைப்பை, தரிசனத்தைப் பெற்றவர்கள் அதை நிறைவேற்றிட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 16: 10
284.எந்த நேரத்திலும், எந்த வேளைகளிலும், தேவபிள்ளைகள் தேவனைத் துதிக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 16: 25
285. தேவபிள்ளைகள் (நாம்) கர்த்தருக்கென பக்தி வைராக்கியம் கொண்டவர்களாய் காணப்பட ஜெபிப்போம் -2 இராஜாக்கள் 10: 16
286. தேவன் நமக்கு கட்டளையிட்ட யாவையும் அநேகரை கைக்கொள்ள வைக்கிறவர்களாய் நாம் மாறிட, மாற்றிட ஜெபிப்போம் – மத்தேயு 28 :20
287. தேவபிள்ளைகள் (நம்முடைய விசுவாசத்தை தேவன் வர்த்திக்கப்பண்ணிட ஜெபிப்போம் – லூக்கா 17 :5
288. தேவபிள்ளைகள் (நாம்) எப்பொழுதும் கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக நடக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – கொலோசெயர் 2 :7
289. தேவபிள்ளைகள் விசுவாசத்திலே உறுதியாய் காணப்பட ஜெபிப்போம் -கொலோசெயர் 2 :6
290. தேவன் நம் நிமித்தம் சந்தோஷப்படுகின்ற நிலை வந்திட ஜெபிப்போம் -கொலோசெயர் 2 :5
291. தேவபிள்ளைகளின் விசுவாசம் ஒழிந்து போகாதபடி இருக்க ஜெபிப்போம் – லூக்கா 22:32
292 தேவபிள்ளைகள் (நாம்) ஜெபிக்கையில் தேவசித்தத்தை அறிந்து, அவரின் சித்தப்படி செய்ய அனுமதித்து, ஜெபிக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – லூக்கா 22 :42
293. தேவபிள்ளைகள் அதிகாலையிலே சத்தியத்தை கேட்கவும், ஆராதிக்கவும் ஆர்வமாய் கடந்து வர ஜெபிப்போம் – லூக்கா 21:38
294.வசனத்தை கேட்பவர்கள் அதன்படி கைக்கொள்ள ஜெபிப்போம் -1 யோவான் 2:5
295. தேவபிள்ளைகள் அவரின் பிள்ளைகளாய்,
இறுதிவரை தகுதியுள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – லூக்கா 21:36
296. தேவபிள்ளைகள் (நாம்) உலகக் கவலையில் சிக்குண்டவர்களாய் காணப்படாதபடி இருக்க ஜெபிப்போம் – லூக்கா 21 :34
297. தேவபிள்ளைகள் (நாம்) வீண்பேச்சிலே வீழ்ந்துவிடாதபடி தங்களைக் (நம்மை) தற்காத்துக் கொள்ள ஜெபிப்போம் – யாக்கோபு 1:26
298.தேவபிள்ளைகள் (நாம்) உலகத்து ஜனங்களால் கறைபடாதபடி தங்களைக் (நம்மை) காத்துக் கொள்ள ஜெபிப்போம் – யாக்கோபு 1 :27
299 தேவபிள்ளைகள் (நாம்) சோதனையை சகிக்கிறவர்களாய், முடிவு பரியந்தம் நிலைத்து நிற்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – யாக்கோபு 1 : 2
300. தேவபிள்ளைகளுக்கு (நமக்கு) வரும்
சோதனைகள், பிரச்சனைகளிலிருந்து, பொருமையை அவர்கள் (நாம்) கற்றிட ஜெபிப்போம் – யாக்கோபு 1: 3
301.விசுவாசத்தோடு ஜெபிக்கிறவர்களாய் ஒவ்வொருவரும் காணப்பட ஜெபிப்போம் – யாக்கோபு 1 : 6
302.தேவபிள்ளைகள் (நாம் எல்லோரும் ஞானத்தில் நிறைவுள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – யாக்கோபு 1 : 5
303.தேவபிள்ளைகள் (நாம்) தேவனிடத்திலிருந்து மாத்திரமே நன்மைகளைப் பெற்றிட ஜெபிப்போம் – யாக்கோபு 1: 17
304.தேவபிள்ளைகள் (நாம்) பிசாசுக்கு எதிர்த்து நிற்கத்தக்கவர்களாய் மாறிட ஜெபிப்போம் – யாக்கோபு 4: 7
305.தேவபிள்ளைகள் (நாம்) மற்றவர்களை குற்றப்படுத்தாமல், குறைபாடுகளை நிவிர்த்தியாக்கிட ஜெபிப்போம் – கொலோசெயர் 3: 13
306.தேவபிள்ளைகள் (நாம்) அநேகருக்கு உதவுகிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – உபாகமம் 15: 10
307.தேவபிள்ளைகள் (நாம்) இயேசு கிறிஸ்துவை மாத்திரமே முன்மாதிரியாக வைத்து பின்பற்றிட ஜெபிப்போம் – 1 பேதுரு 2 :21
308.தேவபிள்ளைகள் ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடுபவர்கள் திருந்திட ஜெபிப்போம் – யாக்கோபு 5: 9
309.தேவபிள்ளைகள் (நாம்) நற்கிரியைகள் செய்யத் தகுதியுள்ளவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 3:16
310.விசுவாசிகள் சம்பாதிக்கும் பலனை அனுபவிக்க முடியாதபடி காணப்படும்
எல்லாக் காரியங்களும், தடைகளும் மாறிட ஜெபிப்போம் – ஆகாய் 1:9
311. சடங்குகளையும், சம்பிரதாயத்தையும் அனுசரிக்கும் தேவபிள்ளைகள் மாறிட ஜெபிப்போம் – மாற்கு 7: 8
312.தேவபிள்ளைகள் (நம்மை) தேவன் ஒவ்வொரு நாளும் இப்பிரபஞ்சத்தில் காணப்படும் ஆபத்திலிருந்து விடுவித்து காத்திட ஜெபிப்போம் – கலாத்தியர் 1 :14
313. நம்முடைய நண்பர்கள் மத்தியில் நம்மைப் பற்றி நல்ல சாட்சிகள் கிடைத்திட ஜெபிப்போம் – சங்கீதம் 55: 13
314. ஒவ்வொரு தேவபிள்ளைகளின் வீடும் ஜெபவீடாக, சபையாக மாறிட ஜெபிப்போம் – ரோமர் 16: 5
315.தேவபிள்ளைகள் தங்கள் (நம்) மேல் தேவன் கொண்டுள்ள நோக்கத்தை சித்தத்தை, அபிஷேகத்தை அறிந்து செயல்பட ஜெபிப்போம் – ஏசாயா 61: 1-3
316.வாலிபர்கள் தங்கள் வாலிபப் பிராயத்தில் தேவ வசனத்திலும், ஜெபத்திலும் உறுதியாயிருக்கிறவர்களாய் மாறுவதற்காய் ஜெபிப்போம் -1 யோவான் 2 :14
317. தேவபிள்ளைகள் (நாம்) மற்ற விக்கிரகங்களின் பெயர்களை உச்சரிக்காமல் தங்களை (நம்மை) காத்திட ஜெபிப்போம் – யாத்திராகமம் 23 :13
318.தேவபிள்ளைகள் உலகமக்கள் பாவத்தில் இருக்கையில், அவர்களைப் பார்த்து சபிக்காமல், அவர்களுக்காய் ஜெபிக்கிறவர்களாய் காணப்பட
ஜெபிப்போம் – யாக்கோபு 3 :9,10
319.தேவபிள்ளைகளிடத்தில் காணப்படும் எல்லா அக்கிரமத்தையும், மீறுதல்களையும் தேவன் மன்னித்திட ஜெபிப்போம் – மீகா 7 :18
320. சபைகளைப் பற்றிய பக்திவைராக்கியம் தேவபிள்ளைகளிடையே காணப்பட ஜெபிப்போம் – யோவான் 2:17
321.தேவப்பிள்ளைகள் விசுவாசத்தை மறுதலிக்கும் நிலைகள் மாறிட ஜெபிப்போம் – 1 தீமோத்தேயு 5: 8
322. தேவனை மறுதலிக்கின்ற கூட்டமெல்லாம் திருந்தி தேவனிடம் மாறிட ஜெபிப்போம் – யூதா 1: 4
323. தேவப்பிள்ளைகள் ஒருநாளும், யார் முன்பும் தேவனை மறுதலிக்காதபடி காணப்பட ஜெபிப்போம் – எபிரேயர் 6:6
324. தேவபிள்ளைகளின் (நம்) மேல் உள்ள சாபத்தை தேவன் ஆசீர்வாதமாய் மாற்றிட ஜெபிப்போம் – உபாகமம் 23: 5
325.தேவபிள்ளைகளுக்கு (நமக்கு) வாக்குத்தத்தம் பண்ணினதை தேவன் நிறைவேற்றிட ஜெபிப்போம் – 2 நாளாகமம் 6: 42.
326. இரட்சிக்கப்பட்டும் பாவப் பிரமாணத்திற்குள்ளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தேவ பிள்ளைகள் முழு விடுதலை பெற்றிட ஜெபிப்போம் -ரோமர் 7: 23
327. தேவபிள்ளைகள் (நாம்) தேவனால் சொல்லப்படும் சத்தியங்களை தள்ளிவிடாமல், கீழ்ப்படிந்து நடக்க ஜெபிப்போம் – நீதிமொழிகள் 29: 1
328. பிள்ளைகள் பெற்றோருக்கு கர்த்தருக்குள் கீழ்படிகிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – எபேசியர் 6: 1
329.ஒவ்வொரு தேவபிள்ளைகளுக்கும் தேவன் கொடுத்த வரங்களை, சபைகளிலே, ஊழியங்களிலே உபயோகப்படுத்திட ஜெபிப்போம் -1 கொரிந்தியர் 7: 17
330. சுவிசேஷ ஊழியத்திற்கென அழைக்கப்பட்டும் அவ்வேலையை செய்யாமல் காணப்படுபவர்கள் மாறிட ஜெபிப்போம் – 1 கொரிந்தியர் 9: 16
331.தேவபிள்ளைகள் வீட்டிலே பசி பட்டினிகள் ஒருநாளும் இல்லாமல் தேவன் அவர்களை போஷித்து நடத்திட ஜெபிப்போம் – யோவேல் 2: 26
332.தேவபிள்ளைகள் ஒருநாளும் ஒருபோதும் அக்கிரமம் செய்கிறவர்களாய் காணப்படாமல் இருக்க ஜெபிப்போம் – ஆமோஸ் 3: 2
333.தேவன் எதிர்பார்க்கும் காரியத்தை மாத்திரமே தேவப்பிள்ளைகள் (நாம்) செய்திட ஜெபிப்போம் – மீகா 6: 8
334.தேவபிள்ளைகள் (நாம்) விட்டுக் கொடுக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – பிரசங்கி 10: 4
335.தேவபிள்ளைகள் (நாம்) தேவனிடம் மாத்திரமே நம்பிக்கை வைத்து, உண்மையாய் காணப்பட ஜெபிப்போம் – மீகா 7: 5
336. தேவபிள்ளைகள் (நாம்) அவர்கள் (நம்) சொந்த குடும்பத்திலே நற்சாட்சி பெற்றவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – மீகா 7: 6
337. தேவபிள்ளைகளை (நாம்) எவ்வேளையிலும் (சோர்விலும், தோல்வியிலும், தாழ்விலும், இழப்பிலும்) தேவன் வெளிச்சத்திலே அவர்களை (நம்மை) வழி நடத்திட ஜெபிப்போம் – மீகா 7: 8
338. நம்முடைய பாவங்கள், அக்கிரமங்கள் அனைத்தையும் மன்னித்து தேவன் நமக்கு இரக்கத்தை தந்திட ஜெபிப்போம் – மீகா 7 :19
339.தேவன் தேவபிள்ளைகளுக்கு சொல்லும் எல்லா ஆலோசனைகளும், கேட்க கூடாதபடி தங்கள் இருதயத்தை கடினப்படுத்தி, வைராக்கியமாக்கி இருப்பவர்கள் திருந்திட ஜெபிப்போம் – சகரியா 7 :12
340.தேவபிள்ளைகள் (நாம்) உலக ஜனங்கள் முன்பு வெட்கப்பட்டு போகாதபடி தேவன் அவர்களை (நம்மை) உயர்த்திட ஜெபிப்போம் – யோவேல் 2:26
341. தேவனுடைய நாமத்தை பொய்ாணையிடுபவர்கள் திருந்திட ஜெபிப்போம் சகரியா 5:4
342. பாவத்திற்காக, அக்கிரமத்திற்காக, அருவருப்பிற்காக கதறி அழுது ஜெபிக்கக்கூடிய தேவபிள்ளைகள் எழும்பிட ஜெபிப்போம்
– எசேக்கியேல் 9:4
343. தேவபிள்ளைகள் (நாம்) ஊக்கமாய், உண்மையாய் செய்யும் எல்லா வகையான ஊழியங்களிலும், அதன் பலனை தேவன் கொடுத்திட ஜெபிப்போம் அப்போஸ்தலர் 5 :14
344.தேவபிள்ளைகள் தைரியமாய் தேவ வசனத்தை போதிக்க கூடியவர்கள்
எழும்பி பிரகாசிக்க ஜெபிப்போம் – அப்போஸ்தலர் 4 :30
345.தேவபிள்ளைகள் (நாம்) ஒவ்வொருவரும் தேவனோடு ஐக்கியப்பட்டு, ஒளியில் நடக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – 1 யோவான் 1: 7
346.தேவபிள்ளைகள் (நாம்) தேவனுடைய ஈவை அலட்சியப்படுத்தாதபடி காணப்பட ஜெபிப்போம் – எபேசியர் 2:8
347. தேவபிள்ளைகள் (நாம்) தேவனை சுத்த இருதயத்தோடே தொழுது கொள்ள ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2 :22
348.தேவபிள்ளைகள் (நாம்) ஒவ்வொருவரும் சட்ட ஒழுங்குகளை கடை பிடிக்கிறவர்களாய் காணப்பட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2 :5
349.தேவபிள்ளைகள் (நாம்) ஒருநாளும் ஒருபோதும் பிசாசின் இச்சைகளுக்கு
உடன்படாமல் காணப்பட ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2 :26
350. தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்கின்ற மக்களுக்காய், ஜெபிக்கத் தக்கவர்கள் ஒவ்வொரு தேசங்களிலும் எழும்பி ஜெபித்திட ஜெபிப்போம்
1 சாமுவேல் 2 :25
351.தேவபிள்ளைகள் (நாம்) ஆரோக்கியமாய், சுகமாய் இருக்க ஜெபிப்போம் 3 யோவான் 1:2
352. தேவபிள்ளைகள் பாவத்திற்குட்பட்டு கெட்டுப் போகாமல், தங்களை கர்த்தருக்குள் ஒவ்வொரு நாளும் காத்திட ஜெபிப்போம் – யூதா 1:11
353. தேவபிள்ளைகளுக்கு தேவன் வெளிப்படுத்தின, வெளிப்படுத்து கிறவைகளை, அநேகருக்கு பிரயோஜனமாக சொல்லிட, எழுதிட
ஜெபிப்போம் – வெளிப்படுத்தல் 1:19
354.தேவ ஆவியானவர் தேவபிள்ளைகள் (நாம்) ஒவ்வொருவர் மீதும், ஒவ்வொரு நாளும் அபிஷேகத்தால் நிரப்பிட ஜெபிப்போம் – யாத்திராகமம் 35:33
355.தேவபிள்ளைகள் (நாம்) தேவனால் கனம் பெறுகிறவர்களாய் காணப்பட
ஜெபிப்போம் – ஏசாயா 43:4
356. தேவபிள்ளைகளிடையே (நம்மிடையே) காணப்படும் எல்லா வகைக் கோபங்களும் குறைந்திட ஜெபிப்போம் – கலாத்தியர் 5:26
357.தேவப்பிள்ளைகள் இரகசியமாய் தேவபிள்ளைகள் மீது அவதூறான, பொய்யான, விரோதமான செய்திகளை சொல்லுகிறவர்கள், பரப்புகிறவர்கள் மாறி தேவஇரக்கம் பெற ஜெபிப்போம் – சங்கீதம் 101:5
358. நம்மை நடத்துகிறவர்களுக்கு நாம் கீழ்ப்படிந்து நடந்திட ஜெபிப்போம்
எபிரெயர் 13:17
359.விசுவாசிகளிடையே காணப்படும் விசுவாச துரோகங்கள் மறைந்திட ஜெபிப்போம் – 2 தெசலோனிக்கேயர் 2:3
360. தேவனுடைய மக்கள் ஒருபோதும் புறஜாதி மக்களோடு ஒப்பிட்டு கர்த்தருக்கு விரோதமாய் கேள்வி கேட்காமல் இருக்க ஜெபிப்போம் – மல்கியா 3:13-16