அகியா – AHIJAH, AHIAH (Tamil Bible Dictionary)

 

அகியா – AHIJAH, AHIAH (Tamil Bible Dictionary)

அகியா

 

“அகியா” என்னும் எபிரெய பெயருக்கு  ‘Achiyah, Achiyahuw

“யகோவாவின் சகோதரர்” “brother of Jehovah (Yah)” என்று பொருள். பழைய ஏற்பாட்டில் “அகியா” என்னும் பெயரில் ஒன்பது பேர் உள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:

 

1. அகிதூபின் குமாரன்

 

சவுலின் ஆட்சிக்காலத்தில் கிபியாவில் பிரதான ஆசாரியராக ஊழியம் செய்தவன். (1சாமு 14:3,18) நோபில் ஆசாரியராக ஊழியம் செய்த அகிமெலேக்கும், அகியாவும் ஒரே நபர் என்று சிலர் கருத்துக் கூறுகிறார்கள். இவனும் அகிதூபின் குமாரனாவான். (1சாமு 22.9)

 

சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும் அகிதூபின் குமாரனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான்; யோனத்தான் போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள். 

1 சாமுவேல் 14:3

 

 அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்நாட்களில் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இருந்தது. 

1 சாமுவேல் 14:18

 

அப்பொழுது சவுலின் ஊழியக்காரரோடே நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பிரதியுத்தரமாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன். 

1 சாமுவேல் 22:9

2. சீசாவின் குமாரன்

 

சாலொமோனின் ஆட்சிக்காலத்தில் அவனுடைய பணிபுரிந்தவன். சீசாவின் குமாரன். (1இராஜா 4:3) அரமனையில் மந்திரியாகப்

 

சீசாவின் குமாரராகிய ஏலிகோரேப்பும் அகியாவும் சம்பிரதிகளாயிருந்தார்கள்; அகிலுூதின் குமாரன் யோசபாத் மந்திரியாயிருந்தான். 

1 இராஜாக்கள் 4:3

3. சீலோமியனாகிய அகியா

 

இஸ்ரவேல் தேசம் விக்கிரகாராதனையின் நிமித்தமாக இரண்டு ராஜ்யமாகப் பிரிந்தது. வடக்கு இஸ்ரவேல் ராஜ்யத்திலுள்ள சீலோவில் அகியா தீர்க்கதரிசன ஊழியம் செய்து வந்தான். (1இராஜா 11:29-39) சாலொமோனின் ஆட்சிக் காலத்தில் யெரொபெயாம் அவனுக்கு எதிராகக் கலகம் பண்ணினான். அகியா தான் போர்த்துக் கொண்டிருந்த புதுச்சால்வையைப் பன்னிரெண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு, யெரொபெயாமிடம் பத்துத் துண்டுகளை எடுத்துக் கொள்ளுமாறு கூறினான். பத்துக் கோத்திரத்திற்கு யெரொபெயாம் ராஜாவாவான் என்பதற்கு இது அடையாளமாகும். சாலொமோனின் காலத்திலும், ரெகொபெயாமின் காலத்திலும் ஜனங்கள் ஒடுக்கப்பட்ட போது, அகியா ஜனங்கள் சார்பாகப் பரிந்து பேசினான். யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான். தன் மனைவியை வேஷம் மாறி, சீலோவிற்குப் போய், அகியாவிடம் தன் மகன் பிழைப்பானா என்று கேட்க அனுப்பினான். அப்போது அகியா முதிர்வயதானதினால் கண்கள் மங்கலடைந்து பார்க்கக்கூடாதிருந்தான். யெரொபெயாமின் துன்மார்க்கத்தின் நிமித்தம் அவனுடைய குமாரன் மரிப்பான் என்று அகியா தீர்க்கதரிசனம் உரைத்தான். (1இராஜா 141-18) சீலோமியனாகிய அகியா கூறிய தீர்க்கதரிசனம் புஸ்தகமாகவும் எழுதப்பட்டிருக்கிறது. (2நாளா 9:29)

 

4.பாஷாவின் தகப்பன் 

 

இவன் யெரொபெயாமின் குமாரன் நாதாபைக் கொன்றுபோட்டவன். அவனுக்குப் பதிலாக இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் அமர்ந்து ராஜ்யபாரம் பண்ணினான். (1இராஜா 15:27)

 

இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் குமாரனான பாஷா, அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தருக்கு இருந்த கிபெத்தோனை முற்றிக்கைபோட்டிருக்கையில், பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான். 

1 இராஜாக்கள் 15:27

5. யெர்மெயேலின் குமாரன்

 

யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவன். யெர்மெயேலின் குமாரன். (1நாளா 2:25)

 

எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே. 

1 நாளாகமம் 2:25

6. பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன்

 

கேபாவின் அழைத்துக் கொண்டு போவதில் உதவி புரிந்தான். (1நாளா 8.6) 

 

கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே. 

1 நாளாகமம் 8:6

7. தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன்

 

 மெகராத்தியனாகிய ஏப்பேர், பெலோனியனாகிய அகியா, 

1 நாளாகமம் 11:36

 

8. தாவீதின் ராஜ்யபாரத்தில் வாசம் பண்ணிய ஒரு லேவியன்

 

இவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருட்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாய் இருந்தான். (1நாளா 26:20)

 

மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்படட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான். 

1 நாளாகமம் 26:20

9. ஆசாரியர்களில் ஒருவன்

 

ஆசாரியர்களில் ஒருவன் நெகேமியாவோடு உடன்படிக்கையில் முத்திரை போட்டவன். (நெகே 10:26)

Leave a Reply