அக்கினி அபிஷேகம் – BAPTISM IN THE FIRE

 

அக்கினி அபிஷேகம் – BAPTISM IN THE FIRE

    அக்கினியினால் கொடுக்கப்படும் அபிஷேகம். யோவான்ஸ்நானன்

    இயேசுகிறிஸ்துவின் கிரியையை விளக்குவதற்காக இந்த வாக்கியத்தை பயன்படுத்தியிருக்கிறார் (லூக் 3:16). மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் (மத் 3:11).

    இந்த வசனப்பகுதியில் இரண்டு வெவ்வேறு ஞானஸ்நானங்களைப் பற்றி கூறப்பட்டிருப்பதாக வேத பண்டிதர்கள் கூறுகிறார்கள். ஒன்று பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம். இது தேவனுடைய மன்னிப்பையும் இரக்கத்தையும் ஜீவனையும் கொடுக்கிறது. மற்றொன்று அக்கினி அபிஷேகம் இது நியாயத்தீர்ப்பையும் ஆக்கினையையும் மரணத்தையும் தருகிறது. இந்த வியாக்கியானத்தின் பிரகாரம் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமானது தற்காலத்திலுள்ள கிருபையின் காலத்துக்கு உரியது. அக்கினி அபிஷேகமானது இனிமேல் வரப்போகும் நியாயத்தீர்ப்பின் காலத்திற்குரியது.

    அக்கினி அபிஷேகமும் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமும் ஒன்றுதான் என்று வேத பண்டிதர்களில் சிலர் கூறுகிறார்கள். இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் அபிஷேகம் பண்ணுவார். இதற்கு ஆதாரமாக பெந்தெகொஸ்தே நாளில் மேலறையில் விசுவாசிகளுக்கு ஏற்பட்ட அனுபவத்தை சான்றாக கூறுகிறார்கள். அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள் (அப் 2:3-4) .

    தேவனுடைய ஜனங்களை சுத்திகரிக்கும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையே அக்கினி அபிஷேகம் என்பது பொதுவான கருத்தாகும்.

    பரிசுத்த ஆவியிலும் அக்கினியிலும் ஞானஸ்நானம்

    இனிமேல் வரப்போகிறவர் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் அளிப்பார் என்று நான்கு சுவிசேஷப் புத்தகங்களும் யோவானுடைய தீர்க்கதரிசனத்தைக் குறிப்பிடுகின்றன (மத் 3.11; மாற்கு 1:8; லூக் 3:16; யோவா 1:33)

    மத்தேயுவும் லூக்காவும் அவர் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் என்று சேர்த்துக் கூறுகின்றார்கள்.

    பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது, ஆவியானவர் ஊற்றப்படுவார் என்று கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றமாகும் (யோவே எசே 36:26,29) 2:28; ஏசா 44:3;

    ஆனால் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிராத புதிய கருத்துக்களை யோவான் கூறுகிறார். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் ஊற்றப்படுவதோடு நின்றுவிடாமல், அவர்கள் ஆவியானவருக்குள் மூழ்கி ஒன்றாகக் கலக்கப்படுகின்றனர். வாழ்க்கையானது உற்சாகமற்றதாகவும் போதுமானதற்றதாகவும், பயனற்றதாகவும் உலகக் கவலைகள் நிறைந்ததாகவும் இருந்ததால், விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரைப் புறக்கணித்து விட்டார்கள். கிறிஸ்துவினால் மட்டுமே வழங்க முடிந்த அபிஷேகத்தின் மூலமாக, ஆவியானவரால் மேற்கொள்ளப்பட்டு ஆவிக்குரிய வாழ்வு வாழும் கோளத்தில் அவர்கள் நுழையவில்லை என்பது இதன் பொருள்.

    அக்கினியின் அபிஷேகம் என்பது பலவகையில் வியாக்கியானம் செய்யப்படுகிறது. வேதாகமம் ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதையும் வேதாகமத்தின் ஒற்றுமையையும் புறக்கணிக்கும் தர்க்கவாதிகளுள் பலர் யோவான் அக்கினியின் ஞானஸ்நானம் என்னும் ஒரே அபிஷேகத்தை மட்டுமே தீர்க்க தரிசனமாக கூறியுள்ளார். பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் என்னும் எண்ணமானது பின்னால் சேர்க்கப்பட்டது எனக் கருதுகின்றனர். வேறு சிலர் பரிசுத்த ஆவியைக் காற்று அல்லது சுவாசம் என்றும், யோவான் அறிவித்த ஞானஸ்நானமானது அக்கினிமயமான நியாயத் தீர்ப்பினைக் கொண்டுவரும் அல்லது களஞ்சிய நிலத்தைச் சுத்தம் பண்ணும் காற்றைப் போன்றிருக்கும் என்றும் யோவான் பொருள் கொண்டார் எனக்கூறுகின்றனர்.

    எப்படியும் யோவானுடைய செய்தி நியாயத் தீர்ப்பு மட்டுமன்று என்பது தெளிவாகிறது. அவர் கர்த்தருக்குப் பாதைகளைச் செவ்வைபடுத்த வந்திருக்கின்றார். வருங்கோபத்திற்குத் தப்பித்துக் கொள்வதற்கு இன்னும் வாய்ப்பு இருந்தது. அதைப்போன்றே நல்ல கனிகளைக் கொடுப்பதற்கும் இன்னும் வாய்ப்பு இருந்தது. பதர்கள் மட்டும் அக்கினியில் போடப்படும் (மத் 3:7,10,12)

    யோவானின் செய்தி ஒரு நற்செய்தி என்பது அடிப்படை உண்மை. தேவனுடைய ராஜ்யம் (ஆளுகை) மிகவும் சமீபத்தில் இருக்கிறது. நியாயத் தீர்ப்பின் ஞானஸ்நானத்தை மட்டுமே யோவான் வாக்குத்தத்தம் பண்ணினார் என்று தர்க்க வாதிகள் எடுத்துக் கொள்வதற்குப் பொருளே இல்லை.

    பரிசுத்த ஆவியின் அபிஷேகம் 1. அக்கினியின் அபிஷேகம் என அபிஷேகத்தை இரு வகைப்படுத்து பவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. ஒரே நேரத்தில் பரிசுத்த ஆவி, அக்கினி ஆகிய இரண்டு ஏதுக்கள் அல்லது தன்மைகளையுடைய ஒரே ஞானஸ்நானந்தான் இது என்று சிலர் கருதுகின்றனர். 2. வேறு பலர் இதை, நீதிமான்களுக்குப் பரிசுத்த ஆவியிலும், துன்மார்க்கர்களுக்கு அக்கினியிலும் வழங்கப்படும். இரு வகையான ஞானஸ்நானம் என்று கருதுகின்றனர்.

    பரிசுத்த ஆவியிலும் அக்கினியிலும் அளிக்கப்படும் ஞானஸ்நானத்தை ஒரே நேரத்தில்

    செயல்படும் இரண்டு ஏதுக்கள் ஆகிய ஒரே ஞானஸ்நானம் என்று கூறுபவர்கள் ஓர்

    உண்மையை விளக்குகின்றனர். “உள்” எனப் பொருள்படும் ஆங்கில மொழியின் “இன்” (in) என்னும் முன்னிடைச் சொல் பரிசுத்த ஆவி என்னும் சொல்லுக்கு முன்பாக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அக்கினி என்னும் சொல்லுக்கு முன்பாக பயன்படுத்தப்படவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறுகையில், “இனிமேல் வரப்போகிறவர் தான் பிரசங்கம் பண்ணும் ஜனங்களுக்கு பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் அபிஷேகம் கொடுப்பார்” என்று யோவான் எதிர்பார்த்தார் என்கின்றனர். இதிலிருந்து “பரிசுத்த ஆவிக்குள்ளும் அக்கினியின் அநுபவத்திலும் மேசியா ஒவ்வொருவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கிறார்” என்று அவர்கள் கூறுகின்றனர். உண்மையில் மனந்திருந்தியவர்களுக்கு இது ஓர் ஆசீர்வாதமாகவும் இரட்சிப்பாகவும் பரிசுத்தப்படுத்துவதாகவும் இருக்கும். துன்மார்க்கர்களுக்கு இது ஒரு நியாயந் தீர்ப்பாக இருக்கும்.

    இக்கருத்தில் பல பிரச்சனைகளுள்ளன. முதலாவதாக இரண்டாவது பெயர்சொல்லில் முன்னிடைச் சொல் மறுபடியும் காணப்பட வில்லை என்றால், பொதுவாக இரண்டு பெயர்ச்சொல்லும் ஒரே தன்மையுடையனவாகக் கருதப்படும் என்பது உண்மைதான். இதில் சில விதி விலக்குகள் உள்ளன. இனிமேல் வரப்போகின்றவர் “பரிசுத்த ஆவியை மட்டும் அனுப்பமாட்டார், அவர் தெய்வீக நியாயத் தீர்ப்பின் அக்கினியையும் அனுப்புவார்” என்று யோவான் அறிவித்தாகச் சபைத்தலைவர்கள் சிலர் ஏற்றுக் கொள்கின்றனர்.

    யோவான் ஸ்நானன் மக்களிடத்தில் பேசும்பொழுது “நியாயத் தீர்ப்பு அவர்களுடைய காலத்திலேயே வரப்போகின்றது” என்று பேசியது உண்மைதான். ஆவியானவரின் அபிஷேகத்திற்கும், அக்கினியின் அபிஷேகத்திற்கும் கால வேறுபாடு இருந்ததை அவர் காணவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. யோவான் இன்னும் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளுள் ஒருவராகவே கருதப்பட்டார். அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் முதலாவது வருகைக்கும் இரண்டாவது வருகைக்கும் இடையே உள்ள இடைவெளி வெளிப்படுத்தப்படவில்லை. இரண்டு வருகைக்கும் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒன்று போலவே அவர்கள் பலமுறை பேசினார்கள். ஆயினும், மேசியா ஆளுகை செய்வதற்கு முன்பாக அவர் பாடுபட வேண்டும் என்பதற்குச் சில குறிப்புகள் காணப்படுகின்றன. கர்த்தருடைய சித்தம் அவருடைய கரத்தில் வாய்க்கும் முன்பதாக இயேசுகிறிஸ்து தம்முடைய ஆத்துமாவைப் (தம்மை முழுவதுமாக) பாவ நிவாரண பலியாக முதலில் ஒப்புக் கொடுக்க வேண்டும் (ஏசா 5310).

    சிம்மாசனத்தில் ஆசாரியராக ஆளுகைசெய்வதற்கு முன்பதாக மேசியா தம்முடைய ஆசாரிய ஊழியத்தை முதலில் செய்யவேண்டும். இதைத் தெரிவிப்பதற்கு அடையாளமாக சகரியா பிரதான ஆசாரியனாகிய யோசுவாவின் மீது பல கிரீடங்களை அணிவித்தார் (சக 6:11,1213; லூக் 24:25,26; பிலி 2:8-11).

    இயேசுவின் சீடர்களுக்கு இதைப் புரிந்து கொள்ளுவது மிகவும் கடினமாக இருந்தது. தாம் திரும்பி வந்து தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு நீண்ட காலமாகும் என்பதை உணர்த்த அவர் அவர்களுக்கொரு உவமையைக் கூறினார் (லூக் 19:12-27).

    ஆயினும் அவர் பரமேறுவதற்கு முன்பு வரையிலும், அவர்கள் “ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்?” என்று அவரிடம் வினவினர் (அப் 1:6,7),

    சொல்லப்போனால், அதற்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை. அப்போஸ்தலர் 1:8ல் கூறப்பட்டிருப்பதே நம்முடைய வேலை.

    இதனால்; பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானவேளையையும் அக்கினி ஞானஸ்நானத்தின் வேளையையும் யோவான் வேறுபடுத்தத் தவறியதில் புதுமையொன்றுமில்லை. ஆனால், இயேசு இதைத் தெளிவாக வேறுபடுத்தினார். தாம் பரமேறுவதற்குச் சற்று முன்பாகத் தம்முடைய சீடர்களிடம் யோவான் “ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்” என்று கூறினார். இவ்வாறு பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகத்தைப் பெந்தெகொஸ்தே நாளில் ஏற்பட்ட அருள்மாரியுடன் அவர் இணைத்துக் காட்டினார். ஆயினும் நியாயத் தீர்ப்பின் அக்கினியானது முடிவிலேயே இருக்குமென்று பவுலைப் போன்று இவரும் அறிந்திருந்தார் (2தெச 1:8).

    அக்கினி அபிஷேகத்தின் நோக்கம்

    அக்கினி அபிஷேகத்தின் நோக்கமும் ஒரு சர்ச்சையாகவே இருக்கின்றது. பரிசுத்த ஆவியானவருடைய ஞானஸ்நானமும் அக்கினியின் ஞானஸ்நானமும் ஒன்றே என்ற கருத்துடையவர்கள், (அதாவது அக்கினியும் பரிசுத்த ஆவியும் இணைந்து அபிஷேகம் பெற்றவரிடம் கிரியை நடப்பிக்கின்றது என்ற கருத்துடையவர்கள்) அக்கினி விசுவாசியை சுத்திகரிப்பதற்கு அல்லது பரிசுத்தப்படுத்துவதற்கு பயன்படுகின்றது எனப்பொருள் கொள்ளுகின்றனர். ஆனால் பரிசுத்த ஆவியானவருடய ஞானஸ்நானத்தின் ஆரம்ப நோக்கம் “பரிசுத்தமாக்குதல்” என்று தோன்றவில்லை. பாவத்திற்கு மரித்தவர்களாகவும் இயேசுகிறிஸ்துவிற்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் தங்களை எண்ணிக்கொள்ள வேண்டுமென்று பவுல் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டுள்ள விசுவாசிகளுக்குக் கூற வேண்டியதிருந்தது. பாவம் அவர்கள் சரீரத்தை ஆளுவதற்கு அவர்கள் அனுமதிக்கக் கூடாது (ரோமர் 6:11,12).

    நாம் பிழைத்திருக்கும்படி ஆவியானவர் மூலமாகச் சரீரத்தின் செயல்களைச் சாகடிக்க வேண்டும். ஆனால், கிரேக்க மொழியில் இது தொடர் நிகழ்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சரீரத்தின் பாவச்செயல்களைச் சாகடித்துக் கொண்டடே இருக்க வேண்டும். அப்பொழுது நாம் பிழைத்துக்கொண்டே இருப்போம்

    நாம் மரித்திருக்கின்றோம் என்பதும் நமது ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கின்றது என்பதும் உண்மையே (கொலோ 3:3).

    கிறிஸ்துவிற்குள்ளிருக்கும் இந்நிலை பூமியிலுள்ள (அதாவது, இவ்வுலப்பிரகாரமாக உள்ள) நமது அவயவங்களைச் சாகடிக்க வேண்டிய (திடமான செயல்கள் மூலமாக) கடமை நமக்குள்ளது என்பதை நினைவூட்டுகிறது. இவற்றை அப்போஸ்தலர் பவுல், மாமிசம், ஆவி ஆகியவற்றின் இச்சை எனக் குறிப்பிடுகின்றார் (கொலோ 3:5).

    இயேசுகிறிஸ்துவும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை ஊழியத்திற்கான வல்லமையுடன் ஒப்பிடுகின்றாரேயொழிய, பரிசுத்தத்துடன் ஒப்பிடவேயில்லை (அப் 1:8).

    பரிசுத்தம் (அர்ப்பணித்தல், பிரதிஷ்டை செய்தல் தேவனுக்கும் அவருடைய சித்தத்திற்கும் கீழ்ப்படிதல்) என்பது திட்ட வட்டமான சுய கட்டுப்பாட்டின் மூலமாகவும், பரிசுத்த ஆவியானவர் வேதவசனங்களைப் பயன்படுத்துகையில் அவருடன் தொடர்ந்து ஒத்துழைப்பதன் மூலமாகவும் வரவேண்டும்.

    பட்சிக்கும் வைராக்கியம்

    பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் அக்கினியின் அபிஷேகத்தையும் ஒரே அனுபவமாகக் கருதிடும் பிறர், அக்கினியும் வைராக்கியமும் ஒன்றே எனவும் அல்லது ஆர்வமும் ஆவியானவரின் வரங்களும் ஞானமும் ஒன்றே எனவும் கருதுகின்றனர். இந்தப் பொருளில், பலரிடம் “அக்கினி” இருக்கின்றது. ஆவியில் அனலாயிருத்தலைப் பற்றி ரோமர் 12:11 கூறுகின்றது.

    (பொங்கி எழுதல் அல்லது ஆவியின் பட்சிக்கிற வைராக்கியம்) ஆவியை அவித்துப்போடாதிருக்க வேண்டுமென்று 1 தெசலோனிக்கேயர் 5.19 ஜனங்களுக்குக்

    கட்டளையிடுகின்றது.

    பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டதன் வாயிலாகக் கிடைத்திட்ட “தைரியத்திலும்” இதே அக்கினியின் அனுபவம் அடங்கியுள்ளது (அப் 4:31).

    இந்த தைரியமானது அற்புதமான, மகிழ்ச்சியான நம்பிக்கையாகவும், விடுதலையாகவும், வீரமாகவும், பற்றி எரிகின்ற வைராக்கியமாகவும் உள்ளது. உண்மையில், இந்த அக்கினியை அனுப்புமாறு ஆண்டவரிடம் கேட்கும் உரிமை நமக்கிருக்கின்றது.

    ஆயினும், விசுவாசிகளைக் குறித்து பேசப்படும் இடங்களில் அக்கினியின் ஞானஸ்நானத்தைப் பற்றி வேதாகமம் எதுவும் கூறிடவில்லை. யோவான் சுவிசேஷம் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தை மட்டுமே குறிப்பிடுகின்றது (யோவான் 1:33).

    யோவான் சுவிசேஷத்தில் ஆவியானவரின் முக்கிய அடையாளமாகத் தண்ணீரே இருக்கின்றது; இதில் அக்கினி அடையாளமாக குறிப்பிடப்படவில்லை. இயேசுகிறிஸ்து கூடத் தம்முடைய சீடர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை மட்டுமே குறிப்பிடுகின்றார் (அப் 1:5),

    பெந்தெகொஸ்தே நாளில் காணப்பட்ட அக்கினிமயமான நாவுகளை அக்கினி ஞானஸ்நானத்துடன் பலர் இணைத்துக் காண்கின்றனர். ஆயினும், அக்கினிமயமான நாவுகள் பெந்தெகொஸ்தே அபிஷேகத்திற்கு முன்பே ஏற்பட்டது, அதனால் இவ்விரண்டிற்கும் எவ்வித நேரடித் தொடர்புமில்லை. 120 பேரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட பொழுது அந்நிய பாஷையில் பேசுதலே இதற்கு அடையாளமாக இருந்தது; அக்கினி இதற்கு அடையாளமன்று (அப் 2:4),

    கொர்நெலியுவின் இல்லத்தில் ஆவியானவருடைய வரம் பெறப்பட்டது. இவ்வரம் பரிசுத்த ஆவியானவருடைய ஞானஸ்நானத்தையே குறிக்கும். புறஜாதியினரால் இது “போன்ற வரம் என அழைக்கப்படுகிறது. ஆயினும் இங்கு அக்கினி என்று குறிப்பிடப்படவேயில்லை (அப் 10:44,45,47; 11:15,16,17).

    ஸ்தேவானும், பர்னபாவும் பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவர்களாய் இருந்தனர் என்று அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் காணப்படுகின்றது. ஆனால் அக்கினியைக் குறித்து ஒன்றுமே கூறப்படவில்லை (அப் 6:5; 11:24).

    உண்மையில், அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் எங்கிலும் விசுவாசிகள் அக்கினியினால் நிரப்பப்பட்டனர் என்று குறிப்பிடப்படவேயில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியினால் கூறப்பட்டுள்ளது. நிரப்பப்பட்டனர் என்ற எளிமையான சொற்றொடராலேயே இது

    நியாயத் தீர்ப்பின் அக்கினி

    இயேசுகிறிஸ்து அக்கினியைப் பற்றி குறிப்பிடுகையில் இது எப்பொழுதும் நியாயத் தீர்ப்பின் அக்கினி அல்லது அழிவையே குறிக்கும். குறிப்பாக நரக அக்கினி (Jehenna) என்பவற்றையே குறிக்கும். இது உண்மையில் எரிநரகத்தினையே குறிக்கும் (மத் 5:22; 18:89).

    நிருபங்களிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளது (1கொரி 3:13; 2தெச 1:8; எபி 12:29; 2பேதுரு 3:7)

    பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானங்கொடுக்கப்படுமென்ற யோவான் ஸ்நானனின் தீர்க்கதரிசன காலத்தை நாம் கவனித்தால், வருங் கோபத்தை குறித்தே யோவான் எச்சரிக்கை விடுத்தார் என்று வேதாகமம் காட்டுகின்றது (மத் 3:7).

    இவ்வாக்குத்தத்த ஞானஸ்நானத்திற்கு முந்திய பிந்திய வசனங்கள், மரங்கள் வெட்டுண்டு அக்கினியில் போடப்படுதல் பற்றியும், பதர் அவியாத அக்கினியிலே சுட்டெரிக்கப்படுதல் பற்றியும் கூறுகின்றன (அணைக்கமுடியாதது அக்கினியின் தன்மையாகும்; அதாவது இது அக்கினிகடலை குறிக்கும்) (மத் 3.10,12).

    மத்தேயு 3:10-இலும் 3:12-இலும் கூறப்பட்டுள்ள அக்கினிகள் ஒரே தன்மை உடையவை என்று கருதும்போது எவ்வித விளக்கமும் கூறிடாமல் மத்தேயு 3:17-இல் கூறப்பட்டுள்ளது வேறுபாடானது என்று கூறுவது விநோதமாகத் தோன்றும்.

    ஆதிகாலம் முதலே அக்கினி ஞானஸ்நானம் என்பது நியாயத் தீர்ப்பினையே குறித்திடும் என்று பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆயினும் இக்கருத்தில் முரண்பாடுகள் எழும்பியுள்ளன.

    பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கும் அக்கினியின் ஞானஸ்நானத்திற்கும் இடையேயுள்ள கால வேறுபாட்டினை யோவான் காணத் தவறிவிட்டதை நாம் மறுபடியும் மனத்தினில் கொள்ள வேண்டும். யோவான் சிறைச் சாலையில் அடைபட்டிருந்த வேளையில் இந்தக் கருத்தே அவரைச் சஞ்சலத்திற் குள்ளாக்கிற்று எனக் கூறலாம். இயேசு கிறிஸ்து வியாதிகளைக் குணமாக்கிக் கொண்டிருந்தார், பாவங்களை மன்னித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் எவ்வித நியாயத் தீர்ப்பையும் கொண்டு வரவில்லை. உண்மையில், யோவானைச் சிறைச்சாலையில் அடைத்துள்ள ஏரோதும் ஏரோதியாரும் நியாயத் தீர்ப்பிற்கு ஏதுவாக உள்ளவர்கள். அதனால் யோவான் தம்முடைய சீஷருள் இருவரை “வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக் காத்திருக்க வேண்டுமா?’ என வினவிவர அனுப்பினார். வாக்குத்தத்தம் பண்ணப் பட்டவருக்குத் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட ஊழியத்தையே தாம் செய்து வருவதாக கூறி, இயேசு அந்தச் சீடர்களை யோவனிடம் திருப்பி அனுப்பினார் (மத் 11:1-6; ஏசா 2918,19; 35:5,6)

    இந்த வேளையில், உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்காமல் இரட்சிப்பதற்காகவே தாம் வந்துள்ளதை இயேசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார் (யோவான் 3:17; ஏசா 6:-|}}

    ஏசாயா 61.:1-11ஐ வாசிக்கையில் “நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும்” என்ற பகுதியை வாசிப்பதற்கு முன்பாகவே வேண்டுமென்றே புத்தகத்தினை மூடிவிட்டார் (லூக்கா 4:19,20).

    தம்மை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் இடையில் பிரிவினையை உண்டு பண்ணும் பட்டயத்தினையே இயேசு கொண்டுவந்தார். இது நியாயத்தீர்ப்பின் பட்டயமோ அல்லது அழிவின் பட்டயமோ அல்ல (மத் 10:34; லூக் 12:51)

    You have to wait 15 seconds.

    Download Timer

    Have any Question or Comment?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Our FM

    WMM CPC Church FM Station