ஆராதனை
நாம் பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம் (எபி 12:28)
கருப்பொருள் : வேதத்தில்ஆராதனை
தலைப்பு : ஆராதனை
ஆதார வசனம் : எபி 12:28
துணை வசனம்: உபா 6:16; நியா 1:16; 1சாமு 7:3
எபிரெயர் 12: 28 ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
உபாகமம் 6: 16 நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சை பாராதிருப்பீர்களாக.
நியாயாதிபதிகள 1: 16 மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சம்மரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.
1சாமுவேல் 7: 3 அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கிவிடுவார் என்றான்.
1. தேவனுக்குப் பிரியமானஆராதனை (எபி 12:28)
-
பயத்தோடு செய்வது (எபி 12:28)
-
பக்தியோடு செய்வது (எபி 12:28)
-
நடுக்கத்தோடு செய்வது (சங் 2:11)
2. புத்தியுள்ளஆராதனை (ரோ 12:1)
ரோமர் 12: 1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
-
சரீரங்களை பரிசுத்தமாய் ஒப்புக்கொடுப்பது (ரோ 12:1)
-
தேவனுக்குப் பிரியமாய் ஒப்புக்கொடுப்பது (ரோ 12:1)
-
ஜீவபலியாய் ஒப்புக்கொடுப்பது (ரோ 12:1)
3. சுத்த மனச்சாட்சியுள்ள ஆராதனை (2தீமோ 1:4)
2தீமோத்தேயு 1: 4 உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்தமனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன்.
-
தேவனை சுத்த மனச்சாட்சியோடு ஆராதிக்க வேண்டும் (2தீமோ 1:4)
-
சுத்த மனச்சாட்சி உத்தமராக விளங்கப்பண்ணும் (1கொரி 4:2)
-
இயேசுவின் இரத்தம் மனச்சாட்சியைச் சுத்திகரிக்கிறது (எபி 9:14)
4. இடைவிடாத ஆராதனை (தானி 6:16)
தானியேல் 6: 16 அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான்.
-
12 கோத்திராத்தாரும் இடைவிடாமல் ஆராதிக்கிறார்கள் (அப் 26:7)
-
வயதான விதவை இரவும் பகலும் தேவனை ஆராதித்தாள் (லூக் 2:37)
-
தானியேல் இடைவிடாமல் தேவனை ஆராதித்தார் (தானி 6:16)
5. சுயஇஷ்டமான ஆராதனை (கொலோ 2:23)
கொலோசெயர் 2: 23 இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.
-
மாயமான தாழ்மையோடு செய்வது (கொலோ 2:23)
-
தேவ மகிமைக்கு முன்னுரிமை தராமல் செய்வது (அப் 12:23)
-
மனிதரைப் பிரியப்படுத்தி செய்வது (கலா 1:10)
6. விக்கிரகங்களுக்குச் செய்யும் ஆராதனை (கொலோ 2:19)
-
சூரிய நட்சத்திரங்களை தொழுதுகொள்வது (உபா 4:19)
-
சுரூபங்களைத் தொழுதுகொள்வது (எசே 8:10,11)
-
அந்நிய தேவர்களைப் பணிந்துகொள்வது (யாத் 23:24)
7.வீணான ஆராதனை (மாற் 7:7)
-
வீணானவைகளைப் பின்பற்றக் கூடாது (1இரா 17:15)
-
விணானவைகளுக்காக தங்கள் மகிமையை மாற்றுதல் (எரே 2:21)
-
வீணானவைகளைச் சேவிப்பது தேவகோபத்தை உண்டாக்கும் (1இரா 16:26)
மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்ச
சிந்தனையினாலே வீணாய் இறுமாப்புக் கொண்டிருக்கிற எவனும் உங்கள்
பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை
வஞ்சியாதிருக்கப்பாருங்கள் (கொலோ 2:19)