அக்கினிக்கடல் – LAKE OF FIRE

 

அக்கினிக்கடல் – LAKE OF FIRE

புதிய ஏற்பாட்டில் “அக்கினிக்கடல்” என்பதற்கான கிரேக்க வார்த்தை limnee – 3041 , pur – 4442 என்பதாகும்.

அந்திக்கிறிஸ்துவும், கள்ளத்தீர்க்கதரிசியும் கந்தகம் எரிகிற அக்கினிக் கடலிலே உயிரோடே தள்ளப்படுவார்கள். அர்மகெதோனில் அந்திக்கிறிஸ்துவும், கள்ளத்தீர்க்கதரிசியும் கொல்லப்படுவார்கள். இவர்கள் இருவரும் மனுஷர்கள். (வெளி 19:20; தானி 7:11; ஏசா 11:4; 2தெச 2:8-9).

அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தையும் வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். 

வெளிப்படுத்தினத விசேஷம் 19:20

அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துகொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. 

தானியேல் 7:11

நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார். 

ஏசாயா 11:4

நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார். 

2 தெசலோனிக்கேயர் 2:8

அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், 

2 தெசலோனிக்கேயர் 2:9

 இவர்களுடைய சரீரங்கள் உயிர்த்தெழுந்து, நித்திய நரகத்தில் தள்ளப்படும். (வெளி 19:20; வெளி 20:10; தானி 7:11).

 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். 

வெளிப்படுத்தினத விசேஷம் 20:10

 இவர்களும், வலது பக்கத்தில் நிற்பவர்களும் (goat nations) (மத் 25:41,46) இரண்டாவது உயிர்த்தெழுதலில் பங்கு பெறுவார்கள். 

 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். 

மத்தேயு 25:41

அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார். 

மத்தேயு 25:46

இது ஆயிரம்வருஷ அரசாட்சிக்கு முன்பு இரண்டாவது உயிர்த்தெழுதலின் முதலாவது பகுதி. மரித்த மற்றவர்கள் ஆயிரம் வருஷ அரசாட்சிக்குப் பின்பு இரண்டாம் உயிர்த்தெழுதலை நிறைவுபெறச் செய்வார்கள். (வெளி 20).

மரணத்திலும், பாதாளத்திலும் உள்ளவர்கள் அனைவரும் அக்கினிக்கடலிலே தள்ளப்படுவார்கள். (வெளி 20:14-15 )

அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். 

வெளிப்படுத்தினத விசேஷம் 20:14

ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். 

வெளிப்படுத்தினத விசேஷம் 20:15

You have to wait 15 seconds.

Download Timer

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page