யூதர்களின் சோக வரலாறு – 5 Tragic History of the Jews – 5

 

 

யூதர்களின் சோக வரலாறு – 5

 

ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள்

 

ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள்” (அப்.3:15).

 

வெவ்வேறு நாடுகளுக்குச் சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள் அல்லது யூதமக்கள் ஏன் உபத்திரவத்திற்குள்ளானார்கள் என்ற வரலாற்றுப் பின்னணியத்தைச் சுருக்கமாக கவனிக்கலாம்.

 

முதலாவது நூற்றாண்டில் இயேசுவின் சிலுவை மரணத்தைக் கண்டு பயந்து ஓடி ஒழிந்துகொண்ட சீடர்கள், உயிர்த்தெழுந்த இயேசுவின் ஆலோசனைப்படி எருசலேமில் காத்திருந்து அதைத் தொடர்ந்து அவர்கள் முன்பு அறிந்திராத ஒரு பெரிய வல்லமையையும் பெலனையும் பெற்றுக் கொண்டார்கள். கேட்பவர்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இயேசு கிறிஸ்துவை வல்லமையோடும் தைரியத்தோடும் அறிவித்தனர். யூத மக்களைக் கண்டு பயந்த நிலை மாறி மிகுந்த தைரியமாகக் குற்றம் சாட்டிப் பேச ஆரம்பித்தார் கள். நீங்கள் “ஜீவாதிபதியைக் (PRINCE OF LIFE) கொலை செய்தீர்கள்’ (அப்.2:15). “பிலாத்து அவர்களை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது அவனுக்கு முன்பாக அவரை (இயேசுவை) மறுதலித்தீர்கள்” (வ.13) “பரிசுத்தமும் நீதியுமுள்ள வரை நீங்கள் மறுதலித்து கொலை பாதகனை (பரபாசை) உங்களுக்கு விடுதலை பண்ணவேண்டுமென்று கேட்டீர்கள்’ (வ.14) என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார்கள். பேசிய அவர்களைப் பிடித்துக் காவலில் வைத்தனர். “இயேசுவின் நாமத்தைக் குறித்து எவ்வளவும் பேசவும், போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார் கள்” (அப்.4:18) அவர்களை பயமுறுத்தி அனுப்பினார்கள்.

 

யூதமக்கள் சிதறடிக்கப்பட்ட நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் மீது சொன்ன குற்றச்சாட்டுகளில் முதன்மைப்படுத்திச் சொல்லப் பட்டது இவர்கள் “கிறிஸ்துவைக் கொன்றவர்கள்” (CHRIST KILLERS) என்பதுதான். அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் இவ்வாறான இழிச் சொல்லை சுமந்து திரிந்தனர். பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய தீர்மானித்தபோது யூத மதத்தலைவர்களும், யூதமக்களும் அதற்கு எதிர்த்து நின்றனர். அப்பொழுது பிலாத்து “ஜனங்களுக்கு முன்பாக கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லை

யென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப் பழிக்கு நான் குற்ற மற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

 

அதற்கு ஜனங்களெல்லாரும்; இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்” (மத்.27:24,25). (HIS BLOOD BE ON US AND ON OUR CHILDREN) அவர்கள் தாங்களாகவே தங்களில் ஏற்றுக்கொண்ட அந்த இரத்தப் பழி அவர்களையும் அவர்களுடைய சந்ததியையும் தொடர்ந்தது.

 

இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த காலத்தில் எகிப்திய மக்களால் அருவருப்பாக எண்ணப்பட்டவர்கள் (ABOMINATION TO THE EGYPTIANS) (ஆதி.46:34). “எகிப்தியர் எபிரெயரோடே சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும்” (ஆதி.43:32) என்று வாசிப்பதுபோல இஸ்ரவேல் மக்கள் ஒரு இழிவான ஜாதியாக எண்ணப் பட்டார்கள். அன்று எகிப்தியருக்கு இருந்த அதே எண்ணம்தான் சிதறிடிக்கப் பட்ட நாடுகளில் இஸ்ரவேல் மக்கள் மீது தொடர்ந்தது.

 

எகிப்தில் பாரோன், இஸ்வேல் மக்கள் பலத்தும் பெருகிவிடக்கூடாது. ஏனெனில் யுத்தம் நேரிடும் காலத்தில் இவர்கள் பகைஞர்களோடு சேர்ந்து கொண்டு எகிப்தியர்களுக்கு விரோதமாக எழும்பிவிடக்கூடாது என்பதில் விழிப்போடிருந்து செயல்பட்டான் (யாத்.1:9,10). அதேபோல பரதேசிகளாக (நாடோடிகளாக) வந்தவர்கள் சரியான கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப் படவேண்டுமென்பதில் சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள் குடிபுகுந்த நாட்டின் ஆட்சியாளர்கள் மிகவும் விழிப்போடிருந்தனர். சில நாடுகளில் தங்கள் சுய முயற்சியில் சிலர் உயர்வை எட்டினாலும் அவர்கள் மீதிருந்த சந்தேகம் மாறாமல் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தனர். ஆண்டுகள், நூற்றாண்டுகள் கடந்தோடி அந்த மக்களுக்கு நேர்ந்ததென்ன?

 

கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்கள் நல்ல ஆவிக்குரிய வராக இருந்தாலும் அவர்களுக்குள்ளே பகைமை உணர்வு இருந்து கொண்டேதான் இருந்தது. மிகப் பிரபல்யமான கிறிஸ்தவத் தலைவரும் எழுத்தாளருமன புனித ஜான் கிறிஸ்சோஸ்டோம் (கிபி.345-407) (ST. JOHN CHRYSOSTOM) முதல் முறையாக யூதர்களை “கிறிஸ்துவைக் கொன்றவர் கள்” *(CHRIST KILLERS) என்று குற்றஞ்சாட்டினார். அது தொடர்பான அவரது பிரசங்கச் செய்திகளை எல்லாம் மக்கள் ஆர்வமாகக் கேட்டார்கள். இதே காரியத்தைத்தான் முதலாம் நூற்றாண்டில் அப்போஸ்தலர்கள் “ஜீவாதி பதியைக் கொலை செய்தீர்கள் அவரைத் தேவன் மரித்தோரிலிருந் தெழுப்பினார். அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்” என்றார்கள் (அப்.3:19).

 

ஈஸ்டர் தினங்களில் கிறிஸ்தவ போதகர்கள் யூதர்களுக்கு விரோதமாக ஆத்திர மூட்டும் வகையில் பிரசங்க பீடத்தில் நின்று பேசுவார்கள். அதன் விளைவாகச் சிலர் யூதர்களைப் பிடித்து ஆலயத்திற்குக் கொண்டுவந்து அவர்களைக் கொடூரமாக அடித்து விரட்டுவார்கள். இயேசு கிறிஸ்துவை எந்த காரணமுமின்றி சிலுவையில் அறைந்து கொலை செய்தார்களோ அதே போல அப்பாவி யூதர்களை அடித்துத் தாக்குவது ஈஷ்டர் தின வழக்கமாகவே மாறிற்று.

 

“ஜெர்மனியின் மிகமோசமான தீய சக்தி பொதுவாகக் கருதப்படுவது போல ஹிட்லரோ, பிஸ்மார்க்கோ, மகா பிரட்ரிக்கோ அல்ல மார்டின் லூத்தர் தான்” என்று டீன் இன்கே (DEAN INGE) என்ற நூலாசிரியர் குறிப்பிடுகிறார். (THE ROOTS OF ANTI-SEMITISM) மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்கத் திருச்சபை யிலிருந்து சீர்திருத்தத் திட்டங்களை உருவாக்கினார். பேராலயத்தில் கதவில் தனது 95 அம்ச திட்டங்களை வெளியிட்டார். தனது புதிய கிறிஸ்தவ சீர்திருத்த சபையை யூதர்கள் ஆதரிப்பார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பு மார்ட்டின் லூத்தரிடம் இருந்தது. ஆனால் ஆதரவு கிடைக்காததால் யூதர்களை மிகவும் மோசமாக வர்ணித்ததும் அல்லாமல் அவர்கள் மீதான பகைமை உணர்வைத் தூண்டிவிட ஆரம்பித்தார். “யூதர்களைக் குறித்தும் அவர்களது பொய்யும்” (TRACT ENTITLED CONCERNING THE JEWS AND THEIR LIES) என்ற தலைப்பில் ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார். நாம் கிறிஸ்தவர்கள் என்பதை தேவன் காணவேண்டும் என்றும் நமது செயலின் மூலம் கிறிஸ்தவமும் தேவனும் கனப்படுத்தப்படவேண்டும் என்றும் தேவனுடைய பெயராலேயே யூத விரோதத்தை அனல்மூட்டிக் கிளரினார். (THIS OUGHT TO BE DONE FOR THE HONOUR OF GOD AND CHRISTIANITY IN ORDER THAT GOD MAY SEE THAT WE ARE CHRISTIANS) யூதர்களுடைய தேவாலயங்கள் அழிக்கப்படவேண்டும் தேவ தூஷணங்களைப் போதிக்கும் அவர்களுடைய ஜெப யுத்தங்களும், யூதர் களின் சட்டத்திட்ட தொகுப்பு நூலும் (PRAYER BOOKS AND TALMUDS) எரிக்கப் படவேண்டும். இவற்றைப் போதிக்கும் ரபிகளுக்கு கொலை மிரட்டலுடன் எச்சரிப்புகள் கொடுக்கப்படவேண்டும். யூதர்கள் வெளியே நடமாடவிடாமல் அவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர்களாக இருக்கவேண்டும் என்பதே அந்த வெளியீட்டின் சாராம்சமாக இருந்தது. இநத்க் காரியங்கள் நான்கு நூற்றாண்டுகள் கழித்து அவருடைய நாட்டிலேயே ஹிட்லரின் வெறித்தன்மையால் செயல்படுத்தப்பட்டது (FOUR CENTURIES LATER, HOWEVER, HIS TRACT PRESCRIBING VICIOUS TREATMENT OF THE JEWIS PEOPLE WOULD BE CARRIED OUT ALMOST TO THE LETTER IN HIS OWN COUNTRY BY A MAD MAN NAMED HITLER). ஹிட்லர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன். தனது யூத வெறித்தன விரோதப் போக்கிற்கு மார்ட்டின் லூத்தரின் பிரசுரத்தின் கட்டளைகளையே தனது செயல்பாடுகளாக்கிக் கொண்டான்.

</center >

Leave a Reply