துர் உபதேசம் : 3. அறிக்கையிட்டால் எல்லாம் கிடைக்கும்

 

3. அறிக்கையிட்டால் எல்லாம் கிடைக்கும்

நேர்நிலை அறிக்கை (Positive Confession) 

கடந்த பல ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு களில் மிகவும் வேகமாய்ப் பரவி சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குவந்து இப்போது அங்கும் இங்கும் மங்கியிருக்கும் உபதேசம் நேர்நிலை அறிக்கையாகும். இதைக்குறித்து பிரசங்கித்தும் எழுதியும் வந்த பல தலைவர்கள் உண்டு.

தவறான போதனைகள் எப்படி உருவாகின்றன என்று எக்ளிசியா முதல் நிருபத்தில் எழுதினேன். ஒரு சத்தியத்தை அளவிற்கு மிஞ்சி வலியுறுத்தும் போது அது தவறான போதனையாக மாறும் ஆபத்துக்கள் உண்டு.

நேர்நிலை அறிக்கை என்பதும் இந்த விதமாகவே சபைக்குள் நுழைந்தது. இந்த கொள்கையை நம்புகின்றவர்கள் நேர்நிலை, எதிர்மறை என்று இரண்டாக பிரிக்கின்றனர்.

எதிர்மறைப் போக்கு:

வியாதி, வறுமை மற்றும் நாம் விரும்பாத சூழ்நிலைகளை ஒப்புக்கொண்டு வாழ்தல்.

நேர்நிலை அறிக்கை:

மனதிற்கு ஏற்ற சூழ்நிலைகளை உரிமை கொள்ளுதல் அல்லது ஒப்புக்கொள்ளுதல்.

எதிர்மறை அறிக்கைகளைத் தவிர்த்தால் விரும்பத்தகாதவைகளை தவிர்க்க முடியும். நேர்நிலை அறிக்கைகளைச் செய்வதின் மூலம் விரும்பும் நன்மை களைப் பெறமுடியும். இதன் வழித்தோன்றல்தான் செழுமை சுவிசேஷம் (Prosperity Gospel).

அதாவது விசுவாசிகள் மிக சிறந்த ஆடை அணிந்து, மிகச்சிறந்த கார்கள், வசதிகளைப் பெற்று

இருக்கவேண்டும். எல்லாவற்றிலும் மிகச்சிறப்பான வைகளைவிசுவாசிகள் பெற்று அனுபவிக்க வேண்டும். கேட்பதற்கு மிக இனிமையாகத்தான் இருக்கிறது. பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறது. போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் (3 யோ.2). இந்த போதனையின் கருக்கத்தைக் கீழே காண்போம்.

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; (நீதி.18:21). நீங்கள் வாயினால் என்ன அறிக்கை செய்கிறீர்களோ, அதுவே உங்களுக்கு நடக்கும். உங்கள் விசுவாசத்தின்படி உங்கள் அறிக்கை இருக்கும். விசுவாசம் தேவனைச் செயல்பட வைக்கிறது. அவர் செயல்பட பலவந்தம் செய்கிறது. எனவே ஒருவனின் அறிக்கையின்படிதான் அவன் பெற்றுக்கொள்கிறான். நாம் பெற விரும்புவதை உடனே அடையாவிட்டாலும் அதற்கேற்ற நிலையில் அறிக்கையிட ஆரம்பிக்க வேண்டும்.

நான் வியாதியாயிருக்கிறேன் என்று அறிக்கை யிட்டால், அவன் வியாதியஸ்தனாகிறான். நான் சுகமானேன் என்று அறிக்கையிட வேண்டும். அப்படி அறிக்கையிட்டால் சுகமாகிவிடுவான். பணம் தேவைப் படும் ஒருவன் தன்னிடத்தில் பணம் இல்லாவிட்டாலும் அது இருக்கிறது என்று அறிக்கையிட வேண்டும். நேர்நிலையை பிரதிபலிக்கும் வார்த்தையை பல முறை உச்சரிப்பதால் விசுவாசம் எழும்புகிறது. அந்த விசுவாசம் விரும்பும் ஆசீர்வாதத்தை கொண்டுவரும்.

விசுவாசிகள் தரித்திரமாய் இருக்க வேண்டியது இல்லை. தரித்திரம் விசுவாசக் குறைவினால் உண்டானது. பணத்தை ஆண்டவரிடம் கேட்க வேண்டியது இல்லை. அவர் எல்லாவற்றையும் நமக்கு தந்துவிட்டார். சாத்தான்தான் அவைகளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறான். எனவே தங்களுக்கு வரவேண்டிய பணத்தின்மீது சாத்தான் கொண்டுள்ள பிடியை நீக்க அவனை அதட்டினால் போதும். பணம் தானாய் வந்துவிடும்.

இந்த உபதேசத்தில் உச்சரிக்கும் வார்த்தை களுக்கு, அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. இதைக்குறித்து கருக்கமாய் ஆராய்வோம். இந்த போதனையிலுள்ள கோளாறுகள் என்ன என்று பார்ப்போம்.

1. வேதாகமத்தின் முழுமையான போதனை யையும் மனதில்கொண்டு உருவானதல்ல இந்த போதனை. 

நான் வியாதியாயிருக்கிறேன், நான் பெலவீன மானவன், நான் கஷ்டப்படுகிறேன், நான் ஏழை என்று ஒருவன் முரண்பட்ட தன் நிலையைக் கூறும்போது அவனுக்குப் போதிய விசுவாசம் இல்லை, இது எதிர்மறையான அறிக்கை என்பது இந்தக் கொள்கை யினரின் போதனை. இது வேத வசனங்களுக்கு முரண்பட்ட உபதேசம். ஒருவன் தன்னுடைய உண்மையான நிலையைச் சொல்கிறான்.

என்று பவுல் “நான் பசியிலும் தாகத்திலும்… குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்” தன் அனுபவத்தைக் கூறுவது அவிசுவாச அறிக்கையா? (2 கொரி.11:27). “நாங்கள் பலவீனர்” (2 கொரி.11:21; 1கொரி.4:10). “நான் குறைவுபட்டேன்” (2 கொரி.11:9). ”இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ள வர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்” (1 கொரி.4:11). “நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும். உங்களிடத்தில் இருந்தேன்” (1 கொரி.2:3) என்று பவுல் கூறுவது எதிர்மறையான அறிக்கையா?

பவுல் இயேசுகிறிஸ்துவின்மேல் நம்பிக்கை யில்லாமலா பேசுகின்றார்? உண்மை நிலையைக் கூறுவது அவிசுவாசமென்றால் தன்னிடத்தில் இல்லாத ததை இருப்பதாக கூறுவது பொய் சொல்வதாகாதா?

திருமண வீட்டில் திராட்சை ரசம் இல்லை என்று அறிக்கையிட்டபோதுதான் இயேக அற்புதம் செய்தார். திராட்சை ரசம் இல்லாத நிலையிலும் எங்களுக்கு திராட்சை ரசம் இருக்கிறது, இருக்கிறது என்று அறிக்கையிட்டுக் கொண்டேயிருந்தால் இயேசு அற்புதம் செய்யாமல் போயிருப்பார். குருடனைப் பார்த்து உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, அவன் குருடன், எனக்குப் பார்வை வேண்டும் என்று கேட்ட நான் போது பார்வை பெற்றான். இருக்கின்ற நிலையை வெளிப்படுத்துவது அவிசுவாச அறிக்கையாகாது.

எனக்கு சுகமே கிடைக்காது. இயேசு எனக்கு உதவி

செய்யமாட்டார், நான் தொடர்ந்து கஷ்டப்படுவேன் என்று அவிசுவாசத்தில் ஒருவன் கூறினால் அது எதிர்மறை அறிக்கை என அறியலாம். 

2.நேர்நிலை அறிக்கை போதனை தேவ சித்தத்தை அலட்சியப்படுத்துகிறது.

 தாவீது தேவாலயம் கட்ட விரும்புகிறேன் என்று. கர்த்தரிடம் சொன்னபோது நீ கட்ட வேண்டாம். உன் மகன் சாலொமோன் கட்டுவான் என்றார் கர்த்தர் (1 நாளா.17:4). பவுல் தன் மாம்சத்திலிருந்த முள் நீங்க வேண்டுமென்று மூன்று தடவை கர்த்த ரிடத்தில் ஜெபித்தார். கர்த்தர் முள்ளை நீக்காமல் அதைத் தாங்கிக்கொள்ளக்கூடிய கிருபையை கொடுத்தார் (2 கொரி.12:.7). எனவே வாயினால் அறிக்கையிடுவதும் தேவசித்தத்தின்படி இல்லா விட்டால் அது வாய்க்காது.

தேவ சித்தத்தை உணராமல் அறிக்கையிட்டுக் கொண்டேயிருந்தால் எப்படி? இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும் என்று இயேக கெத்சமனே தோட்டத்தில் ஜெபித்தார். கண்டிப்பாய் நீங்கும்படி செய்யும் என்று ஜெபிக்கவில்லை. ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார் (லூக்.22:42).

எனவே ஒரு என்பதை காரியத்தில் தேவசித்தம் எது அறிந்துகொள்ளாமல், தனக்கு எது விருப்பமோ அதையே அறிக்கையிட்டுக் கொண்டி ருந்தால் அவர் தேவ சித்தத்தில் தவறி விடுவார். கேட்டது கிடைக்காததால் சோர்ந்துபோய், விசுவாசத்தை விட்டு விலகிவிடும் ஆபத்து ஏற்படலாம். நமக்கு பல் திட்டங்கள் இருக்கலாம், விருப்பங்கள் இருக்கலாம். இவற்றில் தேவ சித்தம் எதுவோ அது நடக்கட்டும் என்று கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

நீங்கள் இச்சித்தும் (விரும்பியும்) உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் விண்ணப்பம் பண்ணியும் உங்கள் இச்சைகளை (விருப்பங்களை) நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாத விதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியால் பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள் (யாக்.4:2,3). ஆதலால் ஆண்ட வருக்குச் சித்தமானால், இன்னின்னதைச் செய் வோம் என்று சொல்லவேண்டும் (யாக்.4:15). 

3.நேர்நிலை அறிக்கை ஊக்கமான ஜெபத்தின் முக்கியத்துவத்தை அலட்சியப்படுத்துகிறது.

தேவன் வாக்குப்பண்ணிவிட்டார். அவர் வாக்குப் பண்ணியவற்றைப் பெறுவதற்கு ஜெபிப்பதைவிட அறிக்கை செய்வதே அவசியம் என இந்தப் போதனை வலியுறுத்துகிறது. எனவே தேவைகளுக்காக ஊக்கமாக ஜெபிப்பதை இந்த போதனை தடுக்கிறது.

தேவன் நமக்கு வாக்குப்பண்ணியுள்ள

ஆசீர்வாதங்களில் சில ஆகாரம், உணவு, உடை. நமக்குத் தேவை எதுவென்று நமது பரம பிதா அறிந்திருக்கிறார். இவைகள் நமக்குக் கொடுக்கப் படும் என்று இயேசு தாமே கூறியுள்ளார் (மத்.6: 31-33). அதே சமயம் இயேசு சீடர்களுக்கு எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும் என்று ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார் (மத்.6:11). பரிகத்த ஆவியானவர் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ள பிதா நமக்கு வாக்குப்பண்ணியுள்ளார் (லூக்.24:49; அப்.1:5; 2:39). ஆயினும் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கே அதைக் (லூக்.11:13), கொடுக்கிறார்

செங்கடல் அருகே நின்ற மோசேயிடம் நீ என்னிடத்தில் முறையிடுகிறது (ஜெபிப்பது) என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று கர்த்தர் கூறினார் (யாத்.14:15). இப்படி சில சந்தர்ப்பங்கள் இருந்தாலும் இடைவிடாமல், ஊக்கமாக ஜெபிக்க வேண்டிய அவசியத்தை வேதம் ஏராளமான இடங் களில் வலியுறுத்துகிறது (உதாரணம்: ரோமர் 12:12; பிலி.4:6; 1 தெச.5:17).

இரவில் வீட்டிற்கு வந்த நண்பனுக்கு உணவு கொடுக்க பக்கத்துவீட்டு நண்பனிடம் வற்புறுத்தி உணவு கேட்ட நிகழ்ச்சி விடாப்பிடியான ஜெபத்திற்கு ஓர் உதாரணம் (லூக்.11:5-10). அநீதியுள்ள நீதிபதியை விதவை விடாப்பிடியாக வற்புறுத்தியதால் ஏற்பட்ட பலனை இயேசு விளக்கு கிறார் (லூக்.18:1-18). இங்கே நேர்நிலை அறிக்கை செய்யவில்லை. ஊக்கமாக வேண்டினார்கள் எனக் காண்கிறோம். ஊக்கமான ஜெபம் அவிகவாசத்தின் அறிகுறியல்ல. அது விசுவாசம், கீழ்படிதலை வெளிப் படுத்துவதாகும்.

4. நேர்நிலை அறிக்கை, செழுமை சுவிசேஷம், வாழ்க்கையில் விசுவாசிகளுக்கு கஷ்டங்கள் ஏற்படும் என்பதை மறுதலிக்கிறது.

நாம் யாரும் கஷ்டத்தையும் பாடுகளையும் விரும்பி ஏற்கவில்லை, வருந்தி அழைக்கவில்லை. ஆனால் தேவனுடைய பிள்ளைகளுக்கு வறுமை, கஷ்டம், பாடுகள், பசி, பட்டினி, வியாதி உண்டாக. லாம் என் வேத வசனங்கள்மூலமும், அவைகளால் ரீதியாகவும் அறிகிறோம். விசுவாசிகள் சூழ்நிலைகளை அடக்கியாள வேண்டுமேயன்றி

ஆளப்படக்கூடாது என்று இப்போதனை கூறுகிறது.

கிறிஸ்துவுடனே நாம் மகிமைப்படும்படிக்கு அப்படியாகும் அவருடனேகூடப் பாடுபட்டால் (ரோமர் 8:17). கிறிஸ்து ஐசுவரியமுள்ளவராயிருந்தும் நமது நிமித்தம் தரித்திரரானார் (2 கொரி.8:9), நரிகளுக்குக் குழிகளும், ஆகாயத்து பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க டமில்லை என்று இயேசு கூறினார் (மத்.8:15). பவுல் தன் பெலவீனம், பாடுகளைக் குறித்து சொல்லியவற்றை முந்தின பகுதியில் குறிப்பிட்டுள்ளோம். இதில் இரண்டு மிஞ்சின போதனைகளை (Extreme) நாம் காண்போம்.

அ. தரித்திரமே பரிசுத்தம், சரியான பிரதிஷ்டை என்ற மிஞ்சின போதனை

இயேசு தலைசாய்க்க இடமில்லை என்றார். எனவே நமக்கு சொந்தமாக வீடு இருக்கக்கூடாது. இயேசு கழுதையில் தான் பயணம் பண்ணினார், அதனால் நாமும் எந்த ஆடம்பர வாகனத்தையும் பயன்படுத்தக்கூடாது. பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது, எனவே நமக்கு அதிக பணமே கூடாது. ஆடம்பரமாக வாழக்கூடாது. விலையுயர்ந்த உணவுகளை உண்ணக்கூடாது. உயரிய ஆடைகளை அணியக்கூடாது என்பது இந்தக் கொள்கையினரின் நம்பிக்கை, போதனை. இந்தப் போதனை வெளி நாடுகளிலும் உண்டு, நமது நாட்டிலும் உண்டு.

குறிப்பாக ஊழியம் செய்கிறவர்கள் தரித்திர நிலை யிருப்பதையே மேன்மையாக எண்ணுவதும் உண்டு.

இதில் இந்து மார்க்கத்தின் வாசனையைக் காண்கிறோம். போதகர் என்றால் முற்றும் துறந்த சாமியார் என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது. இந்தப் போதனைக்குக் காரணம் விசுவாசிகள் அல்ல, இதைப் போதிக்கிற போதகர்களே. இந்தப் போதனை யின்படி வந்த விசுவாசிகள், சபை மேய்ப்பர் நன்றாக உண்பதை விரும்புவதில்லை. போதகர் எலும்பும் தோலுமாக இருப்பதே சரியான நிலை என எண்ணுவதால் அந்த நிலையிலேயே அவரை வைத்திருப்பார்கள்.

சபை மேய்ப்பர் நல்ல ஆடை அணிவது இவர்களுக்குப் பிடிக்காது, கிழிந்த சட்டை, கிழிந்த வேஷ்டி, ஓட்டைப் பேண்ட் போட்டால்தான் அவர் பரிசுத்தவான். நல்ல வாகனம் சபை மேய்ப்பருக்கு இருக்கக்கூடாது, அது ஆடம்பரம். இயேசு நடந்தே போனாரே. இவருக்கு ஏன் நல்ல சைக்கிள்? நல்ல ஸ்கூட்டர்? நல்ல கார்?

இந்தப் போதனையில் வந்த போதகர்களுக்கும், விசுவாசிகளுக்கும் பரலோகம் பெரிய பிரச்சனையாக இருக்கும். ஏனெனில் பரம எருசலேம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப் பொன்னாயிருந்தது. நகரத்தின் அஸ்திபாரங்களும் சகலவித இரத்தினங் களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பன்னிரண்டு வாசல்களும், பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்கு போலச் சுத்தப் பொன்னாயிருந்தது (வெளி.21:18-21) என்று விளக்கப் பட்டுள்ளது. மேற்கூறிய உபதேசம் உள்ளவர்களுக்கு இது அளவுக்கு மிஞ்சிய ஆடம்பரமாக தெரியும். எப்படி அட்ஜஸ்ட் தெரியவில்லை. பண்ணப் போகிறார்களோ

ஆ. செழுமையான வாழ்வே விசுவாசிகளின் விசுவாசக் தைக் காட்டுவது என்பது அடுத்த பக்க மிஞ்சின போதனை.

தேவனுடைய பிள்ளைகள் நல்ல பணக்காரர் களாக, வசதிமிக்கவர்களாக ஒரு குறையும், கஷ்டமு மில்லாதவர்களாக இருக்க வேண்டும். சிறந்த வீடு. போதனை. உயர்ந்த கார், இவைகளே தேவனுடைய பிள்ளை களுக்கு இருக்க வேண்டும் தேவனுடைய மக்கள் என்ற ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்று கூறுவது தவறு அல்ல. ஆனால் ஒருவருக்கு இருக்கின்ற பணத்தைப் பொறுத்து அவரின் விசுவாசத்தை கணக்கிட்டால் எப்படி?

கஷ்டப்படுவது, பாடுபடுவது, பெலவீனப் படுவது, வியாதிப்படுவது விகவாசக்குறை என். எடுத்துக்கொண்டால், எத்தனை பரிசுத்தவான்கள் இந்தப்பாடுகளுக்கு ஊடே போயிருக்கிறார்கள். அவர்கள் விசுவாசத்தின் உச்சக் கட்டத்தில் இருந்த போதும் இவைகளை அனுபவித்திருக்கிறார்களே. விசுவாச வீரர்களைப் பற்றி எபிரெயர் அதிகாரத்தில் பார்க்கும்போது…

“வேறு சிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதி யாமல், வாதிக்கப்பட்டார்கள்; வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; கல்லெறியுண் டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சை பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறி யாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத் தையும் அநுபவித்தார்கள்; உலகம் அவர் களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளி லேயும் சிதறுண்டு அலைந்தார்கள். இவர் களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்” (எபி.11:35-39).

எனவே எல்லாப் பிரச்சனைகளும் எதிர்மறை அறிக்கையின் விளைவே அல்லது விசுவாசக் குறையின் அறிகுறியே என்பது வேத வசனத்திற்கு முரண்பட்ட போதனையாகும்.

இதை வாசிக்கின்ற போதகர்களும், விசுவாசி களும் இந்த இரண்டு மிஞ்சின உபதேசங்களை அறிந்து உணர்ந்து செயல்பட வேண்டும். தரித்திரமும், பாடுகளும், வறுமையும் பரிசுத்தத்தின் அடையாளங்களல்ல. இவை விசுவாசக் குறையின் பிரதிபலிப்புமல்ல. அதுபோலவே உலகப்பிரகார மான பணமும், வசதியும் விசுவாசத்தின் அளவுகோல் களல்ல, அல்லது தேவப் பிள்ளைகளிடம் காணப்படக் கூடாததுமல்ல. ஒரு தேவனுடைய பிள்ளை வசதி யுடனும், வளமுடனும் வாழவும் முடியும். அதேசமயம் தேவ பிள்ளைக்கு பாடுகளும், கஷ்டங்களும் வரலாம்.

5. நோநிலை அறிக்கை தேவனின் மேலான ஆளுகையை (Severignity) அங்கிகரிப்பதில்லை.

வாயினால் அறிக்கையிட்டால் எல்லாம் நடந்து விடும் என்றால், நாம் கர்த்தரின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்கிறோம். நாம் சொன்னதைச் செய்யும் வேலைக்காரனாக கர்த்தரை எதிர்பார்க்கும் ஆபத்து வந்துவிடும். தேவன் நமது தகப்பன், நாம் அவருடைய பிள்ளைகள் என்பது உண்மை. அதற்காக நான் ஆணையிட்டால் அவர் நடத்திக் காட்டவேண்டும் என்ற மனப்பான்மையில் செயல் படுவது பயங்கரமானது. தேவனுடைய ஆளுகைக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதற்குப் பதில் நமது கட்டுப் பாட்டிற்குள் கர்த்தரை கொண்டுவருவது போலாகும். தேவ சித்தம் செய்ய அவர் நம்மை அழைத்திருக் கிறார். நம் சித்தம் அவரை அழைப்பது அவமரியாதையாகும்.

நாம் தேவனுடன் நெருங்கிப் பழகும்போது, அவர் சித்தம் அறிந்து, நாம் அவரை வேண்டிக் கொள்ளும்போது அவர் நமக்கு உதவி செய்கிறார். நமது வேண்டுகோள்களுக்கு செவிசாய்க்கிறார் என்பது உண்மை. வெறும் அறிக்கையில் காரியத்தை சாதிக்க முயற்சிப்பது நமது அறியாமையையே வெளிப்படுத்தும்.

நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர் களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன் (யோ.14:13) என்ற வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, எனக்கு இப்போதே பத்துக்கோடி ரூபாய் தரவேண்டும். நீர் தந்து விட்டதற்காக நன்றி என்று அறிக்கையிட்டுக் கொண்டிருந்தால் கிடைத்துவிடுமா?

நீர் ராஜாதி ராஜா, உலகத்தின் சொந்தக்காரர், இந்தியாவிற்கும் நீரே சொந்தக்காரர், எனவே உமது பிள்ளையாகிய என்னை இந்தியாவிற்கு அரசனாக்கினீர் என்று அறிக்கையிடுகிறேன் என்று அறிக்கையிட்டால் இந்தியாவின் மன்னராகிவிட முடியுமா? தேவ சித்தம், வேத வசன ஆதாரம், தேவனுடைய ஆளுகை இவைகளை தேடாமல் ஒரு சில வசனங்களை இடச்சூழல் தெரியாமல் எடுத்து (Context) அறிக்கையிட்டால் ஒரு நன்மையும் வராது.

நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால் அவர் நமக்குச் செவிகொடுக்கிறா ரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம், நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோ மானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம் (1 யோ.5:14,15).

தேவன் சர்வ வல்லமையுள்ளவர், அவர் சித்தம் அறியாமல், தெரியாமல் வெறுமனே அறிக்கையிடும் யாவற்றிற்கும் அவர் பதிலளிப்பார் என எதிர்பார்க்க முடியாது. ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் (எபே.5.17).

6.நேர்நிலை அறிக்கை எல்லா சூழ்நிலையிலுள்ளோ ருக்கும் பொருத்தமற்றதாக ஒன்றாக இருக்கிறது.

நாம் போதிக்கிற போதனை எல்லா சமூகத்த வருக்கும் ஏழை, பணக்காரன், அகதிகளுக்கும் பொருத்த முள்ளதாக இருக்கவேண்டும். ஆதிக் கிறிஸ்தவர்கள், இயேசு ஒருவரே

மெய்யான தேவன்.

அவர்  ஒருவரையே நாங்கள் வணங்குவோம்.

 ரோம ராயனை வணங்க மாட்டோம் என்று அறிக்கையிட்ட போது கொல்லப்பட்டார்கள். மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டார்கள்.

கம்யூனிச நாடுகளில் விசுவாசிகளின் மெய்யான அறிக்கைகளின் மூலம் சிறையில் அடைக்கப்பட்டார்கள், இன்றும் அடைக்கப்படுகிறார்கள், துன்புறுத்தப் படுகிறார்கள். இந்தியாவிலும் இயேசுவே உண்மை யான தேவன் என்று அறிக்கையிடுவதால் எத்தனை யோ மக்கள் அடிகளையும், அனுபவிக்கிறார்கள். வேதனைகளையும்

நமது தேசத்தில் கூலிவேலை செய்து குடிசையில் வாழும் விசுவாசி விசுவாசக் குறைவினால் அந்த நிலையிலிருக்கிறார் என்று சொன்னால் பொருந்துமா? கர்த்தர் அவரை ஆசீர்வதிப்பார் என்பது உண்மை. நாமும் அவர்கள் தரித்திரம் நீங்க ஜெபிக்கிறோம். ஆனாலும் உடனே அவர்கள் தரித்திரம் நீங்கி செல்வந்தர்களாக மாறிவிடுவது இல்லையே.

7. லோகோஸ், ரேமா என்ற பதங்களைக் குறித்த விளக்கங் களிலும் நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

எபிரேய மொழியில் ‘தாபார்’ என்ற பதம் ‘தேவனுடைய வார்த்தை’ என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கிரேக்க மொழியில் லோகோஸ், ரேமா என்ற வார்த்தைகள் வேத வசனத்திற்கு பயன் படுத்தப்பட்டுள்ளன. பழைய ஏற்பாடு எழுதப்பட்ட மொழி எபிரேய மொழி. எரே.1:1,2 வசனங்களில் வரும் வசனங்கள், கர்த்தருடைய வார்த்தை இரண்டிற்கும் எபிரேய மொழியில் ‘தாபார்’ என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பழைய ஏற்பாட்டில் எரே.1:1ல் கூறப்பட்டுள்ள ‘வசனங்கள்’ என்பதற்கு “ரேமா’ என்றும், 1:2ல் வரும் ‘கர்த்தருடைய வார்த்தை’ என்பதற்கு ‘லோகோஸ்’ என்றும் வருகிறது. புதிய ஏற்பாட்டில் ரேமா, லோகோஸ் என்ற பதங்கள் ஒன்றிற்குப் பதிலாக ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக 1 பேதுரு 1:23ல் ‘தேவ வசனம்’ என்பதற்கு ‘லோகோஸ்’ என்றும், 25ம் வசனத்தில் ‘கர்த்தருடைய வசனம்’ என்பதற்கு ‘ரேமா’ என்றும் வருகிறது. எபே.5:26ல் ‘திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து’ என்பதற்கு ‘ரேமா’ என்றும், யோவான் 15:3ல் ‘நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்’ என்ற இடத்தில் ‘லோகாஸ்’ என்றும் வருகிறது. இவை யாவும் ஒரே கருத்தில் தான் எழுதப்பட்டுள்ளன என்பதை இந்த வசனங் களை தெளிவாக ஆராயும்போது தெரியும்.

இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் வித்தியாச மான பொருள் இருக்கிறது என்பதை வசனத்தைக் கொண்டு நிரூபிக்க இயலாது. லோகோஸ் என்றால் எழுதப்பட்டுள்ள வசனங்கள் என்றும், ரேமா என்றால் குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட ஆளுக்கு ஆவியானவரால் கொடுக்கப்பட்ட வார்த்தை என்றும் விளக்கங்கள் சொல்லப்பட்டாலும் எதையும் நீங்கள் நன்கு ஆராய்ந்து செயல்படுங்கள்.

எழுதப்பட்ட வசனத்திற்கு முரணாக, மாறாக யாராகிலும் இது கர்த்தர் எனக்குத் தந்த வார்த்தை என்றோ, கர்த்தர் உங்களுக்குத் தந்த வார்த்தை என்றோ சொன்னால் எச்சரிப்பாயிருந்து, விழிப் பாயிருந்து செயல்படுங்கள். சிலருக்கு எபிரேய மொழியும், கிரேக்க மொழியும் தெரியாவிட்டாலும் எதையாகிலும் சொல்லி விடுகிறார்கள். குழப்பி ஆட்களை விடுகிறார்கள்.

உங்களுக்கு கிரேக்கமொழி, எபிரேய மொழி தெரியாவிட்டால் வேதனைப்பட வேண்டாம். வேத வசனங்கள் ஒழுங்காய் தெரிந்தால் அதுவே மேலானது. எபிரேய, கிரேக்க மொழி பண்டிதர்கள் பலர் பாவமன்னிப்பின் நிச்சயம் பெறலாமல் நரக வழியிலே சென்று கொண்டிருக்கிறார்கள். நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் (யோ.9:25) என்று சொல்லும் நிலையில் இருந்தால், நீங்கள் பாக்கியவான்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *