அக்கினி சாயல், சூலை, தழல், தோற்றம், தூன்

 

அக்கினி சாயல், சூலை, தழல், தோற்றம், தூன்

  அக்கினிச்சாயல் – LIKE FIRE

  பழைய ஏற்பாட்டில் “அக்கினிச்சாயல்” என்பதற்கான எபிரெய வார்த்தை –  ‘esh – 784 + , demuwth – 1823 என்பதாகும்.

  எசேக்கியேல் அக்கினிச்சாயலாய்த் தோன்றுகிற ஒருவரைக் கண்டார். தேவனுடைய மகிமையின் தரிசனத்தை எசேக்கியேல் நான்காம் முறையாகக் காண்கிறார். (எசே 1:4-28; எசே 3:2-14,22-23; எசே 8:1-4). அக்கினிச்சாயல் என்பது தேவனுடைய மகிமையின் விளக்கமாகும்:

  1. அக்கினிச்சாயலாய்த் தோன்றுகிற ஒருவர்.

  2. அவருடைய இடுப்புக்குக் கீழெல்லாம் அக்கினியைப் போல் பிரகாசிக்கிற சாயல்

  3. அவருடைய இடுப்புக்கு மேலெல்லாம் சொகுசாவைப்போல் பிரகாசிக்கிற சாயல்

  4. எசேக்கியேல் பள்ளத்தாக்கிலே கண்டிருந்த தரிசனத்துக்குச் சரியாக விளங்குகிறது. (எசே 8:4; எசே 1)

  அக்கினிச்சூளை BLAZING FURNACE 

  பழைய ஏற்பாட்டில் “அக்கினிச்சூளை” என்பதற்கான எபிரெய வார்த்தை  yeqad (Aramaic) – 3345 + ,  nuwr (Aramaic) – 5135 என்பதாகும்.

  யூதருடைய பாரம்பரிய வரலாற்றின் பிரகாரம் விக்கிரகாராதனைக்காரர்கள் ஆபிரகாமை எரிகிற அக்கினிச்சூளையின் நடுவில் போட்டு, கொன்றுபோட்டார்கள். ஆபிரகாம் அவர்களுடைய விக்கிரகங்களை ஆராதிக்க மறுத்ததற்காக அக்கினிச்சூளையில் எறியப்பட்டார்.

  நேபுகாத்நேச்சார் ராஜா ஒரு தேசத்திலுள்ள எல்லோரும் பொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் அதை வணங்க வேண்டுமென்று கட்டளையிட்டான். சாத்ராக்,மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று எபிரெய வாலிபரும் ராஜாவின் சிலையை வணங்க மறுத்து விட்டார்கள். தான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது என்று ராஜா இம்மூன்று வாலிபரிடமும் கூறினான்.

  நேபுகாத்நேச்சார் இம்மூன்று வாலிபரையும் உடனடியாக அக்கினிச்சூளையின் நடுவில் போடுவதற்குப் பதிலாகத் தன்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய அவர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறான். அவர்களிடம் உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்று ஆணவமாகப் பேசுகிறான். ராஜா கேட்ட கேள்வி தேவனுக்கும், யூதர் அனைவருக்கும் ஓர் அறைகூவலாகக் கேட்கப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலின் தேவன் அவர்களை எரியும் அக்கினிச்சூளையிலிருந்து தப்புவிக்க வல்லவராக இருக்கிறார் என்பதை தேவன்தாமே நிரூபிக்க வேண்டும்.

  ஆனால் இந்த மூன்று எபிரெய வாலிபருமோ இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை என்று கூறிவிடுகிறார்கள். மூன்று எபிரெய வாலிபரும் மிகவும் கவனமாக ராஜாவிற்கு உத்தரவு கூறுகிறார்கள். அதே வேளையில் தங்களுடைய தேவன் ராஜாவின் கையிலிருந்து தங்களை நீங்கலாக்கி விடுவிப்பார் என்பதிலும் விசுவாசத்தோடு இருக்கிறார்கள். கர்த்தர் தங்களைத் தப்புவித்தாலும், தப்புவிக்காதே போனாலும் ராஜா நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். (தானி 316-18).

  நேபுகாத்நேச்சாருக்குக் கடுங் கோபமூண்டது. ராஜாவுக்குக் கோபம் வந்தவுடன், அவனுடைய முகம் வேறுபட்டது. சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப் பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவு கொடுத்தான். இதனால் கர்த்தருடைய நாமம் மேலும்மேலும் மகிமைப்படுகிறது (தானி 3:19,25-28). சூளை மிகவும் சூடாக்கப்பட்டது. அக்கினி ஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக் கொண்டுபோன புருஷரைக் கொன்று போட்டது. (தானி 3:22). அக்கினிச்சூளையில் போடப்பட்ட மூன்று எபிரெய வாலிபரையும் கர்த்தர் எரிகிற அக்கினியிலிருந்து தப்புவித்தார். அவர்களை உயிரோடே காத்துக் கொண்டார்.

  அக்கினித்தழல் – BURNING COALS

  எரிகிற அக்கினி பிளம்புகள். நேசவைராக்கியத்தின் தழல், அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது (உன் 8.6). எசேக்கியேல் தீர்க்கதரிசி நாலு ஜீவன்களைத் தரிசித்தார். அந்த ஜீவன்களுடைய சாயல் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும், தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது (எசே 1:11). கேரூபின்களின் நடுவே அக்கினித்தழல் இருந்தது (எசே 10:2).

  புதிய ஏற்பாட்டில் “அக்கினித்தழல்” என்பதற்கான கிரேக்க வார்த்தை  anthrax – 440 என்பதாகும்.

  நமது சத்துருக்களுக்கும் நாம் உதவி புரியவேண்டும். அப்படி செய்வதினால் அக்கினித் தழலை அவர்கள்மேல் குவிக்கலாம் என்று பவுல் கூறுகிறார் (ரோமர் 12:20).

  அக்கினித்தூண் – PILLIAR OF FIRE

  பழைய ஏற்பாட்டில் “அக்கினித்தூண்” என்பதற்கான எபிரெய வார்த்தை x – ‘esh 784+ , àmmuwd, àmmud – 5982 என்பதாகும்.

  அக்கினி மயமான தூண். இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணியபோது, கர்த்தர் அவர்கள் நடுவே இருந்தார். கர்த்தருடைய மேகம் அவர்கள்மேல் நின்றது. பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும் கர்த்தர் அவர்களுக்கு முன்சென்றார் (எண் 14:4).

  அக்கினித் தோற்றம் – LOOK LIKE FIRE

  பழைய ஏற்பாட்டில் “அக்கினித்தோற்றம்” என்பதற்கான எபிரெய வார்த்தை  ‘esh – 784 + , mareh – 4758 என்பதாகும்.

  அக்கினியைப் போன்ற தோற்றம். வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின் மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டாயிற்று: அது விடியற்காலமட்டும் இருந்தது. இப்படி நித்தமும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக் கொண்டிருந்தது. மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள் (எண் 9:15-17)

  அக்கினி நிறம் – COLOUR LIKE FIRE

  புதிய ஏற்பாட்டில் “அக்கினிநிறம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை  – pyrinos 4447 என்பதாகும்.

  மஞ்சள் அல்லது சிகப்பு நிறம். வெளிப்படுத்தின விசேஷத்தில் குதிரைகளையும் அவைகளின் மேல், ஏறியிருந்தவர்களையும் யோவான் தரிசனத்தில் கண்டார். அக்கினிநிறமும்நீலநிறமும் கந்தக நிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; அவர்கள் குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன. அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி, புகை, கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்லொருபங்கு கொல்லப்பட்டார்கள் (வெளி 9:17,18).

  அக்கினிப் பொறிகள் – SPARKS PUBLISHERS

  அக்கினியிலிருந்தும் எரியும் பொருட்களிலிருந்தும் வெளியேறும் தீப்பொறிகள் (ஏசா 1:31; 50:1). யோபுவின் சிநேகிதர்களில் ஒருவனான எலிபாஸ் அக்கினி பொறியைப்பற்றி இவ்வாறு கூறுகிறார். “அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்” (யோபு 5:7). இதன் எபிரெய வார்த்தை

  zee-kaw’ – 2131 என்பதாகும்.

  அக்கினியாஸ்திரம் – FLAMING ARROWS

  புதிய ஏற்பாட்டில் “அக்கினியாஸ்திரம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை  –

  belos 956 என்பதாகும்.

  அக்கினியைப்போன்று எரியும் அம்பு. கர்த்தருடைய பிள்ளைகள்மீது பொல்லாங்கன் என்று பவுல் குறிப்பிடுகிறார். ஏனெனில் 

   நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். 

  எபேசியர் 6:11

  ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 

  எபேசியர் 6:12

   பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். 

  எபேசியர் 6:16

  You have to wait 15 seconds.

  Download Timer

  Leave a Reply