யூதர்களின் சோக வரலாறு – 3
3. தேவன் நேசித்த எருசலேம்
“இதோ, உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக் கேளாதபடிக்கு, உங்கள் பொல்லாத இருதய கடினத்தின்படி நடக்கிறீர்கள். ஆதலால், உங்களை இந்த தேசத்தீலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்தீலிடுவேன்”(எரே.16:11,12).
விக்டோரியா மகாராணி யூதரான தன்னுடைய பிரதம அமைச்சர் டிஸ்ரேலியிடம், “முழு வேதாகமத்தையும் நான் நம்பத்தக்கதாக, அதிலிருந்து ஒரே ஒரு வார்த்தையைச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்கள், அறிவாளியான அந்த யூதன், “”ஆம்’ மகாராணியே உங்களை நம்ப வைக்கத் தக்கதாக நான் சொல்லக்கூடிய ஒரே ஒரு வார்த்தை “யூதர்கள்” என்பதே” என்று பதிலளித்தார்.
யூதர்கள்தான் வேதாகமத்தின் ஜனங்கள், சுமேரியர், அக்காடியர், ஏலாமித்தியர் மற்றும் ஏத்தியரோடு ஒப்பிடும்போது யூதர்கள் உலகத்தில் கடைசியாக வந்தவர்கள். மற்றவர்கள் எல்லோரும் மறைந்துவிட்டனர். ஆனால் யூதர்கள் இன்னும் மறையவில்லை. பூமியிலே வாழ்கிற மக்களிலேயே, மிகப்பழமையானவர்கள் யூதர்களே. கிரேக்கர்களை விட ஓராயிரம் ஆண்டு களும், அமெரிக்கர்களை விட மூவாயிரம் ஆண்டுகளும் சீனர்களைவிட ஐநூறு ஆண்டுகளும் வாழ்ந்த யூதர்கள் அடையாளம் காட்டக்கூடிய நாட்டவர் என்பதோடு, சிறப்பாகக் குறிப்பிடத்தக்க நாகரிகமாக வாழ்ந்த மனித இனம் என்று சொல்லலாம். று
தங்கள் சொந்த ஜனங்கள் இன்னமும் வாழ்ந்து வருகிறதைக் கண்ட யூதர்கள், இன்றைக்கும் ஆச்சரியத்தோடு வாழ்கின்றனர். யூதர்கள் வாழ்ந்த பல்வேறு வகையான வாழ்க்கை முறைகள் ஆபிரகாமிலிருந்து மோசே வரை இயேசு முதல் சிக்மண்டு பிராய்டு, கார்ல் மார்க்ஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பாப்டைலான், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் வரை உலகத்தினுடைய அறிவுத்திறனை, நீதி நெறிகளை, நாகரிகத்தை, உருவாக்கக் கூடியவையாக உள்ளன.
பூமியிலே தன்னைப் பிரதிபலிக்க தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட விசேஷ ஜனமான யூதர்கள் தங்கள் அண்டை நாடுகளைப் போல விக்கிரகங்
களிலே குருட்டுத்தனமாக இடறி தங்கள் அழைப்பை அடிக்கடி மறந்து விடுகிறார்கள். பிறகு தீர்க்கதரிசிகள், போதகர்கள், தேவனின் நியாயத்தீர்ப்பு எல்லாம் சேர்ந்து, அவர்களுடைய உண்மையான தேவனிடம் திரும்பச் செய்கின்றன. பிதாவினுடைய ஒரே குமாரனாகிய இயேசுவை, அவர்கள் புறக்கணித்ததாலே, தேவன் அவர்களை எல்லா தேசங்களிலும் சிதறடித்தார்.
யூதர்கள் தேவனுக்கு ஏன் அவ்வளவு முக்கியமானவர்கள்? யூதர்களை தேவனுடைய சபையென்றும் மற்றவர்களை அவிசுவாசிகள் என்றும் மனித இனத்தையே வேதாகமம் இரண்டாகப் பிரிக்கிறது. ஆபிரகாமின் கொள்ளுப் பேரனும், யூதாவின் வம்சத்தாரும்தான் ‘யூதா’ என்ற பெயரிலிருந்து யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். தேவ சபையைச் சேர்ந்த ஜனங்கள், இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக நம்புகிறவர்கள். இன்னும் இயேசுவின் மேல் நம்பிக்கை வைக்காதவர்கள் அவிசுவாசிகள். மேசியாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தும், யூதர்களின் மேசியாவாக வந்த இயேசுவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
யூத வரலாற்றுக்கு ஐந்தில் நான்கு பகுதியை ஒதுக்கியிருக்கிற வேதாகமத்திலேயே யூதரின் மேன்மையின் இரகசியம் அடங்கியுள்ளது. படைப்புக்குப் பிறகு, மனித இனத்தின் முதல் இரண்டாயிர ஆண்டு வரலாறு ஆதியாகமத்தில் பன்னிரெண்டு அதிகாரங்களில் சுருக்கிக் கூறப்பட்டுள்ளது. வேதாகமத்தில் யூதர்களின் வரலாற்றுக்கு மட்டும், ஓராயிரம் அதிகாரங் களுக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. சபையின் வரலாற்றையும், அதன் முடிவையும் வேதாகமத்தின் ஐந்தில் ஒரு பங்கே சொல்கிறது.
ஆபிரகாமின் மூதாதையரான ஏபேரின் சந்ததியை வைத்து எபிரெயர்கள் என்று அழைக்கப்பட்டவர்களே, இஸ்ரேல் மக்களின் முன்னோர்கள் கர்த்தருக்கு விரோதமாய் மனித இனம் எழும்பி பாவத்தில் விழுந்தபோது தனி மனிதனாகிய ஆபிரகாமை, மனித இனத்தை திரும்ப நீதிக்குட்படுத்தும் தெய்வீக திட்டத்திற்கு அழைத்தார். ஆபிரகாமையும் அவன் சந்ததியையும் தேவன் ஆசீர்வதித்தார்.
ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட தேசத்திலே கொடிய பஞ்சம் உண்டான போது, ஆபிரகாமின் கொள்ளுப் பேரனான யோசேப்பு பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த எகிப்து நாட்டுக்கு ஆபிரகாமின் சந்ததியினரை தேவன் நடத்திச் சென்றார். நானூறு ஆண்டுகளுக்குப்பிறகு, பார்வோன் களால் அடக்கி ஆளப்பட்ட எபிரெயர்கள், பார்வோனின் அரண்மனையில் வளர்க்கப்பட்ட, யூதனாகிய மோசேயின் தலைமையில் எகிப்தைவிட்டுச் வெளியேற வேண்டியதாயிற்று.
எகிப்திலிருந்து பாலஸ்தீன நாட்டுக்கு அழைத்து வந்த தேவனுடைய ஜனங்களே அவருடைய சொந்த ஜனமாகவும், உலகில் எல்லா நாடுகளிலும் சிறுமந்தையாகவும் இருக்கும் என்று வாக்குத்தத்தம் பண்ணினார். எகிப்திலிருந்து வனாந்திர வழியாய் நடத்தி வந்த பிரயாணம் முழுவதிலும், தேவன் அவர்களை வழிநடத்தி, போஷித்து, கற்பித்து, வழிவிலகிச் சென்ற போது சுத்திகரித்து, பரிசுத்தமான வாழ்க்கை வாழ கட்டளைகளைக் கொடுத்தார்.
இந்த ஒரு நாட்டை தேவன் தெரிந்தெடுத்து, கட்டுப்பாடுகளின் நடுவிலே கண்டிப்பாக நடத்தியதற்குக் காரணம், ஒரு நாளிலே இந்த தேசம், உலகம் முழுவதுக்கும் ஆசீர்வாதத்தின் வாய்க்காலாய் விளங்கும் என்பதற்காகவே. நெடுங்காலத்துக்கு முன்பாகவே, ஐசுவரியத்தை சம்பாதிக்கிறதற்கான பெலனையும் (உபா.8:18), நாட்டை ஆளும் ஞானத்தையும் இந்த மக்களுக்கு தேவன் கொடுத்தார். அன்றிலிருந்து யூதர்கள் சிறப்படையத் தொடங்கினர். ஆடு மேய்த்த யோசேப்பு, எகிப்தின் பிரதம அமைச்சர் ஆனான்; பாபிலோனுக்கு அடிமையாகக் கொண்டு செல்லப்பட்ட தானியேல், அங்குள்ள ராஜாக்களுக்கு நெருங்கியவனாக மாறியது மட்டுமல்ல, அநேக பிரதானிகளுக்கு அதிபதி ஆனான். உலகத்திலேயே ஞானம் நிறைந்த சாலமோன், மிகச்சிறந்த ராஜாக்களெல்லாரிலும் மதிப்புப் பெற்றவனானான். அவரது தகப்பனாராகிய தாவீது, ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்தபோதே, பெலிஸ்தரின் மாவீரனாகிய கோலியாத்தை தோற்கடித்து, எருசலேமில் தன் ராஜ்யத்தை நிறுவினான்.
இன்று யூதர்கள், அறிவியல், மருத்துவம், கலை, இலக்கியம், இசை, வியாபாரம், விவசாயம், தொழில்கள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அறிவியலிலும் சிறந்து விளங்குகிறார்கள். இந்த மக்களை தேவன் ஆசீர்வதித்திருக்கிறார்.
தேவன் நேசித்த எருசலேம்
எருசலேம் உலகத்திலேயே ஒரு தனித்தன்மை (unique) வாய்ந்த நகரம். இது மலைகளால் சூழப்பட்ட ஒரு நகரம். இந்நகரம் சீயோன், ஓபேல், அக்கிரா, பெசத் என்ற நான்கு மலைக்குன்றுகள் மேல் நான்கு பாகமாகக் கட்டப்பட்ட மிக அழகிய நகரம். இதில் சீயோன் என்ற மலைக்குன்றில்தான் இந்நகரமுள்ளது “வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வ பூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்” (சங்.48:2) என்று பேர்பெற்றது. மேலும் தாவீது இந்நகரைக் குறித்து “கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப் பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார். தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும்” (சங்.87:2,3) என்று குறிப்பிடுகிறார். அந்நகரை மாத்திரமல்ல அந்நகரத்தின் குடிகளையும் தேவன் “என் ஜனங்கள்” என்று கூறுகிறார். “நான் வானத்தை நிலைப் படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்” (ஏசா.51:16) என்று வாசிக்கிறோம். தேவன் தாம் நேசித்த நகரத்தை, அதின் குடிகளை “என் ஜனம்” என்று பெருமிதத்தோடு சொன்ன தேவன் அதை அழிக்கவும் சித்தம் கொண்டார். ஏனெனில் தேவனைக் குறித்து அவர் தீமையைப் பார்க்காத சுத்தக்கண்ணன் என்றும் அநியாயத்தைச் சகித்துக்கொண்டிருக்கமாட்டார் (ஆப.1:13) என்றும் காண்கிறோம். அவர்கள் செய்த அநியாயம்தான் என்ன?
எருசலேம் மக்களின் அருவருப்பான பாவங்கள்
எசேக்கியேல் 16ம் அதிகாரம் முழுவதையும் வாசித்தால் தேவனுக்கு விரோதமாக அம்மக்களின் கொடிய, அருவருப்பான பாவங்களை விளங்கிக் கொள்ள முடிகிறது. வேசித்தனம், வேசித்தனத்தோடு கூடிய விக்கிரக வழிபாடு, குமாரர்களையும் குமாரத்திகளையும் விக்கிரகங்களுக்கு நரபலி செலுத்தியது, சகலவிதஅருவருப்புகள் என அவைகளையெல்லாம் பட்டியல் போட்டுக் காட்டுகிறார். “எனக்கு கோபம் உண்டாக்கும்படி உன் வேசித் தனங்களைப் பெருகப்பண்ணினாய்” (எசே.16:26) என்று தேவன் சொல்லும் அளவுக்கு அருவருப்புகள் பெருகிப்போயின. ஆகவேதான் இதை அறிந்திருந்த டைட்டஸ் சீசர் எருசலேமை அழித்தபோது “தேவனுடைய கோபாக்கினையின் கருவியாகப் பயன்படுத்தப்பட்டேன்” என்று கூறியுள்ளான்.
எருசலேமின் அழிவு தீர்க்கதரிசன நிறைவேறுதலே
யூதமக்கள் எருசலேமை விட்டு சிதறியடிக்கப்பட்டது பல்வேறு நூற்றாண்டு களுக்கு முன்பே வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளனர். ஆகவே யூத மக்களின் சிதறடிப்பு தீர்க்க தரிசனம் நிறைவேறுதலே என்பதை விளங்கிக்கொள்ளுகிறோம். சுமார் கி.மு.1400ம் ஆண்டில் உபாகமப் புத்தகத்தை எழுதிய மோசே யூதமக்களின் சிதறடிக்கப்பட்டக் காரணத்தை பட்டியலிட்டுக் காட்டி சிதறடித்தலையும் குறித்து இவ்வாறு கூறுகிறார். “கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக் குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய். அந்த ஜாதி களுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது, உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது; அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார். உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில்கொண் டிருப்பாய். நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய் ” (உபா.28:64-67).
“நீ அவர்களை நோக்கி: உங்கள் பிதாக்கள் என்னைவிட்டு அந்நிய தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்து கொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டு விட்டார்களே. நீங்கள் உங்கள் பிதாக்களைப் பார்க்கிலும் அதிக கேடாக நடந்தீர்களே; இதோ, உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக் கேளாத படிக்கு, உங்கள் பொல்லாத இருதய கடினத்தின்படி நடக்கிறீர்கள். ஆதலால், உங்களை இந்த தேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நிய தேவர் களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை’ (எரே.16:11-13) என எரேமியா தீர்க்கதரிசி சுமார் கி.மு.650ம் ஆண்டு காலகட்டத்தில் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார்.
“மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் சுயதேசத்திலே குடியிருக்கையில் அதைத் தங்கள் நடக்கையினாலும் தங்கள் கிரியைகளி னாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என் முகத்துக்கு முன்பாக தூரஸ்திரீயின் தீட்டைப்போல் இருந்தது. ஆகையினால் தேசத்திலே அவர்கள் சிந்தின இரத்தத்தினிமித்தமும், அதை அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களால் தீட்டுப்படுத்தினதினிமித்தமும் நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றி, அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்தேன்” (எசே.36:17-19) என எசேக்கியேல் தீர்க்கதரிசி சுமார் கி.மு.590ம் ஆண்டு காலகட்டத்தில் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார்.
இஸ்ரவேல் மக்களின் அடிமைத்தனத்தைக் குறித்து கர்த்தர் ஆபிரகாமுக்கு முன் அறிவித்தார். “உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்” (ஆதி.15:13) என்று எச்சரிப்பைக் கொடுத்தார். ஆனாலும் எச்சரிக்கையைக் குறித்து சிந்தனையற்றவர்களானார்கள். இன்றும் ஆண்டவர் அடிமைத்தனத்திற்கும், வரயிருக்கும் அழிவுக்கும் தப்பித்துக் கொள்ளும்படி எச்சரிக்கைகளைக் கொடுத்துக்கொண்டேதானிருக்கிறார். அன்று எகிப்தியருக்கு அடிமையானதுபோல பாவங்களுக்கும், உலக சிற்றின்பங்களுக்கும் பாலின ஒழுக்கக்கேடுகளுக்கும் அடிமையாக்கிக் கொண்டுதானிருக்கிறார்கள். எனினும் ஆண்டவர் மனந்திரும்புதலுக் கான தருணங்களைக் கொடுக்கிறார். அன்பின் ஆண்டவர் ஆபிரகாம் மீது கொண்ட அன்பின் காரணமாக இஸ்ரவேல் மக்கள் “நாலாம் தலை முறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்” (வ.16) என்றும் கூறினார். சொன்னதுபோலவே வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ள ஆண்டவர் அப்படியே செய்தார்.
தேவனுடைய தீர்க்கதரிசியாகிய யோனா தேவனுடைய அறிவுரையின் படியே ‘இன்னும் நாற்பதுநாளுண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப் பட்டுபோம்” (யோனா 3:4) என்று எச்சரிக்கையின் குரலை எழுப்பினார். ஆனால் நடந்தது என்ன? எச்சரிப்பின் சத்தத்திற்குச் செவிசாய்த்த “நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர் மட்டும் இரட்டுடுத்திக்கொண் டார்கள்” (யோனா 3:5). தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்கள். அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கையிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பினார்கள் (வ.8) அவர்கள் அழிந்துபோகாதபடிக்கு அவருடைய உக்கிரகோபம் மாறியது (வ.9) “அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்” (யோனா 3:10) என்று வாசிக்கிறோம். அவர் இரக்கமும், மனஉருக்கமும், மிகுந்த கிருபையுள்ள வரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிற தேவனென்று அறிகிறோம். சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு நடந்ததென்ன?