2. யெகோவா சாட்சிகள் (Jehovah Witnesses)
உலகமெங்கும் பரவி வரும் இந்த கொள்கை யைப் பற்றி நாம் அறிந்துகொள்வது நல்லது. இந்த இயக்கத்தின் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மூவர்.
1. சார்லஸ் டாஸ் ரசல் (Charles Taze Russell 1852 – 1916)
இவர் இந்த இயக்கத்தை நிறுவியவர். இவர் பிப்ரவரி 16ல் அமெக்காவில் பிறந்தார். 1852 இவருடைய தகப்பன் துணிக்கடை நடத்தி வந்தார். இவர் காங்ரிகேஷனல் சபையைச் சேர்ந்தவர். சபையில் பின்பற்றப்பட்ட விசுவாசப் பிரமாணங்கள் சிலவற்றைக் குறித்து ரசலுக்கு சந்தேகங்கள் வந்தது. இதனால் மற்ற மார்க்க கொள்கைகளை கற்க ஆரம்பித்தார். பின்பு வேதத்தை கற்க ஆரம்பித்தார். குறிப்பாக தானியேல், வெளிப்படுத்தல் புத்தகங் களை ஆராய்ச்சி செய்தார். வில்லியம் மில்லர் என்பவரின் எழுத்துக்களால் கவரப்பட்டார்.
தனது 18ம் வயதில் பென்சில்வேனியா மாநிலத் திலுள்ள பிட்ஸ்பர்க் என்ற ஊரில் ஒரு வேத பாட வகுப்பை ஆரம்பித்தார். பின்பு அந்த குழுவினருக்கு மேய்ப்பரானார். கி.பி.1879ல் ‘வாச் டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொசைட்டி’ என்ற நிறுவனம் ஆரம்பமானது. ரசல் பல இடங்களுக்கும் பிரயாணம் செய்து தன் கொள்கைகளைப் பரப்பினார். அநேக புத்தகங்களை எழுதினார். 60 ஆண்டுகளில் சுமார் 2 உறவு கோடி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. இவர் சபையிலுள்ள பெண்களுடன் தவறான கொண்டிருக்கிறார் என்று இவரது மனைவி 1909ல் நீதிமன்றத்தில் 5 முறை வழக்கு தொடர்ந்தார். கடைசியில் விவாகரத்துப் பெற்றார். 1916ல் ரசல் மரித்தார்.
2. ஜோசப் ஃபிராங்ளின் ருத்தர் போர்ட் (Joseph Franklin Rutherford 1869-1942)
ரசலுக்குப்பின் 1917ல் இவர் இந்த இயக்கத்தின் தலைவரானார். இவர் ஒரு வழக்கறிஞர். பின்பு நீதிபதியானார். 1906ல் இவர் இந்த இயக்கத்தில் சேர்ந்தார். 1931ல் இந்த இயக்கத்தின் பெயர் “யெகோவா சாட்சிகள்” என்று மாற்றப்பட்டது. இவர்களுடைய தலைமை ஸ்தாபனம் நியூயார்க்கில் இருக்கிறது. இந்த இயக்கத்தின் புத்தகங்கள் கோடிக் கணக்கில் வெளியிடப்படுகின்றன.
ருத்தர்போர்டின் புத்தகங்கள் சுமார் 80 மொழி களுக்குமேல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கமார் 8000 மிஷனரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளார்கள் என்பது பழைய கணக்கு. 1942ல் ருத்தர் போர்டு கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான்டியாகோ பட்டணத்தில் மரித்தார்.
3. நேத்தன் நோர் (Nathan Knorr)
1905 இல் பிறந்தார். ருத்தர்போர்டுக்குப்பின் இதன் தலைவரானார். வீடுவீடாக சென்று சாட்சி பகர வேண்டுமென்பதை வலியுறுத்தியவர் இவர் தான். இவருடைய நாட்களில்தான் இந்த இயக்கம் அதிவேகமாக வளர்ந்துள்ளது.
யார் இந்த யெகோவா சாட்சிகள?
இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை முதலாவது விளங்கிக்கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்து மாம்சத் தில் வெளிப்பட்ட தேவன் என்பதை நம்புகிறவர்களே கிறிஸ்தவர்கள். இவர்கள் இதை ஏற்றுக்கொள்வ தில்லை. இவர்களுடைய உபதேசங்களை கருக்க மாகப் பார்ப்போம்.
யெகோவா சாட்சிகளின் முக்கிய கொள்கைகள்
1. யெகோவாவே தேவன். இயேசுகிறிஸ்து யெகோவாவால் சிருஷ்டிக்கப்பட்டவர்.
இப்படிச் சொல்வதின்மூலம் இயேசுகிறிஸ்து வின் தெய்வீகத்தை மறுதலிக்கிறார்கள். இவர்கள் இதற்காக தவறாக பயன்படுத்தும் வேத வசனங்கள் ஆறு.
1) யோவான் 14:28
என் பிதா என்னிலும் பெரியவராயிருக் கிறார்.
2) லூக்கா 18:19
நீ என்னை நல்லவன் என்று சொல்வா னேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
3) 1 கொரி.11:3
கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயி கிறார்.
4) 1 கொரி.15:28
குமாரன் தேவனுக்கு கீழ்ப்பட்டிருப்பார்.
5) @arafl.3:14
தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியானவர் இயேசு.
6) கொலோ.1:15 சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர் இயேசு.
இந்த வசனங்களின்படி இயேசுகிறிஸ்து தேவனாக் சிருஷ்டிக்கப்பட்டவர், தேவனுக்கு கீழானவர் என்று நம்புகின்றனர். இது தவறான போதனை என்பது நம் கொள்கை. இதற்கு நாம் பதிலளிப்போம்.
இயேசுகிறிஸ்துவைப் பற்றி வேதம் கூறுவதென்ன?
ஏசாயா 7:14; மத்தேயு 1:23
இம்மானுவேல் என்றழைக்கப்படுவார். இம்மானுவேல் என்றால் தேவன் நம்முடனிருக்கிறார்.
கன்னிகையின் மைந்தன்
ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்… அவர் நாமம் வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு.
யோவான் 1:1,2,14
அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி…..
நமக்குள்ளே வாசம்பண்ணினார்.
யோவான் 5:17,18
இயேசு தன்னை தேவனுக்கு சமமாக்கினார் என்று மக்கள் கூறினர்.
யோவான் 10:30
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.
யோவான் 10:33
உன்னை தேவன் என்று சொல்லுகிறாயே என்று மக்கள் கூறினர்.
யோவான் 14:9-11
என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.
யோவான் 20:28
தோமா இயேசுவை நோக்கி என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
கொலோ.1:15
அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்.
கொலோ.2:9
தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப் பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.
1 தீமோ.3:16
தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார். குமாரனை நோக்கி தேவனே உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது.
1 யோவான் 5:20
இயேசுகிறிஸ்து மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்.
புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று 663 இடங்களில் வருகிறது. கர்த்தர் என்பதற்கு கிரேக்க மொழியில் கூரியோஸ் (Kurios) என்று வருகிறது, புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் எழுதப்பட்டது. எபிரேய மொழியில் வரும் “யெகோவா” என்பதும் கிரேக்க மொழியில் வரும் கூரியோஸ் என்பதும் ஒரே கருத்தில்தான் கர்த்தர் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இயேசுகிறிஸ்துவே யெகோவா.
எனவே இயேசுகிறிஸ்து தெய்வீகமானவர்.
இயேசுகிறிஸ்துவின் தெய்வீகத்தை விளக்கும் சில வசனங்கள்:
“பிதாவானவர் தம்மில்தாமே ஜீவனுடையவர். குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவர்” அதாவது இயேசுவை யாரும் சிருஷ்டிக்க வில்லை என்பது இதன் பொருள். (யோ.5:26). “நானே ஜீவன்” (யோ.14:6).
“அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது” (யோ.1:4). “என் ஜீவனை கொடுக்கவும் எனக்கு அதிகார முண்டு. அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும்
எனக்கு அதிகாரம் உண்டு” (யோ.10:18).
தேவன் சர்வ வல்லவர், சகலத்தையும் அறிந்தவர், எங்கும் எப்போதும் இருக்கக்கூடியவர், மாறாதவர், பாவத்தை மன்னிக்கிறவர், சிருஷ்டிக்கிறவர். இத்தனை தெய்வீகத் தன்மைகளையும் இயேசுகிறிஸ்துவிடம் காண்கிறோம்.
இயேசுகிறிஸ்து சர்வ வல்லவர்:
“வானத்திலும் பூமியிலும் சர்வ அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது” (மத்.28:18). “இயேசுகிறிஸ்துவே சர்வ வல்லமையுள்ள கர்த்தர். மரணத்தின்மேலும், பாதாளத்தின் மேலும் அதிகாரமுடையவர்” (வெளி.1:18).
இயேசுகிறிஸ்து சகலத்தையும் அறிந்தவர்:
“நாத்தான்வேலை பார்த்து நீ அத்திமரத்தின் கீழிருக்கும் போது உன்னை கண்டேன்
என்றார்” (யோவா.1:48).
“மனுஷருடைய
எண்ணங்களையெல்லாம் அவர் அறிந்திருந்தார்” (யோ.2:25).
இயேசுகிறிஸ்து எங்கும், எப்போதும் இருக்கக்கூடியவர்:
“இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” (மத்.18:20).
“இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கி றேன்” (மத்.28:20).
இயேசுகிறிஸ்து மாறாதவர்: “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும்
மாறாதவர்” (எபி.13:8).
இயேசுகிறிஸ்து பாவத்தை மன்னிக்கிறார்: “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது”
(மாற்கு 2:5-12).
இயேசுகிறிஸ்து சிருஷ்டி கர்த்தர்:
“சகலமும் அவர் (இயேசுகிறிஸ்து) மூலமாய் உண்டாயிற்று” (யோ.1:3,10)
“அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது” (கொலோ.1:16; எபே.3.9; எபி.1:2,10).
இயேசுகிறிஸ்துவை தொழுது கொண்டனர்:
“குஷ்டரோகி இயேசுவைப் பணிந்துகொண் டான்” (மத்.8:2).
“தலைவன் இயேசுவைப் பணிந்துகொண்டான்”
(மத்.9:18).
“படவிலிருந்தவர்கள் அவரைப் கொண்டார்கள்” (மத்.14:33).
“ஒரு பெண் இயேசுவைப் பணிந்துகொண்டாள்” (மத்.15:25).
“செபதேயுவின் குமாரனுடைய தாய் அவரைப் பணிந்துகொண்டாள்” (மத்.20:20).
“சீஷர்கள் அவர் பாதங்களைத் தழுவி அவரைப் பணிந்துகொண்டார்கள்” (மத்.28:9,17).
மேற்கூறிய வசனங்களின் ஆதாரத்துடன் இயேசு
கிறிஸ்துவே மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள இயலும்.
2. இயேசு சரீரத்தில் மரித்தார்; ஆவியில் உயிர்ப்பிக்கப் பட்டார்.
இயேசு கிறிஸ்துவின் சரீர உயிர்த்தெழுதலை இவர்கள் மறுதலிக்கிறார்கள்.
வேத வசனங்களை ஆராய்வோம்:
இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி:
நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் சந்தேகங்கள் எழும்புகிற இருதயங்களில் தென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள். என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கும் இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். பின்பு புசிக்கிறதற்கு ஏதாகிலும் உண்டா என்று கேட்டு பொரித்த மீன் கண்டத்தையும், தேன்கூட்டுத் துணிக்கையையும் வாங்கிப் புசித்தார் (லூக்.24:36-44).
சிறு பிள்ளையும் விளங்கக்கூடிய அளவில் இங்கே தெளிவாக கூறப்பட்டுள்ளது, யெகோவா சாட்சிகளுக்கு ஏன் விளங்காமல் போனது. நமது ஊருக்கு வந்த தோமா, அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு அந்த காயத்திலே என் விரலைவிட்டு என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன் என்றான்.
எட்டு நாளைக்குப் பின்பு இயேசு தோன்றி தோமாவை நோக்கி நீ உன் விரலை இங்கே நீட்டி என் கைகளைப் பார், உன் கையை நீட்டி என் விலாவிலே போடு, அவிகவாசியாயிராமல் விசுவாசி யாயிரு (இன்றுள்ள நிலைமைப்படி சொன்னால்… தோமாவே யெகோவா சாட்சியாக மாறிவிடாதே) என்றார். தோமா அவருக்கு பிரதியுத்தரமாக, என் ஆண்டவரே! என் தேவனே! என்றான் (யோ.20:24-31). வெளி.1:13-18ல் யோவான் உயிர்த்தெழுந்த இயேசுவை நேரில் கண்டதை விளக்கமாக எழுதியுள்ளார்.
இயேசுகிறிஸ்து நாற்பது நாளளவும் அப்போஸ்! தலருக்குத் தரிசனமாகி, அநேகம் திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார் (அப்.1:3).
3. யெகோவா சாட்சிகள் திருத்துவத்தை நம்புவதில்லை
யெகோவாவே தேவன், இயேசு சிருஷ்டிக்கப் பட்டவர், பரிசுத்த ஆவி ஆளத்துவமுடையவரல்ல, காண இயலாத ஒரு சக்தி அவ்வளவுதான் என்று போதிக்கின்றனர். இந்த கொள்கையும் தவறான தாகும். திருத்துவத்தை விளக்குவது, கடினமான காரியம் என நமக்கு நன்கு தெரியும். வேதாகம கல்லூரியில் 21 ஆண்டுகள் போதித்தேன். திருத்து வத்தைப் பற்றி தெளிவாக யாரும் விளக்கிவிட முடியாது என்பது உண்மை. நம்மால் விளக்க முடியாததால் வேத சத்தியம் தவறானதல்ல.
‘தேவன்’ என்பதற்கு எபிரேய வார்த்தை ‘எலோகிம்’. இதை அப்படியே மொழி பெயர்த்தால் தேவர்கள் என்று வரும். ஆனால் வினைச்சொல் ஒருமையிலேயே வருகிறது. உதாரணமாக (ஆதி.1:1) ஆதியிலே தேவர்கள் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்று கூறலாம். சிருஷ்டித்தார் என்பது ஒருமையில்தான் வருகிறது. எனவே தேவன் ஒன்றுக்கு மேற்பட்ட ஆளத்துவமுடையவர் புலனாகிறது. என்ற கூற்று
இயேசு… என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம் (யோவான் 14:23). பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் (1 யோ.5:7). லூக்.3:21,22ல் இயேசுவின் ஞானஸ்நானத்தில் பரிசுத்த ஆவியானவர் புறா ரூபங்கொண்டு அவர் மேல் இறங்கினதையும் பிதா பரலோகத்திலிருந்து
பேசுவதையும் காண்கிறோம்.
மத்.28:19ல், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்கும்படி இயேக கட்டளையிட்டார்.
2 கொரி.13:14ல், ஆசீர்வாத ஜெபத்தில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும், தேவனையும், பரிசுத்த ஆவியையும் காண்கிறோம்.
ஆகிலும் மூன்று தேவர்களல்ல, தேவன் ஒருவரே. ஒரே தேவனில் மூன்று ஆளத்துவம் இருக்கிறது. இது எளிதில் விளங்கிக்கொள்ள முடியவில்லை, ஆனாலும் ஆதிகாலம் முதல் இந்த உபதேசம் அடிப்படையானதாக சபைத் தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளது.
ஒரே நபரில் எப்படி மூன்று ஆளத்துவம் இருக்கமுடியும் என்பதற்கு என் பதில்… ஒரு நபருக்குள்ளே லேகியோன், அதாவது 6000 ஆவிகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளதே. இதை விளங்கிக்கொள்ளவா முடிகிறது?
4. கி.பி.1914ல் இயேசுகிறிஸ்து வந்துவிட்டார். நாம் இப்போது ஆயிர வருட ஆட்சியில் இருக்கிறோம்.
யெகோவா தன் ராஜ்யத்தை உலகத்தில் நிறுவி விட்டார் என்பது இவர்கள் கொள்கை.
இதைப் போல ஒரு ஜோக் யாரும் அடித்திருக், முடியாது. என்ன அருமையான ஆயிர வருட ஆட்சி சினிமா தியேட்டர்கள் பெருகுவதும், கொலையும் கொள்ளையும் பெருகுவதும், சினிமா நடிகர், நடிகை களெல்லாம் ஆட்சி செய்வதும் என்ன பிரமாதமாக இருக்கிறது! வேதம் கூறும் ஆயிர வருட ஆட்சி இப்படியா இருக்கும்?
1. ஆயிர வருட ஆட்சியில் பிசாசு பாதாளத்தில் கட்டி வைக்கப்படுவான் என்று கூறப்பட்டுள்ளது. (வெளி.20:1,2).
இப்போது அதிக வேகத்தோடு அல்லவா வேலை செய்துகொண்டு இருக்கிறான். கட்டப்படவில்லையே.
2. இயேசு எருசலேமை தலைநகராகக் கொண்டு
ஆட்சி செய்வார் (வெளி.20:4; எரே.23:5,6).
பூமியெங்கும் அவர் ஒருவர்தான் ராஜாவாயிருப் பார் (சகரியா 14:9; சங்.72:6-11). இன்று யேசபேல், ஆகாப் போன்றவர்களல்லவா ஆட்சி செய்கிறார்கள்!
3. மரித்த பரிசுத்தவான்கள் உயிர்த்து இயேசுவுடன் ஆட்சி செய்வார்கள் (வெளி.20:4,6; 2 தீமோ.2:11).
4. இஸ்ரவேலர் எல்லாரும் இயேசுவை ஏற்றுக்
கொள்வார்கள் (சகரியா 12:10-13; ஏசாயா 66:8).
5. இயற்கையில் மாற்றமுண்டாகும். (சகரியா 14:4-10; ஏசா.35:1-5).
6. மிருகங்கள் தீமை செய்யாது, ஒற்றுமையாக இருக்கும்.
ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும். புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக் கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும். காளையும், ஒருமித்திருக்கும். (இப்போது ஒரு குடும்பத்திலேயே எல்லோரும் சேர்ந்து படுக்க பயப்படுகிறார்களே) ஏசா.11:6.
”பசுவும், கரடியும் கூடிமேயும்” ஏசா.11:7. (ஒரு சபை விசுவாசியும், அடுத்த சபை விசுவாசியும் ஐக்கியமாயிருப்பதே இப்போது பெரிய சாதனை யாக இருக்கிறதே). “பால் குடிக்குங்குழந்தை விரியன் பாம்பு வளையின்மேல் விளையாடும், கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்” ஏசா.11:8. (இந்த வேலையை யாரும் இப்போது செய்துவிட வேண்டாம்). “சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்” ஏசா.11:7. (இப்போதுள்ள பஞ்சத்திலே இது வேண்டுமானால் நடக்கலாம்) ஆனால் இங்கு கூறப்பட்டிருப்பது மிருகங் களுடைய சுபாவமே மாற்றப்படும். தீமை செய்கிற வர்களே இருக்கமாட்டார்கள் (ஏசாயா 11:9).
7. ஆயுசு நாட்கள் நீடித்திருக்கும். 100 வயதுள்ளவனும் வாலிபன் என்று எண்ணப்படுவான் (ஏசா.65:20).
சாத்தான் பாதாளத்தில் கட்டப் பட்டிருப்பதால் தீமை இருக்காது. இயேசுகிறிஸ்து ஆட்சி செய்வதால் உலகமெங்கும் ஆசீர்வாதமும், செழிப்பும் இருக்கும். இதில் ஒன்றும் இப்போது நடக்கவில்லை. எனவே இயேசு இன்னும் வரவில்லை, ஆயிர வருட ஆட்சி ஆரம்பிக்கவில்லையென்று குருடனுக்குக் கூட தெளிவாகத் தெரியும்.
5. இயேசுகிறிஸ்துவின் தியாகபலி மட்டும் நம்மை இரட்சிக்கப் போதுமானதல்ல.
ஆதாமின் பாவத்திற்கு பரிகாரம் இயேசு கிறிஸ்துவின் மரணத்தால் உண்டாகியிருக்கிறது.
மனித இரட்சிப்புக்கு இயேசுகிறிஸ்துவின் போதுமானதல்ல. ஒருவன் யெகோவாவிற்கு உண்மை யாயிருந்து, வசன போதனை, பிரசங்கங்களைக் கேட்டால்தான் இரட்சிக்கப்படுவான் என்று நம்பு கின்றனர்.
வேதம் இதற்கு பதில் கூறுவது
கிருபையினாலே இரட்சிக்கப்படுகிறோம் (எபே.2:8,9).
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவன் புது சிருஷ்டியாகிறான் (2 கொரி.5:17).
இயேசுவை விசுவாசித்தால் இரட்சிப்பு கிடைக்கிறது (அப்.16:31).
குமாரனை உடையவன் நித்திய ஜீவனை உடையவன் (1 யோ.5:12).
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங் களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும் (1 யோ.1:7).
6. ஆத்துமா நித்தியமானதல்ல, ஆக்கினைத் தீர்ப்பும் நித்தியமல்ல.
வேதம் கூறுவது என்ன?
மத்.25:41,46
நித்திய அக்கினி, நித்திய ஆக்கினை பாவிகளின் பங்கு.
வெளி.20:15
ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவனாகக் காணப் படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்படுவான்.
மத்.10:28:
இவ்வசனத்தை இவர்கள் ஆதாரமாகக் கொண்டு பாவிகளின் ஆத்துமா அழிக்கப்படும். நித்திய ஆக்கினை அடைய மாட்டார்கள் என நம்பு கின்றனர். அப்படியானால் வெளி.20:12ல் மரித்தோ ராகிய சிறியோரையும், பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன் என்று யோவான் சொல்வது எப்படி? அழிக்கப்பட்டுவிட்டால் எப்படி இங்கே நிற்பார்கள்!
7.வெளி.14:1-5ல் கூறப்பட்டுள்ள 1,44,000 நாங்கள் தான் என்கிறார்கள்
சண்டை இங்கே தான் ஆரம்பமாகிறது. ஏழாம் நாள் ஓய்வுக்காரரும் நாங்கள்தான் இந்தக் கூட்டம் என்கிறார்கள். நமது அருமை நண்பர்கள் இலங்கை பெந்தெகொஸ்தேகாரரும் நாங்கள்தான் இவர்கள் என்கிறார்கள். இவர்களில் யார் வெற்றியடைந்து எந்தக் கூட்டத்தாரானாலும் சரி, அல்லது ஒரு சமரசத்திற்கு வந்து மூவரும் சமமாக பங்கிட்டுக் கொண்டாலும் நமது வாழ்த்துக்கள் அவர்களுக்கு உண்டு.
யூதர்களில் கோத்திரத்திற்கு 12000 வீதம் 12 கோத்திரத்தாரும் உபத்திரவ காலத்தில் (வெளி.7) முத்திரை போடப்பட்டு (வெளி.14) பரலோகத்தில் காணப்படுகிறார்கள் என்றும் நாம் நம்புகிறோம்.
8. மற்ற எல்லாருக்கும் மறுபடியும் ஒரு வாய்ப்புக் கொடுக்கப்படும்.
மற்ற எல்லாருக்கும் ஒரு பரீட்சை (Test) கொடுக்கப்படும். அதில் யெகோவாவிற்கு கீழ்படிகிறவர்களுக்கு நித்திய ஜீவன் கொடுக்கப்படும் என்பது இவர்களின் கொள்கை.
நம் சபையார்களுக்கு இது ஆறுதலாசுத் தெரிய லாம். அப்படியானால் இங்கே இப்போது எப்படியும் வாழலாம் என்ற தைரியம் வந்துவிடும். ஆனால் வேதம் என்ன கூறுகிறது? எபி.9:27ல், “ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் (பரீட்சை வைப்பது அல்ல) மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக் கிறது”.
எனவே நமது 9. அரசாங்கம் நீதியான, நேர்மையான, உண்மையான நீதிபரிபாலனம் செய்யவில்லை. அரசாங்கத்திற்கு கீழ்ப்படிய வேண்டாம் என்பது இவர்களது கொள்கை.
வேதம் கூறுவது என்ன?
மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். தேவனாலேயே எல்லா உண்டாயிருக்கிறது. அதிகாரத்திற்கு அதிகாரமும் எதிர்த்து நிற்பது தேவனுக்கு எதிர்த்து நிற்பதாகும் (ரோமர் 13:1-7). ஒழுங்காக வரி கட்டவேண்டும், தீர்வை கட்ட வேண்டும். பயப்பட வேண்டியவனுக்கு படுங்கள், கனம்பண்ண வேண்டியவனை கனம் பண்ணுங்கள்.
ராஜாக்களுக்கும், அதிகாரிகளுக்கும் கீழ்படிய வேண்டும் (1 பேது.2:13-17), ஒரு மெய் கிறிஸ்தவன் தேசத்தின் நல்ல பிரஜையாயிருக்க வேண்டும்.