இயேசுவின் நாமம் மட்டுமே

 

இயேசுவின் நாமம் மட்டுமே

 

இயேசுவின் நாமம் மட்டுமே

 

இயேசுவின் நாமம் மட்டுமே – உலகிலுள்ள பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் பிதா, கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்று ஆளத்துவமுடையவர் தேவன் என்ற கொள்கையுடை யவர்களே. ரோமன் கத்தோலிக்கர், புராட்டஸ்டண்ட் யாவருமே இந்த கொள்கையில் உறுதியாயிருக் கிறார்கள். இதற்குத் ‘திருத்துவக் கொள்கை’ என்று பெயர். ஒரு சிறு கூட்டம் இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்வது இல்லை. அவர்கள் இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாததற்கு முக்கிய காரணங்கள் சில உண்டு.

இவர்கள் இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாததற்கு முக்கிய காரணங்கள்

1. திருத்துவம் என்ற சொல் வேதத்தில் இல்லை.

2.தேவனை மூன்று கடவுளாக விவரிப்பது தவறு. தேவன் ஒருவரே.

3. பழைய ஏற்பாட்டில் பிதாவாகிய தேவனைக் காண்கிறோம். அவரே இயேசுகிறிஸ்துவாக புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வெளிப்பட்டார். சபையின் காலத்திலே அவர் பரிசுத்த ஆவியானவராக செயல்படுகிறார்.

4. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் (நாமங்களில் அல்ல) திருமுழுக்குக் கொடுக்கும்படி இயேசு கட்டளையிட்டார். அப்போஸ்தல நடபடி களில் எந்த ஒரு இடத்திலும் பிதா, குமாரன். பரிசுத்த ஆவியின் நாமத்தில் திருமுழுக்குக் கொடுத்ததாக ஆதாரமில்லை. இயேசுவின் நாமத்தில்தான் திருமுழுக்குக் கொடுத்தாக எழுதப் பட்டுள்ளத

இதற்கு பதிலளிப்பதற்கு ஒரு புத்தகமே எழுதக் கூடிய அளவிற்கு விஷயங்கள் உண்டு. மேலே கூறப்பட்ட கொள்கையை நம்புகிறவர்கள் நல்லவர்களே. நாமும் மூன்று கடவுள்கள் உண்டு என்று நம்பவில்லை. இந்த திருத்துவக் கொள்கையை தெளிவாக விளக்கிச் சொல்லிவிட்டோம் என்று யாரும் திருப்தியடைந்த தில்லை. திருத்துவம் என்ற வார்த்தை வேதத்தில் இல்லை என்பது உண்மைதான். ஆனாலும் கிறிஸ்து வின் காலம் முதல் இந்த 2 ஆயிரம் வருடங்களாக திருச்சபை இந்தக் கொள்கையை ஆணித்தரமாக உறுதிசெய்து வந்துள்ளது.

சர்பெல்லியஸ்

கி.பி.2ம் நூற்றாண்டில் ரோமபுரியைச் சேர்ந்த சர்பெல்லியஸ் என்பவர் மேற்கூறிய (இயேசு மட்டுமே) கொள்கையைப் பின்பற்றினார் என்றும், அதைத் தொடர்ந்து சபை சரித்திரத்தில் இந்தக் கொள்கையைப் பின்பற்றினவர்கள் இருந்தார்கள் என்றும் அறியப்படுகிறது.

தேவன் ஒருவரே, அவரில் மூன்று ஆளத்துவங்கள் உண்டு என்பது, பெரும்பாலான கிறிஸ்தவர்களின் கொள்கை. திருத்துவம் என்ற சொல் வேதத்தில் இல்லாவிட்டாலும் அதை நம்புவதற்கான வசனங்கள் ஏராளமுண்டு. ஆதிகால முதல் வேத பண்டிதர்கள் இதைக்குறித்து ஆராய்ந்து இந்த உண்மையை எழுதி வைத்துள்ளார்கள்.

பழைய ஏற்பாட்டில் தேவனில் பன்மை

1) பழைய ஏற்பாடு எழுதப்பட்டது எபிரேய மொழி யில். இதில் தேவன் என்பதற்கு வரும் வார்த்தை “எலோகிம்” இது பன்மை. ஆனால் இதைத் தொடர்ந்து வரும் வினைச்சொல் எப்போதும் ஒருமையில்தான் இருக்கிறது. உதாரணமாக ஆதியிலே தேவர்கள் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதி.1:1) என்று மொழிபெயர்க் கலாம். தேவர்கள் சிருஷ்டித்தார்கள் என்று வரவில்லை. எல்லா இடங்களிலும் சிருஷ்டித்தார் என்று ஒருமையிலேயே வருகிறது. எனவே தேவனுக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆளத்துவம் இருக்கிறது என்பதற்கு உதாரணமாக இதை எடுக்கலாம்.

2) நமது சாயலின்படி நமது ரூபத்தின்படி மனி தனை உண்டாக்குவோமாக (ஆதி.1:26).

3) இதோ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான் (ஆதி.3:22).

4) நாம் இறங்கிப் போய்… அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் (ஆதி.11:7).

5) யாரை நான் அனுப்புவேன் யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன் (ஏசா.6:8).

இந்த வசனங்களில் தேவனுடைய தன்மையில் பன்மையைக் காண்கிறோம். இது அரசர் தம்மை பன்மையில் கூறுவதைப் போன்றதுதான் என்று வாதிடுவோர் உண்டு. அரசர் பேசும்போது நாம் வந்து அதைப் பார்ப்போம் என்று சொல்வதுண்டு.

ஒருவரே தம்மை பன்மையில் அழைக்கும் வழக்கம் (ROYAL ‘WE’) என்று கூறுவர். இதுபோலவே தேவனும் தம்மை பன்மையில் கூறியுள்ளார் என்று பலர் நம்புகின்றனர்.

புதிய ஏற்பாடு

தேவன் ஒருவரே என்ற கொள்கை புதிய ஏற்பாட்டில் மிக அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆயினும் பல வசனங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்கிற மூவரையும் சேர்த்துக் கூறுகின்றன. தேவன் ஒருவர் என்ற கருத்தை மாற்றாமல் அதே சமயம் அவரில் மூன்று ஆளத்துவங்கள் இருக்கின்றன என்பதை வலியுறுத்துகின்றன.

1. திருமுழுக்குக் கட்டளையில்… ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் (மத். 28:19).

2. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங்கூட இருப்ப தாக (2 கொரி.13:14).

3. வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லோருக்குள்ளும். எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே (1 கொரி.12:4-6).

4. உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டது போல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விகவாசமும், ஒரே ஞானஸ் நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு (எபே.4:4-6).

5. பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப் படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட… (1 பேதுரு 1:2)

6.நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக் கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள் (யூதா 20,21).

கீழ்காணும் வசனங்களிலும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி சேர்ந்து வருவதைக் காணலாம்.

1தெச.5:18,19; 2 தெச.2:13,14; 1 கொரி.2:10,12,16; 6:11,15,20; 12:13; 2 கொரி.1:21,22; 3:3; ரோமர் 5:1-11; 8:8,11,14-17; 14:7,18; 15:15,16,30; m. 3:11-14; கொலோ.1:6-8; எபே.1:13,14; 2:18-22; 3:14-17; 5:18-20; தீத்து 3:4-6,

இயேசு தேவனே

இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்று வேதம் திட்டமாய் கூறுகின்றது. சில வசனங்களை மட்டும் பார்ப்போம்.

“ஆதியிலே வார்த்தை இருந்தது. வார்த்தை தேவனாயிருந்தது” (யோ.1:1).

“அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறான வருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோ.1:14).

“சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை” (யோ.1:3).

“தோமா அவருக்கு (இயேசுவுக்கு) பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்” (யோ.20:28).

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை… தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோ.3:16).

“இயேசு திருமுழுக்குப் பெற்றபோது வானம் திறக்கப்பட்டது; பரிசுத்த ஆவியானவர் ரூபங் கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் உரைத்தது” (லூக்.3:21,22). என்று

இங்கே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை தனித்தனியே காண்கிறோம். இதுபோல ஏராளமான வசனங்களை மேற்கோள் காட்டலாம்.

எனவே இயேசுவின் நாமக் கெள்கைக்காரர் சொல்வது போல பிதாதான் இயேசுகிறிஸ்து, அவரே பரிசுத்த ஆவி என்ற போதனை வேதத்திற்கு முரண்பட்டது.

பரிசுத்த ஆவியானவரும் தேவனே யெகோவா சாட்சிகள் கூறுவதுபோல பரிகத்த ஆவி என்பது பெலப்படுத்தும் ஒரு சாதாரண ஆவியல்ல. பரிசுத்த ஆவியானவர் தெய்வீகமானவர். அவர் தேவன் என்று பல வசனங்களிலிருந்து அறிகி றோம். பரிசுத்த ஆவியானவர் ஆளத்துவமுடையவர் என்பதைக் கீழ்க்காணும் வசனங்கள் விளக்குகின்றன.

பரிசுத்த ஆவியானவர் ஆளத்துவமுடையவர்

ஆவியானவரின் சிந்தை (அவர் சிந்திக்கிறவர்) ரோமர் 8:27.

ஆவியானவரின் சித்தம் (1 கொரி.12:11).

பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே போதிப்பார், நினைப்பூட்டுவார் (யோ.14:26).

இயேசுகிறிஸ்துவைக் குறித்து சாட்சி கொடுப்பார் (யோ.15:26).

அவர் கண்டித்து உணர்த்துவார் (யோ.16:8).

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; வரப் போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார் (யோ.16:13).

ஆவியானவர் வேண்டுதல் செய்கிறார். உதவி செய்கிறார்.

எனவே பிதா தேவனாயிருக்கிறது போல இயேசுகிறிஸ்துவும் தேவனாயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவரும் தேவனாயிருக்கிறார். ஆனாலும் மூன்று தேவர்களல்ல, தேவன் ஒருவரே. ஒரே தேவனுக்குள் மூன்று ஆளத்துவங்கள் (ரோ.8:26). உள்ளன

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் திருமுழுக்குக் கொடுத்ததாக அப்போஸ்தல நடபடி களில் ஆதாரமில்லையே என்று இயேசுவின் நாமக் காரர் வாதிடுவார்கள்.

இதற்கான பதிலை ஆராய்வோம்:

மத்.28:19ல் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர் களை நோக்கி நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததாக கூறப்படவில்லை என்று வாதிடு கின்றனர்.

யூதர்கள் ஏற்கெனவே பிதாவாகிய தேவனை அறிந்திருந்தார்கள். அவர்களுக்கு தேவையானது என்னவென்றால் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்த இந்த இயேசுவே யெகோவாவாகிய கிறிஸ்து என்று விசுவாசிப்பதுதான். எனவே இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்தனர். இயேசுவை கிறிஸ்து வாக. இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தனர். தண்ணீல் இறங்கி என்ன நாமத்தை உச்சரித்து திருமுழுக்கு கொடுத் தார்கள் என்று (Baptismal formula) அங்கே கூறப்பட வில்லை. யாரை ஏற்றுக்கொண்டு திருமுழுக்குப் பெற்றார்கள் என்று அங்கே கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக

நாம் நற்செய்தி அறிவிக்கும் போது இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் யார் என்று கேட்டு அவர்களை பாவமன்னிப்பின் நிச்சயத்திற்குள் நடத்துகிறோம். இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருடைய நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றோம் என்று கூறுகிறார்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை ஏற்றுக் கொள்ளுகிறவர்கள், அவர்கள் யார் என்று கேட்பதில்லை. அந்தக் கேள்வி தேவையற்றது.

அப்போஸ்தல நடபடிகளில் கூறப்பட்டுள்ளது ஞானஸ்நான விதி (Baptismal formula) அல்ல என்று விளக்குகிறேன்.

கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே

ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர் களாகக் கண்டு…” (அப்.8:15). “கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான்” (அப்.10:48).

“அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்” (அப்.19:5),

இங்கே கூறப்பட்டுள்ளது யாரை ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெற்றார்கள் என்பதைத் தான் பார்க்கிறோம். கர்த்தராகிய இயேசுவின் நாமம், கர்த்தருடைய நாமம் என்று இரண்டுவிதமாக கூறப் பட்டுள்ளது. இதுதான் ஞானஸ்நான விதி என்றால் இதில் எது சரி?

அப்.2:41ல் பெந்தெகொஸ்தே என்னும் நாளில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் எந்த நாமத்தில் பெற்றார்கள் என்று சொல்லப்படவில்லை.

அப்.8:38ல் பிலிப்பு எத்தியோப்பியா தேசத்து நிதி மந்திரிக்கு திருமுழுக்குக் கொடுத்தான் எனப் பார்க்கிறோம்.

ஆனால் நாமம் சொல்லப்படவில்லை. அப்.9:18ல் பவுல் எந்த நாமத்தில் திருமுழுக்குப் பெற்றான் என்று குறிப்பிடவில்லை.

அப்16:3ல் சிறைச்சாலை அதிகாரி குடும்பத்துடன் ஞானஸ்நானம் பெற்றான். எந்த நாமமும் எழுதப்படவில்லை.

இந்த ஐந்து இடங்களிலும் ஒரு நாமமும் கூறப் படாததால் இவர்கள் ஞானஸ்நானம் பெறும்போது ஒரு நாமமும் கூறப்படவில்லை என்று வாதிடலாமா? கூடாது.

அப்.19:2,3ல் பவுல் எபேசு பட்டணத்தில் சந்தித்த சிலரைப் பார்த்து, நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.

உடனே பவுல், அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்று கேட்கிறான். ஏன் குறிப்பாக ஞானஸ்நானத்தைக் குறித்து கேட்கிறான்? ஞானஸ்நானம் கொடுக்கும்போது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே கொடுத்திருப்பார் களே! அப்படியிருக்க ஆவியானவரைப்பற்றி கேள்விப்படாதது எப்படி என்ற பொருளை அங்கே காண்கிறோம். எனவே பவுல் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கித்து திருமுழுக்கை மத், 28:18,19ன்படி கொடுத்தார்.

இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் அன்றும் இன்றும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலேதான் ஞானஸ்நானம் பெற்று வருகிறார் கள். இந்த இரண்டாயிரம் வருடமாக இந்த விதி மாறவில்லை. சிலர் மாற்ற முயற்சித்தாலும் அது வெற்றியடையவில்லை.

ஒரு தேவனில் பிதா, குமாரன், பரிசுத்தாவி என்கிற திரித்துவம் இருக்கிறது என்ற சத்தியம் புரிந்துகொள்வதற்கு இயலாதது. மனித விளக்கங் களுக்கு அப்பாற்பட்டது. இதை உதாரணப்படுத்த உலகில் ஒன்றுமேயில்லை. பனிக்கட்டி, நீர், நீராவி என்ற மூன்று நிலையிலுள்ள தண்ணீரை உதாரணப் படுத்துவோர் பலருண்டு. முக்கோணத்தின் மூன்று பகுதிகளுக்கு இன ணையானது என்று விளக்குவார்கள் பலர். ஆனால் தேவனுடைய திருத்துவத்தை எவரும் தெளிவாக விளக்க இயலாது. ஆனாலும் நூற்றுக் கணக்கான வசனங்கள்மூலம் இந்த சத்தியம் உண்மை என அறிகிறோம்.

தாயின் வயிற்றில் கண்ணுக்குத் தெரியாத சிறு உயிரணுவிலிருந்து குழந்தையின் எலும்புகளும் உள்ளுறுப்புகளும் உருவாவதை யாரால் விளக்க முடியும்? தேவனுடைய அதிசயங்களை நம்மால் விளக்க முடியாது. நித்தியத்தை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறதா? ஆனாலும் இவை அடிப்படை சத்தியங்கள்.

கடைசியாக நான் சிறுவயது முதல் தென்னிந்திய திருச்சபையிலே தவறாமல் அறிக்கையிட்ட அதநாஷியஸ் விசுவாசப் பிரமாணத்தை சுருக்கமாக குறிப்பிட விரும்புகிறேன். இவர் ஆதிகால திருச்சபை வேதபண்டிதர். அக்காலத்திலேயே இந்தத் திருத்துவக் கொள்கைக்கு விரோதமாக துர் உபதேசங்கள் எழும்பின போது இந்த விகவாசப் பிரமாணத்தை பிரகடனப்படுத்தினார். இப்படிப்பட்ட பரிசுத்த வான்களுக்காக கர்த்தரைத் துதிக்கின்றேன். இவை களைத் திருச்சபைகளிலே அறிக்கையிட ஒழுங்கு செய்த பரிசுத்தவான்களுக்காகத் தேவனைப் போற்றுகிறேன். அன்று கிளிப்பிள்ளை பாடமாக மனப்பாடமாக அறிக்கையிட்டேன். இன்று உணர்ந்து, அறிந்து அறிக்கையிடுகிறேன்.

அதநாசியஸின் விசுவாசப் பிரமாணத்தின் சுருக்கம்

திருச்சபைக்குரிய பொதுவான விசுவாசமாவது…

4. ஏக தேவனை திரித்துவமாகவும், திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்க வேண்டுமென்பதே.

5. பிதாவானவர் ஒருவர். குமாரனானவர் ஒருவர். பரிசுத்த ஆவியானவர் ஒருவர்.

6. ஆனாலும் பிதாவுக்கும், குமாரனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் ஒரே தேவ தன்மையும் சம மகிமையும் சம நித்திய மகத்துவமும் உண்டு.

8. பிதா சிருஷ்டிக்கப்படாதவர். குமாரனும் சிருஷ்டிக் கப்படாதவர். பரிசுத்த ஆவியும் சிருஷ்டிக்கப் படாதவர்.

10.பிதா நித்தியர். குமாரனும் நித்தியர். பரிசுத்த ஆவியும் நித்தியர்.

11. ஆகிலும் மூன்று நித்திய வஸ்துக்களில்லை. நித்திய வஸ்து ஒன்றே.

13. அப்படியே பிதா சர்வ வல்லவர். குமாரனும் சர்வ வல்லவர். பரிகத்தாவியும் சர்வ வல்லவர்.

14.ஆகிலும் மூன்று சர்வ வல்ல வஸ்துக்களில்லை. சர்வ வல்ல வஸ்து ஒன்றே.

15. அப்படியே பிதாவும் தேவன். குமாரனும் தேவன். பரிசுத்தாவியும் தேவன்.

16.ஆகிலும் மூன்று தேவர்களில்லை. தேவன் ஒருவரே.

25. அன்றியும் இந்தத் திருத்துவத்தில் ஒருவரும் முந்தினவருமல்ல பிந்தினவருமல்ல. ஒருவரில் ஒருவர், பெரியவருமல்ல சிறியவருமல்ல.

26. மூவரும் சமநித்தியரும் சரிசமானருமாம்.

27. ஆதலால் மேற்சொல்லியபடி எல்லாவற்றிலேயும் ஏகத்துவத்தை திரித்துவமாகவும், திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்க வேண்டும்.

28. ஆனபடியால் இரட்சிப்படைய விரும்புகிறவன் திரித்துவத்தைக் குறித்து இப்படியே நினைக்க வேண்டும்.

29. மேலும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வின் மனுஷவதாரத்தைக் குறித்து சரியானபடி விசுவாசிப்பதும் நித்திய இரட்சிப்படைவதற்கு அவசியமாயிருக்கிறது.

30. நாம் விசுவாசித்து அறிக்கையிடுகிற சரியான விசுவாசமாவது: தேவனுடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசுகிறிஸ்து தேவனும் மனுஷனுமாய் இருக்கிறார்.

33. தேவத்தன்மையின்படி பிதாவுக்குச் சரியானவர். மனுஷத் தன்மையின்படி பிதாவுக்குத் தாழ்ந்தவர்.

34. அவர் தேவனும் மனுஷனுமாயிருந்து இருவரா யிராமல், கிறிஸ்து என்னும் ஒருவராகவே இருக்கிறார்.

பரிசுத்த வேதாகமத்திலுள்ள திருத்துவத்தின் கொள்கையை இதைவிட தெளிவாக விளக்க இயலாது. திருத்துவ தேவனில் அசைக்க முடியாத நம்பிக்கையோடிருங்கள். இதை சரியாக விளங்கிக் கொள்ளாத நண்பர்கள் பலர் இருக்கலாம். அவர் களுடைய போதனைக்கு செவிசாய்த்து வேத சத்தியங்களை விட்டு விலகி விடாதிருங்கள். புதிய ஏற்பாட்டை நிறுத்தி நிதானமாக வாசியுங்கள். இந்த சத்தியங்களை தெளிவாய் கற்றுக் கொள்வீர்கள்.

இயேசுவின் நாமக் கொள்கைக்காரர்களையும், யெகோவா சாட்சியக்காரர்களையும் ஒருவருக்கொருவர் நேரடியாக விவாதிக்கவிட்டால் அவர்கள் விவாத முடிவில் நாம் விசுவாசிக்கும் திருத்துவக் கொள்கை வெளிப்படும். ஏனெனில் இவர்கள் இருவரும் இரு துருவங்கள். கர்த்தர் அவர்களுக்கு உதவி செய்வாராக. வசனத்தைப் பற்றிக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *