ரூத்தின் சரித்திரம்
மீட்பின் கதை
“ரூத்தின் சரித்திரம்” என்று பெயர்பெற காரணம்
1. இந்தப் புத்தகம் இதில் வரும் பிரதான நபரான, மோவாபிய இளம் பெண்ணான ரூத்தின் பெயரையே புத்தகத்தின் பெயராக கொண்டுள்ளது.
2. ரூத் என்பதற்கு நண்பன் என்று பொருள்.
3. அவள் தாவீதின் கொள்ளுப்பாட்டியாகி இயேசுவின் வம்சவரலாறில் இடம்பெறுகிறாள்.(4:21-22, மத் 1:1,5)
4. பெண்ணின் பெயரை கொண்டுள்ள இன்னுமொரு வேதாகம புத்தகம் எஸ்தர்.
ஆக்கியோனும் தகவல்களும்
1. எழுதியவர் யாரென்று அறியப்படவில்லை.
2. தீர்க்கதரிசியாகிய சாமுவேல் இதை எழுதினார் என்பது யூதப்பாாரம்பரியத்தின் நம்பிக்கை.
3. தாவீதைப் பற்றிய குறிப்பு (4:17,22) வருவதால் சாமுவேல் எழுதியிருக்க வாய்ப்பில்லை. அதற்கு பிந்திய காலத்திலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும்.
4. மேலும் இதற்கு பயன்படுத்தபட்டுள்ள இலக்கிய வடிவம் இது மன்னராட்சி ஏற்படுத்தபட்ட பின்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதை காண்பிக்கிறது.
5. எழுதப்பட்ட காலம் : கிமு 1000 – 950 இடைப்பட்ட காலம்
6. அதிகாரங்கள் : 4
7. வசனங்கள் : 85
வரலாற்றில் இந்த புத்தகத்தின் இடம்
1. இந்த புத்தகத்தில் இடம்பெறும் சம்பவங்கள் நியாயாதிபதிகளின் காலத்தில் இடம்பெற்றது.
2. நியாயாதிபதிகளின் புத்தகத்தில் காண்கிறபடி வழிபாட்டுச் சீர்கேடும், ஒழுக்கக் குறைவும், தேசத்தின் ஒற்றுமையின்மையும், அன்னிய ஆக்கிரமிப்புகளும் நடந்த காலம்,
3. யோசுவாவின் புத்தகத்திலும், நியாயாதிபதிகளின் புத்தகத்திலும் சொல்லப்பட்ட நிகழ்வுகளான வன்முறைகளோடும், எதிரிகளின் படையெடுப்புகளோடும் ஒப்பிடுகையில் புயலின் மத்தியில் நிலவும் அமைதியை போன்றதொரு அருமையான புத்தகம்.
4. இஸ்ரவேலருக்கும், மோவாபியருக்கும் இடையே சமாதானம் நிலவிய காலத்தில் இந்த சம்பவம் நடந்தது (நியா 3:12-30 காலத்திற்கு முற்றிலும் நேரெதிரானது) 1 சாமு அதி 1-2ல் விபரிக்கப்பட்டள்ளதைபோல ஒரு இஸ்ரவேலின் குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கையின் உள்ளரங்கங்களை வெளிப்படுத்துகிறது.
5. நியாயாதிபதிகளின் காலத்தில் காணப்பட்ட இருண்ட நிலைக்கு சற்று மாற்றாக ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தரும் வண்ணம் மீதியாயுள்ளவர்களின் விசுவாசமும் தாழ்மையும் சொல்லப்படுகிறது.
ரூத்தின் சரித்திரத்தின் சுருக்கம்
1. யூதேயா தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டதால் பெத்லெகேம் ஊரானாகிய எலிமெலேக்கு தன்று மனைவியோடும் இரு மகன்களோடும் மோவாப் தேசத்திற்கு போனான். இரு மகன்களும் மோவாபிய பெண்களான ருத்தையும்,ஓர்பாளையும் மணந்து கொண்டார்கள்.
2. பத்து வருடங்களின் முடிவில் மூன்று பெண்களும் விதவைகளானார்கள், நகோமி பெற்லெகேமுக்கு திரும்ப தீர்மானிக்கிறாள். நகோமி சம்மநிக்காதபோதும் ரூத் அவளுடன் பெத்லெகேமுக்கு போயதில் உறுதியாயிருந்தாள். ரூந் நகோமிக்கும் இளபரவேலின் தேவனுக்கும் தன்னை அர்ப்பணித்திருந்ததை 16-17 வசனங்களில் காணலாம். ‘நான் உமமைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறிந்து, என்னோடே போவேண்டாம்: நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன் உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன், நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து அங்கே அடக்கம்பண்ணப்படுவேன் மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை வீட்டு என்னைப் பிரித்தால், கர்ந்தர் அதற்குச் சரியாகவும் மநற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கூடவர் என்றாள்”.
3. வாற்கோதுமை அறுப்பு காலத்தில் அவர்கள் பெத்லெகேமுங்கு வந்தார்கள், ரூத போவாஸ் என்பவனது வயலில் கதிர்களை பொறுக்கச் சென்றாள். போவாசின் நற்குணங்களை அவன் தனது வேலைக்காரர்களை நடத்திய விதத்திலிருந்து அறியக்கூடியதாயுள்ளது. (ரூத் 2:4) யூத சட்டத்தின்படி தனது இறந்துபோன கணவனின் நெருங்கிய உறவினன் நள்ளை மனைவியாக ஏற்றுக்கொள்ள ரூத்தினால் வலியுறுத்த முடியும் போவாஸ் ரூத்தின் இறந்துபோன கணயனுக்கு உறவினன் என்றபோதும், அவளை மனைவியாக்கிக்கொள்ள விரும்பியபோதும், அவளை விடவும் நெருங்கிய உறவிளம் ஒருவள் இருந்ததால் சில முறைமைகளும், சட்டங்களும் நிறைவேறிய பின்னரே அவளை சட்டபூர்வமான மனைவியாக்கிக்கொள்ள முடியும்.
4. அவ்வாறு அவன் அவளை அயலகத்தரின் ஆசிகளோடு தனக்கு மனைவியாக்கி ஒபேத்திற்கு
பெற்றோராளர்கள், ஓபேத்து தாவீதிற்கு பாட்டனாளாவி. தேவன் மீட்கிறவர்
ருத்தின் அறிக்கை
இத் 1:16-17 அதற்கு ருத் நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
ருத்தின் இந்த வார்த்தைகள் தேவளிடத்திலும், மனிதனிடத்திலும் உள்ள அன்பையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றன. தேவன் அவளது அர்ப்பணிப்பை அவளை மீட்கிறவனான போவாஸை அனுப்பி தளம்பண்ணினார்.
போவாசின் சாட்சி
ரூத் 2:12 உள் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இசுஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன்கிடைப்பதாக என்றான். ருத்தின் புத்தகம் நாவீதின் வம்சந்தில் வெளிப்பட்ட மேசியாவின் வம்சவரலாற்றில் இடம்பெற்ற மோவாபிய பெண்னான ரூத் எவ்வாறு இடம்பெறுகிறாள் என்பதை காட்டுகிறது.
உணமைக்கும். உத்தமதற்கும் தேவன் பலனளிக்கிறவர் என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு.
ரூத்தின் சரித்திரம் குறித்து ஒரு பார்வை
1. முன்னுரை நகோமியின் இழப்பு (1:1-5)
2. நகோமி மோவாபிலிருந்து திரும்புதல் (1:6-22)
3. ரூத் நகோமியை பற்றிக்கொள்ளல் (15-18)
4. ரூந்தம் நகோமியும் பெந்தலெகேமுக்கு திரும்புதல் (1:19:22)
5. ருத்தும் போவாசும் அறுப்பின் வயலில் சந்தித்தல் (அதி 2)
6. ரூந் வேலையை தொடங்குதல் 2:1-7)
7. போவாளி குத்திற்கு இரக்கம் காண்பித்தல் (28-16)
8. ரூத் நகோமியிடம் திரும்புதல் (2:17-23)
9. நகோமி ருத்தை போவாசின் தூற்றும் களத்திற்கு அனுப்புதல் (அதி 3)
10. நகோமி ரூத்திற்கு அறிவுரை கூறுதல் (3:1-5)
11. போவால் அவளை மீட்டுக்கொள்வதை உறுதிகூறுதல் (36-15)
12. ரூத் நகோமியிடம் திரும்புதல் 3:16-18)
13. போவாஸ் தனது உறுதிகூறுதலை நிறைவேற்ற முயலுதல் (4:4-12)
14. பெயர் குறிப்பிடப்படாத உறவினனை எதிர்கொள்ளல் (4:1-8)
15. போவாஸ் நகோமியின் சுதந்திரத்தை மீட்டுக்கொண்டு குத்தை மனைவியாக்கிக் கொள்வதை அறிவித்தல் (49-12)
16. ரூத்தை மனைவியாக்கிம் கொள்ளுதல் (4:13-47)
17. முடிவுரை: தாவீதின் வம்சவரலாறு (4:18-22)
pdf file preview