மனந்திரும்பு
எவற்றை விட்டு மனந்திரும்ப வேண்டும்?
நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப் படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள்பெலன் (ஏசா 30:15)
தலைப்பு : எவற்றை விட்டு மனந்திரும்ப வேண்டும்?
கருப்பொருள் : மனந்திரும்புங்கள்
ஆதார வசனம் : ஏசா 30:15
துணை வசனம் : வெளி 2:5; அப் 8:22
1. பாவத்தை விட்டு (லூக் 5:32]
-
பாவத்தைக் கர்த்தர் விசாரிக்கிறார் (யாத் 32:34)
-
பாவத்தைக் குறித்துப் போக்குச் சொல்லக்கூடாது (யேவா 15:22)
-
பாவம் மரணத்தைப் பிறப்பிக்கிறது (யாக் 1:15)
2. அசுத்தங்களை விட்டு (2கொரி 12:21)
-
ஜாதிகளின் அசுத்தங்களை விட வேண்டும் (எஸ்றா 6:21)
-
உலகத்தின் அசுத்தங்களை விட்டு (2பேது 2:20)
-
அவயவங்களின் அசுத்தங்களை விட்டு (ரோ 6:19)
3. துர்க்குணத்தை விட்டு (அப் 8:22)
-
இயேசு எல்லாரின் துர்க்குணத்தையும் அறிகிறார் (மத் 22:18)
-
துர்க்குணத்தில் குழந்தைகளைப் போலிருக்க வேண்டும் (1கொரி 14:20)
-
துர்க்குணத்தை நம்மை விட்டு நீக்க வேண்டும் (எபே 4:31)
4. மீறுதல்களை விட்டு (வெளி 2:5)
-
சரீரங்களை பரிசுத்தமாய் ஒப்புக்கொடுக்க வேண்டும் (ரோ 12:1)
-
நமது மீறுதல்களினிமித்தம் இயேசு காயப்பட்டார் (ஏசா 53:5)
-
மீறுதல்களை கர்த்தருக்கு அறிக்கையிட வேண்டும் (சங் 32:5)
5. வேசித்தனங்களை விட்டு (வெளி 9:21)
-
வேசித்தனம் செய்வது மதிகெட்ட காரியம் (உபா 22:21)
-
வேசித்தனத்தினால் தேசம் தீட்டுப்படும் (எரே 3:2,9)
-
வேசித்தனம் முறைகேடான அருவருப்பாயிருக்கிறது (எரே 13:27)
6. தேவனை மகிமைப்படுத்த (வெளி 16:9)
-
ஸ்தோத்திரம் செலுத்தும்போது தேவன் மகிமைப்படுகிறார் (சங் 50:23)
-
நற்கிரியைகளின்மூலம் தேவன் மகிமைப்படுகிறார் (மத் 5:16)
-
கிறிஸ்துவினிமித்தம் பாடுபட்டால் தேவன் மகிமைப்படுகிறார் (1பேது 4:16)
7. அசுத்தக் கிரியைகளை விட்டு (வெளி 16:11)
-
தேவன் நம்மை அசுத்தத்திற்கு அழைக்கவில்லை (1தெச 4:7)
-
அசுத்தமானதைத் தொடாதிருக்க வேண்டும் (2கொரி 6:17)
-
அசுத்தங்களையெல்லாம் நம்மை விட்டு நீக்க வேண்டும் (எசே 36:29)
நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 18:3)
நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துலின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் (அப் 2:38)