தவறான உபதேசங்கள் உருவாகும் விதம்

 

1. தவறான உபதேசங்கள் உருவாகும் விதம்

P.S.Rajamani

வாழ்நாள் முழுவதும் சபைகளுக்குச் சென்றாலும் எது சரியான உபதேசம் என்று விளங்காத விசுவாசிகள் கூட்டம் ஏராளம். வேத வசனங்களை தெளிவாக தெரிந்த ஒருவர் உபதேசங்களை எளிதாக புரிந்து கொள்ளலாம். ஆவிக்குரிய விசுவாசிகளும் வசனத்தில் தெளிவில்லாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. ஆவியில் நிறைந்து ஜெபிக்க பழகினார்களேயல் லாமல் உட்கார்ந்து வசனத்தை தியானம் செய்யப் பழகவில்லை.

தவறான உபதேசங்கள் எப்படி உருவாகின்றன?

1. வேத வசனங்களை தவறாக புரிந்துகொண்டு அதற்கேற்ப உபதேசித்தல்.

2. தங்கள் சுயகருத்துக்கு ஏற்ப வசனங்களைத் தேடி அதையே உபதேசமாக்குதல்.

3. வேதவசனங்களின் அடிப்படை போதனையை நோக்காமல் ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதையே உபதேசமாக போதித்தல்.

4.சொப்பனங்கள், தீர்க்கதரிசனங்கள் வெளிப்பாடு களை தங்கள் உபதேசங்களுக்கு அடித்தளமாக்குதல். வேத

5. தனிப்பட்டவர்களின் அனுபவங்களை உபதேசம் போல போதித்தல்.

நல்லவர்களும் தவறாய் போதிக்கும் ஆபத்துக்கள் உண்டு

தேவனால் வல்லமையாய் பயன்படுத்தப்படும் போதகர்களும் தவறாய் போதிக்கும் ஆபத்துக்கள் உண்டு. ஒருவர்மூலம் அற்புத அடையாளங்கள் நடைபெறும்போது, அவர் போதனை யாவும் சரி என்று மக்கள் நம்பி விடுவார்கள்.

தீர்க்கதரிசனம், வெளிப்பாடு போன்ற ஆவியின் வரங்கள் கிரியை செய்யும் ஊழியராக இருந்தால் அவர் சொல்வதெல்லாம் சரி என்று நம்ப ஏராளமான பேர் இருக்கிறார்கள். ஒருவரை கர்த்தர் பயன்படுத்துவதினாலே அவர் சரியான போதனை உள்ளவர் என்று கூறமுடியாது. இது அநேகருக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் உண்மை. சபை சரித்திரத்திலிருந்தும் இன்றைய அனுபவங்களிலிருந்தும் இதை தெளிவாக அறியலாம். ஒருவர் தேவனுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து தேவ சமூகத்தில் காத்திருந்து ஜெபிக்கும் போது தேவன் அவரை கிருபையாய் பயன்படுத்த ஆரம்பிக்கிறார். வசனம் தெளிவாய் தெரிந்ததினால் அல்ல.

பல உதாரணங்களின் மூலம் இந்த பகுதியில் இதை விளக்க விரும்புகிறேன். தொடர்ந்து வாசித்து பாருங்கள்.

முதலாவது, தவறான உபதேசங்கள் எப்படி உருவாகின்றன என்பதற்கு நான் கொடுத்துள்ள குறிப்புகளை உதாரணத்துடன் விளக்குகிறேன். பின்பு தவறாக போதித்தவர்களை சபை சரித்திரத்தில் இருந்தும் இன்றைய காலத்திலிருந்தும் விளக்குகிறேன்.

1. வேத வசனங்களை தவறாக புரிந்துகொண்டு அதற்கேற்ப உபதேசித்தல்

உதாரணம்: பவுலின் மனைவி சீலா என்றும், பவுலும் சீலாவும் சிறைச்சாலையிலிருந்தபோது பிறந்தவன்தான் ஒநேசிமு என்றும் போதிப்பவர் பலருண்டு. ஏனெனில் பிலேமோன் 1:10ல் “கட்டப் பட்டிருக்கையில் நான் பெற்ற மகனாகிய ஒநேசிமு ” என்று பவுல் குறிப்பிடுகிறார்.

பவுல் “என் குமாரனாகிய தீமோத்தேயு” என்று பல தடவை குறிப்பிடுகிறார். எனவே தீமோத்தேயு பவுலின் மகன் என்று போதிக்கிறவர்கள் உண்டு. சீலா ஆண் என்பதும் பவுலின் உடன் ஊழியன் என்பதும், ஒநேசிமு, தீமோத்தேயு ஆகியோர் பவுலின்மூலம் கிறிஸ்துவுக்குள் வந்த ஆவிக்குரிய பிள்ளைகள் என்பதும் வசனம் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.

அந்தி-கிறிஸ்து என்பதற்கு சிலர் கூறும் தவறான விளக்கம்:

அந்தியென்றால் மாலை வேளை. கடைசி காலத்தில் எழும்பும் கிறிஸ்துதான் அந்திக்கிறிஸ்து என்று போதிப்பவர்கள் உண்டு. ஆங்கிலத்தில் Anti-Christ என்று வருகிறது. இதை அப்படியே தமிழில் அந்தி கிறிஸ்து என்று தமிழாக்கம் செய்துள் ளனர். கிறிஸ்துவுக்கு எதிரானவன் என்றுதான் பொருள். இதுபோல் ஏராளமான உதாரணங்களை கூறலாம். வசனங்களை சரியாய் புரிந்துகொள்ளா விடில் தவறான போதனைகள் தோன்றும்.

2. தங்கள் சுயகருத்தை வலியுறுத்த அதற்கேற்ற வசனங் களை எடுத்து உபதேசித்தல்

உதாரணமாக குடும்ப வாழ்க்கை, தாம்பத்ய உறவு தவறு என்ற கருத்தையுடையவர்கள். ஆதாம் ஏவாள் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசித்தது என்பது உடலுறவு கொண்டதைத் தான் குறிக்கிறது என போதிக்கின்றனர்.

“நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள் என்று சொல்லி தேவன் அவர்களை ஆசீர்வதித்த தாக” ஆதி.1:28ல் கூறப்பட்டுள்ளதே. எனவே பாலுறவை தேவன் அங்கீகரித்தார் என்பது இவர்கள் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது. புசித்தாள், புருஷனுக்கும் பறித்தாள், கொடுத்தாள் கூறப்பட்டுள்ளதே. அதற்கும் உடலுறவுக்கும் என்ன சம்பந்தம்? என்று இதுபோல சபை ஆராதனைகளில் கலந்து கொள்ளவேண்டாம் என்ற கருத்துள்ளவர்கள்… 1 யோ. 2:27ல் “ஒருவரும் உங்களுக்கு போதிக்க வேண்டிய தில்லை.

அந்த அபிஷேகம் சகலத்தையும் குறித்து உங்களுக்கு போதிக்கிறது” என்ற வசனத்தை மேற்கோள்காட்டி, ஆட்களை திசைதிருப்புகிறார்கள். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின இயேசு கிறிஸ்துவே, அபிஷேக நாதரே வாரந்தோறும் தவறாமல் ஜெப ஆலயத்திற்கு போனார் என்று வேதம் கூறுகிறது.

அபிஷேகம் பெற்றவன், ஒருவரும் சொல் லாமலே ஒழுங்காக ஆராதனைக்கு போவான். அவன் பெற்ற அபிஷேகம் சரியாக இருந்தால் அது ஆராதனைக்குப் போகத்தான் போதிக்குமேயல்லாமல், போகாதே என்று போதிக்காது.

3. ஒரு வசனத்தை மட்டும் எடுத்து ஒரு உபதேசத்தை உறுதிப்படுத்த முயற்சிப்பது

உதாரணமாக…

“பார்வோன் யோசேப்பை நோக்கி: எகிப்தி லுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக் கூடாது என்றான்” (ஆதி.41:44). இதை அப்படியே எடுத்துக்கொள்ள முடியுமா?

“ஸ்திரீயை தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது” (1 கொரி.7:1) என்ற வசனத்தை எடுத்து திருமணம் கூடாது என்று போதிப்பது.

“அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர் களாக” (யாக்.3:1) என்ற வசனத்தை எடுத்து, ஒருவரும் போதகராகக்கூடாது என்று தவறாய் போதிப்பது.

“அநீதியுள்ள உக்கிராணக்காரனை எஜமான் மெச்சிக் கொண்டான்” (லூக்.16:8) அதனால் அநீதி செய்வது நல்லது என்று எடுக்க முடியுமா?

இது போன்று நூற்றுக்கணக்கான வசனங்களை கூறலாம். இப்படி ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு அதை உபதேசமாக்கக்கூடாது. வேத வசனங்களின் அடிப்படை போதனையை கவனிக்க வேண்டும்.

4.சொப்பனங்கள், தீர்க்கதரிசனங்கள், வெளிப்பாடுகளை தங்கள் உபதேசங்களுக்கு அடித்தளமாக்குதல்

சிலர் வாழ்க்கையில் சில காரியங்களை செய்யும்படி கர்த்தர் கூறலாம். அது அவர்களுக்கும், தேவனுக்குமிடையேயுள்ள காரியம். அதை உபதேசமாக்கக் கூடாது.

ஒரு சகோதரன் தன் தலைமுடியை அதிக நேரமெடுத்து அலங்காரம் செய்வாராம். ஒரு நாள் கர்த்தர் அவரை மொட்டையடிக்கச் சொன்னாராம். அவர் மொட்டை அடித்து விட்டார். கவிசேஷ வேலை செய்து வந்தார். இது அவருக்கு உள்ள தனிப்பட்ட பிரச்சனை. இதையே உபதேசமாக்கி, எல்லாரையும் மொட்டையடிக்கச் சொல்லி உபதேசமாக்க முடியாது.

தங்கள் நகைகளைக் கழற்றினால் கர்த்தர் தங்களை பரிசுத்த ஆவியினால் நிரப்புவதாக கர்த்தர் சொன்னதாகவும், அதன்படி நகைகளைக் கழற்றின போது கர்த்தர் தங்களை அபிஷேகித்ததாகச் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதுவும் அவர்கள் தனிப்பட்ட காரியம். நகைகள் போட்ட எத்தனையோ பெண்களையும் கர்த்தர் பரிசுத்த ஆவியினால் நிரப்பியுள்ளாரே! எனவே தனிப்பட்ட சிலருக்குக் கொடுக்கப்பட்ட சொப்பனங்கள், வெளிப்பாடுகளை எல்லாருக்கும் பொதுவான உபதேசமாக்கக்கூடாது.

5. தனிப்பட்டவர்களின் அனுபவங்களை வேத உபதேசம் போல போதிப்பது.

வழிச்செலவுக்கு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று இயேக சீடர்களிடம் கூறினார். அவர்கள் இஸ்ரவேல் மக்களிடம் போனதால் அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று சொன்னார். இதையே பொது உபதேசமாக எடுத்துக் கொண்டு பஸ்ஸுக்கு, ட்ரெயினுக்கு, விமானப் பயணத்திற்கு பணம் எடுத்துக்கொண்டு போகாமல் வண்டி ஏறினால் கம்பி எண்ண வேண்டியதுதான். பேதுரு தண்ணீரில் விசுவாசத் துடன் நடந்தான். நாமும் நடப்போம் கொரியா தேசத்தில் வெள்ளம் ஓடிய ஆற்றை கடக்க முயன்ற பல பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். எனவே ஒருவரின் தனிப்பட்ட அனுபவத்தை உபதேசமாக்க முடியாது.

இன்றைய தவறான போதனைகளை ஆராய் வதற்குமுன் சபை சரித்திரத்தில் கண்ட சில தவறான போதனைகளைப் பார்ப்போம்.

தவறான உபதேசங்களை போதித்த சில பரிசுத்தவான்கள்:

1. எபியோனைட்ஸ் (2ம் நூற்றாண்டு)

கிறிஸ்தவர்கள் யூத நியாயப்பிரமாணத்தையும் கைக்கொள்ளவேண்டும் என்று யூத கிறிஸ்தவர் சிலர் போதித்தனர். இயேசுகிறிஸ்து தெய்வீகமானவரல்ல, அவர் ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியானவர் இறங்கினபோது இயற்கைக்கு மேற்பட்ட வல்லமையைப் பெற்றார், அவ்வளவே என்று போதித்தனர்.

2. ஏரியனிசம் (கி.பி.2ம், 3ம் நூற்றாண்டுகள்)

ஏரியஸ் அலெக்ஸாண்டிரியாவில் சபை தலைவ ராக இருந்தவர். கிறிஸ்து, பிதாவுக்கு கீழானவர். கிறிஸ்து நித்தியமானவரல்ல, அவருக்கு ஆரம்பம் உண்டு. முதலாவது இயேசு சிருஷ்டிக்கப்பட்டார். அவர்மூலம் மற்றவைகள் சிருஷ்டிக்கப்பட்டன. இயேசுவுக்கு முடிவு உண்டு என்று போதித்தனர். இந்த போதனையை எதிர்த்தவர் அதனேசியஸ். இவருடைய விகவாசப்பிரமாணம் இன்றும் சி.எஸ்.ஐ ஜெபப் புத்தகத்தில் இருக்கிறது. (அதனேசியஸ் வாழ்ந்த காலம் கி.பி.293-373).

3. அப்பெல்லனயனிஸம்

அப்பெல்லன நியஸ் என்பவர் லவோதிக்கேயா சபையில் பிஷப்பாக இருந்தவர். இயேசு மனி, தத் தன்மையுடன் பிறக்கவில்லை. மனித உருவில் வந்தார் என்று போதித்தார். இயேசுவிலிருந்த மனுஷீகத்தை மறுதலித்தார்.

4. நெஸ்டோரியன்ஸ்

இயேசு என்ற மனிதனில் லோகோஸ் என்ற தெய்வீகம் இணைந்தது என்று போதித்தார். கிறிஸ்துவின் தெய்வீகத்தை இவர் மறுதலித்தார்.

5. பெலேஜியனிஸம்

பெலேஜியன் ஒரு துறவறம் கொண்ட போதகர். மனிதன் ஆதாமிடமிருந்து பாவ சுபாவத்தை பெற வில்லை. ஒவ்வொரு மனிதனும் புது ஆத்துமாவாய் சிருஷ்டிக்கப்படுவதால் ஆதாமின் பாவத்துடன் தொடர்புடையவனல்ல. மனிதன் ஜென்மப்பாவம் உடையவனல்ல. அவன் கர்மப் பாவம் மட்டும் உடையவன் என்று போதித்தார். இதை எதிர்த்தவர் புகழ்பெற்ற வேத பண்டிதர் அகஸ்டின். அகஸ்டின் வாழ்ந்த காலம் கி.பி.354-430

6. யுடிசியன்ஸ்

கிறிஸ்து முற்றிலும் தெய்வீகமானவர். அவருடைய சரீரமும் தெய்வீகமானது என்று யூடிசஸ் போதித்தார். இவர் இயேசுகிறிஸ்துவின் மனுஷீகத்தை மறுதலித்தார்.

7. நாஸ்டிசிஸம் (ஞானவாதக் கொள்கை)

1. இதில் மூன்று பிரிவினர் இருந்தனர்.

இயேசு மனிதர் போல் தோற்றமளித்தார். ஆனால் மனிதர் அல்ல.

2. இயேசுவின் சரீரம் சாதாரண மனித சரீரமல்ல.

3. இயேசு மனிதர் – கிறிஸ்து ஆவியானவர். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவர்மேல் கிறிஸ்து இறங்கினார். இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது கிறிஸ்து மறைந்து போனார்.

மேற்கூறிய உபதேசங்களில் சில உங்களுக்கே தவறாக தெரியாமலிருக்கலாம். ஆனால் இவை பிழையுள்ள போதனைகள். இவைகளைப் போதித்த வர்கள் பரிசுத்தவான்கள்தான். ஆனால் வேத வசனங் களை சரியாக ஆராயாமல் தங்கள் கருத்துக்களை உபதேசங்களாக போதித்தனர். இவர்கள் அந்நாட் களிலேயே கடிந்துகொள்ளப்பட்டனர். சிலர் சபைக்கு புறம்பாக்கப்பட்டனர். வேத வசனங்களை முழுவதும் தெளிவாக அறிந்து கொள்ளாத பரிசுத்தவான்களும் உண்டு என்பதை இது காட்டுகிறது. வேதபண்டிதர் நிலையே இதுவென்றால் சாதாரண விசுவாசிகள் எப்படி தெளிவடைவார்கள்?

நான் இவைகளில் எழுதுகிறவைகளை விசுவாசி களும் போதகர்களும் வேத வசனங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். வேத வசனங்களுக்கு புறம்பாக நானோ அல்லது பரலோகத்திலிருந்து வரும் தேவதூதனோ சொன்னாலும் ஏற்றுக்கொள்ளா திருங்கள். விசுவாசிகளே நீங்கள் கேட்கும் போதனை களை வேதத்தின் அடிப்படை உபதேசங்களுடன் ஒப்பிட்டு சரியானவைதானா என்பதை செய்து கொள்ளுங்கள்.

தேவனால் பயன்படும் தேவ ஊழியரே! நீங்கள் உங்கள் உபதேசத்தைக் குறித்து எச்சரிப்பாய் இருங்கள். நீங்கள் சரியாக விளங்கிக்கொள்ளாமல் உபதேசிக்கிறதின்மூலம் ஆயிரக்கணக்கானோர் தவறான உபதேசத்தில் வழிநடத்தப்படுவார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் சொந்த கருத்து வித்தியாசமாக இருக்கலாம். அது உபதேச மாகாது. உங்கள் விசுவாசம் வேறுபட்டதாக இருக்க லாம். அது உங்கள் தனிப்பட்ட காரியம். அதை உபதேசமாக்காதிருங்கள்.

எல்லாருமே வேத வசனத்தை எடுத்துத்தான் போதிக்கிறார்கள். அந்த வசனத்தை அவர்கள் எப்படி விளங்கிக் கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே அவர்கள் போதனை இருக்கும். வேதத்தை அறிந்த மனிதன் எல்லாவற்றையும் நிதானித்து அறிந்து செயல்படுவான்.

Leave a Reply