இந்தியக் கிறிஸ்தவ வரலாறு 2

இந்தியக் கிறிஸ்தவ வரலாறு 2

குடியேற்ற ஆதிக்கத்திற்கும் அருள்பணிக்கும் அல்லது அரசுக்கும் திருச்சபைக்கும் இடையேயான உறவு

குடியேற்ற ஆதிக்கம் என்ற உருத்தமைவு. காத்தால் மிகவும் பழமையானது. எனினும் நவீன காலத்தில் மேற்கத்தியக் கிறிஸ்தவ நாடுகள் உலக அளவில் விரி வடைவதற்கு குடியேற்ற ஆரிக்கக் கருத்தமைவு நெருக்கமான தொடர்பு உடைய தாகும். எனவே “நவீன கால் அருள்பணிகள் நவீன மேற்கத்திய குடியேற்ற ஆதிக்கக் கொள்கையின் சூழலில் தோன்றியவை” என்று டேவிட் பாஷ் கூறுகிறார்.’ இந்தியா விலே போர்த்துக்கீரியரும், டச்சுக்காரரும், டேனிஷ் / டென்மார்க் நாட்டினரும், பிரித்தானியரும், குடியேற்ற ஆதிக்கம் செலுத்திய காலத்தே திருச்சபைக்கும், அரசுக்கும் அல்லது குடியேற்ற ஆதிக்கத்திற்கும் இந்திய அருள்பணிக்கும் இடையே இருந்த உறவினை வரலாற்று வழி அணுகிட இக்கட்டுரை முயல்கிறது.

போர்த்துக்கீசியர்:

போர்த்துக்கல்லின் இளவரசர், மாலுமி ஹென்றி (Henry the Navigator 1394-1460) என்பவர் காலத்தில் போர்த்துக்கல் பசு இடங்களுக்கும் கடர் பயணங்களை மேற் மொண்டது. போர்த்துக்கல் உரோமன் கத்தோலிக்கந்திருச்சபை மரடைப் பின்பற்றிய காரணத்தால் அதன் கடற்பயண முயற்சிகளுக்குப் போப்பிள் நல்லாசி இருந்தது. விரைவில் ஸ்பானியரும் புதிய இடங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்கு உற்சாக மளித்தனர். துணிகரச்செயல் செய்யும் நோக்கு இப்பயணங்களில் இருப்பினும், திருச்சபை விரிவாக்கம், புதியன காணும் ஆர்வம். வணிகம். நாடுகளை வெல்லுதல். குடியேற்றம் அமைத்தல், மதமாற்றம் என்பவை அவற்றின் கலவை நோக்கங் களாகத் திகழ்ந்தன. கி.பி.1453இல் துருக்கியர் கான்ஸ்டான்டினோபிலைக் கைப்பற்றினர். இதனால் இந்தியாவுடன் நடைபெற்று வந்த நிலவழி வணிகம் அடைபட்டது. எனவே இந்தியாவிற்கும் அதனைக் கடந்த நாடுகளுக்கும் கடல் வழியை முனைப்புடன் கண்டுபிடிக்கவேண்டிய உடனடித்தேவை போர்த்துக்கல்லுக்கும், ஸ்பெயினுக்கும் ஏற்பட்டது.

உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப்பு மூன்றாம் காலிஸ்டஸ் (Pope Callistus III கி.பி.1456இல் ஆணை (Bull)” ஒன்றைப் பிறப் பித்தார். இதன்படி, புதிதாகக் ‘கண்டுபிடித்த’, ‘கண்டுபிடிக்க இருக்கும்* நிலப்பகுதிகளை ஆளவும், வணிகம் செய்யவும் ஒரு தனி முதன்மை உரிமையைப் போர்த்துக்கலுக்கு வழங்கினார். உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையைப் பின்பற்றிய ஸ்பெயினும் இந்தகைய தனி உரிமையைப் பெற்றது. போப்புளின் ஆணையைப் பெற்ற இரண்டு நாட்டு அரசர்களும் அதற்குப் பிரதி உபகாரமாகத் தங்கள் வசம் கொணர்ந்த நாடுகளுக்கு அருள்செய்திப் பணியாளர்களை அனுப்பவும், ஆதரிக்கவும், திருச்சபை களையும், வழிபடுமனைகளையும், துறவியர் மடங்களையும் அமைக்கவும் பொறுப் பேற்கக் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இத்தகைய ஆதரவு உரிமையை ‘பத்றோவாதோ’ {Padroado) அல்லது பேற்றோனாடோ ‘ (Patronato) என அழைப்பர் எனவே போர்த்துக்கஸ், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாட்டு அரசர்களும் குடியேற்ற ஆதிக்கம் செய்த அதே வேளையில் அருள்பணியும் செய்தனர். போப்புவின் ஆணையைக் கருத்தில் கொண்டு போர்த்துக்கல் அல்லது எம்பெயின் நாட்டின் துறைமுகங்களிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு கப்பனும், வணிகரை மட்டுமின்றி போர்வீரரையும், துறவியரையும் மைந்துச் சென்றது.

மிக விரைவில் போர்த்துக்கல்லுக்கும். ஸ்யயினுக்கும் இடையே கசப்பான போட்டி உண்டானது, அதனைத் தணிக்க போப்பு ஆறாம் அலைக்சாண்டர் புகழ் பெற்ற ஆணையொன்றைக் கி.பி.1493இல் பிறப்பித்தார். அதன்படி இவ்வுலகை இரண்டாகப் பகுத்தார். அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குக் கடற்கரைப் பகுதியை ஸ்பெயின் நாட்டுக்கும், கிழக்குக் கடற்கரைப் பகுதியையும், அதைத் தாண்டிய பகுதி களையும் போர்த்துக்கல் நாட்டுக்கும் வழங்கினார். அத்துடன், “அந்நிலப்பகுதி களிலும், தீவுகளிலும் வாழும் மக்களுக்குக் கத்தோலிக்கத் திருச்சபையின் பற்றுறு தியையும், நல் அறங்களையும் போதிக்கூகூடிய கடவுள் பயம் உடைய நன்கு சுற்ற, நல்ல பணியாளர்களை அனுப்பு” போப்பு ஆணையிட்டார்.”

இம்மன்னரிடமிருந்து உரிமம் பெறாமல் அவர்கள் வசம் உள்ள பகுதிகளுக்குள் வேற்று நாட்டினர் நுழைதல் கூடாது என்றும் போப்புவின் அந்த ஆணை தடைவிதித்தது, கி.பி.1498 மே நீங்கள் 17ஆம் நாள் கள்ளிக்கோட்டைக்கு அருகே வாஸ்கோட்ட காமா (Vasco da Gama) என்ற போர்த்துகீரிய மாலுமி கரையிறங்கினார். மேற் கூறப்பட்டற்ைறின் அடிப்படையிலேயே அவர் வருகையை நாம் கணிக்க வேண்டும். இந்தியாவிற்கு அவர் வந்ததின் நோக்கம் வணிகமே என்றாலும், அருள்பணி செய்தல் / நற்செய்தியைப் பரப்புதல் என்பது மறைவான திட்டமாக இருந்தது. விரைவில் இந்தியாவின் மேற்குக் கரையோரப்பருதியில் போர்த்துக்கீசிய வணிக மையங்கள் ஏற்பட்டன.

குறிக்கோளோடு கூடிய போர்த்துக்கீசியரின் இரண்டாம் கட்டத் நுணிகர இயக்கம் பெட்ரோ ஆஸ்வாரஸ் கப்ரால் (Pedro Alvasreu Cabral) என்பவரின் கீழ் நடைபெற்றது. இவர் கி.பி.1500 செப்டம்பர் திங்கள் 13ஆம் நாள் கள்ளிக் கோட்டை/கோழிக்கோடு வந்து சேர்ந்தார். கொச்சி நோக்கி நகர்ந்த போர்த்துக்கீசியர் அப்பகுதியை உகந்ததாகக் கண்டனர். அங்கு அவர்களுக்கு மபைார் சீரிய கிறிஸ்தவருடனும் தொடர்பு ஏற்பட்டது.

கி.பி.1509இல் அ.ஃபோன்சோடேஆம்புகர்க் (Alloriso de Albuquerqus) என்பவர் ஐரோப்பாவிற்குக் கிழக்கே உள்ள போர்த்துக்கீசிய குடியேற்றங்களுக்கு இரண்டாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் போர்த்து கீசிய எல்லையை விரிவுபடுத்தவும். புதிய குடியேற்றங்களை ஏற்படுத்தயும் விரும் பினார், சி.பி.1510இல் பீஜாப்பூர் ஈஸ்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றினார். கி.பி.1511இல் மலேயா தீபகற்பத்தின் மலாக்கா என்னுமிடம் போர்த்துக்கீசியர் கீழ் வந்தது.

போர்த்துக்கீசிய ஆளுகையின் தலைமை இடமாகவும் நிர்வாக மைய மாகவும் கோவாவை ஏற்படுத்தினர். ஆசியாவில் இருந்த அனைத்துப் போர்த்துக் ரீசிய குடியேற்றப் பகுதிகளுக்கும் கோவாவே தலைமை இடமாக ஆனது.

போப்புவின் ஆனைக்குக் கீழ்படிந்த போர்த்துக்கீசிய குடியேற்ற ஆட்சியாளர்கள் இந்தியாவில் தங்கள் கீழ் இருந்த பகுதிகளில் கிறிஸ்தவத்தைப் பரப்ப பல்வேறு முறைகளைப் பின்பற்றினர்.

அஃபோன்சோ டே ஆல்புகர்க் கலப்புத் திருமணங்களை ஊக்குவித்தார். கோயாவில் தன் கீழ் இருந்த வணிகரையும், போர்வீரரையும் இந்தியப் பெண்களை மணந்து கொள்ளக் கேட்டுக்கொண்டார். போர்த்துக்கல் அரசுக்கு விசுவாசமிக்க, ஆதரவான கிறிஸ்தவ சமுதாயத்தை ஏற்படுத்தவே இவ்வாறு கூறினார். இந்தோ போர்த்துக்கீசிய சமுதாயம் இந்தியாவில் உருவாக இதுவே மூலக்காரணமாகும். கோவாவிலிருந்த போர்த்துக்கீரிய நிர்வாகம் கிறிஸ்தவருக்கு மட்டுமே வேலை வாய்ப்பளிந்தது. அரசாங்க அலுவலராகக் கிறிஸ்தவர் மட்டுமே பணி செய்ய முடியும் என்ற விதியையும் வகுத்தது. எனவே போர்த்துக்கீசிய எல்லைக்குள் வாழ்ந்த இந்தியரில் சிலர் அரசு வேலை வேண்டிக் கிறிஸ்தவராயிளர். நேரடியாக நற்செய் தியைப் பறைசாற்றுதலின் வழியேயும் கிறிஸ்தவம் பெருகியது. அதே வேளையில் கட்டாய மதமாற்றமும் நிகழாமவில்லை. போர்த்துக்கீசிய அரசாங்கம் தன் எல்லைக் குள் இந்துக்களும், இசுலாமியரும் பொதுவழிபாட்டில் ஈடுபடுவதைத் தடைசெய்தது. மேலும் கிறிஸ்தவருக்கு மட்டுமே நிலங்களையும், பிற உடைமைகளையும் சொந்தமாக வைத்திருக்கும் உரிமையை அளித்தது. மற்றவர்கள். ஒன்று கிறிஸ்த வத்தைத் தழுவ வேண்டும் அல்லது போர்த்துக்கீசிய எல்லையை விட்டு அகல வேண்டுமென்றும் அறிவித்தது.

பாரம்பரிய குடும்பச் சொத்துகளை வைத்திருந்தோர் இடம் பெயர்வதை விட கிறிஸ்தவத்தைத் தழுவுவது நல்லது என்று கருதி கிறிஸ்த வராயினர். வேறு சிலர் போர்த்துக்கீசியப் படைகளின் பாதுகாவலை நாடியும் கிறிஸ்த வராயினர். இதற்கு எடுத்துக்காட்டாக, கன்னியாகுமரிக்கும் தூத்துக்குடிக்கும் இடையே தென் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் முத்துக்குளிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பரவர் இன மக்களைக் கூறலாம். இம்மக்கள் அராபிய வணிகரின் தொடர்ந்த தொல்லைகளுக்கும், இடையூறுகளுக்கும் ஆளாகி வந்தனர். அதனால் போர்த்துக்கீசியரின் பாதுகாவலை நாடினர். அதற்காகக் கிறிஸ்தவராகவும் ஆயத்தமாயிருந்தனர்.

எனவே போர்த்துக்கீசியர் கி.பி.1535க்கும் 1537க்கும் இடைப்பட்டக் காலத்தில்

அச்சமுதாயத்தினர் அனைவருக்கும் திருமுழுக்களித்தனர். திருமுழுக்குப் பெற்றோரின் எண்ணிக்கை சற்றேறக்குறைய இருபதாயிரம் எனலாம்.

கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதில் போர்த்துக்கீசிய மன்னருக்கு இருந்த உற் சாகத்தைக் கண்ட போப்பு பத்தாவது லியோ கி.பி.1514இல் மற்றுமோர் ஆணையைப் பிறப்பித்தார். அந்த ஆணை போர்த்துக்கீசிய அரசருக்கும், அவரைப் பின்பற்றி வரும் ஆட்சியாளர்களுக்கும் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் வெற்றிக் கொள்ளப்பட்ட இடங்களிலும், வெற்றிக்கொள்ள இருக்கின்ற இடங்களிலும், திருச்சபையின் அதிகாரிகளை நியமிக்கும் உரிமையை வழங்கியது. இவ்விதம் ‘பத்றோவாதோ ‘ உரிமை எழும்பியது. பேராயர் பதவிக்கும், திருச்சபையின் பிற அலுவல்களுக்கும் உரிய நபர்களை முன்மொழியும் உரிமையைப் போர்த்துக்கீசிய அரசர் பெற்றார்.” இதற்குக் கைமாறாகப் போர்த்துக்கீசிய மன்னர் தன் ஆட்சிக்குட்பட்ட இடங்களில் திருச்சபை பணியாளர்களை நியமிக்கவும், வழிபடுமனைகளைக் கட்டி, அதன் தேவைகளைச் சந்திக்கவும், கிறிஸ்தவரானோரின் தேவைகளைச் சந்திக்கவும் எதிர்பார்க்கப்பட்டார்.

கி.பி.1534இல் போப்பு மூன்றாம் பவுல் கோவா பேராயத்தை நிறுவினார். கோவா பேராயர் அதன் மூலம் இந்தியாவிலும், இந்தியாவிற்குக் கிழக்கே இருந்த நாடுகளிலும் இருந்த உரோமன் கத்தோலிக்கத் திருச்சபைகளின் தலைவரானார். மேற்கூறியவற்றால் உரோமைத் திருச்சபைக்கும், போர்த்துக்கல் அரசுக்கும், குடியேற்றவாதிகளுக்கும் அருள்பணிக்கும் இடையேயான நெருங்கிய உறவை அறிந்துகொள்ளலாம்.

சீர்திருத்தத் திருச்சபையினர்:

சி.பி.பெர்த் என்பார், “இந்நாட்டில் சீர்திருத்தத் திருச்சபையின் அருள்பணியர் கொடியைப் பின்பற்றி வந்தனர் என்பது உண்மையே – தரங்கம்பாடியில் டென்மார்க்கு நாட்டுக் கொடியையும், பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியரின் இடங்களில் இருந்த ‘ஆங்கில அருள்பணிகளும்’ (English Missions), பத்தொன்ப தாம் நூற்றாண்டின் அருள்பணியரின் விரிவாக்கமும் பிரித்தானியரின் கொடியை யும் பின்பற்றி வந்தன.”5 இக்கூற்று உண்மையானதுதானா?

இந்தியாவில் காலடிவைத்த சீர்திருத்தத் சபையினரின் முதல் வணிக நிறுவனம் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனிதான். அது கி.பி.1600இல் தன் வணிக நடவடிக்கையைத் தொடங்கியது. அதன் சமயக் கொள்கையையோ, அல்லது அருள்பணி விரிவாக்கம் குறித்த மனோபாவத்தையோ நோக்குமுன் டச்சு, டேனிஷ் வணிக கம்பெனிகளின் மனோபாவத்தைக் காண்போம்.

(அ) ஆலந்து நாட்டினர் / டச்சுக்காரர்:

டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் ஏனைய வணிக அமைப்புகளைப் போன்றே வணிகம் ஒன்றே அதன் தலையாய இலக்கு. கி.பி.1663இல் டச்சுக்காரர் கொச் சியைப் போர்த்துக்கீசியரிடமிருந்து கைப்பற்றி, அவர்களின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தனர். நெதர்லாந்திலிருந்து / ஹாலந்திலிருந்து வந்த சீர்திருத்த சபை யினராக இருந்த காரணத்தினால், ஆயர்கள் உட்பட்ட அனைத்து போர்த்துக்கீசி யரையும் தாம் கைப்பற்றிய எல்லைகளிலிருந்து வெளியேற்றுவதை நோக்க மாகக் கொண்டிருந்தனர். கிறிஸ்தவ சபை விரிவாக்கம் குறித்து அவர்களுக்கு ஆர்வம் இருந்ததில்லை. என்றாலும், உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை விரும்பாத காரணத்தினால் அதன் சுவடு கூடத் தெரியாதவாறு அகற்றிடத் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்தனர்.

கொச்சிக்கு, டச்சுக்காரரின் வருகை மலபார் சீரிய கிறிஸ்தவருக்கு நன்மை தருவதாக இருந்தது. ஏனெனில் அவர்கள் உதயம்பேரூர் மன்றத் தீர்மானங்களைத் தங்கள் மேல் திணித்திருந்த பேராயர் அலெக்சிஸ் டே மெனிசிசின் உரோமன் கத்தோலிக்கக் எனவேகட்டுப்பாட்டை / நுகத்தைத் தகர்க்க விரும்பியிருந்தனர். டச்சுக்காரரின் வருகையினால் மலபார் கிறிஸ்தவர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். கொச்சிக் கோட்டையினுள்ளும், நாகப்பட்டிணத்திலும், தூத்துக்குடியிலும் போர்த்துக்கீசியர் கட்டியிருந்த வழிபடுமனைகளைத் சீர்திருத்தத் திருச்சபையின் வழிபடுமனைகளாக மாற்றினர். கொச்சி வழிபடுமனையில்தான் வாஸ்கோ ட காமாவின் உடலை முதலில் புதைத்திருந் தனர். உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை அகற்ற எடுத்த முயற்சிகள் தவிர சீர்திருத்தத் திருச்சபையைத் தங்கள் எல்கைகளில் நிறுவ எம்முயற்சியையும் எடுக்கவில்லை.

அவர்களிடம் இராணுவ குருமார்கள் இருந்தபோதிலும் நற்செய்தியைப் பரப்பும் முயற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை. கி.பி.1795இல் பிரித்தானியர் கொச்சியைத் தம் வசம் ஆக்கும்வரை அது டச்சுக்காரரிடமே இருந்தது. “

(ஆ) டென்மார்க்கு நாட்டினர் / டேனிஷ் :

டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் இரண்டு இடங்களில் தன் வியா பாரத்தலத்தை அமைத்திருந்தது: கி.பி.1620இல் தரங்கம்பாடியிலும் கி.பி.1676இல் செராம்பூரிலும் அவை நடைபெற்றன. டச்சு கம்பெனியைப் போலவே டென்மார்க் கம்பெனியும் வணிகத்தையேத் தன் தலையாயப் பணியாகக் கருதியது. டேனிஷ் மக்கள் லூத்தரன் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். என்றாலும் தங்கள் கிறிஸ்தவப் பற்றுறுதியைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டிடவில்லை.

நற்செய்திப் பணியாளர்கள் தங்களின் வணிகத்துக்கு இடையூறாக இருப்பர் என்று அஞ்சியதால் தமது எல்லைக்குள் அவர்களை அனுமதித்திட மறுத்தனர். லூத்தரன் திருச்சபையைச் சேர்ந்த டென்மார்க்கின் மன்னர் நான்காம் பிரடெரிக் புராட்டஸ்டென்ட் திருச்சபை அருள்பணியரை இந்தியாவிற்கு அனுப்ப எண்ணங் கொண்டார். பர்த்தொலோமேயு சீகன்பால்க், ஹென்றி புளுட்சோ என்கிற இரண்டு ஜெர்மன் லூத்தரன் வாலிபர்களை அருள்பணியராகத் தெரிவுசெய்து, தரங்கம்பாடிக்கு ‘அரசரின் அருள்பணியராக’ அனுப்பினார். அவர்கள் இருவரும் கி.பி.1706 சூலை திங்கள் 9ஆம் நாள் தரங்கம்பாடியை வந்தடைந்தனர்.

அரசரின் அருள்பணியராகத் தரங்கம்பாடிக்கு அவர்கள் வந்தபோதும் கப்பலிலிருந்து வெளியே வரவோ, கரையை வந்தடையவோ எவ்வித வசதியையோ, உதவியையோ எவரும் செய்து தரவில்லை. ஓரிரு நாட்கள் கப்பலிலேயே காத்திருந்தபின், தரங்கம்பாடியிலிருந்த டென்மார்க்கு ஆளுநர் ஜெ.சி. ஹேசியஸ், அருள்பணியர் கப்பலிலிருந்து இறங்கவும், கரைசேரவும் வேண்டா வெறுப்பாக அனுமதி வழங்கினார். அவர் அருள்பணியரிடமும், அவர்களின் பணிகளைக் குறித்தும் பகைமை உணர்வுடன் நடந்து கொண்டார். கி.பி.1708 நவம்பர் திங்களில் அவர் சீகன்பால்குவைக் கைதுசெய்து, நான்கு மாதங்கள் தனிமைச் சிறையில் அடைத்தார்.11 அருள்பணி வாரியம் ஒன்றினை டென்மார்க்கின் அரசர் கி.பி.1714இல் நிறுவினார்.

கோபன்ஹாகனில் இருந்த இந்த வாரியமும் தரங்கம்பாடி அருள்பணியரின் தொடக்க கால அருள்பணிக்குப் பேருதவியாக இல்லை. டென்மார்க்கின் வணிக கம்பெனிக்கும் தரங்கம்பாடி / தரங்கை அருள்பணியருக்கும் இடையேயான உறவும் கி.பி.1719 பெப்ருவரித் திங்களில் சீகன்பால்கு இறந்தபின் செம்மையுற்றது.

கி.பி.1750இல் கிறிஸ்டியன் பிரடெரிக் சுவாட்ஸ் தரங்கம்பாடி வந்து சேர்ந்தார். அவருக்கும் வணிக கம்பெனி அரசுகளுக்கும் இடையே நல்லுறவு இருந்தது. கி.பி.1742 முதல் 1788 வரை இந்தியாவில் திருப்பணியாற்றிய பிலிப்பு பெர்ரீசி யசும் நல்லுறவுடனேயே திருப்பணியாற்றினார். இவர் பெரிதும் சென்னை யிலேயே திருப்பணியாற்றினார். பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியுடன் நல்லுறவு கொண்டிருந்த காரணத்தினால், அதன் அதிகாரிகள் பல்வேறு வகையில் அவரின் அருள்பணிக்கு உதவினர்.

இக்காலக்கட்டத்தில் இலண்டனி லிருந்த கிறிஸ்தவக் கல்வியை விருத்தி செய்வதற்கான கழகம் (எஸ்.பி.சி.கே) சென்னையில் பணியாற்றிய ஜெர்மன் லூத்தரன் அருள்பணியரை ஆதரித்தது. இவ்விதம் “ஆங்கில அருள்பணி” (English Mission) என்பது உருவானது.’ கி.பி.1767இல் எஸ்.பி.சி.கே. சுவாட்சைத் தன் திருப்பணியாளராகத் தத்தெடுத்தது. 12 இதனால் இவர் முன்னர் திருச்சிராப்பள்ளியிலும், பின்னர் தஞ்சாவூரிலும் பணி யாற்றினார்.

பிரித்தானிய வணிகக் கம்பெனியின் படைப்பிரிவுடன் இராமநாத புரத்துக்கும், பாளையங்கோட்டைக்கும் பயணித்தார். அங்கெல்லாம் புராட்டஸ்டென்ட் திருச்சபைகளை உருவக்கினார், பிரித்தாளியக் கிழக்கிந்தியக் கம்பனி சுவாட்சின் பணிகளை அரசியலிலும் பயன்படுத்திக்கொண்டது. கி.பி.1779இல் மைசூரின் அரசர் றைஹதர் அவி பிரித்தானியரின் எதிரியான பிரெஞ்சுக்காரருடன் உடன்பாடு செய்துகொண்டு, பிரித்தானியருடன் போர் தொடுக்கப்போவதாகச் செய்தி கிடைத்தது. எனவே அவர்கள் அமைதிக்குழ ஒன்றை ஹைதர் அலியிடம் அனுப்ப விரும்பினர். சுவாட்சை அக்குழுவில் இடம்பெறக் கேட்டனர், ரைநாதர் அலியுடன் சீரங்கப்பட்டனத்தில் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும், அது தோல்வியில் முடிந்தது, பிரித்தானியர் விரும்பிய அமைதி ஏற்படவில்லை.” அதன் பின்னர் தஞ்சாவூர் அரசரின் நிர்வாகத்தில் குழப்பமும், சீர்கேடும் ஏற்பட்ட போது, பிரித்தானியர் சுவாட்சையே தஞ்சாவூர் அரசின் நிர்லாக அதிகாரியாக அமர்த்தினர்.

பிரிந்தாளிய வணிகக் குழுவுடன் சுவாட்ஸ் வைத்திருந்த இத்தகைய ‘கிடறவு அவறாடைய அருள்பணிக்கு உதவியது. அவ்வணிகக்குழு அதிகாரப்பூர்வமாக ‘கிறிஸ்தவ நற்செய்தி விரிவாக்கப்பணிக்கு உதவும் எண்னாத்தில் இல்லை என் றாலும், தன்னுடைய நன்மையைக் கருதி சுவாட்சுக்கு உதவியது.

தென்னிந்தியாவில் பணியாற்றிய ஜெர்மன் தூத்தரன் அருள்பணியரை அவ்வணிகக்குழு கனிவுடன் நடத்தியது. எடுத்துக்காட்டு: ஸ்வீடன் நாட்டு அருள்தொண்டர் ஜான் கீர்ணாண்டர்.

சுவாட்சின் பணியைப் பாராட்டிய, அவர் மேல் நன்மதிப்பும், மரியாதையும் வைத் திருந்த டேனிஷ் வணிகக் குழுவின் அதிகாரிகளுள் ஒருவர் கர்ளல் பீ (Calonel Bin ) ஆவார். எனவே அவர் அருள்தொண்டரின் ஆதரவாளர் ஆனார். செராம்பூரில் அவர் ஆளுநராக இருந்தபோது, பிரித்தானிய வணிகக் குழுவினால் கல்கத்தாவில் கி.பி. 1799இல் கரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட, பிரித்தானிய பாப்திஸ்து அருள்தொண்டர் ஜாசுவா மார்ஷ்மென், வில்லியம் வார்ட் அன்னோர் குழுவினருக்கு செராம்பூரில் கரையிறங்கவும். நங்கவும் அனுமதி வழங்கிய துடன், அவர்களுக்குப், பாதுகாவலும் அளிக்க முன்வந்தார், அவர்களை வரவேற் கவும் செய்நார்.

தன்னுடைய செயலுக்கு சுவாட்சின்மீதும், அவர் அருள்பணி மீதும் தனக்கிருந்த நன்மதிப்பே காரணம் என அவர் விவரித்ததாகக் கூறப்படு கிறது. கர்ணல் பீயுடைய இசைவுடன் பிரித்தாளிய பாப்திஸ்து அருள்தொண்டர்கள் வில்லியம் கேரியைச் செராம்பூரில் தம்முடன் இருக்குமாறு அழைத்துக்கொன் டனர். இவ்வாறாகத்தான் செராம்பூர் அருன்பணி தொடங்கப்பட்டது. கர்னல் பீ செராம்பூரில் இல்லாமல் இருந்திருந்தால் பிரித்தானிய பாப்திஸ்து அருள்தொண் டர்கள் தாங்கள் வந்த நோக்கத்தை நிறைவேற்றியிருக்க முடியாது என உறும் யாகக் கூறலாம் அதிகாரப்பூர்வமாக டேனிஷ் வணிகக் குழு நற்செய்திப்பணிக்கு ஆதரவு வழங்கிடவில்லை எனினும், அதிலிருந்த கானல் பீபோன்ற அதிகாரிகள் அதற்கு ஆதரவு தந்தனர் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

(இ) பிரித்தானியர்:

பிரித்தானிய கிழக்கிந்திய வணிகக் கம்பெனி (பி.கி.வ.தி ஒரு தனியார் வணிகக் குழு ஆகும். பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அது இந்தியா வுடன் வணிக உறவில் இருந்தது. இங்கிலாந்து பாராளுமன்றம் வழங்கிய தனி உரிமைப்பத்திரத்தின் கீழ் (சாசனம்) அமைந்த வணிக நிறுவனம் அது. அந்த தனி உரிமைப் பத்திரம் இருபது ஆண்டுகளுக்கொருமுறை புதுப்பிக்கப்படவேண்டும். பி.கி.உ.க. இந்தியாவில் வணிகம் செய்ய முழுமுதல் உரிமையைப் பெற்றிருந்தது. இதனை ஆட்சிக்குழு உறுப்பினர் கொண்ட வாரியம் ஆளுகை செய்தது. இலாபம் ஈட்டுவது ஒன்றே இதள் தலையாய நோக்கமாக இருந்த காரணத்தினால், குறைந் தது அதள் தொடக்கக் காலத்தில், தன் ஆளுகையின் கீழ் இருந்த இடங்களில் கிறிஸ்தவ அருள்பணியர் பணி செய்வதைத் தடை செய்திருந்தது.

அருள்பணியர் தமது கிறிஸ்தவ நற்செய்திப் பரப்பு செயல்கள் மூலம் தங்களின் வணிக நோக்கங்களுக்கு இடையூறாக இருப்பர் என்று அங்கம்பெனியின் அதிகாரிகள் அஞ்சினர்.

பி.கி.வ.க. தன் தொடக்க காலத்தில் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் தன் வணிக மையங்களை வைத்திருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல, வணிக ஒப்பந்தங்கள், அமைதி உடன்படிக்கைகள், நிலப்பகுதிகளைத் தங்கள் ஆளுகையின் கீழ் கொணர்தல் போன்றவற்றின் வழி தன் எல்லையை விரிவுப்படுத்தியது. கி.பி.1757இல் நடைப்பெற்ற பிளாசி போரின் விளைவாக பி.கி.வ.க. தன் ஆட்சியை இந்தியாவில் நிறுவியது. கல்கத்தாவைத் தன் ஆட்சியின் தலைமையிடமாக வைத்துக்கொண்டது. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்குள் பி.கி.வ.க.யின் ஆட்சி, வங்காளம், சென்னை, பம்பாய் ஆகிய மூன்று மாநிலங்களில் உறுதியாக நிறுவப்பட்டது. வணிக நிறுவனமாக வந்த பி.கி.வ.கம்பெனி குடியேற்ற அரசாக மாறியது.

தன் ஆட்சிக்குட்பட்ட எல்லைகளைக் காக்க பி.கி.வ.கம்பெனி படைகளை வைத்திருந்தது. இந்தியாவில் இருந்த பிரித்தானிய வணிக சமுதாயத்தினருக் கும், படைவீரர்களுக்கும் ஆன்மிகப்பணி ஆற்ற இராணுவ ஆயர்கள் (Military Chaplains ) இருந்தனர். இவர்களை பி.கி.வ.கம்பெனியே பணியில் அமர்த்தியது / பணிக்குத் தெரிவுசெய்தது. எனினும் அத்தகையோர் இங்கிலாந்து / ஆங்கிலிக் கன் திருச்சபையினால் அருள்பொழிவு பெற்றோராகவே இருந்தனர். அத்தகைய இராணுவ ஆயர்கள் இந்தியாவில் இருந்த பிரித்தானிய சமுதாயத்தினரிடமும், பிரித்தானிய அதிகாரிகளின் இல்லங்களில் சமையல் வேலை, தோட்ட வேலை போன்றப் பணிகளைச் செய்த இந்தியரிடத்தும் மட்டுமே தம் பணியைச் செய்ய வரையறுத்திருந்தனர்.

கி.பி.1698இல் பி.கி.வ.கம்பெனி வெளியிட்ட சாசனத்தின் படி இராணுவ ஆயர்கள் “இந்தியா வந்த ஓராண்டுக்குள் போர்த்துக்கீசிய மொழியைக் கற்றிருக்கவேண்டும். எங்கு தங்கி இருக்கின்றனரோ அப்பகுதியின் மொழியைக் கற்பதில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இதன் நோக்கம் என்னவெனில், கம்பெனியின் அல்லது அதன் உயர் அதிகாரிகளின் பணியாளர் கள் அல்லது அடிமைகளுக்கு புராட்டஸ்டென்ட் சமயத்தைப் போதிக்க வேண்டும் என்பதே…” என்றாலும் இந்த நிபந்தனை ஒருபோதும்நிறைவேற்றப்படவில்லை.

பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து பிரிட்டன் பல மாற்றங்களைச் சந்தித்தது. அவைகளிலொன்று கிறிஸ்தவ சமுதாயத்திலே ஏற்பட்ட எழுச்சியாகும். பிரிட்டனின் அனைத்துப் பகுதிகளிலும் கிறிஸ்தவ சமய புத்தெழுச்சி ஏற்பட்டது. ஜான் வெஸ்லி, சார்ல்ஸ் வெஸ்லி, ஜார்ஜ் ஒயிட்பீல்ட் போன்றோர் அக்காலத்தில் செயல்பட்ட சமயப்பரப்பாளர்கள். இதனால் இவ்வேளையில் நற்செய்திப்பணியின் மேல் ஆர்வம் வளர்ந்தது. ‘இவாஞ்சலிக்கல்’ என்றழைக்கப்பட்ட ஒரு குழுவினர் அருள்பணியின் அவசியத்திற்கு முன்நின்று ஊக்கமளித்தனர்.

அவர்களின் கவனம் இந்தியாவின் மீது திரும்பியது. அக்காலக்கட்டத்தில் இந்தியாவில் இராணுவ ஆயராகப் பணியாற்றிய சிலர், குறிப்பாக டேவிட் பிரௌன், அத்தகைய ஆர் வத்தைத் தூண்டக் கருவிகளாயிருந்தனர். அச்சூழலில் கி.பி.1793இல் பி.கி.வ. கம்பெனியின் தனியுரிமை சாசனம் புதுப்பித்தலுக்கு மக்களவைக்கு வந்தது. இவாஞ்சலிக்கல் குழுவினைச் சேர்ந்தவரும், கிளாப்ஹாம் என்னுமிடத்திலிருந்த கிறிஸ்தவக் குழுவின் அங்கத்தினரும், பிரித்தானியப் பாராளுமன்றத்தின் அங்கத்தினருமான வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவர் கம்பெனியின் சாசனத் தில் பின்வரும் விதிப்பிரிவைச் சேர்த்திட நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

“இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் பகுதிகளில் வசிக்கும் குடிமக்களின் உற் சாகத்தையும் மகிழ்ச்சியையும் விரிவாக்கம் செய்ய நேர்மையான, விவேகமான வழிமுறைகளை ஊக்குவிப்பது பிரித்தானிய சட்டமன்றத்தின் சிறப்பான, கட்டுப் பாட்டுக் கடமையாகும். அம்மக்களின் (இந்தியரின்) சமய, அற வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவும், அவர்கள், படிப்படியாக பயனுள்ள அறிவாற்றலில் முன்னேறவும் ஏற்ற நடவடிக்கைகளை இம்மன்றம் எடுக்கவேண்டும். இத்தகைய குறிக்கோளை நிறைவேற்றக்கூடிய, பயிற்சி பெற்ற, பொருத்தமான நபர்களைப் பள்ளி ஆசிரியர்களாக அல்லது நற்செய்திப்பணியாளர்களாக அல்லது பிறவகைப் பணியாளர்களாகப் பணியாற்ற, தேவைக்கேற்ப அவ்வப்பொழுது தெரிவுசெய்து, அனுப்பிவைக்க கம்பெனியின் இயக்குநர்களுக்கு அதிகாரமும், ஆணையும் அளிப்பது எனத் தீர்மானிப்போம் ஆனால் பிரித்தானிய நாடாளு மன்றம் அதனை ஏற்காத காரணத்தினால், வில்லியம் வில்பர்போர்சின் சாசனத் திருத்த ஆலோசனை தோல்வியுற்றது; எனவே பி.கி.வ.கம்பெனியின் சாசனத்தில் அதனைச் சேர்க்க இயலவில்லை.

மேற்கூறப்பட்டதின் விளைவாக, இந்தியாவில் இங்கும் அங்கும் கிறிஸ்தவ அருள் பணியர் பெற்றுவந்த ஆதரவை பிரித்தானிய கம்பெனி விலக்கிக் கொண்டது. எந்த ஒரு அருள்தொண்டரும் இந்தியாவிற்குள் நுழைவதை அது எதிர்த்தது.

அச்சூழலில் கி.பி.1793இல் வந்தவர்தான் பிரித்தானிய பாப்திஸ்து நற்செய்தி யாளர் வில்லியம் கேரி. இந்தியாவில் காலடி எடுத்து வைக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், நற்செய்திப்பணி ஆற்றிட அவருக்குத் தடை விதிக்கப்பட் டிருந்தது. எனவே அவர் மதினபதி என்னுமிடம் சென்று, ஒரு நீல சாயத் தொழிற் சாலையில் பணிசெய்யத் தொடங்கினார். அவருடைய சங்கத்தைச் சேர்ந்த ஜாஷ்வா மார்ஸ்மேன், வில்லியம் வார்ட் என்பவர்கள் கி.பி.1799இல் இந்தி யாவிற்கு வந்தபோது, அவர்கள் கல்கத்தாவில் கரையிறங்க அனுமதிக்கப்பட வில்லை. பிரித்தானியக் கம்பெனி நற்செய்திப் பணியாளர்களுக்கு எதிரியாக மாறியது. கி.பி.1806இல் வேலூரில் நடைபெற்ற படை வீரர்களின் கலகம், கம்பெனி அரசு நற்செய்திப் பணியாளர்கள் மேல் வெறுப்புகொள்ளக் காரணமாக அமைந்தது. வேலூரில் படைவீரர் கிளர்ந்தெழ நற்செய்திப் பணியாளர்களே காரணர் என்பது கம்பெனி அரசின் குற்றச்சாட்டாக இருந்தது. என்றாலும் உண் மையில் வேலூரிலோ அதன் சுற்றுப்புறத்திலோ எந்தவொரு நற்செய்திப்பணி யாளரும் அப்போது இல்லை. கம்பெனியின் எல்லைக்குட்பட்ட இடங்களில், தங்களின் அனுமதியின்றி எந்தவொரு ஐரோப்பியரையும் அனுமதித்ததில்லை யென்பதே உண்மை.

இதற்கிடையே, இந்தியாவைப் பிரித்தானியர் ஆளவேண்டுமென்றால், இந்திய மக்களின் ஆன்மிக நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்னும் கருத்து. பி.கி.வி.கம்பெனியின் சில அதிகாரிகள் உட்பட்ட பிரித்தானிய பொது மக்களிடையே எழுந்தது. இக்கருத்திற்கு வரவர ஆதரவு பெருகியது. கம்பெனியின் வங்காள ஆட்சிக்குழுவின் அங்கத்தினராகவும், பின்பு பி.கி.வ.கம்பெனியின் ஒரு இயக் குனராகவும் இருந்த சார்ல்ஸ் கிரான்ட் இந்தியாவில் நற்செய்திப் பணியாளர் களின் பணிகளுக்கு ஆதரவு அளித்தோரில் முக்கியமான ஒருவர். வங்காளத்தில் இருந்த அரசாங்க அலுவலர்களில் ஒரு சிறு குழுவினரின் ஆதரவு அவருக்கு இருந்தது. அதே போல் பி.கி.வி.கம்பெனியின் இராணுவ ஆயர்களாக இருந்தவர் களில் இவாஞ்சலிக்கல் ஆயர்கள் என அழைக்கப்பெற்ற, டேவிட் பிரௌன், கிளாடியஸ் புக்கனன், தானியேல் கோரி, ஹென்றி மார்டின், தாமஸ் டி. தோமாசன்”S என்பவர்களின் ஆதரவும் கிடைத்தது. இவர்கள் நற்செய்திப்பணியை பி.கி.வி. கம்பெனியின் சாசனத்தில் சேர்த்திட முயற்சி மேற்கொண்டனர்; அத்துடன், பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தங்களின் முயற்சிக்கு ஆதரவு திரட்டவும் முற்பட்டனர். அதற்காக உத்தேசமாக 850 ஆதரவு மடல்கள் பிரித்தானிய பொது மக்களிடமிருந்து பெறப்பட்டு, பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன.

இதன் விளைவாக பி.கி.வ.கம்பெனியின் சாசனம் புதுப்பிக்கப் பட பாராளுமன்றத்தில் கி.பி.1813இல் கொணரப்பட்டபொழுது, மேற்கூறப்பட்டவர் களின் முயற்சி வெற்றி பெற்றது. சாசனத்தில் அவர்கள் சேர்க்க விரும்பிய விதி முறைகள் சேர்க்கப்பட்டன. இதற்கிடையே, வில்லியம் வில்பர்போர்ஸ் போன்ற இவஞ்சலிக்கல் கிறிஸ்தவர்களின் முயற்சியினால் பிரித்தானிய குடியேற்றங் களில் அடிமை வணிகம் கி.பி. 1807 இல் தடை செய்யப்பட்டது.

கி.பி.1813இல் பி.கி.வ.கம்பெனியின் சாசனம் புதுபிக்கப்பட பிரித்தானிய பராளு மன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இவஞ்சலிக்கல் கிறிஸ்தவர்களின் பிரேரனைகள் கம்பெனியின் சாசனத்தில் சேர்க்கப்பட 23 சூன் 1813 இல் அரசாங்கத்தின் ஒப்பு தலைப் பெற்றன. அதில் இடம் பெற்றிருந்த நற்செய்திப்பணி குறித்த பிரிவுகள் 33 முதல் 39 வரை, 41 – 42 என்பவையாகும். அதில் 33ஆம் பிரிவு: இந்தியாவில் பிரித்தானிய ஆளுகையின் கீழ் இருக்கும் உள் நாட்டினரின் ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் ஊக்குவிப்பது இந்நாட்டின் கடமையாகும். அவர்களிடையே பயன்தரும் அறிவையும், சமய மேம்பாட்டையும் அறிமுகம் செய்யக்கூடிய முயற்சிகளைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்…. எனவே… அதுவரை இந்திய மக்கள் சார்ந்திருந்த பிரித்தானிய அரசின் கொள்கையான சமய நடுநிலைக்கொள்கை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும், தங்கள் சமயத்தைத் தொடர்ந்து பின்பற்றும் உரிமை, தடையின்றி பேணப்பட வேண்டும். மேற்கூறப் பட்ட காரணத்திற்காக இந்தியா செல்ல விரும்புவோருக்கும் அல்லது அதற்காக அங்கு தங்கியிருக்க விரும்புவோருக்கும் வழிவகையும், அனுமதியும் வழங்க வேண்டும்..”18 இந்த விதிப்பிரிவு நற்செய்திப்பணியாளரை மட்டுமின்றி பரந்துபட்ட மக்களைக் குறிப்பதாக இருந்தது. இதன் அடிப்படையில் பிரித்தானியாவை (இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, வேல்ஸ் சார்ந்த அருள்பணிச் சங்கங்கள் இந்தியாவில் குறிப்பாக பிரித்தானிய கம்பெனியின் ஆட்சியின் கீழ் இருந்த மூன்று மாநிலங்களிலும் தங்களது நற்செய்திப் பணிகளைத் தொடங்கின.

அச்சாசனத்தின் 43ஆம் பிரிவுப்படி, “இலக்கியத்தைச் செம்மைபடுத்தவும், மறுமலர்ச்சி அடையச் செய்யவும், இந்தியாவின் கல்வி அறிவு பெற்ற மக்களை ஊக்கமடையச் செய்யவும், பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட இந்தியப் பகுதிகளில் வாழும் மக்களிடையே அறிவியல் அறிவை அறிமுகம் செய்து, அதனை வளர்க் கவும்”19 ஆண்டொன்றுக்குக் குறைந்தது ரூ. ஒரு லட்சத்தை ஒதுக்க இந்தியாவில் இருந்த பிரித்தானிய கவர்னர் ஜெனரல் கடமைப்பட்டிருந்தார். 49ஆம் பிரிவு “கிழக்கிந்தியத் தீவுகளிலும், அதன் பகுதிகளிலும் இருந்த பிரித்தானிய ஆட்சிக் குட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்குமென ஒரு பேராயத்தை” நிறுவும் பொறுப்பை வழங்கியது. அத்துடன் மூன்று தலைமை ஆயர்களை மாநிலத்திற்கு ஒருவராக நியமிக்கவும், இந்தியாவிலிருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்து ஆண்டொன் றுக்குப், பேராயருக்கு ஐயாயிரம் பிரித்தானிய பவுண்டுகளும், தலைமை ஆயர் ஒவ்வொருவருக்கும் இரண்டாயிரம் பிரித்தானிய பவுண்டுகளும் ஊதியமாக வழங்கவும் அது குறிப்பிட்டது.20 இந்தியாவில் பணியாற்றிக் கொண்டிருந்த பிரித்தானியரின் ஆன்மிகத் தேவையை நிறைவு செய்யவே இந்தியாவில் இங்கிலாந்து திருச்சபையின் பேராயம் அமைக்கப்பட்டது.

பிரித்தானிய அருள்தொண்டர்கள் தங்களுடைய நற்செய்திப்பணியை முனைப் புடன் தொடங்கினர். அவர்கள் தங்கள் பணிகளைச் சிறு நகர்களிலும், பெரு நகர்களிலும் மட்டுமின்றி, கிராமங்களிலும், பழங்குடியினர் வாழ்ந்த பகுதிகளிலும் செய்யத் தொடங்கினர். தாங்கள் பணியாற்றச் சென்ற மக்களுடன் தொடர்பு கொள்ளும் நோக்கோடு அவர்களின் மொழிகளைக் கற்க முற்பட்டனர். கி.பி.1813 சாசனம் பி.கி.வி.கம்பெனி கல்விப்பணிக்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ. ஒரு லட்சம் ஒதுக்க வேண்டும் என்று விதித்திருந்த விதி அருள்பணியருக்கும் பயன ளித்தது. குறிப்பாக அருள்பணியர் தங்கள் பணிக்களங்களில் கல்விக்கூடங் களைக் கட்டி, கல்விப்பணியைத் தொடங்கிய சூழலில் அது மிகுந்த வரப்பிரசாத மாயிருந்தது. தொடக்கத்தில் அருள்பணியர் தொடக்கக் கல்வியில் கவனம் செலுத்தினர். கி.பி.1813 முதல் 1833 வரையிலான காலத்தில் பிரித்தானிய அருள் பணி சங்கங்கள் இந்திய மொழிகளில் திருமறையை மொழியாக்கம் செய்வதில் ஈடுபட்டதுடன், அந்த மொழிகளில் செய்தித்தாள்களையும், செய்திமடல்களையும், அகராதிகளையும் அச்சிட்டு வெளியிட முற்பட்டன. மேலும் இந்தியாவின் முக்கிய மொழிகளில் மொழிப்பேரகராதிகளை (Lexicon) வெளிக்கொணரவும் முயன்றனர். அருள்பணியர் தாங்கள் பணியாற்றிய மக்களிடையே தங்கினர், எனவே அவர் களுடைய மொழிகளை அறிந்தனர், கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களை யும் புரிந்து கொண்டனர். இதனால் குடியேற்ற அரசு நற்செய்திப்பணியாளர் களின் பணியை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கியது. இந்தியா போன்ற குடியேற்ற நாட்டின் மக்களின் வாழ்வு உயர்வடையச் செய்கின்ற தன் பணியில், அருள்தொண்டர்களை உடன் பணியாளர்களாகக் கண்டது. மேற் கத்திய அரசு தன் பண்பாடு, அரசியல், பொருளாதாரத் தாக்கங்களை உள்ளூர் மக்களிடையே ஏற்படுத்த சிறந்த கருவிகளாக அருள்பணியரைத் தவிர யார் இருக்கக்கூடும் எனக் கருதியது. இவ்வாறாக “கனிவு நிறை குடியேற்ற ஆதிக்கம்” எனும் கொள்கை தொடங்கியது. 21 அருள்தொண்டர்களின் கல்விப்பணி பொது வாக இந்திய மக்களிடையே நீண்ட காலத் தாக்கங்களை ஏற்படுத்தியது. அது அவர்களுக்கு எழுதப் படிக்க மட்டுமின்றி, நாட்டுப்பற்று என்னும் விதையையும் விதைத்தது. அது இந்தியாவில் ஒரு மறுமலர்ச்சியைத் தொடங்கிவைத்தது. சமுதாயத்தில் சீர்திருத்தங்கள் ஏற்பட வழி அமைத்தது. அருள்தொண்டர்கள் தங்களின் கல்விக்கூடங்களைச் சாதி, சமய, நிற வேறுபாடுகளைக் கடந்தும் ஏழை, செல்வந்தர் என்கின்ற வர்க்க முரண்களைக் கடந்தும், அனைவருக்கும் கல்வி என்னும் கொள்கையுடன் நடத்திய காரணத்தினால், பல நிலைகளில் புரட் சிக்கு வழி வகுத்தது. கல்வி, மருத்துவம், இலக்கியம், சமுதாயச் சீர்திருத்தம் ஆகிய துறைகளில் அருள்பணியர் ஆற்றியப் பணிகள் பிரித்தானிய ஆட்சியாளருக்கு இந்தியரிடையே ஆதரவாளரை உருவாக்கின. வில்லியம் கேரியின், சதி /உடன் கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகளும், அலெக்சாந்தர் டஃப்பின், ஆங்கிலத்தை உயர் கல்வியின் பயிற்று மொழியாக அறிமுகம் செய்ததும் அவ்விலக்கை நோக்கி நடத்தப்பட்ட குறிப்பிடக்கூடிய செயல்களாகும்.

நாடளுமன்ற விதிமுறைப்படி, பி.கி.வி.கம்பெனியின் சாசனம் கி.பி.1833இல் புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தது. இதற்கு முன்னரே. குடியேற்ற அரசு தன்னு இடைய பகுதி மக்களை உயர்த்தும் பணித்திட்டத்திற்கு, அருள்பணியர்கள் பெரும் உதவியாக இருப்பதாக உணர்ந்தது. எனவே கி.பி.1833 சாசனத்திருத்தம் இந்தியக் கிறிஸ்தவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய சில விதித்தொகுப்புகளை உடையதாக இருந்தது. அதிலொன்று கூறியதாவது: “இப்போது கல்கத்தாவில் அமைந்திருக்கும் பேராயம் பரந்த பரப்பளவைக் கொண்டதாக உள்ளது. அதன் பேராயர் தன் உடல் நலத்துக்கும், வாழ்விற்கும் ஊறு நேராதவாறு தம் அலுவல் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற ஏதுவாக இல்லை… அதற்கான வசதியளிக்கும் வகையில்… கல்கத்தா பேராயர் மெட்ரோ பாலிட்டன் என அறியப்படுவார்.” இவ்விதித் தொகுப்பின் அடிப்படையில் சென்னை யிலும், பம்பாயிலும் பேராயங்கள் அமைக்கக் கோரப்பட்டது. 22 மற்றோரு விதி, உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவரும் எவ்வகைப் பணியில் ஈடுபட்டிருப்பவராக இருப்பினும் இந்தியாவினுள் நுழைய அனுமதி வழங்கியது. இதன் விளைவாக கி.பி.1833இல் பிரித்தானியர் அல்லாத அருள்பணிச் சங்கங்கள் இந்தியாவினுள் நற்செய்திப்பணி முயற்சிகளைத் தொடங்கின. 23

கி.பி.1833 சாசனம் இந்தியாவின் நிர்வாக அமைப்பிலும் மாற்றம் கொணர்ந்தது. ‘வணிக கம்பெனி’ யாக இருந்த பி.கி.வ.கம்பெனி ஒரு ‘ஆட்சி அமைப்பாக’ மாற்றம் பெற்றது. வணிகம் செய்வதற்கான அதன் தனி உரிமையை, சாசனம் மட்டுப்படுத்தியது. இதனால் பிரித்தானிய நாடாளுமன்றம் இந்தியா போன்ற குடியேற்ற நாடுகளை நேரடியாக ஆளுகை செய்வதற்கு வழி அமைத்தது. இது கி.பி.1858 இல் இந்தியா பிரித்தானிய முடியாட்சியின் கீழ் வருவதற்கு இடமளித்தது. கி.பி.1858 ஆட்சி மாற்றத்திற்கான பிறிதொரு காரணமும் உண்டு. அது கி.பி.1857இல் நிகழ்ந்த முதல் இந்திய விடுதலைப் போராட்டம் அல்லது சிப்பாய் கலகம் ஆகும். இதனை ‘ 1857 எழுச்சி’ எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும், ஏனெனில் அது படைவீரரிடையே மட்டுமின்றி பிற இந்தியரிடையேயும் ஏற்பட்டது. எனவே இவ்விடத்தில் 1857 எழுச்சிக்குக் காரணமாக அமைந்த பின்னணியத்தை ஓரிரு வாக்கியங்களில் தருவது பொருத்தமாகும்.

கிறிஸ்தவ அருள்பணியரின் இந்திய வருகையும், அவர்களின் பணிகளும் இந்திய சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொணர்ந்தன. கிறிஸ்தவக் கல்விப்பணி இந்திய மக்களின் சமுதாய அமைப்பிலும், உலகத்தைப் பற்றிய பார்வையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தியக் கருவியாக இருந்தது. அருள்பணியா ளர்கள் செய்த இலக்கியப்பணிகளான உள்ளூர் மொழிகளில் அகராதி தொகுத் தல், இலக்கண நூல்கள் அமைத்தல், உள்ளூர் மொழிகளிலும், ஆங்கிலத்திலும் செய்தித்தாள்கள் வெளியிடல் போன்றவை இந்தியாவில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தன. ஆங்கில மொழியை உயர் கல்விக்கான பயிற்று மொழியாக அறிமுகம் செய்த அலெக்சாந்தர் டஃப்பின் திட்டம் பொதுவாக இந்தியரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இராஜாராம் மோகன்ராய் இதனைப் பெரிதும் வரவேற்றார். இதன் விளைவாக இனிமுதற்கொண்டு பிரித்தானிய அரசின் கல்வி உதவித்தொகை ஆங்கில மொழி வழி கல்விக்கே என்னும் தன் கொள்கையை அறிமுகம் செய்தது. இது கி.பி.1835இல் தாமஸ் பேபிங்டன் மெக்காலே வகுத்த கல்வித் திட்டத்தின் விளைவாக ஏற்பட்டது.24 சர் சார்ல்ஸ் உட் என்பவரின் தலைமையில் வெளியிடப்பட்ட ‘உட் அறிக்கை’ என்பது கி.பி.1854இல் பிரித்தானிய அரசின் கல்வித் திட்டத்தை முறைப்படுத்தியது. அதன்படி தொடக்க நிலைக் கல்வி தாய்மொழியிலும், உயர் கல்வி ஆங்கில மொழியிலும் என்னும் நாடுதழுவிய கல்விமுறைமை அமுல்படுத்தப்பட்டது. அதே வேளையில் அரசாங்க கல்வி உதவித்தொகை முறையும் அறிமுகமானது. வெகு விரைவில், கி.பி.1857இல் மூன்று மாநிலங்களான கல்கத்தா, சென்னை. பம்பாயில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டன. ஆங்கிலக்கல்வி முறை அறிமுகப் படுத்தப்பட்டதினால் பல விளைவுகளும், பாதிப்புகளும் ஏற்பட்டன. கல்வி அறிவு, நீதி, சுதந்திரம் குறித்த தாகத்தில் வளர்ச்சி ஏற்பட்டது. இவை சமுதாய சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தன.

கி.பி.1854இல் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சல் துறையும், தொடர்வண்டித் துறை யும் (இருப்புப் பாதைத் துறையும்) தொடர்புத்துறையிலும், அனைத்திந்திய உணர் விலும் வளர்ச்சியை ஏற்படுத்தின. குறிப்பாக தொடர்வண்டித் துறை வட்டாரத் தடைகளைத் தகர்த்தது. அத்துடன் அது “சாதிய தவறான எண்ணங்களைத் தகர்த்தது, ஏனெனில் சாதிய அடிப்படையிலல்ல, செலுத்தப்படும் பயணக்கட்ட ணத்திற்கேற்ப வகுப்பு வாரியாகப் பயணிகளுக்கு இருக்கைகள் தரப்பட்டன. 26

ஆங்கிலக்கல்வி முறை, தொடர் வண்டித்துறை, அஞ்சல் துறை ஆகியவை இந்தி யாவில் மறுமலர்ச்சியைக் கொணர்ந்த போதிலும், எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தின. பிரித்தானிய ஆட்சிக்குப் பரவலான எதிர்ப்பு இருந்தது, வெறுப்பும் வளர்ந்தது. தன் எல்லைகளை விரிவுப்படுத்திட பிரித்தானிய அரசாங்கம் பின் பற்றிய முயற்சிகளினால் பாதிக்கப்பட்ட இந்திய அரச குலத்தினர் மத்தியில் அதிருப்தி நிலவியது. பெரிய அல்லது சிறிய அரசர்கள் ஆண்டுவந்த இந்தியாவின் பல பகுதிகளை ஏதாவதொரு காரணத்தின் மூலம் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து, அங்கு பிரித்தானிய அரசின் ‘ரெசிடென்ட்’ என அழைக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமித்தது. இயல்பாகவே இது வெறுப்பைத் தூண்டியது. அரசின் வேளாண்மைக் கொள்கை பெருநிலக்கிழாருக்கும், ஜமீன்தாருக்கும் ஆதாரவாக இருந்ததால், சாதாரண விவசாயிகளுக்கு மனக்குறைவை ஏற்படுத்தியது. இந்தியத் தொழிற் துறைகள், தொழிற்சாலைகள் பாதுகாக்கப்படவில்லை. பொருளாதாரச் சுரண் டலும் இருந்தது. இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்குக் கொண்டுபோகப்பட்ட கச்சாப்பொருள்கள், அவைகளால் செய்யப்பட்ட பொருள்களாக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டதால், இந்தியத் தொழிற்சாலைகள் நலிவுற்றன. எனவே தொழில் அதிபர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தது. அரசும், நற்செய்திப்பரப் பாளர்களும் கொணர்ந்த சமுதாயச் சீர்திருத்தங்கள் வைதீக இந்துக்களிடையே மனக்கொதிப்பை ஏற்படுத்தின. “பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில் கிறிஸ்தவ அருள்பணியருள் சமுதாயச் செயல்வீரர் இந்திய சமுதா யத்தில் அறநிலை வாழ்வில் சீர்திருத்தம் கொணர முற்பட்டனர்; அத்துடன் இந்து சமுதாயத்தின் கொடுமையான சக்தியினாலும், மிகவும் பழமையான மூட நம்பிக் கைகளினாலும் கட்டப்பட்டிருந்த மக்களை விடுவிக்க விரும்பினர். இவைகளுக்கு மேற்கத்திய மிதவாதிகளின் ஆதரவு இருந்தது.126 இதற்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்களில் ஒருவர் பிரித்தானிய பாப்திஸ்து அருள்பணியர் வில்லியம் கேரி. இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்ட எல்லைகளில் சதி என சுருக்கமாக அழைக்கப்பட்ட ‘சதிசஹகமன’ என்னும் விதவைகள் எரிப்பு / உடன் கட்டை ஏறல் முறையை ஒழிப்பதற்குக் கருவியாகத் திகழ்ந்தார். அவரது தளராத முயற்சியினால் பிரித்தானிய கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் கி.பி.1829இல் சதி ஒழிப்பு ஆணையைப் பிறப்பித்தார்.” அந்த ஆணையை வங்காளத்தில் இருந்த இந்தியர் குழு ஒன்று எதிர்த்தது.” 28 இந்து சமயம் குறித்து அருள்பணியர் தெரிவித்த கருத்துக்களும், சிலை வணக்கத்தை நிந்தித்து பேசியமையும் வைதீக இந்துக்கள் வெறுப்படையச் செய்தன, பிரம்மோ சமாஜம் போன்றவைகள் தோன்ற இவ்வித வெறுப்புணர்வுகளே காரணம் எனலாம். அனைத்து மனக்குறைவுகளுக்கும் மகுடம் போன்று இருந்ததே இந்தியப் படை வீரரிடையே இருந்த கசப்புணர்வு. இதற்குப் பல காரணங்கள் இருந்தன. இந்தியப் படை வீரருக்கும், மேலை நாட்டுப் படைவீரருக்கும் இடையே ஊதியம், ஓய்வூதியம், உணவு பொருள்களின் பங்கீடு ஆகியவற்றில் இருந்த ஏற்றத்தாழ்வு, பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் இந்தியப் படைவீரரைக் கிறிஸ்தவராகக் கட்டாயப்படுத்துகின்றனர் என்ற ஐயமும். வெடிபொருளில் பயன்படுத்திய விலங்குக் கொழுப்பு பற்றிய எண்ணமும் கிளர்ச்சியைத் தூண்டியது. மேற்கூறப்பட்டுள்ள மனச்சோர்வுகள் கி.பி.1857இல் ஏற்பட்ட சிப்பாய்க் கலகம் ஏற்படக் காரணமாக இருந்தன. ஆனால் பி.கி.வ.கம்பெனி அக்கலகத்திற்கு / எழுச்சிக்கு அருள்பணி யரைக் குறை கூறியது. அதேவேளையில், பிரித்தானியாவிலிருந்த இவாஞ்சலிக்கல்’ மக்கள் இந்தியப் படைவீரர் கிறிஸ்தவராக மாறியிருப்பின் பிரித்தானிய அரசுக்கு ஒரு பெருந்திரள் மக்கள் கூட்டம் ஆதரவாளர்களாக எழும்பி இருப்பர் எனக் கருத்துத் தெரிவித்தனர்.

கி.பி.1857 ஏழுச்சி, இந்தியாவை பிரித்தானிய முடியாட்சியின் நேரடிக் கண் காணிப்பின் கீழ் கொண்டுவந்தது. கி.பி.1857 முதல் இந்திய மக்களின் சமயம், சமூக அமைப்புகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் பிரித்தானிய அரசு தலை யிடாது என்பது ஏறத்தாழ அரசாங்கத்தின் பொதுக் கொள்கையாகவே இருந்தது. கி.பி.1858இல் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொண்ட விக்டோரியா அரசி ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டார். சமய நடுநிலைப்பாட்டை அந்த அரசு அறிக்கை, இந்தியர்களுக்கு உறுதிப்படுத்தியது. கிறிஸ்தவ அருள்பணிக்கு உதவியாக, மதிக்கத்தக்கதாக இருந்த அவ்வறிக்கை யின் ஒரு பகுதியாவது: “நாம் நமது பிற குடி மக்களுக்கு கடமையாற்றக் கடமை உணர்ச்சி இருப்பது போன்றே, இந்தியாவில் இருக்கும் நம்குடி மக்களுக்குக் கடமையாற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். அதனை எல்லாம் வல்ல கடவுளின் நல்லாசியுடன் உண்மையாகவும், மனசாட்சியுடனும் நிறைவேற்றுவோம்…… கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மையின் மேல் திடமாகச் சார்ந்து, சமயம் தரும் மன அமைதியளிக்கும் தன்மையை, நன்றியுடன் ஏற்கிறோம். எங்களுடைய சமய நம்பிக்கையை நம் குடிமக்கள் எவர்மீதும் திணிப்பது எமது உரிமையும், விருப்பமும் என்பதை முற்றாக மறுக்கிறோம்.*29 இந்த அதிகாரப் பூர்வ அறிக்கை பிரித்தானிய அரசியார் தாம் ஒரு கிறிஸ்தவர் என்பதை அழுத்தமாகத் தெரிவித்த துடன், கிறிஸ்தவர் ஒருவர் தம்மை ஆளுகிறார் என்பதை இந்தியா உணர வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

சமயக் காரியங்களில் நடுநிலை என்ற பிரித்தானிய அரசின் கொள்கை, குடி யேற்றக் கொள்கைக்கும், அருள்பணிக்கும், அல்லது அரசுக்கும், திருச்சபைக் கும் இடையேயான நெருங்கியத் தொடர்பை பெருமளவிற்கு ஒர் முடிவிற்குக் கொணர்ந்தது எனலாம். அருள்பணியரும் அவர்களது நடவடிக்கைகளும் ஒரு சில இடங்களில் சலுகையுடன் நடத்தப்பட்ட எடுத்துக்காட்டுகள் இருந்தபோதும், அந்நிலை நீடித்து நிற்கவில்லை. இந்தியாவில் இருந்த ஆங்கிலிக்கன் திருச்சபை அரசுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டதாக இருந்தாலும், கி.பி.1927இல் வெளியிடப்பட்ட இந்தியத் திருச்சபைச் சட்டம் (The Indian Church Measure) என்பதின் மூலம் தன்னாட்சி உரிமை பெற்றது.3° இதற்குக் காரணம் இந்தியாவில் குறிப்பாக முதல் உலகப் போருக்குப் பின் வளரத் தொடங்கிய தேசிய உணர்வு எனலாம்.

சமயத்தை அரசு தன் சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்பது தற்போது நாம் சந்திக்கும் வினாவாகும். அரசிடமிருந்து சமயத்தைப் பிரிக்க வேண்டும் எனவும் அரசியல்வாதிகள் தம் சொந்த நலனுக்காகச் சமயத்தை / மதத்தைப் பயன்படுத்தக்கூடாது எனவும், சமய அடிப்படை வாதத்தைத் தூண்டி விடக்கூடாது எனவும் அவ்வப்பொழுது ஆலோசனை கூறப்படக் கேட்கிறோம். அரசு சமய சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பது அனேகரது விருப்பமாக இருக்கிறது. இது இன்னும் வாதத்திற்குரிய வினாவாகவே இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *