ஏழாம் நாள் ஓய்வுக்காரர்

ஏழாம் நாள் ஓய்வுக்காரர்

இதன் pdf file கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

ஏழாம் நாள் ஓய்வுக்காரர்

உபதேசங்களில் வித்தியாசமானவர்கள் யாவரும் நமக்கு விரோதிகள் அல்லர். நாம் ஏழாம்நாள் ஓய்வுக் காரரை நேசிக்கிறோம். அவர்களுக்காக ஜெபிக்கி றோம். அவர்கள் செய்யும் பொதுப்பணித் தொண்டை பாராட்டுகிறோம். ஆனால் அவர்கள் போதனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது. தவறான உபதேசங்கள் எப்படி உருவாகின்றன என்று நான் முன்பு எழுதின காரணங்களில் ஒன்று, தனிப்பட்ட நபர் சொப்பனங் களை, வெளிப்பாடுகளை, தீர்க்கதரிசனங்களை தங்கள் உபதேசங்களுக்கு அடித்தளமாக்குதல். அதுதான் இந்த நண்பர்களுக்கு ஏற்பட்ட சோதனை.

ஓய்வுநாள் ஆசரிப்புக்காரர், கிறிஸ்டியன் சயன்ஸ், தியோசோபி ஆகிய கொள்கைகள் யாவும் விசித்திரமான பெண்களால் உருவாக்கப்பட்டவைகள். இந்த பெண்கள் நரம்புத்தளர்ச்சியும், அவ்வப்போது சுயாதீனப் புத்தியையும் இழந்தவர்களுமாய் இருந்தார். கள் என்று இர்வின் என்பவரும், ரெட்உட் என்ப வரும் எழுதுகின்றனர். (என்மேல் யாரும் கோபப்பட வேண்டாம். நான் புத்தகத்திலிருந்து மேற்கோள் மட்டுமே காட்டுகிறேன்).

ஏழாம் நாள் ஓய்வு ஆசரிப்பு உபதேசத்தை நிறுவியவர் திருமதி. எல்லன் ஒயிட் என்ற பெண்.

இந்தப் பெண், வில்லியம் மில்லர் போதனைகளை வெகுவாகப் பின்பற்றினார். ஏழாம் நாள் ஓய்வுக்காரர் நடத்தும் மருத்துவமனையில் ஏழாம் நாள் தலைமை மருத்துவராக இருந்த டாக்டர் வில்லியம் ரசல் என்பவர் நீண்ட காலமாக ஆசரிப்பை பின்பற்றினார். அவர் இந்த ஸ்தாபனத்தை நிறுவின திருமதி. எல்லன் ஒயிட்டைப் பற்றி கி.பி. 1869ல் எழுதும்போது..”அந்த அம்மாவுக்கு மூளையிலும், நரம்புகளிலும் பாதிப்பு இருந்தது. அதனால் அடிக்கடி தரிசனம் காண்பதாக கூறுவார்கள். அது வியாதியினால் உண்டானது” என்று எழுதியுள்ளார். என்பவர்

அதே மருத்துவமனையில் நீண்ட காலம் மருத்துவராயிருந்த டாக்டர் பேர்பீல்ட் கி.பி.1887ல் இவ்விதம் எழுதினார்… “திருமதி. எல்லன் ஒயிட் நரம்புத் தளர்ச்சியினால் ஏற்பட்ட கோளாறினால் அடிக்கடி எதையாவது தரிசனத்தில் கண்டதாக கூறுவார்கள். ஆனால் வியாதி குணமானபோது சரியாகி விட்டார்”. ஓய்வுநாள் கொள்கையை பின்பற்றினவர்தான் இந்த டாக்டர் பேர்பீல்ட்.

இந்த அம்மா எழுதின “தி கிரேட் கான்ட்ரோ வர்ஸி” (The Great Controversy) (இதன் பொருள்: மகா பெரிய முரண்பாடு) என்ற புத்தகம் இவர் களுடைய கொள்கைக்கு அடித்தளமாயிருக்கிறது. இதில் எழுதப்பட்டுள்ள அநேக காரியங்கள் இந்த பெண்ணுக்கு வெளிப்பாடாக கிடைத்தது என்று ஒரு சாரார் கூறினாலும், இவர் எழுதின அநேக சரித்திர நிகழ்ச்சிகள் கீழ்க்காணும் புத்தகங்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டவை என்று கலிபோர்னியா மாநிலத்தி லுள்ள போதகர் குழு ஒன்று இதைக் குறித்து ஆராய்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த புத்தகங்கள் இவை தான்…

 • ஓய்வுநாள் சரித்திரம் – ஆசிரியர் ஆண்ட்ரூஸ்
 • வால்டன்சஸ் சரித்திரம் – எழுத்தாளர் வில்லி
 • மில்லன் வாழ்க்கை –  எழுதியவர் ஒயிட்
 • புரட்சி எண்ணங்கள் – ஆக்கியோன் ஸ்மித்

ஏழாம் நாள்காரர் கீழ்க்காணும் உபதேசங்களை நம்புகிறோம் என்று கூறுகின்றனர்:

 • பரிசுத்த வேதாகமம் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டது.
 • தேவன் ஒருவரே
 • கிறிஸ்துவின் தெய்வீகம்
 • இயேசுவின் கன்னிப் பிறப்பு
 • இயேசுவின் அற்புதங்கள்
 • இயேசுவின் பாவமற்ற வாழ்க்கை
 • இயேசுவின் சரீர மரணம், உயிர்த்தெழுதல் 
 • இயேசுவின் இரண்டாம் வருகை

இவைகளை இவர்கள் நம்புவதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனால் நல்ல குடிநீரைத் தந்து அதில் சில சொட்டு விஷத்தைக் கலப்பது போல இவர்களின் தவறான சில போதனைகள் இவர்களை தவறான உபதேசக்காரர் என்ற பட்டியலுக்கு கொண்டு வந்துவிட்டது.

ஏழாம் நாள் ஓய்வுக்காரரின் தவறான போதனைகளில் முக்கியமானவை

1. மனிதனின் பாவமன்னிப்பிற்கு இயேசுகிறிஸ்துவின் பரிகாரப்பலி மட்டும் போதுமானதல்ல.

இதை விளக்க சற்று விபரமாக எழுத வேண்டி யுள்ளது. பொறுமையுடன் வாசியுங்கள். திருமதி. ஒயிட் தன் குருவாக மதித்தது வில்லியம் மில்லரை. இவர் தானியேல் 8:13,14ஐ அடிப்படையாகக் கொண்டு இயேசுவின் வருகையை கணக்கிட்டார்.

எருசலேம் எடுப்பித்து கட்டுவதற்கான கட்டளை வெளிப்பட்டது (தானி.9:25) கி.மு.457ல் என்றும், அதிலிருந்து தானி.8:14ல் சொல்லப்பட்டுள்ள 2300 நாட்கள் என்பது தீர்க்கதரிசனமாக 2300 வருடங்களைக் குறிக்கிறது என்றும், எனவே இந்த கணக்குப்படி இயேசுகிறிஸ்து கி.பி.1844ல் வருவார் என்றும் எழுதி இருந்தார். தன் குருவானவர் எழுதினது பொய்யாய்ப் போயிற்று என்று கண்ட எல்லன் ஒயிட் அதற்கு புது விளக்கத்தை உருவாக்கினார். ‘தி கிரேட் கான்ட்ரோ வர்சி’ என்ற புத்தகத்தில் கீழ்க்காணும் காரியத்தை திருமதி. எல்லன் ஒயிட் எழுதியுள்ளார் (பக்.329-422).

வில்லியம் மில்லர் இன்னும் 25 ஆண்டுகளில் இயேசுகிறிஸ்து வருவார் என்று எழுதினார். அவர் அப்படி எழுதின ஆண்டு கி.பி.1818. எனவே கி.பி. 1844ல் வருவார் என்றும், எந்த தேதியில் வருவார் என்பதை ஆராய்ந்து அக்டோபர் 22ல் வருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. கிறிஸ்து வரவில்லை, எதிர்பார்த்த மக்கள் ஏமாந்தனர். இதற்கு வேறு விளக்கம் என்ன என்று ஆராயப்பட்டது.

அதன் பலனாக கண்டது என்னவென்றால்…. ஆலயத்தில் பரிசுத்தஸ்தலம், மகா பரிசுத்தஸ்தலம் என்ற இரண்டு பகுதிகள் இருப்பது போல பரலோகத்திலும் இருக்கிறது. இயேசுகிறிஸ்து பரமேறின பின்பு 18 நூற்றாண்டுகளும் பரலோகத் திலுள்ள பரிசுத்தஸ்தலத்தில்தான் இருந்தார். கி.பி. 1844ல்தான் பரிசுத்தஸ்தலத்தைவிட்டு மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் போய் இருக்கிறார். ஆசாரியர்கள் பரிசுத்தஸ்தலத்தில் பணிவிடை செய்து கொண்டி ருந்ததுபோல இயேசுவும் பரலோக பரிசுத்தஸ்தலத்தில் பணிவிடை செய்து கொண்டிருந்தார்.

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் மனந்திரும்பின வர்களுக்காக பரிந்துபேசிக் கொண்டிருக்கிறது. பிதாவாகிய தேவன் பாவங்களை மன்னித்துவிட்டார். ஆனாலும் இன்னும் பரலோக புத்தகத்தில் அது அழிக்கப்படவில்லை. இதனால் பரலோக பரிசுத்த ஸ்தலத்தில் பாவமிருக்கிறது. இயேசுகிறிஸ்து கி.பி. 1844ல் பரலோக பரிசுத்தஸ்தலத்தை சுத்திகரிக்க ஆரம்பித்துள்ளார். யார் யார் பாவத்தை பரலோக புத்தகத்திலிருந்து நீக்கலாம் என்று இயேசு ஆராய்ந்து கொண்டிருக்கிறார். இப்படி எல்லன் ஒயிட் எழுதி யுள்ளார்கள்.

இந்தப் புத்தகத்தின் தலைப்பு (The Great Contro versy) அதன் பொருள்: மகா பெரிய முரண்பாடு. சரியாகத்தான் அம்மா பெயர் வைத்துள்ளார்கள். மேலே கூறப்பட்டுள்ள காரியங்களை வாசிக்கும் போது… அழவா, சிரிக்கவா, தலையை பிய்த்துக் கொண்டு ஓடவா என்று தோன்றலாம். இந்த கொள்கையை நம்புகிறவர்களுக்காக ஜெபியுங்கள்.

வேதவசன ஆதாரமில்லாத இந்தப் போதனை சொப்பனத்தில் கடவுள் காட்டினார் என்ற பெரிய பொய்யுடன் நுழைந்துவிட்டது. இன்றுகூட வசனத் திற்கு முரண்பட்ட சொப்பனங்களை வெளிப்பாடு களை நம்புகிற பேதைகளின் கூட்டத்தார் ஆவிக்குரிய சபைகளிலும் இருக்கிறார்களே!

இதை வாசிக்கின்ற உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒருவர் மரித்தோரை உயிரோடே எழுப்பக்கூடிய வல்லமையுடையவராக இருந்தாலும், அவர் போதனை வசனத்திற்கு முரண்பட்டது என்றால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஒருவர்மூலம் நடக்கும் அற்புத அடையாளங்கள், அவர் சரியான போதனையுள்ளவர் என்பதற்கு முத்திரைகள் அல்ல. இது சாதாரண மக்களுக்கும், ஆவிக்குரிய வாழ்வில் வளர்ந்துள்ள அநேகருக்கும் விளங்காமலிருக்கிறதே!

கழுதை மூலம் கர்த்தர் பிலேயாமுடன் பேசினார் என்பதற்காக கழுதையை வைத்து நான்கு நாள் கருத்தரங்கு நடத்தலாமா? கழுதைமூலம் கர்த்தர் பேசினதாலே… அதற்கு தீர்க்கதரிசி கழுதை என்று பட்டம் சூட்டலாமா? தேவன் பயன்படுத்தும் பரிசுத்த வான்கள் கோமாளித்தனமான காரியங்களை செய்யும் ஆபத்துக்கள் உண்டு. எனவே எல்லன் ஒயிட் போதனை வேதத்திற்கு முரண்பட்டது.

இயேசுகிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தபோது தமது இரத்தமாகிய கிரயத்தைக் கொடுத்து, மனுக்குலத்தின் இரட்சிப்பின் கிரியை முடிந்தது என்று சொல்லிவிட்டார். இயேசுகிறிஸ்து 18 நூற்றாண்டுகளும் முதல் அறையிலிருந்து, கி.பி.1844ல் இரண்டாம் அறைக்குள் போயிருக்கிறார் என்ற புளுகை எவன் நம்புவான்? வேதமென்ன பட்டி விக்கிரமாதித்தன் கதையா? கூடுவிட்டு கூடு பாய்வதும் அறையை விட்டு அறைக்குள் போவதும்? இயேசு சிலுவையில் ஜீவனைக் கொடுத்தபோது பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிகத்தஸ்தலத்திற்கும் இடையி லிருந்த திரை இரண்டாகக் கிழிந்ததே! அதை மறுபடியும் தைத்து தொங்க வைத்தது யார்? மில்லரா? ஒயிட்டா?

இயேசுகிறிஸ்துவே, என் பாவங்களை மன்னியும், என் உள்ளத்தில் வாரும் என்று ஜெபிக்கும்போதே இயேசு நமது பாவங்களை மன்னித்து நமது உள்ளத்தில் வந்து வாழ்கிறாரே! அதன் பின்பு புத்தகத்திலிருக்கும் பாவத்தை அழிக்காமல் இருக்கிறாரென்றால் என்ன காரணம்? இயேசுவின் இரத்தம் தானே பாவத்தைப் போக்குவது! அது சிந்தப்பட்டு சுமார் 20 நூற்றாண்டு களாயிற்றே! இன்னும் இயேசு பாவத்தை அழிக்க ரப்பரை தேடிக் கொண்டிருக்கிறார் என்று கதை விட்டால் எவன் நம்புவான்? கயபுத்தியை இழந்தவர்கள் போதனையை ஜெபியுங்கள். பின்பற்றும் கூட்டத்தினருக்காக

2.போக்காடு என்பது சாத்தானைக் குறிக்கிறது என்று நம்புகின்றனர்

லேவி.16:8,10 வசனங்களில் போக்காடு என்ற வார்த்தை வருகிறது. இஸ்ரவேலரின் பாவ நிவார ணத்திற்காக இரண் வெள்ளாட்டுக்கடாக்கள் கொண்டுவரப்பட்டன. ஒன்றை பலி செலுத் தினார்கள். மற்றொன்றின் மேல் கைகளை வைத்து அதின் மேல் இஸ்ரவேலருடைய சகல அக்கிரமங் களையும், மீறுதல்களையும் அறிக்கையிட்டு அதை ஒரு ஆள்வசம் கொடுத்து வனாந்தரத்திற்கு அனுப்பினார்கள். அவன் அதை மக்கள் குடியில்லாத வனாந்தரத்திலே விட்டுவிட்டு வருவான்.

பழைய ஏற்பாட்டில் அநேக காரியங்கள் மக்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய அளவிலே செயல்படுத்தப்பட்டது. அவை வருங்காலத்திற்குரிய சத்தியங்களுக்கு நிழலாட்டமாய் செய்யப்பட்டு வந்தன. பண்டிகைகளும், பலிமுறைகளும் சடங்காச் சாரங்கள் பலவும் இந்தக் கருத்துடையவைகளே!

இஸ்ரவேலருடைய பாவங்களை அவர்களை விட்டு கர்த்தர் நீக்கினார் என்பதற்கு அடையாள மாகவே இந்த போக்காடு யாவரும் காணக்கூடிய அளவிலே அனுப்பப்பட்டது.

அம்மா ஒயிட்டின் விளக்கமென்னவென்றால் கிறிஸ்து பலியாடு. அப்படியானால் போக்காடு சாத்தான். அவன்தான் பாவத்தை சுமந்து செல் கிறான். பிரதான ஆசாரியன் பாவநிவாரண பலியின் மூலம் மக்களின் பாவங்களை நீக்கி, பரிசுத்த ஸ்தலத்தை சுத்திகரித்து, போக்காடின்மேல் பாவம் முழுவதையும் சுமத்தினதுபோல, இயேசுகிறிஸ்து தமது இரத்தத்தினாலே பரலோக பரிசுத்தஸ்தலத்தை சுத்திகரித்த பின்பு, கடைசியில் சாத்தான்மேல் எல்லா பாவங்களையும் சுமத்திவிடுவார். சாத்தான் மறுபடியும் திரும்பிவராத இடத்திற்கு போய் விடுவான் என்று ஒயிட் அம்மா ‘மகா முரண்பாடு ‘ புத்தகத்திலே எழுதி வைத்துள்ளார்கள்.

அப்படியானால் நாம் சாத்தானுக்கு மிகவும் நன்றியாக இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. இவ்வளவு உதவியை மனுக்குலத்திற்கு செய்திருக்கிறானே! இது சரியான விளக்கமா? முற்றிலும் தவறு.

உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்று இயேசு அல்லவா அழைக்கப் பட்டுள்ளார். (யோ.1:29).போக்காடு சாத்தான் என்றால் அதை வனாந்தரத்திற்கு கூட்டிக்கொண்டு போனது யார்? அவன் அதை விட்டுவிட்டு தன்னை சுத்திகரித்துக்கொண்டு திரும்பி வந்ததாக சொல்லப் பட்டுள்ளதே அது என்ன?

வேத வசனங்களை வியாக்கியானப்படுத்த ஒழுங்குகளும், விதிமுறைகளும் உண்டு. வசனத்திற்கு முரண்பட்ட சொப்பனங்களையும், வெளிப்படுத்தல் களையும் ஒதுக்கித் தள்ளுங்கள். கள்ளத் தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள். அப்படியே உங்களுக் குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள் (2 பேதுரு 2:1). இயேசுகிறிஸ்துவே நமது பாவங்களைச் சுமந்து, தமது இரத்தத்தின் வல்லமையினால் நம்மைச் சுத்திகரிக்கிறார் என்பதற்கு ஏராளமான வசனங்கள் உண்டு. சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்: 1 பேதுரு 1:19; 2:24; எபே.2:13; ரோ.3:24; 1 யோ.1:7.

3. இயேசுகிறிஸ்து பாவத்தன்மையுடன் இவ்வுலகில் இருந்தார் என்று போதிக்கின்றனர்.

இதை வாசிக்கும் அநேகருக்கு அதிர்ச்சியுண்டாகலாம். இயேசு இந்த உலகில் எல்லாரையும் போலவே பாவத்தன்மையுடன்தான் பிறந்து வளர்ந்தார். பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவரானார். எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியிருந்தது. ஆதலால் அவர் சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர் களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார் (எபி. 2:14,17,18), இந்த வசனங்களை மேற்கோள்காட்டி இயேசு பாவத்தன்மையுடனிருந்தார் என்றும், இல்லாவிட்டால் அவருக்கும் விழுந்துபோன மனுக் குலத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இருந்திருக்காது என்றும் போதிக்கின்றனர். இது மிகத் தவறான போதனை.

வேத வசனம் சொல்லுவதைக் கவனிப்போம்:

இயேசுகிறிஸ்து பாவம் செய்யவில்லை என்பது மட்டுமல்ல. அவர் பாவத் தன்மையற்றவராகவே இருந்தார். எனவேதான் அவர் மனுக்குலத்தின் பாவத்தைத் தன்மேல் சுமக்கவும் தமது இரத்தத் தினாலே பாவப்பரிகாரம் உண்டுபண்ணவும் முடிந்தது.

“அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள். அவரிடத்தில் பாவமில்லை” (1 யோ.3:5).

“இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை” யோ.14:30.

“தேவன் குமாரனைப் பாவ மாம்சத்தின் சாயலாகவும் பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பினார்” ரோ.8:3 (சாயலாக மட்டுமே, பாவத் தன்மையுடன் அல்ல என்பதை கவனிக்கவும்). “எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபி.4:15). “இயேசு பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவருமான ஆசாரியர்” (எபி.7:26). “என்னிடத்தில் பிரதான பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப் படுத்தக்கூடும்?” (யோ.8:46) என்று இயேக சவால் விட்டார். இன்று இந்தக் கேள்வியை கேட்டால் ஏழாம்நாள் ஓய்வுக்காரர் தான் உம்மை இயேசு குற்றம் சாட்டுகிறார்கள் என்று பதில் சொல்லாம்.

‘பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமான வருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்” லூக்.1:35, இயேக பாவத் தன்மையுடன் இருந்திருப்பாரென்றால் இப்படிப் பிறக்க வேண்டிய அவசியமேயில்லை. எல்லாரையும் போல சாதாரண நிலையில் பிறந்திருப்பார். அப்படி எல்லாரையும் போல் அவர் பாவத்தன்மையுடன் இருந்திருப்பாரென்றால் அவர் மனுக்குலத்தின் பாவங்களை சுமந்து தீர்த்திருக்க முடியாது. தீர்க்க தரிசிகளில் ஒருவராக மட்டுமே இருந்திருப்பார். ஆனால் வேதம் கூறுவதென்ன? “அவர் அதரிசன மான தேவனுடைய தற்சுரூபமானவர்” (கொலே.1:15) அதாவது அவரே மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன். ஆமென்.

4. மரணத்திற்குப்பின் ஆத்துமா தூங்குகிறது என்று போதிக்கின்றனர்.

அம்மா ஒயிட் எழுதும் அடுத்த துர்உபதேசம் இது: “பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர் களாகிய அநேகர்… விழித்து எழுந்திருப் பார்கள்” (தானி.12:2).

“மனுஷன் படுத்துக்கிடக்கிறான்… நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை” (யோபு 14:12). “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான். அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்” (சங்.146:4). “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” (பிர.9:.5).

“லாசரு நித்திரையடைந்திருக்கிறான்” (யோ.11:11).

இதுபோன்ற வசனங்களை ஆதாரமாகக் கொண்டு மரணத்திற்குப் பின் ஆத்துமா தூங்குகிறது. அதற்கு எந்த உணர்வும் கிடையாது என்று போதிக்கிறார்கள். ஒரு காரியத்தை உபதேசமாக்க வேண்டுமானால் அது சம்பந்தமான முழு வேத பகுதிகளையும் ஆராய வேண்டும். 

மேற்கூறிய உபதேசம் தவறு என்பதை கீழ்க்காணும் வசனங்கள் மூலம் நிரூபிக்கலாம்.

 1. லூக்கா 16ம் அதிகாரத்தில் லாசரு ஐசுவரிய வானின் நிகழ்ச்சியை நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து விளக்குகிறார்:

அ. தரித்திரன் மரித்தான். ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான். தரித்திரனின் மரித்த ஆத்துமா தூங்கிக்கொண்டிருந்தால் அதை ஏன் தூங்குகிற ஆபிரகாமின் மடியிலே கொண்டு போய் விடவேண்டும். தாலாட்டக்கூட முடியாதே!

ஆ. ஐசுவரியவான் மரித்து பாதாளத்திலே அவன் வேதனைப்பட்டான். 

இ. தன் கண்களை ஏறெடுத்தான், பார்த்தான்.

ஈ. ஆபிரகாமை நோக்கி கூப்பிட்டான். 

உ.நாவை குளிரப்பண்ண தண்ணீர் கேட்டான்.

ஊஆபிரகாம் ஐசுவரியவானுடன் பேசினான். 

எ. ஐசுவரியவான் உலகிலுள்ள தன் ஐந்து சகோதரர் களை நினைவு கூறுகிறான்.

இதன்மூலம் மேற்கூறிய உபதேசம் சரியல்ல என்பது தெளிவாகிறது.

 1. மரித்தோரின் உயிர்த்தெழுதலை நம்பாத சதுசேயர், ஏழு பேரை திருமணம் செய்த பெண் மறுமையில் யாருடைய மனைவியாக அவள் இருப்பாள் தனமான என்று இயேசுவிடம் குறும்புத் கேள்வியைக் கேட்டனர். அவர்களுக்கு விளக்கம் கூறினார்: இயேசு

தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனென்று அழைக்கப்படுகிறார். அவர் மரித்தோரின் தேவனாயிராமல் ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார் என்றார். அதாவது இவர்களெல் லாரும் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்றார் (லூக்.20:28-38).

5. நரகம் நித்தியமானதல்ல என்பது இவர்களின் மற்றொரு போதனை.

முடிவில் பாவ ஆத்துமாக்கள் அழிக்கப்படு வார்கள். தேவன் அவர்களை நித்திய நித்தியமாய் நரகத்தில் வேதனைப்பட அனுமதிக்கமாட்டார். இரக்கமுள்ள ே தேவனுடைய தன்மையை கொடூர மாக்குவது நித்திய நரக போதனை என்பது இவர்களின் கூற்று.

இந்த போதனைக்கு அவர்கள் எடுத்துக்காட்டும். வசனங்கள் பல.

 • “பாவம் செய்கிற ஆத்துமா சாகும்” (அல்லது அழியும்) (எசே.18:4).
 • “ஆத்துமாவையும் சரீரத்தையும் அழிக்க வல்லவர்” (மத்.10:28).
 • “பக்தியில்லாதவர்கள் அழிந்துபோவார்கள்” (2 பேதுரு 3:7),

நண்பர்களே! பாவிகள் தொடர்ந்து நரகத்தில் வேதனைப்பட வேண்டும் என்று நாம் யாரும் விரும்பவில்லை. ஆனால் வசனங்கள் அப்படிப் போதிக்கின்றதே ! 

 • “நரக அக்கினியிலே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்” (மாற்கு 9:46,48).
 • “பாவிகளை நித்திய அக்கினியிலே போடுங்கள் என்பார்” (மத்.25:41).
 • “பாவிகள் நித்திய ஆக்கினை அடைவார்கள்” (மத்.25:46).
 • “அவர்களுடைய வாதையின் புகை சதா காலங்களிலும் எழும்பும்; இரவும் பகலும் இளைப்பாறுதலிராது” (வெளி.14:11).

நரகத்தில் நித்தியமாய் வேதனைப்படுவது என்பது கொடூரமான தாகவே இருக்கின்றது. ஆனால் வசனம் போதிப்பதை நாம் மாற்றக்கூடாதே!

6. ஏழாம் நாளை ஓய்வுநாளாக ஆசரிப்பதை மிக அதிகம் வலியுறுத்துகின்றனர்.

இந்தக் கொள்கையை இவர்கள் அதிகம் வலியுறுத்துவதால் இந்தப் பெயரில் அழைக்கப்படு கின்றனர். இதை அதிகம் வலியுறுத்த ஆரம்பித்தற்கும் அடிப்படையாயிருந்தது ஒரு சொப்பனம்தான். திருமதி. ஒயிட் ஆரம்ப நாட்களில் இதை அதிகம் வலியுறுத்தவில்லை. எல்டர் பேட்ஸ் என்பவர் ஏழாம் நாளை அதிக முக்கியப்படுத்தும்படி கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அம்மாவுக்கும், அதற்கும் உதவியாக ஒரு சொப்பனம் வந்தது. சொப்பனத்தில் திருமதி. ஒயிட் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், அங்கே பரிசுத்தஸ்தலத்திலிருந்த உடன்படிக்கை பெட்டியை மூடின திரையை இயேசு நீக்கினபோது பத்துக் கட்டளைகள் அடங்கிய கற்பலகைகளைக் கண்டதாகவும், அதில் நான்காம் கட்டளை (ஓய்வு நாள்) அதிகப் பிரகாசமாக காணப்பட்டதாகவும் எழுதியுள்ளார்கள்.

கிறிஸ்தவர்கள் மோசேயின் பிரமாணங்களுக்கு உட்பட்டவர்கள்தான் என்றும், அதில் சிறிதான ஒன்றையும் மீறக்கூடாது என்றும், ஓய்வுநாளை ஆசரிப்பது முற்றிலும் சரியானதே என்றும் போதிக் கின்றனர். இதற்கான பதிலை சுருக்கமாகப் பார்ப்போம்.

அதாவது ஓய்வுநாளைப் பற்றி ஆதி.2:2,3 வசனங்களில் பார்க்கிறோம். தேவன் தம்முடைய கிரியைகளை ஆறு நாட்களிலும் நிறைவேற்றி ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். அவர் களைப்படைந்ததி னாலல்ல. செய்ய வேண்டிய எல்லாவற்றையும் பூரணமாய் செய்து முடித்துவிட்டார் என்பதைக் காட்டுவதே ஏழாம் நாள் ஓய்வு. செயல்பாடுகளில் குறையற்றவர் என்பதை இது காட்டுகிறது. ஏழாம் நாளை ஆசீர்வதித்தார். பரிசுத்தப்படுத்தினார். ஆறு நாளும் வேலை செய்கின்ற ஒருவன் ஏழாம் நாளில் ஓய்வெடுப்பது சரீரத்திற்கும். மனநிலைக்கும் ஆரோக்கியமானதுதான். இது சரீரப் பிரகாரமான ஓய்வு.

பிரமாணங்களில் ஒன்றாக வருகின்ற ஓய்வு நாளைப் பார்ப்போம்.

இது இஸ்ரவேலருக்கும், தேவனுக்குமுள்ள அடையாள உடன்படிக்கை (யாத்.31:12,13; எசேக். 20:12,20)

பத்துக் கட்டளைகளும் அடையாளமாக சொல்லப் படாமல் இதுமட்டுமே அடையாளமாக கூறப் பட்டுள்ளது. எனவே இது யூதர்கள் கைக்கொள்ள வேண்டிய பல பண்டிகைகளில் ஒன்றாக கொடுக்கப் பட்டது (லேவி.23:1-3).

ஓய்வுநாட்களில் பல பிரிவுகள் இருந்தன: 

 1. வாரத்தின் ஏழாம் நாள் ஓய்வுநாள்.
 2. ஏழு வாரம் முடிந்து வரும் 50வது நாள் ஒரு ஓய்வுநாள்.
 3. ஏழாவது வருடம் ஓய்வு வருடம்.
 4. 50வது வருடம் (யூபிலி) ஓய்வு வருடம்.

ஓய்வைக் கைக்கொள்ள வேண்டுமானால் வை எல்லாவற்றையும் கைக்கொள்ள வேண்டும். இதில் ஏழாம்நாள் ஓய்வை மட்டும் கைக்கொண்டால் போதும் என்றால் எப்படி? இவை யாவும் யூதருக்கு கொடுக்கப் பட்டவை, கிறிஸ்தவர்களுக்கல்ல.

ஓய்வுநாளில் செய்ய வேண்டியவைகள்:

 1. ஓய்வுநாளில் 12 அப்பங்களை பரிசுத்தஸ்தலத்தி லுள்ள மேஜையில் இரண்டு அடுக்காக அடுக்கி வைக்க வேண்டும் (லேவி.24:5-8; 1 நாளா.9:32).
 1. ஓய்வுநாளில் சர்வாங்க தகனபலி செலுத்த வேண்டும் (எண்.28:10; 2 நாளா.8:13,31:3)
 1. ஓய்வுநாளில் விருத்தசேதனம் செய்துவந்தார்கள் (யோவான் 7:22,23),
 1. ஒவ்வொரு ஓய்வுநாளிலும் மோசேயின் ஆகமங்கள் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட வேண்டும் (அப்.13:27, 15:21).

ஓய்வுநாளில் செய்யக் கூடாதவைகள்:

 1. விறகு பொறுக்கக்கூடாது (எண்.15:32-36).
 2. அடுப்பில் நெருப்பு மூட்டக்கூடாது (யாத்.35:3) 
 3. தனக்கு விருப்பமானதை செய்யக்கூடாது. (ஏசாயா 58:13).
 4. தன் சொந்த பேச்சை பேசக்கூடாது (ஏசாயா 58:13, 56:2, 6-8).
 5. வேலை செய்யக்கூடாது. மீறினவன் கொலை செய்யப்பட வேண்டும் (யாத்.31:14-16).
 6. விதைக்கவோ அறுக்கவோ கூடாது (யாத்.34:21).
 7. வீடுகளிலிருந்து கமையை வெளியே கொண்டு போகக்கூடாது. உள்ளேயும் கொண்டுவரக் கூடாது. (6%ry.17:21,22; 6 58.13:19,20).
 8. பிந்திய நாட்களில் ஓய்வுநாள் தூரம் என்ற ஒரு பிரமாணமும் உண்டாயிற்று. அதாவது ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் நடக்க, பிரயாணம் பண்ணக்கூடாது என்ற பிரமாணத்தை போதகர்கள் கொண்டுவந்தனர். அது 2000 முழம்தூரம். சுமார் 3000 அடி (சுமார் ஒரு கி.மீ. தூரம்) 

ஏழாம் நாளை ஆசரிக்கின்றவர்கள் இதை ஏன் ஆசரிப்பதில்லை? இதுபோலவே ஏழாம் ஓய்விற்கும், 50வது வருட (யூபிலி) ஓய்விற்கும் பல பிரமாணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இஸ்ரவேலர் ஒரே ஜாதியாக தேவனுடைய உடன்படிக்கையின் மக்களாக இருந்தார்கள். அவர்களுக்கு இருந்த அரசர்களும், தேவனுடைய பிரமாணங்களுக்கு கட்டுப்பட்டு, ஆட்சி செய்தனர். எனவே இந்த பிரமாணங்களை தனிப்பட்ட நிலையிலும், குடும்ப நிலையிலும், நாட்டின் அளவிலும் கைக்கொள்ள வசதிகள் இருந்தது. வருட

உலகமெங்கும் பல கலாச்சாரங்கள், அரசாங் கங்கள், ஆளுகைகள் உள்ள நிலையில் கிறிஸ்தவர்கள் உலகமெங்கும் பரவியுள்ள சூழலில் இவை கைக்கொள்ளப்பட இயலாதவை, பொருத்தமற்றவை. முஸ்லீம் நாடுகளில் வெள்ளிக்கிழமைதான் விடுமுறை நாள். ஆராதனை நடத்துகிறார்கள். சனிக்கிழமை வேலைக்கு வரமாட்டேன். ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடக்கமாட்டேன் என்று சொன்னால் இன்றுள்ள நிலையில் இது நடைமுறைக்கு ஒத்துவராது.

ஏழாம் நாள் ஓய்வு நித்திய உடன்படிக்கை (யாத்.31:6) என்று கூறப்பட்டுள்ளதே? என்று கூறுவார்கள்.

விருத்தசேதனமும் நித்திய உடன்படிக்கை என்றுதான் கூறப்பட்டுள்ளது (ஆதி.17:7,13), ஆசாரிய ஊழியம் நித்தியம் என்று கூறப்பட்டுள்ளது (யாத். 40:15), போஜனபலி (எசே.46:14), தீட்டு கழிக்கும் ஜலம் (எண்.19:21,22) இவையாவும் நித்திய உடன் படிக்கை என்றுதான் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று இவை மாறிப்போய்விட்டது என்பதை நாம் அறிவோம்.

புதிய ஏற்பாடு

நாம் வாழ்வது புதிய ஏற்பாட்டுக் காலம். நியாயப் பிரமாண காலமல்ல. நியாயப்பிரமாணம் நம்மை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது. விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்கு கீழானவர்களல்லவே, (கலா.3:24). இப்போது நியாயப் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவர்கள் அல்ல. கிறிஸ்துவின் மேலான, உயரிய பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவர்கள்.

இயேசுகிறிஸ்துவும், ஓய்வுநாளும்

இயேசுகிறிஸ்து தமது போதனையில் எங்கும் ஓய்வுநாளை கைக்கொள்வதை பற்றி குறிப்பிடவே இல்லை. அது இயேசுவின் சீஷர்களுக்குரிய பிரமாண மல்ல என்பது அவருக்குத் தெரியும். இயேக ஓய்வு நாளில் ஜெப ஆலயத்திற்கு போனார் என்பது அதை கைக்கொள்வதற்காக அல்ல, கூடிவந்த யூதர்களுக்கு, சத்தியத்தை போதிக்கப் போனார். இதைத்தான் அப்போஸ்தலரும் செய்தனர். இயேசு ஓய்வுநாளை மீறினார் என்றுதான் குற்றம் சாட்டப்பட்டார். சூம்பின கையுடையவனை குணமாக்கினார். அதனால், பரிசேயர் அவரை கொலை செய்ய வகை தேடினர் (மத்.12:9-14; மாற்கு 3:1-6; லூக்கா.6:6-14.).

 • ஓய்வுநாளில் 18 வருடம் கூனியாயிருந்தவளை குணமாக்கினார் (லூக்.13:10-17),
 • நீர்க்கோவை வியாதியுள்ளவனை ஓய்வுநாளில் குணமாக்கினார் (லூக்.14:1-6).
 • 38 வருடம் வியாதியாய்ப் படுத்து இருந்தவளை ஓய்வுநாளில் குணமாக்கினார் (யோ. 5:3-18).
 • பிறவிக் குருடனை ஓய்வுநாளில் குணமாக்கினார் (யோவான் 9:1-16). 

இத்தனை அற்புதங்கள் இயேசு செய்து இவர்களுக்கு உதவினதற்காக சந்தோஷப்படாமல் ஓய்வுநாளை மீறினதாக

இவர்கள் எண்ணியது குருட்டாட்டத்தின் ஆவியே.

பிணியாளிகளுக்கு ஓய்வுநாளில் நன்மை செய்வது நியாயம்தான் என்று இயேசு சொன்னார். நன்மையான எந்த செயலையும் ஓய்வுநாளில் செய்வது தவறல்ல. தீமையானதைத்தான் ஓய்வுநாளில் செய்யக்கூடாது. (அதைத்தான் எந்த நாளிலும் செய்யக்கூடாதே) இயேசு சொன்னதின் பொருள் என்ன? சட்டத்தை போட்டு குட்டையை குழப்பாதே.

ஒழுங்கானவற்றை, நேர்மையானவற்றை, அவசியமானவற்றை எந்த நாளிலும் எப்போதும் நீயும் செய். பிறரையும் செய்யவிடு.

[su_heading size=”24″ align=”left” id=”H2″]Pdf file Download Section[/su_heading] 

[su_button id=”download” url=”https://www.mediafire.com/file/wk486br2pfveaer/ஏழாம்+நாள்+ஓய்வுக்காரர்.pdf/file” target=”blank” style=”3d” size=”9″ wide=”yes” center=”yes” radius=”round” icon=”icon: download”]Download PDF Now[/su_button]

Leave a Reply