1. ஜெபந்தின் உள்ளடக்கம்
ஆவிக்குரிய ஜீவியத்தில் ஜெபம் மிக முக்கிய மானது. சில பரிசுத்தவான்கள் ஜெபத்தை, மனுஷன் ஜீவிப்பதற்கு இன்றியமையாத சுவாசத்திற்கு (Breathing) ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். ஆகை யால்தான் இடைவிடாது ஜெபிக்கவேண்டும் என்று (தெச. 5:17-ல் பார்க்கிறோம். அன்றியும், பரிசுத்த பவுல் தீமோத்தேயுவுக்கு அநேக புத்திமதிகளை எழுதி னாலும் ”பிரதானமாய்ச்” சொன்ன புத்திமதி ஜெபத் தைக் குறித்ததாகும். (1 தீமோ. 2:1) ஆகவே மிக முக்கியமான இவ்விஷயத்தைக் கருத்தாய் ஆராய வேண்டும். (குறிப்பிட்டிருக்கும் வசனங்களை எடுத்துப் பார்ப்பது அதிகப் பிரயோஜனமாயிருக்கும்.)
சாதாரணமாக ‘ஜெபம்’ என்னும் ஒரு வார்த்தை தனிமையாய் நிற்காது. மூன்று துணைகளுடன் நிற்கிறது. உதாரணமாக “சோறு சாப்பிட்டேன் என்று சொல்லும்போது சோற்றை மட்டும் சாப்பிட்டேன் என்று குறிப்பிடாமல், சோற்றுடன் தொட்டுக் கொண்டதையும், நடித்துக் கொண்டதையும், வாக்ரிக்கொண்டகையம் சேய்க் சோங்ராப்டென் னாலும் ‘பிரதானமாய்ச்” சொன்ன புத்திமதி ஜெபத் தைக் குறித்ததாகும். (1 தீமோ. 2:1) ஆகவே மிக முக்கியமான இவ்விஷயத்தைக் கருத்தாய் ஆராய வேண்டும். (குறிப்பிட்டிருக்கும் வசனங்களை எடுத்துப் பார்ப்பது அதிகப் பிரயோஜனமாயிருக்கும்.)
சாதாரணமாக ‘ஜெபம்’ என்னும் ஒரு வார்த்தை தனிமையாய் நிற்காது. மூன்று துணைகளுடன் நிற்கிறது. உதாரணமாக “சோறு சாப்பிட்டேன்” என்று சொல்லும்போது சோற்றை மட்டும் சாப்பிட்டேன் என்று குறிப்பிடாமல், சோற்றுடன் தொட்டுக் கொண்டதையும், கடித்துக் கொண்டதையும். வார்ரிக்கொஸ்டகையர் சேர்க்ய சொதுரா னாலும் ‘பிரதானமாய்ச்” சொன்ன புத்திமதி ஜெபத் தைக் குறித்ததாகும். (1 தீமோ. 2:1) ஆகவே மிக முக்கியமான இவ்விஷயத்தைக் கருத்தாய் ஆராய வேண்டும். (குறிப்பிட்டிருக்கும் வசனங்களை எடுத்துப் பார்ப்பது அதிகப் பிரயோஜனமாயிருக்கும்.)
மூன்று துணைகள் சேர்ந்து வருவதை நாம், 1தீமோ.
2:1-ல் காண்கிறோம். நாம் இந்நான்குகாரியங்களைப் பற்றிய சரியான அறிவுடன் கர்த்தருடைய ஜெபத்தைப் (மத். 6:9-13) படிப்போமாகில், இவை நான்கையும் இதற்குள் அடக்கி, “மாதிரியாக” நம்முடைய கர்த்தர் படிப்பித்திருக்கிறார் என அறியலாம். ஆதிச்சபையின் கிறிஸ்தவர்களும், இக்காலத்தில் சில கிறிஸ்தவர்களும் கர்த்தருடைய ஜெபத்தைத் திருப்பிச் திருப்பிச் சொல்லா விட்டாலும், இந்நான்கு காரியங்களும் அவர்களுடைய ஜெபங்களில் காண ணப்படுகின்றன. (இவ்விஷயத்தின் விளக்கத்தைப் பின்பு தெளிவாய்க் கவனிப்போம்.)
(பழைய ஏற்பாட்டுச் சபையின் எழுத்துக்குரிய ஆராதனையில் ஜெபம், தூபவர்க்கத்திற்கு ஒப்பனை யாயிருக்கிறது (சங். 141:2) இந்தத் தூபவர்க்கம் நான்கு பொருள்களால் செய்யப்படவேண்டும். (யாத். 30:34-38) வெள்ளைப்போளம், தங்கிலியம், அல்பான் பிசின், சாம்பிராணி என்னும் இந்த நான்கும் I தீமோ. 2:1-ல் சொல்லப்பட்டிருக்கிற விண்ணப்பம், ஜெபம், வேண்டுதல், ஸ்தோத்திரம் என்னும் நான்கிற் கும் ஒப்பனையாய் இருக்கிறது. இவைகளைக் கர்த் தரும், கர்த்தருடைய ஜெபத்தில் குறிப்பிட்டிருக்கிருள். அவைகளை நாம் ஆராய்வோம்.
1. வெள்ளைப்போளம் விண்ணப்பம் (Supplication or Petition)
இது ஒருவித மரத்தைக் காயப்படுத்துவதால் (குத்துவதால்) அதிலிருந்து வரும் பிசினாக இருக்கிறது. இந்தப் பிசின் அதிகக் கடினமானதல்ல. குசித்தால்
மிகக் கசப்பாக இருக்கும். அன்னாள், தன் புருஷனால் அதிகமாய் நேசிக்கப்பட்டிருந்தும், விண்ணப்பமோ, ஜெபமோ அற்றவளாக இருந்தாள். அன்றியும் பிள்ளை. இல்லாதபடியினால் அவள் அழவோ ஜெபிக்கவோ இல்லை. ”அவள் (I சாமு. 1:2) ஆனால் அவள் சக்களத்தி துக்கப்படும்படியாக அவனை மிகவும் விசனப்படுத்துவாள் …… அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.” (1 சாமு. 1:6, 7) இவ்விதமாய் அன்னாள் காயப்பட்டபின்பு, விண்ணப்பம் பண்ணினதாக (1 சாமு. 1:10, 11, 16, 17, 27) முதலிய வசனங்களில் காண்கிறோம். அன்றி யும், 2 நாளா.34:27-ல் பியாசியா ராஜா, கசப்பாகிய துக்கத்தால் வஸ்திரங்களைக் கிழித்து, அழுது “விண்ணப்பம்” செய்தான். அவ்விதமே, தாவீதும் ஆபத்துநாளிலே “விண்ணப்பம்” செய்ததாகச் சங். 102:1,2-லும் 16:1-லும் காண்கிறோம். அன்றியும், எஸ்தர் தனக்கும், தன் ஜனத்துக்கும் சம்பவித்திருந்த மரணக்கசப்பை நீக்க, “அவன் பாதத்தில் விழுந்து, அழுது…….விண்ணப்பம் பண்ணினாள் (எஸ்தர் 8:3) இவ்விதம், வெள்ளைப்போளத்தின் கசப்பை இவர்களது விண்ணப்பங்களில் கவனிக்கிறோம்.
இவ்வெள்ளைப்போளம் கடினமாயிராததுபோல விண்ணப்பத்தில் (Petition) பலவந்தம் செலுத்த இய லாது. ஒருவன் வேலைக்காக, அல்லது பிச்சைக்காகத் தன்னைத் தாழ்த்தி, கெஞ்சி, வருந்திக் கேட்கிறான். அவன் அதிகாரத்தோடும், உரிமையோடும், பலவந்த மாய்க் கேட்கக்கூடாதவனாயிருக்கிறான். இதுவே விண்ணப்பம். அன்னாள் மனங்கசந்து கேட்டா லும், பலவந்தமாய்த் “தாரும்” என்று கேட்கக் கூடாதவளாக, “பிள்ளையைக் கொடுத்தால்” என்று விண்ணப்பம் பண்ணுகிறாள். ஏவியும் தேவன் கட்டளை யிடுவார் என்று உறுதியாய்ச் சொல்லாது, “விண்ணப் பத்தின்படி உனக்குக் கட்டளையிடுவாராக!” என்று சொன்னார். அத்துடன், கர்த்தருடைய ஜெபத்திலும் முதற்பகுதியாகிய விண்ணப்பத்தில் (மத். 6:9-10) “பரிசுத்தப்படுவதாக” “வருவதாக” “செய்யப் படுவதாக”, என்னும் பலவந்தமற்ற வார்த்தைகளைக் காண்கிறோம்.
இவ்விதம் நம் ஜீவியத்தில் பலகுறைகள், கஷ்டங் கள், பட்டயக் குத்துக்கள் போன்ற வார்த்தைகள், நிந்தை, வியாதி, மரணம் முதலிய கசப்புக்கள் வரும் போது சோர்ந்து போகாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்விதக் கசப்பு, வேதனை முதலியவை களைத் தேவன் வர இடங்கொடுப்பதன் நோக்கமென்ன வெனில் அன்னாளைப்போல் நம் விண்ணப்பத்தின் குறை வை ரிக்கி அதில் பெருகும் பொருட்டாகவே. இவ்வித விண்ணப்பங்களில், இயேசு கற்பித்ததுபோல், “உம் சித்தம் செய்யப்படுவதாக” (மத். 6:10) என்று தேவ சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுத்து விண்ணப்பம் செய்யவேண்டும். அவ்விதம் சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து விண்ணப்பம் செய்தால் மனத்தின் துக்கம் நீங்கிச் சந்தோஷம் உண்டாகும். (I சாமு. 1:18)
எசேக்கியா ராஜா வியாதிப்பட்டபோது, கர்த்த ருடைய சித்தத்திற்குத் தம்மை ஒப்புவிக்காது தகாத விதமாய் விண்ணப்பம் பண்ணி (யாக். 4:3) ஊக்கமாய் ஜெபித்தான். [1நாளா. 32:24, 25.ஆகவே அவன் பின் மாற்றக்காரனாய் மரித்ததுமன்றி, தன் சந்ததிக்குச் சாபத்தையும் வைத்துப்போனான். இது நம் ஒருவருக் கும் சம்பவியாதபடி விண்ணப்பங்கள் தேவ சித்தத் திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவையாக இருப்பதாக. Iயோவா. 5:14
2. குங்கிலியம்-ஜெபம் (Prayer)
குங்கிலியம் என்னும் பொருளை, சமுத்திரத்தில் பாறைகளில் காணப்படும் பாசி போன்றதைத் தின்று ஜீவிக்கும் ஒரு விதப் பிராணியிலிருந்து எடுக்கிறார்கள். இப்பிராணிக்கு மிகக்கடினமான தோடு (Shell) உண்டு. வாசனை உள்ள இத்தோட்டைப் பொடியாக்கி எடுக்கும். ‘பொடிதான் குங்கிலியம். ஜெபம் என்பது, எப்பொழு தும் ஊக்கம் (கட்டி) உள்ளதாக இருக்கிறது. ஆகை யால்தான், யாக்கோபு 5:17-ல் எலியா கருத்தாய் ஜெபம் பண்ணினார் என்று வாசிக்கிறோம். ஜெபம் என்பது பலவந்தமாய்ப் போராடுவதாம். ஆகவே அப்போஸ்தலனாகிய பவுல் “நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில்நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடு கூடப் போராட வேண்டுமென்று… உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்’ என்று, ரோமர் 15:32-ல் எழுதுகிறார். ஆகவே ஜெபம் என்பது போராடுவதாகும்.
குங்கிலியம் பொடியாக இருந்தாலும் அதில் கடினத்தன்மை இருக்கிறதுபோல நொறுங்குண்ட இருதயத்திலிருந்து (சங். 34:18) உறுதியான-உறுக்க மான-தீர்மானமுள்ள போராட்டமாகிய ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டும். இவ்வித தீர்மானமுள்ள ஜெபத்திற்குப் பதில் உடன் கிடைக்கிறது. யாக்கோபு, இவ்விதமாகவே “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய ம்மைப் போகவிடமாட்டேன்” என்று தேவனோடு மிகத் தைரியத்தோடு போராடினார். (ஆதி. 32:26.) இங்கே அவருடைய தைரியத்தையும். உரிமை பாராட்டி ஜெபிக்கிறதையும் காண்கிறோம். ஆகவே அவர் உடனேயே ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டதை 29-ம் வசனத் பார்க்கிறோம். கர்த்தருடைய ஜெபத்தின் இரண்டாம் பகுதியாகிய “ஜெபத்தை” மத். 6:11-ல் பார்க்கிறோம். அதில் “எங்களுக்குத்தாகும்” என்னும் அதிகாரமும், உரிமையுமுள்ள வார்த்தை குங்கிலியத்தின் உறுதியைக் காட்டுகிறதல்லவா ? ஆகவே நாம் பொதுவாக ஜெபம் என்று கூறுவதி லிருக்கும் போராட்டப் பகுதியான ஜெபத்தை, பிள்ளை கள் தகப்பனிடத்தில் கேட்பது போன்ற உரிமையுட னும், அதிகாரத்துடனும் செய்தல்வேண்டும்.
பொதுவான ஜபத்தின் முதற்பகுதியாகிய விண்ணப்பத்தில் நாம், ‘உம்முடைய சித்தம் செய்யப் படுவதாக என்று தேவ சித்தம் செய்ய ஒப்புக்கொடுத்து விண்ணப்பம் பண்ணும்போது, அவ்விஷயத்தில் தேவ சித்தம் வெளிப்படுகிறது. அவ்விதம் வெளிப்பட்ட பின்பு நாம், பயத்திற்கும். அவிசுவாசத்திற்கும் இடம் கொடாது, போராடி ஜெபித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டும். பலர் இவ்விதமாகப் போராடி ஜெபிக்காத காரணத்தால் அநேக ஆசீர்வாதங் களை இழந்துபோகிறார்கள். இவ்விதப் போராட்ட ஜெபத்திற்கு எப்பொழுதும் பல தடைகள் வந்து கொண்டிருக்கும். ஆகையால்தான் ஒருவர் (when it is hard to pray, pray hard) ஜெபிக்கக் கஷ்ட மாயிருக்கும்போது, கஷ்டத்துடன் ஜெபிக்க வேண்டு மெனக் கூறினார். இவ்வனுபவத்தைத் தானியேலின் அனுபவத்தில் (தானி. 6:10) காணலாம். இராஜாவின் கட்டளை எதிராயிருந்தபோதிலும் அவன் இராஜாவின் கட்டளைக்குப் பயப்படாது, பலகணிகளைத் திறந்து வைத்து ஜெபித்தபடியால், சிங்கங்கள் அ வ னை ச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளுடைய வாய்களைக் கட்டிப் போட்டார். (தானி. 6:22) தானியேலின் தேவன், பட்ச பாதமில்லாதவராய் நம்முடன் இன்னும் இருக்கிறார். ஆகையால்தான், எபிரேயர் 4:15-வ்-நாம் இரக்கம் பெற…… தைரியமாய்க் கிருபாசனத்தண்டை சேரக் கடவோம் என்று வாசிக்கிறோம். இவ்வித ஊக்கமான போராட்ட ஜெபத்தை நீங்களும் உங்களுடைய ஜீவியத் தில் தைரியத்துடன் இன்றே ஆரம்பிப்பீர்களாகில், எலியாவின் ஜெபத்தைக் (earnest prayer) கேட்டு தேவன் மழையைப் பொழிந்தருளினது போல (யாக். 5:17, 18) உங்களுக்கும் உங்கள் குடும் பத்துக் கும் தேவையான ஆவிக்குரிய, சரீர ஆசீர்வாதங்களா கிய மழையை நிச்சயமாகவே சீக்கிரம் அருள்வார்.
3. அல்பான்பிசின்:- வேண்டுதல் (Intercession)
இது ஒருவித மரத்திலிருந்து கிடைக்கும் பிசின். வெள்ளைப்போளம். குங்கிலியம், அல்பான் பிசின் இவை மூன்றும் கந்தவர்க்கங்களாகும். அல்பான் பிசின், ஈக்கள் முதலிய பிராணிகள் அணுகாத வண்ணம் தன்னைக் காத்துக்கொள்ளும் ஒருவித வாசனை யுடையது. தூபவர்க்கத்தில் இது சேர்ந்திருப்பதால் ஈக்கள் முதலியவை தூபவர்க்கத்தண்டை சேராமல், இதன் வாசனை அவைகளினின்று காக்கிறது. இவ்அல்பான் பிசின், 1 தீமோத். 2:1-ல் சொல்லப்பட்டிருக் கும் வேண்டுதலுக்கு ஒப்பனையாயிருக்கிறது. வேண்டு தல் (Intercession) என்பது ஒருவருக்காக, ஒருவர் இன்னொருவரிடம் வேண்டிக் கொள்வதாகும். யோபு புத்தியீனமாய்ப் பேசியிருந்த தன் சினேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் வேண்டு தலைக் கேட்டு, ‘உங்கள் புத்தியீனத்துக்குத் தக்கதாக நடத்தாதிருப்பேன்” என்றார். (யோபு, 42:8)
தூபவர்க்கத்திலிருக்கும் அல்பான் பிசின் வியாதிக் கிருமிகளைப் பரப்பும் ஈக்களிலிருந்து தூபவர்க்கத்தை எப்படிக் காத்துக் கொள்கிறதோ (இரட்சித்துக் கொள்கிறதோ) அவ்விதமே மனுஷனுடைய ஜீவியத்தில் புத்தியீனமாய் வரும் பாவங்களைத் தவிர்க்கும்படியாக, பொதுவான ஜெபத்தின் மூன்றாவது பகுதியான “வேண்டுதல்” பாவத்தோடு போராடுவதாகும். ஆகையால்தான் கர்த்தருடைய ஜெபத்திலும் மூன்றாம் பகுதியாகிய வேண்டுதலில் பாவ மன்னிப்பைக் கேட்ட பின்பு “தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள் ளும்” என்பதைக் காண்கிறோம். (மத். 6:12, 13-ல் முதல்பகுதி) இயேசு யோவா. 17:15-ல் “நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்” என்றர். அன்றியும், பரி. பவுல், “துப்புரவானவர்களும், இடறலற்றவர்களுமாயிருக்க வேண்டுதல் செய்கிறேன்” சொல்கிறார். என்று பிலி, 1:11-ல்
ஆகையால் நம் ஜெப ஜீவியத்தில், எப்பொழுதும் நமது ஜீவியத்தை ஆராய்ந்து ஜீவியத்தில் வரும் குறைகள் பெலவீனங்களினின்று விடுதலை பெறும் படியாக, வேண்டுதல் செய்யும் அனுபவம் இருக்க வேண்டும். சிலர் தங்கள் ஜெபங்களில் மற்றவர்களுக் காகவும், லௌக்க காரியங்களுக்காகவும் ஜெபிப்பதே யன்றி, வேண்டுதல் அற்றவர்களாயிருக்கிறார்கள். ஆகையால்தான் ஆவியானவர் பாவத்துக்கு விரோத மாய்ப் போராடுவதில்……எதிர்த்து நிற்கவில்லையே என்று, எபிரே. 12:4-ல், துக்கப்படுகிறார். இவ்விதமாய் ஜெபத்தில் பாவத்திற்கு விரோதமாய் எதிர்த்துப் போராடாவிட்டால் ஜெபம் பிரயோஜனமற்றதாயும், பூரணமற்றதாயுமிருக்கும்.
அன்றியும், அல்பான்பிசின் தன்னைப் பாதுகாக் கிறது மாத்திரமல்ல, தன்னோடு சேர்ந்தவைகளையும் பாதுகாக்கிறது. அதுபோல நாம், நமது பரிசுத்தத்துக் காக ஜெபிப்பது மாத்திரமல்ல, மற்றவர்களுடைய ஜீவியத்தில் வருகிற அறியாமை, பலவீனங்களுக்கு காகவும் வேண்டுதல் செய்கிறவர்களாக இருக்க வேண்டும். இயேசு, தாம் பாவமற்றவராய் இருந்த போதிலும், அப்பொழுது உலகத்திலிருந்த சீஷர்களுக் காகவும், இப்பொழுது நம் ஒவ்வொருவருக்காகவும், பிதாவின் வலது பாரிசத்திலிருந்து “வேண்டுதல்” செய்கிறார். (எபி. 7:25; ரோ. 8:34) ஆகையால்தான், நம் ஜீவியத்தில் பல பலவினங்களிருந்தும், நாம் அழிந்து போகாமல் இம்மட்டும் நிலை நிற்கிறோம். ஆகவே நாமும் மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்ய வேண்டுமென்று, ஆவியானவர் எதிர்பார்க்கிற படியால்தான் பொதுவான ஜெபத்தில் வேண்டுதல் என் னும் ஒரு பகுதியை வைத்திருக்கிறார். மற்றவர்களுடைய வும், பரிசுத்தவான்களுடையவும் குறைகளைக் குறித்துப் பேசாது, அவர்களுக்காக வேண்டுதல் செய்யவேண்டு மென்பது ஆவியானவரால் சபைக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையாகும். (எபேசி. 6:18) உம்முடைய வேண்டு தலின் ஜீவியம் எப்படி? இவ்விதமான வேண்டுதலி னால் மற்றவர்களுக்கு நன்மை உண்டாக்குவதுடன் (யோபு. 42:8) யோபைப்போல் நீங்கள் இரட்டிப்பான ஆவிக்குரிய, சரீர ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவும் ஏதுவாகும். (யோபு. 42:10) ஆகவே, வேண்டுதலின் ஜீவியம் பெருக கர்த்தர் உதவி செய்வாராக.
4. சாம்பிராணி
ஸ்தோத்திரம் (Thanks Giving or Praising) நம்மில் அநேகருக்குத் தெரிந்திருக்கிறபடியே சாம்பிராணி அநேகமாய் அரேபியாவிலும், இந்தியா வின் சில பகுதிகளிலும், பளிங்குக் கற்களின் மத்தியில் வளருகிற ஒருவித (Arbor thuris) மரத்தின் பட்டை யைக் குத்துவதால் கிடைக்கும் வாசனை பொருந்திய பிசின். இதை நெருப்பில் போட்டவுடன் தன் வாசளையை வெளியாக்கி, புகையாக மேலே எழும்பு கிறது. இந்தச்சாம்பிராணி 1 தீமோ.2:1-ல் சொல்லப் பட்டிருக்கும் ஸ்தோத்திரத்திற்கு ஒப்பாயிருக்கிறது. அக்கினியில் சாம்பிராணியைப்போட்டவுடன், எப்படிப் புகை மேலே எழும்புகிறதோ, அவ்விதமே ஒருவன் தன் ஜீவியத்தில் வந்த பலவீனங்களுக்காக வேதனையுடன் வேண்டிக் கொண்ட பின்பு அவன் அக்கினியாகிய (எபி. 12:29) தேவ சந்நிதானத்தில் இருந்தால், தேவன் தன்னை நித்திய அழிவிலிருந்து விடுவித்துக் த்தர என்னும் எண்ணத்தால் அவன் இருதயம் நன்றியால் நிறைந்து ஸ்தோத்திரத்தை (புகையைப் போல மேலே) தேவனுக்குச் செலுத்துகிறான். ஆகையால்தான் கர்த்தருடைய ஜெபத்தில் இயேசு வேண்டுதலுக்குப் பின்பு நான்காவது பகுதியாக “இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென் றைக்கும் உம்முடையவைகளே ஆமென்” என்று தேவனுக்கு ஸ்தோத்திரத்தை மேலே செலுத்துவதைக் (மத். 6:13 பின்பகுதியில்) காண்கிறோம். ஆ! கர்த்த ருடைய வசனம் எவ்வளவு பூரணமானது? உண்மை யான கிறிஸ்தவர்களுடைய ஜெபங்களில் மிகுதியான ஸ்தோத்திரம் இருப்பதைக் கவனிக்கலாம். ஆகவே, ஜெபத்தில் ஸ்தோத்திரம் மிக முக்கியமானது.
இவ்விதம் ஸ்தோத்திரம் செலுத்துவது, நாம் ஜெபித்த ஜெபத்திற்குத்தேவன் பதில் தந்தார் என்று விசுவாசிப்பதற்கு அறிகுறியாகும். தானியேல் தன் ஜெபத்தைத் தேவன் கேட்டுப் பதில் தந்தார் என்று விசுவாசித்தபடியால் ஜெபத்தை ஸ்தோத்திரத்துடன் முடித்தார். (தானி. 6:10) தேவன் அவன் விசுவாசத் தைக் கனம்பண்ணி ஸ்தோத்திரத்தை ஏற்றுக்கொண் டார். ஆகையால்தான், “அவன் தன் தேவன்பேரில் விசுவாசமாயிருந்தபடியால் அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை” என்று தானி. 6:23-ல் வாசிக் கிறோம். இவ்விதம் விசுவாசம் இருந்தால்தான் ஸ்தோத்திரம் செலுத்தமுடியும்.
அவ்விதமாகவே, பரி. பவுல் தெசலோனிக் கேயருக்காக ஜெபத்தில் ஸ்தோத்திரம் செய்வதை, I தெச. 1:4-லும், பின்பு அவர்களுக்காக ஸ்தோத்திரம் மாத்திரம் செலுத்துவதை II தெச. 1:3-லும் காண் கிறோம். ஆனால் பல தேவனுடைய பிள்ளைகள் தங்கள் ஜெபத்தில் ஸ்தோத்திரம் செலுத்தப் பழகாதபடியால் ஜெபத்தில் எவ்வித சந்தோஷமுமின்றி இருக்கிறார்கள். ஜெபிக்குமுன்பு அவர்கள் இருதயம் எவ்விதம் பாரமாயிருந்ததோ, அவ்விதமே ஜெபித்த பிறகும் பாரமாயிருக்கிறது. இவ்வித ஜெபத்தால் யாதொரு பிரயோஜனமுமில்லை. அன்னாள் விண்ணப்பம் பண்ணு முன்பு, ‘கிலேசமுள்ளவளாகவும்” ‘சாப்பிடாதவளாக வும்” அழுகிறவளாகவும்” காணப்பட்டாள். ஆனால் விண்ணப்பம் பண்ணிள பின்பு போஜனம் செய்தாள். “அப்புறம் அவள் துக்க முகமாயிருக்க வில்லை” என்று I சாமு. 1:18-ல் காண்கிறோம். இவ்வித மாய் அவள் ஜெபித்தபின் சந்தோஷமாயிருந்ததைப் பார்த்த தேவன். அவளுக்கு சாமுவேலை அருளினார். (சங். 37:4) அவ்விதமே ஸ்தோத்திரத்தால் எரிகோவின் அலங்கங்கள் இடிந்து விழுந்தன என்றும், இஸ்ரவேலர் பட்டணத்தைப் பிடித்தார்கள் என்றும் அறிவீர்கள். நீங்களும் அவ்விதமே துதிப்பீர்களாயின் தேவன் உங்கள் தடைகளை நீக்கி வாசல்களைத் திறந்து ஆசீர் வதிப்பார்.
அன்றியும், யோசபாத் பயங்கரமானதும், ஏராள மானதுமான ஜனங்களுக்கு (II நாளா. 20:2, உலகம், மாமிசம், பிசாசு) முகங்காட்டினபோது முதலாவது கர்த்தரைத் தேடி “எங்களுடைய கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது.” (II நாளா.20:3-12) என்று சொல்லி ஜெபித்தான். அப்பொழுது ஆவியான வரால் தைரியப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் தைரியப்படுத்தப்பட்டபோது, யுத்தத்தை ஆரம்பியாது கர்த்தரை மகா சத்தத்தோடே கெம்பிரமாய்த் துதித் தார்கள். (II நாளா. 20:19.) இவ்விதம் “அவர்கள் பாடித் துதிசெய்யத்தொடங்கினபோது. அவர்கள் (சத்துருக்கள்) வெட்டுண்டு விழுந்தார்கள்.” ஆ! எவ்வளவு ஆச்சரியம் ! துதியின் வல்லமைதான் எவ் வளவு!!
மறுபடியும் அவர்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்……. கர்த்தர் அவர்களை அவர்கள் சத்துருக்கள் பேரில் களிகூரச் செய்தார். (II நாளா. 20:26, 27) சகோதரனே ! சகோதரியே ! நீயும் இவ் விதம் கர்த்தரைத் துதிப்பாயானால் பட்சபாதம் இல்லாத தேவன் உனக்கும் முற்றிலும், யாவற்றிலும் ஜெயமளித்து களிகூரும் ஜீவியத்தை அருள்வார். அல்லேலூயா! ஆகவே, காத்தரைத் துதிக்க மறவாதீர்!
நாம் இம்மட்டும் ஆராய்ந்த ஜெபத்தில் கர்த்த ருடைய ஜெபம் எவ்வளவு ஒழுங்காக வகுக்கப்பட் டிருக்கிறது என்பதைக் காண்கிறோம். அன்றியும் இயேசு, கர்த்தருடைய ஜெபத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டுமென்று சொல்லாமல் “ஜெபம் செய்ய வேண்டிய விதமாவது” என்று ஓர் “மாதிரி” ஜெபத் தைச் சொன்னார்.
அதைத் தொடர்ந்துதான் ஆவியானவர் I தீமோ. 2:1-ம் வசனத்தை எழுதினார். பாடசாலையில் ஆசிரியர் கணக்குச்செய்யும் “விதத்தைப்” படிப்பிக்கும் பொருட்டு ஓர் மாதிரிக்” கணக்கைப் போதித்தால், அதே கணக்கைத் திருப்பித் திருப்பிச் செய்யவேண்டு மென்பது அல்ல. அவ்வொழுங்கின்படி வேறு எண் களை உபயோகித்துச் செய்யவேண்டும். அவ்விதமே கர்த்தருடைய ஜெபத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட்டு I தீமோ. 2,1-ல் சொன்ன ஒழுங்கை, இயேசு மாதிரியாக ஜெபித்துக் காண்பித்தபடியால் இவ்வித ஒழுங்கைக் கையாண்டு ஜெப ஜீவியத்தில் வளருவீர்களாக. அதை விடுத்து, மாதச்சம்பளம், வீட்டில் போதிய அரிசி, மற்றும் பொருட்கள் எல்லாம் வைத்துக்கொண்டும், திருப்தியாகச் சாப்பிட்ட பின்பும், “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்று ஜெபிப்பதும், மற்றவர்கள் உனக்குச் செய்த சில தீமைகளை மன்னியாது உள்ளத்தில் கசப்பை வைத்துக்கொண்டு அல்லது நீதிமன்றத்தில் அவர் களுக்கு விரோதமாய் மனுச் செய்துகொண்டு “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று ஜெபிப்பது மாகிய பயங்கர பொய் ஜெபம் செய்து தேவனைப் பரிகாசம் செய்யாதிருங்கள். எல்லா ஜெபமும் தேவனுக்குப் பிரியமானதல்ல. தேவ ஒழுங்குக்கு விரோதமான ஜெபத்தை தேவன் “பாவமாகவும்”. (சங். 109:7) “அருவருப்பாகவும்” (நீதி, 28:9) கண்ணு வார் என்பதை மறவாதீர். ஆகவே ஜெபத்தைக் குறித் தும் ஜெபம் பண்ணுவதைக் குறித்தும் ஜாக்கிரதையா யிருங்கள். (1 பேது. 4:7) மேற் கூறியதுடன் ஜெபத்தைக்குறித்து இன்னமும் ஓர் அறிவு மிகத் தேவை. மோசே மலையில் தேவனுடன் சம்பாஷித்தது, நாம் கர்த்தருக்குக் காத்திருந்து அறைவீட்டில் ஜெபிக்க வேண்டிய ஜெபத்தைக் காட்டுகிறது.
(மத். 6:6,7) சாதாரணமாக, “நாம் தேவனை நோக்கி” ஜெபிக்கிறோம். ஆனால் மோசே தேவனிடம் மலைக்குப் போனபோது, “மோசே தேவனை நோக்கி” என்னும் வார்த்தைகளை ஒரு சில இடங்களில் மாத்திரமும் “கர்த்தர் மோசேயை நோக்கி” என்னும் வார்த்தைகள் அடிக்கடி வருவதையும் காண்கிறோம். இதிலிருந்து மோசே கர்த்தரிடம் சில காரியங்களைச் சொன்ன பின்பு, தேவன் பேசிக்கொண்டிருந்ததை அவன் கேட்டுக் கொண்டிருந்தான் என்றும் அறிகிறோம்.ம் தேவன் பேசுகிற தேவன்! ஆகவே காத்திருந்து ஜெபித்து அவர் சத்தத்தைக் கேட்கும் ஜீவியம் மிக முக்கியம்.
இவ்விதம் காத்திருந்து ஜெபிக்கும்போது சிலரைப் போல “அதிக வசனிப்புச் செய்யாது” (மத். 6:7) கர்த்தர் சொல்லுவதைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். இவ்விதம் பழகுவோமானால் நம் ஜீவியத் தில் உண்டாகும் பல பிரச்சினைகளில் அவரது ஆலோசனை நம்மைக் காக்கும்.
அன்றியும், மேற்கூறியவாறு ஜெபமாகிய தூப வர்க்கத்துக்குள் இருக்கும் நான்கு காரியங்களையும் ஆராய்வதற்கு உதவியாயிருந்த வசனங்களை (யாத். 30:34-38) மீண்டும் ஆராய்வோமாயின், ஜெபத்தில் கவனிக்கவேண்டிய வேறு சில முக்கிய காரியங்களையும் கற்றுக்கொள்ளலாம்
34-ம் வசனத்தில் “சமநிறை” இருக்கவேண்டும்
என்று சாண்கிறோம். பலராகச் சேர்ந்து நடத்தும் ஜெபக்கூட்டங்களின் பிரயோஜனம் மிகுதியாக வேண்டுமாயின் ஜெபத்தில் ஐக்கியப்படுகிறவர்கள் அனுபவங்களை உடையவர்களாக
இருக்க வேண்டும். இவ்வித சமமான அனுபவங்கள் இல்லா விட்டால் ஒருமனமாக ஜெபிக்க முடியாது. ஒருவன் ஆவிக்குரிய ஆழமான அனுபவத்திற்காக ஜெபிக்கிற போது, இன்னொருவன் தன் உத்தியோகத்திற்காக ஜெபிக்கிறான். இன்னொருவன் தனது மனைவி மக்களுக் காகவும், வேறொருவன் தன் சத்துருக்களுக்குத் தேவன் பாடம் படிப்பிக்க வேண்டுமென்றும் ஜெபிக்கிறான். இவ்வித வித்தியாசமான “நிறை”யினால் ஜெபத்தின் ஒருமனம் நஷ்டமாகிறது. அவ்விதமின்றி “சமநிறை” யாக ஜெபிக்கவேண்டிய ஒரு காரியத்துக்காக ஒருமன துடன் ஜெபித்தால் “அது கூறியதுபோல் நமக்கு நிறைவேறும். அவர்களுக்கு
உண்டாகும்” என்று இயேசு மத்தேயு 18:19-ல்
மேலும், 36-ம் வசனத்தில் இந்தத் தூபவர்க்கம் பொடியாக இடிக்கப்பட்ட பின்பு தேவ சந்நிதானத்தில் கொண்டு வரவேண்டுமென்று பார்க்கிறோம். ஆகவே, தேவ சந்நிதானத்தில் இன்பத்தை அனுபவிக்கவேண்டு மாயின், பொடிக்கப்பட்ட அல்லது நொறுங்குண்ட இருதயம் தேவை. இதைக் குறிப்பிடும் பொருட்டாகத் தான் தாவீது “நொறுங்குண்ட இருதயமுள்ளவர் களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” (சங். 34:18) என்கிறார். அன்றியும், தேவன் ஏசாயா மூலமாக, “பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற் கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்தி லும் வாசம்பண்ணுகிறேன்” என்கிறார். (ஏசா. 57:15) ஆ! நொறுங்குண்ட ருதயத்தைத் தேவன் எவ்வளவாய் நேசிக்கிறார் ! “உன்னதத்திலும், பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிறவர்,” நொறுங்குண்ட இருதயத்தில் வாசம்பண்ண வருகிறாரே ! (ஏசா. 57:15) ஆகவே, நண்பனே! நீர் மற்ற மனுஷர்களாலேயோ, அல்லது சூழ்நிலைகளினாலேயோ பொடிக்கப்பட்டால் அல்லது நொறுக்கப்பட்டால், கலங்காது கர்த்தரிடம் சேருவீராக. அப்போது அவர் உம்மில் வாசம்பண்ணு வார். ஆ ! என்ன பாக்கியம் ! இதற்காகவே உம்மைப் பொடிக்க இடங்கொடுத்தார். ஆகையால் சந்தோஷ மாயிருப்பீராக.
இன்னமும், யாத்திராகமம் 30:37-ம் வசனத்தில் இந்தத் தூபவர்க்கத்தை.. உங்களுக்காகச் செய்து கொள்ளலாகாது” என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதன் ஆவிக்குரிய பொருளை நம் நேசர் மத். 6:5, 16-ல் வெளிப்படுத்தினதை வாசிப்பது எவ்வளவு ஆனந்தம்! “நீ ஜெபம் பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம். மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும், வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள். அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்.” ஆம்! நிச்சயமாகவே தங்கள் புகழ்ச்சிக்காக ஜெபிப்பதும், உபவாசிப்பதுமான ஒரு கூட்டத்தார் உவகில் இருக் கிறார்கள். சிலர் சிறிதும் தனி ஜெபமின்றி, பொதுக் கூட்டங்களில் நீண்ட ஜெபம்செய்து தாங்கள் பெரிய ஜெபவீரர்கள் என்று காண்பித் துக்கொள்கிறார்கள். வேறுசிலர் கூட்டகங்ளில், மற்றவர்களுக்கு ஜெபிக்கத் தருணம் கொடாது, ஒழுங்காக-கட்டாயமாய் தாங்கள் ஜெபிக்க விரும்புகிறார்கள். சிலர் ஜெபத்தில் பிரசங்கம் செய்கிறார்கள். இன்னும் சிலர் ஜெபத்தில் தங்கள் பாஷையில் தங்களுக்குத் தெரிந்த நல்ல உயர்ந்த வார்த்தைகளை அடுக்கி, அதை பாஷைசாமர்த்தியத்தைக் காட்டும் ஓர் கருவியாக்கிக் கொள்கிஞர்கள். இவை தங்களுக்காகத் தூபவர்க்கத்தை உண்டுபண்ணுவ தாகும்.
D. L. முடி ஒரு தடவை ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, மேற்கூறிய விதங்களில் ஒரு வர் நீண்ட ஜெபத்தை ஆரம்பித்தார். ஜெபம் முடியாத தால் கூட்டத்தில் பரபரப்பு உண்டாயிற்று. ஆகவே, D. L.முடி, “நம் நண்பர் ஜெபித்துக் கொண்டே இருக்கட்டும்; நாம் ஓர் பாட்டுப் பாடுவோம்” என்று சத்தமாய்க் கூறிப் பாட்டை ஆரம்பித்தார். இதை சர். வில்பிரட் கிரன்பெல் என்பவர், கூட்டம் நடத்தின வரின் ஆவியின் நடத்துதலைக் கவனித்தார். D.I . முடி அவர்களின் இச்செய்கை, அவர் கூட்டத்தை விட்டு வெரியே போகாதபடி தடுத்து நிறுத்தியது. பின்பு இவர் கூட்டங்களில் ஊக்கம் காண்பித்து, இரட்சிக்கப் பட்டு ஓர் தேவ மனுஷஞாக மாறினார். ஆம்! இன்றைக் கும் இவ்வித ஜெபங்களுக்கு இவ்வித மாற்று மருந் தைக் கொடுத்தால் பலர் நம் கூட்டங்களில் ஊக்கம் காட்டி, கர்த்தரிடம் வழி நடத்தப்படுவார்கள் என்பது நிச்சயம்.
ஜெபத்தைக் குறித்து கடைசியாக யாத். 30:38-ல் “இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டு போகக் கடவள்” என்று கூறியிருப்பது நம்மை நடுங்கப் பண்ணுகிறதன்றோ! சிலர் மேற்கூறியவாறு ஜெபிப் பதுடன் தங்கள் ஜெபங்களைத் தாங்களே சிந்தித்துப் பெருமையாகப் பாவித்து, தகங்ளுக்குள் மேன்மை பாராட்டிக் கொள்கிறார்கள். இவ்விதச் சிந்தை சில நாட்களுக்குள் தங்களைப் பெரியவர்களாக எண்ணிப் பெருமையடையவும், மற்றவர்களை அற்பமாய் எண்ண வும் வழி நடத்தும். இவர்கள் இந்நிலைக்கு வரும் “பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார்” (I பேதுரு 5:5) என்பதற்கிணங்க, கொஞ்சம் கொஞ்சமாய் இவர்களது ஆவிக்குரிய அனுபவங்களுக்கு மரணம் சம்பவிக்கிறது. கடை யாக முழுப் பின்மாற்றக்காரராய் தேவ ஜனத்தை விட்டு நீங்கி (அறுப்புண்டு) விடுவாரும் உண்டு. என்ன பயங்கரம்! ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் கர்த்தர் கட்டளையிடாதிருந்தும் கட்டளை யிட்டதற்கு ஒப்பனையாக அந்நிய அக்கினியைக் கொண்டு வந்தமையால், கர்த்தருடைய சக்கிதியி லிருந்து அக்கினி புறப்பட்டு வந்து அவர்களிருவரை யும் பட்சித்தது. இவ்விதமாக அவர்கள் கர்த்தருடைய ஜனத்திலிருந்து அறுப்புண்டு போனார்கள். ஆ ! என்ன பரிதாபம் !
இந்தத் தூபபீடத்தில் தூபம் காட்டவேண்டிய நேரத்தை, யாத்திராகமம் 30:7-8-ம் வசனங்களில் காண்கிறோம்.
(1) காலைதோறும்: இந்த உண்மையை நிரூபிக் கும்படியாக இயேசு: “அதிகாலையில் இருட்டோடே
எழுந்து புறப்பட்டு வனாந்தரமான ஓரிடத்திற்குப் போய், அங்கே ஜெபம் பண்ணினார்.” (மாற்கு 1:35) இந்தச் சத்தியத்தை அறிந்த தாவீது, தன் விண்ணப் பத்தைத் தூபம் என்று சங்கீதம் 141:2-ல் கூறுகிறார். இது காலைதோறும் செலுத்த வேண்டியதாகையால் 63:1-ல் ‘அதிகாலமே உம்மைத் தேடுகி உண்மையான ஒவ்வொரு சங்கீதம் றேன்” என்கிறார். இது உண்மையான ஒவ்வொரு பரிசுத்தவானுடைய அனுபவமாயிருக்கிறது. இவ் வுலகில் சிலர், காலையில் முதலாவது நல்லவர்களின் முகத்தைத் தரிசித்தால் அந்நாள் முழுவதும் நன்றாக இருக்குமென்றும், அப்படியில்லாவிட்டால் பல பாடு கள் உண்டென்றும் எண்ணுகிறார்கள். இதை எண்ணி யோ எண்ணாமலோ, தாவீது தன் ஜீவியத்தில் ஒவ்வொரு நாளும் காலையில் தேவனுடைய முகத்தைத் தரிசிக்கும். பழக்கத்தைக் கையாண்டார். (சங். 5:3) ஆகவே, ”நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்” சங். 17:15) என்கிறார். ஆ! என்ன பாக்கியம்! இவ்விதம் “அதிகாலையில் தேடி” “கர்த்தருடைய சாயலால் திருப்தி” யாகும் பழக்கம் இருந்தமையால் ‘நிணத்தையும், கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக் களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்” (சங். 63:5) என்று பாடி மகிழுகிறார்.
ஒருவன் காலையில் தன் சரீரத்திற்குத் தேவையான ஆகாரத்தைத் “திருப்தி”யாகப் புசித்தால் பகலில் களைத்துப்போகாதிருப்பாள். அவ்விதமாகவே, நாம் தாவிதைப்போல் காலையில் தேவனைத் “தேடி” “காத்திருந்து” அவர் “சாயலால் திருப்தி”யாவோ மாயின் பகலில் சோர்வு, சோதனை முதலியவற்றிற்ருட்படாது, பகல் முழுவதும் “ஆனந்தக்களிப்புள்ள” உதடுகளால் துதித்துக்கொண்டே இருக்கலாம். மேலும், காலைதோறும் புதிய கிருபைகள் இருக்கிறது. என்று எரேமியா கூறுகிறார். (புலம். 3:22-23) ஒவ்வொரு புதியநாளிலும் நாம் எதிர்பாராத புதிய சேர்தனைகள், பிரச்சினைகள் நமக்கு வருகின்றன. இதை அறிந்த நமது நல்ல தகப்பன் இந்தப்புதிய சோதனைகளில் வெற்றி சிறக்க, (ஒவ்வொரு காலையி லும்) காஃபதோறும் புதிய கிருபைகளை வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார். நாம் காலைதோறும் ஜெபித்தால் “அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்” (சிறி.8:17) என்னும் வாக்கை நிறைவேற்றி, வாழ்நாளெல்லாம் கனி கூர்ந்து மகிழும்படி காலையிலே தமது கிருபையால் திருப்தியாக்குவார். (சங். 90:14) ஆ ! என்ன இன்ப ஜீவியம்!
இவ்வின்ப ஜீவியத்தை ருசித்த தேவமனுஷர், காலையில் தங்களுக்கு எவ்வளவு முக்கியமான-கடின மான வேலைகள் இருந்தாலும், அவ்வேலைகளுக்குட் பிரவேசியாது கர்த்தரிடம் காத்திருந்து அவர் சாயலா லும் கிருபையாலும் திருப்தியடைந்து, அதன்பின் பகலில் தங்கள் வேலைகளைச் சந்தோஷத்துடன் இலகுவாய்ச் செய்து முடிக்கின்றனர்.
mம்மில் சிலர் இவ்விதம் அதிகாலையில் எழும்ப விரும்பியும் தூக்கத்தால் மேற்கொள்ளப்பட்டுக் கலங்கித் துக்கிக்கலாம். பிரியமானவர்களே ! அவ்வி தம் கலங்கத் தேவையில்லை. உண்மையாக முழு இருதயத்துடன் நாம் அதை நாடினால் நிச்சயமாகவே தேவன் இவ்வனுபவத்தைத் தருவார். ஏனென்றால் ஏசாயா 50:4-ல் “காலைதோறும் என்னை எழுப்புகிறார்.” என்று கூறி, நம்மை எழுப்பும்வேலை அவருடையது என்று ஸ்தாபிக்கிறார். இன்றும் உத்தம பரிசுத்தவான் களை எழுப்பி இவ்வாக்கியத்தில் கூறி இருப்பது போலவே வழிநடத்தி வருகிறார். இப்புத்தகம் ஆக்கி யோனின் அனுதின அனுபவமும் இதுவேயாகும். ஆகவே, காலைதோறும் சுகந்த தூபங்காட்டி ஆசீர் வாதங்களைப் பெறத் தவறுதீர்!
(2) மாலைதோறும்: மேலும் “மாலையில் விளக்கேற்றும்போதும் அதன்மேல் தூபங்காட்டக் கடவன்” (யாத். 30:7) என்று வாசிக்கிறோம். இதில் இரண்டு காரியங்களைக் கவனிக்கிறோம். முதலாவதாக மாலையில் தூபங்காட்ட வேண்டும். தாவீது இதைக் குறித்து “என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது’ (Lifting up of my hands as the evening sacrifice) என்று சங்கீதம் 141:2-ல் கூறுகி றார். அப்போஸ்தலனாகிய பவுலும் கைகளை உயர்த்தி ஜெபிக்கவேண்டும் என்கிறார். (1bமோ. 2:8) இதன் உண்மையான பொருளையும், அனுபவத்தையும் தாவீது விளக்கி “உங்கள் கைகளைப் பரிசுத்தஸ்தலத் திற்கு நேராக எடுத்து கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்” என்று சங்கீதம் 134:2-ல் கூறுகிறார். நெகே. 8:6-ல் எஸ்றா கர்த்தரைத் துதித்தபோது ஜனங்களும் தங்கள் கைகளை உயர்த்தி “ஆமென் ஆமென்” என்று சொன்னது, அவர்களும் எஸ்றாவுடன்சேர்ந்துகர்த்தரைத் துதித்ததற்கு அடையாளமாகும். ஆகவே, கைகளை உயர்த்தி ஜெபிப்பதென்றால் கர்த்தரைத் துதிப்பதாகும்.
சங்கீதம் 141:2-ல் என் கையெடுப்பு அந்திப்பலியாக இருக்கக்கடவது என்பது கையை உயர்த்தி, ஸ்தோத் திரபலி செலுத்துவதாகும். “அந்தி” அல்லது சாயங் காவத்தில்தான் மனுஷன் அதிகமாகக் கர்த்தரைத்துதிக் சுக்கூடும். பகல் முழுவதும் தேவன் தங்களைக் காத்த தையும், பகலில்செய்த நன்மைகளையும் சிந்தித்துத் துதிக்கக் கூடியவனாயிருக்கிறான். இதுவே மாலையில் தூபங்காட்டுவதாகும். ஆகவே, நண்பனே ! ஒவ்வொரு மாலையிலும் மறவாது கர்த்தர் செய்த நன்மைகளுக் காக உம் கைகளை உயர்த்திக் கர்த்தரைத் துதிப்பீராக.
தேவ மனுஷர் காலையில் மாத்திரமல்ல, மாலை யிலும் ஜெபத்திற்காக நேரங்களைக் குறிப்பிட்டுத் தவறாமல் அவ்வேளைகளில் ஜெபித்து வந்திருக்கிறார் கள். எஸ்றா, தானியேல் என்பவர்கள் இவ்விதம் ஒழுங்காக ஜெபித்தமையால்தான் கர்த்தருக்காகப் பெரிய காரியங்களைச் செய்யக்கூடியதாயிருந்தது. (எஸ்கு 9:5; தானி. 9:21) அன்றியும் பேதுருவும், யோவானும் இம்மாலை ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்தில் தேவாலயத்துக்குப்போனது (அப். 3:1) அந்திப்பலியைக் கனம்பண்ணினதாகும். மாலைவேளைகளிலும் ஒழுங்காக நேரத்தைக்குறிப்பிட்டு ஆகவே, ஜெபிப்பது நமது ஜீளியத்தில் அதிக நன்மையை உண்டாக்கும்.
இரண்டாவதாக, “மாலையில் விளக்கேற்றும் போதும் அதன்மேல் தூபங்காட்டக் கடவன்” (யாத். 30:7) என்பது சுவனிக்கப்படத்தக்கது. நமது ஆவிக்குரிய ஜீவியத்தில் பல மாலை (இருள்) நேரங்கள் அல்லது துக்கமான சமயங்கள் வருகின்றன. அவ்வித நேரங்களில் வேத வசனத்தால் தேற்றப்பட்ட பலர் நம்மில் உண்டு. தாவீதும் “உமது வேதம் என் மனமகிழ்ச்சியா யிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்” என்கிறார். (சங். 119:92) சங்கீதம் 119:105-ல் “உம்முடைய வசனம் என் கால் களுக்குத் தீபம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, தீபம் அல்லது விளக்காகிய வேதவசனத்தை வாசிக்கும்போது, ஜெபம்பண்ணவேண்டும். இதை உணர்ந்த தாவீது அதிகமாய் ஜெபித்தார். “உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்” என்று 119-ம் சங்கீதத்தில் மாத்திரம் பத்துத்தடவை ஜெபித்திருக் கிறார். (உ-ம்) சங். 119:12, 26, 33, 64. “உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்” (வ. 19) “உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்’ (வ.28) இவ்வித ஜெபத்தை இதே சங்கீதத்தில் 26 தடவை செய்திருக்கிறார். அன்றியும், “உடமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும்” என்று இதே சங்கீதத்தில் 18-ம் வசனத் தில் ஜெபிப்பது, “விளக்கை ஏற்றும்போது தூபங் காட்ட வேண்டும்” என்னும் சத்தியத்துக்குத் தாவிது எவ்வளவு உண்மையாய் இருந்திருக்கிறார் என்பனத வெளிப்படுத்துகிறதன்றோ !
வேத வசனம் என்பது, சிலர் எண்ணுவதுபோல வெறும் எழுத்துக்கள் அல்ல. அவைகளில் “அதிசயங்கள் இருக்கின்றன. உள்ளான மனுஷனின் கண்கள் திறக்கப்பட்டால்தான் அதிசயங்களைக் காணக்கூடும். ‘என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்,” என்று ஓசியா 8:12-ல் பார்க்கிறேம். ஆம்! பெரிய மகத்துவங்கள் வேத புஸ்தகத்தில் இருக்கின்றன. இதை அறியாது சாதாரண புஸ்தகங்களைப்போல எண்ணி, ஜெபியாது வாசிக்கும் போது, “அவைகளை அந்கிய காரியமாக எண்ணினார் கள்” என்று தேவன் அத வசனத்தில் சொல்லித் துக் கப்படுகிறார். இவ்விதம் வேத வசனங்களில் இருக்கும் அதிசயங்களையும், மகத் துவங்களையும் பார்க்க வேண்டு மாயின் ஜெபம் தேவை. சிலர் இவ்விதம் ஜெபியாது. வேறு பற்பல புஸ்தகங்களை வாசித்து, எவ்வித வெளிப் படுத்தலுமின்றி மணியை இழந்த பெரிய போல, எழுத்துக்குரிய பிரகாரமாய் வேதத்தைக் குறித் துப் பேசித் தர்க்கங்களை உண்டுபண்ணிப் பிரசங்கித் துப் புஸ்தகங்களை எழுதி அதிசயமும், மகத்துவமான வேதத்துக்குந் துரோகம் செய்கிறார்கள். தேவன். அவர்களை மன்னிப்பாராக. ஜெபமின்றி வேதம் வாசித் துப் பலர் நாஸ்திகர்களாகி விட்டனர். வேதம் முழுவதும் சரியல்லவென்றும், கட்டுக் ஒரு சிலர் கதைகள் என்றும் சொல்லத் துணிந்துள்ளனர். ஐயோ! என்ன பரிதாபம்! ஜெபிப்பதுடன் பரிசுத்த ஆவியைப் பெற்று அதன் பின்பு வாசித்தால், அங்கு மிங்குமாய்ச் சிதறடிக்கப்பட்ட மறைந்த மகத்துவங்கள் வெளியரங்கமாக்கப்பட்டு ஒன்றாகச் சேர்க்கப்படும். (ஏசா. 34:16) இவ்விதம் சேர்க்கப்படும் வசனங்கள், தேவனுடைய மக்களைப் புதிய ஜிளியத் துக்குள்ளும், புதிய உபதேசங்களுக்குள்ளும் வழி நடத்தும்.
வேதத்தை இவ்விதம் (தூபமிட்டு) வாசிப்பார் களேயானால் இந்த விளக்கு, பாதைக்கு வெளிச்சத்தைத் தந்து (சங். 119:105) வழி விலகாது காத்து, கடைசி யில் நித்திய ஜீவனைத் தரும். ஆகையால், தேவன் பாகமம் 32:46-47-ல் வேதத்தைக் குறித்து இது உங்கள் ஜீவனாயிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இதன் கருத்தை உணர்ந்த ஆங்கிலேயர் இதை “பைபிள்” (Bible) என்று அழைத்தனர். அதாவது Behold U bring life Eternal “இதோ நான் நித்திய ஜீவனைக் கொண்டு வருகிறேன்” என்பது இதன் பொரு ளாகும். ஆம்! இது சத்தியமே! ஆசுவே, ஜெபத்து டன் வேதம் வாசித்து நித்திய ஜீவணைப் பெற ஜாக்கிர தையாயிருங்கள்.
இனிமேல் நாம் புதிய ஏற்பாட்டிலுள்ள சில ருடைய ஜெபத்தைக் குறித்து ஆராய்வது, நம் ஜெப ஜீவியத்தை வளர்க்க அதிக உதவியாக இருக்கும்.