கவனமாய் இருங்கள்

 

கவனமாய் இருங்கள்

    உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப் பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும்… (உபா 31:12)

    கருப்பொருள் : கவனமாயிருக்க வேண்டியவைகள்

    தலைப்பு : கவனமாயிருங்கள்

    ஆதார வசனம் : உபா 31:12

    துணை வசனம் : 1பேது 3:12; தானி 10:11; நீதி 14:15

    1. கர்த்தருடைய வார்த்தையின்படி செய்ய (உபா 12:32)

    • நோவா கர்த்தருடைய வார்த்தையின்படி செய்தார் (ஆதி 6:22)

    • மோசே கர்த்தர் காண்பித்த மாதிரியின்டி செய்தார் (எண் 8:4)

    • பேதுரு ஆண்டவரின் வார்த்தையின்படி செய்தார் (லூக் 5:5)

    2. ஊழியத்தை நிறைவேற்ற (கொலோ4:17)

    • ஊழியத்தை அசதியாய்ச் செய்யக் கூடாது (எரே 48:1)

    • ஊழியத்தில் இடறல் உண்டாக்கக் கூடாது (2கொரி 6:3)

    •  ஊழியத்தை உண்மைாய் செய்ய வேண்டும் (1தீமோ 1:12)

    3.மந்தைகளின்மேல் (நீதி 27:23]

    • மந்தையை ஓநாயிடமிருந்து தப்புவிக்க (அப் 20:29)

    • கொடூர மிருகங்களிடமிருந்து மந்தையைக் காக்க (லூக் 2:8)

    • சிதறிப்போன மந்தையை திருப்பிக்கொண்டுவர (எசே 34:12)

    4. நடையின்மேல் (நீதி 14:15)

    • நடைகள் வழுவாதபடிக்கு ஸ்திரப்பட (சங் 17:5)

    •  நடைகள் ஒன்றும் பிசகாதிருக்க (சங் 37:31)

    •  சமனான பாதையை விட்டு நடைகள் விலகாதிருக்க (நீதி 16:17)

    5. கர்த்தருடைய நியமங்கள்மேல் (1பேது 2:9)

    • நியமங்கள் யாவையும் கைக்கொள்ள வேண்டும் (யாத் 15:26) 

    • நியமங்களைக் கைக்கொண்டு நடக்க வேண்டும் (1இரா 3:14)

    • நியமங்களை மீறி நடக்கக் கூடாது (சங் 89:31)

    6. கர்த்தருடைய சத்தத்தைக் கேட்க (யாத் 15:26) 

    •  ஆபிரகாம் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டார் (ஆதி 22:11)

    • பவுல் கர்த்தருடைய சத்தத்தைக்ள கேட்டார் (அப் 26:14)

    • யோவான் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டார் (வெளி 1:10)

    7.ஞானமுள்ளவர்களாய் நடக்க (எபே 5:15] 

    • கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (நீதி 1:7)

    • ஞானத்திற்கு செவியைச் சாய்க்க வேண்டும் (நீதி 2:1)

    • ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறவன் ஞானமுள்ளவன் (நீதி 11:30)

    நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமயயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம் (உபா 12:32)

    பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான் (நீதி 14:15)

    You have to wait 15 seconds.

    Download Timer

    This Post Has One Comment

    1. தமிழ் பிரசங்கம்

      Praise the Lord Pastor
      ஐய்யா எனக்கு உங்களுடைய செய்திகள் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது
      தயவு செய்து எனக்கு உங்களுடைய தேவ செய்திகள் பிரசங்கங்களை அனுப்பிவிடவும்
      God bless you

    Leave a Reply