பாவம், நியாயத் தீர்ப்பு

 

 பாவம், நியாயத் தீர்ப்பு

பாவமென்றால் என்ன ?

1 யோ. 3:4.

1யோ.5: 17a.

யாக். 4: 17. 

நீதி. 24:9.

மாற்கு 7: 21, 22. 

ரோ. 3:23. 

சங். 51: 4a.

ரோ. 14:23.

செய்யத்தகாதவைகளைச் செய்கிறது பாவம்; செய்யவேண்டியவைகளைச் செய்யாமல் விடுகிறதும் பாவம். மேலே குறித்த வசனங்களில் எவை இதைச் சொல்லுகின்றன? மத். 23-ஐ ஒப்பிட்டுப் பார். பாவம் என்று திருப்பியிருக்கும் வார்த்தை எபிரேய பாஷையிலும் கிரேக்க பாஷையிலும் “குறிப்புத் தவறுகிறது” அல்லது ‘தவறுதல்’ என்ற அர்த்தம் கொள்ளுகிறது. கடமையைச் செய்வதிலும், சீஷத்தன்மையிலும் தவறுதல் மிகவும் சாதாரணமான பாவமாம். பாவமென்றாலும் தவறு என்றாலும் இரண்டும் சரியே. மத். 25-ம் அதி. வாசித்து, அதில் ஒவ்வொரு உதாரணத்திலும், செய்யவேண்டியவைகளைச் செய்யாமலிருப்பதற்காகவே கடிந்து கொள்ளப்பட்டிருத்தலைக் கவனி. கன்னிகைகள் எண்ணெய் கொண்டு போகவில்லை. ஒரு தாலந்துள்ள மனிதன் அதை புதைத்து வைத்தான். அநேகர் தரித்திரரைச் சந்தித்து அவர்களுக்கு உதவி புரியத் தவறியிருக்கிறார்கள். யாக். 2: 10-ஐ எடுத்துப் பார்.

பெரிய பாவம் எது?

மத்.22:36-38 பார்க்கவும்.

மாற்கு 12:28-30 ஓடு உபா.6:5-ஐ ஒப்பிட்டுப் பார்.

முதன்மையான பெரிய கற்பனைகள் அடங்கியிருக்கிற இந்த வசனங்களில் குறிப்பிட்ட கடமையின் அளவுக்குக் குறைவாய்க் காணப்படுவதே பெரிய பாவமல்லவா? அல்லது யோ. 13:34-ல் சொல்லியிருக்கும் புதிதான கற்பனையினால் உன் ஜீவியத்தைச் சோதித்துப் பார்.

பாவத்தின் விரிவு :

ஏசா. 53: 6a 

ஏசா .64:6.

ஆதி. 6: 5,6.

ஆதி. 8: 21

ரோ. 3:10-19.

கலா. 3: 22,

ரோ.3:23.

நீ உன்னுடைய பாவத்திற்கு

உத்திரவாதியா?

எசே. 18:2.4, 20; ரோ. 14: 12.

எல்லாரும் பாவஞ்செய்து குற்றவாளிகளாயிருக்கிறோம் :

ஆகையால்

எல்லாரும் ஆக்கினைத் தீர்ப்புக் குள்ளானோம்.

ரோ. 5: 12, 18.

எபி. 9:27 ஓடு வெளி. 20: 11,12-ஐ ஓப்பிட்டுப்பார்.

பாவம் என்ன செய்கிறது?

ஏசா .59:1,2.

சங்.66:18.

எரே. 17:9 

எண் 32:28.

மாற்கு 7:23.

1கொ. 15:56. 

யாக் . 1: 15.

ரோ. 6: 23a.

பாவமானது உள்ளத்தின் சீர்கேட்டையும் தேவனிடத்திலிருந்து பிரிந்து போகிறதையும், மரணத்தையும் குறிக்கிறது.

கேள்விகள் :

1. கிறிஸ்து, பாவம் என்ன என்று சொல்லும்போது, அதின் எந்தத் தன்மையை விசேஷித்துக் கூறுகிறார்?

2. இங்கே திரட்டிச் சொல்லியிருக்கிற பாவத்தின் பலன் உன் ஜீவியத்திலும் உன்னைச் சுற்றியிருக்கிற உலகத்திலும் நீ கவனித்திருக்கிறதோடு ஒத்திருக்கிறதா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *