யூதர்களின் சோக வரலாறு 8

 

யூதர்களின் சோக வரலாறு 8

 

ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானான் – வன்கொடுமை முகாம்கள் திறப்பு

 

“ஜெர்மனியே விழித்தெழு யூதர்களை ஒழித்துக்கட்டு” என்ற நாஜிக் கட்சியினர் பாராளுமன்றத்திற்குள் நுழையும்போது எழுப்பிய முழக்கம் ஜெர்மனி எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. அது யூதமக்களிடையே பெரும் பீதியை உண்டாக்கிற்று. என்ன நடக்கப்போகிறதோ என்ற பதட்டநிலை உருவாயிற்று.

 

நாஜிக் கட்சியினரின் புயல்படையினர் யூதர்களின் புதிய ஆண்டிற்கு முந்தியநாள் யூத ஆலயங்களுக்குச் சென்று திரும்பிய யூதர்களை கொடூர மாகத் தாக்கினார்கள். ஒரு சம்பவத்தில் மூன்று ஜெர்மானிய வாலிபர்கள் முதிற்வயதான ஒரு கண்ணியமான யூதப்பெரியவரை ரப்பர் குண்டாந் தடியைக் கொண்டு தாக்கினார்கள். 5 வாலிபர்கள் தாக்குபவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து சுற்றி நின்றனர். ஒரு பலவீனனை சில பலவான்கள் சேர்ந்து தாக்குவதும் தாக்கும் பலவான்களுக்கு சில பலவான்கள் பாதுகாப்பு கொடுப்பதும் நாஜிக்கட்சி புயல் படையினரின் வழிமுறையாகவே மாறி விட்டது. அதைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தீட்டுப் படுத்தும் வகையில் சில அருவருப்பான காரியங்களைச் செய்து யூதர்களைப் புண்படுத்தினார்கள். 100க்கும் மேற்பட்ட யூத கல்லறைத் தோட்டங்களிலுள்ள கல்லறைகள் அழிக்கப்பட்டன. தங்கள் முன்னோர்களில் கல்லறைகள் அழிக்கப்படுவதைக் கண்டு மனங்குமுறினார்கள்.

 

ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானார்

 

1932 ஜுலை 31ம் நாள் நடந்த தேர்தலில் 230 பாராளுமன்ற இடங்களை பிடித்தது. கூட்டாட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாயிற்று. ஹிட்லரின் தலைமையை ஏற்றுக் கொள்ளத் தொடக்கத்தில் எதிர்ப்பு | கள் இருந்தாலும் பின்னர் அவ ருடைய தலைமையை ஏற்க ஒப்புக் கொண்டனர். 1933 ஜன. 30ம் நாள் தனது 43வது வயதில் சான்ஸ் செலராக (CHANCELLOR) அதாவது ஜெர்மனி யின் அதிபதியாகப் பதவி ஏற்றார். யூத மக்களிடையே சிறுபிள்ளைகள் கூட அஞ்சி நடுங்கும் சூழ்நிலை உருவாயிற்று.

 

1933 பிப்ரவரி 5வது நாள் ஜெர்மனின் பாராளுமன்றத்தில் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டு (EMERGENCY DECREE) ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானார். கம்யூனிஸ்ட் கட்சியினர், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் எதிர்கட்சியினர்களின் அலுவலக கட்டடங்களும் அரசின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன. இந்த சூழ்நிலை ஹிட்லரின் புயல் படையினருக்கு தாங்கள் நினைத்தபடி எந்தக் கட்டிடத்தையும் கைப் பற்றினார்கள். எதிர்ப்பாளர்களை கடுமையாகத் தாக்கி விரட்டியடித்தனர்.

 

அவசரகாலச்சட்டம் பிரகடனப் படுத்தப்பட்ட 3 வாரங்களில் அதாவது பெப்ரவரி 27ம் நாள் பாராளுமன்றக் கட்டிடம் (REICHSTAG BUILDIND) தீப்பற்றி எரிந்தது. துரிதமாகத் தீ அணைக்கப் பட்டது. எனினும் விசாரணை தீவிர மடைவதற்கு முன்பாகவே விசாரணை யின்றி யாரையும் கைது செய்து சிறை யிலடைக்கும் சட்டம் பெப்ரவரி 28ம் நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. இச் சட்டத்தைப் பயன்படுத்தி ஹிட்லரின் அரசியல் எதிர்ப்பாளர்கள், தீ வைத்தது யூதர்களின் சதித்திட்டத்தின் விளைவே என்ற பரபரப்பை நாஜிக்கட்சியினர் உருவாக்கிவிட்டு அதைச் சொல்லி யூதமக்களையும் கூட்டம் கூட்டமாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியலிலும் யூத மக்களிடை யேயும் நன் மதிப்பைப் பெற்ற பெர்லினைச் சேர்ந்த பேர்ன்ஸ் டெயின் (BERNSTEIN) என்பவரைக் கைதுசெய்து பலர் அறிய பொது இடத்தில் வைத்து அவர் கம்யூனிஸ்ட் என்ற காரணத்தால் 50 கசையடிகளும் (FIFTY LASHES) அவர் யூதன் என்ற காரணத்தால் மேலும் 50 கசையடிகளும் கொடுக்கப் பட்டன. இச்சம்பவம் பரபரப்பை உண்டாக்கினாலும் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமானவைகளாக மாறிவிட்டன. புயல்படையினரால் பல யூதர்கள் இரத்தம் சொட்டச்சொட்ட கொடூரமாக அடிக்கப்பட்டனர். அடித்து குற்றுயுராய் சாலை ஓரங்களில் போடப்பட்டனர். வெளிநாட்டுத் தூதுவர்கள், பத்திரிக்கையாளர்கள் இச்சம்பவங்களுக்கெல்லாம் சாட்சிகளாக இருந்தார்கள்.

 

வன்கொடுமை முகாம்கள் (CONCENTRATION CAMPS)

 

கைது செய்யப்பட்டவர்களை அடைப்பதற்கும் போதிய சிறைகள் வசதிகள் இல்லாத காரணத்தால் முனீச் அருகிலுள்ள டாக்கொவ் (DACHAU) என்ற இடத்தில் வன்கொடுமை முகாம்களை (CONCENTRATION CAMPS) உருவாக்கினார்கள். கற்கள் எடுக்கப்பட்ட கல்குவாரிகளில் குழிகளில் குடிசைகள் போன்று கூரைகள் போட்டு (HUTS IN A GRAVEL PIT) கைது செய்யப் பட்டவர்கள் பாதுகாக்கப்பட்டனர். அடிப்படை வசதிகள் அற்ற அந்த இடத்தில் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் குவிக்கப்பட்டனர். புயல் படையினரே அதைக் காவல் செய்தனர். மார்ச் 1933ல் டாக்கொவ் வன் கொடுமை முகாமில் 5000 கைதிகளை வைக்கும் அளவுக்கு அதைப் பெரிதாக்கினார்கள். மார்ச் 13ம் நாள் யூதவழக்கறிஞர்கள். நீதிபதிகள் யூதர்களுக்கு அனுகூலமாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு காரண மாக எல்லா யூத வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் பிரஸ்லௌ நீதிமன்றத்தை விட்டு வெளியே தள்ளப்பட்டனர். யூதர்கள் கொடூரமாகத் தாக்கப்படுவதும் கைது செய்யப்பட்டு வன்கொடுமை முகாம்களுக்கு அனுப்பப்படுவதும் தொடர்ந்து நடந்துகொண்டேயிருந்தன. யூதர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு கடை உரிமையாளர்கள் தாக்கப்பட்டனர். யூத மத குருக்களாகிய ரபிக்கள் கேவலமாக நடத்தப்பட்டுத் தாக்கப்பட்டனர். யூத மக்களை ஒன்று படுத்தித் திரட்டக்கூடிய தலைவர்கள் என்று கருதப்படுகிற அனைவரும் கைது செய்யப்பட்டு மிகக் கொடூரமாக நடத்தப்பட்டனர். அப்படிப்பட்டவர்களுள் கிண்டர்மான் (KINDER-MANN) என்ற பேக்கரி உதவி யாளர் குறிப்பிடத்தக்கவர். அவரைத் தாக்கிய புயல்படையினரை நீதி மன்றத்தில் புகார் செய்துவிட்டார் எந்த காரணத்திற்காக பெர்லினிலுள்ள புயல்படையினரின் தங்குமிடத்திற்குக் (STORM TROOP BARRACKS) கிண்டர் மானைக் கொண்டுவந்து அவரைப் பயங்கரமாகத் தாக்கி அவரைக் கொன்று விட்டார்கள். அவருடைய பிரேதத்தை ஜன்னல் வழியாக தெருவில் வீசி எரிந்துவிட்டனர். அவருடைய பிரேதம் நெஞ்சில் பலவெட்டுக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

 

யூதர்களின் வியாபார ஸ்தலங்கள் விலக்கி வைக்கப்பட்டன

 

யூதர்களுடைய கடைகளில் ஜாமான்கள் வாங்கக்கூடாது என ஹிட்லரின் அரசு அறிவிப்பு கொடுத்தது. அதற்கு எதிர்ப்புகள் இருந்தது. ஆனால் எதிர்ப்புகள் பொருட்படுத்தப்படவில்லை. ஏப்ரல் 1ம் தேதி முதல் யூதர்களுடைய கடைகளுக்கு முன்பாக ஒரு ஜெர்மானியன் கூட நுழையக்கூடாது என ஹிட்லரின் புயல்படையினர் நின்று காவல்செய்ய ஆரம்பித்தார்கள். யூதர் களுடைய கடைகளின் கதவுகளில் “யூதனே, வெளியேறு பாலஸ்தீனத் திற்குப்போ, எருசலேமுக்குப்போ” என்ற அறிவிப்பு எழுத்துக்களைப் பதித்து யூதர்களை ஒடுக்க ஆரம்பித்தனர்.

 

யூத மாணவர்கள் பல்கலைக் கழகங்களைவிட்டு வெளியேற்றம்

 

யூதமாணவர்களும் யூதப் பேராசிரியர்களும் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். இரசாயனத்தில் நோபல் பரிசுபெற்ற பிஃரிட்ஜ் ஹாபர் (FRITZ HARBER) பேராசிரியர் ஸ்தானத்தை விட்டு தள்ளப் பட்டு வெளியேற்றப்பட்டார். மிகவும் பெயர் பெற்ற பேராசிரியரும் சட்ட நிபுணருமான மார்ட்டின் உல்பஃ (MARTIN WOLFF) ஸ்வஸ்திக் அடையாளம் அணிந்திருந்த மாணவர் கும்பல் ஒன்று அவரைத் தாக்கி வெளியேற்றி னார்கள். அல்பெர்ட் ஜன்ஸ் டின் தானாகவே நாட்டைவிட்டு ஓட வைத்தனர். யூத நூலாசிரியர்கள் எழுதிய அருமையான புத்தகங்களையெல்லாம் சேகரித்து பொது இடத்தில் போட்டு தீ வைத்தனர். தீ வைப்பதும் யூத அறிஞர்கள் கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. புத்தகங்கள் எரிக்கப்பட்ட மறுநாள் டாக்டர் மேயர் என்ற புகழ் பெற்ற யூத பல் டாக்டர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். கொடுமைகள் தொடர்ந்தன.

 

யூத விரோதப் போக்கு அண்டைய நாடுகளுக்கும் பரவுதல்

 

1933 பிப்ரவரி 5ம் நாள் ஜெர்மனியின் பாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஹிட்லர் தன்னை சர்வாதியாகப் பிரகடனப் படுத்தியதைத் தொடர்ந்து ஜெர்மனியில் யூதமக்கள் சந்தித்த கொடூர மரணங்களையும், வன்கொடுமை முகாம்களில் எந்த காரணமுமின்றி, விசாரணையுமின்றி அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான நிலவரத்தை யும், பல்கலைக் கழகங்களிலிருந்து யூத மாணவர்களும் பேராசிரியர்களும் மிகவும் சிறுமைப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டனர்.

 

யூதர்களுக்கு விரோதமான வன் முறை

 

தொடர்ந்து யூதர்களுக்கு விரோதமாக நடந்த வன்முறை நிகழ்வுகள் காரணமாகவும் யூத சமூகத்தின் முன்னணித் தலைவர்களை தேடிப் பிடித்து கொலைசெய்யப்படுகிற சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டிருந்த காரணத் தாலும் ஆயிரக்கணக்கான யூதர்கள் தங்கள் வீடுகள், வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த அனைத்து உடைமைகள், நண்பர்கள் எல்லோரையும் விட்டு குடும்பத்தினரோடு ஜெர்மனியை விட்டு வெளியேறினார்கள். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனத்திற்குத் திரும்பினார்கள். அநேகமாயிரம் யூதர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்ந்து சென்றனர். ஜெர்மனியைவிட்டு வேறு நாட்டுக்குச் செல்லமுடியாத நிலவரத்திலுள்ள சிலர் தற்கொலை செய்து கொண்டனர். வேறு சிலர் இந்தப் புயல் கடந்து சென்றுவிடாதா என்ற ஏக்கத்தோடு காத்திருந்தார்கள். ஆனாலும் 26 ஜீன் 1933 ஜெர்மானிய அரசு பத்திரிக்கை அறிக்கையின்படி “யூதர்கள் அல்லாத ஜெர்மனியை உருவாக்க வேண்டும். அதுவே எங்கள் தேசிய இலட்சியம்” என்று பிரகடனப்படுத்திற்று.

 

அண்டைய நாடுகளிலும் அச்சம்

 

ஜெர்மனிக்கு வெளியே பல்வேறு நாடுகளில் வாழுகிற யூதர்கள் ஜெர்மனியில் யூதர்களுக்குச் சம்பவிப்பதை மிகுந்த அச்சத்தோடு கவனித்து வந்தனர். குறிப்பாக போலந்து ஜெர்மனியின் கிழக்கு எல்லையிலுள்ள அண்டைய நாடு. அந்த நாட்டில் மட்டும் 30 லட்சம் யூதர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மிகுந்த பீதியில் வாழ்ந்து வந்தனர். வார்சா (WARSAW) போலந்து நாட்டின் தலைநகரம். வார்சாவைச் சேர்ந்த இளம் யூத வரலாற்று ஆசிரியர் இம்மானுவேல் ரிங்கெல்புளும் (EMANUEL RINGEL- BLUM) ஜெர்மனியில் யூதர்களுக்கு சம்பவிக்கும் கொடுமைகளால் மனம் நொந்தவராக ஹிட்லரின் யூதப் பகைமைக் கொள்கைக்கும், அவனுடைய செயல்பாடுகளைக் குறித்தும் ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தார். ஹிட்லரின் அரசு அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகள், உத்தரவுகள், கடிதங்கள், புகைப்படங்கள், அறிவிப்பு போர்டுகள், சுவரொட்டிகள் போன்ற ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தார். அதற்கான செய்தியை வெளியிட்டு ஆதாரங்களை சேகரித் தார். போலந்திலுள்ள வில்னா என்ற நகரத்தைச் சேர்ந்த டாக்டர் ஜேக்கப் விகோட்ஸ்கி (DR. JACOB WIGODSKY) வில்னாவிலுள்ள பத்திரிக்கை மூலமாக ஹிட்லரின் யூத விரோத திட்டங்களுக்கு எதிராகவும் யூதர்களுக்கு சர்வதேச அமைப்பு (LEAGUE OF NATIONS) அளித்திருக்கும் சம உரிமை கொள்கைகளைச் செயல்படுத்தக் கோரியும் நாம் போராடியாகவேண்டும் என்ற ஒரு அறிக்கையைக் கொடுத்தார். டாக்டர். ஜேக்கப் விகோட்ஸ்கி, இம்மானுவேல் ரிங்கெல்புளும் ஆகியோரின் செயல்பாடுகள் போலந்து யூதர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை உருவாக்கிற்று. போலந்து யூதர்கள் ஜெர்மானிய பொருட்களை புறக்கணிக்க ஆரம்பித்தனர். (BOYCOTTED GERMAN-MADE GOODS) மேலும் ஜெர்மன் திரைப்படங்கள் திரையிடும் சினிமா தியேட்டர்களில் துர்நாற்றத்தை உண்டாக்கும் குண்டுகளை (STINK BOMBS) வீசி புறக்கணித் தனர். ஆனாலும் ஜெர்மனியில் நாஜிப் படையினரின் யூதர்களுக்கு விரோத மான போக்கும் கொடூரச் சம்பவங்களும் பெருகியதே அன்றி எவ்வகையிலும் குறையவில்லை.

 

நாஜிக்கட்சி தவிர மற்ற கட்சிகளுக்குத் தடை

 

1933 ஜீலை 14ம் நாள் ஹிட்லரின் நாஜிக்கட்சி மட்டுமே செயல்பட வேண்டு மென்றும் மற்ற கட்சிகள் தடைசெய்யப்பட்டு பிரகடனம் செய்யப்பட்டது. இப்பிரகடனம் ஹிட்லரின் ஏதேச்சிய அதிகாரம் இன்னும் வலுப்பெற்றது. பிராங்கோனியா (FRANKONIA) ஜெர்மனியின் ஒரு மாவட்டம் போன்ற அமைப்புள்ளது. நியூரம்பெர்க் (NUREMBERG) அம்மாவட்டத்தின் தலைநகரம். டெர்ஸ்டர்மெர் (DER STURMER) என்ற ஜெர்மானியர் பத்திரிகை ஹிட்லரின் திட்டங்களுக்கு வலதுகரம்போல இயங்கிவந்தது. அப்பத்திரிகையின் ஆசிரியர் ஜூலியஸ் ஸ்ட்ரீச்சரை (JOLIUS STREICHER) பாராளுமன்றப் பிரதிநிதியாக ஜீலை 30ம் நாள் நியமனம் செய்தனர். அவருக்கு நீதியியல் அதிகாரங்களும் (JUDI CIAL POWER) கொடுக்கப்பட்டது. அவர் தன்னுடைய அதிகாரத்தைக் கொண்டு நியூரம்பெர்க் நகரில் 250 மிகப் பிரபல்யமான யூத வியாபாரிகளை ஹிட்லரின் ஜெர்மானிய முற்போக்குத் திட்டங்களுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்ய உத்தரவிட்டார். அதோடு மட்டுமின்றி அவர்கள் கைது செய்யப்பட்டு வயலில் புற்களை பல்லால் கடித்து பறிக்க வேண்டும் (PLUCKING THE GRASS OUT OF A FIELD WITH THEIR TEETH) என்ற தீர்ப்பும் அளிக்கப்பட்டது.

 

வன்கொடுமை முகாம்களில் யூதப் பிரமுகர்கள்

 

எதிர்த்து கேட்க எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் அற்றுப்போனபடியால் ஹிட்லரின் கீழுள்ள அதிகாரி ஹிட்லரைப் பிரியப்படுத்தவேண்டுமென்ற நோக்கில் தங்களுக்குத் தோன்றியபடியெல்லாம் யூதர்களுக்கு விரோத மாகச் செயல்பட ஆரம்பித்தார். ரீகென்ஸ்பெர்க் (REGENSBERG) நகரில் மட்டும் ஒரே நாளில் 427 யூதர்கள் கைதுசெய்யப்பட்டு வன்கொடுமை முகாம்களில் வைக்கப்பட்டனர். பெர்லின் நகரில் முதிர் வயதான யூதர்களுள் முற்றும் செவிடானவர்களின் காப்பகத்திலிருந்த ஆதரவற்ற 32 செவிடர் களை மனிதாபிமானமின்றி வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுடைய பராமரிப்பிற்காக அவர்களே ஒரு பெருந்தொகை செலுத்தியதின் பேரில் மாதந்தோறும் அரசும் சிறுமானியத்தைக் கொடுத்து அவர்கள் பராமரிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் வெளியேற்றப்பட்டபோது அவர்கள் செலுத்திய தொகையும் திரும்பக் கொடுக்கப்படவில்லை.

 

கடும் தண்டனைச்சட்டம்

 

1933 அக்டோபரில் வன்கொடுமை முகாம்களைக் குறித்த புதிய தண்டனைமுறை அமுல்படுத்தப்பட்டது. முகாமின் சட்டதிட்டங்களுக்கு மாறாக சிறிய தவறானாலும் அவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படும் என்பது செயல்முறைக்கு வந்தது. ஒருவனை கருவியாக வைத்துக்கொண்டு முகாம் அதிகாரிகள் நினைத்தால் யாரையும் தூக்கிலிடலாம் என்ற நிலை உருவாயிற்று. இதைப் பயன்படுத்தி அநேகர் கொல்லப்பட்டனர். டாக்டர். தியோ கட்ஜ் (DR.THEO KATZ) என்ற யூதர் வன்கொடுமை முகாம் மருத்துவ மனையில் மருத்துவராக இருந்தார். அவர் எந்தவித வெளிப்படையான காரணமின்றிக் கொல்லப்பட்டார். டாக்டர். அல்பெர்ட் ரோசென்பெல்டர் என்ற யூதர் மிகப் பிரபல்யமான வழக்கறிஞர். அவர் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவர் என்ன ஆனார் என்று தெரியாத அளவுக்கு அவரை இல்லாமல் ஆக்கிவிட்டனர்.

 

யூதர்கள் வெளியேற்றம்

 

ஒவ்வொரு நகரங்களிலும், கிராமங்களிலும் எல்லோரும் அறியத்தக்க இடத்தில் “யூதர்களே வெளியேறுங்கள் உங்களை நாங்கள் விரும்பவில்லை” என்று கொட்டை எழுத்தில் பெரிய விளம்பர போர்டுகள் நிறுவப்பட்டன. நகரங்களில் ஹோட்டல், ஸ்டேடியம், கடைகள், சாலைகள் ஆகிய இடங்களில் எங்கும் திரும்பினாலும் காணும் வகையில் சிறிய போர்டுகள் வைக்கப்பட்டன. யூதர்கள் எங்கும் தலைகாட்ட முடியாத சூழ்நிலைகள்ஏற்பட்டன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூதர்கள் மேற்கு ஐரோப்பியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குக் குடிபெயர்ந்து சென்றனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனத்திற்குச் சென்றனர். பாலஸ்தீனத்திற்குச் சென்ற யூத மக்கள் அங்குள்ள அரேபியர்கள் குடிபெயர்ந்து வந்த யூதர்களுக்கு விரோதமாகக் கலகம் செய்தனர். ஆகவே வந்த இடத்திலும் அவர்கள் இளைப்பாறுதல் அற்றவர்களாக இருந்தனர். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஹிட்லரின் நாஜி அரசு பாலஸ்தீனம், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு ரேடியோ பெர்லின் மூலம் வானொலிச் செய்திகளை அனுப்பி யூதர்களுக்கு எதிராக பகைமை உணர்வை ஊக்குவிக்கும் வகையில் செயல் பட்டனர்.

 

யூதரில்லாத கிராமம்”- அமைக்கும் திட்டம்

 

1934ம் ஆண்டு துவக்கத்தில் ஹிட்லரின் நாஜி அரசு “யூதரில்லாத கிராமம்” (JEW-FREE VILLAGES) என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி நாஜி புயற்படையினர் (STORM TROOPS) இதை செயல்படுத்த ஆரம்பித்தனர். இதை முதல் முறையாக ஆர்ன்ஸ் வால்டெ என்ற கிராமத்தில் செயல்படுத்தினர். புயல்படையினர் திடீரென்று கிராமத்திற்குள் நுழைந்து யூதர்களின் வீடுகளை அடித்து நொறுக்கி, வீடுகளை கொள்ளையிட்டு இரவெல்லாம் நாசவேலையில் ஈடுபட்டனர். கையில் சிக்கிய யூதர்களை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்தனர். யூத மதவழிபாடுகளை நடத்தும் ரபிகளின் வீட்டிற்குள் நுழைந்து அவர்களை அடித்து அவமானப்படுத்தினார்கள். யூதர்களுடைய ஆலயங்களுக்குள் நுழைந்து அணையா விளக்கை உடைத்து மற்றும் வழிபாட்டு பொருட்களை உடைத்து நாசம் செய்தனர். எதிர்த்து நிற்கமுடியாதவர்களாக விடிவதற்குள்ளாக மனைவி, பிள்ளைகளை யும் இழுத்துக்கொண்டு கிராமத்தை விட்டு தங்கள் வீடுகளையும் உடைமை களை விட்டுவிட்டு ஜீவன் தப்ப ஓடி விட்டனர்.

 

யூதரில்லாத முதல் கிராமம் உருவாயிற்று.

 

“ஜெர்மனியில் யூதர்கள் இல்லாத கிராமங்களை (Jew-free villages) அமைப்போம்” என்ற ஹிட்லரின் திட்டம் நாஜிப் புயற்படையினரைக் கொண்டு (Storm Troops) தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது. 1934ல் ஆர்ன்ஸ் வால்டே என்ற யூதரல்லாத முதல் கிராமம் உருவாயிற்று. அத்திட்டத்தை நிறைவேற்றும் பணியில் யூத மக்கள் எவ்வளவு கொடுமைக்குள்ளானார்கள், விரட்டி யடிக்கப்பட்டனர்.

 

யூதர்கள் அற்ற கிராமத் திட்டம் தீவிரமாகத் தொடர்ந்தது. நாஜிப் புயற்படையினர் இரவு வேளைகளில் யூதர்கள் வாழும் கிராமத்திற்குள் நுழைந்து திடீர் தாக்குதல்களை நடத்தி பெண்களை, சிறு பிள்ளைகளை வெளியே இழுத்து வந்து அவர்களை அவமானப்படுத்துவதும் வீடுகளிலுள்ள பொருட்களை அடித்து நொறுக்கி நாசப்படுத்துவதும் குடும்பத்திலுள்ள ஆண்களைக் கொடூரமாகத் தாக்குவதும் கிராமங்கள் தோறும் தொடர்ந்தனர். இதற்கு பயந்து அநேகர் அண்டைய நாடுகளாகிய போலந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்குத் தப்பியோடினார்கள். சிலர் இந்த சூழ்நிலைகளில் தற்கொலை செய்துள்ளனர்.

 

யூத தேவாலயங்கள் நொறுக்கப்பட்டன

 

யூதர்களுடைய தேவாலயங்களுக்குள் (Synagogue) நுழைந்து தோரா (To rah) என்ற மோசேயின் ஐந்தாகமப் புத்தகத்தை கால்களின் கீழே போட்டு மிதித்து அவற்றைக் கிழித்து நாசப்படுத்துவதும், அணையாவிளக்குகளை (Eternal Lamp) அணைத்து அவற்றை நொறுக்கி நாசப்படுத்துவதும் யூதப் போதகர்களாகிய ரபியின் (Rabbi) வீடுகளுக்குள்ளும் நுழைந்து அவர்களைத் தாக்குவதும் தொடர் நிகழ்ச்சிகளாக நடந்தன. யூதர்கள் தெருக்களிலும் மற்ற இடங்களிலும் காணும் இடங்களிலெல்லாம் கொடூரமாகத் தாக்கப்பட்டார் கள். இதன் காரணமாக யூதர்கள் அநேக கிராமங்ககளை விட்டு வெளி யேறினார்கள். ஒருவேளை வெளியேறாமல் யாரேனும் யூதர்கள் இருந்தால் அவர்கள் தீண்டத்தகாதவர்களாக புறக்கணிக்கப்பட்டும் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

 

வதந்திகளைக் கிளப்பி யூதப் பகைமையை வலுப்படுத்தினர்

 

1934 மே 1ம் தேதி டெர்ஸ்ட்ரம்மெர் (Der sturmer) என்ற நாளேடு யூதர்களுக்கு விரோதமான செய்திகள் அடங்கிய 14 பக்க துணை நாளேடாக (Supplimentary) வெளியிட்டது. யூதர்கள் பஸ்கா அப்பத்தைத் (Passover Bread) தயாரிக்க கிறிஸ்தவர்களை கொலை செய்து அவர்களின் இரத்தத்தைக் கலந்து தயாரிக்கின்றனர் என்றும் “சடாங்காச்சார கொலை’ (Ritual murders) செய்கின்றனர் என்றும் ரபிகள் கிறிஸ்தவ குழந்தைகளின் இரத்தத்தை உரிஞ்சுகின்றனர் என்றும் அதற்கு ஆதாரமென சில படங்களையும் வெளியிட்டது. 1,30,000 பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு எங்கும் விளம்பரப் படுத்தப்பட்டது. இந்த செய்திகள் யூதர்கள் மீது வெறுப்புணர்வுகளை தூண்டி கிராமங்களிலுள்ள யூதர்களை வெளியேற்றும் திட்டம் இன்னும் தீவிரப் படுத்தப்பட்டது. யூதர்கள் விட்டுச் சென்ற வீடுகள் மற்றும் சொத்துக்கள் அனைத்திலும் ஸ்வஸ்திக் சின்னமிட்ட கொடிக்கம்பங்களை நாட்டி நாஜிக் கட்சியினர் அவற்றை உரிமை பாராட்டினார்கள். இது ஜெர்மனியிலுள்ள மாவட்டங்கள் தோறும் தீவிரமாகப் பரவியது. “ஒரு நாள் விரைவில் வரும் அன்று ஜெர்மனியில் ஒரு யூதர் கூட இருக்கமாட்டான்” என்று பெரிய விளம்பர போர்டுகளை வைத்தனர். மீதமிருந்த யூதர்களுக்குள் பெரும் பீதி உண்டாயிற்று.

 

ஜூலை 12ம் நாள் “யூதர்களை ஒழித்துக்கட்டுங்கள்” (Finish up with the Jews) என்று நேரிடையான செய்திகளை பத்திரிக்கை வெளியிட்டது. ஜெர்மானியப் பெண்கள் யூதர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. அப்படிப்பட்டத் தொடர்புகளை உடனடியாகத் துண்டித்துக் கொள்ளா விட்டால் நீங்கள் தேசத் துரோகிகளாகக் கருதப்படுவீர்கள். யூதர்களுக்கும் யூதர் அல்லாதவர்களுக்கும் பாலியியல் தொடர்பு இருக்கக்கூடாது என்ற சட்டம் பிறப்பிக்கப்படவேண்டும் என நாஜி ஆதரவுப் பத்திரிக்கைகள் வலியுறுத்த ஆரம்பித்தன. தொடர்ந்து எட்டு வாரங்களுக்குள்ளாக இந்தக் கருத்தை வலியுறுத்தி 14 கட்டுரைகள் வெளியாயின. அப்படிப்பட்டவர்கள் “இனத்தைக் கேடுண்டாக்குபவர்கள்” (Race defiler) எனப் பட்டம் கட்டியது.

 

அனைத்தும் யூதப் பகைமை அனலைக் கொட்டுவதாக இருந்தன. முத்திரையிடப்பட்டச் சவப்பெட்டிகள்:

 

இதைத் தொடர்ந்து அநேக யூதர்கள் பிடிக்கப்பட்டு வன்கொடுமை முகாம்களுக்குக் (concentration camp) கொண்டு செல்லப்பட்டு சித்திர வதைக்குள்ளாகி சவப்பெட்டியில் தான் வெளியே கொண்டுவரப்பட்டனர். அந்த சவப்பெட்டிகள் மூடி முத்திரையிடப்பட்டுதான் வரும். அதை யாரும் திறந்து பார்க்க முயற்சிக்கக் கூடாது. யூதர்கள் எலிகளையும் மிருகங்களையும் வேட்டையாடுவது போல வேட்டையாடி வன்கொடுமை முகாம்களுக்குக் கொண்டுவந்தனர். இதன் விளைவாக 75,000 யூதர்கள் அநேக நாடுகளுக்கு அகதிகளாக சிதறடிக்கப்பட்டனர். பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், ஹாலந், ஆஸ்த்தியா, செக்கோஸ்லோவாக்கிய நாடுகளுக்குள் அடைக்கலம் புகுந்தனர்.

 

குடியுரிமை மறுப்பு :

 

ஜெர்மானிய இரத்தமும் ஜெர்மானிய கவுரவமும் காக்கப்படவேண்டு மென்ற திட்டத்தில் ஜெர்மன் பாராளுமன்றம் புதிய சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி ஜெர்மானிய குடிமக்களுக்கு மாத்திரம் ஜெர்மானிய குடியுரிமை (citizenship) வழங்கப்படும். ஜெர்மானிய – யூத கலப்புள்ளவர் களுக்குக் கூட ஜெர்மானிய குடியுரிமை வழங்கக்கூடாது என்பது சட்ட மாயிற்று. ஜெர்மனியிலிருந்த யூத மக்களுக்கு ஜெர்மனியை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலவரம் உருவாயிற்று. யூத மக்கள் அடைக்கலம் புகுந்த நாடுகளுக்கு ஹிட்லர் அவனுடைய பிரதிநிதிகளை அனுப்பி “யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் அவர்கள் ஒரு நாள் உங்களுக்கு பேராபத்தாக மாறுவார்கள். ஆகவே உங்களுக்கு விரோதியாக வரப்போகிறவர்களை இப்பொழுதே அழித்தொழியுங்கள்’ என்ற செய்தியை வலியுறுத்தினான்.

 

அடைக்கலம் புகுந்த நாடுகளிலும் வேதனை தொடர்ந்தன

 

ஹிட்லர் பாலஸ்தீன அரபியர்களை தூண்டிவிட்டு அங்கேயும் யூதர்களுக்கு விரோதமான பகைமை உணர்வை உண்டாக்கினான். இதன் விளைவாக பாலஸ்தீனத்தில் அவர்களை குடியேறியதற்கு விரோதமாக ஒரு பொது வேலை (general strike) நிறுத்தம் நடத்தியது. யூதர்களுக்கு விரோதமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ ஆரம்பித்தன. அதே நாளில் துல்கார்ம் என்ற இடத்தில் இரண்டு யூதர்கள் கொல்லப்பட்டனர். சில தினங்களுக்குள் யோப்பாவில் ஒன்பது யூதர்கள் கொல்லப்பட்டார்கள். மீண்டும் சில தினங்களுக்கு ஐந்து யூதர்கள் கொல்லப்பட்டார்கள். சொந்த நாட்டிலும் பகைமை உருவாகி கொடுமைகளைச் சந்தித்தனர்.

 

ஹிட்லரின் பிரதிநிதியாகச் ஸ்விட்சர்லாந்து சென்ற வில்கெம் கஸ்ட்லோஃப் (Wilhelm Gustloff) என்பவரை 25 வயது நிரம்பிய மருத்துவ மாணவனாகிய யூத வாலிபன் அவரைச் சுட்டுக்கொன்றான். அவனைப் பிடித்து காவற்துறையினர் விசாரித்தபோது ஜெர்மனியில் யூத மக்கள் நாஜிப் புயற்படையினரால் கொடுமைக்குள்ளாவதையும் அடைக்கலம் புகுந்த நாடுகளிலும் ஹிட்லர் தன் கொடிய கரங்களை யூதர்களுக்கு விரோதமாக நீட்டுவதையும் உலக நாடுகளின் கவனத்தைக் கொண்டு வருவதற்காகவே இந்தக் கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டான். இச்சம்பவம் நடந்த ஆறாவது நாள் போலீஸ், நாஜிப் புயற்படை, கெஸ்டபோ (Gestapo) என்ற ஹிட்லரில் இரகசியப் பிரிவினர் யாவும் ஒன்றாக்கப்பட்டு நாஜி ஜெர்மனியில் அது பெரியதொரு வல்லமையான படையாயிற்று. (Great Force) இப்படைக்கு நீதிமன்ற உத்தரவின்றி யாரையும் கைது செய்யவும் விசாரணைக்கு நீதிமன்றக் காவலில்லாமல் தங்களுடைய காவலிலே வைத்துக்கொள்ளும் அதிகாரம் கொடுக்கப்பட்டது. இதை அறிந்த ஜெர்மனியிலிருந்த மீதமிருந்த கொஞ்ச யூதர்களும் போலந்திற்கு ஓடி அடைக்கலம் புகுந்தனர். போலந்திலும் யூதர்களுக்கு விரோதமான பகைமை உணர்வுகளை ஹிட்லரின் கெஸ்டவோ என்ற இரகசியப் பிரிவினர் உருவாக்கினார்கள். யூதர்களுக்கு விரோதமான கொடுமை போலந்திலும் உருவாயிற்று.

 

போலந்திலுள்ள வர்த்தக அமைச்சரகம் (Ministry of commerce) அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தங்களுடைய இனத்தின் பெயரை கொட்டை எழுத்தில் எழுதி போர்டு தொங்கவிடப்படவேண்டும் என்ற ஒரு நியதியைக் கொண்டு வந்தனர். அது செயல்படுத்தப்பட்டபோது யூத விரோத இயக்கத்தினர் யூதர்களுடைய கடைகளில் வர்த்தக நிறுவனங்களில் எதுவும் வாங்கக்கூடாது என்ற நிர்பந்தமான சூழ்நிலைகளும் உருவாயிற்று. யூதர்கள் அடைக்கலம் புகுந்த இடத்திலும் சோகச் சம்பவங்களைச் சந்தித்தனர்.

 

ஜெர்மனியின் விரிவாக்கத் தொடக்கம்

 

ஜெர்மானிய தேசத்தைவிட்டு தங்களது சகல உடைமைகளையும் இழந்து வெளியேறிய யூதமக்கள் தங்கள் ஜீவன் தப்ப ஓடி அடைக்கலம் புகுந்த நாடுகளிலும் ஹிட்லரின் ரகசிய பிரிவினராகிய கெஸ்டபோ மூலமாக அந்தந்த நாடுகளில் யூதர்களுக்கு விரோதமாக பகைமை உணர்வை உருவாக்கினார்கள்.

 

ஜெர்மனியின் விரிவாக்கத் தொடக்கம்

 

“யூதர்களில்லாத கிராம அமைப்பு” என்ற திட்டத்தை ஹிட்லர் தன்னுடைய நாஜி புயற்படையினரைக்கொண்டு வெற்றிகரமாக செயல்படுத்தி முடித்தான். இது ஹிட்லரின் யூத விரோதக் கொள்கையில் மிகவும் தெம்பையளிப்பதாக அமைந்தது. தன்னுடைய அதிகாரத்தை எந்த வல்லமையும் அசைக்க முடியாது என்ற மிகப்பெரிய தைரியத்தை உருவாக்கிக் கொண்டான். தன்னுடைய இராணுவத்தை குறுகிய காலத்திற்குள் துரிதமாக பலப்படுத்திக் கொண்டான். முதலாவது உலக யுத்தத்திற்கு முன்பு ரினிலான்ட் (RHINELAND) என்ற மாநிலம் ஜெர்மனியோடிருந்தது. ஆனால் யுத்தத்தின் முடிவில் வெர்சைலீஸ் உடன்படிக்கையின்படி (TREATY OF VERSAILLES) அம்மாநிலம் ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றப்பட்டிருந்தது. 1936 மார்ச் 7ம் நாள் ஹிட்லர் உடன்படிக்கையை மீறி தனது படையை அனுப்பி அம் மாநிலத்தைப் பிடித்துத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான். இதை முதலாம் யுத்தத்தில் கூட்டணி நாடுகளாக இருந்த பிரிட்டன், பிரான்ஸ் இதை எதிர்த்து செயல்படவில்லை. ஹிட்லர் முதல்முறையாக அனைத்து தேச சட்டத்தை (International Law) உடைத்து ரினிலான்டைப் பிடித்தான். இதுவும் அவனுக்கு மிகுந்த தெம்பையும் தைரியத்தையும் அளித்தது. யூத திரைப்படத் தயாரிப்பாளர் தற்கொலை

 

ஸ்டீபன் லக்ஸ் (STEFAN LUX) ஜெர்மனியில் வாழ்ந்த ஒரு யூதர். புகழ் பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர். ஹிட்லரின் உபத்திரவங்கள், கொடுமைகள் காரணமாகத் தன் தொழிலை இழந்தார். வருமானங்களை இழந்து, அநேக உடைமைகளை இழந்து வறுமை நிலையை எட்டிவிட்டார். ஆனாலும் ஹிட்லரால் யூதர்களுக்கு விரோதமான கொடூரமான உபத்திரவங்கள் தொடர்வதை உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து ஏதேனும் எதிர்ப்பைக் காட்டவேண்டும் என தீர்மானித்தார். கடைசியாக அவர் எடுத்துக்கொண்ட வழி தற்கொலை. 1936 ஜூலை 3ம் நாள் ஜெனிவாவிலுள்ள உலக நாடுகளின் அமைப்பு (LEAGUE OF NATIONS) அலுவலகக் கட்டிடத்திற்கு முன்பாக அநேக பத்திரிகையாளர்கள் சூழ்ந்திருந்த வேளை தற்கொலை செய்துகொண்டார். அப்பொழுது அவருக்கு வயது 48. உலகநாடுகளின் அமைப்புக்குப் பொறுப்பாளராக இருந்த பிரிட்டீஷ் அமைச்சர் அந்தோனி ஈடனுக்கு (ANTHONY EDEN, THE BRITISH CABINET MINISTER) ஜெர்மனியின் ஹிட்லரின் கொடூர, மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் காரணமாக யூதர்களின் மோசமான நிலவரத்தையும் எழுதிய கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். “யூதர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளை உலக நாடுகளின் மக்களின் இருதயத்தை எட்ட எனக்கு இது தவிர வேறு வழி தெரியவில்லை. இப்போதாவது, உலக மக்களின் மெத்தனப் போக்கு மாறாதா என எதிர்பார்க்கிறேன்” என்று கடிதத்தை முடித்திருந்தார்.

 

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வின்ஸ்டன் சர்சில் ஹிட்லரைக் குறித்த பேச்சு

 

யூதர்கள் என்ன செய்தாலும் ஹிட்லர் அவற்றை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. 1937ம் ஆண்டு ஹிட்லர் தன் இராணுவ பலத்தையும் குறிப்பாக விமானப்படையையும் பன்மடங்கு பெருக்கிக் கொண்டான். இதை அறிந்து இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் மக்களவையின் (HOUSE OF COMMONS) ஏப்ரல் 14ம் நாள் ஹிட்லரின் போக்கைக் குறித்துப் பேசும்போது வின்ஸ்டன் சர்ச்சில் “நம்முடைய எண்ணங்களுக்கும் உலகின் ஒவ்வொரு இன மக்களின் எண்ணங்களுக்கும் மாறாக ஒரு பெரிய அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார். இது இங்கிலாந்து மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணிற்று.

 

அமெரிக்க யூத இளைஞனுக்கு மரண தண்டனை

 

இந்த சூழ்நிலையில் ஜெர்மனியில் 20 வயதான ஒரு யூத இளைஞனான

ன ஹெல்முட் ஹிர்ச் (HELMUT HIRSCH) ஒரு சூட்கேசில் ஒரு ரிவால்வர் மற்றும்

சில வெடிகுண்டுகளுடன் பிடிக்கப்பட்டான். அவன் அமெரிக்காவில் பிறந்து

ஜெர்மனியில் வளர்ந்தவன். ஆகவே அவன் அமெரிக்காவின் குடி மகனான

யூதன். அவனது பெட்டியில் ஒரு ரிவால்வரும் சில வெடிகுண்டுகளும் இருந்தது உண்மைதான். ஆனால் அவன் அரசியலில் ஹிட்லருக்கு வலது கரம் போல செயல் பட்டுக்கொண்டிருந்த ஸ்டீரிக்கர் (Streicher) என்பவைர கொலை செய்யத் திட்டமிட்டிருந்தான் என்ற பொய்யான குற்றச்சாட்டை வனைந்து நீதிமன்ற விசாரணையில் நிறுத்தப்பட்டான். நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை விதித்தது. ஹெல்முட்ஹிரிச் பிறப்பால் அமெரிக்கக் குடிமகனானபடியால் அமெரிக்கத் தூதுவர் வில்லியம் டோட் (AMERICAN AMBASSADOR WILLIAM DODD) ஹிட்லருக்கு மரண தண்டனையை மாற்றிக்கொடுக்க முறையீடு செய்தார். ஆனால் அவருடைய முறையீடு மறுக்கப்பட்டது. மேலும் அமெரிக்கத் தூதுவர் ஹிட்லரை நேரில் சந்திக்க அனுமதி கேட்டார். ஹிட்லர் அதையும் மறுத்துவிட்டான். ஜூன் 4வது நாள் அதிகாலை ஹெல்மூட்டின் தண்டனை நிறைவேற்றப்பட்டது. கோடாரி யால் அவன் வெட்டிக் கொல்லப்பட்டான். (EXECUTED WITH AXE). ஹிட்லரின் இந்த அலட்சியப்போக்கு அமெரிக்காவை அவமதிப்பாக இருந்தது.

 

யூதப் பகைமை உணர்வை வளர்க்கக் கண்காட்சி

 

இதைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சம் மீதியிருந்த யூதர்களும் ஏதேனும் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு நூற்றுக் கணக்கான யூதர்கள் டாக்கோவ் வன்கொடுமை முகாம்களில் அடைக்கப் பட்டனர். யூதர்களுக்கு விரோதமான பகைமை உணர்வு யூதர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ அங்கெல்லாம் பரவும் அளவில் 1937 நவம்பர் 8ம் நாள் நியூரம்பெர்க் நகரில் ஒரு பெரிய கண்காட்சி (AN EXHIBITION) திறக்கப்பட்டது. அதில் யூதர்களை மிக மோசமானவர்களாகச் சித்தரித்து சோவியத் முறைமையின்படி மக்கள் அனைவரையும் அடிமைப்படுத்தும் திட்டமுள்ளவர் கள், மற்றவர்களை கொடுமையாக நடத்தும் சுபாவமுள்ளவர்கள். ஆகவே அவர்கள் அழிக்கப்படவேண்டிய தீய சக்தி என்பதை மையப்படுத்தி அக்கண் காட்சியை ஹிட்லர் அமைத்திருந்தான். அதன் விளைவாக, இத்தாலி, போலந்து, ருமேனியா, ஹங்கேரி, மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள யூதர்களுக்கு விரோதமான அரசு நடவடிக்கைகளும், அவர்கள் தாக்கப் படுவதும் கொலை செய்யப்படுவதுமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. யூதமக்கள் பாதுகாப்பான புகலிடம் தேடி எங்கெங்கோ சென்றார்கள். ஆனால் அங்கெல்லாம் அவர்களுக்குக் கொடுமையே தொடர்ந்தது. யூதர்கள் எலிகளைப்போல வேட்டையாடப்பட்டார்கள். இந்த சூழ்நிலையில் ஹிட்லர் தான் ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகள் நிறைவு நாளை அதிக சிறப்போடு கொண்டாடினான். உலக நாடுகள் வேடிக்கை பார்த்ததேயன்றி வேறு எதையும் செய்ததாகத் தெரியவில்லை. யூதர்கள் தங்கள் உச்சகட்ட கொடுமைகளை எட்ட இச்சூழ்நிலைகள் ஏதுவாக அமைந்தன.

 

சிந்தனைக்கும் அப்பாற்பட்ட கோரக்காட்சிகள்

 

“ஜெர்மனியிலுள்ள டாக்கோவ் வன்கொடுமை முகாமிலிருந்த யூத மக்களை இரண்டாவது உலக யுத்தத்தின் முடிவில் 1945 ஏப்ரல் 28ம் நாள் நேசப் படையினர் விடுவித்தனர். அப்பொழுது அவர்கள் கண்ட காட்சிகள் வார்த்தையால் வர்ணிக்க முடியாது என்று கூறுகின்றனர். புதைக்கப்படாத ஏராளமான பிணங்கள் நாற்றமெடுத்த நிலையில் கிடந்துள்ளன. உயிரோடிருந்த மக்களும் அந்தக் கொடிய நாற்றத்திற்கு மத்தியில் குடியிருந்துள்ளனர். விஷவாயு அறையில் பலவந்தமாக உள்ளே அடைத்து 2 மணி நேரத்தில் 3000 பேரைக் கொன்றபடியால் அவர்களைப் புதைப்பது பிரச்சனைக்குறிய காரியமாக ஆகியுள்ளது. ஆகவே அவற்றை எரித்துள்ளனர். அது சாம்பலாவதற்கு வெகு நேரம் எடுத்த படியால் அரைகுறையான நிலையில் சில சரீரங்களைப் புதைத் துள்ளனர். சில சரீரங்கள் புதைக்கப்படாமலே கிடந்துள்ளன. இது நமது சிந்தனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. அக்கோர காட்சிகளைப் படமெடுத்து மியூசியத்தில் வைத்துள்ளனர். அந்த முகாமை பார்வையாளர்கள் பார்க்கும்படி வைத்துள்ளனர்.

 

நானும் என் குடும்பத்தினரும் ஜெர்மன் சென்றிருந்த போது போய் டாக்கோவ் வன்கொடுமை முகாமை பார்த்தோம். அங்கிருந்த வழிகாட்டி (GUIDE) எங்களுக்கு எல்லாவற்றையும் விவரித்தான். அதைக் கேட்ட நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். இப்போதும் நான் அதை நினைக்கும் போதெல்லாம் அதிர்ச்சியடைந்து பாதிக்கப்படுகிறேன்”.

 

பென்னி ஹின் – “BLOOD IN THE SAND” டாக்கோவ் வன்கொடுமை முகாமின் உச்சக்கட்ட படுகொலைகள்

 

ஹிட்லர் யூதர்களில்லாத கிராம அமைப்பை நாஜி புயற் படையினரைக் கொண்டு வெற்றி கரமாக செயல் படுத்தினான். தன்னுடைய இராணுவ பலனைப் பெருக்கிக்கொண்டு ரினிலான்டைப் பிடித்து ஜெர் டான். ஹிட்லரின் போக்கைக் குறித்து இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் சர்ச்சில் பேசியதைக் குறித்தும், அமெரிக்க தூதுவரான வில்லியம் கோட்டை அவமதிப்பதாக அமைந்த அமெரிக்க யூத இளைஞன் ஹெல்மூட்ஹிர்ச்சின் மரண தண்டனை நிறைவேற்றுதல் போன்ற கொடிய நிகழ்ச்சிகளைக் குறித்துக் கவனித்தோம்.

 

டாக்கோ வன்கொடுமை முகாம் நுழைவாயில் மனியோடு சேர்த்துக்கொண்

 

1938 ஜன. 30ம் நாள் ஹிட்லரின் ஆட்சியின் 5 ஆண்டுகள் நிறைவு நிகழ்ச்சியில் உலக நாடுகளுக்கே ஒரு எச்சரிக்கையைக் கொடுத்தான். ஜெர்மன் மொழி பேசும் மக்கள் எந்த தேசத்தில் இருந்தாலும் அவர்களுக்கு எந்த வகையிலும் தீங்கு ஏற்படுமாயின் இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்ற ஒரு அறிவிப்பைக் கொடுத்தான். அப்பொழுதும் உலக நாடுகள் இதை ஒரு பொருட்டாக எடுக்கத் தவறிவிட்டது.

 

ஆஸ்ட்டிரியா பிடிக்கப்பட்டது – அங்குள்ள யூதர்கள் கொடுமைக்குள்ளா னார்கள்

இந்த சூழ்நிலையில் ஜெர்மன் இராணுவம் ஆஸ்ட்ரியாவை பிடிக்கப் போகிற செய்தி பரவலாகப் பேசப்பட்டது. 1938 மார்ச் 12ம் நாள் ஹிட்லரின் நாஜிப்படை ஆஸ்ட்ரியாவின் தலைநகரான வியன்னாவிற்குள் நுழைந்து ஆஸ்ட்ரியாவைக் கைப்பற்றியது. ஆஸ்ட்ரியா ஜெர்மானியர் வசமாயிற்று. ஆஸ்ட்ரியாவில் 1,83,000 யூதர்கள் வாழ்ந்தார்கள். அவர்களில் பெரும் பான்மையோர் வியன்னாவிலே இருந்தார்கள். அவர்களுக்கு விரோதமாக நாஜிப்படையினரின் வன்கொடுமை ஆரம்பமாயிற்று. முதல் நாள் இரவிலேயே பிறப்பிக்கப்பட்டச் சட்டத்தின்படி யூதர்களுக்கு குடிமக்களுக்கான எந்த உரிமையும் (CIVIL RIGHTS) கிடையாது. சிறுபான்மையினருக்கான உரிமைகளும் கிடையாது என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த உத்தரவின்படி யூதர்கள் சிறிதானாலும் பெரிதானாலும் எந்த சொத்துக்களையும் வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. எந்த தொழிற்சாலை நடத்தும் உரிமையோ தொழிற் சாலைகளில் வேலைபார்க்கும் உரிமையோ கிடையாது. எந்த வேலைகளில் அமரும் உரிமை கிடையாது. யாரையும் வேலைக்கு அமர்த்தும் உரிமையோ கிடையாது. ஹோட்டல், பொது குளியலறை, பொருள் விற்பனைக் கூடங்கள் ஆகிய இடங்களுக்குள் நுழையக்கூடாது. யூதர்கள் நடத்தும் கடைகள், ஹோட்டல்கள் இருக்குமாயின் அவற்றில் சிவப்பு பெயின்ட் அடித்துக் காட்டி யூதர்கள் அல்லாதவர்கள் யாரும் அதற்குள் நுழையக்கூடாது. அப்படி நுழைந்தவர்கள் புயற்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் கழுத்தில் “நான் ஒரு பன்றி யூதனுடைய கடையில் பொருட்களை வாங்கினேன்” என்று அட்டையில் எழுதி தொங்க விட்டு பொது இடங்களில் நிறுத்தி அவமானப்படுத்தப்படுவார்கள். யூதர்களை யாரும் அடித்துத் தாக்கினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அவர்கள் வீடுகள், கடைகள் கொள்ளையிடப்பட்டாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

 

கொடுமை தாங்காது தற்கொலைச் சம்பவங்கள் இதன் விளைவாக யூத ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இரக்க மின்றி தெருக்களில் மிகக் கேவலமாக நடத்தப்பட்டுத் தாக்கப்பட்டார்கள். இதில் கற்றறிந்தவர்களும், முதியவர்களும் விலக்கல்ல. இதைக் குறித்து பிரிட்டிஷ் பத்திரிகையாளர் G. E. R. கெட்டே (British Journalist G.E.R Gedye) குறிப்பிடும்போது சில யூதமக்கள் வீடுகளில் தற்கொலை செய்துகொண் டார்கள். தற்கொலை எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வந்ததைக் கண்டு நாஜிப்படையினர் மகிழ்ச்சியடைந்ததைக் கண்டதாகவும் குறிப்பிடுகிறார். ஒரு இளம் யூத மருத்துவரும், அவரது தாயாரும் தங்களது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையும் குறிப்பிடுகிறார். வியன்னாவில் மிகப் பிரபல்யமான நூல் ஆசிரியரும், பத்திரிகையாளருமான டாக்டர். குர்ட் சன்னன்பீல்ட் (Dr. Kurt Sonnenfeld) என்பவரும், மிகச் சிறந்த வழக்கறிஞர் டாக்டர். மோர்ட்டிஸ் ஸ்டென்பெர்க் (Dr. Mortiz Sternberg) என்பவரும், மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியரும், நாடக ஆசிரி ருமான 60 வயது நிரம்பிய ஈகோன் பிரைடெல் (Egon Friedell) என்பவரும், தற்கொலை செய்தவர்களுள் அடங்குவார்கள். ஈகோன் பிரைடெல் என்பவர் “தற்கால கலாச்சார வரலாறு (Cultural History of Modern age) என்ற மிகச்சிறந்த புத்தகத்தை எழுதி அவரது மரணத்திற்கு 6 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட சிறப்பைப் பெற்றவர். யூதர்களின் ஆலயத்தில் (Synagogue) புனிதப்பணியாற்றும் ரபிக்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. 70 வயதைத் தாண்டிய யூத தேவாலயத்தின் பிரதம ரபியாகிய டாக்டர். டாக்லி செட் (Dr.Taglicht, Chief Rabbi) என்பவரைப் புயற்படையினர் பிடித்து ரபி உடையையும், அணிந்திருந்த ஜெப சால்வையையும் (Prayer Shawl) கிழித்து அவமானப்படுத்தி ஒரு வாளியில் கொதிக்கும் தண்ணீரைக்கொடுத்து சாலை ஓரத்தில் மனிதர்கள் நடக்கும் நடைபாதையை கையால் தேய்த்து சுத்தம்பண்ணும்படி ஆணையிட்டனர். கொதிக்கும் தண்ணீரை மோந்ததில் அவர் கை பொக்களம்போல் ஆகிவிட்டது. ஆனாலும் அவரை விடவில்லை. வயிற்றால் படுத்துக்கிடந்து நடைபாதையைத் தேய்த்து சுத்தம்பண்ண வைத்தனர். இவைகளெல்லாம் புயற்படையினருக்குப் பொழுது போக்காகவும் அவர்கள் வேதனைப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறவர்களாகவுமிருந்த னர். இவ்வாறு யூதர்கள் அவமானப்படுத்தப்படுவதை, கடந்துசெல்லுகிற யூதர் அல்லாதவர்கள் கண்டு அவர்களும் அவர்களை அவதூறாகப் பேசி, மகிழ்ந்தனர். யூதர்கள் எப்பொழுதும் தங்களிடம் புனித ஜெபப்பட்டை (Sacred Prayer Band) ஒன்று வைத்திருப்பார்கள். தேவனை வழிபடும் வேளைகளில் மாத்திரம் அதைக் கையில் அணிந்துகொள்வார்கள். ஆனால் புயற்படையினர் யூதர்களைப் பிடித்து அவர்களது கைகளில் புனித ஜெபப்பட்டையை அணிந்து கொண்டு பொதுக் கழிப்பிடங்களைக் கட்டாயமாகக் கழுவ வைப்பார்கள். கழுவ மறுக்கிறவர்களையோ, தயங்குகிறவர்களையோ பயங்கரமாக அடித்துத் துன்புறுத்துவார்கள். இப்படிப்பட்ட கட்டாய வேலைகளைச் செய்யும் போது மயங்கி விழுந்தாலும் பாசாங்கு செய்வதாக சொல்லி அவர்களைக் கொடூரமாக அடிப்பார்கள். இந்த கொடூர சூழ்நிலையின் காரணமாக ஒரு மாதத்திற்குள் 500க்கும் மேற்பட்ட யூதர்கள் தற்கொலை செய்துகொண் டார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட யூதர்கள் இருதய நோவால் (Heart attack) மரண மடைந்தார்கள். அநேக யூதர்கள் போலந்து, செக்கோஸ்லோவேக்கியா ஹங்கேரி ஆகிய நாடுகளுக்குத் தப்பியோடினார்கள்.

 

ஜெர்மன், ஆஸ்த்திரியா நாடுகளிலிருந்த அனைத்து யூத தேவாலயங் களும் தீக்கிறையாக்கப்பட்டன. இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலை களுக்குப் பின்னரும் ஆஸ்திரியாவிலிருந்த 15,000க்கும் கூடுதலான யூதர்கள் கைதுசெய்யப்பட்டு டாக்கொவ், மற்றும் புச்சான்வால்டு வன் கொடுமை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். ஜெர்மனியில் விடுபட்டிருந்த 98,000 யூதர்களும் கைதுசெய்யப்பட்டு அந்த முகாம்களுக்குக் கொண்டு வரப்பட்டார்கள். அங்கு அவர்கள் தாங்கொண்ணாக் கொடுமைக்குள்ளா னார்கள். வன்கொடுமை முகாமைவிட்டுத் தப்பியோட முயற்சித்தால் முகாமைச்சுற்றி உச்சநிலை மின்சாரம் பாய்ச்சப்பட்டக் கம்பி வேலி உண்டு (High tension Electricity fence). அந்த கம்பிவேலியில் விழுந்து மரித்த வர்களின் எண்ணிக்கை எண்ணி லடங்காது. எண்ணற்ற சடலங் களை ஒன்று சேர்த்து ஒரு பெருங் குழியாக வெட்டி (Mass Grave) மூடி விடுவார்கள்.

 

மின்சாரம் பாச்சப்பட்ட கம்பி வேலி

 

1938ல் நடந்த மியூ னிச் ஒப்பந்தப்படி செக்கோஸ்லோ லாக்கியாவின் எந்தப்பகுதியை யும் ஆக்கிரமிப்பதில்லை என்று ஹிட்லர் வாக்குறுதி அளித்திருந் தான். என்றாலும் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பும் சண்டைகளும் அதி | கரித்துவிட்டன. ஹிட்லர் கட்டாயப் படுத்தி இராணுவத்தில் ஆட்களைச் சேர்த்தான். ஆஸ்த்திரியாவைப் பிடித்தபின் ஹிட்லர் போலந்தைப் பிடிக்கத் திட்டமிட்டான். இதுவும் போலந்து மக்களுக்கு எட்டியது. ஆகவே ஜெர்மனி போலந்தின்மீது படையெடுக்கும் பட்சத்தில் பிரிட்டனும் பிரான்சும் போலந்துக்கு ஆதரவாக வரவேண்டும் என ஒப்பந்தம் செய்துகொண்டனர். இந்த சூழ்நிலையில் ஹிட்லர் போலந்து நாட்டை ஊடுருவி ஒரு இருப்புப் பாதையை அமைக்க திட்டமிட்டான். போலந்து அனுமதி மறுத்த காரணத்தால் போலந்து நாட்டின்மீது 1939 ஜன. 1ம் நாள் படையெடுத்து அதையும் பிடித்துக்கொண்டான். பிரிட்டனும் பிரான்சும் ஒப்பந்தத்தில், போலந்திற்காக போரில் இறங்கியது. ஜெர்மனியின் மீது யுத்தப் பிரகடனம் செய்யப்பட்டது. இது இரண்டாவது உலக யுத்தமாக மாறிற்று.

 

ஒப்பந்தங்களை மீறி செக்கோஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா, போலந்து ஆகிய நாடுகளின்மீது ஹிட்லர் படையெடுத்து, அகண்ட ஜெர்மனியை (LARGER GERMAN) உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அந்நாடுகளைப் பிடித்துக்கொண்டான். இதன் விளைவாக ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளின் கூட்டணி அச்சு நாடுகள் (AXIS COUNTRIES) என்றும் பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் நேசநாடுகள் கூட்டணி (AL LIED FORCES) என்றும் ஆக இரு அணி நாடுகளுக்கும் 1939 செப்டம்பர் 3ம் நாள் யுத்தம் உண்டாயிற்று. இதுவே இரண்டாவது உலகயுத்தத்தின் துவக்கம். இரண்டாம் உலக யுத்தத்தில் போலந்து யூதர்கள்

 

ஹிட்லர் போலந்தைப் பிடித்த நாளில் போலந்தின் தலைநகராகிய வார்சாவில் (WARSAW) மட்டும் 3,93,950 யூதர்கள் வாழ்ந்து வந்தனர். ஜெர்மனியில், ஹிட்லரின் நாஜிப் படையினராலும் புயற்படையினராலும் அங்குள்ள யூதர்கள் எவ்வளவாய் கொடுமைக்குள்ளாக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள், அதற்குத் தப்பி யூதர்கள் அண்டைய நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பியோடினார்கள் என்பனபோன்ற காரியங்களை சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாகக் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர். ஆனாலும் போலந்தில் ஹிட்லரின் படையினருக்கு எதிர்த்து நிற்கும் திறனுள்ள ஒரு பெரும் கூட்டம் யூதர்கள் இருந்தனர். போலந்து பாராளுமன்றத்தில் அவர்களுக்காகப் பரிந்து பேசக்கூடிய அநேக உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்குச் சொந்தமான வல்லமையான பத்திரிக்கை ஊடகங்களும் (PRESS MEDIA) மிகப்பெரிய நிறுவனங்களை நிர்வகிக்கிற யூதர்கள் இருக்கின்றனர் என்ற தெம்பு அவர்களுக்கு இருந்தது. அவைகள் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என நம்பினார்கள். ஆனாலும் அவைகளெல்லாம் தவிடுபொடியாக்கப்பட்டு ஹிட்லர் மேற்கொண்டான். போலந்து நாட்டிற்குள் பிரவேசிக்கும் முன்பாகவே இராணுவம் வந்து இறங்கு வதற்கு வசதியாக இரயில் பாதையை அமைத்திருந்தான். அது ஹிட்லருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது.

 

நேசநாட்டுப் படையினரால் நாஜிப் படையினரின் முன்னேற்றத்தையும் தாக்குதலையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. போலந்து நாட்டிற்குள் நாஜிப் படையினர் புகுந்து நகரங்களிலும் கிராமங்களிலும் யூதர்களைத் தனிமைப் படுத்தி கொடூரமாகத் தாக்கினார்கள். இதில் நாஜியின் புயற் படையினர் மிகுந்த ஆக்ரோசமாகச் செயல்பட்டனர். போலந்தின் ஒரு எல்லைப்புற நகராகிய வீருஸ்சௌவ் (WIERUSZOW) என்ற நகருக்குள் நுழைந்து புயற் படையினர் முன்கூட் டியே திட்டமிட்டபடி 20 மிக முக்கியமான யூதர்களைப் பிடித்து அனைவரும் காணும்படி சந்தைவெளியில் கொண்டுவந்து நிறுத்தி னார்கள். அவர்களை வரிசையாக நிறுத்தி துப்பாக்கிக்குண்டுகளுக்கு இறையாக்க ஆயத்தப்பட்ட வேளையில் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த இஸ்ரவேல் லேவி (ISRAEL LEVI) என்ற 64 வயது நிரம்பியவரை அவரது மகள் லைபி லெவி (LIEBE LEWI) என்பவள் ஓடிச்சென்று அணைத்துக் கொண்டுக் கதறினாள். புயற்படையினர் இது அவர்களுக்கு எதிரான அவளுடைய ஆணவச் செயல் என்று கருதி அவளுடைய வாயை விரிவாகத் திறக்கக் கட்டளையிட்டனர். அவளும் தைரியமாகத் திறந்தாள். அவளுடைய வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டனர். அவளுடைய தலை சிதறி செத்து விழுந்தாள். பின்னர் 20 பேரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அவர்களுள் மிகப் பிரபல்யமும் செல்வாக்குமான ஆபிரகாம் லெப்கோவிட்ஸ் (ABRAHAM LEFKOWITZ) மோஷி மோசஸ் (MOSHE MOZES) யூசீல் பவுமட்ஸ் (USIEL BAUMATZ) ஆகியோர் அடங்குவர். இவர்களைச் சுட்டு வீழ்த்தியதின் மூலமாக யூத மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலையும் எச்சரிக்கையையும் கொடுத்தனர்.

 

மேற்கு போலந்தில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட யூதர்கள் வாழும் பியோட்டிரோகோவ் (PIOTRKOW) என்ற நகரில் யூதர்கள் வாழும் பகுதியில் விமானத் தாக்குதல் (AIR BOMBARDMENT) நடத்தி ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்றார்கள். வார்சா நகரில் ஒருவாரமாகத் தொடந்து நடத்தியக் கடுமையான விமானத்தாக்குதலில் 10,000க்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டார்கள். பெருநகரங்கள் விமானத்தாக்குதலுக் குள்ளானபடியால் யூதமக்கள் சிறிய கிராமங்களுக்குத் தப்பியோடினார்கள். பியோட்டிரொகோல் நகரின் அருகாமையிலுள்ள சுலிஜோவ் (SULEJOW) என்ற கிராமத்தில் அதிகமான யூதர்கள் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்பதை நாஜிப்படையினர் அறிந்து அக்கிராமத்திலும் விமானத்தாக்குதல் நடத்தி னார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். அவர்களுள் பியோட்டிரோகோவ் நகரைச் சேர்ந்த பிரபல்யமான யூத ரபியான ஜேக்கப் கிளேசர் (JACOB GLAZER) ஒருவராவார். அவருடனிருந்த அவரது மகளும் பேரக்குழந்தையும் கொல்லப்பட்டார்கள்.

 

விமானத்தாக்குதல் நடத்திய பகுதியில் குண்டு வீச்சால் கட்டிடங்கள் பற்றி எரியும்போது குண்டு வீச்சுக்குத் தப்பி வெளியே ஓடுபவர்களைக் குறி வைத்து நாஜிப்படையினர் சுட்டுக்கொன்றனர். கட்டடங்களுக்குள் நெருப்புக்குத் தப்பி அரைகுறையாய் உயிரோடிருப்போரையும் ஈவு இரக்கமின்றிச் சுட்டுக் கொன்றார்கள். இவ்வாறு முதல் பத்து நாட்களில் நகரங்களிலும் கிராமங் களிலும் நடத்திய தாக்குதலில் எந்தவித ஆயுதமும், எதிர்த்து நிற்கும் தன்மையற்ற யூத மக்களைக் கொன்று குவித்தார்கள்.

 

கொலைவெறி முகாம்கள் (EXTERMINATION CAMP)

 

ஜெர்மானிய நாஜிப்படை போலந்தைக் கைப்பற்றிய பின் இரண்டாவது உலக யுத்தத்தின்போது போலந்தின் தலைநகரான வார்சா நகருக்கு வட கிழக்கே ட்ரெபிளிங்கா (TREBILINKA) (தற்போது மகசோவியன் என்று சொல்லப்படுகிற கிராமம்) என்ற கிராமத்தில் கொலைவெறி முகாம் ஒன்றை அமைத்தனர். அம்முகாம் 1942 ஜூலை 23 முதல் 1943 அக்.19 வரை தீவிரமாகச் செயல்பட்டது. யூத மக்களை பூண்டோடு ஒழிக்கவேண்டும் என்ற ஒரு திட்டத்தை “ஆப்பரேஷன் ரெயினார்டு” (OPERATION REINHARD) என்ற பெயரில் செயல்படுத்தினார்கள். அம்முகாம் முற்றுமாக ஹிட்லரின் புயற்படையினரின் கீழ் செயல்பட்டது. அவர்களுள்ளிருந்த கொலைக்குழுவினர் (KILLING SQUADS) ஈவு இரக்கமின்றி செயல்படுவர். அது யூதர்களை கூட்டம் கூட்டமாக கொன்று அழிப்பதின் உச்சகட்டமாக இருந்தது. மேலே குறிப்பிட்ட அந்த கால கட்டத்திற்குள் அம்முகாமில் வைத்து 10லட்சம் யூதர்கள் கொல்லப் பட்டார்கள். அதற்கான ஆதாரங்களும், நேரடியாகக் கண்ட, கொலைக்குத் தப்பியவர்களின் சாட்சியங்களும் உள்ளன.

 

யூத மக்களிடையே ஒரு சிறு கூட்டத்தைப் பயன்படுத்தியே கட்டாயமாக புதைகுழிகளைத் தோண்டச் செய்து கொல்லப்பட்ட யூதர்களை ஒரே கல்லறையில் ஒட்டு மொத்தமாகப் புதைத்தனர் (MASS GRAVES). சில வேளைகளில் புதைகுழிகள் தோண்டுவதற்கும் புதைப்பதற்கும் சிரமங்கள் ஏற்படுகிறபோது பிரேதங்களை மொத்தமாகக் குவித்து தீயிட்டு கொளுத்தி எரித்தனர் (MASSINE OPEN-AIR PYRES). இம்முகாமில் ஜெர்மானியக் காவலர் களுள் (GERMAN GUARDS) ஒரு கலகம் ஏற்பட்டு அக்கலகத்தை அடக்க அநேக காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இக்கலகத்தின் விளைவாக சுமார் 300க்கும் மேற்பட்ட கைதியாக வைக்கப்பட்ட யூதர்கள் தப்பினார்கள்.

 

விஷவாயு அறைக் கொலைகள்

 

இதைத் தொடர்ந்து யூதர்கள் துரிதமாகவும் எளிதாகவும் கொல்லப் படவேண்டுமென்ற திட்டத்தில் விஷ வாயு அறைகளை நியமித்தனர். அம் முகாமை ட்ரெபிரிங்கா II என்று பெயரிட்டிருந்தனர். அந்த இடம் 42X33 ஏக்கர் விஸ்தீரணமுள்ள இடத்தில் அமைந்திருந்தது. போலந்திலுள்ள யூதர்கள் மாத்திரமல்ல ஜெர்மானியர் கைப்பற்றிய அனைத்து நாடுகளிலுள்ள யூதர்களையும் இந்த முகாமுக்குள் கொண்டுவந்தனர். முதலில் அவர்களிட மிருந்த தங்க நகைகள், பணம், மற்றும் விலையேறப்பெற்ற எல்லா பொருட் களையும் கைப்பற்றினார்கள். கொடுக்க மறுத்த, யூதர்களை மிகக் கொடூரமாக நடத்தினார்கள். பலர் முன்னிலையில் ஆண்களையும் பெண் களையும் அவர்களுடைய உடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கப்பட்டு விஷவாயு அறைக்குள் அனுப்புவார்கள். உள்ளே அனுப்பப்பட்ட ஆண்களும் பெண்களும் இடும் கூக்குரலும் கதறுதலும் வெளியே அடுத்து உள்ளே அனுப்பக் காத்திருப்பவர்களைப் பீதியடையச் செய்யும். உள்ளே சுமார் 20 நிமிடங்களில் அவர்கள் மூச்சுத்திணறி இறந்துவிடுவார்கள். அந்தக் கட்டிடத்தின் பின்வாசல் வழியாக சரீரங்கள் இழுத்துச் செல்லப்பட்டு ஒட்டு மொத்தமாக ஒரே புதைகுழியில் போடப்படுவார்கள். இக்காட்சியை நேரில் பார்த்து பின்னர் தப்பியவர்கள் இந்த பரிதாபக் காட்சிகளை விவரித்துள்ளனர். தாய்மார் தங்களுடைய குழந்தைகளைக் கட்டி அணைத்த நிலையிலேயே இருவருமே மரித்த காட்சிகள் இருதயத்தையே உலுக்கிவிடும். பின்னர் அடுத்த கூட்டத்தினர் அனுப்பப்படுவார்கள். இப்படியாகத் தொடர்ந்து விஷவாயுக் கொலை நடந்துகொண்டேயிருக்கும். சில வேளைகளில் விஷவாயு அறையை விட்டு வெளியே எடுத்த பின்னும் சிலருக்கு உயிர் இருப்பது காணப்பட்டால் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.

 

இப்டிப்பட்ட விஷவாயுச்சாவு அறையில் (DEATH CHAMBER) 2 மணி நேரத்தில் 3000 பேரைக் கொல்லும் அளவுக்கு திறனுள்ளதாக அமைத்துள்ளனர். ஒரு நாளைக்கு 12,000 பேர் முதல் 15,000 பேர் வரை அதில் கொல்லப்படுவார்கள். சில நாட்களில் 22,000 பேர் வரை அதில் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து 24 மணி நேரமும் விஷவாயுச் சாவு அறை செயல்படும். சைக்குலோன் .B. (ZYKLON. B) சோபிபார் (SOBIBOR) பெல்ஜெக் (BELZEC) என்ற விஷ வாயுக்களை பயன்படுத்திக் கொன்றுள்ளனர். இவ்வகைச் சாவை கார்பன் மோனாக்சைடு (CARBON MONOXIDE POISIONING) விஷச்சாவு என்று சொல்லப்படுகிறது.

 

பாபியார் பள்ளத்தாக்கு இனப்படுகொலை

 

நாஜிப்படையினர் போலந்தைப் பிடித்தது அவர்களுக்கு ஒரு பெரும் வெற்றியாக அமைந்தது. அந்த தைரியத்தின் காரணமாக போலந்திலிருந்த யூதமக்களையும் ஜெர்மனியிலிருந்து தப்பி போலந்திற்கு வந்த யூதர்களையும் நாஜிப்படையினர் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்றும் கூட்டுக் கல்லறைகளில் (MASS GRAVE) புதைக்கப்பட்டார்கள்.

 

பாபியார் (BABIYAR) பள்ளத்தாக்கு இனப்படுகொலை

 

பாபியார், உக்ரெய்ன் (UKRAINE) நாட்டின் தலைநகராகிய கீவ் (KIEV) நகரில் மலைப்பகுதியி லுள்ள பள்ளத்தாக்கு. நாஜிப் படையினரால் யூதமக்கள் | சந்தித்த சர்வ நாசத்தில் (HOLO CAUST) மிகப் பெரிய அளவில் யூத இன மக்கள் படுகொலை செய்யப்பட்டது இந்த இடத்தில் | தான். இருதினங்களில் மாத்திரம் 33,771 யூத மக்கள் மிகக் கொடூரமான படுகொலை செய்யப்பட்டனர். நாஜிப் படையினர் சோவியத் யூனியனை பிடிக்கும் பெருமுயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது உக்ரெய்ன் நாட்டைப் பிடித்து நாஜிப்படையினர் தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். உக்ரெய்ன் நாட்டை நாஜிப்படையினர் பிடித்தது சோவியத் யூனியனுக்கு போர்க்கள ரீதியில் (STRATEGICAL LY) அனுகூலமற்ற சூழ்நிலை உருவாயிற்று. நாஜிப்படையினரின் கை ஓங்கியிருந்த காலகட்டம்.

 

கீவ் மற்றும் உக்ரெய்னிலுள்ள அனைத்து யூதர்களையும் கொன்று அழிக்கும்படி மிலிட்டரி கவர்னர் தீர்மானம் செய்து மேஜர் ஜெனரல் குர்ட் எபர்ஹார்ட் (KURT EBERHARD) என்பவனிடம் இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்புவித்தான். நாஜிப்படையினரின் ஒரு பிரிவாகிய S.S.போலிஸ் பெட்டாலி யனைக் கொண்டு மேஜர் ஜெனரல் குர்ட் இதை செயல்படுத்தினான். இதை முன்னணியிலிருந்து களத்தில் செயல்படுத்திய வன் S.S. படையைச் சேர்ந்த பால் பிளோபெல் (PAUL BLOBEL) (படத்தில் காணலாம்).

 

“செப்.28.1941ல் கீவ் மற்றும் வட்டாரத்திலுள்ள அனைத்து யூதமக்களும் 29ம் தேதி காலை 8 மணிக்கு மெல்நிக்கோவா தெருவிலுள்ள கல்லறைத் தோட்டத்திற்கு அருகிலுள்ள மைதானத்தில் வந்து கூடவேண்டும். அப்படி வரும்போது அவர்களுக் கான அனைத்து ரெக்கார்டுகள், விலையேறப் பெற்ற பொருட்கள், பணம், குளிர்தாங்கும் உல்லன் ஆடைகள் இவைகளுடன் வரவேண்டும். இவர்களுக்கு குடியிருப்பு பகுதிகள் மாற்றிக்கொடுக்கப்படும் (RESETTLEMENT). வரத் தவறி வீட்டிலிருந்தாலோ அல்லது வேறு எங்கு மிருந்தாலோ அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்” என்ற சுவரொட்டி (WALL POSTERS) ரஷ்ய மொழியிலும் ஜெர்மன் மொழியிலும் அச்சிடப்பட்டு நகர் முழுவதும் ஒட்டப்பட்டது. இதைக்குறித்து அறிவிப்பும் கொடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் அவர்கள் எதிர் பார்ப்பிற்கும் மேலாக 30,000க்கும் அதிகமான யூதமக்கள் கூடிவிட்டனர். அவர்களுக் கென பிரத்தியேகமான பாதுகாப்பான குடியிருப்புப் பகுதி கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் யூதமக்கள் கூடி வந்தனர். ஆனால் நாஜிப் படையினரின் மறைவான திட்டத்தை சற்றேனும் அறியாதிருந்தார்கள்.

 

பால் பிளோபெல்

 

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உடுத்தியிருந்த உடை தவிர அவர்கள் கொண்டு வந்திருந்த பொருட்களையும், மதிப்புள்ள பொருட்களையும், தங்க நகைகள், கைக்கடி காரங்கள் யாவற்றையும் ஒப்படைக்கும்படி உத்தரவிடப் பட்டது. மறுத்து பேசியவர்கள் பொருட்களைக் கொடுப்பதற்கு தயக்கம் காட்டிய போது அடித்து உதைக்கப்பட்டனர். மிகத் துரிதமாக இந்த சேகரிப்பு வேலை முடிந்தவுடன் இராணுவ டிரக்குகளில் ஏற்றப்பட்டார்கள். கால்பதிப்பதற்கு இடமில்லாத அளவுக்கு ஏற்றி பிரபியார் பள்ளத்தாக்குப் பகுதிக்கு கொண்டு வந்தனர். அப்பள்ளத்தாக்கின் மலைச்சரிவில் அவர்கள் நிறுத்தப்பட்டார்கள். மலைச்சரிவின் கீழ் தண்ணீர் ஓடி சுமார் 150 மீட்டர் நீளம் 30 மீட்டர் அகலம் 15 மீட்டர் ஆழத்தில் ஒரு பெரும் பள்ளமிருந்தது. அப்பொழுது தான் யூத மக்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக ஏதோ நடக்கப்போகிறது என்பதை உணர்ந் தார்கள். ஆனாலும் மனைவி பிள்ளைகள் அனைவரும் எப்படித் தப்பிக்க முடியும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இப்பள்ளத்தாக்கிற்கு வந்தபின் ஆண்கள் பெண்கள் அனைவரும் தாங்கள் உடுத்தியிருந்த உடையை கழட்டும்படி உத்தரவிட்டு நிர்வாணமாக்கினார்கள்.

 

நிர்வாணமாக்கினார்கள்.

 

மறுத்தவர்கள் தனியான இடத்திற்குக் கொண்டு சென்று கொடூரமாகத் உடுத்தியிருந்த : தாக்கப்பட்டார்கள். மற்றவர்கள் சிறு கூட்டமாக மலைச்சரிவில் அந்த பள்ளத்தை நோக்கி ஓடவிட்டு குழி அருகில் செல்லும்போது மிஷின்கன் துப்பாக்கியால் சுடப்பட்டார்கள். குழியில் பிணமாக யூதமக்கள் விழுந்தார் கள். ஒரு அடுக்கு (LAYER) நிரம்பியதும் அரை குறையாக உயிர் இருப்பதாக காணப்பட்டவர்களையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அந்த அடுக்கை மணல்போட்டு மூடிவிட்டு அடுத்த அடுக்கு தயாராகும். இப்படியாக கொண்டு வரப்பட்டவர்கள் இரண்டு தினங்களில் கொல்லப்பட்டார்கள். கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை 33,771 என்று கணக்கிடப்பட்டனர்.

 

இந்தக் கொடூர நிகழ்ச்சியை டிரக் டிரைவர் ஹோப்ஃபர் (HOFER) என்பவர் தனது வாக்குமூலத்தில் விவரித்துள்ளார். மேலும் டினா புரோனிச்செவா (DINA PRONICHEUA) கீவ் நகரில் பொம்மலாட்டம் நடத்தும் ஒரு நடிகை (AN ACTRESS OF THE KIEV PUPPET THEATRE) இந்தக் கொலை வெறி நிகழ்ச்சியிலிருந்து ஆச்சரியமாகத் தப்பித்தவள். இவள் மலைச்சரிவில் ஓடிவரும்போது தன்மீது குண்டுபடுவதற்கு முன்பாக குழியில் விழுந்துவிட்டாள். ஆனால் குழியில் விழுந்தவர்கள் உயிர் ஊசலாடிக் கொண்டிருப்போரை ஒரு அடுக்கு மூடுவதற்கு முன்பாக குறிபார்த்து சுட்டுக்கொன்றுவிடுவார்கள். இதைக் கவனித்த டினா செத்தது போல் நடித்து எந்த அசைவுமின்றி பிணக் குவியலோடு படுத்துக்கொண்டாள். அடுத்த அடுக்கு பிணங்கள் விழும் போது இவள் மூடிய மண்ணை நீக்கி மேல் அடுக்கிற்கு வந்துள்ளாள். முதல் நாள் இரவு வேளையில் அந்தக் குழியிலிருந்து வெளியே வந்து காவலர்களின் கண்ணிற்குத் தப்பி இருட்டோடு இருட்டாக மறைந்து சென்றுவிட்டாள். இதேபோல குழியில் குண்டடிப்பட்டவர்களும் குண்டடிபடுவதற்கு முன்பாக இந்தக் கொலைவெறிக்குத் தப்பியவர்கள் 29பேர் உள்ளனர்.

 

பாபியார் பள்ளத்தாக்கில் நாஜிப்படை செய்த கொலைவெறி நிகழ்ச்சிக்குப் பின்னர் சோவியத் யூனியன் படையினருக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாஜிப் படையினர் பின்வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து உக்ரெய்ன் தலைநகராகிய கீவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு யூதமக்கள் புதைக்கப் பட்டக் குழியைத் தோண்டி பிணங்களை வெளியே எடுத்து கட்டைகளை அடுக்கி பெரிய சூளைகளை (FURNACE) உருவாக்கி பிணங்களை எரித்து சாம்பலாக்கினார்கள். நாற்பது நாட்கள் வரை இந்தப் பிணங்களை எரிக்கும் வேலை நடந்தது.

 

பாபியார் பள்ளத்தாக்கு கொலை வெறி நிகழ்ச்சிக்குப் பொறுப்பாயிருந்து செயல்படுத்திய பால் புளோ பெல் 2ம் உலக யுத்தம் முடிவிற்கும் பின்னர் பிடிக்கப்பட்டு நியூரம்பெர்க் மிலிட்டரி டிரிபுயுனல் முன்பு விசாரணை நடத்தி மரணதண்டனை விதிக்கப்பட்டது. 1951 ஜுன் மாதம் லேன்ட்ஸ் பெர்க் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

 

இதன் pdf file உங்களுக்கு தேவை என்றால் தயவு செய்து 25 வினாடிகள் காத்திருக்கவும் Download Timer Countdown முடிந்தவுடன் Download Button தெரியும்.

You have to wait 25 seconds.

Download Timer

Leave a Reply