சாமுவேலின் முதலாம் புத்தகம்

 

சாமுவேலின் முதலாம் புத்தகம்

சாமுவேலின் புத்தகம்

 

மாற்றங்களின் புத்தகம்

“சாமுவேல்” என்று பெயர் பெற காரணம்

சாமுவேல் என்ற பெயருக்கு “தேவனின் நாமம்” அல்லது தேவன் கேட்டருளினார்” என்று பொருள்.

எபிரேய வேதாகமத்தில் 1.2 சாமுவேலின் புத்தகங்கள் ஒரே புத்தகமாக சாமுவேலின் புத்தகம்” என்று வைக்கப்பட்டுள்ளது.

Septuagint என்று அழைக்கப்படும் கிரேக்க மொழிபெயர்ப்பில்தான் முதல் முறையாக இந்தப் புத்தகம் இரண்டு பத்தகங்களாக பிரிக்கப்பட்டது.

ஆக்கியோனும் தகவல்களும்

இந்த புத்தகத்தின் இடம்பெறும் முக்கிய நபர்களில் சாமுவேலும் ஒருவர். இவர் இளவயதுள்ள தீர்க்கதரிசியாகவும், இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதியாகவும், சவுல், தாவீது என்னும் இராஜாக்களை அபிஷேகம் செய்த ஆசாரியராகவும் இருந்தார்.

இந்த புத்தகத்தின் இடம்பெறும் முக்கிய நபரான சாமுவேலின் பெயரினால் இந்த புத்தகம் அழைக்கப்பட்டாலும் இந்தப் புத்தகத்தை எழுதியவர் இன்னார் என்பது குறிப்பிடப்படவில்லை.

சாமுவேல் இதை எழுதியிருக்கலாம் அல்லது 1சாமு1:4-24:22 பகுதிகள் அவரது மரணம்வரையுள்ள சரிதத்தை கூறுவதால் அதற்கான தகவல்களை அவர் கொடுத்திருக்கலாம். தாவீது ராஜாவின் நடவடிக்கைகளை சாமுவேலும், நாத்தானும், காத்தும் எழுதிவைத்தாக 1நாளா 29:29-30ல் வாசிக்கிறோம். இவற்றில் எழுதப்பட்ட காரியங்களின் சாட்சியங்களின் அடிப்படையில் பார்க்கும்போது 1,2 சாமுவேலின் புத்தகங்கள் சாமுவேலும், நாத்தானும், காத்தும் எழுதிவைத்தவற்றை பயன்படுத்திய தீர்க்கதரிசிகளின் குழுவை சேர்ந்த ஒருவரால் தொகுக்கப்பட்டிருக்ககூடும்.

அதிகாரங்கள் : 31

வசனங்கள் 810

வரலாற்றில் இந்த புத்தகத்தின் இடம்

1 சாமுவேல் புத்தகம் 110 ஆண்டு கால வரலாற்றை சொல்லுகிறது. சாமுவேல் பிறந்த (கிமு. 1120) நியாயாதிபதிகளின் காலம் முடியும் நாட்களில் இருந்து, சவுலின் மரணம் சம்பவித்த காலம் (கிமு 1011) வரையுள்ள காலத்தின் சம்பவங்கள் சொல்லப்பட்டுள்ளது.

சாமுவேலின் முதலாம் புத்தகம் குறித்து ஒரு பார்வை

 

1வது மாற்றம்:

இரண்டு நியாயாதிபதிகளுக்கிடையே தலைமைத்துவத்தில் மாற்றம், ஆசாரியனான ஏலியிடம் இருந்து நியாயாதிபதியான சாமுவேலிடம் தலைமைத்துவம் மாறுகிறது.

2வது மாற்றம்:

இஸ்ரவேல் தேவனை மையமாய் கொண்டிருந்த முறையில் இருந்து அரசனை மையமாய் கொண்டிருக்கும் முறைக்கு மாறுதல். நியாயதிபதியான சாமுவேலிடத்திலிருந்து அரசனான சவுலிடத்திற்கு தலைத்துவம் மாறுகிறது.

3வது மாற்றம்:

அரசனான சவுலிடத்திலிருந்து அரசனான தாவீதிற்கு தலைமைத்துவம் மாறுகிறது.

* அதி 1-8: இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதியான சாமுவேலின் பிறப்பும் உயர்வும் குறித்து

* அதி 9-15: சவுல் : தெரிவு – அபிஷேகம் – ஆட்சி – தள்ளப்படுதல்

* அதி 16-30: தாவீதின் வருகை * அதி 31: காயப்பட்ட சவுல் தற்கொலை செய்துகொள்ளல்

தேவனின் சுபாவம் வெளிப்படுத்தப்படுதல்

1. கேட்கிற தேவன்

* அன்னாளின் ஜெபம் கேட்கப்பட்டது

*   தங்களுக்கு இராஜா வேண்டும் என்கிற ஜனங்களின் சத்தம் கேட்கப்பட்டது

 

2. நியாயம் தீர்க்கும் தேவன்

* ஏலியின் குடும்பத்தாருக்கான நியாயத்தீர்ப்பு

• கூவுலுக்கான நியாயத்தீர்ப்பு

 

3.இளைப்பாறாத தேவன்

*  ஏலியின் குடும்பத்திற்கு பதிலாக சாமுவேலின் நியமனம்

* சவுலுக்கு பதிலாக தாவீதின் நியமனம்

தவறிழைத்த அரசன்

 

1.சவுலின் மேட்டிமை (துணிகரமான கீழ்ப்படியாமை)

 * Iவது சோதனை: கில்காலுக்கு போ. பெலிஸ்தியர்களுடன் யுத்தத்திற்கு ஆயத்தம் செய் ஆனால் 7 நாட்கள் காத்திரு.

1சாமு 13:8-11 பழியை ஜனங்கள் மீது போடுவதில் தேர்ந்தவன். 12ம் வசளத்தில் “என்று எண்ணிக் துணிந்து”,

*  2வது சோதனை : அமலேக்கியர்களோடு யுத்தத்திற்கு போ. ஆனால் எதையும் எடுத்துவராதே 1சாமு 15:19-21 தலைமைப்பண்பில் உள்ள குறைகள் வெளிப்படுதல். பழியை வேறோருவர் மீது போடுதல், மனிதனுக்குப் பயப்படுதல், தலைமைக்கும் தலைமையினால் வழிநடத்தப்படுபவர்களுக்கும் இடையே தொடர்பின்மை.

* தன்னைக்குறித்த பிம்பத்தை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளித்தல்.

2. சவுலின் பொறாமை

குறைபாடுகளுக்கான முன்னுதாரணம் ஒப்பிடுதல் போட்டிபோடுதல் – இச்சித்தல்

தவறிழைத்த அரசன்

1சாமு 18:9 “அந்நாள்முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்

வச 1216 – சவுல் தேவன் தாவிதோடிருக்கிறதை கண்டான்

ஜனங்கள் தாவீதை நேசித்தார்கள் சவுலின் குமாரனும், குமாரத்தியும் தாவீதை நேசித்தார்கள்

3. சவுலின் மறைமுகமான வஞ்சனை 

* தனது குடும்பத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்தல்

மனம்வருந்தவோ, மன்னிப்புக்கேட்கவோ விரும்பாதிருத்தல்

18:17 தாவீதின் திருமணத்தில் சதி செய்தல்

வச 22-24 தாவீதை தீங்கின் பாதையில் வைத்தல்

சாமுவேலின் முதலாம் புத்தகத்தின் முக்கிய பகுதிகள்

 

i. கர்த்தரின் தீர்க்கதரிசி, ஆசாரியன், நியாயாதிபதி (அதி 1-8)

a. சாமுவேலின் பிறப்பு (அதி 1-2)

1. அன்னாள் ஜெபித்தலும், ஜெபம் கேட்கப்படுதலும் (அதி 1)

2 அன்னாளின் தீர்க்கதரிசன ஜெபம்: ஆலயத்தில் சிறுவனான சாமுவேல் (அதி 2)

b. சாமுவேலின் அழைப்பு (அதி 3)

C.கடைசி நியாயாதிபதியின் பணியும், முதல் தீர்க்கதரிசியின் பணியும் (அதி 4-8)

1. பெலிஸ்தர்களால் தேவனுடைய பெட்டி பிடிக்கப்படுதல் சாமுவேலுக்கு கொடுக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை நிறை ஏலி மரணித்தல் அவனது குமாரர் கொல்லப்படுதல் (அதி 4)

2. தேவனுடைய பெட்டியின் நிமித்தமாய் பெலிஸ்தர் தேவனால் தண்டிக்கப்படுதல்: தேவனுடைய பெட்டி பெத்ஷிமேசிற்கு வருதல் (அதி 5.6)

3. சாமுவேல் முதலாவது மறுமலர்ச்சிக்கு தலமையேற்றல் விக்கிரகங்களை விட்டு கர்த்தரிடமாய் திரும்பு அறைகூவல் எபினேசரில் வெற்றியீட்டல் (அதி 7)

4. இஸ்ரவேலர் தேவனை தள்ளிவிட்டு ஒரு இராஜாவை கோருதல் சாமுவேல் எச்சரிக்கை செய்தாலும் இராஜாவை வாக்குப்பண்ணுதல் (அதி 8)

ii.சவுல் (அதி 9-15)

a.  சவுல் ஏற்றுக்கொள்ளப்படுதல் (அதி 9-10)

1. இராஜாவாக தெரிவுசெய்யப்படுதல் (அதி 9)

2. இராஜாவாக அபிஷேகம் செய்யப்படுதல் (அதி 10)

b.சவுலின் ஆட்சி (அதி 11)

1. சவுல் அம்மோனியர்களை வெற்றிகொள்ளல் (அதி 11)

2. அதிகாரம் சாமுவேலிடமிருந்து சவுலுக்கு மாறுதல் (அதி 12)

C.சவுலி அங்கீகாரத்தை இழத்தல் (அதி 13-15)

I. சவுல் தேவனுக்கு எதிராக செயற்படுதல் (அதி 13)

2 யோனத்தானால் பெலிஸ்தியருக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி உண்டாகிறது. ஆனால்

அதற்கான பெருமையை சயும் எடுத்துக் கொள்ளுதல் (அதி 14)

3. ஆகாகின் காரியத்தில் சவுலின் துணிகரமான எதிர்ப்பும், கீழ்ப்படியாமையும் (அதி 15)

 

iii. தேவனின் மனிதனான தாவீது – பிசாசின் மனிதனான சவுல் (அதி 16-31)

 

 a. சவுல் ஏற்றுக்கொள்ளப்படுதல் (அதி 9-10)

b.தாவீது பயிற்றுவிக்கப்படுதல் (அதி 17-18)

1. காத்தூரானாகிய இராட்சசனை தாவீது கொல்லுதல் (அதி 17) 

2. யோனத்தானும் தாவீதும் உடன்படிக்கை செய்தல் சவுல் தனது குமாரத்தி மீகாளை தாவீதிற்கு கொடுத்தல் (அதி 18)

 

C. தாவீது தண்டிக்கப்படுதல் (அதி 1930) 

1. சவுல் மீண்டும் தாவீதை கொல்ல முயலுதல் (அதி 19

2 தாவீநு தப்ப யோனத்தான் உதவுதல் (அதி 20)

3. தாவீது நோபுக்கும், காத்திற்கும் ஓடிப்போதல் (அதி 21)

4 தாவீது தனக்கான சேவகர்களை சேர்த்தல் சவுல் கர்த்தரின் ஆசாரியர்களை கொன்றுபோடுதல் (அதி 22)

5. தாவீது பெலிஸ்தரோடு யுத்தம் செய்தல்: சவுல் தாவீதை பிள்தொடர்தல் தாவீதும் உடன்படிக்கை செய்தல் (அதி 23)

6. என்கேதியில் தாவீது சவுலை கொல்லாமல் தப்பவிடுதல் (அதி 24)

7. சாமுவேலின் மரணம்: தாவீதும் அபிகாயிலும் (அதி 25) 

8 சீப் வனாந்தரத்தில் மீண்டும் தாவீது சவுலை கொல்லாமல் தப்பவிடுதல் (அதி 26)

9. பெலிஸ்தரின் தேசத்தில் உள்ள சிக்லாகிற்கு தாவீஹ் ஒளிந்துகொள்ளும்படி போகுதல் (அதி 27)

10. சவுல் எந்தோரில் உள்ள குறிசொல்லுகிறவளிடத்தில் செல்லுதல் (அதி 28)

11. பெலிஸ்தர் யுத்தத்திற்கு தங்களோடு வரும் தாவீதை நம்புவதற்கு மறுத்தல் (அதி 29)

12. அமலேக்கியர் சிக்லாக்கை கொள்ளையிட்டதால் தாவீது அவர்களோடு யுத்தம்செய்தல் (அதி 30)

 

d.சவுல் யுத்தத்தில் பலத்த காயம்பட்டு, தற்கொலை செய்துகொண்டு மரித்தல் (அதி 31)

 

இதன் pdf file உங்களுக்கு தேவை என்றால் தயவு செய்து 25 வினாடிகள் காத்திருக்கவும் Download Timer Countdown முடிந்தவுடன் Download Button தெரியும்.

You have to wait 25 seconds.

Download Timer

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page