யூதர்களின் சோக வரலாறு 9
2வது மகா உலக யுத்தத்தீவிரம் – அமெரிக்காவின் பேர்ல் துறைமுகம் தாக்கப்படுதல் – முசோலியின் வீழ்ச்சி
பாபியார் பள்ளத்தாக்கில் நடந்த படுகொலை ஹிட்லரின் நாஜிப் படையினரால் யூத மக்கள் சந்தித்த சர்வ நாசத்தின் (Holocaust) மிகப் பெரிய சோக வரலாறு ஆகும். இரண்டே நாட்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 33,771 யூதர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.
சீனா – ஜெர்மன் ஒப்பந்த முறிவு / ஜப்பானுடன் உடன்படிக்கை இரண்டாவது உலக யுத்தத்தின் துவக்கத்தில் ஹிட்லரின் நாஜிப் படையினரும் அவர்களைச் சார்ந்த ஆக்சிஸ் படையினரும் பல வெற்றிகளைச் சந்தித்தனர். இந்த சூழ்நிலை ஹிட்லருக்கு பெரும் தெம்பையும் மன தைரியத்தையும் உருவாக்கியது. இந்த சூழ்நிலையில் ஹிட்லர் சீனாவுடன் பிப்.1938ல் கொண்டிருந்த சீனா-ஜெர்மன் உடன்படிக்கையை (Sino-German Alliance) முறித்து யுத்த கண்ணோட்டத்தில் ஜப்பானுடன் உடன்படிக்கையை கையெழுத்திட்டு ஜப்பானுடன் உறவை உருவாக்கிக் கொண்டான். ஜப்பானிடம் நவீன யுத்த ஆயுதங்களும் மேலும் தற்கால டெக்னாலாஜியின் அடிப்படையில் சரியான முன்னேற்றம் காட்டி வருகின்றனர் என்பதைக் கருத்தில் கொண்டு ஜப்பானுடன் உடன்படிக்கை செய்துகொண்டான். ஜப்பான், சீனாவின் மஞ்சூரியா மாநிலத்தை கைப்பற்றி தனதாக்கியதை ஹிட்லர் அங்கீகரித்தான். அதோடு சீனாவோடு இருந்த முந்திய ஒப்பந்தத்தின்படி சீனா இராணுவத்தி லிருந்த அனைத்து ஜெர்மானிய இராணுவ அதிகாரிகளை திரும்ப வரவழைத்துக் கொண்டான். ஒப்பந்தத்தின்படி சீனாவுக்கு கொடுக்க இருந்த அனைத்து இராணுவத் தளவாடங்களையும் நிறுத்திக்கொண்டான்.
சோவியத் ரஷ்யாவுடன் போர்
ஹிட்லர் சோவியத் ரஷ்யாவின் மறைமுகமான ஆதரவு தேவை என்று கருதி இரகசியமாக ரஷ்யாவில் தலைவர் ஸ்டாலினுடன் 1939ல் ஒருவருக் கொருவர் ஆக்கிரமிப்பு செய்துகொள்வதில்லை என்று ஒப்பந்தம் செய்தி ருந்தான் (Hitler-Stalin non-aggression PACT 1939). ஆனால் 1941 ஜூன் 22 அன்று அந்த ஒப்பந்தத்தை மீறி 5.5 மில்லியன் ஆக்சிஸ் படையுடன் சோவியத் யூனியன் மீது ஒரு பெருந்தாக்குதலை நடத்தினான். அந்த
தாக்குதலுக்கு ஆப்பரேஷன் பார்பரோசா (operation Barbarossa) என் று பெயரிட்டிருந்தான். அந்த தாக்குதலில் பிரதான நோக்கம் ரஷ்யாவின் இயற்கையாகவே உள்ள கனிம வளங்களை (Resources) தனது ஆளுகைக்குள் கொண்டுவரவும் அதைத் தொடர்ந்து மேற்கத்திய வல்லரசுகளை (western powers) எளிதில் வென்றுவிடலாம் என்று திட்ட மிட்டிருந்தான். அந்த தாக்குதலின் விளைவாக பால்டிக் ரிபப்ளிக், பெலாரஸ், மேற்கு உக்ரெய்ன் ஆகிய நாடுகளின் பெரும் பகுதியைப் பிடித்து தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தான். இந்த வெற்றியோடு தங்களது படையை மாஸ்கோவை நோக்கிச் சென்றால் மாஸ்கோவைப் பிடித்துவிடலாம் என்று இராணுவ அதிகாரிகள் ஒருமித்து கருத்து தெரிவித்தனர். ஆனால் ஹிட்லர் அவர்களுடைய கருத்தைத் தள்ளி லெனின்கிராடு கீவ் என்ற இடத்திற்குப் படையைத் திருப்பினான். இந்த முடிவின் காரணமாக இராணுவ அதிகாரி களுக்கும் ஹிட்லருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த சூழ்நிலை ரஷ்யாவைச் சேர்ந்த சிவப்பு இராணுவம் (Red Army) இராணுவப் பிரிவுகளையும் ஒன்று திரட்டி (mobilise fresh reserves) எதிர் தாக்குதலுக்கு ஆயத்தமாக நல்ல வாய்ப்பாக மாறிவிட்டது.
அதைத் தொடர்ந்து ஸ்டாலின் கிராட் யுத்தக்களத்தில் (Battle of Stalingrad) நாஜிப்படையினருக்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்பதை இராணுவ அதிகாரிகள் மூலமாக ஹிட்லர் அறிந்திருந்தும் தற்காலிகமாக பின்வாங்கிக் கொள்ள (withdrawal of the Battle) ஹிட்லர் மறுத்துவிட்டான். அதன் காரணமாக 2,00,000 ஆக்சிஸ் இராணுவ வீரர்கள் யுத்தக்களத்தில் கொல்லப்பட்டார்கள். 2,35,000 இராணுவ வீரர்கள் போர்க் கைதிகளாக பிடிப்பட்டனர். அதில் தோல்வியடைந்த 6000 இராணுவ வீரர்கள் மட்டுமே ஜெர்மனுக்குத் திரும்பினார்கள். எந்த நாஜிப்படையினரைக் கொண்டு யூத மக்களை இலட்சக் கணக்காக கொன்று குவித்தானோ அப்படையினரின் சர்வ நாசத்தைப் பாருங்கள். ஹிட்லர் எதை விதைத்தானோ அதையே அறுத்தான் என்பதை சிந்தித்துப் பாருங்கள் ஹிட்லரின் இராணுவ நிதானிப்பு (military judgement) தவற ஆரம்பித்தது. அதோடு ஜெர்மனியின் பொருளா தாரம் நிலைகுலைந்தது. ஹிட்லரின் சரீர ஆரோக்கியத்திலும் குறைவுகள் ஏற்பட்டது. சோவியத் ரஷ்யாவுடன் ஹிட்லர் யுத்தத்தை ஆரம்பித்தபோது ஹேம்லர் (Hammler) என்ற வரலாற்று ஆசிரியர் “ரஷ்யாவிலுள்ள யூதர்களை நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஹிட்லர் “அவர்கள் முற்றுமாக அழிக்கப்படுவார்கள்” (Exterminate them as partisans) யகூதா பௌர் (Yehuda Bauer) என்ற இஸ்ரேல் வரலாற்று ஆசிரியர் பின்னர் இதைக் குறித்து “இலட்சக் கணக்கான ரஷ்ய யூதர்கள் சர்வ நாசத்திற்குத் (Halocaust) தப்பினார்கள்’ என்று சொன்னார். ஆனாலும் ஹிட்லர் சோர்ந்து போய் விடவில்லை. மிகவும் திடமாகவே போரை நடப்பித்தான்.
எல் அலாமீன் யுத்தக்களம் (Battle of El Alamien)
ஜெர்மனியின் நாஜிப் படையினர் சுயஸ் கால்வாயைக் கைப்பற்றி மத்திய கிழக்கு நாடுகளைப் பிடிக்கும் திட்டத்துடன் எகிப்தோடு போர் தொடுத்தனர். ஹிட்லர் தனக்கிருந்த இராணுவ அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் கொண்டு தன்னுடைய இராணுவ பெலத்தின் மீது அளவுக்கு மிஞ்சிய நம்பிக்கை வைத்திருந்தான். ஆகவே இராணுவ அதிகாரிகளின் கணிப்பில் நம்பிக்கை வைப்பதில்லை. இது அனுகூலமற்ற விளைவுகளை உண்டாக்கிற்று. ஆகவே அந்த யுத்தக் களத்தில் (எல் அலாமீன் யுத்தக் களம்) ஹிட்லரின் இராணுவம் தோல்வியை சந்தித்தது.
அமெரிக்காவின் பேர்ல் துறை முகம் (Pearl Harbour) தாக்கப்படுதல் இரண்டாவது உலகப்போரில் 1941 டிசம்பர் 7ம் நாள் ஜப்பானின் இப்பீரியல் கப்பற் படை அமெரிக்கா வின் பேர்ல் துறை முகத்திலிருந்த கப் பற்தளத்தின் மீது அதிரடி தாக்குதல் நடத்தி அமெரிக்கா வின் கப்பற்படைக்கு பெரிய நாசத்தை உண்டு பண்ணிய சம்பவம் தான். மிகப் பெரிய சம்பவமாகும். இச்சம்பவம் அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சி யளிப்பதாகயிருந்தது. அமெரிக்காவின் கப்பற்படை பெலத்தை முடக்கவிட வேண்டும் என்பதே ஜப்பானின் நோக்கமாக இருந்தது. அதே சமயத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்த பிலிப்பைன்ஸ் மீதும் பிரிட்டிஷ் கட்டுப் பாட்டிலிருந்த, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் தாக்கு தலில் ஈடுப்பட்டது. பேர்ல் துறை முகத்தின் தாக்குதலின் விளைவாக எட்டு கடற்படை யுத்தக்கப்பல்கள் முற்றுமாக சேதப்படுத்தப்பட்டது. அதில் நான்கு யுத்தக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. 188 போர் விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. 6 விமானந்தாங்கும் கப்பல்கள், 8 டேங்கர்கள், 4 நீர்
மூழ்கிக் கப்பல்கள், 2402 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். 1282 பேர் படுகாயம் அடைந்தனர். ஐப்பானியப் படையினர் 29 போர் விமானங்களையும் 5 நீர் மூழ்கிக் கப்பல்களையும் 65 இராணுவத்தினர் களையும் இழந்தார்கள். இதன் விளைவாக அமெரிக்கா ஜப்பான் மீது யுத்த பிரகடனம் செய்தது. பிரிட்டனும் யுத்தத்தில் தீவிரமாக இறங்கியது. அமெரிக்கா, ஜப்பான் மீது யுத்தப் பிரகடனம் செய்த அதே நாளில் (11.12.1941) | ஹிட்லரும் முசோலினியும் ஜெர்மனும், இத்தாலியும் அமெரிக்கா மீது யுத்த பிரகடனம் செய்தனர். ஜெர்மனியின் ஹிட்லரைப் போலவே இத்தாலியின் பெனிட்டோ முசோ லினி ஒரு சர்வாதிகாரியாக செயல் பட்டான். இதைத் தொடர்ந்து ஹிட்லரும் முசோலினியும் மிகவும் நெருக்கமானார்கள். முசோலினி யின் இராணுவ பலத்தைப் பெருக் கிக்கொள்ள ஜெர்மன் இராணு வத்தினர் இத்தாலிக்கு அனுப்பப் பட்டனர்.
ஹிட்லரை கொலை செய்ய முயற்சி
ரஸ்டன்பர்கில் (Rusten Burg) உல்ஃப் லேயர் (Wolf Lair) என்பது தான் ஹிட்லரின் தலைமைச் செயலகம். பொதுவாக ஹிட்லரின் இராணுவ அதி காரிகள் மத்தியில் ஹிட்லரின் தவறான கணிப்புகள்தான் (misjudgement) யுத்தக்களத்தில் ஏற்ப்பட்ட அநேக தோல்விகளுக்குக் காரணம் என்ற கருத்து நிலவியது. ஆகவே ஹிட்லரை கொலை செய்ய சில திட்டங்கள் மறைமுகமாக உருவாயிற்று. மேலும் ஹிட்லரின் தலைமையில் இராணுவம் இயங்குமானால் ஜெர்மன் தோல்வியை சந்திக்கும் என்ற கருத்தும் பரவலாக நிலவியது. அதில் முக்கியமான சதித்திட்டம் ஹிட்லர் தனது தலைமைச் செயலக அலுவலகத்தில் கான்பிரன்ஸ் மேஜேயின் அடியில் சிறிய பெட்டி வெடிகுண்டு (Briefcase Bomb) வைக்கப்பட்டிருந்தது. அந்த வெடிகுண்டு வெடித்ததில் உறுதியான அந்த மேஜை சிதறியதே தவிர மிகச் சிறிய காயங்களுடன் ஹிட்ல்ர் உயிர் தப்பினார். இந்த வெடிகுண்டை வைத்த கிளாயஸ் வோன் (Claus von) கண்டு பிடிக்கப்பட்டான். இதன் காரணமாக ஜெர்மனின் இராணுவ அதிகாரிகள் உட்பட 4900 பேர் துப்பாக்கிக் குண்டு களுக்கு இறையாக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சர்வாதிகாரி முசோலினியின் பரிதாப முடிவு
1945 ஏப்ரல் 21ம் நாள் அமெரிக்கா உட்பட்ட நேச நாட்டுப் படையினர் (Allied Troups) இத்தாலியின் முக்கிய பெரு நகரமாகிய போலோக்னா (Bologna) நகரைக் கைப்பற்றியது. முசோலினியின் பாசீச படையின் தலைவர் (Fascist chief) அர்ப்பிநாட்டி (Arpinati) பிடிபட்டு அவன் கொல்லப் பட்டான். இத்தாலியில் போர் வலுத்தது. நேசப்படையினர் முன்னேறினார் கள். அப்பொழுது முசோலினி மிலான் நகரில் தனது மிக முக்கியமான பாசீச ஆதரவாளர்களுடன் தங்கியிருந்தான். இத்தாலியில் முசோலினியின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக விடுதலைக் குழு (Liberation committe) மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. நேசப்படையினருக்கு ஆதரவாக யிருந்து முசோலினியின் ஆட்சிக்கு முடிவுக்குக் கொண்டு வர விடுதலைக் குழு தீர்மானித்து செயல்பட ஆரம்பித்தது.
நேசப்படையினர் முன்னேறி வருவதை அறிந்த முசோலினியின் பாசீசப் படையின் தலைவர்களில் ஒருவனான பவோலினி (Pavolini) தன்னுடைய படைப்பிரிவுடன் முசோலினியைத் தப்புவிக்க விரைந்தான். இத்தாலியில் பாசீசப் படையினருக்கு லெப்டினன்ட் பாஃல்மேயர் (Lt-Fallmeyer) தலைமை யில் உதவியாகயிருந்த ஜெர்மானிய விமானப்படைப் பிரிவு முசோலினி தங்கியிருந்த மெனாகியோ (Menaggio) என்ற இடத்திற்கு விரைந்தது. சூழ்நிலைகளின் நெருக்கத்தை அறிந்த முசோலினி நேசப்படையினரிடம் பிடிப்பட்டு விடக்கூடாது என ஜெர்மனியின் கூட்டணிப் படையினரிடம் அடைக்கலம் புகுந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தான். ஏனெனில் இத்தாலியை விட்டு வெளியேறிச் செல்ல அவனுக்கு மனதில்லை. ஜெர்மன் படைப்பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் பாஃல்மேயர், மாசோ (Masso) என்ற ஒரு பாதுகாப்பான இடத்திற்கு முசோலினியையும் அவனது மனைவி கிளாரா, மனைவிபோல வைத்திருந்த ஏஞ்ஜெலா குர்ட்டி (Angela Curti) சில முக்கியமான பாசீச ஆதரவாளர்கள் மற்றும் முசோலினியின் மெய்க்காப்பாளர்களுடன் தனது படைப்பிரிவினரின் பாதுகாப்புடன் சென்றான். இந்த தகவலை அறிந்த விடுதலைக்குழு பிரிவினர் அவர்கள் சென்ற சாலையின் முக்கியமான இடத்தில் சாலைத் தடையை (Road Block) வைத்துத் தடுப்பதற்கான ஏற்பாட்டை செய்து விட்டு நேசப் படையினருக்குத் தகவல் கொடுத்து முசோலினி சென்ற வாகனத் தொடர் (convoy) வருவதற்குள் டோங்கோ (Dongo) என்ற இடத்தில் சுற்றி வளைக்க (Ambush) ஏற்பாடாயிற்று. கடைசியில் முசோலினியின் வாகனத் தொடர் பொறியில் மாட்டியதுபோல் சிக்கிக்கொண்டது. லெப்டினன்ட் பாஃல் மேயரால் எதிர்நடவடிக்கை எடுக்கமுடியாத சூழ்நிலையில் நேசப் படையினரிடம் சரணடைந்தனர். ஆனாலும் முசோலினியைக் காட்டிக்கொடுக்கவில்லை. நேசப்படையினர் ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்தனர். கடைசியில் முசோலினி ஒரு ட்ரக்கின் பின் பகுதியில் ஜெர்மன் ஓவர்கோட் அணிந்து தன்னை மறைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு பிடித்து அவனைப் பிடித்துவிட்டனர். 1945 ஏப்ரல் 28 அதிகாலை 1.30 மணிக்கு முசோலினியும் அவனது 15 பாசீச தீவிர ஆதரவாளர்களும் மற்றவர்களும் பிடிப்பட்டனர்.
நேசநாட்டுப் படையினரின் (Allied Forces) ஒத்தாசையுடன் இத்தாலியின் விடுதலைக் குழுவினர். ஏப்.29ம் நாள் முசோலினியையும் அவனைச் சார்ந்த 15 தீவிர ஆதரவாளர்களையும் துப்பாக்கிச் சுடும் குழுவினர் (Firing squad) முன் | நிறுத்தி சுட்டுக்கொன்றனர். முசோலினியும் 15 தீவிர ஆதரவாளர்களும் துடிதுடித்துச் செத்தனர். அவர்கள் அந்த சரீரங்களை அதோடு விடவில்லை. மிலான் (Milan) என்ற நகரில் எஸ்சோகேஸ் ஸ்டேஷனில் தலைகீழாகத் தொங்க விட்டனர். அதைப் படத்தில் காணலாம். தொங்க விடு வதற்கு முன் முசோலினி மனைவியாய் வைத்திருந்த ஏஞ்ஞெலா குர்டின் மார் பில் சாய்ந்த மட்டில் கையில் செங்கோலுடன் உள்ளதை கீழுள்ள படத்தில் காண லாம். சர்வாதிகாரி முசோ லினியின் இழிவுச்சாவைப் பாருங்கள். எத்தனையோ ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் சாவுக்குக் காரணமாயிருந்தவனின் முடிவைப் பாருங்கள். அவன் வாழ்ந்த வாழ்வையும் அவனது அவமானச் சாவையும் சிந்தித்துப் பாருங்கள். “மனுஷர் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” (கலா.6:7).
முசோலினியின் அவமானச் சாவு ஹிட் லரில் பெருந்தாக்கத்தை உண்டாக்கிற்று. முசோலினைப் போல தன்னையும் ஒரு வேடிக்கைப் பொரு ளாக ஆக்கிவிடக் கூடாது என்ற அச்சம் அவனில் உருவாயிற்று.
கல்லறையில் ஒரு பிறப்பு
பால் டில்லிக் (PAUL TILLICH) அமெரிக்காவில் வாழ்ந்த ஜெர்மானியர். அவர் மிகவும் பெயர்பெற்ற இறையியல் வல்லுனர். இரண்டாவது உலக மகா யுத்தத்தின் முடிவுக்குப் பின்னர் ஹிட்லரின் நாஜிப்படையினரில் அநேகர் போர்க் கைதிகளாக கைது செய்யப்பட்டு (PRISONER OF WAR) அவர்கள்மீது “நியுரம்பர்க் போர்க்கைதிகள் விசாரணை” (NUREMBURG WAR CRIME TRIAL) நடந்தது. அந்த விசாரணையின்போது நாஜிப் படையினர் நடத்திய விஷய வாயு கொலை அறைக்கு (GAS CHAMBER) தப்பிய யூதர் ஒருவரின் சாட்சியத்தை பால் டில்லிக் குறிப்பிட்டுப் பேசினார்.
போலந்து நாட்டில் ஒரு யூத வாலிபன் விஷவாயு கொலை அறைக்குத் தப்பி ஒரு கல்லறைத் தோட்டத்தில் காலியாகயிருந்த கல்லறைக் குழியில் மறைந்திருந்தான். பல நாட்கள் அங்கேயே மறைந்திருக்கவேண்டியதிருந்தது. அவன் மாத்திரம் அல்ல. அவனைப் போன்று நாஜிப்படையினரின் கொலைவெறிக்குத் தப்பிய சில யூத ஆண்களும் பெண்களும் கூட அது போன்ற கல்லறைக் குழியில் மறைந்திருந்தனர். அது மனித வரலாற்றிலேயே யூதர்களுக்கு நடந்த மிகப்பெரிய பேரழிவு என்று சொல்லலாம். அந்த யூத வாலிபன் அங்கு மறைந்திருந்த காலகட்டத்தில் அநேக பாடல்களை (POEMS) எழுதி யுள்ளான்.
அதில் ஒரு பாடல், தான் மறைந்திருந்த குழிக்கு அருகாமையில் ஒரு யூதப் பெண்ணுக்கு பிரசவ வேதனை ஏற்பட்டு ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தச் சம்பவத்தை குறித்ததாகும். அங்கு குழிவெட்டவும் கல்லறைகளையும் பராமரிக்கிறவருமாயிருந்த எண்பது வயது தாத்தா அந்த இளம் தாய்க்கு உதவி செய்தார். அவர் அந்தக் குழந்தையை மெல்லிய துணியில் சுற்றி தன் கரத்தில் ஏந்திக்கொண்டார். அந்தக் குழந்தை முதல் முறையாக அழுதது. அதைப் பார்த்துக் கொண்டே இருந்த அந்த முதியவர் சத்தமாக ஜெபித்தார். “மகா பெரிய தேவனே, எங்களுக்குக் கடைசியாக மேசியாவை அனுப்பியிருக்கிறீரோ? கல்லறையிலிருந்து மேசியாவை தவிர வேறு யார் பிறக்கமுடியும்?” அது தான் அவருடைய சுருக்கமான ஜெபம். முதல் நூற்றாண்டிலேயே மேசியா பிறந்து பின் அவர் அடக்கம் பண்ணப்பட்டக் கல்லறையிலிருந்து மூன்றாவது நாள் உயிர் பெற்று எழுந்தார் என்பது ஆச்சரியமான உண்மை. நமக்கும் கல்லறையிலிருந்து ஒரு பிறப்பு இருக்கிறது. “எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம் ” (1 கொரி. 15:52) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கல்லறையிலிருந்து ஒரு பிறப்பை விவரிக்கிறார். இதைக்குறித்து மார்ட்டீன் லூத்தர் “கல்லறை யில் நித்திரையாகயிருக்கும் நம்மை இயேசு கிறிஸ்து வந்து நம்முடைய கல்லறையைத் தட்டி “மார்ட்டீன் எழுந்திரு” (MARTIN GET UP) என்று சொல்லுவார் நான் எழுந்திருப்பேன். இயேசு வரும்போது மகிழ்ந்து களிகூருவேன்” என்று குறிப்பிட்டார். அந்த நம்பிக்கை நமக்கு இருக்கிறதா?
பெர்லின் யுத்தக்களம் – ஹிட்லரின் தற்கொலை
ஹிட்லர் தனது படையினரின் வெற்றிகளில் இறுமாப்பும், மிஞ்சிய தைரியமும் ஏற்பட்டதால் சீனாவுடன் கொண்டிருந்த ஒப்பந்தத்தை மீறினான். ஒருவருக்கொருவர் ஆக்ரமித்துக்கொள்ளக்கூடாது என சோவியத் ரஷ்யாவின் ஸ்டாலினோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி உதாசீனப் படுத்தினான். ஜப்பானுடன் புதிய உடன்படிக்கையை உண்டாக்கிக்கொண் டான். ஜப்பான் அமெரிக்காவின் பேர்ல் ஹார்பரைத் தாக்கியதின் விளைவாக அமெரிக்கா யுத்தத்தில் மிகத் தீவிரமாக இறங்கியது. அதைத்தொடர்ந்து இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியும் ஜெர்மனும் அமெரிக்கா மீது யுத்தப் பிரகடனம் செய்தனர். நேசப்படையினர் (ALLIED FORCES) இத்தாலிமீது படையெடுத்து சர்வாதிகாரி முசோலினி கொல்லப்பட்டு அவமானப்படுத்தப் பட்டான்.
ஆஸ்கிவிட்ஸ் விடுவிப்பு பிரிக்கனோவ் வன்கொடுமை, கொலைகள் முகாம்
ஹிட்லரின் ரஷ்யப்படையெடுப்பில் ஸ்டாலின்கிராட் யுத்தக்களத்தில் (BATTLE OF STALINGRAD) அவனது போர்ச்செயல் திட்டம் (WAR STRATEGY) தோல்விகளை சந்தித்தது. இது ரஷ்யாவின் செம்படைக்கு (RED ARMY) பெரும் தெம்பையும் தைரியத்தையும் அளித்தது. உக்ரெய்ன் நாட் டின் தலைநகராகிய கீவ் நகரையொட்டிய பாபியார் பள்ளத்தாக்கு ஒரு கொலைக்கள முகாமாக மாறியது போலவே போலந்து நாட்டில் நாஜிப் படையினரின் வன்கொடுமை மற்றும் கொலைக்கள முகாம் (CONCENTRATION AND DEATH CAMP) ஆஸ்கிவிட்ஸ் – பிர்க்கெனோவ் (AUSCHWITZ – BICKENAU) என்ற இடத்தில் வைத்திருந்தனர். அது போலந்தில் மிகப் பெரிய, வன்கொடுமைக்குப் பெயர் பெற்ற முகாமாக இருந்தது. ரஷ்யாவின் செம்படை இதைக் குறித்து கேள்விப்பட்டனர். 1945 ஜன.27ம் நாள் செம்படையினரின் 60வது படைப்பிரிவு போலந்துமீது படை யெடுத்துச் சென்று இந்த வன்கொடுமைக் கொலைக்கள முகாமுக்குச் சென்று அங்கு இருந்த யூதமக்களை விடுதலை செய்தனர். ரஷ்யாவின் இப்படைத் திட்டம் ஆக்சிஸ் படையினருக்கு கடைசிவரைத் தெரியாததால் செம்படையினரைத் தடுக்க முடியவில்லை. இதே முகாமில் அதன் விடுதலைக்கு முன்னர் 1 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள் எனக் கணக்கிடப்பட்டது.
அன்று விடுவிக்கப்பட்ட யூத மக்களில் ஒரு பகுதியைப் படத்தில் காணலாம்.
பெரும்கூட்டம் யூதமக்கள் விடு விக்கப்பட்ட ஜன.27ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் நினைவு நாளாக அனு சரிக்கப்படுகிறது. ஹிட்லரின் சர்வ நாசத் திட்டத்தில் அழிக்கப்பட்ட (HOLOCAUST) யூதமக்களின் நினைவாக சர்வதேச நினைவு நாளாக அனுச ரிக்கப்படுகிறது. (INTERNATIONAL DAY OF COMMEMORA TION IN MEMORY OF THE VICTIMS OF HOLOCAUST) இந்த நாள் ஐக்கியநாடு களின் பொது அவையிலும் (U.N. GENERAL ASSEMBLY) அனுசரிக்கப்படுகிறது.
பெர்லின் யுத்தக்களம் (Battle of Berlin)
1945 ஏப்ரல் 23ம் நாள் சோவியத் ரஷ்யாவின் செம்படை (RED ARMY) மூன்று பகுதியாக பிரிந்து ஜெர்மனின் தலைநகராகிய பெர்லினை சுற்றிவளைத்துக் கொண்டது. பெர்லின் நகரின் புறநகர்ப் பகுதிகள் (SUBURBS) செம்படையில் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. செம்படை பெர்லின் நகருக்குள் நுழைந்து விடாத வண்ணம் பெரும் தடுப்புகளை அமைத்திருந்தனர் (HEAVY BARRICADE), செம்படையின் நோக்கம் பாராளுமன்றத்தை (REICH-STAG) பிடிக்கும் திட்டத்தை அறிந்து அதை சரியான பாதுகாப்பில் வைத்தனர். செம்படை சுற்றிவளைத்துக்
கொண்டதின் காரணமாக பெர்லின் நகருக்கு ஏப்.27 முதல் எந்த வெளித் தொடர்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டது. ஜெர்மனின் நாஜிப்படையினருக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. இராணுவத் தளவாடங்கள், மற்றும் துப்பாக்கித் தோட்டாக்கள் எதுவும் வெளியேயிருந்து கொண்டுவரமுடியவில்லை. வெளியே இருக்கும் நாஜிப்படையினரும் பெர்லின் நகருக்குள் உள்ளேயிருக்கும் படையினருக்கு உதவிக்கு வரமுடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டது. ஏப்.30ம் தேதி காலை பெர்லின் நகரைக்காக்கும் படைப் பிரிவிலிருந்த இராணுவ அதி காரி வீட்லிங் (WEIDLING) ஹிட்லரை அவர் தங்கியிருந்த நிலத்தடி பதுங்குமிடத் தில் (UNDERGROUND BUNKER) போய்ச் சந்தித்து நிலவரங்களை எடுத்துச் சொன்னார். அதிகபட்சம் நாம் இரண்டு நாட்களுக்குமேல் நாம் நின்று பிடிக்க முடியாது என்றும் நாம் தாக்குப்பிடிக்கமுடியாது என்றும் சொன்னார். அப்பொழுது ஹிட்லர் “கடைசி வரை போரா டுங்கள் (FIGHT TO THE FINISH) படையைக் கலைத்து விட வேண்டாம்” என்று அறிவுரை கொடுத்தார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரிய மாக இல்லை. எனினும் உத் தரவை ஏற்று வீட்லிங் வெளியேறி னார். அன்றைய தினமே ஹிட்லர் யுத்தக்களத்தில் எந்த முடிவையும் எடுக்க முழு அதி காரத்தையும் ஜோசப் கொய பெல்ஸ் (JOSEPH GOEBBELS) பொது விழிப்புணர்வும் கொள்கை பரப்பு அமைச்சருக்கு (PUBLIC ENLIGHTENMENT AND PROPAGANDA MINISTER) கொடுத்தார். எந்த அறிவுரையும் அவரிடமிருந்து பெற்றுக்கொள் ளும்படி களத்திலிருக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப் பட்டது. எந்த நேரத்திலும் பாராளுமன்றமும் (REICHSTAG) ஹிட்லர் தங்கும் இராஜ்பவன் போன்ற அரண்மனையும் (REICH CHANCELLERY) பிடிபடும் என்ற நெருக்கடி சூழ்நிலை உருவாயிற்று.
ஹிட்லர் தற்கொலை
ஹிட்லர் தனது அரண்மலையில் (CHANCELLERY) அதற்கு 55 அடி ஆழத்தில்
அமைக்கப்பட்ட மிகவும் பாதுகாப்பான பதுங்கு குழியில் இருந்தான் (FORTI. FIED UNDERGROUND BUNKER). அதில் 18 அறைகள் இருந்தன. தடையில்லாத மின்சார வசதி தண்ணீர் வசதி மாதக்கணக்காக தங்கி சாப்பிடுவதற்கான சகல உணவு வசதிகளோடு உள்ளது தான் அந்த பதுங்குமிடம். ஒரு குட்டி அரண்மனை என்று சொல்லலாம். 1945 ஜனவரி மாதம் முதலே அவன் தங்குமிடம் அந்த பதுங்குமிடம்தான். அடிக்கடி தங்குமிடத்தை மாற்றுவான். சிலவேளைகளில் அவன் எங்கு இருக் | கிறான் என்பதே இரகசியமாக இருந் தது. ஏனெனில் எந்த வேளையிலும் தனக்கு ஆபத்து இருக்கிறது என்ற அச்சத்திலே வாழ்ந்தான். அதன் கார ணமாக எந்த காரியத்திலும் அவனுக்கு சரியான தீர்மானம் எடுக்க முடியவில்லை. எப்பொழுதும் மிகுந்த மன அழுத்தத்தோடுதான் இருப்பான் (HIGH TENSION). 1945 ஏப்.28ம் நாள் அச்சு நாடுகளின் கூட்டணியிலிருந்த இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி நேசப்படையினரால் பிடிக்கப்பட்டு 29ம் நாள் கொல்லப்பட்டு பொது இடத்தில் அவமானப்படுத்தும் வகையில் அவனுடைய சரீரம் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு இழிவு செய்யப் பட்ட சம்பவத்தை ஹிட்லர் அறிந்திருந்தான். அது அவனது உள்ளத்தில் பெரும்தாக்கத்தை உண்டுபண்ணியது. தானும் பிடிபட்டு அப்படிப்பட்ட நிலை தனக்கு வந்துவிடக்கூடாது என அஞ்சினான். தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் அவனது மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பாகவே அவனுடைய சிந்தையில் ஓடியிருக்கவேண்டும். ஏனெனில் நாஜிப்படையினர் “அவமானத்திற்கு முன்பே மரணத்தை சந்திக்கவேண்டும்” (DEATH BEFORE DISHONOUR) என்ற ஒரு கோட்பாடு வைத்திருந்தனர். நாஜிப் படையினருடைய இராணுவ டாக்டரை வருவித்து மரணத்தின் வேதனை (AGONY OF DEATH) இல்லாமல் துரிதமாக தற்கொலை செய்துகொள்வதற்கு வழி என்ன என்பதை கேட்டுள்ளான். அந்த டாக்டர் சையனைடு விஷம் (CYA” NIDE POISON) ஒன்றுதான் மரணத்தின் வேதனையை அனுபவிக்காமல் துரிதமாக உயிரைமாய்த்துக் கொள்ளும் வழி என்றும் ஒருவேளை சையனைடு விஷத்தில் அளவு போதாமல் உயிர் பிரிவதில் சற்று தாமதம் ஏற்படுமானால் கைத்துப்பாக்கியால் (PISTOL) நெற்றியில் சுட்டுக்கொண்டால் மரணம் உடனே சம்பவிக்கும் (INSTANT DEATH) என்று ஆலோசனை சொல்லியுள்ளார். அன்றே ஹிட்லர் சையனைடு விஷத்தை வாங்கி வைத்துக்கொண்டதாகத் தெரிகிறது. எதிரியின் இராணுவத்தினரிடம் பிடிபட்டு வேடிக்கைப் பொருளாக மாறி விடக்கூடாது (BEING MADE SPECTACLE) என்பதில் ஹிட்லர் மிகவும் கருத்தா யிருந்தான். பெர்லின் எதிரிகளிடம் பிடிபடப்போகிறது என்பது உறுதியான வுடன் எல்லா நம்பிக்கையும் இழந்தான். ஆனாலும் பைத்தியம் பிடித்தவனைப் போல (NERVOUS BREAKDOWN) சம்பந்தமில்லாத உத்தரவுகளைப் பிறப்பித்து கொண்டிருந்தான். ஜெர்மனியின் கோட்டை என்று கருதப்பட்ட பெர்லின் நகருக்குள் செம்படையினர் நுழைந்து குண்டு வீச்சுத் தாக்குதல் (BOMBARD MENT) தொடர்ந்தது. கடைசியாக “நாம் தோற்றுவிட்டோம்” என்பதை தனது நம்பகமானவர்களிடம் ஒப்புக்கொண்டான். இனியும் தாமதிக்க அவன் விரும்பவில்லை.
ஈவாபிரவுன் (EVABRAUN) திருமணம் செய்து கொள்ளாமலே ஹிட்லரின் மனைவிபோலிருந்தாள் (MISTRESS OF HITLER). கடைசிவரை அவள்தான் கூட இருந்தவள். ஹிட்லரின் மரணத்திற்கு சுமார் 40 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு சிறிய எளிமையான நிகழ்ச்சியில் ஈவாபிரவுனை திருமணம் செய்து கொண்டான்.
1945 ஏப்.30ம்தேதி பிற்பகல் 3 மணி அளவில் ஹிட்லர் ஈவா பிரவுனுக்கு சையனைடு விஷத்தைக் கொடுத்து விழுங்கச் சொல்லிவிட்டு தானும் விஷயத்தை விழுங்கினான். சற்று தாமதமானபடியால் ஹிட்லர் தன்னை நெற்றியில் சுட்டு தலை சிதறி உடனடியாக மரணத்தை சந்தித்தான். ஈவாபிரவுன் சையனைடு விஷத்தினாலேயே மரணமடைந்தாள். ஹிட்லரின் முன் ஏற்பாட்டின்படி ஹிட்லரின் மெய்க்காப்பாளர்களால் இருவருடைய சரீரமும் அரண்மனைத் தோட்டத்திலேயே அவசர அவசரமாகத் தீக்கிறை யாக்கப்பட்டது.
பெர்லின் படையினருக்குப் பொறுப்பாகயிருந்த இராணுவ அதிகாரி வீட்லிங் ஏப்.30ம் தேதி இரவு தன் படைகளை கலைத்துவிட (BREAK OUT OR DER) உத்தரவிட்டான். கலைந்த படையினர் சோவியத் ரஷ்யாவின் செம்படை யினரிடம் சரணடைந்தனர். பெர்லின் வீழ்ந்தது. மே 1ம் தேதி சோவியத் ரஷ்யாவின் கொடி ஜெர்மன் பாராளுமன்றத்தில் ஏற்றப்பட்டது.
ஜோசப் கொயபெல்ஸ் ஹிட்லரின் வலதுகரம்போலிருந்து செயல்பட்ட அமைச்சர். ஹிட்லரின் தற்கொலை அவனை மிகவும் பாதித்தது. ஹிட்லரின் மரணத்தைக் குறித்து “ஜெர்மனியின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது (THE HEART OF GERMANY HAS CEASED TO BEAT). தலைவர் மறைந்தார்” என்ற சொன்னான். மேலும் மிகவும் பரிதாபத்திற்குரிய காரியம் என்னவெனில் ஹிட்லர் நம்மோடில்லை. நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். ஹிட்லர் தெரிந்துகொண்ட வழியைத் தவிர வேறு வழியே இல்லை. நான் அவருடைய மாதிரியையே பின்பற்றுவேன். (THE ONLY WAY LEFT FOR US IS THE ONE WHICH HITLER CHOSE. I SHALL FOLLOW HIS EXAMPLE). மே 1ம் தேதி காலை 8 மணி அளவில் நாஜிப்படை பல் டாக்டர் ஹெல்மூட் குன்ஸ் (HEL-MUT KUNZ) என்பவரை வருவித்தான். தன் ஆறு குழந்தைகளையும் மார்பின் (MORPHIN) இஞ்ஜெக்ஷன் போட்டு சுயநினைவு இழந்தவுடன் சயனைடு விஷத்தை அவர்கள் வாயில் ஊற்றும்படி கேட்டுக்கொண்டான். பின்னர் நடந்த விசாரணையில் குன்ஸ் மார்பின் இன்ஜெக்ஷன் கொடுத்ததாக ஒப்புக்கொண்டான். ஆனால் சயனைடு விஷத்தை ஹிட்லரின் தனிப்பட்ட டாக்டர் (HITLER’S PERSONAL DOC. TOR) கொடுத்தார் என்று கூறியுள்ளான். இதை முடித்துவிட்டு கொயபெல்சும் அவரது மனைவி
அரண்மனை ே ாட்ட திற்குள் சென்றனர். முதலில் தன் மனைவியை கைத் துப்பாக் கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டுக்
கொண்டு மரணத்தை சந்தித்தான். உதவியா ளர்களுக்கு அவனது கட்டளைப்படி எரிக்கச் சொன்னாலும் போதிய பெட்ரோல் இல்லாத காரணத்தால் அரை குறையாக எரித்து புதைக்கப்பட்டனர். எனினும் பின்னர் புதை குழியிலிருந்து எடுத்து அடையாளம் உறுதி செய்யப்பட்டது. பெண்களென்றும், தாய்மார்கள் என்றும், குழந்தைகள் என்றும் பாராமல் சுமார் 6 மில்லியன் யூத செய்து கொன்றழித்தவர்களின் முடிவைப் பாருங்கள். யூதமக்களின்
கண்ணீரும் கதறுதலும் சர்வநாசத்திற்கு (HOLOCAUST) பொறுப்பாயிருந்து செயல்பட்டவர்களை எப்படி சாபமாக மாறி அழித்துவிட்டது என்பதை சிந்தித்துப்பாருங்கள். “அநியாயத்தை உழுதீர்கள் தீவினையை அறுத்தீர் கள்” (ஓசி.10:13) என்ற ஓசியா தீர்க்கதரிசியின் வார்த்தை அவர்களுக்கு எப்படி பலித்துவிட்டது என்று பாருங்கள்.
ஜெனரல் வீட்லிங் மே 1ம் தேதி காலை 6 மணிக்கு தன்னுடைய படையினருடன் சோவியத் படையினரிடம் எந்த நிபந்தனையுமின்றி சரணடைந்தான். காலை 8.25 மணிக்கு ஜெனரல் வீட்லிங் சோவியத் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சுக்கோவிடம் (CHUIKOV) கொண்டு நிறுத்தப் பட்டான். இந்த சுக்கோவ் தான் ஸ்டாலின் கிராட் யுத்தத்தை (BATTLE OF STALINGRAD) வெற்றிகரமாக முடித்தவன். “நீதான் பெர்லின் படைக்கு (BER LIN GARRISON) பொறுப்பாளனா?” என்று சுக்கோவ் கேட்டான். “ஆம் நான்தான்” என்றான் ஜெனரல் வீட்லிங். “உங்கள் தலைவன் எங்கே இருக்கிறான்?” ”நேற்று பார்த்தேன். அவர் நேற்றே தற்கொலை செய்திருப் பார் என்று எண்ணுகிறேன்” என்று வீட்லிங் பதிலளித்தான். பின்னர் வீட்லிங் சரணடைந்த பத்திரத்தில் கையெழுத்திட்டான்.
அடால்ஃப் இச்மேன் (ADOLF EICHMANN)
அடால்ஃப் இச்மேன் இரண்டாவது உலகமகா யுத்த காலத்தில் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் மூத்த இராணுவ அதிகாரியாக யிருந்தார். ஆனால் ஹிட்லரின் ஆணைப்படி யூதர்களைக் கொன்று அழிக்கும் நாஜிப் படை யினருக்கு செயல்பாட்டு அதிகாரியாகயிருந்தார் (CHIEF OF OPERATION). இஸ்ரவேல் நாட்டின் உளவுத்துறை (MOSSAD) தலைமறைவாகயிருந்த அவரை மிகுந்த சாமர்த்தியமாக கண்டுப் பிடித்து கைது செய்து இஸ்ரவேல் நாட்டிற்குக் கொண்டுவந்தனர்.
நாஜிப்படையிலும் நாஜிப்படையினருக்கு உடந்தையாயிருந்தோரின் தண்டனைச் சட்டம் (1950) (NAZIS AND NAZI COLLABORATORS (PUN ISHMENT ACT – 1950) என்ற சட்டத்தின் கீழ் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணை 1961 ஏப்ரல் மாதம் தொடங்கியது. மனுக்குலத்திற்கு விரோதமாக குறிப்பாக யூத இன மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு அநேகமாயிரம் யூதர்களின் கொடூர கொலைக்குக் காரணமாயிருந்தவர் என்று முடிவு செய்து இஸ்ரவேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கியது.
அடால்ஃப் இச்மேன் உச்சநீதிமன்றத்திற்கு (SUPREME COURT) முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் அவரது முறையீட்டை நிராகரித்து தூக்குத் தண்டனையை உறுதிசெய்தது. 1962 மே 30ம் | நாள் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பால்போர் பிரகடனம்
முதல் உலகமகா யுத்தத்தின் வெளிப்படையான காரணமும் விளைவுகளும் முதலாவது உலகமகா யுத்தம் 1914ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம்தேதி தொடங்கி 1918 நவம்பர் 11ம் நாள் முடிவுக்கு வந்தது. இந்த யுத்தத்திற்கான நேரிடையான காரணம் என்னவெனில் 1914ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி ஆஸ்த்திரியா நாட்டு இளவரசனாகிய பெர்டினாண்டும் (FERDINAND) அவருடைய மனைவியும் பார்சினியா நாட்டின் தலைநகரமாகிய செஜியோ நகரத்திற்குச் சென்றபோது செர்பியா நாட்டின் வாலிபன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதனால் ஆத்திரமடைந்த ஆஸ்த்திரியா செர்பியாவுக்கு விரோதமாகப் படையெடுத்தது, நட்பு நாடாகிய ரஷ்யா செர்பியாவுக்கு உதவி செய்ய முன் வந்தது. அப்பொழுது ஆஸ்த்திரியாவின் நட்பு நாடாகிய ஜெர்மனி ரஷ்யாவைத் தாக்க முற்பட்டது. இதைக்கண்ட ரஷ்யாவின் நட்பு நாடாயிருந்த பிரான்ஸ் ஜெர்மானியைத் தாக்க முனைந்தது. இதனைக் கண்ணுற்ற ஜெர்மனி 1914ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம்நாள் பிரான்ஸ் நாட்டின்மீது படையெடுத்தது. ஜெர்மனி பிரான்சைத் தாக்க பெல்ஜியத்தின் வழியாக அந்நாட்டின் முன் அனுமதி பெறாமல் தன் படையை அனுப்பினபடியால் பெல்ஜியத்தின் நட்பு நாடாக யிருந்த இங்கிலாந்து ஜெர்மனியைக் கண்டித்து ஆகஸ்ட் 4ம் நாள் போரில் இறங்கியது. இதில் 33 நாடுகள் கலந்துகொண்டன. ஆகவே அன்று உலகயுத்தம் தொடங்கிற்று. இப்போரின் விளைவாக 4 கோடிபேர்கள் உயிரிழந்தனர். பலகோடி மக்கள் கொடிய காயமுற்று அங்கவீனர்களானார் கள். பல நகரங்கள் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன. சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட் சேதங்கள் ஏற்பட்டன.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் காரணங்களும் விளைவும் இரண்டாவது உலக மகாயுத்தம் 1939ம் ஆண்டு செப்.3ம் நாள் தொடங்கி 1945ம் ஆண்டு செப்.2ம் நாள் முடிவுக்கு வந்தது.
1938ல் நடந்த மியுனிச் ஒப்பந்தத்தின்படி செக்கோஸ்யோவாக்கியாவின் எந்த பகுதியையும் ஆக்கிரமிப்பதில்லை என்று ஹிட்லர் வாக்குறுதி யளித்திருந்தான். எனினும் ஜெர்மனியின் ஆக்கிரமிப்புகளும் சண்டைகளும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. ஹிட்லர், கட்டாயப் படுத்தி இராணுவத்தில் ஆட்களைச் சேர்த்தான். தன்னுடைய இராணுவ பலத்தைப் பெருக்கினான். 1938ல் ஆஸ்த்திரியாவைக் கைப்பற்றிக் கொண்டான். ஜெர்மனியின் நட்பு நாடாகிய இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி அல்பேனியாவைக் கைப்பற்றிக்கொண்டான். ஹிட்லரின் அத்து மீறிய நடவடிக்கைகளைக் கண்ட பிரிட்டனும் பிரான்சும் போலந்துடன் உடன்படிக்கை செய்துகொண்டன. 1939ல் ஜெர்மனியும் ரஷ்யாவும் உடன் படிக்கை செய்துகொண்டன. ஹிட்லர் போலந்து எல்லை வழியாக ஒரு இருப்புப்பாதை அமைக்க போலந்திடம் அனுமதி கேட்டான். போலந்து இதை மறுக்கவே 1939ம் ஆண்டு ஜன. 1ம் தேதி ஜெர்மனியின் இராணுவம் போலந்துக்குள் ஊடுருவிச் சென்றது. ஆதலால் பிரிட்டனும் பிரான்சும் தங்கள் வாக்குறுதிகளை போலந்துக்கு நிறைவேற்றும்படி 1939ம் ஆண்டு செப். 3ம் தேதி ஜெர்மனியின் மீது யுத்தப் பிரகடனம் செய்தது. இவ்வாறு இரண்டாவது உலகமகா யுத்தம் தொடங்கிற்று.
இப்போர் அச்சு நாடுகள் (AXIS FORCE) எனப்பட்ட ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளின் கூட்டணிக்கும் நேசநாடுகள் எனப்பட்ட (AL LIED FORCE) பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டணிக்கும் இடையே நடைபெற்றது. யுத்தத்தில் 61 நாடுகள் கலந்துகொண்டன. அதில் 40 நாடுகள் யுத்தக் களங்காயின. 1941ம் ஆண்டு டிச. 7ம் தேதி ஜப்பான் அமெரிக்காவின் கப்பல் தளமாகிய பேர்ல் துறைமுகத்தைத் (PEARL HARBOUR) தொடர்ந்து அமெரிக்கா நேசநாடுகளின் தரப்பில் ஜப்பானுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்தது ஜெர்மனியின் தலைநகராகிய பெர்லினின் வீழ்ச்சி சர்வாதிகாரி ஹிட்லரின் தற்கொலை இவைகளைத் தொடர்ந்து 1945, மே 7ம்தேதி ஜெர்மனி நிபந்தனையின்றி ரஷ்ய செம்படையிடம் சரணாக தியடைந்தது. ஆனால் ஜப்பான் மாத்திரம் தொடர்ந்து போர் செய்தது. 1945ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி அமெரிக்காவும் கூட்டு நாடுகளும் சேர்ந்து ஜப்பானை சரணடைய எச்சரிக்கை விடுத்தது. ஜப்பான், அதற்கு செவிசாய்க் காதபடியால் 1945ம் ஆண்டு ஆக.6ம் நாள் அமெரிக்க விமானப்படை ஹிரோஷிமா நகரின் மீதும் 9ம் தேதி நாகசாகி நகரின் மீதும் அணுகுண்டைப் போட்டது. அக்கொடிய நிகழ்ச்சியில் இரு நகரங்களும் விளையாட்டு மைதானம் போன்று தரைமட்டமாக்கப்பட்டது. 2 இலட்சத்திற்கு அதிகமான பேர் கொல்லப்பட்டார்கள். அணுகுண்டு கதிர்வீச்சால் இன்றும் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த பெரு நாசத்திற்குப் பின் ஆகஸ்ட் 14ம் நாள் நிபந்தனையின்றி ஜப்பான் சரணடைந்தது. செப்.2ல் அது தொடர்பான கையெழுத்தாயிற்று. அதோடு இரண்டாவது உலக யுத்தம் முடிவுக்கு வந்தது.
இந்த யுத்தத்தின் விளைவாக மொத்தம் 5,48,00,000 பேர்கள் கொல்லப் பட்டார்கள். சோவியத் யூனியனில் மட்டும் 2,08,00,000 பேர்களும் ஜெர்மனியில் 66,00,000 பேர்களும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் 44,00,000 பேர்களும் அமெரிக்காவில் 3,29,000 பேர்களும் கொல்லப்பட்டார்கள். இதில் கொல்லப் பட்டவர்களுள் 1,30,00,000 குழந்தைகளும் அடங்குவார்கள். இந்த உயிரிழப்பு தோராயமான ஒரு மதிப்பீடே தவிர சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளிலும் உயிரிழப்பு எண்ணிலடங்காது என்று சொல்லப்படுகிறது.
ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிக் ஆட்சியும் இத்தாலியில் முசோலினியின் பாசிய ஆட்சியும் ஒழிந்தன. ஜெர்மனி இரண்டாகப் பிரிக்கப்பட்டு மேற்குப் பகுதி நேசநாடுகளான இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மேற் பார்வையின் கீழும், கிழக்கு பகுதி ரஷ்யாவின் மேற்பார்வையிலும் விடப் பட்டது. பெர்லின் நகரமும் இரண்டாப் பிரிக்கப்பட்டு கிழக்கு பெர்லின், மேற்கு பெர்லின் என ஆனது.
இரண்டு யுத்தங்களின் முக்கிய பயனாளி (BENEFICIARY) யார்?
உலகம் இரண்டு மகாயுத்தங்களைச் சந்தித்தது. மேலே குறிப்பிடப்பட்டத் தகவலின்படி ஆச்சிஸ் கூட்டணி நாடுகளிலும் நேசநாடுகளிலிருந்தும் இராணுவத்தினரும் பொதுமக்களுமாக கோடிக்கணக்கான மக்கள் யுத்தக் களத்தில் மரணத்தைச் சந்தித்தார்கள். பலகோடி ரூபாய் பெறுமான பொருள் நஷ்டத்தைச் சந்தித்தார்கள். இந்த யுத்தத்தினால் நாடுகள் அடைந்த நஷ்டத்திற்கு கணக்கே இல்லை. எத்தனைபேர் இறந்தார்கள் எத்தனை பேர் அங்கவீனர்கள் ஆனார்கள் என்பதற்கு கணக்கே சொல்லமுடியாது என உலகப் பிரசித்திப்பெற்ற என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்கா (ENCYCLO PAEDIA BRITANNICA) கூறுகிறது.
எருசலேம் யுத்தக்களம் (BATTLE OF JERUSALEM) இவ்வளவு பேரழிவுக்கும் மத்தியில் யூதமக்களைக்குறித்து தேவன் ஒரு மேலான நோக்கத்தை வைத்திருந்தார். அது என்னவெனில் முதல் உலக மகா யுத்தத்தின்போது பாலஸ்தீனமும் எருசலேம் நகரமும் பிரிட்டீஷ் இராணுவத்தின் வசமாயிற்று. எருசலேம் அப்பொழுது ஒட்டாமான் ஆட்சியின் கீழிருந்தது. 1917ம் ஆண்டு நவ.17 முதல் டிச.30 வரை ஒட்டாமான் (OTTOMAN) இராணுவத்தோடு பிரிட்டிஷ் ஜெனரல் எட்மண்ட் ஆலன்பி (Genrl. Edmand Allenby) தலைமையில் நடந்த எருசலேம் யுத்தக்களத்தில் (Battle of Jerusalem) எருசலேம் பிரிட்டிஷ் வசமாயிற்று. ஜெனரல் ஆலன்பி எருசலேம் நகருக்குள்’ செல்லும்போது அந்நகரின் பரிசுத்தம் கருதி குதிரையிலேயோ அல்லது எந்த வாகனத்திலேயோ செல்லாமல் கால்நடையாகவே சென்றார். (படத்தில் காண்க). அதோடு எருசலேமில் 400 ஆண்டுகால ஒட்டா மான் ஆட்சி முடிவுக்கு வந்தது.
வேதாகம கால யுத்த யுக்தி (BIBLICAL BATTLE STRTEGY)
எருசலேம் நகரம் ஜெனரல் ஆலன்பி தலைமையிலான படையினரால் பிடிக்கப்பட்டதில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்தது. “எருசலேம் யுத்தக் களம்” (BATTLE OF JERUSALEM) என்றிருந்தாலும் பிரிட்டிஷ் படையினருக்கும் துருக்கியப் படையினருக்கும் ஒரு பெரும் மோதலின்றி எளிதாக எருசலேம் பிடிபட்டது. வேதகாலத்தில் நடந்ததுபோலவே 20ம் நூற்றாண்டிலும் யுத்தக் களங்களில் தேவன் ஆச்சரியமானவைகளைச் செய்கிறார்.
மேஜர் விவியன் கில்பெர்ட் (MAJOR VIVIAN GILBERT) ஜெனரல் ஆலன்பி படைப் பிரிவில் இருந்தவர். இவர் ஒரு நல்ல கிறிஸ்தவர். யுத்தக் களத்திலிருந்தால் வேதவாசிப்பில் தவறாத ஒரு தேவமனிதர். அவர் வேதத்தை வாசித்துக் கொண்டிருந்தபோது “மிக்மாஸ்” (MICHMASH) என்ற சொல் அவருடைய சிந்தையில் பளிச்சென்று வெளிப்பட்டது. இந்த பெயர் அவருக்குக் கேள்விப் பட்ட பெயராக இருந்தது. அவர் வேதத்தில் தேட ஆரம்பித்தார். கடைசி
யாக, 1 சாமு.13:16ல் “மிக்மாஸ்” (MICHMASH) பெலிஸ்தர் இஸ்ரவேலுக்கு விரோதமாக படையெடுத்து வந்தபோது பெலிஸ்தர் முகாமிட்டிருந்த இடம் என்பதை அறிந்துகொண்டார். ஏன் இந்த இடத்தை தேவன் இப்பொழுது சுட்டிக்காட்டுகிறார் என்று அதை ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தார்.
சவுல் இராஜாவாக இருந்த காலத்தில் பெலிஸ்தருக்கும் இஸ்ரவேலர் களுக்கும் ஒரு யுத்தம் நடந்தது. பெலிஸ்தர் “மிக்மாஸ்” என்ற இடத்தில் பாளயமிறங்கினார்கள். சவுலின் குமாரனாகிய யோனத்தானும் அவனுடைய ஆயுத தாரியும் மாத்திரம் தங்களுடைய படையினருக்குத் தெரியாமல் பெலிஸ்தரின் பாளையத்தை உளவு பார்க்கும்படி இரவோடு இரவாகச் சென்றனர். பெலிஸ்தரின் பாளையத்தின் அருகில் ஒரு செங்குத்தான பாறை இருந்தது. அந்தப் பாறைக்கு எதிர்புறத்தில் செங்குத்தான மற்றுமொரு பாறையும் இருந்தது. அப்பாறையின் ஒன்றின் பெயர் போசேஸ், மற்றொன் றின் பெயர் சேனே. யோனத்தான் தனது ஆயுததாரியிடம் “ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார். அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும் இரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.” பெலிஸ்தரின் காவலாளிகள் “நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள்” என்றால் நின்று விடுவோம். “எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள்” என்றால் ஏறிப்போவோம். கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். இது நமக்கு அடையாளம் என்றான் ” (1 சாமு.14:10,11). யோனாத்தானின் விசுவாசத்தின் படியே பெலிஸ்தரின் காவலாளிகள் “எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள். உங்களுக்கும் புத்தி கற்பிப்போம் என்றார்கள்.” யோனத்தானும் ஆயுத தாரியும் கைகளாலும் கால்களாலும் தவழ்ந்து ஏறிப்போனார்கள். அவர்களை அவன் நெருங்கியவுடன் அவர்கள் எதிர்பார்க்காமல் அடித்த அடியில் 20பேர் விழுந்தார்கள். அவனுடைய ஆயுததாரி யோனத்தான் பின்னாலே சென்று அவர்களை வெட்டிக்கொன்றான். இந்த திடீர் தாக்குதலில் சுமார் அரை ஏக்கர் இடத்தில் அவர்கள் செத்துக்கிடந்ததையும் பார்த்த பெலிஸ்தர் இஸ்ரவேலர் நம்மைச் சுற்றி வளைத்துவிட்டனர் என்று பயந்து தப்பியோட முயற்சித்தனர். எதிராளிகளின் படையினர் இரவானபடியால் தங்களைத் தாக்குபவர்கள் யார் என்பதைக்கூட அடையாளங்கண்டுகொள்ளமுடியாமல் ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டதில் பலர் உயிரிழந்தனர். எதிராளியின் முகாமின் கூக்குரல் கேட்டு இஸ்ரவேலர் புறப்பட்டுச் சென்று தப்பியோடிய வர்களை விரட்டிச்சென்று வெட்டிப்போட்டார்கள். “இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை இரட்சித்தார் ” (1 சாமு.14:23).
மேஜர் கில்பெர்ட் ஜெனரல் ஆலன்பியிடம் சென்று இதை விவரித்தார். சம்பந்தப்பட்ட வேதப்பகுதியை வாசித்துக்காட்டினார். இதில் விசேஷம் என்ன வெனில் இதே மிக்மாஸ் பகுதியில்தான் துருக்கிய இராணுவம் முகாமிட்டி ருந்தது. ஜெனரல் ஆலன்பியும் மேஜர் கில்பெர்ட்டும் இதைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். தங்களது சிறிய ரோந்துப் படையினரை (PATROL PARTY) அனுப்பி அந்த குறிப்பிட்ட இடத்தை முன்கூட்டியே அடையாளங்கண்டு கொண்டனர். யோனத்தானைப் போலவே இரவு வேளையைத் தெரிந்து கொண்டு அனைத்துப் படையினரையும் பயன்படுத்தாமல் ஒரு கம்பெனி இராணுவத்தினரை மட்டும் பயன்படுத்தி எதிர்பட்ட முகாம் காவற்படை யினரை எந்த சத்தமுமின்றி கொன்று திடீரென்று துருக்கிய இராணுவத் திற்குள் நுழைந்து பிரிட்டிஷ் படையினர் தாக்க ஆரம்பித்தனர். துருக்கிய இராணுவம் பிரிட்டிஷ் இராணுவம் தங்களை சுற்றி வளைத்துக்கொண்டதாக எண்ணி எதிர்தாக்குதலுக்கும் ஆயத்தமின்றி துருக்கிப் படையினர் தப்பியோட ஆரம்பித்தனர். அநேகர் கொல்லப்பட்டார்கள். மீதமுள்ளோர்கள் யுத்தக் கைதிகளாகப் பிடிபட்டார்கள். பிரிட்டிஷ் இராணுவம் ஒரு பெரிய யுத்தமின்றி வெற்றியைக் கண்டது.
மேஜர் கில்பர்ட் மூலமாக வேதப்பகுதியை சுட்டிக்காட்டி அதன்படியே இந்த யுத்தத்தையும் நடத்த தேவனுடைய நடத்துதலை எண்ணிப்பாருங்கள். தேவனுடைய திட்டத்தில் எருசலேம் பிடிக்கப்பட்டு இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்படவேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறார். அவருடைய திட்டத் தின்படியே நடந்தது. “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீ செய்ய நினைத்தது தடைபடாது ” (யோபு 42:2) என்பது எவ்வளவு பெரிய உண்மை.
டாக்டர் கெய்ம் வெய்ஸ்மேனின் கண்டுபிடிப்பு:
டாக்டர் கெய்ம் வெய்ஸ்மேனின் கண்டு பிடிப்பு முதல் உலக மகா யுத்தத் தில் பிரிட்டனின் வெற்றிக்கு ஒரு முக்கிய மான காரணமாயிருக்கிறது. டாக்டர் கெய்ம் வீஸ்மான் (Dr. CHAIM WEIZMAN) என்ற இரசாயன விஞ்ஞானி ஸ்விட் சர்லாண்டு நாட்டில் ஒரு கல்லூரியில் ஒரு விஞ்ஞானப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் ஒரு யூதர். ஆனால் திடீரென்று 1904ம் வருடம் அப்பணியை விட்டுவிட்டு இங்கி லாந்திலுள்ள மான்செஸ்டர் நகரில் பேராயராகப் பணியேற்றார். அதே சமயம் சொந்தமாக சோள வகைகளி(Maize)லிருந்து அசிட்டோன் (Acetone) என்னும் மருந்து செய்வதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்துவந்தார். அசிட்டோன் என்ற மருந்து கப்பல்களிலுள்ள பீரங்கிகளில் உபயோகப்படும் மருந்து. இது ஐரோப்பாவில் வளர்ந்து வந்த ஒருவகை மரத்திலிருந்து செய்யப்பட்டது. 1914ம் வருடம் ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் யுத்தம் தொடங்கி அது உலக மகாயுத்தமாக மாறிவிட்டது. அதனால் ஐரோப்பாவிலிருந்து அந்த மரங்களை கொண்டுவர வழியில்லை. அசிட்டோன் செய்வதும் தடைபட்டது. பீரங்கிகளுக்கு வேண்டிய குண்டு மருந்து இல்லாதபடியால் இங்கிலாந்து திகைத்தது, எங்கே யுத்தத்தில் தோற்று விடுவோமா என்று பயந்தது. பால்போர் பிரகடனம்:
இதற்கிடையில் செய்ம் வெய்ஸ்மேனுக்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பெரிய அதிகாரிகளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் வெய்ஸ்மேனிடம் அசிட்டோன் மருந்து பெரிய அளவில் செய்து தரமுடியுமா என்று கேட்டார். வெய்ஸ்மேன் அதற்கு வேண்டிய சோள வகைகளும், தொழிற்சாலையும் கொடுத்தால் வேண்டிய அளவு தயாரித்துத் தருவதாகக் கூறினார். அப்படியே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் எல்லா நாடுகளிலுமிருந்தும் வேண்டிய சோளம் கொண்டுவரப்பட்டன. தொழிற்சாலைகளும் இயங்கின. வேண்டிய அளவு அசிட்டோள் மருந்தை வெய்ஸ்மேன் தயாரித்துக் கொடுத்தார். பிரிட்டன் யுத்தத்தில் ஜெயித்தது. அப்பொழுது இங்கிலாந்தின் பிரதம அமைச்சர் லாயிட் ஜார்ஜ், வெளிநாட்டு செயலாளர் ஜேம்ஸ் பால்போர், யுத்தத்தில் ஜெயம் பெறுவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த செய்ம் வீஸ்மானுக்கு நல்ல வெகுமதி கொடுக்கவேண்டும் என்று அவர்கள் எண்ணி, அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டனர். அவர், யூதர்கள் பலஸ்தீனாவில் வந்து குடியேற அனுமதிக்கப்பட வேண்டுமென்றார். அப்படியே அமைச்சரவையின் ஒப்புதலின் பேரில் வெளிநாட்டுச் செயலாளர் ஜேம்ஸ் பால்போர் ஒரு பிரகடனம் 9.12.1917ல் வெளியிட்டார். அதன் சாராம்சம், யூதர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் அங்கிருந்து பலஸ்தீனாவில் வந்து தங்கித் தங்களுக்கு அங்கே சொந்த வீடு கட்டிக் குடியிருப்பதற்குப் பிரிட்டனுக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை என்பதே. அச்சமயத்தில் பலஸ்தீனாவின் நிர்வாக பொறுப்பு பிரிட்டனிடம் இருந்து வந்தது. அதற்கு பால்போர் பிரகடனம் என்றே பெயரும் உண்டானது.
இந்தப் பிரகடனத்துக்குப் பின் 1918க்கும் 1948க்கும் இடையில் பல ஸ்தீனாவுக்குள் வந்து சேர்ந்த யூத ரின் எண்ணிக்கை 5,65,000.
தீர்க்கதரிசனம் நிறைவேறுதல்
இஸ்ரவேல் மக்கள் மீண்டும் தங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்ப வருவார்கள் என்பது தேவ னுடைய திட்டம். அவர் அதை தமது தீர்க்கதரிசிகள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார் என்பதை வேதத்தி லிருந்து அறிகிறோம்.
எரேமியா (கிமு.590) “இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லாத் தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பி வரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன். அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்” (எரே.32:37,38). “அவர்களுக்கு நன்மை செய்யும் படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன் ” (வ.41). “என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழ ரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனி களைப் புசிப்பார்கள். அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்” (ஆமோஸ் 9:14,15) என்று வாசிக்கிறோம். தீர்க்கதரிசனங்கள் உரைத்து நூற்றாண்டுகள் உருண்டோடினாலும் தேவன் தமது தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்ததை மறந்துவிடவில்லை. அவற்றை நினைவு கூர்ந்து அவர்களைத் திரும்பவும் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வந்து சேர்த்தார்.
இஸ்ரவேல் மக்கள் 400 ஆண்டுகள் அந்நிய தேசத்திலே அடிமையாக இருப்பார்கள். அவர்கள் அங்கு உபத்திரவப்படுவார்கள் என்றும் மீண்டும் அவர்களை திரும்ப சொந்த தேசத்திற்குக் கொண்டுவருவேன் என்று ஆபிரகாமுக்குச் சொன்னார் (ஆதி. 15:13,14) அது அப்படியே நடந்தது. 400 ஆண்டுகள் நிறைவேறியபோது தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தார் (யாத்.2:23-25). அவர்களை மோசேயின் தலைமையின் கீழ் எகிப்திலிருந்து மீட்டுக் கானானுக்குக் கொண்டுவந்தார்.
அதேபோலவே முதலாம் நூற்றாண்டில் பல்வேறு நாடுகளுக்கு சிதறடிக்கப் பட்ட மக்களை 20ம் நூற்றாண்டில் திரும்பக் கொண்டுவந்தார். அவர் அதற்காக செயல்பட்டார். நிறைவேற்றினார். “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கி றேன்” (யோபு 42:2) என்ற யோபின் அறிக்கை எவ்வளவு உண்மை என்பதை எண்ணிப்பாருங்கள். நடந்த யுத்தங்களின் உள்ளார்ந்த நோக்கத்தை (ULTI MATE OBJECT) விளங்கிக்கொள்ள முடிகிறதா? தேவன் தெரிந்துகொண்ட தம்முடைய மக்களை சொந்த நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதே. அதை தேவன் நமது புரிந்துகொள்ளுதலுக்கும் அப்பால் செய்து முடித்தார். அவருடைய ஞானம் ஆராய்ந்து முடியாதது.
66 ‘கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக்
காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே” (எண்.6:24-26).
விஷவாயு அறையின் உள்தோற்றம். அறையின் கூரையில் ஒரு சிறிய திறப்பைக் (Small opening) காணலாம். அந்த திறப்பின் வழியாக வெளியே கசிவு வராத வண்ணம் அமைத்து விஷவாயுவை நாஜிப்படையினர் உள்ளே செலுத்துவார்கள்.
இஸ்ரவேல் சுதந்திர நாடாகப் பிரகடனம்
“அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன்; அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக் கொள்ளுவேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (செப்.3:20).
இஸ்ரவேல் உருவாக தியோடர் ஹெர்சலின் பணி
“இஸ்ரவேல் தனி நாடாக விரைவில் உரு வாகும். அப்பொழுது என்னுடைய கல்லறையைத் தோண்டி என் எலும்புகளை எடுத்து அவைகளை எருசலேமில் புதைக்க வேண்டும்” இது உலக சியோனியர் சங்கத்தை (WORLD ZIONIST ORGANI SATION) உருவாக்கிய தியோடர் ஹெர்சல் (THEODOR HERZEL) 1904ம் ஆண்டில் தனது மரண சாசனத்தில் எழுதி வைத்த வாசகம். அவருடைய மேன்மையான விசுவாசம் குறிப்பிடத்தக்கதாகும். 1896ல் அவர் எழுதிய “யூதர்களுக்குத் தனிநாடு” (THE JEWISH STATE) என்ற புத்தகம் யூதர்கள் சிதறியிருந்த அனைத்து நாடுகளிலும் மிகவும் பிரபல்யமாயிற்று. சிறையிருப்பிலும், சித்திரவதைகளிலும் மரணத்தின் விழிம்பில் ஊசலாடிக்கொண்டிருந்த யூதமக்களை அப்புத்தகம் உயிர்ப்பித்தது. அப்புத்தகம் வெளியாகிய 52வது ஆண்டுகள் இஸ்ரவேல் தனி நாடாக மாறியது என்றால் அது எவ்வளவு பெரிய ஆச்சரியம். இஸ்ரவேல் மக்கள் அவருடைய இறுதி விருப்பத்தைக் கனப்படுத்தினார்கள். அவருடைய எலும்புகளைத் தோண்டி எடுத்து வந்து 1949 ஆகஸ்ட் 10ம் நாள் எருசலேம் நகரில் ஒரு மலை உச்சியில் மீண்டும் அடக்கம் செய்தனர். அந்த மலைக்கு அவருடைய நினைவாக “ஹெர்சல் மலை” என பெயர் சூட்டினர்.
முதலாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் அனைத்து நாடுகளின் சபை (LEAGUE OF NATIONS) என்ற உலக அமைப்பு தோன்றியது. அது ஒரு வலுவற்ற அமைப்பாகவே செயல்பட்டது. அந்த அமைப்பால் இரண்டாவது உலக மகா யுத்தத்தைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை. இரண்டாவது உலக மகா யுத்தத்தின் இறுதியில், ஐக்கிய நாடுகளின் சபை (UNITED NATIONS ORGANI SATION) என்ற அமைப்பு அதிக அதிகாரங்களோடு உருவாயிற்று. உலக யுத்தம் முடிவடைந்தபோது யூதர்களுக்கு ஆதரவாகயிருந்த பிரிட்டீஷ் அரசாங்கம் பாலஸ்தீனத்தில் குடியேறிய யூதமக்களை 1920ல் தங்களுக்கென்று ஒரு அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள அனுமதித்தது. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்னர் யூதர்களின் குடியேற்றத்திற்கு தனி அரசாங்கம் அமைப்பதிலும் அமெரிக்கா ஆதரவு அளித்தது.
இஸ்ரவேல்- ஐ. நா. சபை தீர்மானம்
1947 ஏப்.28ம் நாள் பாலஸ்தீனர்களின் பிரச்சனை ஐக்கிய நாடுகளின் சபைக்கு (UNO) வந்தபோது அரபியருக்கும் யூதர்களுக்கும் பாலஸ்தீனாவை பகிர்ந்து கொடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதை நடைமுறைப் படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஏழு மாதங் களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையில் இதற்கான தீர்மானம் நிறைவேறியது. பாலஸ்தீனத்திலிருந்த பிரிட்டீஷ் படைகள் 1948 மே 14ம் தேதி வெளியேறுவதாக இருந்தது. யூதர்கள் தங்களுடைய சுதந்திரத்தை இந்த வெளியேற்றத்தின்போது பிரகடனப்படுத்துவதா அல்லது வேறொரு நாளைத் தெரிந்து கொள்வதா என்று இஸ்ரவேல் தலைவர்கள் கலந்தாலோசனை செய்து அதே நாளிலே தங்களை சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தினார்கள்.
பாலஸ்தீனம் பகுக்கப்பட்டதற்கு அரபிய நாடுகளில் கடும் கண்டனம் எழும்பியது. ரஷ்யா இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தந்ததைக் கண்டித்து தமஸ்குவில் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் சீரிய நாட்டு வாலிபர்களால் எரித்து சாம்பலாக்கப்பட்டது. பெய்ரூட் நகரில் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டுவதற்காக ஒரு கும்பல் அங்கே இருந்த அரபிய அமெரிக்க எண்ணெய் நிறுவனத்தின் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஜோர்டானின் தலைநகரான ஆமானில் இரண்டு பேராசிரியர்களை கொலை வெறி கொண்ட கும்பல் கொன்றது.
இஸ்ரவேல் – சுதந்தர நாடாகப் பிரகனம்
இவ்விதமாக எதிர்ப்புகள் மத்தியில் 1948 மே 14ம் நாள் இஸ்ரவேல் தன்னுடைய சுதந்தரத்தைப் பிரகடனப்படுத்தியது. அன்று அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே இஸ்ரவேல் மக்கள் சுதந்தரத்தை வீதிகளில் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். அன்று அதிகாலை 3 மணிக்கெல்லாம் யூதர்களுடைய ஜெப ஆலயங்கள் திறக்கப்பட்டு ஸ்தோத்தரிக்கும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. அன்று பிரிட்டிஷார், பாலஸ்தீனத்தைவிட்டு வெளியேறினர். அவர்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பாக செய்த கடைசி காரியம் என்னவெனில் ஒரு பெரிய இராணுவ அணிவகுப்பை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி யூத ரபியாகிய மொர்தெகாய் வெயினார்ட்டான் என்பவரிடம் சீயோன் வாசலுக்கான திறவுகோலைக் கொடுத்ததுதான்.
முதல் ஜனாதிபதி
டாக்டர். செய்ம் விஸ்மானைக் குறித்து அவரது விஞ்ஞானக் கண்டு பிடிப்பைக் குறித்து கடந்த இதழில் நாம் கவனித்தோம். அவருடைய கண்டு பிடிப்பே முதலாம் உலகப்போரில் பிரிட்டனின் வெற்றிக்கு ஏதுவாக அமைந்தது. அவர் அரசியல் வட்டாரத்தில் செல்வாக்குள்ளவராக இருந்த படியால் யூதமக்களுக்கு பாலஸ்தீன நாட்டில் குடியேறும் உரிமை வேண்டு மென்று கேட்டார். அதுவே பால்போர் பிரகடனத்திற்கு ஏதுவாயிற்று. அவர் ஒருமுறை “இந்த தேசத்திற்கு விஞ்ஞானம் சமாதானத்தையும் மறுமலர்ச்சி யையும் கொண்டுவரும் என நான் நிச்சயமாக நம்புகிறேன். அது உலகப் பிரகாரமான செயலுக்கு மாத்திரமல்ல ஆன்மீக மறுமலர்ச்சியையும் உருவாக்கும். விஞ்ஞானம் ஒரு இலக்கை அடையும் வழி. அதுவே இலக்கு அல்ல” என்று சொன்னார். அவருடைய கண்ணோட்டத்தைப் பாருங்கள். டாக்டர். செய்ம் விஸ்மானைக் கனப்படுத்தும் வகையில் அவரை சுதந்தர இஸ்ரவேல் நாட்டின் முதல் ஜனாதிபதியாக (First President) ஆக்கினார் கள். அவர் 1949 மே 11ம் நாள், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார்.
முதல் பிரதம அமைச்சர்
டேவிட் பென் குரியன் (DAVID BEN GURION) இஸ்ரவேல் நாட்டின் முதல் பிரதம அமைச்ச ராகப் பொறுப்பேற்றார். அவர் அப்போதைய |ரஷ்யப் பேரரசின் (RUSSIAN EMPIRE) கீழிருந்த போலந்து நாட்டில் பியோனிக்ஸ் (PIONSK) என்ற நகரில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய தகப்பனார் அவிக்டான் கிரன் (AVIG-DON GRUN) ஒரு சிறந்த வழக்கறிஞர். சீயோன் சங்கத்தின் (ZION MOVENMENT) தலைவராகவுமிருந்தார். பென் குரியன் 14 வயதாக இருக்கும்போது அவர் நண்பர்களை இணைத்து “எஸ்றா இளைஞர் குழு (EZRA YOUTH CLUB) ஒன்றை ஆரம்பித்து எபிரெய மொழியைக் கற்றுக் கொள்ளவும் தங்கள் சொந்த நாடாகிய புனித பூமிக்குச் செல்ல ஆயத்தப் படவும் அநேகரை ஊக்குவித்தார். இளம் வயதிலேயே அப்படிப்பட்ட தேசபக்தி உள்ளவராக இருந்தார். 1905ம் ஆண்டு வார்சா (WARSAW) பல்கலைக் கழகத்தில் மாணவராக சேர்ந்தார். மாணவ பருவத்திலேயே “சோஷல் டெமாக்கிரட்டிக் ஜூயிஷ் ஒர்க்கர்ஸ் பார்ட்டி” (SOCIAL-DEMOCRATIC JEWISH WORKERS PARTY) என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். 1905ம் ஆண்டு நடந்த ரஷ்யப் புரட்சியின்போது இரண்டு முறை கைது செய்யப்பட்டு சிறையில டைக்கப்பட்டார். 1906ம் ஆண்டு ஒட்டாமான் துருக்கியர் ஆட்சியிலிருந்து பாலஸ்தீன சொந்த நாட்டிற்குத் திரும்பினார். முதல் உலக மகா யுத்தத்தின் போது பிரிட்டிஷ் இராணுவத்தில் யூதர் பிரிவில் (JEWISH LEGION) சேர்ந்து செயல்பட்டார். முதல் உலக யுத்தத்திற்குப் பின் அவர் இராணுவத்திலிருந்து விலகி போலிஸ் டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பதவி ஏற்றார். (DY-IN SPECTOR GENERAL OF POLICE) யூதர்களுக்கும் அரபியர்களுக்குமுள்ள பூசலில் அர பியர்களுக்கு சில இடங்களை விட்டுக் கொடுத்தாலும்கூட அரபியர்கள் திருப்தியடையாதது அவரை மிகவும் துக்கப்படுத்தியது. இருதரத்தாரின் சமாதானத்தை விரும்பி அவர் ஒரு மிதவாதியாகவே (LIBERAL) செயல்பட்டார். பல தீவிரவாத கோட்பாடுள்ள (RADICALS) தலைவர்கள் இருந்தாலும் அவரே பிரதம அமைச்சராகத் தெரிந்து கொள்ளப்பட்டார்.
இஸ்ரவேல் மக்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புதல்
முதல் உலக மகா யுத்தத்தின் முடிவில் பால்போர் பிரகடனத்திற்கு பின்னர் பல நாடுகளில் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட யூதர்கள் அவர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப ஆரம்பித்தனர். இரண்டாம் உலக யுத்த முடிவில் ஜெர்மனியிலிருந்து 1,65,000 யூதர்கள் நாடு திரும்பினார்கள். நாடு சுதந்தரம் அடைந்த பின்னர் 1950ம் ஆண்டு யூதர்கள் நாடு திரும்புவதற்கான சட்டம் வடிவமைக்கப்பட்டது. பல்வேறு நாடுகளிலும் பல்வேறு கலாச்சாரங்களிலும் இருந்து யூதர்கள் இஸ்ரவேலுக்கு வந்து சேர்ந்தார்கள். இப்படி வந்த யூதர்கள் பல்வேறு திறமையுள்ளவர்களாகவும் இருந்தனர். ஐரோப்பியாவிலிருந்து வந்த யூதர்களில் பலர் மருத்துவர்களும், பொறியியல் நிபுணர்களும், தொழில் நுட்ப வல்லநர்களும், வணிகப் பெருமக்களும், பண்டிதர்களும், விஞ்ஞானிகளும், முதலீடு செய்வதற்கு வல்லவர்களாகவும் இருந்தார்கள். ரஷ்யாவிலிருந்து
வந்த யூதர்கள் இஸ்ரவேல் நாட்டின் வேளாண்மை மற்றும் தொழிற் சாலைகளின் முன்னேற்றத்திற்குக் காரணமாயிருந்தார்கள். ரஷ்யா விலிருந்து வந்த யூதர்கள் இஸ்ரவேலின் எதிர்காலத்தை வடிவமைத்தலில் பெரும்பங்கு வகித்தார்கள். மூன்று ஜனாதிபதிகள், இரண்டு பிரதம அமைச்சர்கள் ஆகியோர் ரஷ்யாவிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்களே.
உலகமெங்குமுள்ள யூதர்களை இஸ்ரவேலுக்குக் கொண்டுவர இஸ்ரவேல் அரசாங்கம் அதிக முயற்சிகளை மேற்கொண்டது. 1949ம் ஆண்டு மே மாதம் 45,000 யூதர்களை இஸ்ரவேல் நாடு விமானப் போக்குவரத்து ஒழுங்கு செய்து ஏமன் நாட்டிலிருந்து கொண்டு வந்தது. அச்செயல்பாடு “ஆப்ரேஷன் மேஜிக் பிளாநெட்'” (OPERATION MAGIC PLANET) என்று அழைக்கப்பட்டது. அதேபோல ஈராக்கிலிருந்து” எஸ்றா, நெகேமியா செயல்பாடு” (OPERATION EZRA NEHAMIA) என்ற செயல்பாட்டின் காரணமாக ஈராக் நாட்டிலிருந்து 1,21,000 யூதர்கள் கொண்டு வரப்பட் டனர். “மோசே செயல்பாட்டின்’ (OPERATION MOSES) கீழ் எத்தியோப்பியாவிலிருந்து ஒரே ஜம்போ விமானத்தில் 1100 யூதர்கள் இஸ்ரவேலுக்குக் கொண்டுவரப்பட்டனர். மும்பாய், கொச்சின் மற்றும் மீசோராமிலிருந்து யூதர்கள் இடம் பெயர்ந்து இஸ்ரவேலுக்குப் போய் குடியேறினார்கள்.
“பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன். நான் வடக்கே நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்தி களையும், நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்” (ஏசா.43:5-7) என்று ஏசாயா மூலம் சொன்னதை தேவன் நிறைவேற்றிக் காட்டிவிட்டார்.
தீர்க்கதரிசன நிறைவேறுதல்கள் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வரு கையோடு தொடர்புள்ளவைகளே.
‘கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்” (மத்.24:25).
கிறிஸ்துவின் வருகையின் அடையாளம் நிறைவேறுதல்
முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூதமக்களின் தேவாலயம் இடிக்கப்பட்டு தங்கள் நாட்டையும் இழந்து நாட்டைவிட்டு உலகின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சிதறடிக்கப்பட்டார்கள். அவர்களின் சிதறடிப்பு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு வேதத்தில் முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் என்பதை நாம் கண்டோம். கி.பி. 70ம் ஆண்டில் ரோமப் பேரரசின் தளபதி டைட்டஸ் சீசர் எருசலேமைக் கைப் பற்றியபோது “இந்த வெற்றி என்னுடைய முயற்சியால் கிடைத்ததல்ல, இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக தேவனுடைய கோபாக்கினை நிறை வேற்றப்பட நான் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டேன்” என்று கூறினான். ஆகவே கி.பி.70ம் நூற்றாண்டில் எருசலேமுக்கும் எருசலேமிலே வாழ்ந்த யூதர்களுக்கும் நடந்தது தீர்க்கதரிசன நிறைவேறுதலே என்பதையும் கண்டோம்.
உபத்திரவமே சுயதேசத்தின் மீது நாட்டத்தைக் கொடுத்தது:
இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் 400 ஆண்டுகள் அடிமைகளாக உபத்திரவப் படுவார்கள் என தேவன் ஆபிரகாமுக்கு முன் அறிவித்தார் (ஆதி.15:13). அவர்கள் மீண்டும் திரும்ப வருவார்கள் என்றும் முன் அறிவித்தார் (வ.14). ஆனால் விடுதலைக்கான காலம் நிறைவேறியபோது அவர்களுக்குக் கொடிய உபத்திரவம் ஆரம்பித்தது. “தேவன் இஸ்ரவேல் புத்திரர்களைக் கண்ணோக்கினார். தேவன் அவர்களை நினைந்தருளினார்” (யாத். 2:24,25). மோசேயை தேவன் தெரிந்துகொண்டு அவர்களை விடுவித்து பின்னர் யோசுவாவைக் கொண்டும் கானான் தேசத்திற்கு அவர்களை வழி நடத்தினார். அதேபோலவே முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிதறடிக்கப்பட்ட நாடுகளில் தாங்கொனா உபத்திரவங்களைச் சந்தித்தார் கள். குறிப்பாக ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மனியிலும் அண்டைய நாடுகளிலும் வன்கொடுமை முகாம்களிலும், கொலை வெறி முகாம்களிலும் ஆயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டனர். அதுவே அவர்களுக்கு தங்களுடைய சொந்த நாடாகிய இஸ்ரவேலை மீண்டும் அடையவேண்டும். சுய தேசத்திற்குக் குடிபோக வேண்டும் என்ற அவசரத்தை உணர்ந்தார்கள்.
ஆபிரகாமுக்கு வாக்களித்த நித்திய சுதந்திரம்:
முதலாம் உலகமகா யுத்தத்தின்போது நேசநாடுகளின் இராணுவத்தில் (ALLIED FORCE) ஜெனரல் ஆலன்பி தலைமையிலான பிரிட்டிஷ் இராணுவம் ஒட்டாமான் துருக்கியரிடமிருந்த எருசலேமை 1917ல் கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்டது. அதைத் தொடர்ந்து யூதர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்பட்டது. பால்போர் பிரகடனத்தின்படி யூதர்கள் அங்கே குடியேறும், உரிமையைப் பெற்றார்கள். இரண்டாவது உலக மகா யுத்தத் திற்குப் பின் 1948ல் இஸ்ரவேல் சுதந்திர நாடாக மாறியது. இவை யாவும் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் முன்னறிவித்தபடி நடந்து நிறைவேறியது என்பதையும் முந்திய அதிகாரங்களில் கண்டோம். கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்களித்த போது ஒரு நித்திய உடன்படிக்கையையும் ஒரு நித்திய சுதந்தரத்தைக் குறித்தும் சொல்லுகிறார் “உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசம் முழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்” (ஆதி.17:7,8) என்று காண் கிறோம். ஆகவே இப்பொழுது இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் சுதந்திரம் ஆபிரகாமுக்கு வாக்களித்தபடி அது நித்திய சுதந்தரமாக இருக்கும். அதை யாரும் பறித்துக் கொள்ள முடியாது என்பதும் தேவனுடைய வாக்குத்தத்தமாகும்.
இனிவரயிருக்கும் மகா பெரிய உபத்திரவமும் தப்புவிக்கும் வழியும்:
அநேக அதிகாரங்களில் யூத மக்கள் நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட வகையில் சந்தித்த கொடூரமான சித்திரவதைகளையும் கொடிய மரணங்களைக் குறித்தும் கண்டோம். நடந்து முடிந்த கொடுமைகளை அறிந்து நமக்கு என்ன பயன் என்றும் ஒருவேளை சிலர் நினைக்கக்கூடும். அதிலும் பின் சந்ததியாராகிய நமக்கு தேவன் ஒரு பாடத்தை வைத்திருக் கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கும் பின்னர் இந்த உலகம் அந்திக்கிறிஸ்துவின் ஏழு வருட கால ஆட்சிக்கு ஒப்புவிக்கப் படும். அந்த ஆட்சி மிகுந்த உபத்திரவகாலம் நிறைந்ததாக இருக்கும். அதைக் குறித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து குறிப்பிடும்போது “உலக முண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்ப வியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” (மத்.24:25). ஆகவே யூதர்கள் சந்தித்த கொடுமைகளை விட மிக அதிகமான கொடுமைகள் வரயிருக்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். இந்தக் கொடுமைகளுக்குத் தப்பித்துக்கொள்ளும் ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் நாம் எடுத்துக் கொள்ளப்படுவதற் கான தகுதிகளை இப்பொழுதே அடைந்துகொள்வதுதான் என்பதை வலியுறுத்தி நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது வருகையைக் குறித்து இரண்டு காரியங்களை நமக்குச் சுட்டிக்காட்டு கிறார்.”உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்” (மத். 24:42) என்றும் “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” (வ.44) என்று சொல்லியுள்ளார். அப்போஸ்தலனாகிய பவுல் “சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கு வாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக’ (1 தெச.5:23) என்று கூறுகிறார். அப்போஸ்தலனாகிய யோவான் “அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளு கிறான்” (1 யோவா.3:2,3) என்று கூறுகிறார். “உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான்” (யாத்.31:13) என்கிறார். “நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே” (2 கொரி.5:5). ஆகவே நம்முடைய பகுதியில் அவர் அருளும் கிருபையில் சார்ந்துகொண்டு நம்மை அவருடைய கரத்தில் ஒப்புவிக்கும் போது நம்மைப் பரிசுத்தப்படுத்தி அவரோடு சேர்த்துக்கொள்வதற்கு அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். அந்திக் கிறிஸ்துவின் உபத்திரவ காலத்திற்குத் தப்பித்துக்கொள்ள அதற்கு முன்பு சம்பவிக்கயிருக்கிற அவருடைய இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட ஆயத்தப்படுவோம்.
அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார்:
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கான அடையாளங்களை தமது சீடர்களுக்குச் சொல்லும்போது ஒரு அடையாளம் “அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள் ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளை யெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்” (மத்.24:32,33) என்றார். வேத ஆராய் சியாளர்கள் இந்த அடையாளத்தைக் குறித்ததான அர்த்தத்தைத் தெரிவித் துள்ளனர். அத்திமரம் இஸ்ரவேல் நாட்டின் தேசிய மரமாகக் கருதப்படுகிறது. 2000 ஆண்டுகளாக நாடற்றவர்களாக உலகமெங்கும் சிதறிக் கிடந்த மக்களுக்கு இஸ்ரவேல் நாடு 1948 மே 14ம் நாள் சுதந்தர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்திமரத்திலே இளங்கிளை தோன்றி துளிர் விடும்போது கோடைகாலம் நெருங்கிவிட்டது என்று அறிகிறோம். (“வசந்த காலம் என தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பது தவறானது. ஆங்கில வேதாகமத்திலும் (SUMMER) என்றும் கிரேக்க மூலமொழியில் கோடைக் காலத்தைக் குறிக்கும் “சுக்கோன்” (SUKON) என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டுள்ளது). கோடை காலத்தின் தொடக்கத்தில் துளிர் விட்டு கோடையில் கனிகொடுக்கும். ஆகவே கோடையின் தொடக்கத்தை அத்திமரம் துளிர் விடுவதிலிருந்து அறிந்து கொள்ளுகிறோம். கனி கொடுக்கத் தொடங்கும் போது ”அவர் சமீபமாக வாசலருகே வந்திருக்கிறார்” என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். இஸ்ரவேல் நாடு துளிரிட்டு செழித்து கனிகொடுக்கத் தொடங்கிவிட்டது. பெரும்பகுதி பாலைவனமாக இருந்த நாடு இப்பொழுது வளம் பெருகி வெளிநாடுகளுக்கு அதன் விளைச்சல்களை ஏற்றுமதி செய்கிற இடத்தை எட்டியிருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். “ஆகையால் இனிச் சம்பவிக்கப் போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் 66 தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப் படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்” (லூக். 21:36) இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்படும் மார்க்கத்தைப் பற்றிக் கொள்வோம்.
தேவனுடைய வார்த்தை நிறைவேறாமல் ஒழிந்துபோவதில்லை:
வேதம் சொல்லுகிறது “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தை களோ ஒழிந்துபோவதில்லை” (மத். 24:35) என்றும் “வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறு மளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்.5:18) என்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார். அவர் மாறாதவர் “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் மாறாதவராயிருக்கி றார்” (எபி.13:8). யூத மக்களின் சோக வரலாறு நம்முடைய ஜீவியத்தை தகுதிப்படுத்தட்டும்.
இதன் pdf file உங்களுக்கு தேவை என்றால் தயவு செய்து 25 வினாடிகள் காத்திருக்கவும் Download Timer Countdown முடிந்தவுடன் Download Button தெரியும்.