இராஜாக்களின் இரண்டாம் புத்தகம் summary with pdf

 

இராஜாக்களின் இரண்டாம் புத்தகம்

– Pastor. Gabriel Thomasraj

 

2 இராஜாக்கள்

 

“இராஜாக்களின் புத்தகம்” என்று பெயர் பெற காரணம்

1ம், 2ம் இராஜாக்களின் புத்தகங்கள் ஆரம்பத்தில் எழுதப்பட்டபோது ஒரே புத்தகமாகவே இருந்தது.

எபிரேய வேதாகமத்தில் சாமுவேலின் புத்தகம் நிறுத்திய இடத்திலிருந்து இராஜாக்களின் புத்தகம் சம்பவங்களை விபரிக்கிறது.

கிரேக்க மொழிபெயர்ப்பான Septuagint இதை இரண்டு புத்தகங்களாளக பிரித்தது. ஜெரோம் அவர்களால் இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட Vulgate என்று அழைக்கப்படும் வேதாகமத்தில் இந்தப் புத்தகத்திற்கு இராஜாக்கள் என்று பெயரிட்டார். அதை தழுவி ஆங்கில மொழிபெயர்ப்பில் “Kings” என்று அழைக்கப்பட்டதை தமிழில் இராஜாக்களின் புத்தகம் என்று அழைக்கிறோம்.

ஆக்கியோனும் தகவல்களும்

1ம், 2ம் இராஜாக்களின் புத்தகங்கள் யாரால் எழுதப்பட்டவை என்று அறியப்படவில்லை. எஸ்றா, எசேக்கியேல், எரேமியா ஆகியவர்களில் ஒருவர் இதை எழுதியிருக்கலாம் என்று சில வேத விளக்கவுரையாளர்கள் கருதுகிறார்கள்.

400 ஆண்டுகளுக்கு மேலான கால வரலாற்றை உள்ளடக்கியிருப்பதால் இதை தொகுப்பதற்கு பல்வேறு மூல ஆவணங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதிகாரங்கள் 25

வசனங்கள் 719

வரலாற்றில் இந்த புத்தகத்தின் இடம்

2 இராஜாக்களின் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் 1 இராஜாக்களின் புத்தகத்தின் சம்பவங்களின் தொடர்ச்சி.

2 இராஜாக்களில் அதிகாரங்கள் 1-17 வரையுள்ள நிகழ்வுகள் தெற்கு இராஜ்யமான இஸ்ரவேலின் (10 கோத்திரங்கள்) 131 ஆண்டுகால ஆட்சியை சொல்லுகிறது.

இது அகசியா ராஜாவின் காலத்தில் ஆரம்பித்து இஸ்ரவேல் அசீரியர்களால் சிறையிருப்பிற்கு கொண்டுசெல்லப்பட்ட காலம் வரையுள்ள நிகழ்வுகள் (கிமு 853-722)

அதிகாரங்கள் 18-25 வரையுள்ள நிகழ்வுகள் வடக்கு இராஜ்யமான யூதாவின் (2 கோத்திரங்கள்) 155 ஆண்டுகால ஆட்சியை சொல்லுகிறது.

இது எசேக்கியா ராஜாவின் காலத்தில் ஆரம்பித்து யோயாக்கீன் பாபிலோனில் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட காலம் வரையுள்ள நிகழ்வுகள் (கிமு 715-560)

பொதுவான பார்வை

1. பிரிவுபட்ட இராஜ்யம் 1:1-17:4

A. இளாவேவில் அகாசியாவின் ஆட்சி 1:1-18

B இஸ்ரவேளில் போராரின் ஆட்சி 2:1-8-15

  • 1. எலியானின் மாற்றம் 2:1-11

  • 2. லிசாவின் மாழியத்தின் ஆரம்பம் 2:12-25

  • 3.யோராம் மோயாபிற்கு எதிராய் யுநதம் செய்தல் 31-27

  • 4. எலிராவின் ஊழியம் 4:1- 8:15

 

C.யூதாவில் யோராமின் ஆட்சி 8:15–274

D. யூதாவில் அகாசியாவின் ஆட்சி 8:25-20

E.இஸ்ரவேலில் யெகூவின் ஆட்சி 9:1-10:36

F.யூதாலில் அத்தாளியாவின் ஆட்சி 11:1-16

G.யுதாவில் போவாஸின் ஆட்சி 11-7,12.21

H.இஸ்ரவேலில் போவாரஸிைன் ஆட்சி 13:1-9

L. இஸ்ரவேலின் யோவாஸின் ஆட்சி 13:10-25

J. யுநாவில் அமதசியாவின் ஆட்சி 14:1-22

K.இஸ்ரவேலில் 2ம் யெரொபெயாம் ஆட்சி 14:23-27

L. யூதாவில் தசரியாவிலி (உசியா) ஆட்சி 15:1-7

M. இஸ்ரவேலில் சகரியாவின் ஆட்ரி 15:8-12

N. இஸ்ரவேலில் சல்லூமின் ஆட்சி 15:13-15

0.இஸ்ரவேவில் மெனாகேமிள ஆட்சி 15:16-22

P.இண்லேலில் பெம்காரியாவின் ஆட்சி 15:23-26

Q. இண்ரவேலில் பெசுகாவின் ஆட்சி 15:27-33

R.யூதாவில் யோதாமின் ஆட்சி 15:33-38

S.யூதாவில் ஆகாசி ஆட்சி 16:1-20

T. இஸ்ரவேலில் ஓசேயாவின் ஆட்சி 17:1-41

II. தன்னை தக்கவைத்துக்கொள்ள போராடும் யூதாவின் இராஜ்யம் 18:1-25:30

A. எசேக்கியாவின் ஆட்சி 18:1-20:21

B. மனாசேயின் ஆட்சி 21:1-18

C. ஆமோனின் ஆட்சி 21:19:26

D. யோசியாவின் ஆட்சி 22:1-23:30.

E. யோவாகாசின் ஆட்சி 23:31-33

F. யோயாக்கீமின் ஆட்சி 23:34-24-7

G. யோயாக்கீனின் ஆட்சி 24:8-16

H.சிதேக்கியாவின் ஆட்சி 24:17-25-21

  • 1. பாபிலோனுக்கு விரோதமான கலகமும், ஆலயம் அழிக்கப்படுதலும் 24:17-25:10

  • 2. பாபிலோனுக்கு 3ம் தவணையாக சிறைப்பட்டுப்போதல் 25:11:21

I. கெதலியா பொம்மை ஆளுனராக 1இருத்தல் 25-22-26

J. யோயாக்கள் பாபிலோனில் சிறையிலிருந்து விடுவிக்கப்படுதல் 25:27-30

இஸ்ரவேல், யூதா என்னும் இரண்டு இராஜ்யங்கள்

ராஜாக்களான சவுல், தாவீது, சாலொமோன் ஆகியோர் ஆண்ட ஐக்கிய இராஜ்யம் 120 ஆண்டுகள் நீடித்திருந்தது (கிமு 1053-933).

வடக்கு இராஜ்யம் (இஸ்ரவேல் -10 கோத்திரங்கள்) 210 ஆண்டுகள் நீடித்திருந்து (கிமு 931-721) அசீரியர்களால் கைப்பற்றப்பட்டது.

தெற்கு இராஜ்யம் (யூதா, பென்யமீன் கோத்திரங்கள் 345 ஆண்டுகள் நீடித்திருந்தது. (கிமு 931-586) வடக்கு இராஜ்யத்தைக் காட்டிலும் 135 ஆண்டுகள் அதிகமாக நீடித்திருந்து பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டது.

மொத்த இராஜ்யமும் 467 ஆண்டுகள் நீடித்திருந்தது (கிமு 1053-586).

வடக்கு இராஜ்யம் 9 வம்சங்களால் ஆளப்பட்டது. ஒரு வம்சத்தை தவிர மீதி வம்சங்கள் அதற்கு முன்னுள்ள வம்சத்தை அழித்தே ஆட்சிக்கு வந்தது.

 தெற்கு இராஜ்யத்தின் ராஜாக்கள் தாவீதின் வம்சத்தில் வந்தவர்கள். யேசபேலின் மகளான அத்தாலியாள் தாவீதின் வம்சத்தினரை கொன்றபோதும் யோவாஸ் தப்புவிக்கப்பட்டான்.

சவுல் (40 years)

தாவீது (40 years)

சாலொமோன் (40 years)

வட ராஜ்யம் (210 Years)

தென் ராஜ்யம் (345 Years)

இஸ்ரவேலர் ராஜாக்களின் அளுகையின் கீழிருந்த காலம் 467 ஆண்டுகள்

இராஜாக்களின் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசிகள்

தெற்கு இராஜ்யம் (யூதா)

1.சேமாயா

2. ஒபதியா

3. யோவேல்

4.ஏசாயா

5.மீகா

6.நாகூம்

7.செப்பனியா

8.எரேமியா

9.ஆபகூக்

வடக்கு இராஜ்யம் (இஸ்ரவேல்)

1. எலியா

2.மிகாயா

3.எலிசா

4.யோனா

5.ஆமோஸ்

6.ஓசியா

இஸ்ரவேல், யூதா என்னும் இரண்டு இராஜ்யங்கள்

ராஜாக்களான சவுல், தாவீது, சாலொமோன் ஆகியோர் ஆண்ட ஐக்கிய இராஜ்யம் 120 ஆண்டுகள் நீடித்திருந்தது (கிமு 1053-933).

வடக்கு இராஜ்யம் (இஸ்ரவேல் -10 கோத்திரங்கள்) 210 ஆண்டுகள் நீடித்திருந்து (கிமு 931-721) அசீரியர்களால் கைப்பற்றப்பட்டது.

 தெற்கு இராஜ்யம் (யூதா, பென்யமீன் கோத்திரங்கள் 345 ஆண்டுகள் நீடித்திருந்தது. (கிமு 931-586) வடக்கு இராஜ்யத்தைக் காட்டிலும் 135 ஆண்டுகள் அதிகமாக நீடித்திருந்து பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டது.

மொத்த இராஜ்யமும் 467 ஆண்டுகள் நீடித்திருந்தது (கிமு 1053-586).

 வடக்கு இராஜ்யம் 9 வம்சங்களால் ஆளப்பட்டது. ஒரு வம்சத்தை தவிர மீதி வம்சங்கள் அதற்கு முன்னுள்ள வம்சத்தை அழித்தே ஆட்சிக்கு வந்தது.

தெற்கு இராஜ்யத்தின் ராஜாக்கள் தாவீதின் வம்சத்தில் வந்தவர்கள். யேசபேலின் மகளான அத்தாலியாள் தாவீதின் வம்சத்தினரை கொன்றபோதும் யோவாஸ் தப்புவிக்கப்பட்டான்.

யோசியாவால் உண்டான மறுமலர்ச்சி – அதிகாரங்கள் 22,23

யோசியா தனது 8வது வயதில் ஆட்சிக்கு வந்து 31 ஆண்டுகள் ஆட்சிசெய்தான் (22:1). சாலொமோனுக்கு பின்வந்த ராஜாக்களில் சிறந்தவர்களாக இருந்தவர்களில் இவனும் ஒருவன் (22:2).

தேவையாயிருந்த பெரிய மறுமலர்ச்சியை தேசத்தில் ஏற்படுத்தினான்.

இலக்கியா என்னும் பிரதான ஆசாரியன் இவனுக்கு ஆலோசனை சொல்லுகிறவனாகவும், உதவி செய்கிறவனாகவும், வழிகாட்டுகிறவனுமாயிருந்தான்.

மறுமலர்ச்சியின் படிகள்

(1) ஆலயம் பழுதுபார்க்கப்பட்டது (22:3-6)

(2) கர்த்தரின் வார்த்தைக்கு திரும்பினார்கள் (22:8-10)

(3) பாவ உணர்வடைந்தார்கள் (22:11-13)

(4) விக்கிரகங்களை விலக்கினார்கள் (23:4)

(5) இலச்சையானவற்றை அகற்றினார்கள் (23:7)

(6) பஸ்காவை மீண்டும் ஆசரித்தார்கள் (23:21-23),(2நாளா 35:18)

(7) மேலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது (23:8-20)

ஓவ்வொரு அதிகாரத்திற்குமான சுருக்க விளக்கம்

அதிகாரம் 1:

ஆகாப், யேசபேலின் குமரனாகிய அகசியா தன் மேல்வீட்டிலிருந்து கிராதியின் வழியாய் விழுந்து, வியாதிப்பட்டிருக்கையில் அவனது தாயின் வழக்கங்களால் உந்தப்பட்டவனாக வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று பாகாலிடம் விசாரிக்க எக்ரோனுக்கு ஆட்களை அனுப்பினான். தீர்க்கதரிசியாகிய எலியா தனது கடைசிதேவபணியாக தேவனால் அனுப்பப்பட்டு பகாலிடம் விசாரிக்கச் சென்றவர்களை சந்தித்து கடுமையாக எச்சரித்ததோடு அகசியா சாவான் என்றும் சொன்னான். அகசியா எலியாவை பிடித்துவர இரண்டு முறை ஐம்பது சேவகர்கள் கொண்ட படையை அனுப்பினான். அந்த படைகளை எலியாவின் கட்டளையின்படி அக்கினி வானத்திலிருந்து இறங்கி பட்சித்துப்போட்டது. மூன்றம் முறை படைகள் அனுப்பப்பட்டபோது எலியா அவர்களோடுபோய் நேரடியாகவே அகசியாவிற்கு அவன் சாவான் என்று அறிவித்தான். அது அவ்வாறே நடந்தது.

அதிகாரம் 2:

இந்த அதிகாரம் எலியாவின் மாற்றத்தை பதிவுசெய்கிறது. எலியா எலிசாவையும் அழைத்துக்கொண்டு கில்காலில் இருந்து பெத்தேலுக்கும். அங்கிருந்து எரிகோவிற்கும். அங்கிருந்து யோர்தான் நதிக்கும் செல்லுகிறான். எலியா தான் எடுத்துக் கொள்ளப்படுவதை எலிசா கண்டால் எலியாவிடத்திலுள்ள ஆவியின் வரம் எலிசாவிற்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும் என்றான். எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது. இருவரும் அக்கரைக்குப் போனார்கள். எலியா அக்கினி ரதத்தில் ஏறிப்போனான் (வச11) அதை எலிசா கண்டான் (வச12). எலிசா யோர்தானுக்கு திரும்பி எலியாவின் சால்வையால் அதை அடித்தான். அது இருபக்கமாகப் பிரிந்தது. எரிகோவில் கசப்பான தண்ணீரை சுவையுள்ளதாக மாற்றினான். அவன் பெத்தேலுக்கு திரும்பினபோது பிள்ளைகள் அவனை கேலிசெய்தார்கள். எலிசா அவர்களை சபித்தபோது கரடிகள் பிள்ளைகளை பிறிப்போட்டது.

அதிகாரம் 3:

ஆகாபின் குமாரனாகிய அகசியாவிற்கு குமாரர்கள் இல்லாதினால் அவனது சகோதரன் யோராம் அவனுக்கு பின் பதவிக்கு வந்தான். மோவாபியர் இஸ்ரவேலுக்கு எதிராக கலகம் செய்தார்கள். யோசபாத் மோவாபியர்களோடு யுத்தம் செய்ய யோராமுடன் சேர்ந்தான். யோசபாத் எலிசாவிடம் விசாரித்தான். எலிசா முதலில் மறுத்தாலும் யோசபாத் நிமித்தம் பதில் சொன்னான். தேவன் அவர்களுக்கு மிகவும் அவசியமாயிருந்த தண்ணீரையும், மோவாபியர் மீது வெற்றியையும் தருவார் என்று சொன்னான். அப்படியே அவர்களுக்கு இரண்டும் கிடைத்தது.

அதிகாரம் 4

இந்த அதிகாரத்தில் எலிசா செய்த ஐந்து அற்புதங்கள் சொல்லப்படுகின்றன.

1. தீர்க்கதரிசி ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒருத்தி கடுமையான இக்கட்டில் மாட்டிக்கொள்கிறாள். அவளது இரு குமாரர்களும் அடிமைகளாக விற்கப்பட இருந்தார்கள். எலிசா ஒரு குடம் எண்ணையை பெருகப்பண்ணினான். 2 சூனேம் ஊராளாகிய கனம்பொருந்திய பெண்ணொருத்தி எலிசாவிற்கு உணவும் உறைவிடமும் அளித்து கவனித்துக்கொண்டாள் (வச10). அவளுக்கு

ஒரு குமாரன் பிறப்பான் என்று எலிசா வாக்குப்பண்ணுகிறான்.

3. அந்த குமாரன் பெரியவனானபோது இறந்து போனான். எலிசா அவனை உயிர்ப்பித்தான் (எலியா செய்ததைபோல செய்து) 4. தீர்க்கதரிசிகளின் புத்திரர் கூழ் சாப்பிட்டபோது அதில் விஷமிருந்தது. எலிசா அந்த விஷம் நீங்கச் செய்தான்.

5. ஒரு நபருக்கு மாத்திரமே போதக்கூடிய உணவைக்கோண்டு எலிசா நூறுபேருக்கு உணவளித்தான்.

அதிகாரம் 5:

சீரியாவின் படைத்தலைவனாகவும், சமுதாயத்தில் பெரிய மனுஷனுமாயிருந்த நாகமான் குஷ்டரோகியாயிருந்தான். இஸ்ரவிேலிருந்து சிறைபிடிக்கப்பட்டு நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்த சிறு பெண் சொன்னதின் நிமித்தம் குணமடைய எலிசாவிடம் சென்றான். எலிசா அவனைப் பார்க்க மறுத்தாலும் அவனிடத்தில் ஆள் அனுப்பி. யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ண சொன்னான் (வச10) ஆனால் அவனது பெருமையின் நிமித்தம் நாகமான் முதலில் அவ்வாறு செய்ய மறுக்கிறான் (வச11,12). அவனது பெருமையை விடுத்து தீர்க்கதரிசியின் சொற்படி செய்ய அறிவுறுத்தப்பட்டான். அவன் குணமானான். எலிசாவின் அனுமதியின்றி அவனது வேலைக்காரனான் கேயாசி நாகமானிடம் வெகுமதிகளை வாங்கிக்கொண்டான். எலிசா அவனுக்கான தண்டனையை அறிவிக்கிறான். கேயாசி குஷ்டரோகியானான்.

அதிகாரம் 6:

எலிசாவோடிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரருக்கு இடநெருக்கடி ஏற்பட்டது (வச1,2), இடத்தை கட்ட மரம் வெட்ட யோர்தான் பள்ளத்தாக்கிற்கு அவர்களுடன் எலிசாவும் சென்றான். இரவலாய் வாங்கப்பட்ட கோடரி நதியில் விழந்தது. எலிசா ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணினான் (வச5-7). இஸ்ரவேலின் ராஜாவுக்கு பெனாதாத் தேசத்தை பிடிக்க போடும் திட்டங்களை எலிசா முன்கூட்டியே அறிவித்து பலமுறை அவனைக் காத்தான் எலிசா தங்கியிருந்த தோத்தானுக்கு அவனைப் பிடிக்க பெனாதாத் பெரும் படையை அனுப்பினான். எலிசாவின் வேலைக்காரன் படையைக் கண்டு பயந்தபோது எலிசா அவனது கண்களை தேவன் திறக்க விண்ணப்பித்தான். தேவன் அவன் கண்களை திறந்தபோது எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான் (வச17). எலிசா கண்மயக்கம் உண்டான படைவீரர்களை சமாரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோனான். பெனாதாத் சமாரியாவை முற்றிக்கைப்போட்டான். அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. சமாரியாவின் ராஜா எலியாவை குற்றஞ்சொல்லி அவளை அழிக்கத் தேடினான்,

அதிகாரம் 7:

எலிசா அடுத்தநாள் தானியம் பெருமளவில் உண்டாயிருக்கும் என்று சொன்னான். விரக்தியில் இருந்த குஷ்டரோகிகள் நால்வர் சீரியரின் பாளையத்திற்குள் பிரவேசித்தபோது அதில் யாருமில்லாமல் விடப்பட்டிருந்ததை கண்டார்கள். கர்த்தர் இரவில் பெரிய இரைச்சலைக் கேட்கப்பண்ணினதினால். பொருட்களை கூடாரங்களில் விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். குஷ்டரோகிகள் சீரியர் விட்டுப்போன பாளையத்திற்குள் பெருமளவு தானியமிருப்பதை சமாரியர்களுக்கு அறிவித்தார்கள்.

அதிகாரம் 8:

எலிசா ஏழு ஆண்டுகள் தேசத்தில் பஞ்சம் உண்டாயிருக்கும் என்று சொல்லி சூனேமியாளை வேறுதேசத்திற்கு போகச் சொன்னான். பஞ்சகாலம் முடிந்தபின் அவள் திரும்ப வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடும்படி போனாள். அவள் யாரென்று அறிந்தபின்பு அதை அவளுக்குக் கொடுத்தான். எலிசா தமஸ்குவிற்குப்போய் வியாதியாய் இருந்த பெனாதாத் மரிப்பான் என்றும் ஆசகேல் அரசனாவான் என்றும் சொன்னான். (ஆசகேல் பின்னாளில் இஸ்ரவேலை அழிக்கப் போகிறவன்). ஆசகேல் அதை மறுத்தாலும் அவ்வாறே செய்தான். யோசபாத்தின் குமாரன் யோராம் தனது தகப்பனுடன் சேர்ந்து ஆட்சிசெய்தான். அவன் ஆகாபின் குமாரத்தியை திருமணம் செய்து இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்தான். ஏதோமியர் கலகம்பண்ணினார்கள். லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள். யோராம் எட்டு ஆண்டுகள் ஆண்டபின் மரித்தான். அவனது குமாரனான அகசியா பதவிக்கு வந்து இஸ்ரவேலின் ராஜாவான யோராமுடன் இணைந்து சிரியாவின் ஆசகேலுக்கெதிராக யுத்தம் செய்தான். யோராம் யுத்த்தில் காயமடைந்தான்.

அதிகாரம் 9:

எலிசா யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணவும், ஆகாபின் வீட்டாரிர் மீது தண்டனையை கூறவும் தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவனை கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு அனுப்பினான். படைவீராகள் யெகூவை ராஜா என்று அறிவித்தார்கள். அவன் இஎப்ரவேலின் ராஜாவான யோராமையும், யூதாவின் ராஜாவான அகசியாவையும், யேசபேலையும் கொன்றான். தனது பெண்மையை காட்டி யெகூவை வெல்ல நினைத்தாள்(வச30) ஆனால் அவளுக்கு வயதாகியிருந்தால் அது பலிக்கவில்லை (வச33). எலியாவின் தீர்க்கதரிசனம் எழுத்தின்படியே நிறைவேறியது(வச36,37).

அதிகாரம் 10.

ஆகாபின் எழுபது குமார்கள் கொல்லப்படுதல். மீதியானவர்களை யெகூ அழித்தல். யூதாவின் ராஜாவான அகாசியாவின் சகோதர்களையும் யெகூ கொன்றான். பகாலை சேவிக்கிறவர்களை கூட்டும் முகமாக யெகூ பாகால் வழிபாட்டிற்கு திரும்புவ தைப்போல நடித்தான். அவர்கள் கூடி வந்தபோது யெகூ அவர்களை அழித்துப் போட்டான் (வச25). யெகூ பாகால் வழிபாட்டை இஸ்ரவேலில் இருந்து ஒழியப்பண்ணினான் (வச27,28). ஆனாலும் அவன் கர்த்தரை சேவிக்க திரும்பவில்லை. அவன் யெரொபெயாம் உண்டுபண்ணிய கன்றுகுட்டிகளை வழிபட்டான்(வச29). ஆனாலும் அவனது செய்கைகளை கர்த்தர் நினைத்து பதில் செய்தார் (வச32). அவனது மரணத்திற்கு பின்பு அவனது குமாரன் யோவாகாஸ் ராஜாவானான் (வச34,35)

அதிகாரம் 11:

யெகூவினால் தனது குமாரன் அகசியா கொல்லப்பட்டதை அத்தாலியாள் அறிந்தபோது அவள் தாவீதின் ராஜவம்சத்தை சங்காரம் பண்ணினாள். அவள் எல்லா ராஜகுமாரர்களையும் கொலை செய்தபோது அகாசியாவின் சகோதரி ராஜகுமாரனாகிய யோவாசை காப்பாற்றினாள். யோவாஸ் ஏழு வயதாகி தேசத்தின் தலைவர்களுக்கு முன்பாக காண்பிக்கப்பட்டபோது அவர்கள் திட்டமிட்டு அத்தலியாவின் ஆட்சியை கவிழ்த்து அவளை கொன்றார்கள். யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான் (வச21). ஆசாரியனான யோய்தா கர்த்தரை தொழுதுகொள்ள ஜனங்களின் இருதயத்தை திருப்பினான் (வச17). யூதவுக்குள் புகுந்திருந்த பாகால் வழிபாடு ஒழிக்கப்பட்டது (வச18).

அதிகாரம் 12:

யோவாஸ் நாற்பது ஆண்டுகள் ஆட்சிசெய்தபோது பத்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் (வச2). ஆசாரியர்களின் ஊழல் களையப்பட்டு ஆலயம் பழுது பார்க்கப்பட்டது.சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து. காத்தாரைப் பிடித்தான். யோவாஸ் எருசலேமை பாதுகாக்க அவனுக்கு மீட்புத்தொகையை கொடுத்தான். யோவாசின் ஊழியக்காரர் சதி செய்து அவனைக் கொன்றுபோட்டார்கள். அவனுக்கு பின் அவன் குமாரனாகிய அமத்சியா ராஜாவானான்.

அதிகாரம் 13:

யெகூவின் குமாரனாகிய யோவாகாஸ் இஸ்ரவேலின்மேல் பதினேழுவருஷம் ஆட்சிசெய்தான். அவன்யெரொபெயாமின் பாவங்களைப் பின்பற்றி நடந்தான். சீரியாவின் ராஜாவால் ஒடுக்கப்பட்டபோது யோவாகாஸ் கர்த்தருடைய சமுகத்தை நோக்கிப் பிரார்த்தித்தான்; கர்த்தர் அவனுக்குக் செவிகொடுத்தார். ஆனாலும் அவன் யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை. அவன் இயற்கை மரணம் அடைந்தான். யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் அவனுக்குப் பின் ராஜாவானான். எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப்போனபோது, சீரியரை முறியடிப்பாய் என்று தீர்க்கதரிசனம் சொன்னான். எலிசா மரணமடைந்தான்;சீரியாவினால் இஸ்ரவேல் ஒடுக்கப்பட்டபோதும் கர்த்தர் அவர்களுக்கு இரங்கினார்(வச23)

அதிகாரம் 14:

யோவாசின் குமாரன் அமத்சியா யூதாவின் ராஜாவானான். அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தபோதும் தாவீதின் அளவீட்டில் குறைந்தே காணப்பட்டான் (வச3). இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அமத்சியாவை யுத்தத்தில் தோற்கடித்து எருசலேமின் அலங்கத்திலே நானூறு முழ நீளம் இடித்து ஆலயத்தில் மீந்திருந்த பொன்னையும், வெள்ளியையும் எடுத்துக்கொண்டான். அமத்சியாவை லாகீசில் சதிசெய்து கொன்றார்கள். அவனது குமாரன் அசரியா (உசியா) அவனுக்கு பின் ராஜாவானான். இஸ்ரவேலின் மேல் ராஜாவான 2ம்யெரொபெயாம் நாற்பத்தொரு வருஷம் அரசாண்டான். அவன் 1ம்யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை. அமித்தாயின் குமாரன் யோனா தீர்க்கதரிசி சொன்னபடி அவன் இஸ்ரவேலின் எல்லை களைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான். 2ம்யெரொபெயாம் இயற்கை மரணமடைந்தான். அவனது குமாரன் சகரியா அவனுக்குப் பின் பதவிக்கு வந்தான்.

அதிகாரம் 15:

யூதாவின் ராஜாவாகிய உசியா நல்ல ராஜாவாக இருந்தபோதும் ஆசரியர்களின் விஷயத்தில் தலையிட்டதினால் கர்த்தர் அவனை வாதித்ததால் குஷ்டரோகியானான் (2நாளா 26:15-21), அவனது குமாரன் யோதாம் அவனுக்கு பின் ராஜாவானான் (ஏசா 1:1 பார்க்கவும்). யெகூவின் கடைசி வாரிசான சகரியா ஆறு மாதங்களே பதவியில் இருந்து சல்லூமினால் கொல்லப்பட்டான். சல்லூம் ஒரு மாதமே ஆட்சி செய்தான். மெனாகேம் அவனது ஆட்சியை கவிழ்த்து அவனை கொலை செய்தான். அவன் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்து யெரொபெயாமின் வழியில் பொல்லாப்பாய் நடந்தான். இந்த காலத்தில் அசீரியாவின் ராஜாவாகிய பூல். தேசத்திற்கு விரோதமாய் வந்தான். தேசத்தை காக்க அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளியை கொடுத்தான். அவனுக்கு பின் அவன் குமாரன் பெக்காகியா பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் அவனது படைத்தலைவன் பெக்கா சதி செய்து அவனைக் கொன்றான். பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, நப்தலி தேசத்தை பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான். பெக்காவை ஓசெயா கொன்றுபோட்டான். யூதாவை யேதாம் ஆண்டு செம்மையானதை செய்த ராஜாவாயிருந்தான்.

அதிகாரம் 16:

யோதாமின் குமாரன் ஆகாஸ் அவனுக்குப் பின் ராஜாவானான். அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் பொல்லாத வழியிலே நடந்த துன்மார்க்க ராஜாவாயி ருந்தான்(வச2.3) சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவும். எருசலேமின்மேல் யுத்தம்பண்ண வந்து யூதாவை முற்றிகை போட்டார்கள்; ஆனாலும் வெற்றியடையவில்லை (ஏசாயா அதி 7-8 பார்க்கவும்). ஆகாஸ் அசீரியாவிடம் உதவிகோரினான். அசீரியர்கள் தமஸ்குவை கைப்பற்றினார்கள். வேதாகமத்தில் “யூதர்” என்னும் சொல் முதன்முதலாக இங்கேதான் பயன்படுத்தபடுகிறது(வச6).

அசீரியாவினால் இஸ்ரவேல் சிறைப்பிடிக்கப்படுதல்

அதிகாரம் 17:

அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் தெற்கு இராஜ்யத்தை கைப்பற்றி அவர்கள் மீது தண்டம் விதித்தான். ஓசேயா அவனுக்கு விரோதமாக சதி செய்வதை அறிந்து சமாரியாவை முற்றிகை போட்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தெற்கு இராஜ்யத்தின் கோத்திரத்தாரை சிறையிருப்பிற்கு கொண்டுபோனான்.

தேவன் சிறையிருப்பை அனுமதித்தற்கான காரணங்கள்.1. தேவனுக்கு கீழ்ப்படியாமை 2. தேவனை சந்தேகித்தார்கள் 3. தீட்டாய் நடந்தார்கள் (வச15) இதிலே 490 வருடங்கள் தேவன் சொல்லியிருந்த ஓய்வு வருடங்களை கைக்கொள்ளவில்லை. அசிரியர்கள் வேறு மனிதர்களை கொண்டுவந்து அங்கே குடியேற்றினார்கள். சமாரியர் என்ற பதம் முதலில் பயன்படுத்தபடுகிறது(வச29).

யூதாவின் வீழ்ச்சியும் பாபிலோனால் சிறைப்பிடிக்கப்படுதலும்

அதிகாரம் 18:

ஆகாஸின் குமாரனாகிய எசேக்கியா ஆகாஸிற்குப் பின் பதவிக்கு வந்தான்.அவன் மிகவும் நல்ல ராஜாவாக இருந்தான் (வச3) அவனது ஆட்சியில் மறுமலர்ச்சி ஏற்பட்டது(வச 4.5). எசேக்கியா பெலிஸ்தரை ஜெயித்தான். ஆனாலும் அசீரிய அரசனான சனகெரிப் யூதாவின் மீது படையெடுத்து எருசலேமை நெருக்கினான். ரப்சாக்கே என்னும் அசீரியாவின் படைத்தலைவன் எசேக்கியாவை பயமுறுத்த முயற்சித்தான்.

அதிகாரம் 19:

அந்த பயமுறுத்தலில் அவன் ஓரளவு வெற்றியும் பெற்றான். எசேக்கியா இரட்டுத்திக்கொண்டு ஆலயத்திற்கு விண்ணப்பம் செய்யப்போனான். அவன் ஏசாயா விடத்திற்கு ஆட்களை அனுப்பினான். ஏசாயா ஊற்சாகமூட்டும் பதிலை சொல்லி யனுப்பினான் (வச6-7). ரப்சாக்கே துணிகரங்கொண்டு இஸ்ரவேலின் தேவனுக்கு சவால் விடும்படி இழிவுபடுத்தும் நிருபத்தை எசேக்கியாவிற்கு அனுப்புகிறான். எசேக்கியா ஆலயத்திற்குபோய் அந்த நிருபத்தை தேவனுக்கு முன்பாக விரித்து வைத்தான். தேவன் எசேக்கியாவிற்கு செவிகொடுத்து அசீரிய ராஜாவின் படை திரும்பிப்போகும் என்று ஏசாயாவைக் கொண்டு சொன்னார் (வச28,32-34). கர்த்தர் அசீரிய படையில் 1,85,000 பேரை சங்கரித்தார். சனகெரிப் திரும்பிப்போய் அசீரியாவில் கொலையுண்டான்.

அதிகாரம் 20:

எசேக்கியா மரணத்திற்கு ஏதுவான வியாதியாயிருந்தான் (வச1). அவன் குணமாக ஜெபித்தான். தேவன் விண்ணப்பத்தை கேட்டார்.

அவன் குணப்பட்ட பின்பு புத்தியீனமான 3 காரியங்களை செய்தான்.

1. பாபிலோனின் ஸ்தானாதிபதிகள் பொக்கிஷங்களை பார்வையிட அனுமதித்தான்(வச12-19)

2. மனாசே என்ற துன்மார்க்கனுக்கு தகப்பனாயிருந்தான் (21:2,9,16,17) மனாசே எல்லோரிலும் கேடுள்ள ராஜாவாயிருந்தான்.

3. எசேக்கியாவின் மனதில் பெருமை குடிகொண்டது (2நாளா 32:25)

அதிகாரம் 21:

எசேக்கியாவின் குமாரனாகிய மனாசே எல்லா ராஜாக்களிலும் மகாகேடுள்ளவனாயிருந்தான். ஆகாப்.யேசபேலைக் காட்டிலும் கேடுள்ளவனாயிருந்தான். அவனுக்குபின் அவனது குமாரன் ஆமோன் ராஜாவானான் (வச20). அவனது ஊழியக்காரர் சூழ்ச்சி செய்து அவனது வீட்டிலேயே அவனை கொன்றுபோட்டார்கள். அவனுக்குப் பின் அவனது குமாரனான யோசியா பதவிக்கு வந்தான்.

 

அதிகாரம் 22,23:

 

யோசியா தனது 8வது வயதில் ஆட்சிக்கு வந்து 31 ஆண்டுகள் ஆட்சிசெய்தான்(22:1). சாலொமோனுக்கு பின்வந்த ராஜாக்களில் சிறந்தவர்களாக இருந்தவர்களில் இவனும் ஒருவன்(22:2).தேவையாயிருந்த பெரிய மறுமலர்ச்சியை தேசத்தில் ஏற்படுத்தினான். இலக்கியா என்னும் பிரதான ஆசாரியன் இவனுக்கு ஆலோசனை சொல்லுகிறவனாகவும், உதவி செய்கிறவனாகவும், வழிகாட்டுகிறவனுமாயிருந்தான். எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்நேகோ அவனைக் கொன்றுபோட்டான். அவனுக்கு பின்பு யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை ராஜாவாகி மூன்று மாதம் அரசாண்டான். எகிப்தின் ராஜா யோசியாவின் இன்னுமொரு குமாரனான எலியாக்கீமை ராஜாவாக்கி அவன் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். அவனும் பொல்லாப்பானதையே செய்தான் (வச37)

 

அதிகாரம் 24:

 

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யோயாக்கீமிற்கு எதிராக வந்து யூதாவை அழித்தான் (வச2). மனாசேயின் பாவத்தினால் தேசத்தின் மீது தேவனுடைய தண்டனை வந்தது(வச3,4). பதினொரு ஆண்டுகள் ஆட்சிசெய்த பின்பு யோயாக்கீம் இறந்துபோக அவனது குமாரனான யோயாக்கீன் பதவிக்கு வந்து மூன்று மாதங்களே ஆண்டான். அவன் ஒரு கேடான ராஜாவாயிருந்தான் (வச9). பாபிலோனின் ராஜா அவனைப்பிடித்து, எருசலேமை கொள்ளையிட்டு எருசலேமின் பிரபுக்களை பாபிலோனுக்கு சிறைப்படுத்தி கொண்டுபோனான். இதிலேதான் தானியேலும் அவனது மூன்று நண்பர்களும் கொண்டுபோகப்பட்டார்கள் (வச14,15). நேபுகாத்நேச்சார் யோயாக்கீனை சிறையாக்கி அவனுக்கு பதிலாக அவனது சிறியதகப்பனாகிய மத்தனியாவை ராஜாவாக வைத்து அவனது பெரை சிதேக்கியா என்று மாற்றினான். அவனும் பொல்லாப்பானதைச் செய்து நேபுகாத்நேச்சாருக்கு விரோதமாகக் கலகமும்பண்ணினான் (வச19,20)

அதிகாரம் 25:

நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு விரோதமாக வந்து அதை அழித்து ஜனங்களை பாபிலோனுக்கு சிறைப்படுத்தி கொண்டுபோனான். சிதேக்கியாவின் குமாரர்களை அவன் கண்களுக்கு முன்னே வெட்டிப்போட்டு அவன் கண்களை குருடாக்கினான் (வச7). ஆலயத்தை தீக்கிரையாக்கி ஆலயத்தின் பணிமுட்டுக்களுடன், சகல பொக்கிஷங்களையும் பாபிலோனுக்கு கொண்டுபோனான். கெதலியாவை ஆளுனராக்கினான். அவன் நேபுகாத்நேச்சாரின் அடிமையாகவே இருந்தான் (வச24). சீக்கிரத்திலேயே அவனும் கொல்லப்பட்டு மீதியாயிருந்தவர்கள் எகிப்திற்கு ஓடிப்போனார்கள். யோயாக்கீன் பாபிலோனின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு பாபிலோன் அரண்மனையில் உயர்ந்த அந்தஸ்திலே வைக்கப்பட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *