உத்தம வாழ்க்கை
உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார் (சங் 84:11)
கருப்பொருள் : உத்தமமாய் வாழ்ந்தவர்கள்
தலைப்பு : உத்தம வாழ்க்கை
ஆதார வசனம் : சங் 84:11
துணை வசனம் : நீதி 2:7; ஆதி 17:1; உபா 18:13
1. நோவா (ஆதி 6:9)
-
தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே உத்தமனாயிருந்தார் (ஆதி 6:9)
-
தேவனோடு சஞ்சரிக்கிறவராயிருந்தார் (ஆதி 6:9)
-
தேவ கட்டளையின்படி செய்து முடிக்கிறவராயிருந்தார் (ஆதி 6:22)
2. காலேப் (எண் 14:24)
-
வேறே ஆவியையுடையவராயிருந்தார் (எண் 14:24)
-
அவர் மிதித்துவந்த தேசத்தை தேவன் ஒப்புக்கொடுத்தார் (உபா 1:23)
-
கர்த்தரை உத்தமமாய் பின்பற்றி வந்தார் (யோசு 14:6)
3.யோசுவா (யோசு 14:8)
-
ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதவராயிருந்தார் (யாத் 33:11)
-
ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டவராயிருந்தார் (உபா 34:9)
-
யோசுவா கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினார் (எண் 32:11)
4. ரூத் (ரூத் 3:10)
-
ருத்தின் நற்குணம் உத்தமமாயிருந்தது (ரூத் 3:10)
-
தேவனால் நிறைவான பலன் கிடைத்தது (ரூத் 2:12)
-
அவள் குணசாலியாய் திகழ்ந்தாள் (ரூத் 3:11)
5.தாவீது [1சாமு 29:6)
-
தாவீது உத்தமனாயிருந்தார் (1சாமு 15:28)
-
கர்த்தருடைய ஆவியானவர் தங்கியிருந்தார் (1சாமு 16:13)
-
கர்த்தர் அவனோடேகூட இருந்தார் (1சாமு 16:17)
6.ஆசா (1இரா 15:14)
-
ஆசாவின் இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருந்தது (1 நாளா 15:17)
-
கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதை செய்தார் (2 நாளா 14:2)
-
தேவனாகிய கர்த்தர் அவரோடிருந்தார் (2நாளா 15:9)
7.எசேக்கியா [2இரா 20:3)
-
கர்த்தருக்கு முன்பாக மன உத்தமமாய் நடந்தார் (2இரா 20:3)
-
கர்த்தருக்கு முன்பாக உண்மையாய் நடந்தார் (1இரா 20:3)
-
கர்த்தர்மேல் நம்பிக்கை வைப்பவராயிருந்தார் (2இரா 18:5)
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்
பண்ணின ஜீவகிரிடத்தைப் பெறுவான் (யாக் 1:12)
நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் பாதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு (2தீமோ 2:15)