சங்கீதம் 121:7 – இல் கூறப்பட்டிருக்கும் வாக்குத்தத்தம் உண்மையானதாயிருக்குமாயின், தேவன் தம் பிள்ளைகளுக்கு விபத்துகள் நேரிட அனுமதிப்பது ஏன்?

 

சங்கீதம் 121:7 – இல் கூறப்பட்டிருக்கும் வாக்குத்தத்தம் உண்மையானதாயிருக்குமாயின், தேவன் தம் பிள்ளைகளுக்கு விபத்துகள் நேரிட அனுமதிப்பது ஏன்?

 

ஆம், தேவனுடைய வாக்குத்தத்தம் நிச்சயமாகவே உண்மை யானதுதான். “கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்” (சங். 121:7) என்று திருவசனம் கூறுகிறது. ஆனால் இவ்வாக்குத்தத்தத்தில், தீங்கு என்பது நம் ஆத்துமாவுக்கு விளையக்கூடிய தீங்கைக் குறிக் கிறது – அதாவது, ஒத்தாசை நாடி நாம் நம்முடைய கண்களைக் கர்த்தருக்கு நேராக ஏறெடுப்போமாயின் (வச.1) – எல்லாச் சூழ்நிலைகளிலும், நம் ஆத்துமாவைப் பாதிக்கக்கூடிய அல்லது நம்மைத் தேவனை விட்டுப் பிரிக்கக்கூடிய எல்லாத் தீங்குக்கும் நம்மை விலக்கிக் காப்பதாக அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். சில சமயங்களில் நம் சரீரத்தைப் பாதிக்கக்கூடிய தீங்குகளை (வியாதிகள், விபத்துகள், சிறைவாசம். துன்புறுத்தப்படுதல், இரத்த சாட்சி மரணம் போன்றவற்றை) நமக்குத் தேவன் அனுமதிக்கலாம். அப்.பவுலுக்கு இப்படிப்பட்ட விபத்துகள் நேரிட்டன: “ஆறு களால் வந்த மோசங்களிலும், … சமுத்திரத்தில் உண்டான மோசங் களிலும்… இருந்தேன்” (II கொரி. 11 : 26, 27 என்று அவர் எழுதுகிறார். ஒரு முறை அவர் சந்தித்த பயங்கரமான கப்பல் விபத்தைப் பற்றி அப்போஸ்தலருடைய நடபடிகள் 27 : 41 – 44 – இல் வாசித்துப் பாருங்கள்! நிச்சயமாகவே இவையெல்லாம் அப். பவுலுக்குச் சரீரப்பிரகாரமாக அதிகமான பாடுகளைக் கொண்டுவந்தன; எனி னும் அவருடைய ஆத்துமா இச்சோதனைகளினால் தேவனை விட்டுப் பிரிக்கப்படவில்லை; மாறாக, அவை தேவனோடுள்ள நெருங்கிய ஐக்கியத்திற்கே அவரை வழிநடத்தின.

தேவன் நம்மைச் சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய

பிரகாரமாகவும் பாதுகாக்கிறவராயிருப்பினும், அவரது முதன்மை யான கரிசனை. நம் ஆத்துமா பாதுகாக்கப்படுவது குறித்தே ஆகும். “அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்” என்பது அவ ருடைய வாக்குத்தத்தமாகும். அழிவுக்குரிய நம் சரீரத்தை அவர் என்றென்றைக்குமாகப் பாதுகாக்காமற்போனாலும், நித்திய மானதாகிய நம் ஆத்துமாவை அவர் பாதுகாப்பது திண்ணம் நம் எல்லாச் சோதனைகளிலும் நாம் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திருப்போமாகில், அவர் நம் ஆத்துமாவைப் பாதுகாப்பார். நம்முடைய தேவன் தம்முடைய அளவற்ற இரக்கங்களினால் நம்மை எத்தனையோ முறை சரீரப்பிரகாரமான தீங்குகளிலி ருந்தும் பாதுகாத்திருக்கிறார் என்பது உண்மையே! அதற்காக நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும்.

யோபு ஒரு நீதிமானாயிருந்தான். தேவன் தாமே அவ னுடைய நீதியைக் குறித்து சாட்சி கொடுத்திருந்தார். அவன் தன் பத்துப் பிள்ளைகளுக்காகவும் ஒவ்வொரு நாளும் ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தான். அப்பிள்ளைகள் அனைவரும் ஒருமிக்க ஒரே நாளில் திடீரென ஒரு விபத்திற்குள்ளாகி மரித்துப்போயினர். இருப்பினும் அவனுடைய பத்துப் பிள்ளைகளும் பரலோகத் திற்கே சென்றார்கள் என்பதை யோபு 42:10 – 13-இன் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். தேவன் எல்லாவற்றையும் அவனுக்கு இரண்டத்தனையாகக் கொடுத்தார் – மிருகஜீவன்களாகிய ஆஸ்தி கள் யாவும் இரண்டு மடங்காக அவனுக்குக் கிடைத்தன. ஆனால் பிள்ளைகளைப் பொறுத்த வரை, அவனுக்குப் பத்துப் பிள்ளை களை மட்டுமே தேவன் கொடுத்தார்; ஏனெனில் அவனுடைய முதல் பத்துப் பிள்ளைகள் பரலோகத்தில் ஜீவனோடிருந்தனர். இவ்வாறு பிள்ளைகளின் எண்ணிக்கை மொத்தம் 20 ஆயிற்று! செத்துப்போன மிருகங்கள் ஒன்றும் பரலோகத்திற்குப் போக வில்லையாதலால் மிருகங்கள் இரண்டு மடங்காக அவனுக்குக் கிடைத்தன!

 

அன்பான தேவபிள்ளையே, ஒருவேளை உன் சிநேகிதர் அல்லது குடும்பத்தின் அங்கத்தினர் சிலர் விபத்துகளைச் சந்தித்து மரித்துப்போயிருக்க கூடும். தேவன் கோபமடைந்து அவர்களை அல்லது உன்னைத் தண்டித்துவிட்டார் என்று நீ ஒருபோதும் எண்ண வேண்டாம். நாம் பரலோகமாகிய ‘அக்கரையைச்” சென்றடையும் வரை அவர் நம்முடனேகூட இருப்பதாக வாக்களித்திருப்பதால், அவருக்கு நன்றியுள்ளவர்களாயிருந்து, அவரது வார்த்தையில் ஆறுதலடைவோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *