எபேசு சபை – வெளி 2:1-7

 

ஆதி அன்புக்குத் திரும்பு! எபேசு சபை – வெளி 2:1-7

  எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களை தம்முடைய வலது கரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண் டிருக்கிறவர் சொல்கிறதாவது. உன் கிரியைகளை யும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையை யும், நீ பொல்லாதவர்களை சகிக்கக்கூடாமலி ருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களை பொய்யரென்று கண்டறிந் ததையும். நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினி மித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்கு குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமை யிலிருந்து விழுந்தாய் என்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில்செய்த கிரியை களைச் செய்வாயாக. இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந் திரும்பாத பட்சத்தில், உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியை களை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தி லுண்டு. ஆவியானவர் சபைகளுக்கு சொல்லு கிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன். ஜெயங் கொள்ளு கிறவனெவனோ அவனுக்கு தேவனு டைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத் தின் கனியை புசிக்கக் கொடுப்பேன் என்றெழுது.

  நிறைவுகள் :

  1. நற்கிரியை செய்தனர்

  2.பொறுமை

  3. ஊழியத்தில் உற்சாகம்

  4.பொல்லாதவர்களைச் சகிக்காதவர்கள்

  5.அப்போஸ்தரல்லாதோரை சோதித்தறிந்தது

  6. சகிப்புத் தன்மை

  7. நிக்கொலாயின் போதகத்தை வெறுத்தது.

  குறைவு : 

  ஆதி அன்பை விட்டுவிட்டது

  தண்டனை : 

  மனந்திரும்பாவிட்டால் விளக்குத்தண்டு நீக்கப்படும்

  பரிசு : 

  ஜெயங்கொண்டவனுக்கு ஜீவ விருட்சத்தின் கனி.

  எபேசு என்றால், “விரும்பத்தக்கது” அல்லது “தெரிந்துகொள்ளப்பட்டது” எனப்படும். ஆசிய ஜோதி, ஆசியாவின் சந்தை, ஐரோப்பாவின் வாசல் என்னும் “எபேசு” நல்ல துறைமுக நகரம்.

  இங்கு வியாபாரம், பணப் பெருக்கம், மது, மாது, நடனம், களியாட்டு, சிலை வணக்கம், மாந்திரிகம், மாயாஜாலம் என்பதுடன், 2,50,000 இருக்கைகளுள்ள நடன அரங்கமும் இருந்தது.

  அக்கால ஆசியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தியானாளின் (Artemis -சந்திர தேவி – கிரேக்க தேவதை) ஆலயமும், அண்ணகரான ஆசாரியரும் தேவதாசிகளும் அதிலிருந்தனர். ஆலயத்தில் அசுத்தம், கோயிலில் குற்றங்கள் நிறைந்திருந்தன. தியானாளின் கோயிலில் அடைக்கலம் புகுந்த எவரையும் தண்டிக்கக் கூடாது என சட்டமும் இருந்ததாம்.

  அந்த தியானாளின் ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியது. மண்ணில் புதைந்த இக் கோயிலை ஜெ.டி. உட்ஸ் என்பவர் ஆராய்ந்தார். ஈரடுக்கு மாடி கொண்ட இதை தோண்டி ஆராய, 11 ஆண்டுகள் ஆயின. இதில் 60 அடி உயரம், 6 அடி அகலமுள்ள 118 தூண்கள் இருந்தன. (தினமலர், ஆன்மீக மலர், பக் 15, 05.01.2008).

  இங்கு இருந்த திருச்சபை

  எருசலேமில் இருந்த முதல் சபை சிதறடிக்கப்பட்ட பின்பு, எங்கும் சிதறிச் சென்ற கிறிஸ்துவின் சீடர்கள் (அப் 8:1-3), ஆக்கில்லா – பிரிஸ்கில்லா (அப்: 18:18,19), அப்பொல்லோ (அப் 18:24,25), பவுல் (அப் 20:31), தீமோத்தேயு (1தீமோ 1:4) போன்றவர்கள் எபேசுவில் ஊழியம் செய்து, இங்கு சபை உருவாகியிருந்தது.

  ஆவிக்குரிய அனுபவங்கள் உள்ள (அப் 19:4 6,8,9,12) இவர்கள் பரிசுத்தவான்கள் எனப் பட்டனர் (எபே 1:1). இவர்களுக்கு சபை பற்றிய இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டது (எபே 1:10).

  இவர்கள், தேவனுக்காக பிரயாசப்பட்டனர். நன்மைகள் பல செய்தனர், உபத்திரவங்களைப் பொறுமையுடன் சகித்தனர். சிலர் தங்களை அப்போஸ்தலர் என்றபோது, அவர்கள் மெய் யான அப்போஸ்தலரல்ல என நிதானித்தனர். நிகொலாய் மதத்தவரின் கலப்படப் போதனை களை வெறுத்தனர். இத்தனை இருந்தும் “நீ ஆதியிலே கொண்டிருந்த அன்பை விட்டாய் ” என்று கூறுகிறார்.

  சத்தியத்திற்கு சாட்சியாயிருந்த எபேசு, ஆதி அன்பை இழந்தது ஆச்சர்யம்! தேவன் அன்பா கவே இருக்கிறார் (1யோ 4:16). அன் பில்லாதவன் தேவனை அறியான் (1யோ 1:8).

  மாறாத அன்பினாலே தேவன் நம்மை நேசித்தார் (எரே31:3). பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு அவர்களிடம் ஊற்றப்பட்டி ருந்தது (ரோமர் 5:5). என்றென்றுமாக நம்மில் அன்பு வைத்த தேவன் அதே அன்பையும், அன்பின் செயல்களையும் நம்மிடம் எதிர்பார்ப்பதில் வியப்பு எதுவுமில்லையே.

  ஒரு காலத்தில் அன்பினால் நிறைந்திருந்த சபை, இப்போது பொருளும் மதிப்பும் பெருகிய பின்பு, தேவனிடமும் பிறரிட மும் வைத்திருந்த ஆதி அன்பை இழந்தது. உலகப் பற்று, புகழ், பொருளாசையை விட்டு, அது “தேவனிடம் ஆதியில் வைத்திருந்த அன்புக்குத் திரும்பத்தான் வேண்டும்”.

  “நீ இன்ன நிலமையிலிருந்து விழுந்தாய் என்பதை நினைத்து மனந்திரும்பி, ஆதியிலே செய்த கிரியைகளைச் செய்” (வெளி 2:6).

  ஆதி காலத்து அப்போஸதல சபை: முழு இருதயத்தோடும் தேவனை நேசித்து அவருடன் இசைந்திருந்தது (1 யோவான் 1:3). அப்பம் பட்கு தலிலும் ஐக்கியத்திலும் உறுதியாகத் தரித்திருந் தனர் (அப் 2:42). கிறிஸ்துவினிமித்தம் வந்த பாடுகளை மகிழ்வுடன் ஏற்று (அப் 14:22), எங்கும் திரிந்து நற்செய்தி அறிவித்தனர் (அப் 8:1,4). ஆனால், காலப்போக்கில் அதன் அன்பும் பக்தியும் குறைந்தது.

  ‘ஆதி அன்பு” குறைந்ததற்கு, குறைவே காரணம். மனந்திரும்புதல், ஞானஸ்நானம், அந்நிய பாஷைகள், தீர்க்கதரிசனம் என்பவை மட்டும் இருந்தால் போதாது. வரங்களும் தீர்க்கதரிசனங் களும் ஒழிந்துபோகும் (1கொரி 13:8). எனினும், ஒழிந்துபோகாத ஒன்று உண்டு, அதுதான் அன்பு.

  நான் மனிதர் பாஷைகளைப் பேசினாலும்

  – அன்பு இராவிட்டால்?

  தூதர் பாஷைகளையும் பேசினாலும்

  -அன்பு இராவிட்டால்?

  தீர்க்கதரிசன வரத்தைப் பெற்றிருந்தாலும் 

  – அன்பு இராவிட்டால்?

  சகல இரகசியங்களையும் கற்றிருந்தாலும்

  – அன்பு இராவிட்டால்?

  விசுவாச வீரனாக இருந்தாலும்

  -அன்பு இராவிட்டால்?

  யாவற்றையும் அன்னதானம் செய்தாலும்

  – அன்பு இராவிட்டால்?

   ஜீவனையே பலியாகக் கொடுத்தாலும்

  – அன்பு இராவிட்டால்?

  நான் ஒன்றுமில்லை, என்னால் ஒரு பயனும் இல்லை -1 கொரி 13:1-3

  அன்பற்ற செயல்களால் ஒரு பலனுமில்லை.

  ஓய்வின்றி உழைத்து, பொறுமையாக இருந்த சபை, அது கலப்படமான போதனையை ஏற்கா விட்டாலும், கர்த்தரின் வருகையில் போவதற்கு, அது தேவனை நேசிக்கவேண்டும்.

  தேவனை நேசித்தால்! கடமைக்காக வேதம் வாசித்து, ஜெபித்து, ஆலயம் செல்வதில், ஊழியம் செய்வது மட்டும் போதாது.

  ஆதியில் வைத்திருந்த அன்புக்குத் திரும்பு. நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில் லாதவர்களுமாய் இருப்பதற்கும் அவர் நம்மைத் தெரிந்துகொண்டார் (எபே 1:4). கற்பனையின் பொருள், சுத்த இருதயத்திலும் நல்மனசாட்சியி லும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பு (1தீமோ 1:5). நாம் தேவனை நேசிக்க வேண்டும்.

  இனக் கவர்ச்சி, மோகம் (1தெச 4:4, எசே 23:12,16), அல்லது முறைகெட்ட காதலால் (2 சாமு13:1) ஈர்க்கப்பட்டு, அந்த வேட்கையால் அவர்கள் எதையோ தியாகம் செய்கின்றனர்.

  நிலையற்ற அன்புக்காக மகத்துவமுள்ள தேவனை, தேவ வழிநடத்துலை, அருமைப் பெற்றாரை, உடன்பிறந்தோரை, நீண்டகால நல்ல உறவுகளை இழப்பதை இவர்கள் பெரிதாக நினைப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் தாங்கள் எதையோ சாதித்ததாக அற்பமான எண்ணம் இவர்களுக்கு. இது அவமானம்! நஷ்டம்! இதைப் பற்றி சபை ஏன் சொல்லித்தரவில்லை?

  ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைத் தெரிந்தெடுத்து தரும் முதல் பொறுப்பு அவர்களைப் படைத்த தேவனு டையது. அடுத்தது, பெற்றோருடையது, பின்பு அவர்களது சபைப் போதகருக்கும் மூப்பருக்கும் உரியது. அதற்கு இடங்கொடுங்கள், உங்களது வாழ்வு பாதுகாப்பாக இருக்கும்.

  ஆண்டவரில் நான் எப்படி அன்புகூரலாம்?

  முழு இருதயத்தோடும் முழு பெலத்தோடும் தேவனை நேசி (உபா 5:5, மத் 22:37).

  தேவனுக்கு மட்டும் உங்களில் இடமுண்டா? ஒரு பொருள், ஒரு நபர், ஒரு ஆசை, ஒரு உபதேசம் உங்களில் இடம் பிடித்திருக்கிறதா? “பொய்யான மாயையைப் பற்றிக்கொண்டு, தேவ கிருபையை” (யோனா 2:8) இழக்கலாமா?

  உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை (யாக் 4:4). ஒருவன் உலகத்திலும் உலகத்தில் உள்ளவைகளிலும் அன்புகூர்ந்தால் அவனிடம் பிதாவின் அன்பில்லை (1யோ 2:15).

  தன்னையும் (மத் 16:24) தனக்குரியவை களையும் வெறுத்து விடாவிட்டால் (லூக் 14:33), அவன் இயேசுவின் சீடனாய் இருக்க முடியாது.

  உலகமும் அதின் ஆசை இச்சைகளும் மறையும். எனவே, மாறாத இயேசு கிறிஸ்துவில், அவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.

  இயேசுவிடம் பகட்டும், ஆடம்பரமுமில்லை (மத் 4:3-11). அடிப்படை வசதியின்றி, தலை சாய்க்க இடமில்லாதிருந்தார் (மத் 8:20). தூங்க, சாப்பிட நேரமின்றி உழைத்தார் (யோவான் 3,4). குடும்பம், நட்பு என்பவற்றைத் தாண்டி இறையர சுக்கு உரியவைகளைச் செய்தார் (மத் 12:46-50).

  சீடரின் பாதங்களை கழுவினார் (யோ 13:3-5). தமக்காக போராட தூதர்களை நாடவில்லை (மத்26:53,54). குற்றம் சாட்டப்பட்டபோது அமைதி காத்தார் (மாற்கு 15:3-5, ஏசா 53:7,8). வைதபோது, திரும்ப வையவில்லை (1பே 2:23).

  தமக்காகப் பரிதபித்தவர்களிடம், தங்களுக் காக, தங்கள் பிள்ளைகளுக்காக அழுங்கள் என்றார் (லூக் 23:27). சிலுவையில் துடித்தபோது வலியைக் குறைக்க உதவும் காடியை ஏற்க மறுத்துவிட்டார் (சங் 69: 20-21, மத் 27:34).

  நமக்காக தம் ஜீவனைத் தந்து, அக்கிரமக் காரரும் பாவிகளுமான நம்மை நேசித்து, மீட்டு, தேவனின் பிள்ளைகளாக ஆக்கிய தேவனை, இரட்சகர் இயேசுவை மதித்து, மாம்சத்தின் இச்சைகளையும் உலக நேசத்தையும் மறுத்து, அவைகளை நம்மைவிட்டு விலக்கிட வேண்டும் (1Gum 2:15,16).

  நம்மை மித மிஞ்சி நேசிப்பது நல்லதல்ல. சுயத்திற்கு மரித்தால் தேவனை நெருங்கலாம். எரியாமல் பிரகாசிப்பதில்லை. யோவான் எரிந்து பிரகாசித்த விளக்கு (யோ 5:35). நான், எனக்கு, என்னால் என்ற மன நிலை நீங்கி, தேவனால், தேவனுக்காக என்பவை உங்களில் பெருகட்டும்.

  கிறிஸ்துவைப் பின்பற்ற “சுய வெறுப்பு” வேண்டும். நம்மைக் குறித்த தேவ சித்தத்திற்கு முழுதும் கீழ்படிந்து, அதற்காக வரும் துயரத்தை மனதார ஏற்பதே சிலுவை சுமப்பதாகும்.

  மெய்யாகவே நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதாயிருந்தால் நிந்தனைக்குள்ளாகி, துயரங்களைச் சந்தித்து, ஒருவேளை, இரத்த சாட்சியாக மரிக்கவும் நேரிடும். இதற்கும் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

  அவர் எருசலேமின் வெளியே சிலுவையில் அறையப்பட்டார் (எபி 13:12,13) கிறிஸ்துவின் சீடர்கள் கட்டிவைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, வாளால் அறுக்கப்பட்டனர். எனினும் தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொண்டனர். இன்றும் பிற இனங்களிலிருந்து கிறிஸ்துவிடம் வருவோர் பலரது நிலை இப்படியே இருக்கிறது.

  பிரியரே,

  1. தேவனுக்குப் பயந்திருங்கள் (அப் 4:19) 

  2. பரிசுத்த ஆவியில் நிறைந்து தைரியமாய் தேவ வார்த்தையை பேசுங்கள் (அப் 4:8-31).

  3. இயேசு கிறிஸ்துவுக்கு உகந்த சாட்சிகளாக இருங்கள் (உபா 5:5, மத் 22:37, அப் 2: 32).

  4. பிறருக்கு உரிய எதையும் உங்களுடையது என உரிமைபாராட்டாதிருங்கள் (யாத் 20:17)

  5.இருப்பது போதும் என்ற நிலை (1தீமோ 6:6).

   6. தேவ வார்த்தையை மகிழ்வாய் ஏற்று, தேவ கட்டளைக்கு கீழ்படியுங்கள் (அப் 2:41,3:12-16).

  7. கபடமில்லா மனதுடன் வாழ்வது (அப் 2:46). 

  8. தேவனுக்கு உரிய மகிமையை உங்களுக்கு எடுத்துக்கொள்ளாதிருங்கள் (அப் 3:12-16). 

  9. தேவனுக்காகப் பாடுபடு வேண்டியதாயிருந் தால் மகிழ்வாக எண்ணுங்கள் (அப் 5:41).

  10.பிறர் செய்த தீமையை மறந்து, அவற்றை மன்னித்துவிடுங்கள் (அப் 7:60).

  “ஆதி அன்புக்குத் திரும்பு” என்று அவர் கட்டளையிடக் காரணம் என்ன?

  தேவனுக்காகவே செயல்பட்ட நாம், அதன் பலனை இழந்துவிடாதிருக்கவே விரும்புகிறார் (எரே 31:3). இரட்சிப்பு, பரிசுத்த ஆவியின் நிறைவு, வரங்கள், பிரயாசங்கள், பொறுமை என இருந்தும் தேவன் எதிர்பார்க்கும் அன்பு நம்மில் இராததால், நம்மை இழக்க விரும்பாததால், “திரும்பி வா” என்கிறார்.

  அனுதின வேத வாசிப்பு, ஜெபம், தியானம், பரிசுத்தமான வாழ்க்கை, ஊழியம், தேவ பணிக்கு கொடுப்பது, நன்மை செய்தல், கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தம், பரிசுத்தவான்களை உபசரித்தல், எளியோருக்கு உதவுதல் என்பவை களில் பெருகுங்கள்.

  தேவனில் வைத்திருந்த அன்பை எங்கே எப்போது விட்டோமோ அதைக் கண்டறிந்து, மனந்திரும்பி, தேவனில் வைத்திருந்த அந்த ஆதி அன்பில் நிலைத்திருந்தால் ஜெயம் பெறலாம். அதற்கான பரிசு – ஜீவ விருட்சத்தின் கனி!

  ஜீவ விருட்சத்தின் கனி

  ஏதேனில் ஜீவ விருட்சமும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும் இருந்தன (ஆதி 2:9). அன்று ஏவாளை வஞ்சித்த பிசாசு, ஆதாமையும் வஞ்சித்தது. ஜீவ விருட்சத்தின் கனியைப் புசித்து உயிரோடு இடிருக்கவேண்டிய ஆதாம் தன்னுடைய கீழ்படியாமல், மனித இனம் முழுவதற்கும் சாவையும் சாபத்தையும் தேடிக் கொண்டான் (ஆதி 3:1-7). இதனால், தேவன் அவர்களை ஏதேனைவிட்டுத் துரத்தி, அதன் வாசலை அடைத்தார் (ஆதி 3:24).

  கிறிஸ்துவின் கிருபையால் மீட்படைந்தோம், இது தேவனின் ஈவு (எபே 2:7,8). இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால், தேவாதி தேவனின் பெரிதான தயவினால், இலவச ஈவாக நாம் பெற்ற இவ்வளவு பெரிதான இரட்சிப்பை உலகம், மாம்சம், பிசாசு என்னும் சத்துருவின் வஞ்சகங் களால் இழந்துவிட வேண்டாம்.

  ஆசைகாட்டுவான் பிசாசு. ஏவாள் வஞ்சிக் கப்பட்டு, நித்திய ஜீவனை இழந்ததுபோல, நாம் ஆகிடக் கூடாது என தேவனின் விரும்புகிறார்.

  பிசாசினால் வஞ்சிக்கப்பட்டோரிடம் தேவ பிரசன்னம், வழிநடத்துதல், ஆன்மீக பெலன் தேச சாயல் என்னும் விளக்குத்தண்டு நீங்கி விடும், தேவனைப் பற்றிய வாஞ்சை குறையும். பின்பு, இவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர் ஆகிவிடுவர் (பிலி 3:18).

  ஆதாம் ஜீவ விருட்சத்தை தள்ளிவிட்டதே இன்றைய சாபத்திற்கும், வியாதிக்கும், மரணத் திற்கும் காரணம். அந்த “ஜீவ விருட்சம்” ஜெயங் கொள்வோருக்கு மட்டுமே உரியது (வெளி 2:7). அதின் இலைகள் ஆரோக்கியம். அங்கே பசி இல்லை, மரணமுமில்லை (வெளி 22:2,3,14).

  தேவ கிருபையினால் நன்மை செய்வோரே, பொறுமையாளர்களே, ஆவியின் வரங்களை பெற்றவர்களே, தேவ ஊழியர்களே, விசுவாசப் பிள்ளைகளே நீங்கள் முன்பு தேவனிடம் வைத்த அந்த “ஆதி அன்புக்குத்” திரும்புங்கள்.

  தேவன் வெறுக்கிற கலப்படப் போதனை களை உதறிவிட்டு, எதில் எங்கே விழுந்தீர்கள் என அறிந்து, அதில் மனந்திரும்புங்கள்.

  தன்னலமற்ற, மாறாத, மெய்யான, பரிசுத்த அன்புடன் நம்மைக் காத்து வழிநடத்தும் நமது தேவனை முழுமனதுடன் நேசிப்போமாக. அதன் பலன் தேவ கிருபை, வழிநடத்துதல், தேவ வெளிச்சம், கிறிஸ்துவுடன் நித்திய வாழ்வு.

  நித்திய வாழ்வு, ஜீவ விருட்சத்தின் கனி! 

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *