ஆவியில் மயங்கி விழுதல்

 

ஆவியில் மயங்கி விழுதல்

 

ஆவியில் மயங்கி விழுதல்

 

ஆவியில் மயங்கி விழுதல்: சில ஆண்டுகளுக்குமுன் ஆஸ்திரேலியாவில் நான் சந்தித்த கிட்டத்தட்ட எல்லா சபைகளிலும், நியுசிலாந்தில் சில சபைகளிலும், இந்த ஆண்டில் கீழே நான் அமெரிக்காவில் சந்தித்த சில சபைகளிலும் ஜெபிக்கும்போது விசுவாசிகள் மயங்கி விழுவதைக் கண்டேன். இந்தியாவில் சில கூட்டங் களில் சிலர் இப்படி விழுவதைக் கண்டேன். இதற்கு முன்பும் இதே போன்ற அனுபவத்தை வெளிநாடு களிலும், இந்தியாவிலும் கண்டிருந்தபோதிலும் தற்போது நடைபெறும் அளவிற்கு அந்த நாட்களிலே நடந்ததில்லை.

குறிப்பாக ஆஸ்திரேலியாவிற்கு நான் பல தடவை போயிருந்தபோதிலும் கடந்த ஆண்டிலே கண்டதுபோல முன்பு கண்டதில்லை. பிரசங்கிக்கும் எல்லா சபைகளிலும் (வெள்ளைக் நான் காரர்கள்) கூட்ட முடிவில் நான் விசுவாசிகள் தலையில் கைவைத்து ஜெபித்தபோது அவர்கள் மயங்கி கீழே விழுந்தார்கள்.

இந்த அனுபவத்தைக் குறித்து உலக அளவில் ஏராளம் பேசப்படுகிறது. குறிப்பாக வெளிநாட்டு சபைகளில் இது மிக முக்கிய கவனத்தைப் பெற்றுள் ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து சபை மேய்ப்பர்களாக இருக்கும் என்னுடைய நண்பர் களில் பலர் இந்த அனுபவத்தைக் குறித்து மெச்சிப் பேசுகின்றனர். மற்ற அநேகர் இதை வன்மையாக கண்டித்துப் பேசுகின்றனர். இந்தியாவிலும் முரண் பட்ட இருவிதக் கருத்துடைய சபை மேய்ப்பர் களுடன் இதைக் குறித்துப் பேசியுள்ளேன். எனவே திறந்த மனதுடன் இதைக் குறித்து எழுதுவது அவசியமென உணர்கிறேன். நீங்களும் திறந்த மனதுடன் வாசிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

முதலாவது அறிய வேண்டியது தேவன் சர்வ ஆளுகையுள்ளவர்.

தேவன் அவர் சித்தப்படி காரியங்களைச் செய்வார். சபையிலே அவர் விரும்புகின்றபடி கிரியை செய்வார். எதை எப்படி எந்தவிதத்தில் செய்ய விரும்புகிறாரோ அதை அவர் செய்ய உரிமை யுள்ளவர். அவருடைய செயல்களையும், வழிகளையும், சித்தத்தையும் நாம் கட்டுப்படுத்த, நமது எல்லைக்குள் அடக்கிவைக்க முயற்சிப்பது இயலாத காரியம். அப்படிச் செய்ய நாம் முயற்சிப்பது புத்தியீனம். அவருடைய ஞானத்தையும், அறிவையும், செயல் பாடுகளையும் நியாயந்தீர்க்க நமக்கு உரிமையில்லை.

இந்த அனுபவம் மெய்யாகவோ, போலியாகவோ இருக்க முடியும்.

ஆவியில் நிறைந்து மயங்கி விழுதல் என்பது மெய் யான அனுபவமாக இருக்க முடியும். ஆவியானவர் அப்படிப்பட்ட அனுபவத்தைக் கொடுக்க முடியும். அதே சமயம் இந்த அனுபவம் போலியாக இருக்கக் கூடிய ஆபத்துமுண்டு.

இந்த அனுபவம் சரியானதுதான் என்பவர்கள் கொடுக்கும் வசன ஆதாரம்:

“இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக் குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்ட போது முகங்குப்புற விழுந்தேன்…” (எசேக். 1.28).

“நான் (யோவான்) அவரைக் (இயேசுவை) கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்” (வெளி.1:17).

வேறு சிலர் சம்பந்தமில்லாத வசனங்களையும் ஆதாரமாகக் காட்ட முயற்சிக்கின்றனர்:

“இயேசுவைப் பிடிக்க வந்தவர்கள் பின்னிட்டு விழுந்தார்கள்” (யோ.18:6).

“ஆபிரகாமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது என்பது இதுதான்” (ஆதி.15:1).

“இயேசுவின் கல்லறையைக் காத்து வந்த காவலாளர் தேவதூதனைக் கண்டு பயந்து திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்” (மத்.28:4)

“சவுல் தமஸ்குவுக்கு போகும வழியிலே வானத் திலிருந்து தோன்றிய ஒளியைக் கண்டு தரை யிலே விழுந்தான்” (அப்.9.3.4).

“ஒளியுள்ள மேகத்திலிருந்து உண்டான சத்தத் தைக் கேட்டு சீஷர்கள் முகங்குப்புற விழுந் தார்கள்” (மத்.17:5,6),

மேற்கூறிய வசனங்கள் ஆவியில் மயங்கி விழுவதற்கு சம்பந்தமில்லாதது என்பது தெளிவு.

ஜாண்வெஸ்லி (மெதடிஸ்ட் சபை ஸ்தாபகர்) கருத்து 

வேதத்தில் தெளிவாக சொல்லப்படாதவைகளை உபதேசமாகவோ, நடைமுறைக் காரியமாகவோ ஏற்றுக்கொள்ளுமுன் நான்கு காரியங்களை வைத்து அவற்றைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றார்.

1. வேதவசனம் 

வேதவசனம் இதைக் குறித்து என்ன சொல்லுகிறது?

2. சபை சரித்திரம்

சபை சரித்திரத்தில் இதைக் குறித்து என்ன சொல்லப்பட்டது?

3. அனுபவம்

அனுபவம் என்ன கூறுகிறது?

4. பகுத்தறிவு 

இதைக் குறித்து அறிவுப்பூர்வமாக கண்டு கொள்வது என்ன?

இந்த அனுபவம் தவறு என்று கூறுவோர் கருத்துக்கள்.

வசனம் கூறுவதென்ன?

1. வேத வசனத்தில் இந்த அனுபவத்திற்கு ஆதாரமாக ஒன்றும் சொல்லப்படவில்லை.

2. எசேக்.1:28, வெளி.1:17, மத்.17:6ல் முகங்குப்புற விழுந்தார்கள் என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர இன்று நடப்பது போல மல்லாந்து விழவில்லை.

3. ஆவியில் மயங்கி விழுதல் என்பதற்கு ஆங்கி லத்தில் (Slain in the Spirit) என்று கூறுகிறார்கள். இதன் பொருள் ஆவியிலே கொல்லப்படல்.

4. இப்படி நடக்கும் என்ற மன நிலையில் தங்களை ஆயத்தப்படுத்தி அநேகர் போகிறதினால் இவர்கள் தலையில் கை வைத்தவுடன் விழுந்து விடுகிறார்கள் (Auto Suggestion).

5. மற்றவர்களெல்லாம் விழும்போது நாம் விழா விட்டால் நம்மை யாரும் ஆவிக்குரியவர்கள் என்று மதிக்கமாட்டார்கள் என்பதினால் அநேகர் விழுகின்றனர் (Peer Pressure). 6. விழாமல் போனால் ஊழியக்காரர் ஏமாற்றம் அடைவார் என்று எண்ணி விழுகிறவர்கள் உண்டு.

7. ஏதாவது ஒன்று தனக்கு நடக்கிறதா என்று எதிர்பார்த்து பலர் விழுகின்றனர்.

8. அசுத்த ஆவியினால் விழுகிறவர்களும் உண்டு.

சபை சரித்திரம் கூறுவதென்ன?

கடந்த காலங்களில் எழுப்புதல் ஏற்பட்ட சமயங் களில் மக்கள் ஆவியானவரால் தொடப்பட்டு விழுந் திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மனந்திரும்பாத பாவிகள். உதாரணமாக, யோனத்தான் எட்வர்ட்ஸ் என்ற சிறந்த எழுப்புதல் பிரசங்கியார் மூலம் 18ம் நூற்றாண்டில் எழுப்புதல் ஏற்பட்டது. அவர் கி.பி. 1795-1810ம் ஆண்டுகளில் நடத்தியக் கூட்டங்களில் அசாதாரணமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

“கோபமுள்ள தேவனின் கரங்களிலிருக்கும் பாவிகள்” (Sinners in the Hands of an Angry God) என்ற தலைப்பில் அவர் பிரசங்கித்தபோது கூடியிருந்த பாவிகள் பாவ உணர்வடைந்து, பயந்து, நரகத்தில் விழுந்து விடுவோம் என்று உணர்ந்து ஆலயத்தின் தூண்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறி ஜெபித்திருக்கின்றனர்.

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட எழுப்புதலிலும் இவ்வித காரியங்கள் நடைபெற்றன. கி.பி. 1799ல் அமெக்காவிலுள்ள கென்டக்கி மாநிலத்தில் நடந்த கூட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் பாவ உணர்வடைந்து கதறி ஜெபித்த போது செத்தவர் களைப் போல விழுந்திருக்கின்றனர். ஆனால் சில நிமிடங்களில் மனந்திரும்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் எனவே தேவ செய்தியைக் கேட்ட பாவிகள் பாவ உணர்வடைந்து விழுந்தனர விசுவாசிகள் விழுந்ததாக கூறப்படவில்லை.

அனுபவம் கூறுவதென்ன?

இந்த அனுபவத்தைப் பெற்றவர்கள் பரவசம் அடைந்ததாக கூறுகின்றனர். சிலர் தரிசனம் கண்ட தாகக் கூறுகின்றனர். அநேகர் எந்த நன்மையையும் பெற்றதாக கூறவில்லை. ஆவியில் மயங்கி விழுந்த வர்கள் ஆவிக்குரிய நிலையில் வளர்ந்ததாகவோ, குறிப்பிட்ட நன்மைகளைப் பெற்றதாகவோ கூற வில்லை.

சில இடங்களில் இந்த அனுபவம் உண்டான பின்பு ஆராதனையில் மக்கள் நீண்ட நேரம் கர்த்தரை ஆராதிக்கின்றனர். வாலிபர்களும் அதிக உற்சாகத் துடன் இருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

பகுத்தறிவு கூறுவதென்ன?

கர்த்தரே இதைச் செய்தால் ஏன் பின்னால் நின்று இரண்டு பேர் பிடிக்க வேண்டும்’ விழச் செய்யும் ஆவியானவர் விழுகின்றவர்களை பாதுகாக்க மாட்டாரா? பின்னால் நின்று பிடிப்பதற்கு ஆட்கள் இருக்கும்போதுதான் அதிகமான பேர்கள் விழுகின் றனரே. ஏன்? சிலர் கீழே விழுந்து பாம்பு போல் நெளிந்து உருளுவது ஏன்? பல இடங்களில் மிருகங் களைப் போல் வேடிக்கையான குரல்களை எழுப்புவது ஏன்? இப்படி விழுவதினால் ஆவிக்குரிய நிலையில் எந்த முன்னேற்றமும் காணப்படாத போது இந்த அனுபவத்தை நாடுவது ஏன்’ தேடுவதேன்?

சபை மேய்ப்பர்களும், நற்செய்தியாளர்களும் இவைகளைத் தொடர்ந்து நடப்பிக்க முயற்சிப்பது ஏன்? பிடிக்க ஆளில்லாததினால் கீழே விழுந்து காயம் பட்டவர்கள் பலருண்டு. இது அவசியமா?

ஆவியானவரே இதைச் செய்து மக்கள் விழுந்தால் பரவாயில்லை. ஊழியக்காரர் கை வைக்கும்போது தான் விழுகிறார்கள். அது எப்படி? தேவ வல்லமை அந்த இடத்தில் அவ்வளவு வல்லமையாக இறங்கி யிருந்தால் பின்னால் நின்று ஆட்களைப் பிடித்து படுக்க வைக்கின்ற இருவரும் ஏன் அந்த தேவ வல்லமையினால் விழவில்லை. தேவ வல்லமையினால் பிரசங்கியாரும் விழ வேண்டுமல்லவா? அவர் மட்டும் அமைதியாக வரிசையில் உள்ளவர்களைத் தொட்டுக் கொண்டே போய் அவர்களை விழச் செய்கிறாரே? அதே வல்லமை அவரைத் தொடுவதில்லையா?

ஆவியானவரே இதைச் செய்தால், மக்கள் ஏன் இதை செயல்படுத்துகிற பிரசங்கியாரை உயர்த்து கிறார்கள்?

இயேசு ஊதினார் என்று மைக்கில் பிரசங்கியார்

ஊதும்போது சபையார் அநேகர் விழுகின்றனரே?

இயேசு ஊதி பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். என்று சொன்னாரே அல்லாமல் அவர் ஊதி சீஷர்களை கீழே விழத்தள்ளவில்லையே.

சில பிரசங்கியார்கள் ஆட்கள் விழும்வரை நெற்றியில் கைவைத்துத் தள்ளிக்கொண்டே இருக் கின்றனர். அந்த அழுத்தத்தை எதிர்க்க முடியாமல் அநேகர் சில அடிகள் பின்வைத்து நிற்க முயற்சிக் கின்றனர். அதுவும் முடியாமல் விழுகின்றவர்களும் உண்டு.

என் கருத்து (போதகர். P.S.ராஜமணி)

பரிசுத்த ஆவியானவர் வல்லமை அதிகமாக இறங்கி ஒருவர் விழுவாரென்றால் அதை யாரும் தடுக்க முடியாது. வசன ஆதாரமற்ற எந்த ஒரு அனுபவத்தையும் ஏற்றுக்கொள்வதில் எச்சரிப்பு தேவை. இந்த அனுபவத்தால் எந்தவித பலனு மில்லை என்று இருக்கும்போது இதை வாஞ்சை யோடு தேடி நாட வேண்டிய அவசியமில்லை.

நான் வெளிநாடுகளில் கூட்ட முடிவில் விசுவாசிகள் தலையில் கைவைத்து ஜெபித்தபோது பல இடங்களில் நூற்றுக்கணக்கானோர் மயங்கி விழுந்தனர். அதே சமயம் இந்தியாவிற்கு வந்து இங்கே ஜெபிக்கும் போது அப்படி விழவில்லையே? (வெகுசிலரைத் தவிர) அப்படியானால் ஜெபிக்கும்போது விழுந்து பழகிப் போன விசுவாசிகள் தான் தொடர்ந்து விழுகிறார் களேயல்லாமல் வேறல்ல என எண்ணுகிறேன். வெளி நாடுகளில் ஜெபிக்கும்போது என்னுடன் இருக்கின்ற ஆவியானவர்தானே இங்கேயும் இருக்கின்றார்.

பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் அவ்வளவு பலமாய் இறங்கினபோதிலும் கூடி இருந்தவர்கள் பரிசுத்தாவியில் நிறைந்து ஆவியானவர் தந்த பல்வேறு மொழிகளில் பேசினார்கள் என்று தான் வாசிக்கிறோம் (அப்.2:1-4), அவர்கள் ஆவியில் மயங்கி விழுந்தார்கள் என்று கூறப்படவில்லையே. இதுபோலவே செசரியா பட்டணத்தில் கொர்நேலியு வீட்டில் பேதுரு பிரசங்கித்தபோது வசனத்தை கேட்டுக் கொண்டிருந்தவர்கள்மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினபோது அவர்கள் பல மொழி களைப் பேசினார்கள் என்றுதான் கூறப்பட்டுள்ளது. மயங்கிவிழுந்ததாக கூறப்படவில்லை (அப்.10:44-46).

ஒரு சிலர் ஆவியானவர் வல்லமை தாளாமல் விழலாம். அது தனிப்பட்ட அனுபவம். அது எல்லா ருக்கும் நடக்க வேண்டுமென்று நாம் முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை. வசன ஆதாரமற்ற எந்த அனுபவத்தையும் நாடவோ, தேடவோ வேண்டாம். என்னுடைய நெருங்கிய வெளிநாட்டு நண்பர்கள் பலர் இந்த அனுபவத்தை அதிகமாக வலியுறுத்திப் பேசுகின்றனர். அது அவர்களுக்கும் கர்த்தருக்கும் இடையேயுள்ள காரியம். வசனத்தைப் பற்றிக் கொண்டு கிறிஸ்துவில் நிலைத்திருக்க கர்த்தர் உதவி செய்வாராக!

This Post Has One Comment

  1. Pastor. Simeon

    I like to get your pdf format messages in tamil so kindly send to me which is very deep theology I need it

Leave a Reply