அது : நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.
சில சமயங்களில் தேவன் நம்மோடு பேசி, நமக்கு ஓர் செய்தியைத்
தருவது மட்டுமல்லாமல், அதை எழுதி வைத்து மற்றவர்களுக்கும்
தரவேண்டிய செய்தியாயும் இருக்கும். எனவே, தேவன் உங்களோடு பேசுவதை எழுதி வைத்துக்கொள்வது பாவம் என்று எண்ணாதீர்கள்.
யோவான் அவைகளை எழுதவேண்டியிருந்தது. இல்லாவிட்டால், மறந்துவிடுவானே! தானும் இவ்விதமே எழுதி வைக்கிறேன் ஆம், தேவன் நம்மிடம் குறிப்பாக ஓர் முக்கியமான செய்தியைக் கூறும்போது அதை எழுதி வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. இங்கு யோவானுக்கு வந்த செய்தியோ மற்றவர்களுக்குத் தரும்படியான செய்தியாகும். எனவேதான் அவைகளை ஓர் புஸ்தகத்தில் எழுதி அனுப்பும்படி சொல்லப்பட்டான்.
ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகள்.” இந்த சபைகள் ஆசியாவில் இருந்தன என வாசிக்கிறோம். ஆனால் முதலாம் நூற்றாண்டிலிருந்த ஆசியா இப்போது 20-ம் நூற்றாண்டில் இருக்கும் ஆசியா இல்லை! இன்று ஆசியாவானது ஒரு கண்டம்! ஆனால் அந்நாட்களில் ஆசியாவானது இப்போது நாம் “துருக்கி” என்றழைக்கும் ஓர் சிறிய பகுதியே ஆகும். மேப்பின் வரைபடத்தில், இந்த ஏழு சபைகளும் “மேற்கு துருக்கியில்” அமைந்துள்ளன. இவை மத்தியதரைக் கடலுக்கு மிகவும் சமீபமாகும். அந்தப் பகுதி இப்போது “ஆசியாமைனர்” என்று அழைக்கப்படுகின்றது. அதில், எபேசுவிலிருந்து சிமிர்னாவுக்கு உள்ள தூரம் 50 -மைல்கள். சிமிர்னாவிலிருந்து பெர்கமுக்கு, அடுத்த 50 – மைல்கள் தூரம்.அதேபோல் பெர்கமுவிலிருந்து தியத்தீராவுக்கு 50-மைல்கள். அதேபோல் சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா பட்டணங்களுக்கும் சரியாக 50 மைல்கள் இடைவெளிதான் உள்ளது. ஆக 75 – மைல்கள் விட்ட அளவுள்ள சிறிய பரப்பாகத்தான் இப்பகுதிகள் உள்ளன.
ஓர் முக்கியாமனதைக் கவனியுங்கள் : அங்கு, ஆசியா மைனரிலுள்ள “சபை” (THE CHURCH) என்று ஒட்டு மொத்தமாகச் சொல்லப்படவே இல்லை. அப்படிச் சொல்லப்பட்டிருந்தால் அது ஓர் “ஸ்தாபனமாக” (DENOMINATICN) மாறியிருக்கும். ஆனால் புதிய ஏற்பாட்டிலோ “ஸ்தாபனம்” என்ற பேச்சுக்கே இடமில்லை. மனிதன் உற்பத்தி செய்து கைகூடியதுதான் இந்த “ஸ்தாபனம்.” உதாரணமாய் பெங்களூரில் ஓர் சபையும், மைசூரில் ஓர் சபையும், கோலார் தங்கவயலில் ஓர் சபையும் இருப்பினும் அவைகள் ஒவ்வொன்றும் தனித்தனி சபை மாத்திரமே! ஸ்தாபனத்தைப்போல அவைகளையெல்லாம் ஒன்றுகூட்டி வைத்திருக்கும் இணைப்பு கிடையாது. அப்படியிருந்திருந்தால், “யோவாளே,நிருபத்தை அந்த 7- சபைகளுக்கும் தலைவனான பிஷப்பிற்கு அனுப்பு. அவன் அதை மற்றவர்களுக்கு விநியோகிப்பான்” என இயேசு கூறியிருப்பார். இந்த “பிஷப்” என்ற சமாச்சாரமெல்லாம் இங்கு கிடையாது. ஒவ்வொரு சபையும் தனித்தனி சபை மாத்திரமே.! அவைகள் ஒவ்வொன்றும் இயேசுகிறிஸ்துவின் நேரடித் தலைமைக்குள் இருக்கின்றது. இன்று ஜனங்கள், “இந்தியத் திருச்சபை” எனக் கூறுவனதக் கேட்கிறோம். இது எப்படி சாத்தியமாகும்? இவ்விதமாய் ஸ்தாபனரீதியாய் கூறும் வார்த்தை புதிய ஏற்பாட்டில் இல்லை. என்பதும் “இந்தியாவில் உள்ள சபைகள்” என்றுதான் கூறிட முடியும். அதேபோல், தேவனுடைய பார்வையில் “தென்னிந்திய திருச்சபை” கிடையவே கிடையாது. இதை மனிதன் உற்பத்தி செய்திருக்கலாம். இவைகளையெல்லாம் தேவன் சட்டை செய்வதேயில்லை. ஸ்தாபன அமைப்புகள் (Denominationalism) மூலமாகவே, இன்று சாத்தான் போலியான, உலகம் தழுவிய பாபிலோன் சபையைக் கட்டிக் கொண்டி ருக்கிறான். பல நூற்றாண்டு களுக்கு முன்பாகவே, இவ்விதம் சபைகளை ஸ்தாபனமாக ஒன்று திரட்டி, பாபிலோனைக் கட்டும் தன் பணியைத் துவக்கிவிட்டான்!! நாம் … எச்சரிக்கையாய் இருப்போமாக!
வசனம் 12, 13:
அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்க திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்து விளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.
“என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினபோது, (இயேசுகிறிஸ்துவை அல்ல!) ஏழு பொன் குத்துவிளக்குகளைக் கண்டேன்” எனயோவான் கூறுகிறார். வசனம் 20-ல், இந்த ஏழு தனித்தனி குத்துவிளக்குகளும் ஏழு தனித்தனி சபைகள் என நமக்காக விவரிக்கப்பட்டுள்ளது. ஆகிலும், “இச்சபைகளுக்கு (குத்துவிளக்குகள்) மத்தியிலே, மனுஷகுமாரன் இருந்தார்” என்றும் வாசிக்கிறோம். இங்கு தொனிக்கும் செய்தி யாது? “என்னை நான் உலகத்திற்கு நேரடியாக அல்ல, சபை மூலமாகவே வெளிப்படுத்த விரும்புகிறேன்” என இயேசு யோவான் வாயிலாக அறிவிக்கிறார். இந்த சபை (குத்துவிளக்கு), மனுஷனால் அல்ல தேவனாலேயே கட்டப்படுகிறது. குத்துவிளக்கின் (சபையின்) நோக்கம், அலங்கரிக்கப்பட்ட ஓர் கட்டிடம் அல்ல. குத்துவிளக்கின் பிரதான நோக்கம் “வெளிச்சத்தைத்” தருவதுதான்! உண்மையான தேவனுடைய சபை, இவ்விதமே காரிருளான இவ்வுலகில், நம் பாதைக்குத் தீபமாகும் ஜீவ வார்த்தையை வெளிப்படுத்தி, ஒளிதரும் குத்துவிளக்காய் செயல்படும். இதற்கு மாறாக, சபை என்ற பெயரில் ஆஸ்பத்திரியும்: ஸ்கூலும்; சமூகசேவையும்; செய்பவர்கள் தேவனின் நோக்கத்திலிருந்து விலகி, பாபிலோனையே கட்டுவார்கள். இது உறுதி! இயேசுவைக் காணவேண்டும்? என ஜனங்கள் தேடுவார்களென்றால், என்னைச் “சபையின் நடுவில்” காணுவார்கள்! என்பதே இயேசுவின் தீராத வாஞ்சையாகும். ஆம், ஓர் ஸ்தலத்தில் கிறிஸ்துவின் சரீரமாகக் குழுமியிருக்கும் விசுவாசிகளின் நடுவில் ஜனங்கள் இயேசுவைக் காணவேண்டும். வாக்குவாதமும், சண்டையும் கொஞ்சங்கூட இல்லாத
ஓர் சபை! இவ்விதம் ஒருவரையொருவர் உண்மையாய் நேசிக்கும் சகோதர சகோதரிகள் மூலமாகவே இயேசுகிறிஸ்து தன்னை வெளிப்படுத்துகிறார்!! இவ்விதம் ஜனங்கள் வந்து, இயேசுவைக் காணும் ஓர் ஸ்தல சபையில் நாம் இருப்போமென்றால் மெய்யாகவே நாம் பாக்கியவான்கள்!
வசனம் 13 to 16:
மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது; தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது.
இனி, இந்த 13-ம் வசனத்திலிருந்து 16-ம் வசனம் வரை இயேசுகிறிஸ்துவைப் பற்றிய வர்ணனையைப் பார்க்கிறோம். இயேசு எவ்விதம் சரீர அமைப்பில் காட்சியளிக்கிறார் என்ற வர்ணனையல்ல. இன்று அப்படித்தானே ஓவியர்கள், நீண்ட தாடியோடு இயேசுவை வர்ணம் தீட்டிவிட்டார்கள். நான் ஜெபிக்கும்பொழுது, இவ்வித இயேசுவின் ஓவியப் படங்கள் என் மனக்கண்முன் நிறுத்துவதே கிடையாது! இயேசுவின் உருவம் கொண்ட “விக்கிரகத்தை” நான் வைத்துக்கொள்வது மில்லை அல்லது அதுபோன்ற விக்கிரகம் என் சிந்தையிலும் வைத்துக் கொள்வதுமில்லை!! இயேசு எவ்வித தோற்றம் உடையவராய் இருப்பார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நானோ அவரிடம் “விசுவாசத்தில்” ஜெபிக்கிறேன். ‘அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்” (1 பேதுரு 1:8). ஆ! இதுவே நமது மேன்மை!! எனவே, இங்கு காணப்படும் வர்ணனையானது, இயேசுகிறிஸ்துவை “அடையாளங்கள்” மூலம் விவரிக்கும் அர்த்தமுள்ள வார்த்தைகளேயாகும்.
1. அவருடைய ஆடை : “பாதம் வரை நீண்டிருந்த நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரன்” (வச.13).
இயேசுகிறிஸ்து நம்மைப் போன்ற மாம்சத்தில் வந்தார் என்பதைக் குறிப்பிடவே ‘மனுஷகுமாரன்’ என அவர் அழைக்கப் படுகிறார். “பாதம் வரை நீளமான அங்கியானது” பழைய ஏற்பாட்டில் மாபிரதான ஆசாரியனின் உடுப்பு ஆகும். வசனம் 6-ல் நாம் அனைவருமே ஆசாரியர்கள் என்று கண்டோம். ஆனால் நமக்கோ ஒரே ஒரு பிரதான ஆசாரியராக இயேசுகிறிஸ்து இருக்கிறார். என்பதை இந்த ஆடையின் மூலமாக “அடையாளமாய்” கூறப் பட்டுள்ளது. நமக்காக வேண்டுதல் செய்யும் நம் பிரதான ஆசாரியராகிய இயேசுகிறிஸ்து!
2அவரது மார்பு கச்சை : (வசனம் 13).
ஏசாயா 11:5-ம் வசனத்தின்படி இந்த மார்புக் கச்சையானது அவரது நீதியும், உண்மையுமே என் வாசிக்கிறோம். இந்த நீதி, இயேசு இப்பூமியில் வாழ்ந்த காலத்தில் ஜீவித்த பூரண தேவ நீதியான வாழ்க்கையை சுட்டிக்காட்டுகிறது. மேலும், அவர், தான் உரைத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற உண்மையுள்ளவருமாயிருக்கிறார்.
3. அவரது சிரசும் மயிரும் :
‘அவரது சிரசும் மயிரும் வெண் பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாய் இருந்தது” (வசனம் – 14). சர்வ வல்லவர் வெண்பஞ்சைப் போன்ற சிரசும் மயிரையும் உடையவர் என தானியேல் 7:9-ல் வாசிக்கிறோம். இந்த வெண்பஞ்சு போன்ற மயிரானது 2 – காரியங்களை அடையாள மாக சித்தரிக்கிறது. i) நீண்ட ஆயுசு ii) சர்வ ஞானம். அவரது ஆயுசானது நித்தியமானது. நரைமுடி (வெள்ளை முடி) ஞானத்தை குறிக்கும் என நாம் அறிந்திருக்கிறோம். ஆம், உறைந்த மழைபோன்ற வெண்மையான அவரது ஞானம் சம்பூரணமானது. அதாவது, அவர் தன் நாட்களில் நித்தியமானவரும், ஞானத்தில் சம்பூர்ணமான வருமாவார்.
4. அவருடைய கண்கள்:
“அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது” (வசனம் – 14). நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவரின் கண்களுக்கு முன்பாக, சகலமும் நிர்வாணமாயும் வெளியரங் கமாயுமிருக்கிறது என எபிரெயர் 4:13-ல் வாசிக்கிறோம். அவரின் கண்கள் அக்கினிஜுவாலையைப் போன்றது என்பதின் பொருள் யாதெனில், நம் எல்லா மாய்மாலங்களையும் ஊடுருவக் காண்பவர்! எல்லா வேஷங்களையும், மார்க்க வெள்ளையடிப்புகளையும் காண்பவர்! எல்லா பக்தி வசனிப்புகளையும் வகையறுத்துப் பார்ப்பவர்! ஆம், ஜனங்கள் உடுத்தியிருக்கும் மார்க்க போர்வைகளை எல்லாம் பொசுக்கி எரிந்துவிட்டு அவர்கள் இருதயங்களை ஊடுருவக் கண்டு அவர்களின் வெறுமையையும் பொக்குத் தன்மையையும் வெளியரங்கப்படுத்தும் அக்கினிஜுவாலையான கண்களையுடையவர்!
5. அவருடைய பாதங்கள் :
“அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது” (வசனம்-15). பழைய ஏற்பாட்டின் ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள பலிபீடமானது வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது என வாசிக்கிறோம். இந்த பலிபீடத்தில்தான் மிருகங்கள் பலியிடப்பட்டன. இது, மனுஷர் களுடைய பாவங்களுக்காக இயேசு மரித்த கல்வாரி சிலுவையை நமக்கு எடுத்தியம்புகின்றது. மேலும், வேதாகமத்தில் வெண்கலமானது
“தேவனுடைய நியாயத்தீர்ப்பைக்” குறிப் பிடுவதைக் காண்கிறோம். இது வழங்கும் செய்தி யாதெனில், இயேசுவின்மீது, குறிப்பாக அவரின் பாதங்களின்மீது நியாயத்தீர்ப்பு விழுந்தது என்பதாகும். ஆதியாகமம் 3:15-ல் “ஸ்திரீயின் வித்தானது சர்ப்பத்தின் வித்தை – அதன் தலையை நசுக்குவார்” என வாசிக்கிறோம். ஆம், தேவனுடைய நியாயத்தீர்ப்பு இயேசுவின் பாதத்தில் விழுந்ததை, கல்வாரி சிலுவையில் அவருடைய பாதங்கள் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்ச்சி பறைசாற்றுகின்றது. அது மாத்திரமல்ல, அந்தப் பாதமே வெண்கலமாகியது! அதாவது, இந்த நியாயத்தீர்ப்பினால் சாத்தானுடைய தலையையும் இயேசு நசுக்கிவிட்டார்!!
6. அவருடைய சத்தம் :
“அவருடைய சத்தம் பெரு ள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது” (வசனம்-15). யோவான் 7:37, 38-ம் வசனத்தின்படி பெருவெள்ளமான திரள் நீர், பரிசுத்த ஆவியையே குறிக்கின்றது. இயேசுவின் வார்த்தைகள் பரிசுத்தாவியின் வல்லமை நிறைந்ததாய், பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. அதே சமயம், சாந்தமும் மென்மையும் நிறைந்ததாயும் இருக்கிறது.
7. அவரது வலதுகரம் :
“தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை, ஏந்திக்கொண்டிருந்தார்” (வசனம்-16). இந்த 7-நட்சத்திரங்களும் 20-ம் வசனத்தின்படி, 7-சபைகளின் தூதர்கள் அல்லது தூதுவர்கள் ஆவர். கிரேக்க பாஷையில் தூதர்களுக்கும் (ANGELS) தூதுவர் களுக்கும் (MES SENGER) ஒரே வார்த்தைதான் உள்ளது. இதை வேறுபடுத்தும் இரண்டு வார்த்தைகள் கிடையாது. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பதத்திற்கு ‘தூதுவர்கள்” (MESSENGERS) என்றே பொருள்படுகிறது. புதிய ஏற்பாட்டின் சபை, மூப்பர்களால் நடத்தப்படவேண்டும் என்பதே தேவனின் தீர்மானம் (அப். 14:23; தீத்து 1:5), எனவேதான் சபையில் ‘மூப்பர்கள்’ நியமிக்கப் படவேண்டும் என பன்மையாக கூறப்பட்டுள்ளது. தேவன் பொதுவாக, இம்மூப்பர்களில் ஒருவர் தன் வார்த்தையை கொண்டுவரும்படி ஒவ்வொரு சபைக்கும் குறைந்தது ஒரு தூதுவரைத் தருகின்றார். இங்கு நாம் காணும் ஓர் விசேஷம் யாதெனில், இந்தத் தூதுவர்களை இயேசுகிறிஸ்து ஏந்திக்கொண்டி ருக்கிறார் என்பதே! எனவேதான், தேவனால் நியமிக்கப்படும் தூதுவர்களுக்கு கனம் செய்ய வேண்டும் என தேவவசனம் நமக்குப் போதிக்கிறது. இயேசுகிறிஸ்துவின் வலதுகரத்தால் அவர்கள் ஏந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதற்காகவே நாம் அவர்களை மேன்மையாக எண்ணி கனம்பண்ணுகிறோம்! மற்றபடி அவர்களும் நம்மைப்போல சாதாரண மனுஷர்களே!! ஆனால் இந்த தூதுவர்களையோ விசேஷித்த விதமாக அவர் தனது வலதுகரத்தினால் ஏந்திக் கொண்டிருக்கிறார். ஏனெனில், சாத்தான் தன் தாக்குதலுக்கு
“அவர் வாயிலிருந்து இருபுறமும் சுருக்குள்ள பட்டயம் புறப்பட்டது” (வசனம்-16). எபிரெயர் 4:12-ன்படி . தேவனுடைய வார்த்தையே இருபுறமும் கருக்குள்ள பட்டயமாம் இருக்கிறது. எனவே இங்கு “அடையாளமாய்” கூறப்பட்ட வார்த்தையின்படி இயேசுவின் வாயிலிருந்து புறப்பட்டது தேவனுடைய வார்த்தையே!!15-ம் வசனத்தில் அவருடைய சத்தமானது ‘பெருவெள்ள இரைச்சலைப்போல’ என்பது பரிசுத்த ஆவியைக் குறிக்கின்றது என பார்த்தோம். இப்போது இந்த இரு வசனங்களையும் இணைத்துப் பார்த்தால், இயேசுகிறிஸ்துவின் வாயிலிருந்து தேவனுடைய வார்த்தை பரிசுத்தாவியின் வல்லமையோடு வருகிறது என்பதைப் புலப்படுத்துகிறது.
9. அவரின் முகம் :
“அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது” (வசனம்-16). இயேசுகிறிஸ்துவின் மூன்று சீஷர்களாகிய பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர், மறுரூபமலையில் இவ்விதமே இயேசுகிறிஸ்துவை கண்டார்கள் (மத்தேயு 17:2). இதன் பொருள் யாதெனில், “ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் தேவன் வாசம்பண்ணுகிறார்” என்பதுதான் (1 தீமோ.6:16). நடுப்பகலில் தன் முழுப்பிரகாசத்துடனும் பிரகாசிக்கும் சூரியனை நேரடியாகக் கண்கொண்டு காண்பது கூடாததாய் இருக்கிறதே. இந்த சூரியப் பிரகாசத்தைவிட பல லட்சக்கணக்கான மடங்கு அதிகப் பிரகாசம் கொண்ட ஒளியில், தேவன் வாசம்செய்கிறார். இந்த உண்மையைப் பிரதிபலிப்பதற்குத்தான், இயேசுகிறிஸ்துவின் முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது என அடையாளமாக (Symbolize) வைத்துக் கூறப்பட்டுள்ளது. ஆம், தூய்மையின் பூரணத்தை இங்குதான் நாம் காண்கிறோம். சூரியனானது ஓர் அக்கினிப் பந்தைப்போல் உள்ளது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இங்கு ஏதேனும் நுண்கிருமி போன்ற பாக்டீரியாக்களைக் காணமுடியுமோ?! அவ்வளவுதான், அவைகள் நொடிப்பொழுதாகும் முன்பே பொசுங்கி ஒழிந்துவிடும்! இங்கே விளங்கும் சத்தியம் இதுதான், அவரிடம் “பாவம்” ஒரு துளிகூட கிடையவே கிடையாது. இதைத்தான் ஆபகூக் தீர்க்கதரிசி தன் புத்தகத்தில், “தேவன் பாவத்தைப் பாராத சுத்தக் கண்ணர்” என பிரமித்து எழுதினார். யோவான் கண்ட இயேசு இப்படித்தான் இருந்தார். இவ்வித பிரகாசத்தோடு இருந்தவரைக் கண்ட
யோவானுக்கு என்ன நடந்திருக்கும் என யூகிக்க முடிகின்றது. அதை அடுத்த வசனம் இவ்வாறு கூறுகிறது:
வசனம் – 17, 18:
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கிப் பயப்படாதே, நான் முந்தினவரும், பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
“நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்.” என்ன! கடைசி இராப்போஜனத்தின்போது இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்தவன்தானே இந்த யோவான்! மேலும் 65-ஆண்டுகள் தேவனோடு இசைந்து நடந்த இந்த யோவான் இப்போது செத்தவனைப்போல அவர் பாதத்தில் விழுந்து அவரைத் தொழுது கொள்ளுகிறானே!! ஆம், தங்கள் வாழ்வில் ஆண்டவரோடு நெருங்கி நெருங்கி ஜீவிப்போரின் அடையாளம் இதுதான். எவ்வளவு அதிகம் அவரை நாம் நெருங்குகிறோமோ அவ்வளவு அதிகமாய் நாம் இயேசுகிறிஸ்துவை அறிந்துகொள்வோம். அதாவது, அதிக அதிகமாய் நம்மை அவர் பாதத்தில் வீழ்த்தி அவரைத் தொழுதுகொள்வோம். யோவான் அப்போஸ்தலன், இயேசுகிறிஸ்துவோடு ஓர் தூய்மையற்ற நெருக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. இயேசுகிறிஸ்துவைக் கண்ட வுடன் அவரின் தோளின்மீது கைப்போட்டுக் கொண்டு, “ஹே! நாம்தான் பூமியில் ஒன்றாய் நடந்தவர்களாச்சே!!” எனக் கூறிவிடவில்லை. இன்று அநேகர் அப்படித்தான் நினைக்கிறார்கள். தேவனை நெருங்கிச் சேருவதென்பது, ஏதோ சாதாரண மனிதனோடு கொள்ளும் நெருக்கத்தைப்போல் எண்ணிக்கொள்கிறார்கள். இல்லை! இங்கே தேவனோடு நெருங்கி நடந்த யோவானோ, அவர் பாதத்தில் செத்த மனிதனைப்போல விழுந்தான்!! தேவனோடும் மனிதனோடும் ஓர் பக்திவரையறையற்ற நெருக்கத்தை வைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள், ஒட்டுமொத்தமாய் தேவனையே அறியவில்லை எனலாம். யோவான் தேவனை அறிந்திருந்தான், அவர் மகிமையைக் கண்டான் – அவர் பாதத்தில் செத்தவனைப்போல விழுந்தான்! ஏசாயா, தேவ மகிமையைக் கண்டான், “ஐயோ! அதமானேன், அசுத்த உதடுகளுள்ள மனுஷன் நான்!!” என விழுந்தான்.
இதை வாசிக்கும் அன்புள்ள சகோதரனே, சகோதரியே, நமக்குத் தேவையானதெல்லாம் இயேசுகிறிஸ்துவைப்பற்றிய இவ்வித தொடர்ச்சி யான வெளிப்பாடேயாகும். யோவான் ஏன் செத்தவனைப்போல அவர் காலில் விழுந்தான் தெரியுமா? அங்கே யோவான் தன்னை கிறிஸ்துவுக்கு முன் நிறுத்தி, தான் எவ்வளவோ கிறிஸ்துவைப்போல் அல்லாமல்
இருப்பதை ஒப்பிட்டு கண்டறிந்தான். இன்று ஏன் அநேக விசுவாசிகள் தங்களைச் சுற்றியுள்ளவர்களைக் குறைகூறி குற்றம்சாட்டுகிறார்கள் தெரியுமா? இதோ, அதற்கான விடை இதுதான், “இவர்கள் இயேசு கிறிஸ்துவின் முகத்திற்கு முன்பாக நின்று ஜீவிக்கவில்லை.” இவர்கள் இயேசுகிறிஸ்துவின் முகத்திற்கு முன்பாக நின்று ஜீவித்திருப்பார் களென்றால், மற்றவர்களைக் கண்டு குற்றம் கூறுவதற்கெல்லாம் நேரம் இருக்கவே இருக்காது. மாறாக, இவர்கள். தங்களைத் தாங்களே நியாயம் தீர்த்து தங்கள் ஆண்டவருக்கு முன்பாகச் செத்த மனிதனைப்போல விழுவார்கள்! நாம் இவ்விதம் விழும்போது மாத்திரமே, யோவான் அனுபவித்ததுபோல, இயேசுவின் தொடுதலை நம் ஜீவியத்தில் அனுபவித்திட முடியும்!! அவர் தனது வலதுகரத்தால் நம்மைத் தொட்டு, நம் வாழ்வில் வல்லமைபெற்றிடச் செய்வார்!!
அவர் யோவானைப் பார்த்து, “பயப்படாதே!” என்றார். இயேசு இப்பூமியில் தன் சீஷர்களிடம் அடிக்கடி பேசிய 2 வாக்கியங்கள் உண்டு. அது யாதெனில், “பயப்படாதே – என்னைப் பின்பற்று’ என்பதுதான். இதையே நானும் அடிக்கடி அவர்மூலம் கேட்டிட விரும்புகிறேன். பயப்படாதே, “நான் முந்தினவரும் பிந்தினவருமானவன்.” அவர் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்! அவர் மரித்தார் ஆனால் இப்போது அவர் மரித்து அல்ல சதா காலங்களிலும் உயிருள்ளவராய் இருக்கிறார். எனவேதான் நாம் சிறிதுகூட பயப்பட தேவையேயில்லை!!
மேலும், “நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவு கோல்களை உடையவராயிருக்கிறேன்” என்றார். எபிரெயர் 2:14, 15 வசனத்தின்படி, ஒரு காலத்தில் சாத்தானே மரணத்திற்குரிய திறவுகோலை உடையவனாயிருந்தான். ஆனால் இப்போதோ இயேசு மரித்து உயிர்த்தெழுந்து அத்திறவுகோல்களை சாத்தானிடமிருந்து கைப்பற்றிவிட்டார். இன்று, மரணத்திற்குரிய திறவுகோலானது இயேசுவின் கையில் உள்ளது! ஆம், இன்று இயேசுவின் உண்மையான சீஷன் ஒருவன் மரிப்பானென்றால், இயேசுவால் முன்கூட்டியே தீர்மானம் செய்யப்பட்டுதான் அம்மரணம் சம்பவிக்கிறது. அங்கே இயேசு வாசலைத் திறந்த பிறகுதான் ஓர் உண்மை சீஷனுக்கு மரணம் சம்பவிக்கும்! “ஆண்டவரே! நான் உம்முடைய சீஷன், மரணத்திற்குரிய திறவுகோலை நீரே வைத்திருக்கிறீர். எனவே, நான் மரணத்தைக் குறித்து இனி ஒருக்காலும் பயந்திருக்கப் போவதில்லை!” என நம்மில் இனிதே நினைவுறுத்திக் கொள்வோமாக. இயேசுகிறிஸ்துவிடமிருந்து யோவானைத் தைரியப்படுத்தும்படி வந்த செய்தியும் இதுதான், “யோவானே, நீ உலக மனிதர்கள் யாவராலும் வெறுக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுகிறாய். உன்னை பத்மு தீவிற்கும் நாடுகடத்திவிட்டார்கள். ஆகிலும் பயப்படாதே! நானே திறவுகோல்களை வைத்திருக்கிறேன்.
நீ நிறைவேற்றி முடிக்க வேண்டிய ஊழியங்கள் இன்னமும் உள்ளன. நான் வாசலைத் திறப்பதற்கு முன்பாக, ஒரு மனிதனாலும் உன்னைக் கொன்றுவிட முடியாது. நான் மரணத்திற்குரிய திறவுகோலை மாத்திரமல்ல, ஜனங்கள் மரித்தவுடன் பிரவேசிக்கும் பரதீசியின் திறவுகோலையும் நான்தான் வைத்திருக்கிறேன்.” ஆம், இங்கு, மரித்து அம்மரணத்தை ஜெயித்து, ஜெய கெம்பீரமாய் உயிர்த்தெழுந்த இயேசுவையே நாம் காண்கிறோம்!!
வசனம் 19, 20:
“நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது; என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியங்களையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபையின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.”
பார்த்தீர்களா, இம்மகிமையான வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை எழுதும்படி ஆண்டவர் யோவானுக்குக் கட்டளையிட்டார்! அதை எழுதுவதற்குரிய அதிகாரத்தையும் வழங்கினார்!!நாம் நம்முடைய ஊழியத்தை ஜெயமாய் முடித்திட வேண்டுமென்றால், நாம் திரும்பத் திரும்ப ஆண்டவரின் வல்லமையையும் அவர் வழங்கும் அதிகாரத்தையும் அவரிடமிருந்து பெறவேண்டியது மிகவும் அவசியமாகும்.
இந்த 19-ம் வசனத்தில் ஆண்டவர், இப்புத்தகத்தை மூன்று பிரிவுகளாக பிரித்து யோவானுக்கு வழங்கினார் என காண்கிறோம்:
i) ஏற்கனவே யோவான் கண்டவைகள் :
ஜெய செம்பீரமாய் உயிர்த்தெழுந்து “நீ பயப்படாதே” எனக் கூறிய ஆண்டவராகிய இயேசுவின் தரிசனத்தையே யோவான் கண்டார். தன் ஆண்டவரின் மகிமையைக் கண்டுவிட்ட ஓர் சீஷனின் இருதயத்தில் ‘பயம்’
என்பதற்கு ஒரு துளிகூட இடம் கிடையாது!
ii) யோவான் காலத்தில் நடந்தவைகள் ;
ஆசியா மைனரில் இருந்த ஏழு சபைகளின் நிலைமையே (அதிகாரம் 2,3) யோவான் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். இந்த ஏழு சபைகளுக்கும் ஆண்டவர் அனுப்பிய செய்தியானது, கடைசி காலங்கள் வரை இருக்கப்போகும் எல்லா சபைகளுக்கும் அதன் தூதுவர்களுக்கும் அளிக்கப்பட்ட எச்சரிப்பாகவும்; சவால் கொடுத்து அழைப்பதாகவும் இருக்கிறது.
iii) யோவான் காலத்திற்குப்பின் நடைபெறும் எதிர்கால சம்பவங்கள் :
வெளி.4-ம் அதிகாரத்திலிருந்து கடைசி 22-ம் அதிகாரம் வரை, எதிர்கால சம்பவங்களாகும். வெளி. 4:1-ம் வசனத்தில் “இவைகளுக்குப் பின்பு ….” என சுட்டிக்காட்டப்பட்டிருப்பதைக்
கவனியுங்கள். எனவே இந்த அதிகாரத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தின் மூன்றாம் பகுதி துவங்குகிறது.
ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும் ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் யோவானுக்கு ஆண்டவர் விளக்கினார்.ஆம், வெளிப்படுத்தினவிசேஷ புத்தகத்தின் இரகசியங்களை நமக்கும் தேவனே விளக்கிக் காட்டவேண்டும்!
“கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது.””சாந்த குணமுள்ளவர்களுக்குத் (தாழ்மையுள்ளவர்களுக்கு) தமது வழியைப் போதிக்கிறார்” (சங்கீதம் 25:14.9) என தேவ வார்த்தை எக்காள முழக்கமிட்டுக் கூறுகிறது. நாம் தேவனிடமிருந்து தொடர்ந்து வெளிப்பாடு பெறுவதற்கு கர்த்தருக்குப் பயப்படுகிற பயமும்; தாழ்மையுமே நம்மைத் தகுதிப்படுத்துகிறது.
எனவே இப்புத்தகத்தை வாசிக்கும் நீங்கள், தேவன் விரும்பும்
வெளிப்படுத்தின விசேஷம் 1:11-20 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் 1:11-20 விளக்கம்
சகரியா பூனன்
வசனம் – 11 :

இலக்காக இவர்களையே விசேஷமாகக் குறிவைத்திருக்கிறான். எனவேதான், அவர்களைத் தூதுவராக அனுப்பிய தலையாகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்து இவர்கள் விசேஷப் பாதுகாப்பைப் பெறுகிறார்கள்!!
8. அவரின் வாய் :

இவ்வித உச்சிதமான ஆவியோடு வாசிப்பீர்களாக!