நியாயாதிபதிகள் Book of Judges with pdf

 

நியாயாதிபதிகள்

 

கானானில் இஸ்ரவேலர்

 

“நியாயாதிபதிகள்” என்று பெயர்பெற காரணம்

 

 எபிரேய பெயரான Shophtim என்னும் சொல்லுக்கு “நீதிபதிகள் அல்லது விடுவிக்கிறவர்கள்” என்று பொருள்.

சாமுவேலின் காலத்திற்கு முன்பாக இஸ்ரவேலுக்கு எதிராக எழும்பிய பல்வேறு வகையான எதிரிகளிடமிருந்து காக்க தேவன் 13 நியாயாதிபதிகளை எழுப்பினார்.

நியாயாதிபதிகளின் புத்தகத்தில் அவர்களின் பதவிப்பெயர் “நியாயாதிபதி” என்று குறிப்பிடப்படுகிறது (நியா 2:11-19)

ஆனால் அவர்கள் நியாயதிபதிகள் என்று அழைக்கப்படாமல் விடுதலையாக்குகிறவர்கள் என்ற அர்த்தத்தில் இரட்சகர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் நாம் நினைக்கிறபடி நியாயாதிபதிகள் சட்டம் சம்பந்தப்பட்ட காரியங்களை மாத்திரம் கவனிக்காமல் இராணுவம் மற்றும் நிர்வாகம் சம்பந்தபட்ட காரியங்களையும் கவனிக்க வேண்டியிருந்தது.

 

ஆக்கியோனும் தகவல்களும்

 

  1. தீர்க்கதரிசியாகிய சாமுவேல் இதை எழுதினார் என்பது யூதப்பாாரம்பரியத்தின் நம்பிக்கை.
  2. . நியாயாதிபதிகளின் புத்தகத்தை எழுதியவர் இஸ்ரவேலில் மன்னராட்சி ஏற்பட்ட ஆரம்ப காலங்கள் வரையில் நிச்சயமாக வாழ்ந்திருக்கிறார்.
  3. . அடிக்கடி பயன்படுத்தப்படும் “அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை” என்னும் வாக்கியம் (நியா 17:6, 18:1, 19:1, 21:25) இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் எழுதப்பட்ட காலத்தின் சம்பவங்களோடு ஒப்பிடுகையில் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்ட பயன்படுத்தபட்டுள்ளது.
  4. எழுதப்பட்ட காலம் : கிமு 1045-1000 காலப்பகுதியில் எழுதப்பட்டிருக்கலாம்
  5. அதிகாரங்கள் : 21
  6. வசனங்கள் : 618

 

வரலாற்றில் இந்த புத்தகத்தின் இடம்

 

  • நியாயாதிபதிகளின் காலம் கிமு 14ம் நூற்றாண்டின் முற்பகுதியில் யோசுவாவின்
  • மரணத்திற்கு(யோசுவா 24:29) பின் ஆரம்பித்து,
  • கிபி 1051ல் சவுல் இஸ்ரவேலின் அரசனாக தீர்க்கதரிசியாகிய சாமுவேலால் முடிசூட்டப்பட்ட(1 சாமு: 10:24) காலம் வரையுள்ள 300 ஆண்டுகள் வரலாற்றை கொண்டுள்ளது. .
  • நியாயாதிபதிகளின் புத்தகத்தின் நிகழ்வுகள் தேசத்தின் நிலப்பரப்பில் இருந்த பல்வேறு நகரங்களிலும், பட்டணங்களிலும், யுத்தக்களங்களிலும் நடந்தவை. சில நியாயாதிபதிகள் ஒரே சமயத்தில் வ்ெவவேறு பிரதேசங்களை ஆளுகை செய்தார்கள் என்று வேதாகம அறிஞர்கள் கருதுகிறார்கள்.

 

நியாயாதிபதிகளின் புத்தகம் – ஒரு பார்வை

 

* முதல் இரண்டு அதிகாரங்களும் யோசுவாவின் மரணத்தையும் அவனது மரணத்திற்கு பின்னான சந்ததியாரைக் குறித்தும் சொல்லுகிறது. “கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று” (நியா 2:10)

 

* நியாயாதிபதிகளின் புத்தகம் முழுவநிலும் தேவனாகிய கர்த்தரே இஸ்ரவேலின் அதிபதி என்பதே அடிப்படை பிரச்சினையாக இருந்தது. அதிலும் குறிப்பாக அவரது ஆளுகையை ஏற்றுக்கொண்டு அவருக்கு உண்மையாயிருத்தல் என்பதே பிரச்சினையாயிருந்தது.

 

இஸ்ரவேலின் மீதான தேவனின் இராஜரீக ஆளுகை என்பது சிறப்பான முறையில் சீனாய்

உடன்படிக்கையிலும் (யாத் அதி 19-24) பின்பு மோசேயினால் மோவாபின் சமவெளிகளில்

புதுப்பிக்கப்பட்டதினாலும் (உபா 20) அதன் பின்பு யோசுவாவினால் சீகேமில் நினைவூட்டப்பட்டதினாலும் (யோசுவா 24) உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

 

* இஸ்ரவேலர் தேவனின் இராஜரீக ஆளுகையை திரும்பத் திரும்ப தள்ளிவிட்டதை குறித்து இந்த புத்தகத்தை ஆக்கியோன் குற்றஞ் சாட்டுகிறார்.

 

* கர்த்தருடைய யுத்தங்களை செய்வதை நிறுத்திவிட்டு தங்கள் குடும்பங்களின், கால்நடைகளின், நிலங்களின் நன்மைக்காக கானானிய தெய்வங்களை நோக்கி திரும்பி ஒவ்வொரு நாள் வாழ்க்கையில் கைக்கொள்ளவேண்டிய கர்த்தரின் கட்டளைகளை கைவிட்டார்கள்.

 

இந்தப் புத்தகத்தின் சம்பவங்கள் ஒரு வட்டச் சுழற்சியின் ஒழுங்கில் அமைந்திருக்கிறதை

அவதானிக்லாம்.

 

1. இஸ்ரவேலர் பாவம் செய்தல்

 

2 அவர்களை ஒடுக்க தேவன் எதிரிகளை எழுப்புதல். அந்த எதிர்களை ஒரு குறிக்கப்பட்ட காலம் வரையில் சேவித்தல்.

 

3.தேவனை நோக்கி கதறி மன்னிக்கும்படி விண்ணப்பித்தல்.

 

4. அவர்களை விடுவிக்க தேவன் இரட்சகர்களை (நியாயாதிபதிகளை) எழுப்புதல்.

 

5. நியாயாதிபதிகள் எழும்பி எதிரிகளுடன் யுத்தம் செய்து விடுவித்தல். மீண்டும் பாவம் செய்து அதே வட்டச் சுழற்சி ஆரம்பிக்கும் வரை கொஞ்சக்காலம் சமாதானம் நிலவுதல்.

 

ஆனால் ஒவ்வொரு வட்டச் சுழற்சியின்போதும் இஸ்ரவேலரின் நிலை தாழந்துபோனதும் அல்லாமல், அவர்களதும், நியாயதிபதிகளினதும் தார்மீக ஒழுக்கங்கள் தொடர்ந்து சீர்கெட்டுப்போனது. – இந்த புத்தகத்தின் முடிவு இந்த சீர்கேட்டை பதிவுசெய்கிறது.

 

* இந்த புத்தகத்தின் இறுதி வசனமே இதற்கான சான்று. “அந்நாட்களிலே இப்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்” (நியா 21:25)

 

நியாயாதிபதிகளின் பட்டியல்

 

1. ஒதளியேல் (3:7-11} போசுவாவின் மரணத்திற்கு பின் 1வது நிபாயாதிபதி

2. ஏகூத் {3:12-30} மேவாபிபரோட யுத்தம் செய்தாள்

3. சம்கார் {3-31}) பெலிஸ்தருக்கெதிரான யுத்தத்தில் இஸ்ரவேலை நடத்தியவன்

4. தெபொரான் (4-5) தீர்ததரிசியானவளும், காணவியருக்கு எதிரான யுத்தத்தில் பாராக்கை வழிநடத்தியவருமான ஒரே பெண் நியாயாதிபதி

 

5. கிதியோன் (6-8) 300 பேரைக் கொண்டு மீதியாளியரை முறியடித்தாள்

 

6. அபிமெலேக்கு (9) தந்நிரத்தினால் தலைமைக்கு வந்த ஒரே நியாயாதிபதி

7. தோலா (10:7-5) இஸ்ரவேலை 23 வருடங்கள் நியாயம் விசாரித்தாள்

8. யாவீர் (10:1-5) இஸ்ரவேலை 22 வருடஙகள் நியாயம் விசாரித்தாள்

 

9. பெய்தா (10:17-12:7)
அம்மோனியரை முறியடித்தான்.

 

10. இப்பான் (12;6–15) இஸ்ரவேலை 7 வருடங்கள் நியாயம் விசாரித்தான்

11. ஏலோன் (12:8-15) இஸ்ரவேலை 10 வருடங்கள் நியாயம் விசாரித்தான்

12. அப்தோள் (12:8-15) இஸ்ரவேலை 8 வருடங்கள் நியாயம் விசாரித்தான்

13. சிம்சோன் (13-16) பெனிஸ்திபரை தனியாளாக முறியடித்தாள்

14. ஏலி (1 Samue|1:9) சிலோ ஆசரிப்பு எஸ்தலத்திலிருந்து நியாயம் விசாரித்த ஆசாரியன்

 

15. சாமுவேல் – சவுல் அரசாள ஏற்படுத்தபடும் வரை நியாயம் விசாரித்த கடைசி நியாயாதிபதி

 

 

மூன்று அன்னிய தெய்வங்கள்

 

  1. * முக்கிய சமூக பிரச்சினையானது இஸ்ரவேலர் தேவனுடைய கட்டளையை மீறி கானானியர்களை துரத்திவிட தவறியதால் உருவானது.
  2. இஸ்ரவேலர் காானியர்களை கலப்புத்திருமணம்செய்து அவர்களது முறைமை களின்படி நடந்தார்கள் கானானிய கலாச்சாரம் இஸ்ரவேலர்களுக்குள் வந்தபோது அதனால் உருவான விக்கிரக வழிபாடு ஒரு மிகப்பெரிய வழிபாட்டுச் சிக்கலை உண்டாக்கியது.

 

கானானியரின் மூன்று முக்கிய தெய்வங்கள்

 

1. பாகால்

 

செழிப்பின் தெய்வம் என்று கருதப்பட்ட பாகால் ஒரு கற்துணினால் ஆக்கப்பட்டு பெரும்பாலும் தோப்புகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

பல தருணங்களில் பாகால் வழிபாட்டில் விபச்சாரமும் (எரே 7:9), தங்களை தாங்களே காயப்படுத்திக் கொள்வதும் (1இரா 18:28), மனித உயிர்கள் பலி கொடுக்கப்படுவதும் (எரே 19:5) இடம்பெறுவதுண்டு.

* பல தடவைகள் பழைய ஏற்பாட்டில் தேவனுடைய ஜனங்களுக்கான கண்ணியாக பாகால் சொல்லப்பட்டிருக்கிறது.

 

2  அஸ்தரோத்

 

* எப்போதும் பாகாலுடன் இணைத்தே சொல்லப்படும் கானானியர்களின் காதலுக்கான பிரதான பெண் தெய்வம் உயரமான இடங்களில் வைக்கப்படும் மரத்தினாலான கம்பமே இதன் அடையாளம்

 

3.தாகோன்

 

சிம்சோன் இறுதியாக தாகோனின் கோயிலையே தனது பலத்தினால் இடித்துப்போட்டான்.

* மனித முகமும், மனிதக் கைகளும், மீன்வடிவ உடலும் கொண்டது பெலிஸ்திய தெய்வமான

தாகோன்

 

ஆறு அன்னிய ஆக்கிரமிப்புக்கள்

 

நியாயாதிபதிகளின் புத்தகத்தில் அன்னிய அதிகாரங்களால் இஸ்ரவேலர் ஆக்கிரமிக்கப்படுவது அடிக்கடி நிகழ்வதை படிக்கலாம்.

* ஜனங்கள் கர்த்தரை நோக்கி கதறுவார்கள், அவர்களது நெருக்கத்திலிருந்து விடுவிக்க

ஒரு இரட்சகளை அனுப்புவார்.

* விடுவிக்கப்பட்டு சமாதானம் உண்டான கொஞ்சக்காலத்தில் மறுபடியும் பழையபடி விக்கிரக வழிபாடுகளுக்கு சென்றுவிடுவார்கள்.

 

1. வடகிழக்கில் இருந்து வந்த மெசொப்பொத்தாமியரின் ஆக்கிரமிப்பு (நியா 3:8-11)

* முதலாவது ஆக்கிரமிப்பு வடகிழக்கில் இருந்து வந்த மெசொப்பொத்தாமியரின்

ஆக்கிரமிப்பு. இதிலிருந்து ஒத்திளியேல் ஜனங்களை விடுவித்தான்.

 

2 தென்கிழக்கில் இருந்து வந்த மோவாபியரின் ஆக்கிரமிப்பு (நியா 3:12-20)

இரண்டாவது ஆக்கிரமிப்பு தென்கிழக்கில் இருந்து வந்த மோவாபியரின் ஆக்கிரமிப்பு. இதிலிருந்து இடதுகைப் பழக்கமுள்ளவனான ஏகூத், மோவாபிய ராஜாவான எங்லோனை கொன்று ஜனங்களை விடுவித்தான்.

 

3. கானானிய தலைவர்களான யாபீன் மற்றும் சிசெரா (நியா அதி 45)

* மூன்றாவது ஆக்கிரமிப்பு கானானிய தலைவர்களான யாபிள் மற்றும் சிசெராவால் வந்தது. . போராள் ளானியர்களிடமிருந்து இஸ்ரவேலை. பெண் பாதிபதியாக ஒருவனே

குறிப்பிடப்படுகிறாள்.

 

* சிசெரா மேனியனான ஏபேரின் மனைவியான யாகேல் என்னும் பெண்ணினால் கொல்லப்பட்டது கூடுதல் சுவாரசியம்.

 

4. தென்கிழக்கில் இருந்து வந்த மீதியானரின் ஆக்கிரமிப்பு (தியா அதி 69) * தென்கிழக்கில் இருந்து வந்த மோவாபியரின் ஆக்கிரமிப்பு 7 அண்டுகள் நீடித்தது. கிதியோனின் பலத்த தலைமையினால் அது முடிவுக்கு வந்தது.

 

5. கிழக்கில் இருந்து வந்த அம்மோனியரின் ஆக்கிரமிப்பு (நியா 10:6-11:40) * கிழக்கில் இருந்து வந்த அம்மோனியரின் ஆக்கிரமிப்பை யெப்தா முறியடித்தாலும் அவனது அறிவற்ற பொருத்தனையின் காரணமாக அவனது குமாரத்தி உயிரிழக்க நேரிட்டது.

 

6. தென்மேற்கில் இருந்து வந்த பெலிஸ்தரின் ஆக்கிரமிப்பு (நியா 13)

* ஆறாவது தென்மேற்கில் இருந்து வந்த பெலிஸ்தரின் ஆக்கிரமிப்பு இந்த ஆக்கிரமிப்பு ஒரு முறை மாத்திரமல்லாது தொடர்ந்து பலதடவைகள் நடைபெற்ற ஆக்கிரமிப்பு.

* சுமார் 200 ஆண்டுகாலப் பகுதியில் இஸ்ரவேல் பெலிஸ்தியரின் ஆக்கிரமிப்பிலிருந்து சம்கார், சிமசோன், சவுல், தாவீது போன்றவர்களால் விடுவிக்கப்பட்டார்கள்.

 

கொடூரமான கொடுமை நிகழ்வுகள்

 

• இந்த புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களின் கொடூரம் தேவனுடைய ஜனத்தின் பாவத்தினால் வந்தது அல்ல.

 

ஏகூத் எக்லோனை கொலைசெய்து அவனை மனிதக்கழிவோடு பிணமாக விட்டுவிட்டான்.

 

* யெப்தா கர்த்தருக்கு செய்த பொருத்தனையின் நிமித்தமாக தனது ஒரே குமாரத்தியை தகனபலியாக செலுத்தினான்.

 

சிம்சோன் வேசியோடு இரவைக் கழித்தான். ஒரு லேவியன் கற்பழிக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்ட தனது மறுமனையாட்டியின் உடலை துண்டு துண்டாக்கி இஸ்ரவேலின் பல இடங்களுக்கும் அனுப்பி அதன் மூலம் யுத்தத்தை தூண்டினான்.

 

ஆனால் பாவத்திலிருந்து விடுவித்த தேவனுடைய இரட்சிப்பின் மகமையானது அவருடைய பொறுமையினாலும், இரக்கத்தினாலும், அன்பினாலும், சத்தியத்தினாலும் உண்டானது (யாத் 34:6) இந்த பாவத்தினால் விளைந்த கொடுமைகளை காட்டிலும் இந்த நியாயாதிபதிகளின் மூலமாக வெளிப்பட்ட தேவனுடைய இரட்சிப்பின் மகிமை பெரிதாயிருந்தது. இது சில வழிகளில் இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகிறது.

 

இஸ்ரவேல் ஜனங்களின் விழுந்துபோன நிலை

 

• மோசேயின் நாட்களில் வானந்தரத்தில் சஞ்சரித்த இஸ்ரவேல் சந்ததியும், யோசுவாவின் நாட்களில் தேசத்தை கைப்பற்றிய இஸ்ரவேல் சந்ததியும், தங்களை விடுதலையாக்க தேவன் காண்பித்த பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் தங்கள் கண்களினால் கண்டிருந்தார்கள். ஆனால் “கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று” (நியா 210)

 

• யோசுவாவின் காலத்திய சந்தியாருக்கு பின்வந்த சந்ததியாரிலிருந்து இஸ்ரவேலில் மண்னராட்சி ஏற்பட்ட காலம் வரையுள்ள சந்ததி காத்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது (நியா 2:11)

 

இஸ்ரவேலின் விழுந்துபோன நிலைக்கு காரணங்கள் என்ன?

 

1. தேவனுடைய அற்புதங்களையும், அடையாளங்களையும் கண்டவர்கள் தங்கள்

முழு மனதோடு தேவனைப் பிறபற்றவில்லை.

 

2. தேவன் அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தபடி அவருடைய அதிசயங்களையும், அவருடைய

வழிகளையும் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கவில்லை.

 

3. தேவன் தம்மை நினைவுகூரும்படி ஏற்படுத்தியிருந்த வாரத்திற்கான ஓய்வுநாள் கட்டளையையும். வருஷாந்திர பண்டிகைகளையும் பின்பற்ற தவறினார்கள்.

 

தேவனின் உண்மையான அன்பு

 

* பாவத்திற்கு தேவன் தண்டனை வழங்காமல் விடமாட்டார் என்பதே நியாயாதிபதிகள் புத்தகத்தின் அடிப்படையான செய்தி.

 

• யாத்திராகமம் இஸ்ரவேலர் தேவனுடைய ஜனம் என்றும், அவரே அவர்களுடைய இராஜா என்றும்

உறுதிப்படுத்தியது. சீனாய் மலையருகே உண்டாக்கப்பட்ட உடன்படிக்கையை மறந்தார்கள்.

 

* நியாயாதிபதிகளிலோ அன்னிய தெய்வங்களை வழிபட்டதற்காகவும், அவரது பலிசெலுத்தும்படியான கட்டளைகளுக்கு கீழ்படியாததற்காகவும், அப்பட்டமான ஒழுக்கக்கேடுகளுக்காவும், பல சமயங்களில் அவர்களால் உண்டான சீர்கேட்டுக்காவும் தேவன் அவர்களை தண்டித்தார்.

 

இதன் விளைவாக தேவனுடைய யுந்த வீரர்களாக, வரப்போகும் அவரது ராஜ்யத்தின் விசுவாசமான குடிமக்களாசு, தேவனால் தெரிந்தகொள்ளப்பட்டு அழைக்கப்பட்ட, தேவனுடைய ஜனம் என்ற சிறப்பு: அந்தஸ்தைவிட்டு விலகினார்கள். கானானியர்களின் வேளாண்மை முறைமைகளுக்கும், சமுதாய வழக்கங்களுக்கும் உடனடியாக ஒத்துப்போனதைபோல, கானானிய ஜனங்களோடும், அவர்களது முறைமை களோடும்.

 

தெய்வங்களோடும், வழிபாட்டு நம்பிக்கைகளோடும், வழிபாட்டு சடங்குகளோடும் ஒன்றிப்போனார்கள்.

 

இந்த காரியங்களை தேவன் வேதாகமத்தில் பதிவு செய்தது ஏன்?

 

. மனிதனின் இழிவான. விழுந்துபோன நிலையை காண்பிக்கவும். அதிலிருந்து தேவன்

ஒருவரே அவனை மீட்டு இரட்சிக்க வல்லவர் என்பதை உணர்த்தவும்

 

• மனிதன் மீது இரங்கி அவனை மன்னித்து, அவனை மீண்டும் புதுப்பிக்கும் தமது

மனவுருக்கத்தை வெளிப்படுத்தவும் நமக்கான ஒரு எச்சரிக்கையாகவும்

நியாயாதிபதிகளின் புத்தகம் குறித்து ஒரு பார்வை

 

முன்னுரை: முழுமை பெறாக கையப்படுத்தலும் விசுவாச துரோகமும் (1:1-3:6)

 

· அதி | – யூதா, சிமியோன் கோத்திரத்தார் கானானிபரோடு யுத்தம் செய்தல். யூதா கோத்திரத்தார்

 

கானானியரை முறியடித்து எருசலேமை கைப்பற்றுதல். யோசேப்பின் புத்திரர் பெந்தெலை கைப்பற்றியபோதும் கானானியரை முற்றிலும் துரத்தாமல் போதல்.

 

* அதி 2 – காத்தருடைய தூதனானவரின் எச்சரிப்பு, யோசுவா காலத்திய சந்ததியார் மரித்த பின்னர் இஸ்ரவேலர் தேவனுக்கு கீழ்படியாமல் பாகாலை சேவித்தார்கள். தேவன் அவர்களுக்கு விரோதமாக எதிரிகளை எழுப்பி அவர்களால் இஸ்ரவேலரை தண்டித்தார். ஆனாலும் இஸ்ரவேலரை விடுவிக்க அவரே நியாயாதிபதிகளை எழுப்புதல் ஒடுக்கதலும் விடுதலையும் (3:7-16:31)

 

* அதி 3 – இஸ்ரவேலர் கலப்புத்திருமணங்கள் செய்ததோடு தவறான தெய்வ வழிபாட்டிலும்

ஈடுபட்டார்கள். நியாயதிபதிகளான ஒத்னியேல், ஏகூத, சம்கார் அவர்களை மற்ற இனக்குழுக்களிடமிருந்து விடுவித்தல்

 

* அதி 4 – இஸ்ரவேலர் பொல்லாப்பானதை செய்தல். யாபீன் அவர்களை ஒடுக்கினான். தேவன் தெபோராளை நியாயாதிபதியாக எழுப்பி பாராக்கை கொண்டு விடுவித்தல்,

 

+ அதி 5 – தெபோராளும், பாராக்கும் கானானிய சேளைகளை ஜெயித்ததை குறித்து பாடல் பாடிடுதல்.

 

அதி 6 – இஸ்ரவேலர் பொல்லாப்பானதை செய்து 7 வருடங்கள் மீதியானரை சேவித்தார்கள். கர்த்தருடைய தூதனானவர் நியாயாதிபதியாகிய கிதியோனுக்கு துணை நிற்பதாக வாக்களித்தார். கிதியோன் பாகாலின் பிடங்களை தகர்த்தல்.

 

* அதி 7 – தேவனுடைய அறிவுறுத்தலின்படி கிதியோன் 300 பேரை மாத்திரம் அனுப்பினான். அவர்கள் மீதியானர்களுடைய பாளையத்தை சேதப்படுத்தினார்கள். கிதியோனின் இராணுவம் மீதியானியர்களை தோற்கடித்தல்,

 

* அதி 8 – எப்பிராயீம் மனுஷா முதல் முறை பொறாமை கொண்டு கிதியோனுடன் வாக்குவாதம் பண்ணுதல், கிதியோன் இராஜாவாக மறுத்தல். கிதியோனின் மரணம். 40 வருடம் சமாதானம், தேவனை விட்டு பின்வாங்குதல்.

 

அதி 9 -அபிமெலேக்கு தனது சகோதரர்களை கொன்று இஸ்ரவேலை ஆளுதல், காகால்

அவனுக்கு எதிராய் எழும்புதல். அபிமெலேக்கு பெண்ணினால் காயப்படுதல். இரத்தல்,

 

• அதி 10 – நியாயாதிபதிகளான தோலாவும், யாவிரும். இஸ்ரவேலர் பொல்லாப்பானதை செய்தல் தேவன் அவர்களை பெலிஸ்தியர்கள், அம்மோனியர்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தல் இஸ்ரவேலர்கள் தேவனிடம் ஒத்தாசைக்காக கதறுதல்.

 

* அதி 11- நியாயாதிபதியான யெப்தா அம்மோன் புத்திரரை முறியடித்தான். அவன் செய்த அறிவற்ற பொருத்தனையினால் தனது குமாரத்தியை தகனபலியாக செலுந்துல்

 

* அதி 12 – எப்பிராயிம் மனுஷர் இரண்டாம் முறை பொறாமை கொள்ளுதல். கீலேயாத் மனுஷா எப்பிராயீம் மனுஷரை முறியடித்தல். யெப்தா 6 வருடங்கள் நியாயம் விசாரித்தல். நியாயாதிபதிகளான இப்சான். ஏலோன். அப்தோன்.

 

* அதி 13 – பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலரை ஆளுதல். கர்த்தருடைய தூதனானவர் மனோவாவின் மனைவியிடம் ஒரு இரட்சகனை கர்ப்பம் தரிப்பதை அறிவித்தல். சிம்சோன் பிறத்தல்

 

* அதி 14 – நியாயாதிபதியான சிம்சோன் பெலிஸ்தரில் பெண் கொள்ளல். சிங்கத்தை கொல்லுதல், விடுகதை சொல்லுதல். சிம்சோனின் மனைவி வேறோருவனுக்கு கொடுக்கப்படுதல்.

 

* அதி 15 – சிம்சோனின் பழிவாங்கும் பராக்கிரம செயல்கள் பெலிஸ்தரின் விளைச்சலை போடுதல். இஸ்ரவேலர் அவனை கட்டிப்போடுதல், அவன் 1000 பெவிஸ்தியரை கொன்றுபோடுதல்.

 

* அதி 16 – சிம்சோன் காசாவிலிருந்து தப்புதல், சிம்சோன் தெலீலாளை நேசித்தல், அவள் இவனது தலைமுடியை சிரைப்பித்தல். பெலிஸ்தியர்களின் கோயிலை தகர்த்து தானும் மடிதல்.

 

முடிவுரை: வழிபாட்டுச் சீர்கேடும் ஒழுக்கச் சீர்கேடும்

 

* அதி 17 – மீகாவின் வழிபாட்டுச் சீர்கேடு, தனது தாயின் வெள்ளிகாசினால் விக்கிரகத்தை செய்வித்தல் இஸ்ரவேலிலே ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவருதல். மீகா லேவியன் ஒருவனை ஆசாரியனாக நியமித்தல்,

 

– அதி 18 – தாண் கோத்திரத்தார் தங்கள் சுதந்திர நிலத்தையும் விக்கிரக வழிபாட்டையும் விட்டு தங்களுக்கான நிலத்திற்காக வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள். தாண் கோத்திரத்தார் மீகாவின் சுரூபத்தையும் அவன் நியமித்த ஆசாரியனையும் கொண்டுபோதல், லாக்ஸை கைப்பற்றி அதற்கு தாண் என்று பெயரிடுதல்.

 

அதி 19 – கிபியாவின் ஒழுக்கச் சர்கேடு. லேவியன் ஒருவனும் அவனது மறுமனையாட்டியும் கிபியாவுக்கு வருதல். அந்த பட்டணத்தின் மனுஷர் அவளை கற்பழித்ததால் அவள் இறந்துபோதல். அந்த லேவியன் அவனை துண்டங்களாக்கி ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு துண்டத்தை அனுப்பிவைந்தல்.

 

* அதி 20 – பென்யமீன் புத்திரர் கிட்டதட்ட அவர்களது சுதந்திர நிலத்தை இழத்தல். கிபியாவை தாக்க இஸ்ரவேலர் ஒன்றுகூடுதல். 400000 இஸ்ரவேலர் பென்யமீன் கோத்திரத்திற்கு எதிராக யுத்தம் செய்தல். பென்யமீனாகள் தோற்கடிக்கப்படதல் பென்யமீன் கோத்திரத்தார் கிட்டதட்ட அழிக்கப்பட்டு 600 போ மாத்திரமே மீந்திருத்தல்,

 

அதி 21 – இஸ்ரவேலர் மிஸ்பாவிலே கூடுதல். பென்யமின் புத்திரருக்கு இளம்பெண்கள் கொடுத்து கோதிரம் அழியாமல் காக்கப்படுதல்,

 

Pdf file Download செய்ய 25 வினாடிகள் காத்திருக்கவும்

 

 

You have to wait 25 seconds.

Download Timer

Pdf preview

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *