4 . ஏன் ஜெபிக்க வேண்டும்
1. நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்
தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு ஜெபம் தேவை. (I தீமோ. 2:1, 2)
தேவனுடைய பிள்ளைகள் மேற்கூறிய வசனத்தின் படி ஜெய ஜீவியம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் பல தடவைகளிலும் பல் பலவினங்களால் மேற்கொள்ளப்பட்டுக் கலக்கம் அடைந்து நல்லொழுக் கம் இல்லாமல் போகிறபடியால் மற்றவர்களிடமிருந் தும் நற்சாட்சியின்றி ஜீளிப்பது வேதனைக்குரிய காரியமாகும்.
இஸ்ரவேல் ஜனங்கள் ஆயி பட்டணத்தைப்
பிடிக்க வந்தபோது தோல்வி அடைந்து கலங்கினார்கள். ஆகையால் யோசுவா கர்த்தருக்கு முன்பாக விழுந்து’ ஜெபித்தான்.(யோசுவா 7:6-9) இதன் பின்பு 10-வது வசனத்தில் ‘அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி’ என்று வாசிப்பது மிக ஆறுதலைக் கொடுக் கிறது. கர்த்தர் யோசுவாவிடம் அவன் செய்ய வேண்டிய காரியங்களைச் சொல்லிக்கொடுத்தார். அவன் அப்படியே செய்தான். இஸ்ரவேலர் ஆயி பட்டணத்தை அழித்துப் பூரண ஜெயத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
அன்றியும் யோசபாத் தனக்கு முன்பு வந்த சத்துருக்களால் பயந்தபோது. “எங்கள் தேவனே….. எங்களுக்கு விரோதமாய் வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெல னில்லை” என்று சொல்வி கர்த்தருக்கு முன்பாக நின்ற போது (II நாளா. 20:3,12,13) கர்த்தர் அவர்கள் செய்யவேண்டியவற்றைச் சொன்னார். அவர்கள் அப் படியே செய்தபடியால் கர்த்தர் அவர்களை, அவர்கள் சத்துருக்களின்மேல் களிகூரச் செய்தார். அன்றியும் மிக உயர்ந்த நிலையை நம்பாமல் ஜெபித்துக்கொண் டிருந்தான். (தானி. 6:3,10) ஆகவே கர்த்தர் சோதனை யிலிருந்து ஆச்சரியமான ஜெயத்தைக் கொடுத்துத் தம் நாமத்தை மகிமைப் படுத்தினார். இவ்விதமாகவே நாம் சோதனைக ைஜெயிக்க ஜெபிப்போமாயின் எவ் விதக் கொடிய சோதனையாக இருப்பினும் பட்சபாத மில்லாத தேவன் பரிபூரண ஜெயமளிப்பார். இவ்னித அனுபவித்த பரி. பவுல் “இவை எல்லா நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம்” (ரோ. 8:37) என்று ஆனந்தமாய் முழங்குவது நம்மைத் தைரியப்படுத்துகிறதல்லவா! ஆம்! அல்லேலூயா!!
3. இயேசுவின் இரண்டாம் வருகையில் எடுத்துக்கொள்ளப்படுமாறு ஜெபிக்க வேண்டும். (லூக், 21:36)
“ஆகையால் இனி சம்பவிக்கப்போகிற இவை கருக்கெல்லாம் நீங்கள் தப்பி மனுஷ் குமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவ தற்கு எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள்” என்றார்.
இயேசு தாம் மறுபடியும் வருவதையும், அதற்கு முன்பு நிறைவேறும் அடையாளங்களையும் லூக். 21-ம் அதிகாரத்தில் சொன்னார். அப்பொழுது அவருக்காக வாஞ்சையோடு காத்திருக்கிறவர்கள் (எபி. 9:28) அவரைச் சந்திக்க அவருக்கு “எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப் படுவார்கள்” என்று ஆவியானவர் I தெச. 4:16,47-ல் சொல்லுகிறார். ஆ இது என்ன பாக்கியம்!! இவ்வித மாக நம் மீட்பரை ஆகாயத்தில் நாம் சந்திக்க வேண்டு மாயின் எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருக்க வேண்டும்.
இயேசு சொன்ன அடையாளங்களையும், (மத். 24:3-1g) உலகத்தில் நடக்கும் சம்பவங்களையும் நாம் கவனிக்கும்போது, இயேசு அதிசீக்கிரமாய் வருகிறர் என்பது மிக நிச்சயமாகும். பஞ்சம், கொள்ளைநோய் முதலியவைகள் சாதாரணமாயிற்று. தினப்பத்திரி கைகளைக் கருத்தாய்ப் படிக்கும்போது, வாரத்தில் ஒரு முறையாவது பூமியின் எப்பகுதியிலாயினும் பூமியதிர்ச்சி உண்டாகாமல் இல்லை. முழு உலகமும் யுத்தத்தின் செய்தியால் நிறைந்திருக்கிறது. சமா தானம், சமாதானம் என்று சொல்லிக்கொண்டிருந்த நம் ராஜியமும் யுத்தத்தில் ஈடுபடவேண்டியதாயிற்று வானத்தில் அனேக அடையாளங்கள் காணப்படு கின்றன. சமீபத்தில் வியூயார்க் (New york) பட்டண எத் தில் வானத்தில் ஒரு நீண்ட வெளிச்சம் (streak of light) திடீரெனக் காணப்பட்டு ஏறக்குறைய 30 கிமிடங்கள் அப்படியே இருந்தது. உபாத்திமார் மாணவர்களைப் பாடசாலையிலிருந்து வெளியே அனுப்பிக் காண்பித்தனர். யூதரின் செய்தி மிக முக்கியம். அவர்கள் இராஜியத்தைப்பெற்று நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் செழித்தோங்கு வதை இங்கு வரையாமலேயே நீங்கள் அறிவீர்கள்.
“அறிவும் பெருகிப்போம்” என்னும் இன்னொரு அடையாளத்தையும் தானி. 12:4-ல் சொல்லுகிறார்.
ஆ! இதைக்குறித்து நாம் என்ன சொல்லு வோம்! வான வெளியில் மனுஷன் தன் அறிவின் விருத்தியினால் நடக்க ஆரம்பித்துவிட்டாள். சீக்கிரம் சந்திரனுக்குள் பிரவேசிக்கப் போகிருளும். மனுஷனுடைய உணர்ச்சி களைக் காட்டும் கருவிகளைக் கண்டுபிடித்திருக்கிறார் சுள். இவ்விதக் காரியங்கள நாம் அறிந்திருக்கிற படியாலும், இவை நாள்தோறும் பெருகி வருகிற படி யாலும் நாம் இங்கு அதிகம் வரையத் தேவையில்லை.
கிறிஸ்தவர் மத்தியில் கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்பி அநேகரை அற்புத அடையாளங்களால் வஞ்சிக் கிறார்கள். அனேகருடைய அன்பு தணிந்து போகிறது. (மத். 24:4,5,11,12) அன்றியும் தேவபக்தியின் வேஷத் தைத் தரித்துக்கொண்டு அதன் பெனை மறுதலிக்கிறார் கள். (II தீமோ. 3:1-5) ஓர் சிறு கூட்டத்தார் பரி சுத்தத்தை வாஞ்சித்துப் பரிசுத்தத்திலும், பெருங் கூட்டத்தாராகிய மற்றவர்கள் அக்கிரமத்திலும் வளரு கிறார்கள். தேவஜனம் இந்நிலையில் இருக்கும்போது “இதோ சீக்கிரமாய் வருகிறேன்.” என்று தேவன் வெளி. 22:11,12-ல் சொல்லுகிறார்.
ஆகவே இக்காலத்தில் அவரைச் சந்திக்க ஆயத்த மாக இருக்கவேண்டும். பரிசுத்தம் இல்லாமல் ஒரு வனும் அவரைச் சந்திக்கவே முடியாது. (எபி. 12:14) இப்பரிசுத்தத்தை மூன்று விதமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
1. இரத்தத்தினால் உண்டாகும் பரிசுத்தம்
Iயோவான் 1:7,9 ‘இயேசு “றிஸ்துவின் இரத்தம் சகல பாவங் சுணயும் நிக்கி நம்மைச் சுத்திகரிக்கும். நம்முடைய பாவங்களை மெய் மனஸ்தாபத்துடன் இயேசுவினிடம் அறிக்கையிட்டால், அவைகளை மன்னித்துச் அத்தி சரிக்கிறார். ஆனால் “தன் பாவங்களை முறைக் கிறவன் வாழ்வடையமாட்டான்,”) (. 28:13) இயேசு உன் பாவங்களுக்காகவும் இரத்தம் சிந்தி மரித் தார். (எபி. 2:9) ஆகையால் உடன் பாவங்களை அறிக் கை செய்து இயேசுவின் இரத்தத்தால் பரிசுத்த மாக்கப்படுவாயாக.
2. வசனத்தால் உண்டாகும் பரிசுத்தம்
யோவான் 17:17
நாம் வசனத்திற்குக் கீழ்ப்படிந்து ஜீ.விக்கும்போது நம் ஜீவியத்தில் பரிசுத்தம் உண்டாகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு வந்தாலும், எகிப்தியர் (பார்வோன்) அவர்களை மறுபடியும் அடிமைகளாக்கும் பொருட்டுப் பின்தொடர்ந்து வந்தார்கள். அவ்விதமே நாம் பாவத்தை விட்டாலும் பாவம் நம்மை விடாது தொடர்ந்து வருகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் தேவ சுட்டளையின்படியே சிவந்த சமூத்திரத்தைக் கடந்த னர். அவர்களைப் பின் தொடர்ந்து வந்த பார்வோனும், சேனையும் அவ்விடத்தில் அழிந்ததை அறிவோம். (யாத் 14:21-30) இவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து வந்தது முழுக்கு ஞானஸ்நானத்திற்கு அறிகுறியாக இருக்கிறது என்று பவுல் I கொரி. 10:1,2-ல் சொல்லு கினார். இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்கா ஆட்டை அடித்து எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு சிவக்த சமுத்திரத் தைக் கடந்ததுபோல் நாமும் இயேசுவை விசுவாசித் துப் பாவமன்னிப்பைப் பெற்ற பின்புதான் ஞானஸ் கானம் எடுக்கவேண்டும். (அப். 2:38) இவ் ஒழுங்கின் படி ஞானஸ்நானம் எடுத்தால், நம்மைத் தொடர்ந்து வரும் பாவங்கள் நிச்சயமாகவே அழிக்கப்பட்டுப் பரி சுத்தம் அடையலாம். ஆகவே இன்னமும் வசனப்படி ஞானஸ்நானம் பெறாவிட்டால், இஸ்ரவேலர் மோசேக் குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டதுபோல, நீங்களும் உடனேயே பரிசுத்தாவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, யாவற்றையும் கர்த்தருக்காகத் துறந்து ஊழியம் செய்யும் ஊழியரால் ஞானஸ்மானம் பெற்றுக் கொள்ளுங்கள். இவ்விதம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் பெறும்போது வசனத்தால் கிடைக்கும் பரிசுத்தத்திற்குப் பங்காளிகளாகிறீர்கள்.
3. பரிசுத்தாவியினால் உண்டாகும் பரிசுத்தம் ரோமர் 15:16
புற ஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே
பரிசுத்தம் ஆக்கப்பட்டு தேவனுக்குப் பிரியமானதாக வேண்டும். நம்மைத் தொடர்ந்துவரும் ஜென்ம பாவங் களிலிருந்து ஞானஸ்நானத்தினிமித்தம் ஜெயம் பெற் குலும், ஆவியிலுள்ள அதாவது சிந்தையிலுள்ள அகசிகள் இன்னமும் நம்மில் காளாப்படுகின்றன. (1[கொரி. 7:1) இவ்வித அசுசிகள்நீங்கிப் பரிசுத்த மாக்கப்பட வேண்டுமாயின் பலியை அக்கினி எரிப்பதுபோல் பரிசுத்தாவியாகிய அக்கினி நம்மை எரிக்கவேண்டும். அப்பொழுதுதான் “தேவ னுக்குப் பிரியமான” பலியாக முடியும்.
சீஷர்கள் பிசாசுகளைத் துரத்தின போதிலும் அவர்கள் நாமங்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டி ருந்த போதிலும் தாங்கள் மற்றவர்களைப் பார்க்கிலும் பெரியவர்கள் ஆகவேண்டும்–அக்கினியை இறக்கிப் பழிவாங்க வேண்டும் என்னும் அசுசிகள் உள்ளவர். களாய் இருந்தார்கள். அன்றியும் இயேசுவை எந்நிலை யிலும் பின்பற்றுவோம் என்று சொன்ன வாக்கை மறந்து பயத்தின் ஆவியால் பீடிக்கப்பட்டுக் கர்த்த ரை விட்டுச் சோரம் போனார்கள். ஆனால் பின்பு காத்தி ருந்து அக்கினி மயமான பரிசுத்தாவியை அந்திய பாஷையின் அடையாளத்துடன் பெற்றுக்கொண்ட பின்பு (அப். 2:3-5) தங்களைத் தாழ்த்திப் பழிவாங்கும் ஆணி சிறிதுமின்றிப் பயத்தை அறவே அழித்து, யாவரும் இரத்தச் சாட்சிகளாக மரித்தது, நம் சிந்தை யைக் கடந்து நிற்கும் ஆச்சரியமன்றோ! இவ்வித ஆச்சரியமான பரிசுத்தத்தையும், பெலத்தையும் (சுப். 1:8) கொடுத்தது யார்? பரிசுத்தாவியானவர்தான். ஆகவே பிரியமானவர்களே, அப். 2:38-ன் படி பரிசுத் தாவியைப் பெற்று ஆவிக்குக் கீழ்ப்படிந்து ஜீளிக்கும் போது, இவ்வுன்னத பரிசுத்தத்தைத் தேவன் தந்து அவர் வருகைக்கு நாம் ஆயத்தமாயிருக்கக் கிருபை புரிவார்.
இவ்விதம் ஆயத்தமானபின்பு, நாம் அவர் வரு கையில் எடுத்துக்கொள்ளப்படும் பொருட்டாக “எப் பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருக்க வேண்டும்” அவர் நினையாத நாழிகையிலே வருவேன் என்று சொல்லியிருக்கிறார். (மத். 24:44) ஆகையால்தான் நாம் எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருக்க வேண்டும். அவ்விதம் இருக்கிறவர்கள் மாத்திரமே தம்மைச் சந்திக்க எதிர்கொண்டுபோவார்கள் என் பதைக்காட்ட, “இருவர் ஒரு படுக்கையில் இருந்தாலும் ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான்” என்று சொன் னார். பலர் ஒன்றாக ஒரு இடத்தில் இருந்தாலும், யாரு டைய காதில் கம்பியில்லாத தந்தியின் கருவி (Receiver of the wireless) வைக்கப்பட்டிருக்கிறதோ, அவருக்கு மாத்திரமே மறுபக்கத்திலிருந்து கொடுக்கும் செய்தி கேட்கும், அவ்விதமே “எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருக்கிறவர்களுக்கு” மாத்திரமே நினை யாத நேரத்தில் மணவாளன் எக்காளத் தொளியுடன் புறப்படும் சத்தம் கேட்கும். இச்சத்தத்தை இவர்கள் கேட்டவுடன் அவரைச் சந்திக்க ஒரு நிமிஷத்திலே ஓர் இமைப்பொழுதிலே மறுரூபமாகி, (I கொரி. 15:51) எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்பார்கள். (1 தெச. 4:17.) ஆ! ஆ!! என்ன பாக்கியம்11-“எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருந்தால்” எப்பொழுதும் கர்த்தருடன் இருப்போம். அல்லேலூயா! அல்லேலூயா 11 அல்லேலூயா!11 ஆமென்.