‘தானியேல்’ – விளக்க உரை நுழைவாயில்
Rev.Dr.A. சேவியர் B.Sc,M.A (Tol,DD.
தானியேல் – விளக்க உரை நுழைவாயில்: தானியேலும், வெளிப்படுத்தின விசேஷமும் ஒன்றோடொன்று இணைந்த தீர்க்கதரிசனப் புத்தகங்கள். இவை இரண்டையும் நன்கு. தெரிந்து கொண்டாலே வருங்காரியங்களைப்பற்றி நாம் திட்டமும் தெளிவுமாய் இருக்கலாம். இந்த இரண்டுமல்லாது.
வேறெந்த தீர்க்கதரிசிகளையும் நாடி ஓமத்தேடி அல்லோகல்லோலப்படத் தேவையே இல்லை.இந்த “தானியேல்” விளக்கவுரையைப் படியுங்கள்: தெளிவு பெறுங்கள்: கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு விலகி ஓடுங்கள்; மற்றவர்களுக்கும் அறிவியுங்கள்.
கடைசி நாட்களில் எழும்பப்போகும் பாழாக்கும் அருவருப்பாகிய அந்திகிறிஸ்து பற்றி தானியேல் சொல்லியிருப்பதை வாசித்து சிந்திக்க, இயேசு சொன்னதைப்பாருங்கள்:
”…. பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்…” (மத். 24:15)
இந்த விளக்க உரையை வாசிக்க வந்த நீங்கள் பாக்கியவான்கள்:
இந்தபுத்தகமும் பாக்கியமுள்ளது. அல்லேலூயா!
பொதுவான தீர்க்கதரிசன விளக்கங்களை முதலில் பார்ப்போம்:
(1) “வேதத்திலுள்ள எந்த தீர்க்கதரிசனமும். சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது 2பேது. 1:20.
தீர்க்கதரிசனத்தில் “ஸ்திரி” என்றால் ஸ்திரி அல்ல: ”கொம்பு என்றால் கொம்பு அல்ல: “சமுத்திரம்.” “மிருகம்.”” ‘முடி’மலை என்றால். சமுத்திரமுமல்ல; மிருகமுமல்ல: முடியுமல்ல: மலையுமல்ல. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தீர்க்கதரிசன அர்த்தமுண்டு என்று நம் வேதத்திலேயே அறிந்துகொள்ளலாம்.
2) நடக்கப்போகும் காரியங்களை மொத்தமாய் ஒரே தீர்க்கதரிசனமாயும் பல இடங்களில் சொல்லப்படும். ஆனால் அவைகளில் சொல்லப்படும் காரியங்களெல்லாம் ஒரேசமயத்தில் தொடர்ச்சியாய் நடப்பதில்லை; கால இடைவெளிகள் விட்டு (Gap) நடக்கும். உதாரணத்திற்கு, லூக்.1:31-33 மற்றும் ஏசா.61:1-3 போன்ற தீர்க்கதரிசன வசனங்களை வாசித்தால். கன்னியின் வயிற்றில் பிறக்கும் இயேசுவால் நடக்கும் காரியங்களை சொன்னாலும், அவைகளில், முதலாம் வருகையில் நடப்பதையும். 2ம் வருகையில் நடப்பதையும் ஒன்றாகவே. Gap இல்லாமல் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். இதனால்தான். இயேசு முதலாம் முறைவந்தபோது. ஏசாயாவில் சொல்லப்பட்ட முழுதீர்க்கதரிசன வாக்கியங்களையும் படிக்காமல். முதல் வருகையில் நடப்பது மாத்திரமே வாசித்துவிட்டு அமர்ந்தார் (லூக்.4:16-20).
3) தீர்க்கதரிசிகள். ஒரு தீர்க்கதரிசன காரியத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போதே. வேறொரு தீர்க்கதரிசன காரியத்தை அதில் நுழைப்பதும் உண்டு. அதன் பின், பழைய தீர்க்கதரிசனத்தை தொடர்வார்கள். உதாரணத்திற்கு ஏசா.66ஐ எடுத்துக்கொண்டால். 1000வருட அரசாட்சிபற்றி (கூடாரப்பண்டிகை) சொல்லிக் கொண்டுவரும். ஏசாயா தீர்க்கதரிசி. திடீரென்று ஏசா.66:22ல் புதியவானம். புதிய பூமி பற்றி சொல்கிறார். பின். ஏசா.66:23 லிருந்து. பழையபடி 1000 வருட அரசாட்சி காலம்பற்றியே சொல்கிறார்.
(4) தீர்க்கதரிசனங்கள். ஒரே கோர்வையாய் வரிசைப்படுத்தி எழுதப்படுவதில்லை. அந்தந்த நேரத்தில் ஆவியானவர் தரும் தீர்க்கதரிசன வார்த்தைகளை எழுதுவார்கள். பின்னால் நடப்பது முன்னால் எழுதப்பட்டிருக்கலாம்; முன்னால் நடப்பது பின்னால் எழுதப்பட்டிருக்கலாம்.
புத்தக சுருக்கம்
தானியேல் மொத்தம் 12 அதிகாரங்களை உடையது. ஆனால். கத்தோலிக்க பைபிளில், 13 மற்றும் 14ம் அதிகாரம், கிரேக்க மொழியில் உள்ளது. அவைகள் நம்மால் தள்ளப்பட்டவை. தானியேலில், 2:4 முதல் 7:28 வரை அராமிக் மொழியில் எழுதப்பட்டுள்ளது. மீதமுள்ளவை எபிரேயு மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதில் முதல் 6 அதிகாரம் சரித்திரம் சம்பந்தப்பட்டது; அடுத்த 6 அதிகாரமும் தீர்க்கதரிசனம் சம்பந்தப்பட்டது.
இதிலே எழுதப்பட்டவை எல்லாமே முழுக்க முழுக்க இஸ்ரேலர் சம்பந்தப்பட்டவைதான். கிறிஸ்தவர்கள் சம்பந்தப்பட்டவை ஏதுமில்லை. ஏனெனில் கிறிஸ்தவ சபை மத்.16:18ன்படி இயேசுவின் மரணத்தில் சிருஷ்டிக்கப்பட்டது. (எபே.2:15) அப் 20:28).
பழைய ஏற்பாட்டில் இந்த சபை பற்றிய எந்த வசனமும் கிடையாது. இந்த புத்தகத்தைப்பற்றி தானியேலிடம் தேவன் சொன்னதைப் பாருங்கள்:- “முடிவு காலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து இந்த புத்தகத்தை முத்திரைபோடு. அப்பொழுது. இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள்: அறிவும் பெருகிப்போம்’ (தானி.12:4).
அடிமைத்தனத்தில் பாபிலோன் நகரத்திலும் (பாபிலோன் ராஜ்யம்). சூசான் நகரத்திலும் (மேதிய-பெரிசிய ராஜ்யம்) தானியேல் இருந்தபோது. கி.மு. 6ம் நூற்றாண்டில் எழுத ஆரம்பிக்கப்பட்ட புத்தகம் இது. தானியேல் காலம் முதல். 1000 வருட ஆட்சி வரை இருக்கும் இஸ்ரேலர் சம்பந்தப்பட்ட புறஜாதி அரசுகளைப்பற்றி எழுதப்பட்டுள்ளது. தானியேலுக்கு முன்னால்.
இஸ்ரேலர்கள், எகிப்தியரால், யாக்கோபு முதல் மோசே வரை கிட்டத்தட்ட 430 வருஷம் அடிமையாயிருந்தார்கள். சாலமோன் ராஜாவுக்குப் பிற்பாடு. இஸ்ரேல்தேசம், ரெகோபயாம் தலைமையில் யூதராஜ்யம் என்றும். யெரோபயாம் தலைமையில் இஸ்ரேல் ராஜ்யம் என்றும் இரண்டாய்ப் பிரிந்தது. கி.மு. 975முதல் கி.மு 721 வரை, இஸ்ரேல் ராஜ்யம். யெரோபெயாம் முதல் அசியா ராஜாவரை ஆளப்பட்டு பின் அசீரியரால் அழிந்துபோனது. யூதராஜ்யம், கி.மு.604முதல் பாபிலோனிய ராஜ்ய அடிமைத்தனத்தின்கீழ் வந்தது.
தானியேல் யூதராஜ்யத்தை சார்ந்த யூதன். அசீரியர். எகிப்தியர் போன்ற புறஜாதி ராஜ்யங்களைப்பற்றியெல்லாம் இந்தநூலில் எழுதப்படவில்லை. உலகின் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட கடைசி ரோஜ்யங்களை மட்டும்தான் எழுதியிருக்கிறான். இஸ்ரேலர். உபத்திரவத்திற்கு உட்படுத்தப்படுகின்ற மொத்த ராஜ்யங்கள் எட்டு (வெளி.17) அவைகளில் 6 இப்போது இல்லை. மீதம் இரண்டு இனி வரப்போகிறது என்று தானியேல் புத்தகத்தால் அறியலாம்.