அந்தரங்கத்தில் உன் பிதாவை நோக்கி

அந்தரங்கத்தில் உன் பிதாவை நோக்கி 

என்னைக் கேளும் அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும் பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேள்” சங், 2:8

விசுவாசிகளுக்கு பவுல் அப்போஸ்தலன் கொடுக்கும் பிரதானமான புத்திமதி என்ன வெனில் எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங் களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும். நாம் எல்லா பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு ராஜாக்களுக்காகவும் அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாய் இருக்கிறது. 1தீமோ,2:1,3

இதுவரைக்கும் சுய நலத்திற்காகவே நாம் ஜெபித்துவிட்டோம். ஏன்? கண்ணீர் சிந்தியும் உபவாசித்தும் ஜெபித்து விட்டோம். கர்த்தர் நமது ஜெபத்திற்கெல்லாம் பதிலளித்தார். இனிமேலும் பதில் அளிப்பார். இளி நமக்காக ஜெபித்தது போதும். கிருபையுகத்தின் கடைசிக் கட்டத்திலிருக்கும் நாம் பாவத்தின் காரணமாய் நித்திய அக்கினிக்கடலுக்கு நேராய் விரைந்து மடிந்து கொண்டிருக்கும் கோடான கோடி மக்களை உள்ளத்தில் சுரிசனையோடு நோக்குவோமா?

அவர்கள் நிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி தன் வாயை மட்டில்லாமல் திறந்து அவர்களை விழுங்குகிறது. தீராத வேதனையைத் தரும் இப்பாதாளம் ஒரு பாவி சாகும்போது அதிர்ந்து அவனை வரவேற்கிறதாம். (ஏசா. 14:9) எத்தனை பரிதாபம்! ஆகையால் இரட்சிக்கப் பட்டிருக்கின்ற நீ இந்த கோர காட்சியை சிந்தனை செய், நிமிடத்திற்கு தொண்ணூறு மக்களை விழுங்கும் இந்த பாதாளத்திலிருந்து ஒரு சில மக்களையாவது கர்த்தர் விடுவிக்கும்படி திறப்பில் நிற்க முன் வருவாயா?

விண்ணப்ப ஜெபமாகிய போராயுதத்தை உலக மக்களின், விசேஷமாக இந்தியரின் இரட்சிப்புக்கான உபயோகிப்பாயா? போராயுதமாக ஒவ்வொரு குறிப்பிற்காகவும் ஜெபிக்கும் முன் நம்மை ஆவியானவரின் சுத்திகரிப்புக்கு ஒப்புக்கொடுப்போம். கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழ் நம்மை மூடிக் கொள்ளுவோம். நமக்கு விரோதமாய் சீறக்கூடிய எல்லா துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் அந்தகார சக்திகளையும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கட்டுவோம். அவரைத் துதித்து ஆராதிப்போம், பின்பு வாக்குத்தத்தங்களைப் பற்றிக் கொண்டு விண்ணப்பங்களை ஏறெடுப்போம். பூமியில் வெற்றி காண்போம். பரலோகில் வெற்றி கொண்டாடுவோம்.

கூட்டத்தில் உள்ள விசுவாசிகளுக்காய் கர்த்தரை ஸ்தோத்தரிப்போம். அவர்கள் உத்தம் சாட்சிகளாய் ஆவியில் வளர்ந்து கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்பட ஜெபிப்போம். தங்களில் இரட்சிக்கப்படாதவர்களைக் குறித்த கரிசனையுடையவர்களாய் இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிக்க கிருபை பெற்றுக் கொள்ளும்படி ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத மக்கள் எவ்வகையாயிலும் சுவிசேஷத்தைக் கேட்கவும் கீழ்ப்படியவும் மன்றாடுவோம். அவர்களது வேலையில் ஆசீர்வதிக்கப்படத்தக்க தாய் உண்மையாய் இருக்க ஜெபிப்போம்.

1  இந்திய ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள், பார்லிமென்ட்

2. விமாளப்படை, கடற்படை, தரைப்படை அதிகாரிகள், வீரர்களுக்காக,

3. தொழிலதிபர்கள், தொழில் ஸ்தாபனங் களுக்காக.

4. மிஷனரி ஸ்தாபளங்கள், (பிரத்தியேகமான ஜெபம் தேவை. மிஷௗரிகளுக்காக,

5. தந்தி தபால் இலாக்கா ஊழியர்களுக்காக.

6. விவசாயிகள், பண்ணை ஊழியர்களுக்காக,

7. அகதிகள் முகாம் ஊழியர்களுக்காக, அகதிகளுக்காக,

8 பத்திரிக்கையாளர், எழுத்தாளர்களுக்காக. 

9. குறவர்களுக்காக

10. தங்கம், வெள்ளி, நகை செய்பவர்.

11. விற்பவர்களுக்காக, உணவு, சிற்றுண்டி விடுதிகள் ஊழியர் 11.

12. 5களுக்காக 12 வீடுகளில் உதவி செய்யும் வேலைக்காரர்

13. களுக்காக. முத்துக் குளிப்போர், கிணறு வெட்டுபவர் 13.

14. களுக்காக, புண்ணிய ஸ்தல யாத்திரீகர்களுக்காக. 14.

15. புத்த மடாலயங்கள், புத்த பிட்சுகளுக்காக,

16. இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் ஆளுநர்களுக்காக, முதலமைச்சர்கள், மந்திரி சபைக்காக

17.போலீஸ் இலாக்கா அதிகாரிகள்,

ஊழியருக்காக.

18 கப்பல் துறை அதிகாரிகள், ஊழியருக்காக, முகவர்களுக்காக

19. சுழிவறை சுத்தம் செய்வோர். தெரு கூட்டுவோருக்காக,

20. படத்தயாரிப்பாளர், நடிகர்கள், நடிகை களுக்காக,

21. நீர்த் தேக்கங்கள், பெரும் பாலங்கள் அமைப்போர், என்ஜினியர்கள், வேலையாட் களுக்காக.

22 தோல் பதனிடுதல், தோல் வியாபாரிகள், செருப்பு தைப்போருக்காக,

23. இந்திய திருச்சபைக்காக, பிஷப்மார். பாதிரியார்கள், சபை கமிட்டிகளுக்காக,

24. லாரி, மோட்டார், ஆட்டோ முதலிய

25. வாகனங்களை ஓட்டுபவர் கண்டக்டர்கள். மெக்கானிக்குகள் இவர்களுக்காக, பீங்காள் சாமான்கள், மண்பாத்திரங்கள்

செய்பவர்களுக்காக

26. காபி, தேயிலை, தோட்ட அதிபர். ஊழியர்களுக்காக,

27. இந்து ஆலயபூசாரிகள், தலைவர்கள், குருக்கள் தேவஸ்தானங்கள், மக்களுக்காக,

28. விளையாட்டுவீரர்கள், வீராங்களைகள், பயிற்றுவிப்போர்.

நடத்துவோருக்காக போட்டி

29. கொத்தடிமைகளாய் அவதியுறும் மக்களுக்காக,

30. சிற்பங்களைச் செதுக்குபவர். ஓவியம் வரைவோருக்காக,

31. இந்திய படையினருக்காக

எல்லைப்பாதுகாப்பு

32 இரயில்வே இலாக்கா அதிகாரிகள், ஊழியருக்காக,

33. மறுவாழ்வு இல்லங்கள், அதிகாரிகள், குஷ்டரோகிகள், ஊனமுற்றோர், செவிடா,

ஊமையருக்காக,

34. மீனவருக்காக.

35. ரேஷன் கடைகள், நியாயவிலை அங்காடிகள், ஊழியருக்காக.

36. அச்சகங்களின் முதலாளிகள், ஊழியருக்காக, 

37. ரோமன் கத்தோலிக்கர், போப், கத்தோலிக்க பாதிரிமார், சுன்னியாஸ்திரீகளுக்காக, 

38. மலையேறுபவர்கள், அவர்களுக்கு

39. உதவுபவர்களுக்காசு (Sherpas). 39. கள்ளக்கடத்தல்காரருக்காக.

40. குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல், நரபலி இவற்றில் ஈடுபடுவோருக்காக.

41. மளநோயாளிகள், மனநோய் மருத்துவர், அவர்களுக்கு உதவி செய்வோருக்காக,

42. பாய் பின்னுவோர், கூடை முடைவோருக்காக.

43. அழகுபடுத்தும் நிலையங்கள், முடிதிருத்தும் நிலைய ஊழியருக்காக,

44. சர்வசமய ஆராதனை. சர்வசமய

பிரார்த்தனையில் ஈடுபடும் வஞ்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக.

45. பாத்திரக்கடை வியாபாரிகளுக்காக, பல சரக்கு வியாபாரிகளுக்காக,

46. இந்திய நியாய விசாரணை இலாக்கா, உச்ச நீதிமன்றம், ஹைகோர்ட்டு ஊழியருக்காக, வழக்கறிஞர், நீதிபதிகள், இவர்களுக்காக,

47. சுற்றுலா இலாக்கா ஊழியர்கள், இந்தியாவுக்கு வரும் அந்நிய உல்லாச பயணிகள், ‘சுதேச பயணிகளுக்காக,

48. அநாதைப் பிள்ளைகள், காப்பக ஊழியர்களுக்காக.

49. மார்வாடிகள், பைனான்ஸ் கார்பரேஷன், ஊழியர், கடன் வாங்குபவர்களுக்காக,

50 பளை, தென்னைமரம் ஏறுபவர். மரம் வெட்டுபவர்களுக்காக,

51. வாழ்க்கையில் தோல்வி, சோர்வு நிமித்தம் தற்கொலையை நாடும் மக்களுக்காக,

52. விபசார விடுதி நடத்துவோர், விலை மாதுகளுக்காக, அவர்களை விற்போருக்காக.

53. பல மாநிலங்களிலுமுள்ள தீவிரவாதி களுக்காக,

54. லஞ்சம் வாங்குபவர், லஞ்சம் கொடுப்பவர் களுக்காக,

55. ஆடுகளை ஊர் ஊராய் மேய்த்து பசும்புல் தேடி ஊர்ப்புறங்களில் தங்கி வாழும் கூட்டத்தினருக்காக,

56 சேரியில் வாழும் குடிசைவாழ் மக்களுக்காட

57. உப்பள ஊழியர். உப்பு வியாபாரம் செய்வோருக்காகப்

58 இஸ்லாமிய மக்கள், அவர்கள் போதகர் (இமாம்கள்) களுக்காக,

59. கல் உடைப்போர், ரஸ்தா போடுவோருக்காக,

60 லாண்டரி கடைக்காரர்கள். அயன் வண்டிக்காரர்கள், துணி துவைக்கும் வேலை செய்வோருக்காக,

61. வங்கிகள், தலைவர்கள். வங்கி ஊழியர்களுக்காக. சூதாட்டம், குதிரைப் பந்தயம் நடத்துபவர்கள், பங்கு பெறுபவர் களுக்காக.

62. மதிய உணவு ஸ்தாபள தலைவர்கள், ஊழியருக்காக,

 63. பிச்சைக்கார விடுதிகள், பராமரிப்போர். பிச்சைக்காரருக்காக,

64 சிறைச்சாலை அதிகாரிகள், ஊழியர்கள், சிறை கைதிகள் இவர்களுக்காக, 

65. இந்து மடங்கள், இந்து சாதுக்களுக்காக.

66. விமானத்துறை போக்குவரத்து அதிகாரிகள், விமான ஓட்டுநர். விமானபணிப் பெண்கள்,

விமான நிலைய ஊழியர்களுக்காக, 67. கொட்டகைக்காரர்கள், பந்தல் போடுபவர்களுங்காக

68, குழந்தை காப்பகங்கள், நர்சரி பள்ளி ஆசிரியர், பிள்ளைகளுக்காக, 

69. சர்க்கஸ் களியாட்ட வித்தைக்காரருக்காக,

70. வழிப்பறிக் கொள்ளை, கடற்கொள்ளை, விமானக் கடத்தல் செய்பவருக்காக,

71. தையற்காரர்கள், அவர்களுக்கு உதவி செய்யும் ஊழியருக்காக..

72 புகைப்படம், வீடியோ தயாரிப்பாளர்கள், சிப்பந்திகளுக்காக,

73. மதுபானம், மயக்க மாத்திரை, கஞ்சா இவற்றிற்கு அடிமைப்பட்டோர். அவற்றை விற்பவருக்காக, கள்ளச்சாராயம் காய்ச்சு வோருக்காக.

74. காணாமற்போகும். கடத்தப்படும் பிள்ளைகள், பெரியோருக்காகப்

75. முதியோர் இல்லங்கள், அதில் வாழும் முதியோர், அவற்றை நடத்தும் வாழியருக்காக.

76. நாட்டினுள் நுழையும் அந்நிய உளவாளி களுக்காக.

77. நகரசபை ஊழியர், முனிசிப்பல் ஊழியர். பஞ்சாயத்து கிராம ஊழியருக்காக, 

78. காட்டு இலாக்கா அதிகாரிகள் (Rangers), ஊழியர், காவலருக்காக,

79, நாஸ்திகர், நாஸ்திகத்தை பரப்புகிற மக்களுக்காக, வேதாகமத்தை மொழி பெயர்ப்போருக்காக

80. வியாபாரக் கம்பெனிகள், அதன் பிரதிநிதிகள் (Sales & Medical Representatives) அனைவருக்காக.

81. விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், விண்வெளி வீரருக்காக, கம்ப்யூட்டர், அறிவியல் அறிஞர்களுக்காக,

82. அந்றிய தெய்வங்களைப் போற்றிப்பாடும் பாடகர், பாடகிகள், பின்னணி வாத்தியம் வாசிப்போர் ஆகியோருக்காக,

83. கஸ்டம்ஸ் ஊழியருக்காக,

84. மின்சார இலாக்காவின் அனைவருக்காகவும்.

85. பூ வியாபாரிகள், பெட்டிக்கடை வியாபாரி களுக்காக. 

86. பாஸ்போர்ட் அலுவலக ஊழியருக்காக

87. கல்வி நிலையங்கள், தலைவர், ஆசிரியர், மாணவர், சிப்பந்திகள் முதலியோருக்காக

88. மாணவர் மத்தியில் சுவிசேஷ ஊழியம் செய்யும் ஊழியருக்காக,

89. மந்திரவாதிகள், குறிசொல்வோர். அஞ்சனம் பார்ப்போர். குடுகுடுப்பைக்காரருக்காக,

90. நெசவு தொழில் செய்வோருக்காக, நுால் நூற்போருக்காக,

91 ஒலி, ஒளிபரப்பு நிலைய ஊழியர்கள், செய்தியளிப்போருக்காக.

92 இந்திய பழங்குடி மலைவாழ் மக்களுக்காக,

93. மருத்துவமனைகள், டாக்டர்கள், நர்சுகள், எல்லா சிப்பந்திகளுக்காக, நோயானி களுக்காக.

94. சுட்டிட தொழிலாளிகள், சுரங்க தொழிலாளி சுளுக்காக.

95. சாமான்கள் பழுதுபார்ப்பவர்கள், குடை ரிப்பேர் செய்பவர் குப்பை பொறுக்கும் ஏழை மக்களுக்காக,

96 பலவித தொழிற்சாலை ஊழியருக்காக, 

97. சகலவித கள்ள உபதேசங்கள் (Cults), அதில் சிக்குண்டவருக்காக.

98. பலவிதமான அரசாங்க ஊழியருக்காக,

99. புண்ணிய ஸ்தல யாத்திரீகர்களுக்காக,

100. ஸ்ஜன, சீக்கிய மதஸ்தருக்காக.

101, யூத குலத்தவருக்காக, அவர்களுடைய இரட்சிப்புக்காக, 

102 யுத்த தளவாடங்கள், அணுகுண்டுகள் செய்யும் கம்பெனி ஊழியர்களுக்காக, 

103. அந்நிய நாடுகளிலுள்ள இந்திய அரசாங்க பிரதிநிதிகள், இந்திய மக்களுக்காக.

104, கம்யூனிச கொள்கைகாரருக்காகவும் அவர்கள்

மூலம் உபத்திரவப்படும் மக்களுக்காகவும்,

105 உலகமெங்கும் உள்ள கிறிஸ்துவின் சரீரமாகிய சபை பரிசுத்த மணவாட்டியாய் கிறிஸ்துவை சந்திக்க ஆயத்தமாக.

106, நம் தேசத்தில் உள்ள வாலிபர்களுக்காக பெண் இருபாலருக்காகவும்

(ஆண் ஜெபிக்கவும்).

107. போதை மாத்திரை. போதைப் பொருள் களுக்கு அடிமைப்பட்டவர்களுக்காக.

108, வாலிபர்கள் மத்தியில் காணப்படும் Homa Sexual, சுயபுணர்ச்சி, இன்னும் பல கொடிய இரகசிய பாவங்களுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் வாலிபர்களுக்காக,

109. தீவிரவாதிகளாக உள்ள வாலிபர்கள்’ மனந்திரும்ப ஜெபிப்போம்.

110. வாலிபர்கள் நடுவே காணப்படும் தற்கொலை ஆவிகளிலிருந்து விடுதலை அடைய ஜெபிப்போம்.

111. இயேசுவுக்கு இன்று வாலிபர்கள் தேவை. அரசியல் தலைவர்களுக்காக, சினிமா நடிகர்களுக்காக இரத்தம் சிந்தவும்

ஆயத்தமாக உள்ள வாலிபர்கள் மனம்மாற ஜெபிப்போம்.

112 வாலிபர்கள் நடுவே தெய்வ பயமில்லாமல் நுணிகர. பாவங்களில் உள்ளவர்கள்

மனந்திரும்ப

113. திருடு, கொலை, கொள்ளை, இது போன்ற பாவங்களில் உள்ள வாலிபர்கள் மனந்திரும்ப,

114. விபச்சார் பாவத்தில் விழுந்து இரகசிய நோய்வாய்ப்பட்டு பயமும் திகிலும் கொண்ட மக்கள் அநேகர் உண்டு. அப்படிப்பட்டவர்கள் மனந்திரும்ப

115. புற மதங்களிலிருந்து சத்தியத்தைத் தேடி வரும் மனிதர்களுக்காக,

116. இவ்வாறு சத்தியத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபடுவதற்காக, தங்கள் மதத்தினரால் உபத்திரவங்களுக்கு ஆளாகும் மக்களுக்காக.

117, இவ்வாறாக சத்தியத்தைத் தேடி வரும் புற மதத்தவர்களுக்கு சத்தியத்தைப் போதிக்கும் வாய்ப்புப் பெற்றவர்களுக்காக,

118. தங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட காரணங் களினால், ரகசியக் கிறிஸ்தவர்களாக வாழ நேரிடும் மனிதர்களுக்காக.

119. தங்கள் ஜாதி ஜனத்தாரின் சமூகக் கட்டுப்பாடுகளின் நிமித்தமாக சுவிசேஷக் கூட்டங்களுக்கும், தெய்வீக சுகமளிக்கும் கூட்டங்களுக்கும் வர முடியாதவர்களுக்காக,

120, கிறிஸ்தவப் பள்ளிகள், சுல்லூாரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் கிறிஸ்துவுக்காக இன்னும் வல்லமையான சாட்சிகளாய் விளங்க,

121. கிறிஸ்தவ மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகன், இணை மருத்துவ நிறுவனங்கள் ஆகியவை மக்களிடம் இன்னும் அதிக அன்புடன், கனிவுடன், கருணையுடன், கரிசனையுடன் பழகி, கிறிஸ்துவின் அன்பு என்பது என்ன என்பதை உணர வைக்க,

122. கிறிஸ்தவ மாணவர்கள் தங்கள் கல்வியில் வெகு சிறப்பாக விளங்கி பிறருக்கு முன் கிறிஸ்துவின் வல்லமையான சாட்சிகளாக ஜொனிக்க

123. கிறிஸ்துவின் பணி என்னும் களத்தில் முன்னணியில் நிற்பதால் போரின் முழுக் காயங்களையும் ஏற்க நேரிடும் சுவிசேஷகர் மற்றும் மிஷனரிகளுக்காக.

124. புதிய மற்றும் எதிர்ப்புகள் மிகுந்த பணித்தளங்களில், பணிக்களங்களில் முன்னணியில் நின்று இவ்வாறாகப் பாடுபடும் சுவிசேஷகர்கள் மற்றும் மிஷனரிகளின் தேவைகளை சந்திக்க விசுவாசிகள் இன்னும் உதாரத்துவமாய்க் கொடுக்க வேண்டும் என்பதற்காக.

125 முன்னனி சுவிசேஷகர்களின் நலத்துக்காக

126, சுவிசேஷகர், மிஷௗரிமார்களுக்குள்ளே மன ஒருமைப்பாடு காணப்பட

127. வெவ்வேறு தளிப்பட்ட கவிசேஷ்

அறிவிப்புப்பணி ஊழியங்களும்,

மிஷன்களும் தங்களுக்குள் ஒருமைப்பாட்டுடனும், இணக்கத்துடனும், தேவ காரியங்களில் இசைவாய் செயல்பட.

128 இவ்வாறான முன்னனி ஊழியங்களின் தலைவர்கள் மேல் சகல ஞான வரங்களும் அபரிமிதமாய்ப் பொழியப்பட

129, அதிக ஆபத்தும் எதிர்ப்புமுள்ள பணித் தளங்களில், பணிக்களங்களில் பணியாற்றும்

சுவிசேஷகர்களின் பாதுகாப்புக்காக. 

130. முன்னணித் தளங்களில், களங்களில் பணியாற்றும் சுவிசேஷகர்கள் இன்னும் அதிகமாய் ஆவிக்குரிய வரங்களினாலும், ஆவிக்குரிய வல்லமைகளினாலும் நிரப்பப்பட

131. தங்கள் தாய், தகப்பன்மார். நெடுந் தொலைவிலுள்ள முன்னணிப் பணித்தளங் களுக்கு சுவிசேஷப் பணியாற்றச் சென்று விட்ட காரணத்தால், குடும்பம் என்ற கட்டமைப்பிலிருந்து பிரிந்து, தன்னந்தனியாய் ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்க நேரிடும் கட்டாயத்திற்குள்ளான அவர்களது பிள்ளைகளுக்காக,

132 புதிய பணித்தளங்களில், புதிதாய் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட விசுவாசிகள், இன்னும்

தங்களுக்கென ஓர் ஆலயக் கட்டிடமோ அல்லது ஆராதனை ஸ்தலமோ இல்லாமல் தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட வர்களுக்காக

133. வீட்டு சபைகள் (Home – Churches} ஆராதனைக் கூடுகைகளுக்காகவும், அவற்றை தலைமை தாங்கி நடத்தி வரும் மூப்பர்களுக்காகவும்

எனப்படும் வீட்டு

134. புதிய விசுவாசிகள் அநேகம் அற்புதங்கள் மூலமாகவும், தெய்வீசு சுகங்கள் மூலமாகவும், உலகப்பிரகாரமான பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறுவதன் மூலமாகவும்

கிறிஸ்துவின் அன்பை மேன்மேலும் ருசிக்க

135, எரேமியா, எலியா, தெபோரா போன்ற தீர்க்கதரிசிகள், தீர்க்கதரிசினிகள் இன்று நம்மிடைய எழும்ப

136. மோசே, யோசுவா, கிதியோன், தாவீது போன்ற பெரும் தலைவர்கள் இன்றைய கிறிஸ்தவர் கனிடையே எழும்ப

137. பவுல். பேதுரு. திவ்விய வாசகளாகிய யோவான் போன்ற போதகர்கள் இன்று நம்மிடையே எழும்ப

138, யாக்கோபு, நெகேமியா, தானியேல் போன்ற ஜெப வீரர்கள் இன்று நம்மிடையே எழும்ப 

139. விசுவாசிகளின் சமூதாய வாழ்விலும், குடும்ப வாழ்விலும் பரிபூரண பரிசுத்தம் காணப்பட

140. விசுவாசிகள் தேவனுடைய கற்பனைகள், கட்டளைகள் அனைத்திலும் அவருக்குப் பூரணமாய் செவிகொடுத்து. கீழ்ப்படிந்து நடக்க

141. தங்கள் அண்டை அயலகத்தார்

கண்களுக்கு முன்பும், நாட்டு மக்கள் கண்களுக்கு முன்பும், விகவாசிகள் சாட்சியுள்ள ஜீவியம் செய்ய 

142. விசுவாசிகள் தங்கள் வீட்டில் ஒழுங்காய், கிரமமாய், நியமம் தவறாது குடும்ப ஜெபத்தில் ஈடுபட

143, விசுவாசிகள் தங்கள் சபை கூடுகையில், சபை ஐக்கியத்தோடு ஒருமைப்பாட்டில் இணைக்கப் பட்டவர்களாய் மகிழ்ச்சியுடன் ஈடுபட

144. தேவன் தங்களிடம் எதிர்பார்க்கும் தங்களுடைய சுடமையின் படி, விசுவாசிகள் தங்கள் பிள்ளைகளை தேவனுடைய வழியி லும், பரிசுத்தத்திலும் வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றும்படி

145, விசுவாசிகள் தேவனை அறிகிற அறிவில் வளர்ந்து பெருகும்படி

146. விசுவாசிகள், ஆத்துமாக்களுக்காக மேலும் மேலும் பாரம் கொள்ளும்படி

147, தேவனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அத்தனை தாலந்துகளையும், தேவனுடைய நாம மகிமைக்காகவே, மிகவும் ஊச்கத்துடன் விசுவாசிகள் பயன்படுத்தும்படி

148. பருவம் தவறாத மழை, கரை புரண்டு ஓடும் ஆறுகள், நிரம்பி வழியும் ஏரி, குனம், குட்டைகள் ஆகியவற்றால் தேவள் தேசத்தை ஆசீர்வதிக்கும்படி

149. பல்வேறு ஜாதி, இனம், மொழியினர் ஆகியோரிடையே அமைதியும் சமாதானமும் நிலவ.

150, “மது அடிமைகள் – மீட்பு – ஊழியம்”, மற்றும் “தற்கொலைத் தடுப்பு ஊழியம்” போன்ற ஊழியங்களில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்காக, அவர்கள் சார்ந்திருக்கும் ஊழிய நிறுவளங்களுக்காக,

151. தங்கள் வாழ்நாளின் இறுதி ஆண்டுகளில் தாங்கள் பெற்ற பிள்ளைகளாலேயே கைவிடப் பட்டுத் தத்தளிக்கும் பெற்றோருக்காக,

152. சபைகளில் பின்மாரி பொழிய தேவன் அனுக்கிரகம் செய்யுமாறு.

153, ஜெபக்குழுக்கள், முழு இரவு ஜெப ஊழியங்கள் ஆகியவற்றைத் தலைமை தாங்கி நடத்தும் தலைவர்களுக்காக, மற்றும் அமைப்பாளர்களுக்காக

இன்னும் உங்களுக்கு தெரிந்த ஜெபக் குறிப்புகள் இருந்தால் எழுதிவைத்து ஜெபியுங்கள்..

ஒவ்வொரு கிறிஸ்தவரும் பரிசுத்த ஆவியின் பெலத்தால் சுவிசேஷத்திற்கும், தான்

அழைக்கப்பட்ட அழைப்புக்கும் பாத்திரராய் நடக்க தத்தம் செய்ய ஊக்கமாய் மன்றாடுவோம்.

ஒரே ஒரு வாழ்க்கை, முடிய சிறிது காலமே உள்ளது ஜெபிப்போம், ஜெயம் பெறுவோம். ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்’ 1 கொரி 15:57

நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் விதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது.

சத்தியம் தள்ளுபடியாயிற்று: பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்.

ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்;…*

ஏசாயா 59:14,15,16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *