தேவபிள்ளைகள் இலஞ்சம் ‘பரிதானத்தை வாங்கக்கூடாது ஏன்?

இலஞ்சம்

 

தேவபிள்ளைகள் இலஞ்சத்தை ‘பரிதானத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது- ஏன்?

 

பணமாகவோ. பொருளாகவோ பரிதானம் (இலஞ்சம்)

வாங்கும் பழக்கம் இன்றைய சமுதாயத்தில் மட்டு மீதிய நிலையில் பரவியிருக்கிறது. உலகத்திற்கு வெளிச்சமாயிருக்க வேண்டிய தேவபிள்ளைகள் இப்படிப்பட்ட பழக்கவழக்கங் களுக்கு முற்றிலும் நீங்கலாயிருந்து, இரட்சிக்கப்படாதவர்களுக்குச் சரியான வழியைக் காண்பிக்க வேண்டும். பரிதானம் என்பது. ஆவிக்குரிய பிரகாரமாகவும், சன்மார்க்க ரீதியாகவும், சட்டப்பூர்வ மாகவும் ஒருவர் பெறும் தவறான பிரதிபலனாகும். தான் பரிதானம் வாங்குவதற்கு ஒரு நபர். ‘எனக்கு மிகக் குறைவான ஊதியமே கிடைக்கிறது: விலைவாசி மிக அதிகமாயிருக்கிறது: சக ஊழி யரின் வற்புறுத்தலால் அதிகமாக அழுத்தப்படுகிறேன். மற்றவர் களைப் போல இலஞ்சம் வாங்காவிட்டால் வேலை ஸ்தலத்தில் தனிமையாக்கப்படுதலை நான் சந்திக்க வேண்டியதாயிருக்கிறது. வாடிக்கையாளர்கள் இலஞ்சம் வாங்கும்படி என்னை நயங்காட்டி வசீகரிக்கிறார்கள்’ என்பன போன்ற பல சாக்குப்போக்குகள் உடையவராயிருப்பினும், அவர் இலஞ்சம் வாங்குவதற்கான அடிப்படையான காரணம், பேராசையே ஆகும். ஒரு தேவமனுஷன் பண ஆசையை விட்டு ஓட வேண்டியவனாயிருக்கிறான் (I தீமோ. 6:10.11). மேலும் பரிதானம் வாங்குவது ஒருவன் வகிக்கும் பதவியை அவன் துர்ப்பிரயோகம் செய்வதும், அதற்கு நம்பிக்கைத் துரோகம் பண்ணுவதுமாகும். பரிதானம் என்பது நேர்மையற்ற விதத்தில் பெறும் ஓர் ஆதாயமாகும். அது நீதிநெறிக்கும் வேதப் பிரமாணத்திற்கும் விரோதமானதாகும். அது பலாத்காரமாய்ப் பணம் பறிப்பதற்குச் சமமானது. ‘நீங்கள் ஒருவரையும் கொள்ளையிடாமல் உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள்’ (லூக்கா 3:14- NIV). பணமாகவோ, பொருளாகவோ எந்த வடிவிலும் பரிதானத்தை ஏற்றுக்கொள்வது தவறானது என வேதாகமம் மிகத் தெளிவாக நம்மை எச்சரிக்கிறது. தேவனுடைய பார்வையில் பரிதானம் வாங்குதல் கடுமையான பாவமாயிருக்கிறது. இலஞ்சம் வாங்குகிறவர்கள் மேல் அவர் கண்டிப்பான நியாயத்தீர்ப்புகளைக் கூறியிருக்கிறார். அவற்றை ஒவ்வொன்றாய் நாம் பார்ப்போமாக:

 

‘பரிதானம் இலஞ்சம் வாங்காதிருப்பாயாக; ஏனெனில் பரிதானம் கண்களைக் குருடாக்கும்’ (உபா. 16 : 19 – NIV) – பரிதானம் வாங்குவது உன் ஆவிக்குரிய தரிசனத்தைக் குருடாக்கி, தேவனுடைய மகிமைக்காக ஜீவிக்க வேண்டும் என்று உன்னிலுள்ள உயர்வான நோக்கத்தை அவித்துப்போட்டுவிடும். அதினிமித்தம் நித்தியத் தைக் குறித்த அல்லது கர்த்தருடைய இரகசிய வருகையைக் குறித்த தரிசனத்தை நீ இழந்துபோவாய். சில சமயங்களில் இலஞ் சம் வாங்குகிறவர்கள் சரீரப்பிரகாரமாகவுங்கூட கண் பார்வையை இழந்துவிடக் கூடும்.

 

“பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன்” உபா. 27 : 25 பரிதானம் வாங்குவது என்பது உண்மையில் சாபத்தை வாங்குவதாகும். அது, யாரிடத்தில் நீ பரிதானம் வாங்குகிறாயோ அவன் மேலிருக்கும் சாபத்தை நீ வாங்கிக்கொள்வது போலாகி விடுகிறது. உதாரணமாக, எலிசா நாகமானைச் சுகமாக்கினான். எனினும் அதற்கான எந்த வெகுமதியையும் அவன் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். ஆனால் கேயாசி நாகமானிடமிருந்து வெகுமானம் (பரிதானம்) வாங்கினான். எனவே எலிசா கேயாசி யிடம், “ஆகையால் நாகமானின் குஷ்.டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும்” (II இராஜா.5:27) என்று கூறினான். பரிதானம் கொடுக்கிறவன் மேலுள்ள சாபம் அதை வாங்குகிற உன் மீது மட்டும் அல்ல, உன் சந்ததியின் மீதும், அதாவது உன் குடும்பத்தின் மீதும் என்றைக்கும் விழும்.

‘பரிதானத்தை நேசிக்கிறவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்’ (யோபு 15:34 – NIV) – நீ பரிதானம் வாங்குவதை விரும்புவாயாகில், தேவனுடைய நியாயத்தீர்ப்பாகிய அக்கினி உன் மேல் வரும் என்பதை இது காண்பிக்கிறது. ஒருவேளை யாதொரு விதத்திலும் பரிதானம் வாங்கக்கூடிய ஒரு நிலையில் நீ இல்லாமலிருக்கலாம்; ஆனால் அதற்கான ஒரு ஏக்கம் உன்னில் இருக்கக் கூடும். அதுவுங்கூட உன்மீது தேவ நியாயத்தீர்ப்பை வரவழைக்கும். உன் கூடாரங்கள் அதாவது குடும்பத்தாருங்கூட உன் ‘அநீதியின் கூலியில்’ பங்குள்ளவர்களாய், அதை இன்பமாய் அனுபவிக்கிறவர்களாயிருப்பார்களாதலால், அவர்கள் மீதும் அது வரும்.

 

‘உங்கள் பாவங்கள் பலத்ததென்று அறிவேன்; பரிதானம் வாங்குகிறீர்கள்’ (ஆமோஸ் 5 : 12) – இது பரிதானம் வாங்குகிற ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும் ஒரு முக்கியமான எச்சரிப் பாகும். பரிதானம் வாங்குவது தேவனுடைய பார்வையில் ஒரு சிறிய பாவம் அல்ல, அது ஒரு பலத்த பாவம் ஆகும். பாவம் ஒருபோதும் தண்டிக்கப்படாமல் விடப்படுவதில்லை.

 

“பேராசைக்காரன் தன் குடும்பத்திற்குத் தானே தொல்லை யைக் கொண்டுவருகிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்’ (நீதி. 15: 27 – NIV) – பேராசைக்காரனான ஒருவன் பணமானது தன் சகல பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடும் என்று எண்ணுகிறான். ஆனால் பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேரா யிருக்கிறது அல்லது அது எல்லாத் தொல்லைகளுக்கும் வேரா யிருக்கிறது. நீ பரிதானத்தை விரும்பினால், நீ மட்டுமல்ல, உன் னுடைய குடும்பம் முழுவதும் பெரிய தொல்லையில் அகப்படும். “பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்”. வேறு வார்த்தை களில் கூறின், பரிதானம் வாங்குதலை நீ வெறுக்காவிட்டால், கர்த்த ருடைய வேளை வருமுன்னதாகவே நீ மரித்துப் போகவுங்கூடும். பரிதானம் வாங்கி அதை இன்பமாக அனுபவித்த சிலர் கர்த்தருடைய வேளைக்கு முன்னதாகவே மரித்தார்கள் என்பதை யும், அவர்களுடைய பிள்ளைகள் அந்தப் பணத்தைத் துர்ப் பிரயோகம் செய்து அல்லது வீணாக்கி. கர்த்தருடைய வழியை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள் என்பதையும் கடந்த கால அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன. ஒருவன் அநீதியாய்ச் சம்பாதிக்கும் பணம் ஒருபோதும் அவனுக்குச் சமாதானம் தராது; மாறாக, அது அவனுக்குத் தேவையற்ற தொல்லையையே வரு விக்கும் என்பதை நீ நினைவிற்கொள்ளுவாயாக. ‘தன்னுடைய தல்லாததைத் தனக்காகச் சேர்த்துக்கொள்ளுகிறவனுக்கு ஐயோ! அதை அவன் எவ்வளவு காலத்திற்குத் தான் உடையவனாயிருப் பான்?” (ஆப. 2:6-Amplified Bible).

 

‘துன்மார்க்கன் இரகசியமாய்ப் பரிதானம் வாங்குகிறான்’ நீதி. 17 : 23 – NIV) – பரிதானம் வாங்குகிறவன் ஒரு நீதிமானாயிருக்க முடியாது. தேவனுடைய பார்வையில் அவன் ஒரு துன்மார்க்கனே! ‘இரத்தஞ்சிந்தும்படிக்கு மனுஷர் பரிதானம் வாங்குகிறார்கள்’ ‘எசே. 22:12. பரிதானம் வாங்குதல் ஏன் இரத்தஞ்சிந்துதலோடு அல்லது கொலைபாதகத்தோடு சம்பந்தப்படுத்திக் கூறப்பட்டுள்ளது? பரிதானம் வாங்குகிறவன் மிக மோசமான விதத்திலுள்ள கொலையைச் செய்கிறான் – அவன் தன் சொந்த ஆத்துமாவையே கொலை செய்கிறான். ‘மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?’ (மத். 16: 26 – Eng.). நீ பரிதானம் வாங்கு வதின் மூலம் நீயும் உன் குடும்பமும் நரக அக்கினிக்கு இழுத்துச் செல்லப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்பாயாக.

 

“பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்” (பிர. 7: 7) – இங்கு இருதயம் என்பது சுபாவத்தைக் குறிக்கிறது. ஊழல் மூலம் நீ பணம் சம்பாதிக்கும்போது, அதன் மூலம் உன்னுடைய சுபாவம் முற்றிலும் கெடுக்கப்படுகிறது என்பதை ஒருவேளை நீ உணரா திருக்கலாம்.

பரிதானமானது. ஒருவன் தன் அதிகாரத்தைத் துர்ப் பிரயோகம் செய்வதாயிருக்கிறது. வரதட்சிணையானது, ஒருவன் தன் விவாக உறவைத் துர்ப்பிரயோகம் செய்வதாயிருக்கிறது. இரண்டுமே பண ஆசையிலிருந்து வருபவையாகும். இவ்விரு விஷயங்களிலும் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டியது சரியான விதத்தில் கொடுக்கப்படாவிட்டால், அவை இரண்டுமே தேவ னுடைய நீதியுள்ள நியாயத்தீர்ப்பைச் சந்திக்கும். உன் கையின் பிரயாசத்தை நீ சாப்பிடுவது உனக்கு ஆசீர்வாதமாயிருக்க (சங். 128 : 2), பேராசையுள்ளவனாயிருந்து மற்றவர்களுடைய கை. யின் பிரயாசங்களைப் பலவந்தமாக அனுபவிக்க விரும்புவதோ சாபத்தையே வருவிக்கும். “இவர்களுக்கு ஐயோ! இவர்கள் … பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, .…. கெட்டுப்போனார்கள்” யூதா 11D என்றும், ‘பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள். செம்மையான வழியை விட்டுத் தப்பிநடந்து, அநீதத்தின் கூலியை விரும்பிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள் (II பேதுரு 2 : 14, 15) என்றும் எழுதப்பட்டுள்ளது. எனவே பலவந்தமாக வரதட்சிணை கேட்டு வாங்கியவர்கள், மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பி அத்தொகை யைத் திருப்பிக்கொடுத்தாலன்றி, தேவனுடைய பயங்கரமான நியாயத்தீர்ப்பினின்று அவர்கள் ஒருபோதும் தப்பிக்கொள்ள மாட்டார்கள்.

 

ஆங்கிலச் சொல்லகராதி (Webster’s II New Riverside) ‘பரிதானம்’ என்ற வார்த்தைக்குத் தரும் சொற்பொருள் விளக்கம், நம் மனதைப் பிரகாசிப்பிப்பதாயிருக்கிறது. அது அப்பதத்தை, ‘நம்பிக்கைக்குரியவராகக் கருதப்பட்டு உத்தரவாதமான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு நபரை ஆணாயினும், பெண்ணா யினும்) நேர்மையற்ற விதத்தில் செயல்படும்படி தூண்டும் படியாகப் பணமாகவோ, அன்பளிப்பாகவோ ஏதோ ஒன்றை அவருக்கு வழங்குதல் அல்லது கொடுத்தல்’ என்று வரையறுக் கிறது. பரிதானத்தை ஏற்றுக்கொள்ளுதல், நேர்மையற்ற விதத்தில் செயல்பட்டு நம்பிக்கைத்துரோகம் செய்வதற்காக ஒரு மெளன உடன்படிக்கை செய்வதாகும். வேறு வார்த்தைகளில் கூறின். பரிதானத்தை ஏற்றுக்கொள்கிறவன் ஒரு துரோகியாயிருக்கிறான். கர்த்தராகிய இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படியாகப் பிரதான ஆசாரியர் யூதாஸ்காரியோத்துக்குப் பரிதானம் கொடுத்தார்கள். தவறான வழியில் சம்பாதித்த அந்த ஆதாயத்தை அவன் அனுப விக்கக் கூடாதவனானது மாத்திரமல்ல. அவனுடைய மரண மும் பயங்கரமானதாயிருந்தது. மேலும் அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:20, சங்கீதம் 109: 6 – 16 ஆகிய வசனங்கள். அவ னுடைய வீட்டாருங்கூட பயங்கரமான சாபங்களை அடைந்தனர் என்றும், அவனுடைய துரோகத்தினிமித்தம் அவர்களுக்குங்கூட இரக்கம் கிடைக்கவில்லை என்றும் வெளிப்படுத்துகின்றன. பரிதா னம் வாங்குகிற ஒருவனுக்கும், கர்த்தராகிய இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காகப் பரிதானம் வாங்கிய யூதாஸ்காரியோத்துக்கும் இடையே யாதொரு வித்தியாசமும் இல்லை என்பது உண்மையி லேயே பயப்படத்தக்க உண்மையாயிருக்கிறது. அருமையான தேவ பிள்ளையே, உன் மீதோ, உனக்கு அருமையானவர்கள் மீதோ இச்சாபங்கள் வருவதற்கு நீ அனுமதியளிக்காதே. பெரும்பாலும் நீ தீரா நோய்களும், வியாதிகளும், பல்வேறு துக்ககரமான சம்பவங்க ளும் பரிதானம் வாங்குகிறவர்களின் குடும்பங்களை விட்டு ஒழிவ தில்லை என்பது யாவரும் அறிந்த ஓர் இரகசியமாகும்.

நீங்கள் கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் அவருடனே கூட நித்தியமாய் வாசம்பண்ணும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். யார் அதில் தங்குவான்? மற்ற சில தகுதிகளுடன்கூட, பரிதானத்தை ஏற்றுக்கொள்ளாதிருப்பவ னும் (சங். 15:5 – NIVI, கைகளில் சுத்தம் உள்ளவனுமே (சங். 24 : 3, 4) அப்பர்வதத்தில் தங்குவான். பரிதானம் உங்கள் கைகளைக் கறைப் படுத்தியிருக்கிறதா? நமக்கு உள்ளவைகளில் நாம் திருப்தியா யிருக்க வேண்டும். ‘உங்கள் ஜீவியங்களைப் பண ஆசைக்கு

விலக்கிக் காத்துக்கொண்டு,  உங்களுக்கு உள்ளவைகளில் திருப்தியாயிருங்கள். ஏனெனில் நான் உன்னைவிட்டு விலகுவது மில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று தேவன் சொல்வ யிருக்கிறாரே’ (எபி. 13: 5 – NIV). பரலோகத்தில் உங்களுக்குரிய இடத்தைப் ‘பரிதானம்’ திருடிக்கொள்ள நீங்கள் இடங்கொடுக்க. வேண்டாம்.

 

அன்பார்ந்த வாசகரே, நீர் ஒருவேளை இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்பு பரிதானம் வாங்கியிருந்தாலும் – அது சிறிய தொகையானாலும் பெரிய தொகையானாலும் – அதற்காக மனஸ்தாபப்பட்டு. மனந்திரும்பி அதைத் திரும்பக் கொடுத்துவிடுவீராக. ‘அதைப் பார்க்கிலும் அதிகமாக உமக்குக் கொடுக்கக் கர்த்தரால் கூடும்’ (II நாளா. 25:9). நீர் அப்படிச் செய்தால், தேவன் சகல சாபங்களையும் உம்மையும் உம்முடைய குடும்பத்தையும் விட்டு அகற்றுவது மாத்திரமல்ல, உம் மனச்சாட்சி யுங்கூட குற்றவுணர்வுக்கும், இனி வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்த பயத்திற்கும் நீங்கலாயிருக்கும். தேவன் உம் முடிவைப் பூரண சமாதானத்தால் நிரப்பப்பட்டதாகப் பெரும் ஆசிர்வாத மாக்குவார். நீர் பரிதானமாக வாங்கியிருக்கும் தொகையை, சம்பந்தப்பட்ட நபருக்குத் திரும்பச் செலுத்துவது பற்றி ஏதேனும் சந்தேகங்கள் உமக்கு இருக்குமாயின், இன்னும் அதிகப்படியான ஆலோசனைக்குத் தயவுசெய்து உம் சபைப் போதகரை அணுகு வீராக. தேவன் தாமே உம் மனக்கண்களைத் திறந்தருளுவாராக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *