எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம்

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம்

Pastor. Gabriel Thomasraj

  புத்தகம் குறித்த ஒரு பார்வை

  எரேமியா என்ற பெயருக்கு “கர்த்தர் வீசுகிறவர்” என்று அர்த்தம். பாருக்கு என்பவன் எரேமியாவுக்கு உதவியாக எழுத்தனாக இருந்து, எரேமியா சொல்லியற்றை எழுதி அதை தனது பாதுகாப்பில் வைத்திருந்து தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் செய்திகளையெல்லாம் தொகுத்தான்.(36:4,32,45:1)

  செப்பனியா, ஆபகூக், தானியேல், எசேக்கியேல் ஆகியோர் எரேமியாவின் சமகாலத்தில் வாழ்ந்த மற்ற தீர்க்கதரிசிகள். பெரிய தீர்க்கதரிசிகள் வரிசையில் எரேமியா இடம்பெற்றிருப்பது மிகப் பொருத்தமானது. எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் ஏசாயாவைக்காட்டிலும் பெரியது, எசேக்கியேலைக்காட்டிலும் பெரியது, 12 சிறிய தீர்க்கதரிசிகளின் புத்தகங்களின் சேர்க்கையைக்காட்டிலும் பெரியது.

  எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் வரலாறு, சுயசரிதை, தீர்க்கதரிசனம் ஆகியவற்றின் சேர்க்கை ஆகும்.

  அதிகாரங்கள் 53

  வசனங்கள் 1364

  ஆக்கியோன் எரேமியா

  மற்ற எந்த தீர்க்கதரிசிகளின் புத்தகத்தை பார்க்கிலும் இதிலே தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் சொந்த வாழ்க்கை, அவனது ஊழியங்கள், அவனது செய்தியை கேட்டவர்களின் எதிர்வினைகள், அவனுக்கு நேர்ந்த சோதனைகள், அவனது சொந்த உணர்வுகள் ஆகியவை அதிகமாக எடுத்துரைக்கப்படுகிறது.

  எருசலேமிற்கு வடக்கேயிருந்த ஆனதோத் என்னும் ஊரில் ஒரு ஆசாரியனுக்கு மகனாக பிறந்தவன் (1:1) பிறப்பதற்கு முன்பே தீர்க்கதரிசியாக தேர்வுசெய்யப்பட்டவன் (1:5) மிகஇளவயதாயிருக்கும்போதே தீர்க்தரிசனப்பணிக்காக அழைக்கப்பட்டவன் (1:6) தீர்க்கதரிசன வேலைக்கான பணிநியமன ஆணையை பெற்றவன் (1:9,10)

  கிமு 640-609 வரை ஆட்சிசெய்த ராஜாவான யோசியாவின் காலத்தின் நடுப்பகுதியில் அவனது தீர்க்கதரினப்பணி ஆரம்பமானது. யோசியாவின் மரணத்தின்போது அவனுக்காக புலம்பல் பாடினான் (2நாளா 35:25) அவனது ஊழியம் யோவாகாஸ் (609),யோயாக்கீம் (609-598), யோயாக்கீன் (598-597), சிதேக்கியா (597-586) ஆகிய ராஜாக்களின் ஆட்சியிலும் தொடர்ந்தது.  நெருக்கமான காலத்தை எதிர்நோக்கியிருந்ததால் திருமணம் செய்துகொள்ள தடைசெய்யப்பட்டிருந்தான் (16:1-4).

  எரேமியா “அழுகையின் தீர்க்கதரிசி” என்று அறியப்பட்டவன். அவனது தீர்க்கதரிசன செய்திகள் அவனது சொந்த இருதயத்தையே உடைத்தது (9:1) அவன் உணர்ச்சிவசப்படுகிற ஒருவனாக இருந்தான். தனது தேசத்தின் மேல் வைத்த நேசத்திற்கும், கர்த்தருக்கு தன்னை அர்ப்பணித்திருந்ததற்கும் இடையில் அல்லாடுகிறவனாயிருந்தான். அவன் ஆலயத்தில் அளித்த மனந்திருந்துதலின் செய்தி பெரும் வரவேற்பை பெறவில்லை (7:1-8:3,26:1-11).

  உண்மையும் உத்தமாக கர்த்தருடைய வார்த்தையை அவன் பிரசங்கித்த போதும் அவனது பிரசங்கத்தினால் வெளிப்படையாக மனந்திரும்பியவர்கள் இருவர் மாத்திரமே. ஒருவன் அவனது எழுத்தனாகிய பாருக்கு (32:12,36:1-4, 45:1-5) மற்றவன் எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் என்னும் ஒரு அரண்மனை பிரதானி (38:7-13, 39:15-18).

  அவனது சொந்த ஜனத்தால் வெறுக்கப்பட்டவன் (11:18-21,12:6,18:18). அவன் வெறுக்கப்பட்டு, அடிக்கப்பட்டு காவலில் போடுவிக்கப்பட்டான் (20:1-3). காட்டிக்கொடுக்கும் துரோகி என்று குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவன் (37:11-16). ஒரு கட்டத்தில் உளையான சேறு இருக்கும் கிணற்றிலே வீசப்பட்டு அழுக்கான சேற்றில் அமிழ்ந்திருந்தவன் (38:6). விட்டுவிலக முயற்சித்தாலும் அது முடியாமல் போனவன் (20:9).

  எருசலேமின் அழிவையும், பாபிலோனிய நாடுகடத்தலையும் கண்டவன். பாபிலோனிய தளபதியால் தேசத்தில் தரித்திருக்க அனுமதிக்கப்பட்டவன். மீந்திருந்தவர்கள் எகிப்திற்கு தப்பியோட நினைத்தபோது அதற்கு எதிராக தீர்க்கதரிசனம் சொன்னவன் (42:15-43:3). எகிப்திற்கு சென்ற மீந்திருந்தவர்களோடு செல்ல நிர்பந்திக்கப்பட்டு (43:6-7) அங்கே மரணமடைந்தான். மீந்திருந்தவர்கள் அவனை கல்லெறிந்து கொன்றார்கள் என்று பாரம்பரியமாக நம்பப்பட்டுவருகிறது. ஒரு தீர்க்கதரிசியாக கிமு627 முதல் 580 வரை 40 ஆண்டுகளுக்கு மேலாக ஊழியம் செய்தவன் (1:2-3)

  எரேமியாவின் “மனித” பக்கம்

  தேவனுடைய உண்மையுள்ள ஊழியக்காரன் ஒருவனின் இருதயமும், மனமும் எவ்வாறு இருக்கும் என்பதை எரேமியாவின் தீர்க்கதரிசனங்கள் சிறப்பற எடுத்துக் காட்டுகின்றன. இந்தப் புத்தகத்தில் காணப்படும் எரேமியா உணர்ச்சிவசப்பட்டவனாக சொல்லிய அவனது சொந்த வார்த்தைகள் வெறுமனே தேவனுடைய செய்தியை கொடுப்பத ற்காக கொண்டுவரப்பட்ட ஒருவனாக அவனைச் சித்தரிக்கவில்லை.

  எரேமியாவை ஒரு மனிதனாக அவனது ஜனத்தின் மீது மனதுருக்கமுள்ளவ னாகவும், துன்மார்க்கம் செய்கிறவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறவ னாகவும், தனது பாதுகாப்பை குறித்து அக்கறையுள்ளவனாகவும் காட்டுகிறது. கர்த்தர் யூதாவின் ஜனங்களுக்கு தமது சார்பில் அவர்கள் கேட்க மனதில்லாதி ருந்தபோதும் அவர்களிடம் பேச மறுக்கமுடியாத வைராக்கியம்கொண்ட இந்த மனிதனை தெரிந்துகொண்டார்.

  எரேமியாவின் விடாமுயற்சியும், உண்மையும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தேவனின் அழைப்பை பின்பற்றிப்போகிறவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தன்னை அந்த இடத்திலே வைத்து, தன்னைக்கொண்டு தமது செய்தியை கொடுத்த தேவன் அந்த செய்தியை நிரூபிப்பார் என்பதில் அவன்  ை நம்பிக்கையில் அவன் சிறிதும் ளரவில்லை. அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 1:19

  நமது “மனித” பக்கம்

  யோவான் 10:30-36

  நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.31. அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி. கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.32. இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன். அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.33. யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிற தில்லை; நீ மனுஷனாயிருக்க. உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? 35. தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க. வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, 36. பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?

  சங்கீதம் 82:1

  தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

  இந்த இரண்டு வேதபகுதிகளும் அவை சொல்லுகிற காரியங்களின் உடனடிப் பின்னணியை சொன்னபோதிலும் மனிதன் தெய்வீகத்தன்மை உடையவன் என்று அவை சொல்லவில்லை என்பது தெளிவு.

  சங் 82:7ல் இதன் தொடர்ச்சியாக ஒரு எச்சரிக்கை சொல்லப்படுகிறது. ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.

  காண்பிக்கப்பட்டுள்ள வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேவர்கள் என்ற வார்த்தையானது நீதிபதிகள், நியாயதிபதிகள். அல்லது ஆளுகிற அதிகாரமுள்ள பதவியில் உள்ளவர்களை குறிக்கும்.

  மனித நியாயாதிபதி ஒருவனை தேவன் என்று அழைப்பது 3 காரியங்களை கொண்டது.

  1. மற்ற மனிதர்கள் மீது அவனுக்கு அதிகாரம் உண்டு.

  2. மனிதர்கள் மீது அவனுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கு பயப்படவேண்டும்

  3. சகல ஜனங்களையும் நியாயந்தீர்க்கும் தேவனிடமிருந்தே அவன் அந்த அதிகாரத்தை பெற்றிருக்கிறான். (சங் 82:8)

  பழைய ஏற்பாட்டின் வேறு பகுதிகளிலும் மனிதர்களை தேவர்கள் என்று அழைப்பது காணப்படுகிறது. உதாரணமாக தேவன் மோசேயை பார்வோனிடத்திற்கு அனுப்பினபோது யாத் 7:1ல் பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன் என்றார்.

  அதாவது தேவனின் தூதுவனாக. தேவனின் வார்த்தைகளை தெரிவிக்கும்படி மோசே அனுப்பப்பட்டதால் பார்வோனுக்கு முன்பாக தேவனுடைய பிரதிநிதியாக அவன் நிற்கிறான் என்பதே அதன் அர்த்தம்.

  எலியா வல்லமையுள்ள தீர்க்கதரிசியாக இருந்தாலும் அவனும் மனிதனே. அவனாலே எந்த வல்லமையான காரியங்களையும் செய்யமுடியாது. அவன் தேவனை நோக்கி ஜெபிக்கவேண்டியவனாக இருந்தான்.

  யாக்கோபு 5:17 எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான். அப்பொழுது மூன்று வருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.

  நாம் மனிதர்களே என்பதை நாம் மறக்கிறபோது, நாம் யாரென்பதை தேவன் நினைவூட்டுகிறார்.

  சங் 103:14-16 நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று: அது இருந்த இடமும் இனி அதை அறியாது.

  இதுவே சாத்தான் ஏவாளுக்கு கொண்டுவந்த சோதனை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆதி 3:5 நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

  தேவனுடைய ஊழியக்காரர்கள் இதில் எச்சரிக்கையுள்ளவர்களாக இருந்தார்கள்

  மத் 3:11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார். அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

  அப் 10:25-26 “பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். பேதுரு அவனைத் தூக்கியெடுத்து எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்”

  அப் 14:8-18 லீஸ்திராவில் பவுலுக்கும், பர்னபாவுக்கும் சம்பவித்தை பார்க்கவும்

  இந்தப் புத்தகத்தின் சுருக்கம்

  (இந்தப் புத்தகத்தை பொருத்தமான ஒழுங்கிலோ அல்லது சம்பவங்களின் காலவரிசை ஒழுங்கிலோ வகைப்படுத்துவது கடினம்)

  I. யோசியாவின் ஆட்சிக் காலத்தில் ஊழியத்திற்கு அழைக்கப்படுதல் அதி 1

  II. சிதேக்கியாவின் ஆட்சிக்கு முன்பு யூதாவிற்கும். எருசலேமிற்கும் தீர்க்கதரிசனம் உரைத்தல் அதி 2-20

  • (1) யூதாவுக்கான இரண்டு கண்டனங்கள் அதி 2-3:5

  • 1) யொகோவா தேவனை மறந்தார்கள் 

  • 2) தாங்கள் உருவாக்கின தெய்வங்களை நாடினார்கள் 

  • (2) யோசியாவின் காலத்தில் பின்வாங்கிப் போனதற்காக குற்றஞ்சாட்டப்படுதல் அதி 3:6-6:30

  • (3) தேவனின் ஆலயத்தின் வாசலில் வைத்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை அதி 7-10

  • (4) வனாந்தரத்தில் தேவனொடு பண்ணிய உடன்படிக்கைக்கு இஸ்ரவேல் கீழ்ப்படியாமல் போதல் அதி 11-12

  • (5) உதாரணத்தின் மூலம் விளக்குதல் சணல்கச்சை அதி 13

  •  (6) பின்வாங்கிப்போன தேசங்கள் வறட்சியினாலும், பஞ்சத்தினாலும் தண்டிக்கப்படுதல் அதி 1415

  • (7) எரேமியா திருமணம் செய்துகொள்வது தடைசெய்யப்படுகிறது. அதி 16-17:18

  • (8) வாசலில் இருக்கும் ராஜாவுக்குக்கான செய்தி அதி 17:19-27

  • (9) குயவனின் வீட்டில் கொடுக்கப்பட்ட அடையாளம் அதி 18-19

  • (10) எரேமியாவின் உபத்திரவம் அதி 20

  III. சிதேக்கியாவின் ஆட்சியின்போது உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் அதி 21:29 (எருசலேம் அழிவுக்கு செல்வதை குறித்து)

  • (1) நேபுகாத்நேச்சாரை குறித்து சிதேக்கியாவுக்கான பதில் அதி 21-22

  • (2) மிக இருளான நாளில் ஒரு பிரகாச ஒளி அதி 23 (3) அத்திப்பழக்கூடை உவமை அதி 24

  • (4) தேவன் 70 ஆண்டுகள் சிறையிருப்பை உரைத்தல் அதி 25

  • (5) யோயாக்கீமின் ஆட்சிக் காலத்தில் ஆலயபிரகாரத்திலிருந்து செய்தி அதி 26

  • (6) நுகத்தடி உவமை அதி 27-28

  • (7) முதலில் சிறைப்பட்டு சென்றோருக்கான நம்பிக்கையின் செய்தி அதி 29

  IV. 12 கோத்திரத்தாரின் எதிர்காலம் குறித்தும். யூதாவை நெருங்கும் சிறையிருப்பை குறித்தும் தீர்க்கதரிசனங்கள் அதி 30-39

  • (1) மகா உபத்திரவத்தின் நாட்கள் அதி 30

  • (2) நான் செய்வேன்” என்று உரைக்கும் அதிகாரம் அதி31

  • (3) எரேமியா காவலில் வைக்கப்படுகிறான். நிலத்தை வாங்குகிறான் அதி 32

  • (4) தாவீதிற்கு வாக்களிக்கப்பட்டபடி இராஜ்யத்தின் வருகை அதி 33

  • (5) சிதேக்கியாவின் சிறையிருப்பு முன்னுரைக்கப்படுதல் அதி 34

  • (6) ரேகாபியர் தேவனுக்கு கீழ்ப்படிதல் அதி 35

  • (7) யோயாக்கீம் கர்த்தருடைய வார்த்தையை கத்தியினாலும், நெருப்பினாலும் அழித்தல் அதி 36 

  • (8) எரேமியா மீண்டும் சிறைவைக்கப்படுதல் அதி 37-38

  • (9) யூதா சிறைப்பட்டுப்போதலும், எரேமியா சிறையிலிருந்து விடுவிக்கப்படுதலும் அதி 39

  V. எருசலேமின் அழிவிற்கு பின்பு மீந்திருந்தவர்களுக்கான தீர்க்தரிசனம் அதி 40-42

  VI.எகிப்தில் எரேமியாவின் கடைசி நாட்களின் தீர்க்கதரிசனம் அதி 43-51

  • (1) எகிப்தில் மீந்திருக்கிருக்கிறவர்களுக்கு அதி 43-44

  • (2) பாருக்குக்கு அதி 45

  • (3) எகிப்திற்கு அதி 46

  • (4) பெலிஸ்தியாவிற்கு அதி 47

  • (5) மோவாபிற்கு அதி 48

  • (6) அம்மோன். ஏதோம். தமஸ்கு. கேதார். ஆத்சோர், ஏலாம் அதி 49

  • (7) பாபிலோன் அதி 50-51

  VII. எருசலேமின் அழிவைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தின்

  நிறைவேறுதல் அதி 52

  காலத்தின்படியான ஒழுங்கு

  எரேமியா தீர்க்கதரிசனம் சொன்ன காலத்தின் ராஜாக்கள் பின்வரும் ஒழுங்கில் ஒருவர் பின் ஒருவராக ஆட்சி செய்தார்கள். 

  1.யோசியா 

  2.யோவாகாஸ் 

  3.யோயாக்கீன் (அ) எக்கோனியா 

  4. யோயாக்கீம் 

  5. சிதேக்கியா

  யோசியாவின் காலத்தில்

  எரேமியா

  1:1-19

  4:1-6:30

  2:1-3:5

  3:6-4:4

  17:19-27

   47:1-7

  யோயாக்கீமின் காலத்தில்

  எரேமியா

  7:1-9:25

  26:1-24

  46:2-12

  10:1-16.

  14:1-15:21

  16:1-17:18

  18:1-23

  19:1-20:13.

  20:14-18

  23:9-40

  35:1-19

  25:1-38

  36:1-32

  45:1-5

  12:14-17

  எக்கோனியாவின் காலத்தில்

  எரேமியா

  13:1-27

  சிதேக்கியாவின் காலத்தில்

  எரேமியா

  23:1-8

  11:1-17

  11:18-12:13

   24:1-10

  29:1-32

  27:1-28:17

   49:34-39

  51:59-64

  21:1-14

  34:1-7

  37:1-10

  34:8-22

  37:11-21

  38:1-28

  39:15-18

  32:1-44

  33:1-26

  39:1-10

  எருசலேமின் அழிவுக்கு பின்பு

  எரேமியா

  39:11-14

  40:1-41:18

  42:1-43:7

  30:1-31:40

  எகிப்தில் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள்

  எரேமியா

  43:8-13

  44:1-30

  46:13-28

  எவையென்று அறியப்படாத தேசங்கள் குறித்த தீர்க்கதரிசனங்கள்

  எரேமியா

  46:1

  49:14

  48:1-47

  49:7-22

  49:23-27

  49:28-33

  50:1-51:64

  பிற்சேர்க்கை

  எரேமியா

  52:1-34

  You have to wait 15 seconds.

  Download Timer

  Leave a Reply