3 . எவ்விதம் ஜெபிக்கவேண்டும்?

 


 3 . எவ்விதம் ஜெபிக்கவேண்டும்?

  1. சோர்ந்துபோகாமல் ஜெபிக்கவேண்டும்.

  ஜெபம் ஆவிக்குரிய ஜீவியத்தில் மிகவும் பிரதான மென்பதைப் பிசாசும் அறிந்துகொண்டபடியால், தேவ னுடைய பிள்ளைகள் எந்த ஒரு காரியத்துக்காகவாவது.

  சில நாட்கள் ஜெபித்து, அதற்கு உடன் பதில் கிடைக்காமலிருக்கும்போது அவன் அவர்கள் இரு நயங்களில் சோர்பை அனுப்புகிறான். இதிளிமித்தம் சிலர், சோர்புக்கு இடங்கொடுத்து ஜெபித்துவந்த விஷயத்திற்காகத் தொடர்ந்து ஜெபிக்காமல் விட்டு விடுவதும், வேறுசிலர் “ஜெபித்துத் தான் என்ன கண்டோம்” என்று சொல்வதும், வேறுசிலர் ஜெபித் தாலும், ஜெபிக்காவிட்டாலும் நடக்கிறது நடக்கும் என்று சொல்லி ஜெபத்தை விட்டுவிடுவதும் இயல்பு. இது என்ன பரிதாபம்!! இவ்ளிதச் சோர்பானது பிசாசின் ஒரு வல்ல ஆயுதம் என்பதை மறக்க வேண்டாம். இவ்விதச் சோர்பிலிருந்து விடுதலை பெறுவது எவ்விதம் ?

  இயேசு, இச்சந்தர்ப்பத்தில் சொன்ன உவமையில் அந்த விதவைக்கு உடன் பதில் கிடைக்காமலிருக் தாலும், அவள் சோர்ந்துபோகாது அலட்டிக்கொண் டிகுந்ததைக் காண்கிறேம். அவள், முதலாவது சார்பாகிய தன் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட படியாலும், இரண்டாவது சார்புாகிய தன் புருஷனை இழந்தபடியாலும், இனி அவளுக்கு கிறிஸ்துமாத்திரமே சார்பிடமாயிருக்கிறபடியாலும் அவள் சோர்ந்து போகா மல் ஜெபிக்கக்கூடியதாயிருந்தது. ஒருவனுக்கு ஒன் றுக்குமேலான நம்பிக்கைக்குரிய இடங்களிருக்கும் பொது ஒன்றை மாத்திரம் பற்றிப் பிடிக்கக்கூடாத வனாயிருக்கிறான். விதவைக்கோ கர்த்தர் ஒருவரே நம்புவதற்குரியவர். ஆகையால்தான் *’விதவை “ளுடைய தேவன்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

  விதவையானவள் நிந்தையடைந்தவளும். கைவிடம் பட்டு மனம் நொந்தவளுமான ஸ்திரீயாயிருக்கிறாள் (ஏசா. 54:4-6). இவ்விதம் கைவிடப்பட்ட விதவை தேவன் மாத்திரம் தனக்குத் தஞ்சம் என்று எண்ணி சோர்ந்து போதாமல் எப்பொழுதும் ஜெபிக்கக்கூடிய வளாக இருக்கிறாள். ஆகையால்தான் நாமும் சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபிக்கும்படியாக, நம் அருமையானவர்களால் நாம் கைவிடப்படுவதற்கும், பல அவசியங்களினால் மனம் நோகிறதற்கும், நாம் செய்யவேண்டியவற்றைச் செய்யும்போது நிந்தைக் ளடைவதற்கும் தேவன் இடங்கொடுத்து விதவையின் அனுபவத்துக்கு அடிக்கடி வழிநடத்துகிறார். பரிசுத்த பவுல், விதவையின் நிலையை அடைந்திருந்தபடியான் இடைவிடாத மனவேதனை அடைந்திருந்தார். (ரோ 9:1 ஆகையால் அவர் ஜெபஜீவியத்தில் சோர்ந்துபோக வில்லை. அன்றியும், II இரா. 4-ம் அதிகாரத்தில் காணப்படும் விதவையின் கடன், அற்புதமாய் ஒரே நாளில் தேவ வல்லனமயால் தீர்க்கப்படுவதற்குக் காரணம் அவள் விதவையாய் இருந்ததுமாத்திரமல்ல. அவளது இரண்டு குமாரரும் அடிமைகளாகும் தருணத் திலிருந்தார்கள். இவ்ளிதம் வேறு சார்பிடம் இல்லா திருக்கும்போது சோர்ந்துபோகாமல் எப்பொழுதும். ஜெபிக்கக்கூடும்.

  சிலர் தங்கள் அருமையானவர்களுடைய இரட்சிப் புக்காக ஜெபித்து, அவர்கள் இரட்சிப்படையாதபடி யால் சோர்ந்துபோய் ஜெபிப்பதை விட்டுவிடுகிறார்கள் ஆனால் ஜார்ஜ் முல்லர் என்பவர் தன் இரண்டு நண்பர் களுக்காக 53 வருஷங்கள் சோர்ந்துபோகாமல் ஜெபித் தார். பின்னர் அவர் மரணப் படுக்கையிலிருக்கும் போது, அவர்களில் ஒருவன் இரட்சிக்கப்பட்டான் என்னும் செய்தியைக் கேள்விப்பட்டுக் கண்களை மூடி ஞர். 53 வருஷங்கள் சோர்ந்து போகாமல் ஜெபித்த ஜெபத்தை தேவன் கனம் பண்ணினார். இன்னும் 6 மாதம் சென்றபின்பு, மற்றவனையும் தேவன் இரட்சித்து தேவன் ஜெபத்துக்குப் பதில் கொடுக்கிறவர் என்பதை நமக்கு நிருபித்திருக்கிறார். சகோதானே! சகோதரியே! ஆரம்ப காலத்தில் அநேகருக்காக ஜெபித்து, இப் பொழுதும் அவர்களில் பலருக்காக ஜெபிப்பதை விட்டு விட்டாயல்லவோ ? நீ சோர்ந்துபோகாமல் மறுபடியும் ஜெப ஜூவியத்தைப் புதிப்பிப்பாயாகில் “சீக்கிரத்தில் அவர்களுக்கு நியாயம் செய்வார்” என்று லூக். 1B:6-ல் இயேசு சொன்ன வார்த்தை நிறைவேறும். “சீக்கிரத் நில் அவர்களுக்கு நியாயஞ் செய்வார்” என்பதால், ஜெபித்தவுடன் பதிலளிப்பார் என்பதல்ல. முந்தின வசனத்தில், நீடிய பொறுமையாயிருந்து நியாயம் செய்வார் என்று காண்கிறோம். ஆகவே, நீடிய பொறுமையாகவும் இருப்பார்; சீக்கிரத்தில் செய்யவும் செய்வார். இது என்ன ? தேவன் நீடிய பொறுமை யாசு இருக்கும்போதுதான் மனுஷர் சோர்ந்து போகி னார்கள். ஜெபித்தவுடன் பதில் கிடையாவிட்டாலும், அவருடைய நீடிய பொறுமையுடன் சேர்ந்து நாமும் பொறுமையுள்ளவர்களாகயிருக்க வேண்டும். யோசேப்பு தன் தகப்பனையும், சகோதரர்களையும் குறித்துத் தேவன் தனக்குக் காண்பித்து தரிசனம் உடனே நிறைவேறாது, அதற்கு மாறாக சம்பவித்து.

  நம்பிக்கையற்ற நிலையில் இருந்த வேண்யிலும் சோர்ந்து போகாது நீடிய பொறுமையாக இருந்தான். ஆகையால்தான் ஞானக்கண்கள் மங்காது. இராஜா கேட்டவுடனே சொப்பனத்தின் அர்த்தத்தைத தான் சொல்லக்கூடியதாயிருந்தது. இவ்விதம் நீடிய பொறுமையாயிருந்த யோசேப்புக்குத் தேவன் “சீக்கிரத்தில்” பதிலளித்தார். அதுஎவ்விதம் ?

  யோசேப்பின் வஸ்திரம் அந்த ஸ்திரீயினிடம்

  இருந்தபடியால், அவன் தன் நீதியை மனுஷ ஒழுங்கின் படி ஒருபோதும் நிரூபிக்க முடியாது. அவ்விதம் நிரூபிக்கக் கூடுமாயினும், அது சீக்கிரமாக ஒரு வேை வெளிப்படக்கூடிய காரியம் அல்ல. அதற்காக நீ நீ மன்றம் வைக்கப்பட்டு, பலநாட்கள் விசாரிக்கப்பட் பின்புதான் அது நிறைவேறும். ஆனால் தேவன் நியாயம் செய்யத் தீர்மானித்தபோதோ, பலநாட்கள் செல்லாது ஒரேநாளில், சிறிது நேரத்துக்குள் “சீக்கிரத் தில்’ சிறைச்சாலையிவிருந்து சிங்காசனத்திற்கு உயர்த்தப்பட்டான். ஆ! என்ன ஆச்சரியம்! இவ் விதம் தேவன் உங்களுடைய விஷயத்திலும் நீடிய பொறுமையாக இருந்தாலும், சீக்கிரத்தில் நியாயம் செய்வார். ஆகவே, சோர்ந்து போகாது ஜெபித்துக் கொண்டேயிருங்கள்.

  2. “எப்பொழுதும் ஜெபிக்கவேண்டும்” என்று

  லூக்.18:1-ல் காண்கிறோம். இதை உறுதியாக்கவே Iதெச 5:17-ல் இடைவிடாமல் ஜெபம் பண்ணும் கள்” என்று பரி. பவுல் எழுதுகிறார். எப்பொழுதும் ஜெபிக்கக் கூடுமோ? என்பது பல கிறிஸ்தவர்களுடைய வும் இருதயத்தில் உள்ள ஓர் கேள்வியாகும்.

  இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் என்று சொன்ன பவுல் தான் அவ்விதமாகச் செய்துகொண் டிருக்கிறதைக் காட்ட நம்முடைய பிதாவாகிய தேவ னுக்கு முன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவு கூர்ந்து……. எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களுக்காக விண்ணப்பம் பண்ணி, உங்களெல்லா ருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்தரிக் கிறோம்” என்று I1தெச. 1:2-4-ல் கூடறுகிறார். பரி. பவுல் இவ்விதம் செய்தார் என்று சொல்லும்போது, பவுலுக்கு உலகபிரகாரமான வேலைகள் இல்லாமல் தேவ மாத்திரம் செய்தபடியால், ஓரிடத்தில் உட்கார்ந்திருந்து அவ்விதம் செய்திருக்கக்கூடுமென் றும், பல வேலைகளும் உத்தரவாதமுமுள்ள நமக்கு ஓரிடத்தில் உட்கார்ந்திருந்து எப்பொழுதும் ஜெபிக்கக் கூடுமோ? கூடாதே என்றும் ஒரு சிலர் யோசிக்கலாம்.

  தானியேல் தினம் மூன்றுவேளை மாத்திரம் முழங் காற்படியிட்டு ஜெபம்பண்ணி தேவனை ஸ்தோத்தரித் தான் என்று தானி. 6:10-ல் வாசிக்கிறோம். அப் பொழுது தானியேல் தரியு ராஜாவின் விசாலமான ராஜியம் முழுவதையும் ஆளுகை நடத்தின மூன்று பிர தானிகளில் ஒருவனாயிருந்தது மாத்திரமல்ல, அந்தப் பிரதானிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான். (தானி. 6:1-3.) அப்பொழுது அவனுக்கு இருந்த உத்தரவாத மும், திரளான வேலையும் இப்பொழுது நம் ஒரு வருக்கும் இல்லையென்பது நிச்சயமே. இந்தப் பெரும் உத்தரவாதத்தின் மத்தியிலும் தானியேல் இடைவிடா மல் தேவனை ஆராதித்ததாக (ஜெபித்தநாக) தானியே வோடு நெருங்கிப் பழகிக்கொண்டிருந்த ராஜா (தானி. 6:16-ல்) சாட்சி கொடுக்கிறதாகப் பார்க்கிறோம். ஆகவே இடைவிடாமல் ஜெபம் பண்ணுவது என்பது. முழங்காற்படியிட்டு ஜெபிப்பது மட்டுமல்ல. ஒரு தட வை வேதகலாசாலையில் கற்ற சில பெரியவர்கள் ஓர் வீட்டில் சந்தித்தபோது, இயேசு சொன்னதுபோல் எப் பொழுதும் ஜெபிக்கக்கூடுமா? என்பதைக் குறித்து சம்பாஷித்து, இறுதியில் அது கூடாதகாரியம் என்று முடிவு செய்தார்கள். பல வேலைகளின் மத்தியிலும் அதைக்கவனித்துக் கொண்டிருந்த அவ்வீட்டு வேலைக் காரி இவர்கள் சம்பாஷணையின் முடிவைக் கேட்டு துக்கத்தோடு முன்வந்து, இயேசு சொன்னது சத்தியம் என்றும், நிச்சயமாய் எப்பொழுதும் ஜெபிக்கக்கூடும் என்றும் கூறினாள். இதைக்கேட்டு மிகவும் வியப் படைந்து அவளை அதட்டி, அது எவ்விதம் கூடும்? என்று கேட்டார்கள், அவளோ,தான் எப்பொழுதும். ஜெபிப்பதாகச் சொல்லவே, அவர்கள் ஆச்சரியங் கொண்டு அவள் எப்பொழுதும் ஜெபிப்பதையல்ல, எப்பொழுதும் வேலை செய்வதையே பார்த்திருப்பதாகச் சொன்னார்கள். அவளோ தான் வீடு கூட்டும்போது, ‘ஆண்டவனே! என் இருதயத்தின் அசுத்தங்களையென் லாம் இப்படியே கூட்டும் என்றும், அடுப்பண்டை நிற்கும்போது, ஆண்டவரே! என்னை அனலுள்ளவ ளாக்கும் என்றும் மற்றவர்களுக்குப் போஜனங் கொடுக்கும் போது, ஆண்டவரே! மற்றவர்களுக்கு ஆத்தும ஆகாரம் கொடுக்க உதவி செய்யும்” என்றும் (இவ்விதமாகவே ஒவ்வொரு வேலைசெய்யும் போதும்) எப்பொழுதும் ஜெபிப்பதாகச் சொல்லி, “எப்பொழு தும் ஜெபிக்கக்கூடும்” என்பதை ஆம்! அது எவ்வளவு சத்தியப்! நிருபித்தாள்.

  இந்தச் சத்தியத்தைத் தெளிவாக்க “ஜெபத் தியானம்” என்னும் வார்த்தையை யோபு 15:4-ல் பார்க்கிறோம். ஆகவே இடைவிடாமல் ஜெபிக்குப் படி எப்பொழுதும் ஓரிடத்தில் உட்கார்ந்து முழங்காலில் நின்று ஜெபிப்பது என்று எண்ணி, அது முடியாத காரியம் என்று யோசித்து வஞ்சிக்கப்படாதிருங்கள். உங்களுக்கு அருமையான ஒரு பிள்ளை கொடிய வியாதி யால் பாடுபடும்போது நீங்கள் கடைக்குப்போக நேரிட்டால் அங்கு சாமான் வாங்கும் போதும், இன ஜனத்தாரைச் சந்திக்க நேரிட்டால் அவர்களுடன் பெசிக்கொண்டிருக்கும்போதும் உங்கள் சிந்தை உங்கள் பிள்ளையின் மேலிருக்கிறதல்லவா? இதைப்போலவே ஜெபத்தில் எப்பொழுதும் சிந்தை வைத்து ஜெபிப்ப “தையே’ஜெபத்தீயானம் என்றும் இடைவிடாமல் ஜெபிப் பது என்றும் கூறப்படுகிறது. அன்றியும், பட்டாளத் திலே.நூற்றுக்கநிபதியாக இருந்த கொர்நேலியு “எப் பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொன் ‘டிருந்தான்” என்று அப். 10:2-ல் வாசிப்பது இச்சத்தி யத்தை உறுதியாக்குவதுடன் நமக்கும் இவ்ளிதம் ஜெபிக்கக்கூடும் என்னும் விசுவாசத்தையும் உரு வாக்குகின்றதன்றே !

  இவ்விதம் இடைவிடாமல் (எப்பொழுதும்; ஜெபித்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு மாத்திரமே கர்த்தருடைய வருகையில் போகமுடியும். ஆகவே நாம் கர்த்தருடைய வருகைக்குப்போக விரும்புவோ மானால், கர்த்தரிடத்தில் போராடி எப்படியாகிலும் இவ்வனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

  3. பரிசுத்தாவிக்குள் ஜெபம் பண்ணவேண்டும்

  அப்போஸ்தலனாகிய யூதா தன் நிருபத்தின் 20-வது வசனத்தில் பரிசுத்தாவிக்குள் ஜெபம் பண்ண வேண்டுமென்று தேவனுடைய ஜனத்துக்குப் புத்தி சொல்லுகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் ரோ. 6:26-ல் “நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்ன தென்று அறியாதபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமுச்சோடு நமக்காக வேண்டு தல் செய்கிறார்” என்று எழுதுகிறார். பரி. பவுலும் ஒவ்வொரு சனபக்காக எவ்விதம் ஜெபிக்க வேண்டு மென்று அறியாதிருந்தமையால், ஆவியானவர்தாமே அந்தந்தச் சபையின் நிலைமைக்கேற்றபடி வித்தியாசம் வித்தியாசமாக ஜெபிக்கப் பழக்கியிருக்கிறார். உதாரண மாக, ஆவியில் ஆரம்பித்து மாம்சத்தில் முடித்த கலாத்தியருக்காக, கர்ப்பவேதனைப்பட்டு ஜெபித்தார். (கலா. 4:19) சுவிசேஷத்திற்கு உடன்பட்ட பிலிப்பி யருக்காக எப்பொழுதும் சந்தோஷத்தோடு விண்ணப் பம் செய்திருக்கிறார். (பிலி. 1:34) கர்த்தருடைய வருகைக்குக் காத்திருந்த தெசலோனிக்கேயருக்காக ஸ்தோத்திரம் பண்ணியிருக்கிறார். (1 தெச. 1:4, II தெச.1:3) இவ்விதமாகப் பரிசுத்தாளிக்குள் ஜெபிக் சுப் பழக்கப்பட்டார்.

  பரி. பவுல் I கொரி. 14:15-ல் “நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேள், கருத்தோடும் விண்ணப் பம் பண்ணுவேன்” என்கிறார். ஆகவே ஒரு விசுவாசி வினிடத்தில் இரண்டுவிதமான ஜெபம் காணப்படு கிறது. தன் அறிவோடு ஜெபிப்பது, கருத்தோடு ஜெபிப்பதாகும், ஆனால், ரோ. 8:26-ன் படி ஆவியோடு ஐபிப்பதென்றால், முதலாவதாக தனக்குத் தெரியாத யுல்லது யோசியாத காரியத்துக்கு ஜெபிப்பதாகும். ஜப ஜீவியத்தில் வளருகிற பரிசுத்தவானகள், இவ் வனுபவத்தால் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகுந்த பலனை உண்டாக்குகிறார்கள். ஒருவர் ஏதாகிலும் செய்துகொண்டிருக்கும்போதோ. அல்லது இத்திரையிலிருந்து திடீரென விழிக்கும்போடுதா தான் ஆலோசித்திராத ஓராளுக்காகவோ, ஒரு விஷயத்துக் காசுவோ ஜெபிக்க ஏவப்படுகிறார். அவ் ஏவுதலூக்குக் கீழ்ப்படிந்து ஜெபிப்பதே ஆவியில் ஜெபிப்பதின் ஒரு பகுதியாகும்.

  1௩தாரணமாக சப்பகாலத்தில் இலங்கையிலிருந்த ஒரு தேவனுடைய பிள்ளையைத் தேவன் காபையில் ன்று மணிக்கு எழுப்பி, தளக்கு எவ்விதமான தோடர்புமில்லாத இன்னெரு தேவனுடைய பிள்ளைக் சு ஜெபிக்க ஏவினார். ஜெபத்தை ஆரம்பித்த பின்பு ஜபத்தை முடிக்கக் கூடாத பெரிய பாரம் வந்த டியால், தன பாரம் தீருமட்டும் காலை 9 மணி வரை பெருமுச்சோடு ஜெபித்துக் கொண்டிருந்தார். இரண்டு பருஷத்திற்குப்பின்பு, ஜெபித்த சகோதரன் யாருக் ஜெபித்தாரோ, அந்த ஆலைச் சந்திக்க நேரிட்ட பாது அந்தச் சமயத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். அதற்கு, தான் அவ்வேளையில் கொடிய வியாதியால் இரணவாசல் மட்டும் சென்று திரும்பிவந்ததாகப் பதில் கூறினார்.

  வில்லியம் ஈதர்லாண்டு என்பவர் ஒரு தடவை தனது உத்தியோக சம்பந்தமாக, அதிகப் பணத்தை எடுத்துக் கொண்டு காட்டின் வழியே தனிமையாக ஓர் இடத்துக்குப் போக வேண்டியிருர் தது. அப்போது எதிர் பாராதவிதமாசு ஒருவித திகில் அவரைப் பிடித்தது. அச்சமயம் அவர் ஜெபிக்கும்படி ஏவப்பட்டார். உடனே அவர் அதற்கு இளங்கி முழங்காற்படியிட்டு கர்த்தர் தன்னைக் காக்கும்படி ஒப்புவித்து ஜெபித்தார். பிறகு தைரியமடைந்து தன் வழியே போய்த் தன் வேலையை முடித்து வந்தார். அதே சமயத்தில் வீட்டில் அவருடைய தாயாகும். தனது மகனுக்கு ஏதோ ஆபத்து வருவதாக உணர்ந்து ஆளியில் ஏவப்பட்டு ஜெபித்தார்கள். இந்த அனு பவம் அவர்களிருவருக்கும் புதுமையாக இருந்தது. அளசு. வருடங்களுக்குப்பின் வில்லியம் சதர்லாண் டுக்கு ஒரு கடிதம் எந்தது. அதில், நான் மாணப் படுக்கையில் இருக்கிறேன். உம்மிடம் சொல்ல வேண்டிய ஒரு முக்கிய விஷயர் ண்டு. உடனே வாரும்-ஒரு சிறேகிதன்” என்று எழுதியிருந்தது. அவர் உடனே புறப்பட்டுப்போய் அந்த ஆளைக் கண்டு பிடித்தார், அப்போது அவர், பல வருடங்களுக்கு முன் வில்லியம் சதர்லாண்டு வைத்துக் கொண்டு காட்டின் வழியே தனியே செல்லும்போது, அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு பணத்தைத் திருடிக் கொண்டு ஓடக் காட்டில் ஒளிந்திருந்ததாகவும். அப்போது வில்லியம் சதர்லாண்டு அந்த இடத்துக்கு வந்தவுடனே முழங்காற்படியிட்டு ஜெபித்ததாகவும் அதைக் கண்டவுடனே தன்னால் ஒன்றும் செய்யக் கூடாமல் கால்கள் தளர்ச்சியுற்றுப்போனதாகவும் உரைத்தார். மேலும், தன்னை மன்னித்துத் தனக்காக ஜெபிக்கும்படி மன்றாடினர். வில்லியம் சதர்வாண்டு அவருக்கு இயசுவைப் பற்றிக் கூறி ஜெபித்தார். அந்த மனி ன் இரட்சிக்கப்பட்டு சமாதானமாய் இவ்வுலகத்தை விட்டுப் பிரிந்தார். ஆளியின் ஏவுதலுக்குக் கீழ்ப்படிந்து ஜெபித்ததினால் உண்டான பலனை இதில் காண்கிறோமல்லவா.

  இவ்விதமாகத் தேவாவியானவருடைய ஏவு தலுக்குக் கீழ்ப்படிந்து ஜெபிக்கும்போது, குறிப்பாசு ஜெபிக்கும் விஷயத்துக்காக அல்லது ஆளுக்காசு மிகுதியான பாரம் உண்டாகிறபடியால் பெருமுச்சின் அனுபவம் உண்டாகிறது. இதுவே ஆவியில் ஜெபிப் பதன் இரண்டாம் பகுதி. சாதாரணமாகப் பெருமூச்சு டன் ஜெபிக்கும்போது ஜெபத்தின் பதில் உடனேயே கிடைக்கிறது. (அப். 7:34) இயேசுவும் பெருமூச்சு விட்டு ஜெபித்தது. குறிப்பிடத்தக்கதாகும். (மாற்கு 7:34) (எசே. 21:6) இது ஜெப ஜிளியத்தின் ஒரு உன்னத நிலையாகும். ஆவியானவருக்குக் கீழ்ப்படி யும்பொது மாத்திரம் இவ்வனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். சில வேளைகளில் ஆவியானவர். ஏவும்போது சரீரக் களைப்பென்றே, இப்பொழுது வசதி இல்லையென்றே, மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக் கிருர்களென்றே எண்ணி அவ் ஏவுதலுக்குக் கீழ்ப்படி யாமலிருந்தால் படிப்படியாய்த் தேவன் ஏவுதலை நிறுத்திவிடுவார். ஏனென்றால் “என் ஆவி என்றைக் கும் மனுஷனொடு போராடுவதில்லை” என்று ஆதி. 6:3-ல் சொல்லுகிறார். இவ்விதமாக இக்காலத்தில் கர்த்தருடைய ஏவுதலுக்குக் கீழ்ப்படிந்து ஜெபியாதபடியாவ் ஜெபஜீவியத்தை இழந்த பெருங்கூட்டமான

  தேவஜாமுண்டு. அன்பான சகோதரனே! சகோதரியே! டன் நிலை எப்படி? f ஆதியிலிருந்த ஜெப ஜீவியத்தை இழக்கக்காரணம் பல சந்தர்ப்பத்தில் கர்த்தர் உனக்ருத் தந்த ஏவுதலுக்குக் கீழ்ப்படியாமல் போனதேயாகும். அச்சந்தர்ப்பங்களை ஆராய்ந்தறிந்து அறிக்கை பண்ணிப் பிரதிஷ்ளடயைப் புதுப்பிப்பாயானால், ஆவி யினிமித்தம் பெருமூச்சு விட்டு ஜெமிக்கும் கிருபையைத், தந்து, அதினிமித்தம் அநேகர் டன்மூலம் பெரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள கர்த்தர் உதவி செய்வார்.

  4. தேவசித்தத்தின்படி ஜெபித்தல் (T யோ. 5:14,

  “நாம் எதையாகிலும், அவருடைய சித்தத்தின் படிக் கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிற ரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கும். தைர்யம்.”சிலர் சில காரியங்களுக்காக மிக ஊக்கமாக ஜெபித்து அதற்குப்பதல் கிடைக்காதபடியாலும், தாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறகப் பதில் வந்தபடி மாறும் தங்கள் ஜெயஜீவியத்தில் மிகவும் சோர்ந்து போகிஞர்கள். இவ்விதமாக அவர்களுக்குப் பதில் கிடைக்காமல் போசுக்காரணம் அப்போஸ்தலனாகிய யாக்கோபு, சீ-ம் அதிகாரம், 3-ம் வசனத்தில் நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், உங்கள் இச்சைகவை நிறைவேற்றும்படிச் செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியால் பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள் என்று சொல்லு கிறார். ஆகவே, நம்முடைய இச்சைகளை அல்லது விருப்பங்களை நிறைவேற்ற ஜெபித்தால் ஜெபத் திற்குப் பதில் கிடைப்பதில்லையென்று அறிகிறேம் அப்போஸ்தலனாகிய யோவான் சொல்லுவதுபோலவும், இயேசு, உம்முடைய சித்தம்…….செய்யப்படுவதாக என்று ஜெபிக்க மாதிர் காண்பித்ததுபோலவும், இத்தேவ ஒழுங்குக்கு இசையாது சிலர் தங்கள் விருப்பங்களை விட முடியாதவர்களாய், அவைகளுக்கா கப் பலவந்தமாய் ஜெபிக்கிறார்கள். சிலர், தங்களுக்கு அருமையானவர்கள் வியாதியாயிருக்கும்போது ”’எசேக்கியா ராஜாவுக்குச் செவிகொடுத்து ஆயுசு நாட் களைக் கூட்டிக்கொடுத்த கர்த்தாவே ! எங்களுக்கும் அப்படிச் செய்யும்” என்று தேவனைப் பலவந்தம் பண்ணுகிறார்கள். எசேக்கியா ராஜாவுக்கு ஆயுசு நாட்கள் கூட்டப்பட்டபடியினால், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்கும், முழுதேசத்துக்கும் தீமை உண்டாக முகாந்தரமானான். இதையறியாது இவ்விதம் ஜெபித்த அநேகர், சிலதடவைகளில் தங்கள் அருமையானவர் களுக்குச் காலங்களுக்குப்பின்பு, ‘ஐயோ! அள்று அவன் அல்லது அவல் மரித்திருந்தால் பரலோகத்துக்குப் போயிருக்கக் கூடுமே! இன்று பிசாசின் பிள்ளையாய் மாறி ‘யாயிற்றே!’ என்று புலம்புகிறார்கள். ஒரு சமயத்தில் ஓர் பையன் மூன்று வயதாயிருக்கும்போது மரணத் தறுவாயிலிருந்தான். அப்பொழுது அவன் அநேகநாள் உபவாசித்து அழுது ஜெபித்து அவனை தாய் மரணத்திலிருந்து விடுவித்தாள். வாலிபனாயிருக்கும் இப்பொழுது அவன் துன்மார்க்கனாக அலைகிறபடி யால், தான் அன்று புத்தீயிளமாய் ஜெபித்த ஜெபத்துக்காக அவள் புலம்பிக் கொண்டிருக்கிறாள்.

  கிடைக்கப்பண்ணினாலும் சில

  இவ்விதமாகவே அநேகர் விவாகம், உத்தியோகம் இடமாற்றங்கள் முதலிய பல காரியங்களுக்காகத் 

  தகாதவிதமாய் விண்ணப்பம்

  பண்ணுகிறார்கள். அன்பானவர்களே! நீங்கள் இவ்விதமாய் விண்ணப்பம் செய்யாது லௌக்க பிரகாரமான எந்தக்காரியத்தையும் தேவி. சித்தந்துக்கு ஒப்புவித்து ஜெபித்துக் கர்த்தருடைய கரத்தில் விட்டுவிட வேண்டும். அப்பொழுது அவர் தம்முடைய சித்தத்தின்படியே உங்களுக்குச் செய்வார். அது உங்களுக்கு ஈன்மை யாகவே இருக்கும்.

  சவுல் ராஜா மரித்தபின்பு, தானிது ஸ்தானத்தில் ராஜாவாகவேண்டுமென்று அவன் அறிந்திருந்தபோதிலும், தனக்கு முன்பாக இருந்த தான் இடையூறுகள் நீங்கித் திறந்தவாசல் இருந்தபடியால் அதுதான் தேவசித்தம் என்று எண்ணி அவன் ராஜன் தானத்தை எடுத்துக்கொள்ள வில்லை. தேவ சித்தத்திலி ருந்து தவறிவிடுவேனோ என்ற பயத்தால், “தான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றில் இருக்கலாமா? என்று கர்த்தரிடத்தில் விசாரித்தான். (2 சாமுவேல் 2:1) இவ்விதமாகப் பல சந்தர்ப்பங்களிலும் தேவசித்தத் தகை குறித்து மிக்க கவனம் செலுத்தினபடியால், தன் ஜீவியத்தின் ஆரம்பம் கலக்கபாயிருந்தபோதிலும், அதன் முடிவு ஆசீர்வாதமும் மேன்மையுமாயிருந்தது. ஆகவே, ஜெபத்திலும் மற்ற எல்லா விஷயத்திலும் தேவசித்தத்தின்படி ஜெபிக்கவேண்டுமென்பது மாத்த ரம்மங்கள் எண்ணமாயிருக்குமானால், உங்கள் ஜூலியம் ஆசிர்வாதமும் ஆகையால்தான் முடிவு அவருடைய மகிமையுமாயிருக்கும். சுற்பனைககா நாம் ருைக்கொண்டு, அவருக்கு முன்பாகப் பிரியமானவை களைச் செய்கிறபடியால் நாம் வேண்டிக்கொள்ளுகிறது எதுவோ, அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம் என்று Iயோவா. 9:22-ல் பார்க்கிறோம். ஆ! நம் தேவன் எவ்வளவு நல்லவர்!1

  அன்றியும் இயேசு கெத்செமனேயில் தோள சித்தத் திற்குத் தம்மை ஒப்புவித்து ஜெபித்ததைக் கவனிக்க லாம். அவர் குந்தப் பாத்திரத்தைப் பானம் பண்ணத் தயங்கவில்லை என்பதை யோவான் 18:11, மத். 20:22 ஈன்னும் வசனங்களை வாசிக்கும்போது மிகத்தெளி வாகத் காண்கிறோம். ஆனால் கஷ்டவெளையில் மனுஷன் தயங்க வேண்டியது வரும் என்பதையும், அவ்வேளையில் பலவீனத்தால் தயங்கிலைம் தேவ சித்தத்திலிருந்து விலகாது தைரியமாய் ஒப்புவிக்க வேண்டும் என்பதையும் காட்ட “பிதாவே உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கும் படிச் செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின் படியல்ல. உபி மூடைய சித்தத்தின்படியே ஆகக்கட வது என்று ஜெபம் பண்ணினார்” என்று லூக். 22:42-ல் வாசிக்கிறேம். நண்பனே! உம்முடைய கஷ்டம் நீங் கும்படி ஜெபிக்கிறீரா ? அவ்லது சித்தத்திற்கு ஒப்பு வித்து ஜெபிக்கிறீரா96

  லூக். 22:43-ல் ” ‘அப்பொழுது வானத்திலிருந் ஒரு தூதன் தோன்றி அவரைப் பலப்படுத்தினான்’ என்று வாசிப்பதுநம் உள்ளத்தைப் பொங்கச் செய்தி தல்லவா? அந்தப்பலத்தால் கல்வாரியில் ஒரு சிறு பிழை யும் முறுமுறுப்புமின்றி முழு உலகத்தின் பாரத்தையும் சுமந்து, ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசி பார்த்து இரட்சிப்பை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்.

  இந்த வசனத்தில் “அப்பொழுது” என்னும் வார்த்தை மிக முக்கியமானது. “என்னுடைய சித்தத்தின்படி யல்ல. உம்முடைய சிந்தத்தின்படி ஆகக்கடவது” என்று ஜெபித்த பின்புதான் தூதன் தோன்றிப் பலப் படுத்தினான் என்பதைக் கவளிக்கத் தவறுதிருங்கள். சகோதரனே! சகோதரியே! நீயும் இவ்விதம் மனப்பூர்வ மாய் ஜெபிப்பாயாகில் உண்ணாவ் தங்கக் கூடாத எவ் வளவு கடுங்கஷ்டமாயிருந்தாலும் மிக இலகுவாய்த் தாங்கி நேர்த்தியாகச் செய்யவேண்டியதைச் செய்து மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கப் பலன் அருள் வார். ஆ! என்ன இன்ப ஜீவியம்!!

  5. விழித்திருந்து ஜெபிக்கவேண்டும். மத். 26:41

  இயேசுவின் சீஷர்கள் கெத்செமனேயில் ஜெபத் தில் தூங்கினபோது, இயேசு விழித்திருந்து ஜெபிக்கச் சொன்னார். இக்காலத்திலும் பல “தவனுடைய பிள்ளை கள் ஜெபத்தில் தூங்குகிறார்கள். இயேசு “ஆவி உற்சாகமுள்ளதுதான்: மாம்சமோ பலவீனமுள்ளது” என்று சொன்னதன் பொருளை அறியாது, தாங்கள் ஜெபத்தில் தூங்குவது குற்றமல்ல; இயேசு சொன்ன தின்படியே மாம்ச பலவினத்தால் ஜெபத்தில் தூங்கலா மென் று எண்ணி பிசாசினால் வஞ்சிச்கப்பட்ட ஒரு சிலர் இந்நாட்களில் இல்லாமலில்லை. இயேசு அவ்விதம் எண்ணி இவ்வார்த்தையைச் சொல்லவில்லை. அவ் வெண்ணத்துடன் சொல்லியிருப்பாராயின் இரக்க முள்ள அவர், தூங்கிக்கொண்டிருந்த அவர்களை “நித்திரை பண்ணுகிறதென்ன ?…..எழுந்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” (லூக். 22:46) என்று சொல்லி எழுப்பியிருக்க மாட்டார். ஆகவே மாம்சம் ஆவிக்கு விரோதமாய்ப் போராடுகிறது என்பதை அறிந்து, ஆவி யில் உற்சாகமடைந்து மாம்சத்தின் பலவினத்தை மேற் கொள்ள வேண்டும் என்பதே அவறது நோக்கமாயிருக் தது. இதை அறிந்த தாவீது “டற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்” என்று ஜெபித்தார். (சங். 51:12) இவ்விதம் உற்சாகமுடைய ஆவி மாம்ச பவளினத்தைத் தாங்கும்போது விழித்திருந்து ஜெபிக்க முடியும்.

  வ்ளிதம் விழித்திருந்து ஜெபிக்க முதலாவதாக உற்சாகமுடைய ஆவி தேவை என்று பார்த்தோம். இன்னமும் பரிசுத்த பவுல், கொலோ. 4:2-ல் “ஸ்தோத் திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” என்று எழுது வதால், ஸ்தோத்திரத்தின் மூலம் ஜெபிக்கமுடியும் என்று அறிகிறோம். விழித்திருந்து

  இயேசுவின் சீஷர்கள் “துக்கத்தால் நித்திரை பண்ணுவதை” இயேசு கண்டு (லூக். 22:45) அவர்களை எழுப்பினார். இதைப்போலவே இக்காலத்திலும் சிலர், அதிகம் ஈஜபிக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் சில காரியங்களுக்காகப் பாரத்துடனும், துக்கத்துட னும் ஜெபிக்க ஆரம்பித்தாலும் சீக்கிரபாய்த் தூங்கு வதைக் காணலாம். துக்கப்படுகிறவர்களுக்கு ஸ்தோத்திரிக்க முடியாது. ஆகவே இவர்கள் ஜெபத் தில் ஸ்தோத்திரம் செலுத்தாதபடியால் தூங்கு கிறார்கள்.

  வியாதி, நிந்தை, வறுமை, மறுஷரால் கைவிடப் படுதல் முதலியவற்றால் துக்கத்தில் மூழ்கி ஜெபிக்க ஆரம்பிக்கும்போது கடந்த காலங்களில் இவ்விதத் தருணங்களில் தேவன் நமக்குக் கொடுத்த விடுதலை களையும், மற்றும் தேவஜனத்திற்குக் கொடுத்த விடுதை களையும், தேவனுடைய சர்வ வல்லமையையும் சிந்தித் துத் துதிக்க வேண்டும். இவ்விதம் சிறிது நேரம் துதிக்கும்போது இருதயத்தின் துக்கம் நீங்குகிறது. அவ்விடத்தை விசுவாசம் கைப்பற்றி உற்சாகமுள்ள ஆவியை உருவாக்குகிறது. இதன் பின்பு. இந்த உற்சாகமுள்ள ஆவியால் எந்தக்காரியத்திற்காக ஜெபிக்க ஆரம்பித்தோமோ, அந்தக் காரியத்திற்காக விழித்திருந்து ஜெபிப்பது மிகவும் இலகுவாகிறது. இவ்விதமாகக் கவபையான தருணங்களில் ஸ்தோத்திரத் துடன் ஜெபத்தில் விழித்திருப்பது தேவ ஒழுங்கான படியால் I தீமோ. 2:1-ல் ஜெபத்தில் கடைசி இடத்தை எடுத்த ஸ்தோத்திரமானது, பிலிப். 4:6-ல் ஜெபத்திற்கு முந்தின இடத்தை எடுத்துக் கொள்ளுகிறது. ஆகவே இதினிமித்தம் விழித்திருந்து ஜெபிக்க, ஸ்தோத்திர மானது ஜெபத்துக்கு மூந்தி வரவேன்டும். ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருப்பதன் முதற்பகுதி இதுவாகும்.

  லூக். 21:36-ஐ வாசிக்கும்போது ஜெபத்தில் விழித் திருக்க வேண்டிய இன்னொரு பகுதியைப் பார்க்கிறேம். இயேசு விழித்திருந்து ஜெபியுங்கள் என்று சொன்னது மாத்திரமல்ல, இங்கு “ஜெபம் பண்ணி விழித்திருங் கள்” என்றும் சொல்லுகிறார். ஆகையால் எந்தக் காரியத்திற்காகவாயினும் ஜெபித்த பின்பு விழிப்பு அவசியமாயிருக்கிறது. நாம் ஒரு காரியத்திற்காக ஊக்கமாய் ஜெபித்து அக்காரியத்தைப் பெற்றுக கொள்ளத் தாமதிக்கும்பொழுது சோர்பு, பயம், சோதனை, துக்கம் முதலியவை உண்டாகும். இக்காவத் தில் இவ்விதமான சோர்பு, பயம், சோதனை, துக்கம் முதலியவைகளுக்கு இடம் கொடாதிருப்பதே ஜெபத் துக்குப் பின்பு விழித்திருப்பதாகும். ஆதியாகமம் 5-ம் அதிகாரத்தில் ஆபிரகாம் தேவனோடு ஜெபித்து, சம்பாஷித்துக் குமாரனை அடைவதாக வாக்குத்தத்தத் தைப் பெற்றுக்கொண்டான். அவன் அதை விசுவாசித் தான். ஆனால் 15-ம் அதிகாரத்தில் இந்த ஜெபத்துக் குப்பின்பு விழிப்பு இல்லாதபடியால் சாரானின் சத்தத் துக்குச் செவிகொடுத்து, இன்றைக்கும் வாக்குத்தத்தத் தின் சந்தரிக்கு விரோதமாக இருக்கும் ஒரு சந்ததிக்குத் தசுப்பனாகிய இஸ்மவேலைப் பெற்றான் என்று வாசிக் கிருேம். ஆம்,ஜெபத்துக்குப்பின்பு விழிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை ஆபிரகாம் நமக்குப் படிப்பிக்கிறார். ஆகவே ஊக்கமாய் ஜெபித்து சந்தோஷத்தைப் பெற்றுக் கொண்டபின்பு கவலையினமாயிராது, ஸ்தோத்திரத்துடனே ஜெபத்தில் விழித்திருக்க வேண்டும். யோசபாத்தும், தானியேலும் அவ்வித மாகவே ஜெபித்தபின்பு ஸ்தோத்திரித்ததை முன்பு பார்த்தோமல்லவா? இதுவே ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருப்பதன் இரண்டாம் பகுதியாகும். மேற்கூறிய காரியங்களைக் கவனித்து விழித்திருந்து. ஜெபிக்கத் தேவன் கிருபை தருவாராக.

  6. உபவாசத்துடன் ஜெபிக்கவேண்டும். அக். 2:37

  பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் நாம் ஆராயும்போது அநேகர் உபவாச ஜெபத்தின் மூலமாக மிகுதியான நன்மைகளையும், ஆச்சரியமான ஜெயங்களையும் அடைந்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து சர்வத்தையும் செய்யக்கூடிய சர்வ வல்லமை யுடையவராயிருந்தாலும், உபவாசத்தின் முக்கியத்தை நமக்குப் போதிக்கும் பொருட்டாக உபவாசித்து ஜெபம் பண்ணினார். I1நாளா. 20-ம் அதிகாரத்தில் யூதாவுக்கு விரோதமாக மூன்று பலத்த ராதிகள் யுத்தத்துக்கு வந்தபோது, அவர்கள் உபவாசித்துத் தேவணைத் தேடினதாக 3-ாம் வசனத்தில் காண்கிருேம். இந்த ஜெபத்தின் மூவமாக அவர்கள் சத்துருக்களின் மேல் களிகூர்ந்து பரிபூரண ஜெயம் பெற்றுக்கொண் டார்கள். இவ்விதமாக நாம் மாம்சம், உலகம், பிசாசு, என்பவைகளை ஜெயித்துப் பரிபூரண ஜெய ஜீவியம் செய்ய உபவாச ஜெபம் மிகவும் அவசியம்.

  தேவனுடைய ஜனங்கள் தங்களைத் தாழ்த்துகிற

  தற்கும், செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும் சத்துருவினால் விலக்கப்பட்டு தேவனால் செய்யப்படும்படிக்கும், உபவாசித்து ஜெபித்ததை எஸ்ற 8:21-22-ல் காண்கிறோம். உபவாசத்தைக் கனம் பண்ணுகிற தேவன், அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றினதைக் கவனிக்கும்போது அது நமது உபவாச ஜெபத்தின் ஆர்வத்தை அனல் மூட்டுகிற தன்றே !

  இயேசு, மாற்கு 9:29-ல் சீஷர்களால் துரத்தக் கூடாதிருந்த பிசாசை உபவாச ஜெபத்தால் துரத்தக் கூடும் என்று போதித்தார். அன்றியும் II சாமு. 12:15-ம், 16-ம் வசனங்களில் தாவீதின் பிள்ஜா வியாறி யாயிருந்ததாகவும், அவன் அதற்காக உபவாசித்து ஜெபித்ததாகவும் வாசிக்கிறோம் ஆகவே மனுஷனர் பிசாசு வெளியரங்கமாய்ப் பிடிக்கும்போது மாத்திர மல்ல, வியாதிகள் கடுமையாகிற கோயிலும் உபவாசித்து ஜெபிக்கவேண்டும். (சங்.35:13) ஆனால் இக்காலத்தில் வியாதிகளுக்காக சிலநாட்கள் ஜெபித்துச் சுகமடையாவிட்டால் தங்கள் விசுவாசத்தை இழந்து மருந்தை நம்புகிறர்கள். அவ்விதம் செய்யாது பிசாசுகளைத் துரத்தவும், கொடிய வியாதிகளைச் சுகப் படுத்தவும் உபவாச ஜெபம் தேவை.

  எஸ்தரும், மொர்தெகாயும், பல உபவாசித்து ஜெபித்தபடியால் (எஸ்தர். 4:3, 16) யூதரும் அழிக்கப்படவேண்டிய ஆயிரக்கணக்கான யூதர்கள் உயிர்பிழைத்து மகிழ்ந்து பூரீம் பண்டிகையை ஆரம்பித்துக் கொண்டாடினர். அன்றியும் நினிவே பட்டணத்தார். உபவாசஜெபத்தால் காக்கப்பட்டனர். (யோனா.3:5, 7) இக்காலத்திலும் ஆயிரக்கணக்கான ஜனங்கள் நாள்தோறும் பாவத்தில் மரித்து நித்திய ஈரகத்திற்குச் செல்கின்றனர். இவர்களை இரண்டாம் மரணமாகிய அக்கினியும், கந்தகமும் எரியும் சுடலி லிருந்து விடுவிக்கும் பொருட்டு, தேவனுடைய ஜனங் கள் உபவாசித்து ஜெயிக்கவேண்டும். நித்தியத்தில் நம் சகோதர சகோதரிகள் நரகத்தில் இருப்பது எவ்வளவு வேதனை ! ஆகவே உபவாசத்துடன் அவர்களுக்காக ஜெபிப்போமாக.

  இன்னமும் நெகேமியா, எருசலேம் இடிக்கப்பட்டு எரிக்கப்பட்டு ஜனங்கள் தீங்கும், நிந்தையும் அனுபவிப் பதைக்கேட்டபோது உபவாசித்து ஜெபித்தார். (நெகே. 1:4) இவ்விதமாகவே தேவனுடைய சபையும் ஆதி நிலையை இழந்து, சோதனைகளாகிய அக்கினியில் எரிந்து (I பேது. 4:12) ஜனங்கள் ஆதி அன்பை இழந்து ஜீவிக்கும்போது உபவாசஜெபம் மிக முக்கிய மானது.

  தேவமகிமையால் நிறைந்திருந்தசபை, கொஞ்சங் கொஞ்சமாய் மகிமையை இழந்துபோவதைக் காண் கிறோம். இத்தருணத்தில் உபவாசித்து அழுது ஜெபிப்பதற்குப்பதிலாகப் பலரும் பலகாரியங்களைப் பேசுவதிலும் மற்றவர்களைக் குற்றப்படுத்துவதிலும் தங்கள் பலனையும், சமயத்தையும் செலவு செய்கிறார் கள். ஆனால் நெகேமியாவைப்போல் உபவாசித்து அழுது ஜெபிக்க ஆரம்பித்தால், எழுத்துக்குரிய எருசலேமைப் பழுதுபார்க்கச்செய்து . மகிமையால் நிரம்பிய தேவன், மறுபடியும் சபைகளையும் உயிரடை யப் பண்ணி மகிமையால் நிரப்புவார். அதற்காக சகோதரனே ! சகோதரியே 1 நீ ஃபவாசித்து அழுது ஜெபித்த நெகேமியாவாக மாறினால் எவ்வளவு நலமாயிருக்கும்!

  இக்காலத்தின் நிலையையும் அவசியத்தையும்

  அறிந்த தேவன், யோவேல் தீர்க்கதரிசியின் மூலமாய் “பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்” என்று யோவேல். 2:15-ல் கூறுகிறார். ஆகவே கவலையின மாயிராது நிச்சயமாகவே உபவாச நாட்களை நியமித்து ஜெபிக்கவேண்டும். இதைத் தனித்தனியாய்ச் செய்வ தன்றி ஜனத்தைக்கூட்டிச் சபையாகவும் செய்யவேண் டும். இவ்விதம் நாம் செய்வோமாயின் தேவன் சீக்கிரமாய் நம் மத்தியில் பெரிய எழுப்புதலை அறுப்பு வதை நாம் கண்டு காரிக்கலாம்.

  தாவிது சகல ஐசுவரியத்தால் நிறைந்த ராஜாவாக இருந்தபோதிலும், உபவாசத்தால் தன்1 ஆத்குமரவை

  உபத்திரவப்படுத்தின தாக சங் 36:13-ல் கிறோம். அதாவது உபவாசத்தால் ஆத்துமா வாசிக் தாழ்மையடைகிறது என்பதை ஆங்கில மொழியில் தெனிவாகக் காண்கிறேம். இவ்விதம் ஆத்துமா தாழ்மையடையும்போது, தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கும் தேவன், உபவாசத்தின் மூலம் ஜீவியத்திற்குத்தேவையான கிருபைகளை அளிக்கிறார். பரி. பவுலும், தன்னுடனிருந்தவர்களும் யாதொன்றி லும் இடறுதல் உண்டாகாதிருக்க உபவாசித்துத் தங்களைத் தேவ ஊழியர்களென்று விளங்கப் பண்ணினார்கள். (II கொரி. 6:3, 5, 10.) இக்காலத் தில் பல ஊழியர்களும் உபவாசத்தை அசதியாக விடுகிறபடியால் ‘கர்த்தருடைய’ ஊழியம் குற்றப்படு வதை எண்ணி நாம் என்னசெய்வோம்!

  அன்றியும் பரி. பவுல் விசுவாசிகளின் உபவாச ஜெபத்தின் முக்கியத்தை 1 கொ. 7:5-ல் காட்டுகிறார். புருஷனையும். மனைவியையும் குறித்து “தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்’ என்னும் பிரமாணம் இருந்தாலும், உபவாசம் விசுவாசி களுடைய ஜீவியத்தில் மிக முக்கியமானபடியால்’ “உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடி சிலகாலம் அவர்கள் பிரிந்திருக்க’ பரி. பவுல் புத்தி சொல்லுகிறர். [ கொரி. 7:5) அன்பானவர்களே ! உபவாசம் எவ்வளவு முக்கியமானது? உங்கள் உபவாச ஜீளியம் எப்படி இருக்கிறது? சகோதரனே ! சகோதரியே ! உன் உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் இருக்கும் தடைநீங்க சிலகாலம் பிரிந்திருந்து உபவாசித்து ஜெபிப்பாயானால் உங்கள்மேலும் உங்கள் குடும்பத்தின்மேலும் தேவன் பெரிய ஆசீர்வாதங்களைப் பொழிந்தருள்வார். “நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து உங்கள் வேலைகளை யெல்லாம் கட்டாயமாய்ச்செய்தால் உபவாசத்தால் வரவேண்டிய ஆசிர்வாதங்களை இழந்துபோவீர்கள். (ஏசா. 58:3, 4) என்பதை மறவாதீர்கள். உபவாசராட்களில் மோசே கர்த்தருடன் பேசிக்கொண்டி ஆ’கவே ருந்து மகிமையால் நிறைந்ததுபோல (யாத். 34: 29, 30) மாமும் கர்த்தருடன்பேசி மகிமையால் நிரப்பப்படக் கர்த்தர் கிருபை புரிவாராக. அன்றியும் கொர்நேலியு உபவாசத்துடன் ஜெபித்தபோது (அப். 10:30-32) தேவன் அவனுக்கு உடனேயே பதிலளித்தது நம் உபவாச ஜெபத்துக்கு யாக்கத்தை உண்டாக்குகிறபடி யால் இவ் ஜெப ஜீவியத்தில் வளரத் தீர்மானிப்போமாக!

  மோசே நாற்பது நாட்கள் உபவாசத்துடன் தேவனோடு பேசிக்கொண்டிருந்ததால் ஜனத்தின் ஜீவியத்தின் நன்மைக்காகப் பிரமாணங்களைப் பெற்றுக் கொண்டான். தேவன் அவனுடன் பேரினதால் அவனுடைய முகம் பிரகாசமடைந்திருந்தது. ” ஆரோ னும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும் பாது, அவன்முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப் பயந்தார்கள்” என்று யாத்திராகமம் 34:30-ல் பார்க்கிறோம். இவ்விதம், உபவாச ஜெபத்தால், நம் ஜீவியத்திற்குத் தேவையான ஆலோசனைகள், பிரமாணங்களைத் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளுவது மாத்திரமல்ல, மற்றவர்களுக்கு முன்பாகப் பிரகாசமான ஜீவியமும் கிடைக்கும். ஆ! தேவன் மனுஷனை எவ்வளவாய்க் கனம்பண்ணுகினர்.

  ஒரு அம்மாள் தன் உபவாசஜெபத்தின் அனுபவத் தைப் பின்வருமாறு கூறுகிறார்கள். “காள் ஒரு தடவை தொடர்ச்சியாக நாற்பதுநாட்கள் உபவாச மெடுத்ததுடன் மற்றும் பலதடவைகளிலும் உபவாச மெடுத்திருக்கிறேன். இவ்விதத் தருணங்களில் சர்ரத் தில் உணர்ச்சியற்று தேவதரிசனங்களையும், வெளிப் படுத்தல்களையும் அடைந்திருக்கிறேன். ஆ! எவ்வளவு மனோகரமான் அனுபவம், பூலோகத்திலிருக்கும்போதே பரலோகத்தின் இன்பத்தை அனுபவிப்பது! “

  மேலும், இயேசு உபவாசஜெபத்தை முடித்தவுடனே சோதிக்கப்பட்டார். அதன் முடிவிலே “உடனே தேவ தூதர்கள் வந்து அவருக்குப் பணிவிடைசெய்தார். கள்** (மத். 4:11) என்றும், “பின்பு இயைசு ஆளியான வருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று” (லூக். 4:14) என்றும் காண்பது எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகின்றது! இவ்விதமாக உபவாசித்து அதன்பின் வரும் சோதனையை ஜெயித்தால், இதவதூதர்களுடைய பணிவிடையையும், தேவ பலத்தையும், மனுவுரிட மிருந்து கீர்த்தியையும் பெற்றுக்கொள்ளுகிறேம். ஆகவே, இவ்வித உபவாச ஜெபத்தில் பெருகி இப் பாக்கியங்களைப் பெற்றுக்கொள்வோமாக.

  7. ஒருமனதுடன் ஜெபிக்கவேண்டும். மத் 19:19.

  ஒருமனஜெபம் இருவகைப்படும். முதலாவதாக தேவன் ஜெபத்திற்குப் பதில் கொடுக்கவேண்டுமாயின் மனுஷனுக்குத் தேவனோடு ஒருமனம் தேவை. மனுஷ னுடைய பாவங்கள், தேவன் அவனுடைய ஜெபங்களுக் குச் செவிகொடுக்கக் கூடாதபடித் தடைபண்ணு கின்றன. (ஏசா 59:2) சவுல் இராஜா தர்த்தருடைய சித்தத்தைச் செய்யாதபடி, பாவம் செய்த பிள்பு கர்த்தரைத் தேடினான். {I சாமு. 15:24} ஆணுால் கர்த்தர் செவிகொடாதபடியால் “தேவன் என்னைக் கைவிட்டு எனக்கு மறுஉத்தரவு அருளுகிறதில்லை” என்று அலறுகிறான். (1 சாமு. 28:15) தேவன் தெரிந்து கொண்டு இராஜாவாக்கின மனுஷன் பாவம் செய்த போது, தேவன் அவன் ஜெபத்திற்கு மறுஉத்தரவு அருளாதிருந்தார். அவ்விதமே ஏசா. 1:15-ல் சொல்வதுபோல் நாம் “மிகுதியாய் ஜெபம்பண்ணினு லும் கேட்கமாட்டேன்” என்கிறார்.

  ஆகையால் தேவ சமூகத்தைப் பிரிக்கிறதான தேவசித்தம் செய்யாமை, தற்பெருமை, சுசப்பு, கவலை முதலியவற்றை அறிக்கைசெய்து தேவனோடு ஒப்புர வாகுதல் மிகத்தேவை. இம் முக்கியத்தை அறிந்த பரி. பவுல், “தேவனோடு ஒப்புரவாகுங்கள்” என்று வேண்டுகிறார். (2 கொரி. 5:20) இவ்விதமாகத் தேவனோடு ஒப்புரவு அல்லது ஒருமனமானபின்புதான் ஜெபம் கேட்கப்படும்.

  மறுஷனோடு ஒருமனமாக இருந்து ஜெபிப்பது ஒருமன ஜெபத்தின் இரண்டாவது பகுதியாகும்.

  ஆகையால்தான் இயேசு “நீங்கள் நின்று ஜெபம்

  பண்ணும்போது ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறைவுண்டாயிருக்குமானால் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்க&r மன்னியாதிருப்பார்” என்று மாற்கு 11:25, 26-ல் சொன்னார். தவிரவும், தேவ சமூகத்தில் வரும்போது “உன்பேரில் உன் சகோதரனுக் குக் குறைவுண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில் …முன்பு உன் சகோதரனோடு ஒப்புரவாகி பின்புவந்து காணிக்கையைச் செலுத்தவேண்டும்” என்று இயேசு மத். 5:23, 24-ல் கூறுகிறார். ஆகவே மனுஷரோடு உள்ள ஒப்புரவாகுதல் மிக அவசியம். தான் ஆகையால் சகேயு மனுஷரோடு ஒப்புரவாகிறதற்குத் தீர்மானித்தபின்பு மாத்திரமே இயேசு “இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது” என்று சொன்

  மேற்கூறிய இரண்டுவித ஒப்புரவாகுதலையும்

  அறிந்த யாக்கோபு. தான் எல்லாவிதத்திலும் ஆசீர் வதிக்கப்பட்டிருந்தபோதிலும், தன் நகப்பன் வீட்டிற் குப் போகும்போது முதலாவது தேவனோடு தன் பெயரைக் கூறி ஒப்புரவானான். அன்றியும் தானியேல் தேவனோடும் மனுஷனோடும் ஒப்புரவான வனாக இருந்ததைக் காண்கிறேம். (தானி. 6:22) ஆகவே அவன் ஜெபம்பண்ணத்தொடங்கினபோது பரலோசும் திறக்கப்பட்டு ஜெபத்திற்குப் பதில்வந்தது.

  ஆகவே நாமும் தேவனோடும் மனுடிரோடும் ஒரு மனப்பட்டு ஜெபிப்போமாயின், பட்சபாதமில்லாத தேவன் நம் ஜெபங்களுக்கும் யுடனுடன் பதிலளிப் பார்.

  யாத். 30:35-ல் ஜெபத்திற்கு அறிகுறியாக இருக் கும் தூபம் (சங். 41:2) இராது. ஒரு நிறையான நான்கு தனிப்பொருளாக பொருட்கள் பொடிக்கப்பட்டு ஒன்றாகித் தூபவர்க்கமாகிறது. இது சிந்தையைக் தவர்ந்துகொள்ளுகிறதல்லவா ! ஜெபத்தில் இருக்கவேண்டிய ஒருமனதைக் காட்டும் பொருட்டாகவே தேவன் இவ்விதம் செய்யச்சொன் னார். tib 133-b சங்கீதத்தை ஆராயும்போது சகோதரர்கள் ஒருமித்து ஜீவிக்கும்பொது இன்பம், நன்மை, ஜீவன் என்பவைகள் கிடைப்பதன்றி என்றென்றைக்கும் உள்ள ஆசீர்வாதத்தையும்” பெற்றுக்கொள்வதைக் கவனிக்கிறேம். ஒருமித்து ஜீவிக்கும்போது இவ்வளவு பெரிய ஆசீர்வாதங்கள் உண்டானால், ஒரு மனதுடன் ஜெபித்தால் கிடைக்கும் ஆசீர்வாதங்களுக்கு அளவுண்டோ 1 ஆகவே ஒருமனப் பட்டு ஜெபிக்க ஜாக்கிரதையாக இருந்து (எபே. 4:3} மிகுதியான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளத் தேவன் உதவி புரிவாராக.

  ஒருமனப்பட்டு ஜெபிப்பதில் இன்னும் ஒரு முக்கியமான பகுதியுண்டு. அதாவது ஜெபிக்கும் ஒரே மனிதனுடைய சிந்தைகள் சிதறது. ஒருமனம் அல்லது ஒரு முகம் அடையவேண்டும். யோசபாத் திற்கு எதிராகத் திரளான ஜனங்கள் வந்தபோது அவன் முதலாவதாக பயந்ததாக வாசிக்கிறோம். பயம்என்னும் வார்த்தைக்குள் அநேக சிந்தைகள் இருப்ப தைத் தாவீது, “என்னுடைய எல்லாப் பயத்துக்கும்” என்று சங் 34:4-ல் சொல்வதால் அறிகிறோம். ஆகவே யோசபாத் பயந்தபொழுது யுத்தத்திற்குப் போகலாமா, அல்லது சமாதானம் பண்ணலாமா, அல்லது போர் வீரர்களைக் கூடுதல் இராணுவத்தில் சேர்த்துப் போர் ஆயுதங்கனைக் கூடுதலாக உண்டுபண்ணலாமா, அல்லது வேறு ராஜ்யங்களின் உதவியை நாடலாமா என்னும் பல சிந்தைகள் அவனுக்குள் வந்திருக்கலாம். ஆனால் அவன் அவை எல்லாவற்றின்மேலும் ஜெயம் கொண்டு அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்த தன் முகங்களை “கர்ந்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப் படுத்தினான்’ என்று வாசிக்கிறேம். இவ்விதமாக அவன் தனக்குள் ஒருமனப்பட்டபின்பு ஜெபித்து ஜெயித்தான்

  இவ்விதமாசு ஒரே மனிதன் தனக்குள் ஒருமனப் பட்டு ஜெபிக்கும்போது அவனுக்கு உதவி செய்யும் பொருட்டு கர்த்தருடைய கண்கள் பூமியெல்லாம் உலாவிக்கொண்டிருக்கிறதை II நாளா. 16:9-ல் வாசிக் கிருேம். இங்கு ஒரே சிந்தை அல்லது ஒரே இருநயம் என்பதைக் காட்ட உபயோகித்திருக்கும் த்தம இருதயம்” என்னும் பதத்திற்கு “ஏஹாக்கிரத” என்று மலையாள பாலையில் உபயோகித்திருப்பது கவனிக்கத் தக்கது. ஆகவே ஜெபித்துக்கொண்டிருக்கும்போது எழும்பும் சிந்தைகளைச் சிதறவிடாமல் பவுல் பல் சொல்வதுபோல் “சிந்தைகளை சிறைப்படுத்தி” (IIகொரி, 10:5) ஒரே மனதுடன் ஜெபிப்போமானால் அந்த ஜெபங்களுக்குப் பதில் அளித்துத் தம் வல்லமை யைத் தேவன் விளங்கப் பண்ணுவார்.

  உம்முடைய கஷ்ட நஷ்ட, கலக்கமான வேை சுளில் உத்தமமாக ஜெபித்தால், உத்தமர்களைத் தேட பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கும் அவருடைய கண்கள், உம்மையும் கண்டுபிடித்து தம்முடைய சர்வ வல்லமையை கூமது ஜீவியத்திலும் வெளிப்படுத்தி உதவி செய்வார்.

  இவ்விதமாக யோசபாத் ஒருமுகப்பட்டு ஜெபித்த படியால், கர்த்தர் அவனுக்குப் பூரண ஜெயத்தைக் கொடுத்ததுடன் சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலயும் அமரிக்கையையும் கட்டனை யிட்டார். (II நாளா. 20:30.) இவ்விதம் நமக்கும் செய்ய உண்மையுள்ளவராய் இருக்கிறபடியால், ஒரு மனதைக் காத்துக்கொளள ஜாக்கிரதையாக இருப் போமாக.

  8. ஊக்கமாக அல்லது கருத்தாசு ஜெபிக்க வேண்டும். யாக். 5:16,17.

  ஜெபத்தைக் கேட்கும் தேவன் நாம் எவ்விதமாய் ஜெபிக்கிறோம் என்பதைக் கவனித்து அதன் பின்பு தான் பதில் அளிக்கிறார். ஆகையால்தான் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் “உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும்” கர்த்தர் சமீபமாயிருக்கிறார் என்று சங். 145:18-ல் வாசிக்கிறோம். இதிலிருந்து சிலர் உண்மையாகவும், சிலர் உண்மை யின்றிப் பெயருக்காமி அல்லது கடமைக்காகவும் ஜெபிக் கிறார்கள் என்று காண்கிறோம். ஒரு காரியத்திற்காக உண்மையாக ஜெபிக்கும்போது, நிச்சயமாய் அதைப் பெற்றுக்கொள்ளவேண்டும். என்னும் வைராக்கியம் உண்டாகிறது. (அப்பொழுது ஜெபம் கேட்கப்படு வதற்குத் தடையாக இருக்கும் பாவங்களை அறிக் கையிட்டு நீதிமான்களாகிறார்கள். நீதிமான்களான பின்புதான் பாக்கமாக ஜெபிக்கக்கூடும். ஆகையால் தான் நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளது என்று யாக். 5:16-ல் வாசிக் கிறோம். 17-ம் வசனத்திலும் எலியா நீதிமானாக இருந்தபடியால்தான் அவ்விதம் ஜெபித்து ஜெபத்திற் குப் பதிலைப் பெற்றுக்கொண்டார்.

  யாக்கோபு தன் சகோதரனுக்குப் பயந்து வியா குலப்பட்டு தேவனுடைய ஆசீர்வாதத்திற்காகப் போராடுவதைக் காண்கிறோம். (ஆதி. 92:7) இச்சந்தர்ப் பத்தில் அவன் இராத்திரியில் எழுந்து மக்கமான ஜெபத்திற்குத் தடையாயிருக்கும் மனைவி மக்கள் முதலிய எல்லோரையும், ஆற்றிற்கு அக்கரைப்படுத்தித் தனிமையாய் இருப்பது கவனிக்கப்படத்தக்கது. (ஆதி. 32:22-26.) அன்றியும் தலை சாய்க்க இடமற்ற இயேசுவும், இவ்வித ஊக்கமான ஜெபத்திற்காக மலை மேல் ஏறித் தனிமையாக இரா முழுவதும் ஜெபித்தார். (லூக். 6:12,13) இன்னமும் “அவரோ வனந்தரத்தில் தனித்துப் போய் ஜெபித்துக்கொண்டிருந்தார்.” என்று லூக்கா 5:16-ல் காண்கிறோம்.

  ஆகவே ஊக்கமான ஜெபம் செய்யும்பொருட்டு பாவ அறிக்கை மாத்திரமல்ல, சூழ்நிலையையும் அனு கூலமாக்கிக்கொள்ள வேண்டும். இவ்விதம் ஜெபிக் கும் பொருட்டாகத்தான் இயேசு அறைவீட்டுக்குள் பிரவேசித்துக் கதவைப் பூட்டி ஜெபிக்கச் சொன்னார். (மத்.6:5)

  தானியேல் தன் ஜெப ஜீவியத்தில் இவ்விதம் செய்து ஜெயத்தைப் பெற்றதைக் கவனிக்க மறவாதீர் ! யாக்கோபும் இயேசுவும் தங்கள் ஊக்கமான ஜெபத்திற் காக இராக்காலத்தைத் தெரிந் துரொண்டு சூழ்நிலையை அனுகூ, லமாக்கிக்கொண்டதுபோல, நாமும் இராக் காலங்களில் பக்திவைராக்கியத்துடன் ஜெபிக்க ஆரம்பித்தால், நம் ஜெபம் ஊக்கமான ஜெபமாகி மிகுந்த நன்மைகளைக் கொடுக்கும்.

  இங்விதம் பாவங்க ைஅறிக்கையிட்டும், சூழ் நிலைளய அனுகூடலமாக்கியும் ஊக்கமான ஜெபத்தை ஆரம்பிக்கவேண்டும். சிலர் தங்கள் ஜெபத்தில் ஒரு வித ஊக்கமும் இன்றிச் சிறிதுநேரம் தங்கள் காரியங் தளைத் தேவளிடம் சொன்னபின்பு. வருகிறதுபோல் வரட்டும் என்று எண்ணி ஜெபத்தை முடித்து விடுகிறார். கள். இவ்விதமாகப் பிசாசு சயக்கமாய் ஜெபிக்க விடாமல் வஞ்சிப்பதை இவர்கள் அறியாது, தேவன் ஜெபத்திற்குப் பதில் தரவில்கூயே என்று பின்பு எண்ணிச் சோர்ந்துபோகிறார்கள். இவ்விதமாகப் பிசாசு இக்காலத்தில் பல தேவனுடைய பிள்ளைகளை வஞ்சித்து வைத்திருப்பதைக் காண்பது. எவ்வளவு வேதனையைத் தருகிறது!

  இவ்வித வஞ்சனையிலிருந்து தப்பவும், ஜெபத்திற் குப் பதிவைப்பெற்று ஆசிர்வாதங்அனுபவிக்கும் பொருட்டாகவும் யாக்கோபைப்பால் (ஓசி. 12:4) “ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்” என்று விடாப்பிடியாய் ஊக்கமாய் ஜெபித்தல் தேவை. இவ்விதம் நாம் பக்கமாக ஜெபிக்கவேண்டும் என்று வற்புறுத்துவதைக் “கர்த்தர் எங்களுக்கு இரக்கம் செய்யும் வரைக்கும் எங்கள் கண்கள் அவரையே நோக்கி இருக்கிறது” என்றும் (சங். 123:2) அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும் வரைக்கும் அவரை அமர்ந்திருக்க விடாதிருங்கள்” என்றும் (ஏசா. 62:7) வாசிக்கிறோம், ஆகவே இவ்விதம் ஊக்கமாய் ஜெபிப்போமாயின், யாக். 5:18-ல் மழையைப் பெற்றுக்கொண்டதுபோல வும், 16-ம் வசனத்தில் சுகத்தைப் பெற்றுக்கொண்டது போலவும் மாத்திரமல்ல, இன்னமும் அநேக நன்மை களைப் பெற்றுக்கொள்வோம். தேவன் அதற்குக் கிருபை அருள்வாராக

  சிலர் தங்கள் சொந்தக் காரியங்களுக்காக கமாய் ஜெபிப்பார்கள். ஆனால் மற்றவர்களுக் காகக் கடமைக்காக மாத்திரம் ஜெபிப்பது இயல்பு. மோசே ஜனங்களைத் தேவன் அழிக்காதபடித் தன்னை ஈடாகவைத்து ஜயக்கமாய் ஜெபித்து ஜனத்தைக் காத்துக்கொண்டார். (யாத். 32:32) எலியா ஜனங்கள் மழையின் ஆசீர்வாதத்தை அனுபவிக்க மழைக்காக ‘ஊக்கமாய் ஜெபித்துத் தேசத்திற்கு ஆசீர்வாதத்தை உண்டுபண்ணிஞர். இவ்விதம் மற்றவர்களுக்காகவும் ஊக்கமாய் ஜெபிப்போமாயின் நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொடுக்கும். ஆசீர்வாதத்தின் பாத்திரங்களாயிருப்போம். ஆ! இது என்ன பாக்கியம் 

  9. விசுவாசம் உள்ளவர்களாய் ஜெபிக்க வேண்டும். மத். 21:22.

  இயேசு மத். 21:22-ல் “நீங்கள் விசுவாசம். உள்ளவர்களாய் ஜெபத்தில் எவைகளைக் கேட்கிறீர் களோ அவைகளைப் பெற்றுக்கொள்வீர்கள்” என்றார். ஆகவே நம் ஜெபம் கேட்கப்படவேண்டுமாயின் விசுவாசத்துடன் ஜெபிக்கவேண்டும்.

  நாம் தானியேலின் ஜெபத்தைக் கவனிக்கும்போது அவர் விசுவாசத்துடன் ஜெபித்ததற்கு அறிகுறியாக ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தை முடித்ததாகக் காண்கிறோம். (தானி. 6:10) அன்றியும் அவன் தேவன் பேரில் விசுவாசமாய் இருந்ததாக தானி. 6:23-ல் வாசிப்பதுடன் எபி. 11-ல் விசுவாசத்தினால் ஜெயம் அடைந்தோரின் பட்டியலில் “விசுவாசத்தினால் சிங்கங்களின் வாயை அடைத்தார்கள்” என்றும். வாசிக்கிறோம். தேவன் சிங்கங்களின் வாயிலிருந்து தப்புவிக்க வல்லவர் என்று தானியேல் விசுவாசித்து ஜெபித்தார்; அதனால் விடுதலையும் பெற்றார்.

  இயேசு 5000 ஜனங்களைப் போஷித்தபோது 5 அப்பங்களையும் 2 மீன்களையும் கையில் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து ஆசிர்வதித்தது ஜெபத்திற்கு அறிகுறியாக இருக்கிறது. (மத். 14:19) ஆனால் இவ்னிதம் ஜெபிப்பதற்கு முன்பு அவருடைய விசுவாசத்தின் கிரியையைக் காண்கிறோம். ஜெபித்தால் நிச்சயமாகவே 5 அப்பங்களும் 2 மீன்களும் பெருகும். என்றும், அதைக்கொண்டு 5000 ஜனங்களைப்

  போஷிக்கக் கூடும் என்றும் விசுவாசித்தபடியால்தான் ஜெபிப்பதற்கு முன்னதாகவே ஐம்பது, ஐம்பது பேராக உட்காரவைத்தார். அவர் விசுவாசித்து ஜெபித்தது. போலவே சம்பவித்தது. (லூக். 9:13-17)

  இவ்விதமாக நாம் விசுவாசம் உள்ளவர்களாக ஜெபிப்போமானால் ஜெபத்தை ஸ்தோத்திரத்துடன் முடிப்பதோடு, கண்களால் காணுதிருக்கிறதைக் கிடைத்தது என்று விசுவாசித்து அதனால் விசுவாசக் கிரியையும் செய்வோம். இவ்விரண்டும் இல்லையேல் நம் ஜெபத்தில் விசுவாசம் இல்லையென்று வெளிப்படு கிறது. சிலருடைய ஜெபத்தில் விசுவாசம் பூரணமாய்க் கிரியை செய்யாது சந்தேகத்துடன் ஜெபிக்கினார்கள். இவர்கள் தேவனுடைய சர்வ வல்லமையைச் சிந்திப்ப தால் விசுவாசம் உருவாகிறது. இவ்வீதம் விசுவாசித் துக் கொண்டிருக்கும்போது பிராசானவன் இதற்கு எதிராக இருக்கும் சூழ்நிலையைக் காட்டுகிறான். இதைப்பார்க்கவே இவ்விரண்டும் கலந்து சந்தேகம் உண்டாகிறது. இவ்ளிதம் ஜெபிக்கிறவர்களைக் குறித்து ‘அப்படிப்பட்ட மனுஷன், தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக” என்று யாக். 1:7-ல் பார்க்கிறோம். இயேசு சமுத்திரத் தில் நடக்கிறதைப் பேதுரு பார்த்தபோது தேவ வல்லமையை விசுவாசித்து “நிரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளை யிடும்” என்று ஜெபித்தார். விசுவாசத்தைக் கனம் பண்ணும் இயேசு, என்றார். அவ்விதமே பேதுரு, “படகைவிட்டு இறங்கி நடந்தார்” ஆனால் சீக்கிரத்தில் சூழ்நிலையாகிய காற்று பலமாய் இருக்கிற தைக்“கண்டு!” அமிழ்ந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் “ஏன் சந்தேகப்பட்டாய்” என்று இயேசு கேட்டார். (மத். 14:26-31) இதிலிருந்து பேதுரு முதலாவது விசுவாசித்துப் பின்பு சந்தேகப்பட்டபடியால் தண்ணீரில் அமிழ்ந்தார் என்று காண்கிரிகும். ஆசுவே சூழ்நிலைகளைக் காணாதபடி அல்லது சிந்தியாதபடிக் சுவனமாய் இருந்து விசுவாசம் உள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்போமோ அவைகளை யெல்லாம் பெற்றுக்கொள்வோம்.

  10. இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கவேண்டும். யோவா. 15:16.

  யோபு நீதிமானாக இருந்தபோதிலும் தன்

  உபத்திரவ காலத்தில் “ஒரு மறுப்புத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுவதுபோல (Plead) தெவ னோடு மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டா யிருந்தால் நலமாயிருக்கும்” (போபு. 16:21) என்று அங்கலாய்க்கிறார். இதிலிருந்து புழைய ஏற்பாட்டில் தேவனுக்கும் மறுஷனுக்கும் இடையில் மத்தியஸ்தர் ஒருவர் நிலைவரமாக இருக்க வில்லையென்றும், மத்தி

  யஸ்தர் ஒருவர் தேவையென்றும் காண்கிறோம். இவ்விதம் மத்தியஸ்தர் இல்லாதிருந்து காலத்

  தைக் குறிப்பிடும் பொருட்டாக இயேசு சீஷர்களிடம் இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் “கேட்களில்லை” என்றார். (போவா. 16:24)

  இதற்காகவே இயேசு எல்லோரையும் மீட்கும் பொருட்டுத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்து நமக்கும் தேவனுக்கும் மத்தியஸ்தர் ஆளூர். (1 தீமோ. 2:5) நாம் அவைகளிளின்று நீங்கிப் பூரணமாகும்படி நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். ([யோ. 2:1) இவ்வித மாசு இயேசு, மத்தியஸ்தரின் முதல் கடமையை இரவு பகல் தூங்காது நமக்காகச் செய்துகொண்டிருக்கிறார்.

  நம்முடைய குறைகளினால் அழிக்கப்படாது.

  அன்றியம் “இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழாமிஞருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று நாவுகள் என்று யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும் எல்லா நாமத்துக் கும் மேலான நாமத்தைத் தந்தருளினார்” பிலி, 2:10, 11-ல் காண்கிறோம். இவ்வசனத்தில் பிதாவானவர் குமாரனுக்கு “எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தைத்” தந்தருளின அல்லது கொடுத்த முக்கிய காரணத்தைக் காண்கிறேம். சகல ஜனங் களும் இயேசுவுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு அவரை அறிக்கை பண்ணும் போது பிதாவாகிய தேவன் மகிமைப்படுகிறார். பிதாவாகிய தேவன் இந்த மேலான நாமத்தைத் தந்தருளி இவ்விதம் குமாரனைக் கனம்பண்ணுவது பிதாவின் ஒழுங்காக இருக்கிறது. ஆகவே நாம் குமாரனை அறிக்கைபண்ணி அவர் ராமத்தின் மூலம் வேண்டிக்கொள்ளும்போது குமாரனை மாத்திரமல்ல பிதாவையும் மகிமைப்படுத்துவதாகும். ஆகையால் இரியசு யோவா. 14:13-ல் “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்டீர்களோ குமாரனில் பிதா மதிமைப்படும்படியாக அதைச் செய்வேன்” என்று வாக்குத்தத்தம் செய்கிறார். ஆ! என்ன ஆனந்தம் !

  ஆகவே இயேசு நமக்கு மத்தியஸ்தராகி நமக்கா சுப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறபடியாலும், பிதாவை மகிமைப்படுத்துப்பொருட்டு அவர் குமாரனுக்கு எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தைக் கொடுத்திருக்கிறபடியாலும் நாம் இயேசுவின் நாமத் தில் விண்ணப்பம் பண்ணவேண்டும். இவ் இரகசி யத்தை அறிந்த பேதுரு அலங்கார வாசலண்டையில் பிச்சை கேட்டுக்கொண்டிருந்த சப்பாணியை “இயேசு வின் நாமத்தினாலே எழுந்து நட” (அப். 3:6) என்று சொல்லி நடக்கச் செய்தது மாத்திரமல்ல, ஜனங்கள் அதைக் குறித்து ஆச்சரியப்பட்டபோது “அவருடைய நாமம்……இவனை பெலப்படுத்தினது” (அப். 3:16) என்று சொல்லி, இயேசுவின் நாமத்தைக் கனம்பண்ணி அவர் நாமத்தினிமித்தம் ஜெபிக்கவேண்டிய முக்கியத் னதயும் காண்பித்தார். அன்றியும் “என் நாமத்தினாலே நீங்கள் இதைக்

  கேட்டாலும் செய்வேன்” என்று இயேசு வாக்குப் (யோவா (14:14) பண்ணியிருக்கிறபடியாலும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க மறவாதீர்கள் !

  இம்மட்டும் தாம் எவ்விதம் ஜெபிக்கவேண்டும் என்று சில காரியங்களைப் பார்த்தோம். இளிமேல் நாம் ஏன் ஜெபிக்கவேண்டும் என்று சிந்திப்பது நம் ஜீவியத்திற்குப் பிரயோஜனமாயிருக்கும்.

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *