மணவாட்டி சபை நாங்களே

மணவாட்டி சபை நாங்களே

இதன் pdf download file கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மணவாட்டி சபை நாங்களே என்ற கொள்கை

நாங்கள் மட்டுமே உண்மையான பெந்தெகொஸ்தே சபை என்று ஒரு கூட்டத்தினர் கூறிவருகின்றனர். ஆவிக்குரிய வாழ்க்கையில் நன்கு வளர்ச்சியடைந்த எந்த ஒரு பரிசுத்தவானும் நான் மட்டுமே பரிசுத்த வான் என்று கூறமாட்டான். அப்போஸ்தலரில் பிரதான மான பவுலே பாவிகளில் பிரதான பாவி நான் என்று தன்னைத் தாழ்த்துகிறார்.

உங்களில் முதன்மையாயிருக்க விரும்புகிறவன் எல்லோருக்கும் பணிவிடை செய்யக்கடவன் என்று இயேசு கூறுகிறார். நம்முடைய சிறப்பைக் குறித்து பிறர் புகழ வேண்டுமேயல்லாமல், நாமே நம்மை எல்லாரையும்விட மேலானவர்கள் என்று எண்ணினால், நம்மிடம் இருக்கவேண்டிய நற்பண்பில் கோளாறு இருக்கிறது என்பது தெளிவு.

இவர்களின் கொள்கை

  1. நாங்கள் மட்டுமே மெய்யான அப்போஸ்தல பிரதிஷ்டை ஊழியம் செய்கிறோம்.
  1. நாங்களே பரலோக சீயோனிலிருக்கும் 1,44,000 பேர்.

3.நாங்களே மெய்யான மணவாட்டி.

  1. நாங்களே உண்மையான பெந்தெகொஸ்தே சபை.

இந்தக் கொள்கைகளுக்கு ஆதாரமாக (வெளி.14:1-5)

வசனங்களையும் புதிய ஏற்பாட்டில் பல வசனங்களை யும் ஆதாரமாக்குகின்றனர். இவைகள் வேத வசனத் துக்குப் புறம்பானவை என்பதை வேத வசனங்களைக் கொண்டே விளக்க விரும்புகின்றோம்.

I. நாங்களே அப்போஸ்தல பிரதிஷ்டை ஊழியக்காரர் என்கிறார்கள்.

அப்போஸ்தலர் என்றால் திருமணமாகாதவர்கள் என்பதும், கர்த்தருக்காக எல்லாவற்றையும் விட்டவர்கள் என்பதும் இவர்கள் கொள்கை. எனவே இந்த மிஷனி லுள்ள ஊழியக்காரர் திருமணமாகாதவர்கள். ஏற்கெனவே திருமணமாகியிருந்தால் மனைவியை விட்டுப் பிரித்து விடுகிறார்கள். இவர்கள் கொள்கை சரியானது தானா என்பதை வசன ஆதாரங்களுடன் ஆராய்ச்சி செய்வோம்.

1. அப்போஸ்தலர்கள் திருமணமானவர்கள் என்று வேதம் கூறுகிறது

1கொரி.9:5ல் மற்ற அப்போஸ்தலரும், கர்த்தரு டைய சகோதரரும், கேபாவும் (பேதுரு) செய்கிறது போல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக் கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா? என்று பவுல் கேட்கிறார். இதிலிருந்து அறிவதென்ன?

  1. அப்போஸ்தலரும், இயேசுகிறிஸ்துவின் சகோதரரும் பேதுருவும் திருமணம் பண்ணியிருந்தார்கள்.
  1. ஊழிய நாட்களிலும் தொடர்ந்து குடும்ப வாழ்க்கை நடத்தினர்.

2. அதுமட்டுமல்ல, ஊழியங்களுக்குப் போகின்ற இடங் களுக்கெல்லாம் மனைவியைக் கூடவே கூட்டிக்கொண்டு சென்றார்கள்.

மணவாட்டி சபை சொல்வதென்ன? 

மனைவியாக இருந்தவளை சகோதரியாகத்தான் நடத்தினார்கள். அதனால்தான் மனைவியாகிய சகோதரி என்று கூறப்பட்டுள்ளது என்று விளக்கம் கூறுகிறார்கள்.

இது புத்தியீனமான விளக்கம். பவுல் மற்றவர் களுடைய மனைவியைப்பற்றி எழுதும்போது.. “மனைவி யாகிய சகோதரி” என்றுதானே எழுத முடியும்!

இவர்கள் கருத்துப்படி மனைவியாக இல்லாத ஒரு பெண்ணை எந்த ஊழியக்காரரும் எங்கும் கூட்டித் திரியலாமா? யாரும் கேட்டால் என் மனைவி இல்லை, ஆனால் ஊழியத்திற்கு உதவியாக வருகிறாள் என்று ஊர் ஊராய் ஒரு பெண்ணை கூட்டித் திரிந்தால் எப்படி இருக்கும்? அந்த ஊழியரை யாராவது ஏற்றுக்கொள் வார்களா? அப்போஸ்தலர்களை இப்படியா அவமானப் படுத்துவது?

அப்போஸ்தலர் தங்கள் சாட்சி கெட்டுவிடக் கூடா தென்றும், தாங்கள் திருமணம் பண்ணி ஒழுங்காய் குடும்ப வாழ்க்கை நடத்துகிறோம் என்பதை மற்றக் குடும் பங்களுக்கு உணர்த்தவும், எந்த வீட்டிலும் நம்பிக்கை யுடன் தங்களை ஏற்றுக்கொள்ளவும் ஊழியத்திற்குச் சென்ற இடங்களுக்கு மனைவியை கூடவே கூட்டிச் சென்றிருக்க வேண்டும்.

3. மனைவியை வெறுப்பது என்பது விடுவது அல்ல

இதோ எல்லாவற்றையும் விட்டு உம்மை பின்பற்றி னோமே எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று பேதுரு கேட்டதற்கு, இயேசு மத்.19:29; மாற்கு 10:29.30; லூக்கா 18:29 ஆகிய மூன்று இடங்களிலும்…

என் நாமத்தினிமித்தம், சுவிசேஷத்தினிமித்தம், தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றாரையாவது, சகோதரரையாவது, மனைவி யையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையா வது விட்டுவிட்ட எவனும், இம்மையிலே அதிக மானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனை யும் அடைவான்… என்று பதிலளிக்கிறார்.

எல்லாவற்றையும் விட்டோம் என்று சொன்ன இதே பேதுரு தான் ஊழியத்திற்குப் போன எல்லா இடங் களுக்கும் தன் மனைவியுடன் சென்றார் என்று வசனம் கூறுகிறது. எனவே அவர் மனைவியை விட்டுவிடவில்லை.

தகப்பனை,தாயை, மனைவியை, பிள்ளைகளை, சகோதரரை, சகோதரிகளை தன் ஜீவனை வெறுக்கா விட்டால் எனக்கு சீஷனாயிருக்கமாட்டான் என்று இயேசு சொன்னார். வெறுத்தல் என்பது விடுதல் அல்ல. ஏனெனில் தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் என்று கூறப்பட்டிருப்பதால் ஜீவனையும் விடுதல் என்று எடுத்துக்கொள்ள முடியுமா? அப்படியானால் ஒருவனும் உயிரோடிருக்க முடியாதே.

அப்படியானால் இதன் விளக்கமென்ன?

  1. இயேசுகிறிஸ்துவைவிட இவைகள் ஒன்றையும் அதிக மாக நேசிக்கக்கூடாது.
  1. கிறிஸ்துவுக்காக இவைகளை விட்டவன் என்பதின்

விளக்கத்தைப் பார்ப்போம்.

கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புகிற ஒருவனுக்கு அவரைப் பின்பற்ற இவைகள் தடையாக இருக்கும் போது இவைகளை நிர்ப்பந்த சூழ்நிலைகளில் விட்டவர் களுக்குக் கர்த்தர் ஆறுதலாக இவைகளைக் கூறுகிறார். ஊழியம் செய்கிறவர்களுக்கு மட்டுமல்ல, மெய்கிறிஸ்த வனாக இயேசுவைப் பின்பற்ற விரும்புகிற யாவருக்கும் இவை தடையாக இருந்தால் அவர்களை விட்டு வெளி யேற வேண்டி வரலாம். சகோதர, சகோதரிகளோ, மனைவியோ, பிள்ளைகளோ தடையாக இருந்தால் அவர்களை விடவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

கிறிஸ்தவனானால் அல்லது ஊழியத்திற்குப் போ னால் உனக்கு வீடோ, சொத்தோ கிடையாது என்று பெற்றோரும் மற்றவர்களும் சொன்னபோது அவை களைவிட்டு கிறிஸ்துவைப் பின்பற்றினவர்கள் ஏராள முண்டு. ஆனால் பெற்றோரோ, மனைவியோ தடை யில்லை என்றால் அவர்களை ஏன் விடவேண்டும்?

மனைவியும் இரட்சிக்கப்பட்டு அபிஷேகம் பெற்று ஊழியத்திற்கு வர ஆயத்தமாயிருக்கிறாள். அப்படிப் பட்ட மனைவியையும், பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்து போகிறவன் குடும்பத்திற்கும், இயேசுவுக்கும் துரோகம் செய்கிறான். இப்படிப்பட்டக் குடும்பத்தைப் பிரிக்கும் சபையார் கிறிஸ்துவுக்கு துரோகம் செய்கின்றனர்.

II.கர்த்தருக்குப் பிரியமாய் நடந்துகொள்ள ஊழியக் காரன் திருமணம் செய்யக்கூடாதென்று 1 கொரி. 7:32,33-ஐ அடிப்படையாக்கிக் கூறுகின்றனர்.

பவுல் அதற்கு விளக்கம் கொடுக்கிறார்: இப்போ துள்ள துன்பத்தினிமித்தம் திருமணம் பண்ணாமலி ருப்பது மனுஷனுக்கு நல்லதாயிருக்குமென்று எண்ணு கிறேன் என்கிறார் (1 கொரி.7:26). இது சபையாருக்கு எழுதப்பட்ட நிருபம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

தீமோத்தேயுவுக்கும், தீத்துவுக்கும் எழுதின மூன்று நிருபங்களும் ஊழியருக்கு எழுதப்பட்டவை. அதில் ஊழியருக்கு பவுல் என்ன ஆலோசனை கூறுகிறார். என்று கவனியுங்கள்:

1.கண்காணி (ஊழியக்காரர்) ஒரே மனைவியையுடைய புருஷனாக இருக்க வேண்டும் (1 தீமோ.3:2). ஆலோ சனையாக அல்ல, இதைக் கண்டிப்பாக கூறுகிறார். ஒன்றுக்கும் அதிகமான மனைவிகள் இருக்கக் கூடாது என்று கூறுகிறாரேயல்லாமல் ஒரு மனைவியும் கூடாது என்று கூறவில்லை.

2.ஊழியக்காரன் தன் சொந்தக் குடும்பத்தை நன்றாக நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொ ழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப் பண்ணுகிறவனு மாயிருக்க வேண்டும். ஒருவன் தன் சொந்தக் குடும் பத்தை நடத்த அறியாதிருந்தால் தேவனுடைய சபை யை எப்படி விசாரிப்பான்? (1 தீமோ.3:4,5).

பவுல் ஊழியக்காரருக்கு எழுதும்போது மனைவி வேண்டாம். மனைவி இருந்தால் அவளைவிட்டு பிரிந்து வாருங்கள் என்று அல்லவா எழுதியிருக்க வேண்டும்? அப்படி எழுதவில்லையே. அப்படியானால் ஊழியக் காரன் தகுதி என்ன?

1.திருமணமாகி ஒரு மனைவியுடன் இருக்க வேண்டும். 2. தன் சொந்தக் குடும்பத்தை நன்றாக நிர்வாகம் பண்ணவேண்டும்.

  1. தன் பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.
  1. பல குடும்பமுள்ள சபையை சரியாக விசாரிக்க (நிர்வாகம் பண்ண) ஊழியக்காரன் குடும்பம் முன் மாதியாக இருக்க வேண்டும்.

பவுல் தீத்துவுக்கு எழுதின நிருபத்திலும் இதையே வலியுறுத்துகிறார் (தீத்து 1:5-9) அது மட்டுமல்ல, ஊழியக்காரன் திருமணத்திற்கு விரோதமாக பேசுகிறவர்களைக் குறித்து பவுல் எச்சரிப்பதை கவனியுங்கள்.

1 தீமோ.4:2ல் “விவாகம் பண்ணாதிருக்கவும்'” என்பது மட்டும் ஒரு வசனமாக எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி ஊழியன் திருமணத்தை எதிர்ப்பவர்களைப் பற்றி பவுல் விளக்கம் கொடுக்கிறார். விவாகம் பண்ணாதிருக்க கட்டளை கொடுப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? 1 தீமோ.4:1-3ஐ வாசியுங்கள்…

  • மனச்சாட்சியிலே சூடுண்ட பொய்யர்.
  • மாயம் பண்ணுகிறவர்கள்.
  •  வஞ்சிக்கிற ஆவிகளுக்கு செவி கொடுக்கிறவர்கள்.
  • பிசாசின் உபதேசத்திற்கு செவி கொடுக்கிறவர்கள்.
  • விசுவாசத்தை விட்டு விலகிப்போனவர்கள்.
  • பொய்யர்

1 கொரி.7ம் அதிகாரத்தையும் 1 தீமோத்தேயு நிருபத் தையும் மனதில் கொண்டு தர்க்கம்பண்ண விரும்பி னால், விசுவாசி திருமணம் பண்ணாமலிருப்பது நல்லது என்றும், ஊழியர்கள் கண்டிப்பாய் திருமணம் பண்ண வேண்டும் என்றும் தர்க்கம் பண்ணலாம். ஆனால் நாம் அப்படி செய்யப் போவதில்லை.

திருமணம் பண்ணாமல் ஊழியம் செய்யக் கூடாதா? 

நாம் அப்படிச் சொல்லவில்லை. திருமணம் பண் ணாமல் ஊழியம் செய்யும் பரிசுத்தவான்கள் அநேக ருண்டு. அவர்களை மதிக்கிறோம். திருமணம் செய்து நல்ல ஒழுக்கமுள்ள குடும்பம் நடத்தி ஊழியம் செய் கிறவர்கள் ஏராளமுண்டு. அவர்களையும் மதிக்கிறோம்.

திருமணம் செய்யாமலிருப்பதை மேலான பிரதிஷ்டை என்று வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. அப்போஸ்தலரே திருமணமானவர்களாயிருந்தார்கள். குடும்பம் நடத்தினார்கள், ஊழியங்களுக்கு போகுமிட மெங்கும் தங்கள் மனைவியைக் கூட்டித் திரிந்தார்கள் என்று தெளிவாய்ச் சொல்லியிருக்கிறது.

அப்படியானால் அப்போஸ்தல பிரதிஷ்டை ஊழியம் எது!

திருமணமாகி ஒரு மனைவியுடன் ஒழுங்காய் வாழ்ந்து, குழந்தைகளை நல்லொழுக்கமுள்ளவர்களாக வளர்த்து, தங்கள் குடும்பத்தை சபைக்கு முன்மாதிரி யாக்கி ஊழியம் செய்கின்றவர்களே சரியான பிரதிஷ்டை ஊழியக்காரர். இலங்கை பெந்தெகொஸ்தே மிஷனின் ஸ்தாபகரும், தலைமைப் போதகருமாயிருந்த பாஸ்டர். பால் அவர்களே திருமணமானவர் தான். அவருடைய மகன் பாஸ்டர். பிரட்ரிக் பாலும் இந்த ஸ்தாபனத்திற்கு பல்லாண்டுகள் தலைவராயிருந்தார். எனவே இவர் களின் தவறான உபதேசத்தினால் தங்கள் தலைவரையே பிரதிஷ்டையில்லாதவர் என்ற நிலைக்கு தள்ளிவிட்டனர்.

III. நாங்கள்தான் பரலோக சீயோனிலிருக்கும் 1,44,000 பேர் என்று போதிக்கின்றனர்.

சீயோன் என்ற வார்த்தை ஆங்கிலத்தில் SION என்றும், ZION என்றும் எழுதப்பட்டுள்ளது. ‘SION” என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் “உயர்ந்து நிற்பது’.

  • உபா.8:48ல் இது எர்மோன் மலை உச்சியைக் குறிக்கிறது.
  • சீயோன் பட்டணமென்பது எருசலேமைக் குறிக்கிறது. மத். 27:5; யோ.12:15; ரோமர் 9:33, 11:26; 1 பேதுரு 2:6; வெளி.14:1 ஆகிய ஏழு வசனங்களில் இதைக் காண்கிறோம்.
  • ZION என்ற எபிரேய வார்த்தையின் பொருள் ‘கோட்டை’. இது எருசலேம் பட்டணத்தின் தென் மேற்கிலுள்ள சிறிய குன்றைக் குறிக்கின்றது. இந்தப் பொருளில் 2 சாமு.5:7 முதல் சகரியா 9:13 வரை 148 இடங்களில் வருகிறது.

வெளி.14:1-5 வசனங்களில் கூறப்பட்டுள்ள சீயோன் மலையின்மேல் நிற்கும் 1,44,000 பேரும் நாங்களே என்று இவர்கள் சொல்லக் காரணம் குறிப்பாக வெளி.14:4ல் கூறப்பட்டுள்ள சில காரியங்களே.

  1. ஸ்திரீகளால் தங்களைக் கரைபடுத்தாதவர்கள் இவர்களே!
  1. கற்புள்ளவர்கள் இவர்களே.

இதற்கு வேதத்தின் மூலம் பதில் காண்போம்: 

ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்துதல் என்பது திருமண உறவு என்று இவர்கள் தப்பாக எண்ணுகிறார்கள்.

திருமண உறவு கறைப்படுத்தும் அனுபவம் என்று எடுத்துக் கொண்டால் திருமண உறவை ஏற்படுத்திய தேவனை குறைகூறுவது போலாகும். எபி.13:4ல்… விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், (அதாவது விகவாசி, ஊழியக்காரர், பிஷப் உட்பட யாவருக்குள்ளும்) விவாக மஞ்சம் (விவாக பாலுறவு) அசுசிப்படாததாயுமிருப்பதாக.

அ) தேவனுடைய கரத்தினால் நேரடியாக உரு வாக்கப் பெற்று, அவருடைய சாயலையும் அவருடைய ஜீவ சுவாசத்தையும் பெற்ற ஆதாமைப் போல பரிசுத்த வான் யாரும் இருக்கமுடியாது. அவன் தினமும் நேரடி யாக தேவனோடு உறவாடினாலும் இந்த தனிமை நல்லதல்ல என்று கண்ட தேவன் ஒரு சகோதரனை யோ, சகோதரியையோ துணையாகக் கொடாமல் ஒரு மனைவியை கொடுத்தாரே! அவனை கறைப்படுத்தவா அதைச் செய்தார்? ஆதாம் பாவம் செய்யும் முன்பாகவே நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்று தேவன் அவர்களை ஆசீர்வதித்தாரே (ஆதி.1:28). விவாக உறவை தரக்குறைவாக எண்ணியிருந்தால் இயேசு தமது முதலாம் அற்புதத்தைச் செய்ய கானாவூர் திருமண வீட்டைத் தெரிந்தெடுத்திருப்பாரா?

ஆ) ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும், மோசேயும், சாமுவேலும் தீர்க்கதரிசிகளும் கறைப்பட்டவர்களா?

இ) பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் கறைப் பட்டவர்களா? தேவனே குறை சொல்லாத திருமண உறவை ” கறைப்படுத்தும் அனுபவம்” என்று சொல்லு கிறவர்கள், தேவனையும் அவருடைய வார்த்தையையும் மிஞ்சினவர்களாவர். இந்த துர் உபதேசம் இலங்கை யிலிருக்கும் புத்தமதக் கொள்கையிலிருந்து எடுத் தாளப்பட்டதாகும்.

ஈ) இந்த 1,44,000 பேரைத் தவிர பரலோகத்தில் இருக்கும் மற்ற பேரெல்லாம் ஸ்திரீகளால் கறைப்பட்ட வர்களா? இந்த உபதேசத்தைக் கேட்கும் இந்த சபை விகவாசிகளெல்லாம் திருமணமானவர்கள்தானே! இவர் களெல்லாம் கறைபட்டவர்களா?’

நமது தேசத்தில் திருமணம் பண்ணாமலிருக்கும் சன்னியாசிகளுக்கும், சாதுகளுக்கும் மதிப்புக் கொடுக் கப்படுகிறது. சபையின் பிந்திய காலத்தில் இந்த அஞ்ஞானப் போதனை சபைக்குள் வந்துவிட்டது. ஒருவர் திருமணம் பண்ணாமலிருந்தால் அதைக் குறைகூற வில்லை. ஆனால் அதுவே மேலான பரிசுத்தம் என்று எண்ணுவது கிறிஸ்தவமல்ல. அது புறஜாதி மார்க்கம், வேதத்திற்குப் புறம்பான இந்த நிலையை பிரதிஷ்டை என்று கூறுதல் தவறு. இந்த 1,44,000 பேர் நாங்கள்தான் என்று மூன்று கூட்டத்தினர் போட்டி போடுகின்றனர்.

1. ஏழாம் நாள் ஓய்வுக்காரர் 

நாங்கள்தான் ஓய்வுநாளைக் கைக்கொள்ளுகிறோம்.

ஏசாயா 56:3-7 வசனங்களின்படி நாங்கள் தான் இந்த சிறப்புக் கூட்டம் என்கிறார்கள்.

2. யெகோவா சாட்சிகள்

மெய்யான யெகோவா தேவனின் சாட்சிகள் நாங்களே. நாங்கள்தான் இந்தக் கூட்டம் என்கிறார்கள்.

3. தி பெந்தெகொஸ்தே ஊழியரும் நாங்கள்தான் அவர்கள் என்கின்றனர்

ஆனால் இவர்கள் ஒருவரும் இந்த எண்ணிக்கை யில் கிடையாது என்பதை அறிய வேண்டும். வெளி. 7:3-8 வசனங்களில் உபத்திரவக் காலத்தில் கர்த்தருக்கு உண்மையாயிருந்த யூதர்களில் கோத்திரத்திற்கு 12,000 பேர் வீதம் முத்திரை போடப்பட்ட 1,44,000 பேரைக் காண்கிறோம். இவர்கள்தான் வெளிப்படுத்தல் 14ல் சீயோன் மலையின்மேல் நிற்கிறார்கள். இதில் எந்தக் கோத்திரம் இவர்கள்? பூலோகத்திலிருந்த 1,44,000 பேர் வேறு; சீயோனில் இருக்கும் 1,44,000 பேர் வேறு என்று தெளிவில்லாத விளக்கம் தருகிறார்கள்.

IV. நாங்களே மெய்யான மணவாட்டி என்கிறார்கள் 

நாங்களே கற்புள்ளவர்கள் (வெளி.14:4). அதாவது திருமணம் செய்யாத கன்னிகைகள் நாங்களே. எனவே நாங்களே மணவாட்டி என்கிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட அத்தனை பேரும் இயேசுவின் மணவாட்டியாகிய திருச்சபை யைச் சேர்ந்தவர்களே! இந்த மணவாட்டி என்பது ஆவிக்குரிய பொருளில் அவருடைய சரீரமாகிய திருச்சபையைக் குறிக்கிறது.

V. நாங்கள்தான் கிறிஸ்துவுக்காக அண்ணகர்களா யிருக்கிறோம் என்கிறார்கள்

  1. எபிரேய மொழியில் ‘சாரிஸ்’ என்ற வார்த்தை ஆங்கிலத்தில் ‘ENUCH’ என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதன் பொருள் பிரதானி அல்லது அரண்மனை வேலைக்காரர் (2 இராஜா. 9:32; 20:18; எரே.29:1; தானி.1:4). அண்ணகன் என்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது (ஏசாயா 56:3,4).
  1. கிரேக்க மொழியில் ‘யுனுக்கோஸ்’ என்பதும் ஆங்கி லத்தில் ‘ENUCH’ என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தமிழில் அண்ணகன் என்று மத்.19:1ல் வருகிறது. இந்த வார்த்தை அப்.9:27,34,36,38,39 வசனங்களில் மந்திரி என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மத்.19:12ன்படி மூன்றுவித அண்ணகர்கள் (ஆண் தன்மையற்றவர்கள் அலிகள்)

  1. பிறவியிலே அண்ணகர்கள்
  1. மனுஷரால் அண்ணகர்களாக்கப்பட்டவர்கள்
  1. பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர் களாக்கி கொண்டவர்கள்

பிறக்கும்போதே ஆண் தன்மையற்று அலிகளாக பிறப்பவர்கள் உண்டு. தவறுகள் நடக்காமலிருக்க அண்ணகர்களாக்கப்பட்டவர்கள் உண்டு. (விதையடிக் கப்படல் -உபா.23:1) தாங்கள் குடும்பம் நடத்தாமல் அரண்மனை சேவையில் முழுமூச்சுடன் ஈடுபடவும் அண்ணகர்களாக்கப்பட்டவர்களாக இருந்தனர். ஊழியத் திற்காக தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு.

தாங்கள் அண்ணகர்கள் என்று சொல்லுகிற இவர் கள் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டார்களா என்பதே நமது கேள்வி. திருமணமாகாதவர்கள் எல்லோ ரும் அண்ணகர்களல்ல, ஆண் தன்மை இல்லாதவர்களே அண்ணகர்கள். அவர்களில் தாங்கள் அண்ணகர்கள் எனக்கூறும் இன்றுள்ள ஊழியர் அடங்க மாட்டார்கள்.

VI. திருமணமாகாமலிருக்க சிலர் வரம் பெற்றிருக்கலாம் (மத்.19:11).

திருமணமாகாமலிருந்து ஊழியம் செய்கின்ற ஊழியர்கள் எல்லா ஸ்தாபனங்களிலும் இருக்கிறார்கள். ஆனால் ஊழியத்திற்கு வருகிற எல்லாரும் திருமணம் பண்ணக்கூடாது என்று கட்டாயப்படுத்துவது மனிதச் சட்டமேயல்லாமல் வசனச் சட்டமல்ல. ஊழியத்திற்கு உதவியாயிருக்கிற மனைவியை விட்டுப் பிரிந்து போய் ஊழியம் செய்கிறவர் மனைவிக்குத் துரோகம் செய்கிறார். சபைக்கு முன்மாதிரியாயில்லாத அவர் சபை நடத்த லாயக்கற்றவர்.

மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள் போல இருக்கவேண்டும் என்று விசுவாசிகளுக்குப் போதிக்கின்றனர் (1 கொரி.7:29).

இந்தப் போதனையினால் கெட்டுப்போன குடும் பங்கள் ஏராளம் இருக்கின்றன. மனைவியை சகோதரி போல நடத்து என்று சொல்வதால், சில மனைவிகள் குடும்ப உறவில் ஒத்துழைக்காததால் கெட்டுப்போன கணவன்மார் பலருண்டு. இருவரும் சம்மதித்தால் உபவாசத்திற்காக, ஜெபத்திற்காக தற்காலிகமாக பிரிந் திருக்கலாம் என்ற ஆலோசனையை கவனிப்பதில்லை (1 கொரி.7:6).

ஒன்றை உபதேசமாக ஸ்தாபிக்க பல வசனங்களை யும், வேதத்தில் அடிப்படை சத்தியங்களையும் நன்கு ஆராய்ந்து உறுதி செய்ய வேண்டும். ஏதோ நம் கருத் துக்கு ஒத்து வருகிற வசனங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அடிப்படை சத்தியத்தை விட்டுவிடக் கூடாது.

VII. பெண்கள் கறைபடுத்துகிறவர்களல்ல

அப்படியானால் ஜெப வீட்டிலே எதற்கு பெண்கள்? சாப்பாடு சமைப்பதையும், உடைகளை கத்தம் செய் வதையும், வீட்டை சுத்தம் செய்வதையும், வீடு சந்திப் பதையும் ஆண்களே செய்யலாமே! அப்படியானால் விசுவாசிகளுக்கும் திருமணம் நல்லதல்லவே! அவர்கள் கறைப்பட்டால் பரவாயில்லையா? குடும்ப வாழ்க்கை செய்யும் விசுவாசிகளெல்லாம் கறைபட்டவர்களா? இப்படிப்பட்ட போதனைகளைக் கேட்டும் உணர்வில் லாமல் போகின்ற விசுவாசிகள் இருப்பது ஆச்சரியமே, இது இந்து மற்றும் புத்தமதக் கொள்கைகளைப் பின்னணியமாகக் கொண்டதாகும்.

1. ஸ்திரீகளால் தங்களைக் கறைபடுத்தாதவர்கள் என்பதின் விளக்கம்?

வேத பண்டிதர்களுடைய விளக்கங்களை இங்கே எழுதுகின்றேன். இந்த 1,44,000 பேர் முத்திரை போடப் பட்ட காலம் உபத்திரவ காலம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அந்த நாட்களிலிருக்கும் நிலையை வெளி.17ல் காண்கிறோம்.

வெளி.17:1-18 வசனங்களில் மிருகத்தின்மேல் ஏறி யிருக்கும் ஸ்திரீயைப் பற்றி பார்க்கிறோம். அவள் வேசித் தனமான அருவருப்புகளாலும் அகத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரம் வைத்திருந்தாள். இவள் மகா பாபிலோன் என்றும், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்பு களுக்கும் தாய். அவள் ஏழு மலைகளின்மேல் உட்கார்ந் திருக்கிறவள். இந்த ஸ்திரீ பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரம் என்று கூறப்பட் டுள்ளது.

இங்கே வசனத்தில் இது ஒரு நகரத்தைக் குறிக் கிறது என்று சொல்லப்படாவிட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இதை வியாக்கியானப்படுத்தி யிருப்பார்கள்.

ஏழு மலையின் மேல் கட்டப்பட்டுள்ள நகரம் எது? எந்த நகரம் அந்த நாட்களில் உலகத்தை ஆண்டது? ரோமாபுரி. இந்த பட்டணத்தை மையமாகக் கொண்டு எழும்பும் துர்உபதேசங்களையே வேசிகளுக்கு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் கர்த்தரை விட்டு விலகுவதை வேசித்தன மாக, விபச்சாரமாக விவரிக்கப்பட்டுள்ளது (எரே.3: 1-11).

உலகிலுள்ள யாவரும் அந்திக்கிறிஸ்துவையே வணங்க வேண்டும் என்பது போன்ற பல துர் உபதே சங்கள் உபத்திரவ காலத்தில் வலியுறுத்தப்படும். இங்கே ஸ்திரீ என்பது இயேசுவின் வருகையில் கை விடப்பட்ட போலி சபை. இந்த ஆவிக்குரிய வேசித் தனத்தினால் தங்களை கறைப்படுத்தாதவர்கள் தான் உபத்திரவ காலத்தில் முத்திரையிடப்பட்ட 1,44,000 பேர்.

2. ஸ்திரீகள் என்று வருகிற வசனமெல்லாம் பெண்களைக் குறிக்கிறது என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.

  1. பட்டணங்கள் பெண்களாக உருவகப்படுத்தி கூறப் பட்டுள்ளது (புலம்பல் 1:1,2; 2:1).
  1. ஏற்பாடுகள் ஸ்திரீகளாக விவரிக்கப்பட்டு உள்ளது (கலா.4:24-26).
  2. உபதேசங்கள் (போலி சபை) ஸ்திரீகளாக விளக்கப் பட்டுள்ளன (வெளி.2:20-23; 17:1-18).
  1. மக்கள் பெண்களாக கூறப்பட்டுள்ளனர் (எரே.3:1-11) மக்கள் (இஸ்ரவேல்,யூதா)

3. வசனத்தின் உட்கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். 

வசனத்தின் கருத்தைக் கவனித்து அதன்படி விளங்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணங்கள் சில பார்ப்போம்:

  1. “தாவீதின் குமாரன் இயேசுகிறிஸ்து” (மத்.1:1), இப்படிக் கூறுவதால் இயேசுகிறிஸ்து சாலொமோ னுக்கு சகோதரன் என்று எடுத்துக்கொள்ள மாட் டோம். தாவீதின் வழி வந்தவர் என்று பொருள்.
  1. தானியேல் 5:2ல் பெல்ஷாத்சாரின் தகப்பன் நேபு காத்நேச்சார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சரித்திரத்தை ஆராய்ந்தால் நேபுகாத்நேச்சாருக்கு பல தலைமுறைக்குப்பின் வந்தவன்தான் பெல்ஷாத் சார் என்று அறிகிறோம். நேபுகாத்நேச்சாரின் பரம் பரையில் வந்தவன் என்று விளங்கிக் கொள்கிறோம்.
  1. பவுல் குமாரனென்று தீமோத்தேயுவை அழைப் பதினால் பவுலுக்குப் பிறந்தவன் தீமோத்தேயு என்று சொல்வதில்லை. பவுலின் ஆவிக்குரிய குமாரன் என அறிகிறோம்.
  1. இயேசு பேதுருவைப் பார்த்து சாத்தான் உன்னை புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக் கொண்டான் என்று (லூக். 22:31) உண்மையாகவே சுளகினால் பேதுரு புடைக்கப்பட்டான் என்றா விளங்கிக் கொள் கிறோம். இல்லை சோதனையைக் குறிக்கிறது என விளங்கிக் கொள்கிறோம்.
  1. என் நேசர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார் (உன்.6:3) என்றால் அவர் ஆடுமாடு போல மேய் கிறார் என்றா எடுத்துக் கொள்கிறோம்?

இதுபோல நூற்றுக்கணக்கான வசனங்களை எடுத்துக் காட்டலாம். இதுபோல வேசித்தனம், விபச் சாரம், கறைபடுதல், சோரம் போகுதல் போன்ற பல வார்தைகள் பல இடங்களில் ஆவிக்குரிய பொருளில் சொல்லப்பட்டுள்ளன. அவைகளை வசனத் தெளிவுடன் விளங்கிக் கொள்ள வேண்டும்.

VIII.நாங்கள் மட்டும் உண்மையான பெந்தெகொஸ்தே என்று பெயர் வைத்துக்கொள்வது சரியல்ல (THE PENTECOSTAL MISSION).

உண்மையான பரிசுத்தவான், நானே பரிசுத்த வான் என்று கூறமாட்டான். உண்மையான தாழ்மை யுள்ளவன், நான் மட்டுமே தாழ்மையுள்ளவன் என்று பறைசாற்ற மாட்டான்.

பரிசுத்தவான்கள் ஒதுங்கி வாழமாட்டார்கள் நாம் பாவத்தைவிட்டுப் பிரிந்து வாழ வேண்டும்.

மற்ற பரிசுத்தவான்களைவிட்டு ஒதுங்கி வாழக் கூடாது. வானத்தையும், பூமியையும் படைத்த பரிசுத்த இயேசுவே எல்லாரோடும் பழகினார், ஐக்கியம் கொண்டார். அதன் மூலம் தமது அன்பை வெளிப்படுத்தினார். நான் மிஞ்சின பரிசுத்தவான் என்று ஒருவரோடும் சேராமல் ஒதுங்கி வாழ்கிறவன் சரியான மனநிலையிலுள்ள பரிகத்தவானில்லை. இப்படிப்பட்டவர்கள் பரலோகத்தில் படாத பாடு படவேண்டியிருக்கும். ஏனெனில் சகல கோத்திரங்களிலிருந்தும், ஜாதிகளிலிருந்தும், சக சபைகளிலிருந்தும் பரிசுத்தவான்கள் பரலோகத்தில் ஒன்று கூடும்போது இவர்கள் ஒதுங்கியா நிற்கப் போகிறார்கள்?

இப்படிப்பட்ட குறுகிய மனப்பான்மையுள்ள நமது அருமையான சகோதர, சகோதரிகளுக்காய் ஊழியருக் காய் ஜெபிப்போம்.

முழுநேர ஊழியம் செய்கின்றவர்கள் திருமணம் பண்ணக் கூடாது என்ற மனித சட்டம் சபைக்குள் நுழைந்தது, திருச்சபை உருவாகி சுமார் ஆயிரம் வருடங்கள் கடந்த பின்புதான் என்பதை சபை சரித்திர ஆதாரத்துடன் எழுதியுள்ளேன்.

தேவனுடைய ஊழியக்காரர் திருமணமாகி சபைக்கு முன்மாதிரியாக குடும்பம் நடத்தி ஊழியம் செய்வதே சரியான அப்போஸ்தல பிரதிஷ்டை ஊழியம். பவுல் சனகரீம் என்ற யூத ஆளுகை சங்கத்தில் அங்கத்தின ராக இருந்ததால் நிச்சயம் திருமணம் பண்ணியிருக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கை. ஏனெனில் சனகரீம் சங்கத்தில் பொதுவாக திருமணமாகி 30 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் அங்கத்தினர்களாக இருந்தனர் என்று கூறப்படுகிறது. ஆனால் பவுலின் எழுத்துக்களிலிருந்து அவருடைய மனைவி இறந்திருக் கலாம் என எண்ணுகிறார்கள் (1 கொரி.7:8).

இயேசு திருமணம் செய்யவில்லை. அதனால் நாங் களும் திருமணம் செய்யவில்லை என்று வாதம் செய்தால், இயேசு 33வது வயதில் மரித்தார். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்க தோன்றுகிறது. இயேசு திருமணம் செய்யாவிட்டாலும் அப்போஸ்தல ஊழியத்திற்கு திருமணமானவர்களைத்தான் அழைத் தார். அந்த நாட்களில் திருமணமானவர்களையே, யூத சமுதாயம் பொறுப்பு வகிக்கத் தகுந்தவர்கள் என்று மதித்தது.

பாபிலோனிய பழக்கவழக்கங்களை அடிப்படை யாகக் கொண்டு ஊழியக்காரர் திருமணம் செய்யக் கூடாது என்ற கொள்கை சபைக்குள் இடையில் திணிக்கப் பட்டது. இந்து மதமும், புத்த மதமும் திருமண உறவை தாழ்வாக எண்ணுவதுபோல கிறிஸ்தவம் தாழ்வாக எண்ணவில்லை.

தவறான உபதேசங்களைத் தவிர்த்து வேதாகம அடிப்படை உபதேசத்தில் நம்மை உறுதிப்படுத்த வேண்டுமெனில் வேத வசனங்களை தெளிவாகக் கற்றுக்கொள்வதுடன் பிறமார்க்கக் கலப்பு சிந்தனை களுக்கு இடங்கொடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். “மணவாட்டி சபை நாங்களே” என்னும் தலைப்பில் இங்கு நாம் கொடுத்துள்ள அனைத்து கருத்துக்களுமே, இன்று பெந்தெகொஸ்தே மற்றும் பூரண கவிசேஷ சபை விசுவாசிகளும், போதகர்களும், தலைவர்களும் நிதானித்து அறிந்து தங்களை வேத சத்தியத்தில் காத்துக்கொள்ள உதவும் உபதேச விளக்கங்களாகும்.

சமநிலை விசுவாச வாழ்க்கைக்கு “உயர்வு மனப் பான்மை” மற்றும் “தாழ்வு மனப்பான்மை” ஆகிய இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும். மணவாட்டி சபை நாங்களே என்போர் உயர்வு மனப் பான்மை என்னும் கண்ணியில் அகப்பட்டு வழி விலகிப் போயினர்; தங்களைப் போல எவரும் இல்லை என தங்களை உயர்த்திக் கொண்டுள்ளனர். இது ஆவிக் குரிய வளர்ச்சியையும், அவர்களது சபை வளர்ச்சி யையும் மிகப்பெரிதும் பாதித்துள்ளது என்பது நாம் கண்கூடாகக் காணும் உண்மையாகும். உண்மை விசுவாசிகள் இந்நிலைக்குத் தப்பி விசுவாச வாழ்க்கை யில் முன்னேற வேண்டும் என்பதே நமது ஆலோ சனையும் ஜெபமும் ஆகும்.

[su_heading size=”24″ align=”left” id=”H2″]Pdf file Download Section[/su_heading]

[su_button id=”download” url=”https://www.mediafire.com/file/junmyazs6656ftg/மணவாட்டி+சபை+நாங்களே.pdf/file” target=”blank” style=”3d” size=”9″ wide=”yes” center=”yes” radius=”round” icon=”icon: download”]Download PDF Now[/su_button]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *